Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.இந்துக் கல்லூரி வாகனத்தின் கண்ணாடிகள் உடைப்பு

Featured Replies

article_1423576975-gls.jpg

யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் முச்சக்கரவண்டி, பஸ் வண்டி ஆகியவற்றின் கண்ணாடிகளை உயர்தர மாணவர்கள் அடித்து நொருக்கியுள்ளதாக அதிபர் ஐயம்பிள்ளை தயானந்தராசா, செவ்வாய்க்கிழமை (10) முறைப்பாடு செய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் கூறினர்.

ஆசிரியர் ஒருவருடன் முரண்பட்டுக்கொண்ட மாணவர்கள், இவ்வாறு கண்ணாடிகளை அடித்து நொருக்கியுள்ளனர். உடைந்த கண்ணாடிகள் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடையவை என அதிபர் முறைப்பாட்டில் கூறியுள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நுழைவாயிலுக்கு பெயின் ஊற்றிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (10) கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.

http://www.tamilmirror.lk/139510#sthash.RAYfNQaB.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியரோட பிரச்சனை என்றால் அவரின் கண்ணாடியை உடைக்கிறது. எதுக்கு இந்த வேலை.

யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள்..  உள்ளக.. வெளியக ஒழுக்கத்தை இழந்து வருவது நல்லதல்ல. உது யாழ் இந்து அன்னைக்கு செய்யும் மரியாதையா தெரியல்ல. :icon_idea::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எழுதும் கருத்துக்களை சில சமயம் வாசிக்கும்போது நீங்கள் உங்கள் ஆசிரியர்களின் கண்ணாடியை, பல்லை, கை, காலை எல்லாம் உடைத்த ஆள் போலத்தான் தோன்றுகின்றது. ஆசிரியரின் கண்ணாடியை உடைப்பதற்கு ஆலோசனை கூறுவதும் யாழ் இந்து அன்னைக்கு செய்யும் மரியாதையாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

article_1423576975-gls.jpg

உடைந்த கண்ணாடிகள் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடையவை .

உடைந்த கண்ணாடிகளை மாற்ற,

புலம் பெயர் தேசத்தில்... ஒரு இசைநிகழ்ச்சி, அல்லது இராப் போசன விருந்து, டான்ஸ் புரோகிராம்  நடாத்தி....

அதன் மூலம் வரும், பணத்தை யாழ். இந்துக் கல்லூரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.MG_11.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பாக எங்க கனடிய பழைய மாணவர்கள் சார்பாக இந்த திட்டத்தை அர்ஜுன் அண்ணா அவர்கள் ஒரு நாடாகம் போட்டோ இல்லது ஒரு கிரிக்கெட் மேட்ச் ஒழுங்கு செய்தோ காசு சேர்த்து கண்ணாடியை மற்ற உடன் நடவடிக்கை எடுக்கணும்....

அப்படியான நிகழ்ச்சிகளை... நடத்துவதற்காக,

ஆட்களை வைத்து... கண்ணாடியை உடைத்தார்களோ, என்ற சந்தேகமும் இருக்கு. :D  :icon_idea:  :icon_mrgreen:

  • தொடங்கியவர்

இந்துக் கல்லூரி நுழைவாயில் மீது பெயின்ட் வீச்சு

(30-01-2015)

article_1422608826-IMG2309.JPG

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி நுழைவாயில் மீது புதன்கிழமை (28) நள்ளிரவு, இனந்தெரியாதோரால் பெயின்ட் ஊற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்தது. பழைய மாணவர்களின் நிதியுதவியில் புதிதாக அமைக்கப்பட்ட நுழைவாயில் மீதே இவ்வாறு பெயின்ட் வீசப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் கறுப்பு நிற வர்ணம் தீட்டப்பட்டிருந்த நுழைவாயிலுக்கு நீலம் மற்றும் வெள்ளை நிற பெயின்ட் ஊற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நிறங்களாக நீலம் மற்றும் வெள்ளை நிறம் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. -

http://www.tamilmirror.lk/138770#sthash.cnQhjGoI.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

article_1423576975-gls.jpg

யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் முச்சக்கரவண்டி, பஸ் வண்டி ஆகியவற்றின் கண்ணாடிகளை உயர்தர மாணவர்கள் அடித்து நொருக்கியுள்ளதாக அதிபர் ஐயம்பிள்ளை தயானந்தராசா, செவ்வாய்க்கிழமை (10) முறைப்பாடு செய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் கூறினர்.

ஆசிரியர் ஒருவருடன் முரண்பட்டுக்கொண்ட மாணவர்கள், இவ்வாறு கண்ணாடிகளை அடித்து நொருக்கியுள்ளனர். உடைந்த கண்ணாடிகள் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடையவை என அதிபர் முறைப்பாட்டில் கூறியுள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நுழைவாயிலுக்கு பெயின் ஊற்றிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (10) கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.

http://www.tamilmirror.lk/139510#sthash.RAYfNQaB.dpuf

நாங்கள் படித்த காலத்தில் குமாரசாமி அதிபர் அவர்கள், கருணாகரன் அதிபர் அவர்கள், பின்னர் பொன்னம்பலம் அதிபர் அவர்கள் அத்துடன் ஹொஸ்டல் பொறுப்பாளர் சந்தியாப்பிள்ளை ஆசிரியர் அவர்கள்

என யாரைக் கண்டாலும் ஒரு பயம் கலந்த மரியாதை இருக்கும்.

இப்போது தாடிக் கலாச்சாரம் எல்லாவற்றையும் தலைகீழாக்கி வைத்திருக்கின்றது. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரிய பாடசாலை. காவல் காரர் இல்லையா? உயரமாக முக்கிய இடங்களில் கண்காணிப்பு வீடியோ கேமராவை video surveillance பொருத்தலாம். இதை ஆன்லைனில் 24மணிநேரமும் நேரடியாக கண்காணிப்பும் webcam செய்யலாம். எதிர்காலத்தில் விசமிகளினால் சேதம் ஏற்படுத்தப்படுவதை இப்படி தடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்து தொடர்ந்தும்.. தமிழரின் கலை கல்வி பண்பாட்டிடமாக விளங்குவதை சில தரப்புக்கள் விரும்பவில்லைப் போலும். எனினும் இதையும் தாண்டி யாழ் இந்து அன்னை நிமிர்ந்தே நிற்பாள். :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உடைந்த கண்ணாடிகள் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடையவை என அதிபர் முறைப்பாட்டில் கூறியுள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். என்ன நடக்குது அங்க?????

இதை உடைத்தவர்கள் எங்கே போய் படித்தார்களோ?

எங்கையாவது படித்தார்களோ? 

  • கருத்துக்கள உறவுகள்

1995 இல் இருந்து தமிழரின் கலை கலாச்சாரம் கல்வி என்பவற்றை அழிப்பதற்காக சிங்கள் அரசு ரொம்பவுமே முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

இடை இடையே வெற்றியும் காண்கிறார்கள்.

இதிலே இந்து என்ன விதி விலக்கா?

  • கருத்துக்கள உறவுகள்

இதை உடைத்தவர்கள் எங்கே போய் படித்தார்களோ?

எங்கையாவது படித்தார்களோ? 

சாதாரணமாக

முன்னோர்கள் தான் வழி காட்டணும்

இதில் படித்த சிலர்

இதன் பெயரில் செய்த இரவு விழாவின் அழைப்பிதழில்

குடிவகைகள் விற்கும் பார் (BAR) 

முன் கூட்டியே  திறக்கப்படும் என முன் பக்கத்தில் விளம்பரத்தை போட்டே அழைக்கிறார்கள்..

இதன்படி

அறிவை மயக்கியே உள்ளே வரவழைக்கிறார்கள்

அதில் பயன்பெறும் மாணவர்களின் கதி..

விளைவு இதோ....... :(  :(  :(

நான் யாழ் மத்திய கல்லூரியில் படித்த காலத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தின் திறப்பு விழாவின் போதும் இவ்வாறு தார் ஊற்றப்பட்டது. காரணம் கட்டடத்தின் பெயர் சம்பந்தமானது.
 
மாணவர்கள் தமது பாடசாலை முகப்பில் வர்ணம் கொட்டியதன் பின்னால் நியாயமான காரணங்கள் இருக்கலாம். ஆசிரியர் காரணம் என்பது ஏற்புடையதில்லை. நிச்சயமாக வேறு காரணம் இருக்க வேண்டும். மாணவர்கள் அவ்வளவு இலகுவாக தாய்க்கு சமனாகப் பார்க்கும் பாடசாலைக்கு தகுந்த காரணமில்லாமல் களங்கம் விளைவித்திருக்க மாட்டார்கள்.

10958582_10206120606314112_4377110520050

வழக்கம் போல யாழில் யாழ் இந்துவில் நடந்தது நடப்பது எதுவும் தெரியாமல் கருத்துகள் குவிகின்றன .

மரணித்த ஒரு முன்னாள் போராளிக்கே நடந்ததை பார்த்தோம் தானே ,அதனுடன் ஒப்பிடும்  போது இது எம்மாத்திரம்.

யாழ்ப்பாண யாழ் இந்து பழைய மாணவர்களில் இரு பிரிவுகள் இருக்கு இவர்களுக்குள் எப்போதும் யார் அதிகாரத்தை கையில் எடுப்பது என்பதில் பிரச்சனை .

நான் கனடா கிளையின் செயலாளராக இருந்த இருவருடங்களும் மைதானத்தை பெருப்பிக்க சேர்த்த பணத்தை கூட அனுப்பமுடியாத நிலை (பழைய மாணவர் இரு பிரிவு அதைவிட அதிபரில் பலத்த குற்றசாட்டுகள் ).

இருந்தும் ஒரு புரிந்துணர்வுடன் வெளிநாட்டு கிளைகளுடன் வேலை செய்துகொண்டிருந்தார்கள் . 

இந்த வருடம் யாழ் இந்து 125 வருடநிறைவு .வருடம் முழுக்க பல நிகழ்வுகள் நடாத்த திட்டமுள்ளார்கள் .செப்டம்பரில் பெரும் விழா ஒன்று நடக்க ஏற்பாடு உலகின் பல பகுதியில் இருந்து பழைய மாணவர்கள் ஒன்று கூட இருக்கின்றார்கள் .

இதற்குள் இந்த பிரச்சனைகள் தொடங்கியிருக்கு ,உள்பிரச்சனைகள் தான் காரணம் என நம்புகின்றேன் ஆனால் எத்தனையோ பிரச்சனைகளை முகம் கொடுத்த யாழ் இந்துவிற்கு இவைகள் எல்லாம் ஒரு தூசு, இருந்தாலும் இவை எவரும் வேண்டாத விரும்பாத நிகழ்வுகள் தான் .

எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனையும் தாண்டி யாழ் இந்து அன்னை தனக்கே உரிய மிடுக்குடன் நடைபோடுவாள் என்பது மட்டும் உறுதி .

அடுத்த மாதம் மரத்தான் ஓட்ட போட்டி அதற்கு அடுத்த மாதம் புது பவிலியன் திறப்புவிழா .இப்படி இன்னும் பல தொடரும் .

400 Seat Modern Auditorium in Memory of Mr.E.Sabalingam is due to open on 3 Apr 15

Mr.E.Sabalingam_Former_Principal_JHC_Lar

To celebrate the 125th Anniversary, Dr.S. Jothilingam, an old boy and one of our former president of Jaffna Hindu College OBA UK, has come forward to build an Auditorium in memory of his late father Mr. E.Sabalingam, a well-respected former principal of our school.Our school, which is one of the National schools in Sri Lanka, will be the first school in the Northern Province to have such a facility. This will no doubt boost the education of our younger generation.

வழக்கம் போல யாழில் யாழ் இந்துவில் நடந்தது நடப்பது எதுவும் தெரியாமல் கருத்துகள் குவிகின்றன .

விளக்கத்திற்கு நன்றி.
 
அடியேனும் சபாலிங்கத்தின் மாணவராக்கும் (மத்திய கல்லூரியில்).
  • தொடங்கியவர்

ஆசிரியரை தாக்கிய மாணவர்களுக்கு விளக்கமறியல்

ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் இருவரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் வியாழக்கிழமை (12) உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் இந்து கல்லூரி ஆசிரியரை கடந்த 9ஆம் திகதி தாக்கிய அதே பாடசாலையை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவர்கள் இருவரையும் யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினார்கள். இது தொடர்பான விசாரணை யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (12) நடைபெற்றது.

இந்த மாணவர்களை விளக்கமறியில் வைப்பது ஏனைய மாணவர்களுக்கு ஒரு பாடமாக அமையவேண்டும். ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மரியாதை செலுத்த வேண்டும். ஆசிரியர்கள் கௌரவமாக நடத்தப்படவேண்டியவர்கள் என நீதவான் கூறினார்.

ஆசிரியரைத் தாக்கிய இரண்டு மாணவர்களும் தற்போது பாடசாலையில் இருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/139718#sthash.PrZwttK1.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

400 Seat Modern Auditorium in Memory of Mr.E.Sabalingam is due to open on 3 Apr 15

Mr.E.Sabalingam_Former_Principal_JHC_Lar

To celebrate the 125th Anniversary, Dr.S. Jothilingam, an old boy and one of our former president of Jaffna Hindu College OBA UK, has come forward to build an Auditorium in memory of his late father Mr. E.Sabalingam, a well-respected former principal of our school.Our school, which is one of the National schools in Sri Lanka, will be the first school in the Northern Province to have such a facility. This will no doubt boost the education of our younger generation.

யாழ் மத்திய கல்லூரியிலும், யாழ் இந்துக் கல்லூரியிலும்....

எனது, இளமை படிப்பை....... படித்த காலத்தில்....

காலம் சென்ற சபாலிங்கம் அதிபரின் மாணவனாக இருக்க அதிக பாக்கியம் பெற்றவன் நான்.

ஒரு நாள்.... அவரின் ,கண்டிப்பு பொறுக்க முடியாமல்.....

மிச்சத்தை.... புங்க்கையூரானிடம் கேளுங்கள்.... 

தமிழ்சிறி ,

ஒரு நாள் ஜெயக்குமாருடன் படித்தது என்கின்றீர்கள் ,பிறகு ஐங்கரநேசனுடன் படித்தனான் என்கின்றீர்கள் இப்ப புங்கையிடம் கேட்கவும் என்கின்றீர்கள் .எத்தனை தரம் பெயில் விட்டீர்கள் . :icon_mrgreen:

சபாலிங்கத்தை பற்றி விரைவில ஒரு பதிவு எழுதவுள்ளேன் .

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனையும் தாண்டி யாழ் இந்து அன்னை தனக்கே உரிய மிடுக்குடன் நடைபோடுவாள் என்பது மட்டும் உறுதி .
யாழ் இந்து மட்டுமல்ல வடமாகாணத்தான் எல்லொரும் மிடுக்குடன் நடை போடுவான்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் இந்து மட்டுமல்ல வடமாகாணத்தான் எல்லொரும் மிடுக்குடன் நடை போடுவான்

நூற்றுக்கு நூறு...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி ,

ஒரு நாள் ஜெயக்குமாருடன் படித்தது என்கின்றீர்கள் ,பிறகு ஐங்கரநேசனுடன் படித்தனான் என்கின்றீர்கள் இப்ப புங்கையிடம் கேட்கவும் என்கின்றீர்கள் .எத்தனை தரம் பெயில் விட்டீர்கள் . :icon_mrgreen:

சபாலிங்கத்தை பற்றி விரைவில ஒரு பதிவு எழுதவுள்ளேன் .

இரண்டு தரம்,  ஒருத்தன் பெயில் விட்டால்..... தப்பா? அர்ஜூன்.. :rolleyes:  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.