Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மின்பிறப்பாக்கிகளை இயக்க தொடர்ந்தும் தடை!! மேல்நீதிமன்று உத்தரவு!!

Featured Replies

மின்பிறப்பாக்கிகளை இயக்க தொடர்ந்தும் தடை!! மேல்நீதிமன்று உத்தரவு!!

northern-power-company.jpgசுன்னாகம் கழிவு ஓயில் குடிநீர் விவகாரம் தொடர்பினில் மேல் நீதிமன்றில் இன்றைய தினம் மீண்டும் நொதேர்ண் பவர் நிறுவனம் சார்பில் தோன்றிய சட்டத்தரணிகள் மல்லாகம் நீதவான் நீதிமன்றால் மூடப்பட்ட குறித்த நிறுவனத்தினை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி விண்ணப்பம் செய்திருந்தனர். இதற்கு பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஆயராகிய சட்டத்தரணியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சர்வதேச அமைப்பாளருமான மணிவண்ணன் கடுமையான ஆட்சேபனையை முன்வைத்திருந்தார்.

பதிவு இணைய நியூஸ் , பதிவு  இணைய  செய்திகள்

இதனை தொடர்ந்து குறித்த விண்ணப்பத்தினை; மீண்டும் நிராகரித்ததுடன் மல்லாகம் நீதவான் நீதிமன்ற வழக்கேட்டினை மேல் நீதி மன்றில் பாரப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.பதிவு  இணைய  செய்திகள்

தனது பணபலம் மற்றும் அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி அனைத்து தரப்புக்களினையும் வளைத்துப்போட நொதேர்ண் பவர் நிறுவனம் முற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுப்;பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.pathivu.com/news/37757/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் நீதிமன்றதடையுத்தரவு சுற்றுச்சூழல் அமைச்சர் ஐங்கரநேசனுக்கும் இதர அறிவு சூனியங்களுக்கும் விழுந்த ஆப்பு என்றுதான் கொள்ளவேண்டும். அண்மையில் அமைச்சர் என்ற அடிப்படையில் அவர் விடுத்த அறிக்கையில் தற்போது சுன்னாகம் மின்நிலையத்தில் பொருத்தப்பட்டிருக்கும் மின் பிறப்பாக்கியில் மிக நவீன இலத்திரனியல் உபகரணங்கள் இணைக்கப்பட்டு சுற்று சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் பராமரிக்கப்படுகிறது என்று வக்காலத்து வாங்கியிருந்தார். பணம் கைமாறிவிட்டது என்றுதான் எனக்கு எண்ண தோனுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மின்பிறாப்பாக்கிகளை நிற்பாட்டியாச்சு. இப்ப யாழ்ப்பாணத்தில கரண்ட் இருக்கோ இல்லையோ..?! கொலிடே சீசன் வேற வரப்போகுது.. சட்டுப்புட்டென்று லக்சபானாவை கொண்டு வந்திடுங்க. எங்க புலம்பெயர் வாரிசுகள் சூடு தாங்காதுங்க. சாரி. இதில ஐங்கரநேசன் என்ன யாரையும் நாங்க கணக்கில எடுக்கமாட்டம். ஏன்னா நாங்க வெளிநாட்டு பிரஜைங்க. :D:lol:

தொடரும் நீதிமன்றதடையுத்தரவு சுற்றுச்சூழல் அமைச்சர் ஐங்கரநேசனுக்கும் இதர அறிவு சூனியங்களுக்கும் விழுந்த ஆப்பு என்றுதான் கொள்ளவேண்டும். அண்மையில் அமைச்சர் என்ற அடிப்படையில் அவர் விடுத்த அறிக்கையில் தற்போது சுன்னாகம் மின்நிலையத்தில் பொருத்தப்பட்டிருக்கும் மின் பிறப்பாக்கியில் மிக நவீன இலத்திரனியல் உபகரணங்கள் இணைக்கப்பட்டு சுற்று சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் பராமரிக்கப்படுகிறது என்று வக்காலத்து வாங்கியிருந்தார். பணம் கைமாறிவிட்டது என்றுதான் எனக்கு எண்ண தோனுகிறது.

..அத்துடன் மக்கள் போராட்டங்களை குழப்பவும் பல முயற்சிகள் எடுத்து இருந்தார் என்று தகவல்கள் கூறுகின்றன. சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி வகுப்பெடுக்கும் ஐங்கரநேசன் இந்த விடயத்தில் முற்றிலும் முதலாளிகள் பக்கம் நிற்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நிறுவனம் மூடியதால் யாழ்ப்பாணத்தில் பவர்கட் ஏதுமில்லை. வழமைபோல மின்சாரம் வருகிறது. எனவே இந்த நிறுவனம் இயங்கித்தான் மின்சாரம் வரவேண்டும் என்றில்லை.

நிறுவனம், வெளிநாட்டு தமிழருக்கு சொந்தமானது. அந்த ஆதங்கத்தில் ஐங்கரநேசன் சொல்லியிருப்பாரோ!

  • கருத்துக்கள உறவுகள்

..அத்துடன் மக்கள் போராட்டங்களை குழப்பவும் பல முயற்சிகள் எடுத்து இருந்தார் என்று தகவல்கள் கூறுகின்றன. சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி வகுப்பெடுக்கும் ஐங்கரநேசன் இந்த விடயத்தில் முற்றிலும் முதலாளிகள் பக்கம் நிற்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

என்னப்பா  நடக்குது இங்க...

ரொம்ப நம்பியிருந்தேன் இவரை.........

நம்பியவர்கள் எல்லோரும் காலை வாருகிறார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

வேறொன்றுமில்லை, காசை வாருகிறதால காலை வாருகிறார்கள் போல...!

  • கருத்துக்கள உறவுகள்

ஐங்கரநேசன், என்னுடன் படித்த சக மாணவர்.
பாடசாலைக் காலங்களில், ஓரளவு நட்பு வட்டத்திற்குள் இருந்தவர்.
பின்பு நான்.... புலம் பெயர்ந்த பின், வழமையான தொடர்புகள் அற்றுப் போய் விட்டது போல்...  அவருடன் தொடர்புகள் இருக்கவில்லை.
ஆனாலும், அவர் நடாத்திய "ரியூசன்" வகுப்பால்... செய்திகளில் அறிந்து கொண்டேன்.
பின்... அமைச்சராய் வந்து, பல அதிரடி.... சுற்றுச் சூழல், விவசாய நலன் சம்பந்தப் பட்ட, அறிக்கைகளை வெளியிடும் போது... மனத்தால் பெருமிதமும், புளகாங்கிதமும் அடைந்தேன்.

இப்போ.... அவரைப் பற்றி வரும் செய்தி... மிகுந்த மனவருத்தம் அளிக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஐங்கரநேசன் மீதான குற்றச்சாட்டுக்களை சகட்டு மேனிக்கு முன் வைக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அவர் ஒரு தற்காலிக மதிப்பீட்டு அறிக்கையின் படி வழங்கிய செய்திகளை திரித்து.. மக்களுக்காக உறுதியோடு உழைக்கும் ஒரு சிலர் மீதும் கறை படிவிக்க நினைக்கிறார்கள்.. சிங்களக் கூத்தாடிகள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

ஐங்கரநேசன்.. காசுக்காக.. அவ்வளவு இலகுவில்.. சோரம் போகக் கூடியவர் என்றால்.. லண்டனிலையே இருந்திருப்பார். :icon_idea::lol:

ஐங்கரநேசன் பார்த்தீனம் செடிகளை ஒழிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளைக் கூட ஆயுதக் குழு.. பாசிச.. மாற்றுக் கருத்து என்ற போலி முகமூடி போட்ட... காட்டிக்கொடுப்பு கும்பல்கள் தவறாக பிரச்சாரப்படுத்தி வந்ததை இங்கு நல்ல உதாரணமாகக் காட்டலாம். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முனைப்புடன் சேவை செய்யும் ஒருவருக்கு ஆப்பு வைப்பதும் ஒரு வகை வறன்ட அரசியல்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கலாம். நல்ல மனிதர்கள் கூட சிலவேளைகளில் தமது தான்தோன்றிதனமான நடவடிக்கைகளால் மக்களிடமிருந்து அன்னியப்பட்டுபோகின்றார்கள். மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்கவேண்டிய உண்மை வெளிபடுத்தும் கடமையை மறந்து வேறொரு உள்நோக்கம் கொண்டு செயல்படுவதால் தமது கடந்த கால அற்பபணிப்பான சேவைகளை இலகுவில் அர்த்தமற்றதாக்கி விடுகிறார்கள். அந்த உள்நோக்கம் மக்களுக்கு நன்மைபயக்கும் ஒரு நல்ல சேவைக்கான ஒரு திட்டமாகவும் இருக்கலாம் ஆனால் அதை மக்கள் பிழையாக புரிந்து கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்திகொள்கின்றார்கள். இதோ இங்கரநேசனின் அறிக்கை. http://www.yarl.com/forum3/index.php?/topic/153597-நிலத்தடி-நீரில்-எண்ணெய்-மாசு-தொ/. குறிப்பாக மாசுக்கான காரணம் என்ற பகுதியில் 4-ஆம் பந்தியில் சுன்னாகம் மின்னிலையத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் நவீன மின்பிறப்பாக்கி பற்றியும் அது சுற்று சுழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையை சேர்ந்தது என்றும் கூறப்பட்டிருக்கிறது. டீசலை பயன்படுத்தும் எந்த ஒரு மின்பிறப்பாக்கியும் சுற்று சுழலுக்கு மாசை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இதுபோக நிலத்தடி நீர் மாசு அடைந்ததின் உண்மையான காரணம் பற்றி இந்த அறிக்கையில் எங்கும் கூறப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நிலத்தடி நீர் பல்வேறு காரணிகளால் மாசாகி வருகிறது. கழிவு எண்ணெய் மட்டும் அதற்கு காரணம் அல்ல. போர் காலத்தில் சாவகச்சேரி.. மட்டுவில்.. நுணாவில் பகுதி கிணறுகளில் கோடை காலத்தில் எண்ணெய் படலம் மிதக்கும். அதற்கும் கழிவு எண்ணெய் தான் காரணமா..?!

மேலும் சரியான மதிப்பீடுகள் இன்றி.. சரியான ஆய்வுகள் இன்றி.. எடுத்த எடுப்பில் இதுவிடயத்தில் குறை சொல்ல முடியாது. கழிவு எண்ணெய்களால் நில.. நீர் மாசுக்கு வழி இருக்கிறது. ஆனால் குடா நாட்டு நிலக்கீழ் நீரில் எண்ணெய் என்பது இது சார்ந்தது மட்டும் தானா என்பது ஆய்வுக்குரியது.

ஐங்கரநேசன் மின்பிறப்பாக்கிகள் உள்ள இடத்தில் தனது கண்காணிப்பின் அடிப்படையில்.. சொன்ன தகவல்களே உள்ளன. ஆய்வு செய்து சொன்னதாக தெரியவில்லை. கண்காணிப்புக்கும்.. ஆய்வுக்கும் வித்தியாசம் உள்ளது.

இதே ஐங்கரநேசன் தான் நிலக்கீழ் நீரில் எண்ணெய்யாம் என்ற உடன் வீதியில் இறங்கிப் போராடியவர்களோடு கூட நின்றார் என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

குடாநாட்டில் டீசல் மின்பிறப்பாக்கிகள்... புலிகள் இருந்த போதும்.. அதற்கு முன்னரும் பாவிக்கப்பட்டு வந்தன. 1990 களில் அவற்றின் மீது சிங்கள விமானப் படை குண்டு வீசி தகர்த்து.. குடா நாட்டுக்கான நீர்த்தேக்க மின் விநியோகத்தோடு இவற்றையும் தடுத்துக் கொண்டது. அன்றைய காலங்களில் இது குறித்த சர்ச்சைகள் எழுந்திருக்கவில்லை.

இன்று இராணுவ தேவைகளுக்காக மின்பிறப்பாக்கிகள் மூலம் இராணுவம் சிவில் கண்காணிப்புக்கு அப்பால் இயக்கும் மின் பிறப்பாக்கிகளால் கூட இந்த நிலைமை உருவாகி இருக்கலாம் இல்லையா...?! ஏன் நாங்கள்.. இது தொடர்பில் ஒரு பூரண ஆய்வை செய்துவிட்டு.. சுட்டு விரல்களை நீட்டக் கூடாது. ஏன் ஐங்கரநேசனை எடுத்த எடுப்பில் நோக வேண்டும்..??! :icon_idea::rolleyes::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதுபோன்ற குற்ற நடவடிக்கைகள் வடபகுதிகளில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள்ளும் நடக்கிறதா என்பது பற்றி எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இராணுவ தளங்களிலும் தமக்கு வேண்டிய மின்சாரத்தை பெறுவதற்கு சொந்தமான மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்துவது வழமை. அவர்கள் எப்படி கழிவுகளை அகற்றுகிறார்கள் என்பதையும் சுற்று சூழல் அமைச்சு அறிந்து கொள்ளவேண்டியது இந்த அனர்த்தத்தின் பின் அவசியம் என்றே சொல்லவேண்டும்.

அவர்கள் இத்தனை ஆயிரம் சிங்கள இராணுவத்தின் மலக் கழிவையே பொதுமக்கள் வாழும் பகுதிகளுக்கு அண்மையில் கெட்டி அதுவும் பிரச்சனையாக அண்மையில் வெளிப்பட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

ஒரு சிவில் பகுதியில்.. ஒரு பெரும் இராணுவ வைத்திருப்பு என்பது பல வழிகளில்.. அந்த சிவில் பகுதியை நாசம் பண்ணும். அதுவும் நீண்ட கால ஒழுங்கில்.. ஒரு பகுதியில்.. இராணுவத்தின் இருப்பு அந்தப் பகுதி மக்களுக்கு மட்டுமல்ல.. சுற்றுச்சூழலுக்கும் உகந்ததல்ல. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் நீங்கள் சுன்னாகம் மின்நிலையத்தில் கழிவு எண்ணையை நிலத்தில் தோண்டப்பட்ட குழாய் கிணறு முலம் நிலத்துக்கு அடியில் செலுத்தப்பட்டு(injection) அகற்றபட்ட செய்தி கேள்விப்படவில்லையா. அப்படி இதற்க்கு முன் வடபகுதியில் எங்காவது செய்திருக்கிறார்களா? இல்லாவிடில் ஒட்டு மொத்த கிணறுகளுக்குள்ளும் எண்ணை வெளிவர காரணமேயில்லை. அப்படி என்றால் குறைந்தபட்சம் வட பிரதேசத்தில் நிலத்தடியிலிருந்து இயற்கை வளமான மசகு எண்ணை பெறும் வாய்ப்புகள் உண்டா என்பதையாவது அரசுதான் ஆராய்ச்சி முலம் கண்டறிந்து சொல்லவேண்டும்.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

இதனை அரசு ஆராய்ச்சி செய்ய முடியாது. இதனை.. பிராந்திய சுயாதீன அமைப்பு.. யாழ் பல்கலைக்கழகம் தான்.. ஆராய்ந்து சொல்லனும். ஒரு சிங்கள அரசு செய்யும் ஆய்வு நடுநிலையாக இருக்குமா.. என்ற கேள்வி உள்ளது. வட மாகாண அரசுக்கு தனி ஆய்வுகளை செய்யக் கூடிய அதிகாரம் இருக்கா என்பதும் கேள்வி. :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

அரசு ஆராச்சி செய்யமுடியாது என்று எடுத்த எடுப்பில் சொல்லிவிட்டீர்கள். சந்தேகமேயில்லை இது அரசின் பொறுப்பு தான். மத்திய மற்றும் மாகாண அரசுகள் இதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டியது அவற்றின் பொறுப்பு. போக எந்த சுயாதீன அமைப்புக்களோ பலகலையோ தமது இஸ்டத்துக்கு இதுபோன்ற ஆராச்சிகளில் இறங்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

 இந்த பிரச்சனைகளை  சமாளிக்க இங்குள்ள மீள்சுத்திகரிப்பு முறைகளை சிறிது மாற்றத்துடன் அங்கு நடைமுறைபடுத்தலாம்.உதாரணமாய் கழிவு ஒயில் மீள்சுத்திகரிப்பு.

Used motor oil recycling machine oil system/Used kerosene oil filtration refinery machine

http://au.alibaba.com/product/1736608478-Used-motor-oil-recycling-machine-oil.html

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் நீங்கள் சுன்னாகம் மின்நிலையத்தில் கழிவு எண்ணையை நிலத்தில் தோண்டப்பட்ட குழாய் கிணறு முலம் நிலத்துக்கு அடியில் செலுத்தப்பட்டு(injection) அகற்றபட்ட செய்தி கேள்விப்படவில்லையா. அப்படி இதற்க்கு முன் வடபகுதியில் எங்காவது செய்திருக்கிறார்களா? இல்லாவிடில் ஒட்டு மொத்த கிணறுகளுக்குள்ளும் எண்ணை வெளிவர காரணமேயில்லை. அப்படி என்றால் குறைந்தபட்சம் வட பிரதேசத்தில் நிலத்தடியிலிருந்து இயற்கை வளமான மசகு எண்ணை பெறும் வாய்ப்புகள் உண்டா என்பதையாவது அரசுதான் ஆராய்ச்சி முலம் கண்டறிந்து சொல்லவேண்டும்.

உண்மையில்

கழிவா?

வளமா?  என அறியாமலேயே  ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி

மக்களை குளப்ப 

தமிழரால் மட்டுமே முடிகிறது..

இது வளமாக இருந்தால்.....

எவ்வளவு பெரிய சொத்து இது...

இது வளமாக இருந்தால்.....

எவ்வளவு பெரிய சொத்து இது...

இது வளமாக இருந்தால் எங்களை குடாநாட்டை விட்டே துரத்தி விடுவாங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இது வளமாக இருந்தால் எங்களை குடாநாட்டை விட்டே துரத்தி விடுவாங்கள். 

எனது மக்களின் படிப்பு சார்ந்து அவர்களுடன் கதைக்கும்  போது..

எப்பொழுதுமே

படிப்பு என்றாலும்

வேலை என்றாலும்  சிலவற்றில் ஒன்றை நீங்கள் தெரிவு செய்யுமாப்போல்

(எமக்காக மற்றவர் இது தான் என தெரிவு செய்யாது) அவை அமையவேண்டும்.

அதன்படி

இது வளமென்றால்

எமது எஐமானரை நாம் தெரிவு செய்யும் வாய்ப்புக்கிடைக்கும்..... :icon_idea:

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு சொந்தமான கடல் பிராந்தியத்தில் எண்ணை எடுக்கும் ஆராய்ச்சிகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. நிலத்தடியில் ஆராச்சிகள் செய்கிறார்களா என்பது தெரியாது. 2017/2018 இல் எண்ணை உற்பத்தி தொடங்கும் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

நிறுவனம், வெளிநாட்டு தமிழருக்கு சொந்தமானது. அந்த ஆதங்கத்தில் ஐங்கரநேசன் சொல்லியிருப்பாரோ!

சிலர் வெளிநாட்டில் உழைத்த கொழுப்பு காரணமாக வெளிநாட்டில் உள்ள தமிழ் மக்களை வெறுக்கறார்கள். தாயகத்தில் வாழும் மக்கள் வெளிநாட்டு தமிழ் மக்களுக்கு எதிராக வெறுப்பை காட்டுவதில்லை.
  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாசடைவு சுன்னாகம் மின்சார நிலையம் அல்லது அதுபோன்ற மின்பிறப்பாக்கி உள்ள வேறு இடத்திலிருந்து நிலத்தினுள் செலுத்தப்பட்ட கழிவு எண்ணெய் அல்லது இயற்கையாக நிலத்தடியில் காணப்படும் மசகு எண்ணெயால் ஏற்பட்டது அல்ல என்று கொண்டால் என்னிடம் மிகுதி இருப்பது இன்னும் ஒரே ஒரு விளக்கம்தான். இதுதான் நடந்தது என்று நான் இங்கு சொல்லவில்லை இது வெறும் ஊகம் தான். அதை சொல்ல முன் இலங்கையின் வடபுலத்தில் நிலத்தடியில் இயற்கையான நன்னீர் வடிகால்கள் குறுக்கும் நெடுக்குமாக அமைந்திருப்பது விஞ்ஞானரீதியாக பல சந்தர்ப்பங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. யாழில் நிலாவரை கிணற்றுக்கு சென்று பார்த்தவர்களுக்கு இது புரியும். இதுபோன்ற கிணறுகளை இறைக்க இறைக்க நீர் வற்றாது. இவற்றில் வழமையான கிணறுகளில் காணப்படும் ஊற்றுநீருக்கு பதிலாக நிலத்தடி வடிகால்களுடாக பெருமளவு தண்ணீர் வந்து கிணறு நிறைந்துகொண்டே இருக்கும். இதுபோன்ற நன்னீர் வடிகால்கள் நிலத்தடியே தொடர்ந்து சென்று கரையிலிருந்து 100-120 கி.மீ வரை கூட கடலின் அடிமட்டத்துக்கு கீழே ஆழத்தில் சென்று கடலை அடையும் என்பது விஞ்ஞானிகள் கண்டறிந்த உண்மை. கடந்த வருடங்களில் பாக்குநீரிணை கடலில் மசகு எண்ணெய் ஆய்வும்(exploration) குழாய் கிணறுகள் தோண்டப்பட்டு நில அகழ்வும்(drilling) இடம்பெற்றது தெரிந்ததே. தோண்டப்பட்ட இக்குழாய் கிணறுகள் முலம் விஞ்ஞானிகள் பாக்கு நீரினை கடலில் மசகு எண்ணெய் இருப்பதை பல இடங்களில் உறுதி செய்திருக்கிறார்கள். தோண்டப்பட்ட (1) இக்கிணறுகள் சரியான முறையில் பூர்த்தி(casing failure/collaps) செய்யப்படவில்லை எனில் அல்லது (2). இக்குழாய் கிணறு முன்னர் குறிப்பிட்டதுபோல் கடலடியில் உள்ள நன்னீர் வடிகால் ஒன்றின் ஊடாக(colliding well path) தோண்டப்பட்டு இருந்தால் நன்னீரில் மசகு எண்ணெய் கலந்து அது நிலத்தை நோக்கி கசிந்து(migration of hydrocarbon) செல்வதற்கு சந்தர்ப்பம் உண்டு. அத்துடன் இலங்கை கடலில் தோண்டப்பட்ட ஆய்வு எண்ணெய் கிணறுகள் கடற்கரையில் இருந்து மிக அருகில் தோண்டப்படும் சந்தர்ப்பங்கள் தான் அங்கு அதிகம் உண்டு. (1). சரியான முறையில் பூர்த்தி செய்யப்படாத கிணறுகளில் காலப்போக்கில் எரிவாயு, தண்ணீர், எண்ணெய் என்பன இடம் மாறிச்சென்று ஒன்றுடன் ஓன்று கலக்கும் சந்தர்ப்பமும். (2). நன்னீர் வடிகால்களுடன் மோதும் எண்னை கிணறுகளில் உயர் அமுக்கம் காரணமாக மசகு எண்ணெய் நன்னீருக்குள் ஊடுருவி நிலத்தை நோக்கி சென்று நிலத்தடி வடிகால்களை மாசடையச் செய்யும். http://www.rigzone.com/news/oil_gas/a/130493/Cairn_India_to_Make_History_in_Sri_Lankas_Petroleum_Industry http://www.geoexpro.com/articles/2013/02/cairn-discovers-gas-offshore-sri-lanka http://www.prds-srilanka.com/exploration/origins.faces https://www.cairnindia.com/our-business/sri-lanka

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் ஐங்கரநேசன் மீதான குற்றச்சாட்டுக்களை சகட்டு மேனிக்கு முன் வைக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அவர் ஒரு தற்காலிக மதிப்பீட்டு அறிக்கையின் படி வழங்கிய செய்திகளை திரித்து.. மக்களுக்காக உறுதியோடு உழைக்கும் ஒரு சிலர் மீதும் கறை படிவிக்க நினைக்கிறார்கள்.. சிங்களக் கூத்தாடிகள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

ஐங்கரநேசன்.. காசுக்காக.. அவ்வளவு இலகுவில்.. சோரம் போகக் கூடியவர் என்றால்.. லண்டனிலையே இருந்திருப்பார். :icon_idea::lol:

ஐங்கரநேசன் பார்த்தீனம் செடிகளை ஒழிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளைக் கூட ஆயுதக் குழு.. பாசிச.. மாற்றுக் கருத்து என்ற போலி முகமூடி போட்ட... காட்டிக்கொடுப்பு கும்பல்கள் தவறாக பிரச்சாரப்படுத்தி வந்ததை இங்கு நல்ல உதாரணமாகக் காட்டலாம். :icon_idea:

இதை நம்புவதில்லை விடுவதும் உங்கள் விருப்பம் ஆனால் இவரும் உதயன் பத்திரிகையும் இணைந்து இந்த செய்தியை /அவலத்தை தமது சுயலபத்திற்க்காக மறைக்கிறார்கள் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.