Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சில் இருந்து சென்ற தாயும் மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
airport-200-news.jpg

பிரான்ஸ் பிரஜைகளான தமிழ்ச் சிறுமியும், தாயும் நேற்றுக் காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.பிரான்ஸ் நாட்டிலிருந்து அண்மையில் விடுமுறையில் இலங்கை சென்றிருந்த சிறுமியும் தாயும் நேற்றுக் காலை பிரான்ஸ் நாட்டுக்கு திரும்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையம் சென்றிருந்தனர்.

அவர்கள் இருவரும் விமானநிலையத்தில் பயணிப்பதற்கான சூட்கேஸ்களை ஒப்படைத்து விட்டு, போர்டிங் எடுப்பதற்கென அவர்களது கடவுச்சீட்டுக்களைக் கொடுத்தபோது விமான நிலையத்திலுள்ள புலனாய்வுப் பிரிவினரால் குறித்த தாயும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான தாய் பகீரதி என்றும், மகள் பகல்வி (8 வயது) என்றும் தெரிய வந்துள்ளது.

http://seithy.com/breifNews.php?newsID=127569&category=TamilNews&language=tamil

  • Replies 79
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இவர் புலிகள், கடற்புறா, பெண்கள் பிரிவுத் தலைவி என்றும், பிரான்ஸ்காரரின் கடவுச் சீட்டுடன் வெளியேற முயன்று கைதானார் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் யாருமே படிக்கவில்லையா? அல்லது அறிவேயில்லையா? ஆட்சி மட்டுமே மாறியது தவிர தமிழர்கள் மீதானா கெடுபிடிகள் மாறவில்லை.தமிழரின் உள் நாட்டுத்தலைமைகளுக்கு பணம் கொடுத்து அவர்களின் உதவியுடன் ஆட்சி மாற்றமேற்பட்டது.தமிழர்களுக்கான ஆட்சி மாற்றம் இதுவல்ல...... எல்லையிட்டால் தான் தமிழருக்கு விமோசனம்.எல்லையிடுவதைத்தவிர வேறு வழியில்லை.இலங்கையிலிருந்து அகதியானவர்கள் அனைவரும் இலங்கையரசின் எதிரிகளே இதை மறவாதீர்கள்

Ltte_Nave.jpg
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் கடற்புலித் தளபதிகளில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முருகேசு பகீரதி என்ற பெண் புலிப் போராளியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், குறித்த பெண் புலி உறுப்பினரை கைது செய்துள்ளனர்.

பெண் உறுப்பினர் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸ் நாட்டிலிருந்து அண்மையில் விடுமுறையில் இலங்கை சென்றிருந்த சிறுமியும் தாயும் திங்கட்கிழமை காலை பிரான்ஸ் நாட்டுக்கு திரும்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையம் சென்றிருந்தனர்.

குறித்த பெண் பிரான்ஸிற்கு செல்ல முயற்சித்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

2ம் இணைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் அவரது 8 வயது மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் உள்ள தமது பெற்றோரை பார்க்கவென பிரான்ஸில் இருந்து வந்த ஜெயகணேஸ் பகீரதி என்ற பெண்ணும் அவரது 8 வயது மகளான ஜெயகணேஸ் பகலவி ஆகியோருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் பகிரதி தனது மகளுடன் பிரான்ஸில் வசித்து வருவதாகவும் மகளின் பாடசாலை விடுமுறையை முன்னிட்டு கிளிநொச்சியில் உள்ள தனது பெற்றோரை பார்வையிட வந்து மீண்டும் பிரான்ஸ் செல்ல இருந்தபோதே கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை கைது செய்யப்பட்ட பகிரதியும் பகலவியும் தற்போது பயங்கரவாத தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புட்ட செய்தி

பிரான்ஸ் செல்லவிருந்த தாயும் மகளும் கட்டுநாயக்காவில் வைத்து கைது!

http://www.tamilwin.com/show-RUmtyDTXSUmo5C.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சிங்களவன் தன்ரை கொள்கை / குணத்திலையிருந்து மாறவே மாட்டான்....எங்கடை ஆக்கள் கொஞ்சப்பேர் இப்பவும் சிங்களவனுக்கு பஞ்சாலார்த்தி காட்டிக்கொண்டிருக்கினம்...
 
சுமேந்திரனும் சாடமாடையாய் புலம்பெயர் தமிழர்களை கோஷ்டிகள் என வர்ணிக்க வெளிக்கிட்டுட்டார் போல கிடக்கு.....

உங்கை எத்தனை சனம் ஒரு பிரச்சனையுமில்லாமல் போய் வருது .

தமது பாதுகாப்பு என்றுவரும் போது  எந்த நாடும் விதி விலக்கல்ல 

"யாரொடு நோவேன் யார்கெடுத்து உரைப்பேன் ஆண்ட நீ அருள் இல்லையானால்"

Edited by BLUE BIRD

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கை எத்தனை சனம் ஒரு பிரச்சனையுமில்லாமல் போய் வருது .

தமது பாதுகாப்பு என்றுவரும் போது  எந்த நாடும் விதி விலக்கல்ல 

அர்ஜுன் என்ன சொல்ல வாறீங்கள். இந்த பெண்ணால் சிறிலங்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று சொல்லுகின்றீர்களா ?   

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் ஆள்மாறாட்டம் இடம்  பெற்றதா?

இதனை அறியும்வரை கருத்துக்களை வைப்பது சரியாக இராது....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மேல் உள்ள காழ்ப்புணர்வு உங்களை இவ்வாறு எழுதவைக்கின்றது என்பதினையே உணரமுடிகின்றது 

அர்ஜுன் 

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் வழங்கும் அகதி உரிமையை நம்மவர்கள்.. தவறாகப் பயன்படுத்தும் விளைவுகளில் இதுவும் ஒன்று.

அகதி அந்தஸ்துக் கிடைச்சா.. சிவனேன்னு.. இருக்கிறதை விட்டிட்டு.. ஊருக்கு ஓடுறது.. சோவுக்கு. அப்பா அம்மாவைப் பார்க்கனும் என்று நினைக்கிறவை.. பிற நாடுகளுக்கு அழைச்சுப் பார்த்திட்டுப் போறது.

எம்மவர்கள் அகதி அந்தஸ்தை பொருண்மிய எடுப்பாகக் கருதி அதை ஊருக்கு காட்டப் போறதால தான் இத்தனையும். இவர்களுக்காக பரிதாபப்பட முடியவில்லை.  :icon_idea:  :rolleyes:

இன்றைய பி பி சீ செய்தியை கேளுங்கள் .

இந்த பெண்ணின் தம்பியையும் இலங்கை புலனாய்வு பேச்சாளரையும் பேட்டி கண்டார்கள் .

ஒரு குழந்தையுடன் சென்ற தாயாக அவரில் அனுதாபம் தான்,

ஆனால் அரச தரப்பு தனது நிலைப்பாட்டை சொல்லுது . தம்பியாரின் வாக்குமூலத்திலும் பல குளறுபடிகள் .

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சிற்கு செல்வதற்கு விமான நிலையம் சென்ற தாயும் அவரது மகளும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது:-

மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள தனது பெற்றோரை பார்ப்பதற்காக இலங்கை சென்றுவிட்டு மீண்டும் பிரான்சிற்கு செல்வதற்கு விமானநிலையம் சென்ற தாயும் அவரது மகளும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க பேராளியான இவர் கைதுசெய்யப்பட்டு உள்ளமை குறித்து மேலும் தெரியவருவதாவது.

பெப்ரவரி 2 ம் திகதி ஜெயகணேஸ் பகீரதி பிரான்சிலிருந்து இலங்கைக்கு சென்றுள்ளார். அவரது பெற்றோரை பார்ப்பதே  அவர் இலங்கை சென்றதன் நோக்கம், அவரது தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவரது தந்தையும் சமீபத்தில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார்.

பெப்ரவரி 12 ம்திகதி கிளிநொச்சியிலுள்ள அவரது வீட்டிற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் என கூறிக்கொண்டு இருவர் சென்றுள்ளனர். இவர்களில் ஒருவர் தன்னை விஜித பண்டார என அறிமுகப்படுத்தி உள்ளார்.பகீரதி அவ்வேளை அங்கில்லாததால் அவரது தந்தை அவர்களை மறுநாள் வரும்படி கேட்டுள்ளார். இதன் படி மறுநாள் வீட்டிற்கு வந்த அதிகாரிகள் அவருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான தொடர்புகள் மற்றும் அவரது கணவன் குறித்து விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.அவர் அதன் போது தான் 2 ம்திகதி பிரான்ஸ் திரும்புவதாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அவர்கள் திரும்பிவரவில்லை. இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள பிரிவினர் என கூறிக்கொண்டு இருவர் அவரது வீட்டிற்கு சென்று பொதுவான விடயங்களை சேகரித்துள்ளனர்.

மார்ச் முதலாம் திகதி பகீரதி அவரது மகள் மற்றும் உறவினர்களுடன் விமானநிலையம் செல்ல தயாரான வேளை கொழும்பு குற்றப் புலானய்வு திணைக்கள அவலலகத்திற்கு வருமாறு அவரிற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் தான் அன்று காலை பிரான்ஸ் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அவர் மறுநாள் தனது உறவினர்களுடன் விமானநிலையம் புறப்பட்ட வேளை பயங்கரவாத தடுப்புபிரிவினர் அவரையும் மகளையும் தடுத்து நிறுத்தி உள்ளனர். அதரிகாலை 2.30 மணிமுதல் 8.30 வரை அவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவரை மகளுடன் தடுத்து வைத்திருந்துள்ளனர். அவரது உறவினர்கள் இரு சிறு குழந்தைகளுகடன் விமான நிலையத்திலேயே இருந்துள்ளனர் சுமார் 9.00 மணிக்கு இருவரையும் விடுதலை செய்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவர்களை தங்கள் கொழும்பிலுள்ள தங்கள் அலுவலகத்திற்கு செல்லுமாறு பணித்துள்ளனர். இதன் படி பகீரதி 10 மணியளவில் தனது உறவினர்களுடன் அந்த அலுவலகம் சென்றுள்ளார்.

அங்குள்ள கட்டிடத்திற்குள் பகீரதியையும் மகளையும் அதிகாரிகள் அழைத்துச்சென்றுள்ளனர்.பின்னர் கொழும்பு 12 இல் உள்ள நீதவான் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.பகீரதியின் குடும்பத்தவர்கள் தாங்கள் சட்டத்தரணி ஓருவரை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்த போதிலும் அதனை அலட்சியம் செய்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அதனை அலட்சியம் செய்து அவரை நீதிமன்றத்திற்குள் அழைத்து  சென்றுள்ளனர்.

அதன் பின்னர் வெளியே வந்த பகீரதி தங்களை தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் பகீரதியின் சகோதரரிடம் அவரிற்கான உடைகளை கொண்டு வருமாறு பணித்துள்ளனர்.சகோதரர் சட்டத்தரணி ஒருவருடன் அங்கு சென்றுள்ளார். சட்டத்தரணி பகீரதியை சந்திக்க அனுமதி கேட்ட வேளை பண்டார என்ற அதிகாரி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.சட்டத்தரணிகள் தங்களது இயக்குநரின் அனுமதியை பெற்றே அவரை சந்திக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.பகீரதியை தங்களால் நீதிமன்றத்தில் ஆஜராக்காமல் வைத்திருக்க முடியும் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கடற்புலிகள் அமைப்பிலிருந்ததாகவும், பிரான்சில் விடுதலைப் புலிகளுக்கு உயிரூட்ட முயன்றதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த அதிகாரி பிரான்ஸ் பிரஜையும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளருமான பகீரதியின் கணவரை இலங்கை வரச்செய்வதற்காகவே அவரை குழந்தையுடன் தடுத்துவைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் அமைப்பிலிருந்த பகீரதி 2005 ம் ஆண்டு பிரான்ஸ் சென்றதாகவும், அவரது கணவர் அந்த அமைப்பின் தீவிர ஆதரவாளர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.2006 இல் பிறந்த அவரது மகள் ஒரு பிரான்ஸ் பிரஜை எனவும் அங்குள்ள பர்டசாலையில் கல்வி கற்று வருவதாகவும் தெரியவருகின்றது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/117189/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இது ஊரில் உள்ள ஒருவர் போட்டு கொடுத்த வேலை போல தெரிகிறது

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

பெப்ரவரி 2 ம் திகதி ஜெயகணேஸ் பகீரதி பிரான்சிலிருந்து இலங்கைக்கு சென்றுள்ளார். அவரது பெற்றோரை பார்ப்பதே  அவர் இலங்கை சென்றதன் நோக்கம், அவரது தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவரது தந்தையும் சமீபத்தில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார்.

கருத்துச்சொல்ல விரும்பவில்லை

முடியவில்லை.... :(  :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நமது செய்தியாளர்: தமிழீழத்திலிருந்து திலீபன் March 3, 2015.

மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள தனது பெற்றோரை பார்ப்பதற்காக இலங்கை சென்றுவிட்டு மீண்டும் பிரான்சிற்கு செல்வதற்கு விமானநிலையம் சென்ற தாயும் அவரது மகளும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க

பேராளியென தெரிவித்து இவர் கைதுசெய்யப்பட்டு உள்ளமை குறித்து மேலும் தெரியவருவதாவது.

பெப்ரவரி 2 ம் திகதி ஜெயகணேஸ் பகீரதி பிரான்சிலிருந்து இலங்கைக்கு சென்றுள்ளார். அவரது பெற்றோரை பார்ப்பதே அவர் இலங்கை சென்றதன் நோக்கம், அவரது தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவரது தந்தையும் சமீபத்தில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார்.

france-02.gif

பெப்ரவரி 12 ம்திகதி கிளிநொச்சியிலுள்ள அவரது வீட்டிற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் என கூறிக்கொண்டு இருவர் சென்றுள்ளனர். இவர்களில் ஒருவர் தன்னை விஜித பண்டார என அறிமுகப்படுத்தி உள்ளார்.பகீரதி அவ்வேளை அங்கில்லாததால் அவரது தந்தை அவர்களை மறுநாள் வரும்படி கேட்டுள்ளார். இதன் படி மறுநாள் வீட்டிற்கு வந்த அதிகாரிகள் அவருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான தொடர்புகள் மற்றும் அவரது கணவன் குறித்து விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

அவர் அதன் போது தான் 2 ம்திகதி பிரான்ஸ் திரும்புவதாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அவர்கள் திரும்பிவரவில்லை. இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள பிரிவினர் என கூறிக்கொண்டு இருவர் அவரது வீட்டிற்கு சென்று பொதுவான விடயங்களை சேகரித்துள்ளனர்.

மார்ச் முதலாம் திகதி பகீரதி அவரது மகள் மற்றும் உறவினர்களுடன் விமானநிலையம் செல்ல தயாரான வேளை கொழும்பு குற்றப் புலானய்வு திணைக்கள அவலலகத்திற்கு வருமாறு அவரிற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் தான் அன்று காலை பிரான்ஸ் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அவர் மறுநாள் தனது உறவினர்களுடன் விமானநிலையம் புறப்பட்ட வேளை பயங்கரவாத தடுப்புபிரிவினர் அவரையும் மகளையும் தடுத்து நிறுத்தி உள்ளனர். அதரிகாலை 2.30 மணிமுதல் 8.30 வரை அவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவரை மகளுடன் தடுத்து வைத்திருந்துள்ளனர். அவரது உறவினர்கள் இரு சிறு குழந்தைகளுடன் விமான நிலையத்திலேயே இருந்துள்ளனர் சுமார் 9.00 மணிக்கு இருவரையும் விடுதலை செய்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவர்களை தங்கள் கொழும்பிலுள்ள தங்கள் அலுவலகத்திற்கு செல்லுமாறு பணித்துள்ளனர். இதன் படி பகீரதி 10 மணியளவில் தனது உறவினர்களுடன் அந்த அலுவலகம் சென்றுள்ளார்.

அங்குள்ள கட்டிடத்திற்குள் பகீரதியையும் மகளையும் அதிகாரிகள் அழைத்துச்சென்றுள்ளனர்.பின்னர் கொழும்பு 12 இல் உள்ள நீதவான் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.பகீரதியின் குடும்பத்தவர்கள் தாங்கள் சட்டத்தரணி ஓருவரை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்த போதிலும் அதனை அலட்சியம் செய்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அதனை அலட்சியம் செய்து அவரை நீதிமன்றத்திற்குள் அழைத்து சென்றுள்ளனர்.

அதன் பின்னர் வெளியே வந்த பகீரதி தங்களை தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் பகீரதியின் சகோதரரிடம் அவரிற்கான உடைகளை கொண்டு வருமாறு பணித்துள்ளனர்.சகோதரர் சட்டத்தரணி ஒருவருடன் அங்கு சென்றுள்ளார். சட்டத்தரணி பகீரதியை சந்திக்க அனுமதி கேட்ட வேளை பண்டார என்ற அதிகாரி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.சட்டத்தரணிகள் தங்களது இயக்குநரின் அனுமதியை பெற்றே அவரை சந்திக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.பகீரதியை தங்களால் நீதிமன்றத்தில் ஆஜராக்காமல் வைத்திருக்க முடியும் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கடற்புலிகள் அமைப்பிலிருந்ததாகவும், பிரான்சில் விடுதலைப் புலிகளுக்கு உயிரூட்ட முயன்றதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த அதிகாரி பிரான்ஸ் பிரஜையும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளருமான பகீரதியின் கணவரை இலங்கை வரச்செய்வதற்காகவே அவரை குழந்தையுடன் தடுத்துவைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் அமைப்பிலிருந்த பகீரதி 2005 ம் ஆண்டு பிரான்ஸ் சென்றதாகவும், அவரது கணவர் அந்த அமைப்பின் தீவிர ஆதரவாளர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.2006 இல் பிறந்த அவரது மகள் ஒரு பிரான்ஸ் பிரஜை எனவும் அங்குள்ள பாடசாலையில் கல்வி கற்று வருவதாகவும் தெரியவருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

தங்களுக்கு இலங்கையில் அச்சுறுத்தல் இருக்கு எண்டு தானே பிராஸ்சில அசைலம் அடிச்சவர்கள். பிறகேன் திரும்ப இலங்கைக்கு வந்தவ? இப்ப அரசாங்கம் மாறீட்டு எண்ட நம்பிக்கையிலயா! எது மாறினாலும் புலத்தில இருந்து புலம்புற ஆக்களுக்கும் கொடிபிடிக்கிற ஆக்களுக்கும் இலங்கையில பிரச்சினை தீரப்போவதில்லை! அப்படிப்பட்டவர்கள் இலங்கைக்கு வராமல் இருப்பதே புத்திசாலித்தனம்! ஒரு சில சுழியன்கள் சிங்கத்துக்கு மீசையையும் புலிக்கு வாலையும் காட்டி தப்பிவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தாயைப் பார்க்க இலங்கை சென்ற பகீரதி தடுப்புக்காவலில்...

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து 15 ஆண்டுகளுக்கு முன்னர் விலகியிருந்த முருகேசு பகீரதி என்ற தாய் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றார்.

2005-ம் ஆண்டில் பிரான்ஸ் சென்றிருந்த பகீரதி, தனது 8 வயது மகளுடன் இலங்கை சென்று கிளிநொச்சியிலுள்ள அவரது பெற்றோருடன் ஒருமாத விடுமுறையை கழித்துவிட்டு, பிரான்ஸ் திரும்பும் வழியிலேயே நேற்று திங்கட்கிழமை கொழும்பு விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 14 நாட்களுக்கு காவல்துறையினர் விளக்கமறியலில் வைத்துள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பகீரதியின் சகோதரர் முருகேசு வேலவன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகியிருந்த பகீரதி, அதன் பின்னர் அந்த இயக்கத்துடன் தொடர்புபட்டிருக்கவில்லை என்றும் வேலவன் கூறினார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தமது தாயையும் தந்தையையும் பார்த்துச் செல்வதற்காக இலங்கை வந்திருந்தபோதே, பகீரதி கைதுசெய்து தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

பிரான்ஸில் பிறந்த அவரது 8 வயது மகளும் பகீரதியுடன் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலும், யுத்தம் இல்லாத சூழ்நிலையிலும் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாது என்ற நம்பிக்கையிலேயே தனது சகோதரி இலங்கை வந்திருந்ததாகவும் வேலவன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

எனினும், பகீரதி விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில் பல்வேறு தாக்குதல்களை முன்னின்று நடத்தியுள்ளதாகவும் அவருக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை காவல்துறை கூறியுள்ளது.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2015/03/150303_airport_arrest

புலத்தில்  சீனை  போடும் புலிகள்  உள்ளவரை நிஜ  புலிகள் வாழ்க்கை இப்படித்தான்  இருக்கும் வேதனை மிகுந்ததா ..

என்ன கவலை கண்டனம் என்று  சொல்லிட்டு  நாளைக்கு துள்ளுவம் இதனால் பாதிக்கப்படுபவன்  உண்மையில் அந்த போரில் போர்  முனையில் நின்று வெளியில்  வந்தவன் மட்டுமே .நாங்க கணனியில்  நாடு  பிடிச்சுட்டு  நாட்டுக்கும் போயிட்டு  வந்து  ஈழம் பிடிக்க  வேண்டியது  தான்  :(

இது தான் உண்மை..ஆனால் உண்மையை கூறியதற்காக நீங்கள் துரோகி ஆக்கப்படலாம். 
அந்த பெண்ணை நினைத்து பரிதாபம் தான் பட முடியும். உண்மையிலேயே இவர் புலிகள் அமைப்பில் இருந்திருந்தால் இலங்கை செல்வதை தவிர்த்திருக்கலாம். அவரின் பெற்றோரின் நிலமை செல்ல தூண்டியதோ தெரியவில்லை. 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பகீரதி விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில் பல்வேறு தாக்குதல்களை முன்னின்று நடத்தியுள்ளதாகவும் அவருக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை காவல்துறை கூறியுள்ளது.

அப்படி பார்த்தால் கருணவையல்லவா முதலில் விசாரிக்க வேண்டும். :icon_mrgreen:

ஸ்ரீலங்கா அரசின் பார்வையில் இப்பெண் கைது செய்யபட்டது நியாயம். இதில் எவரும் எதுவும் கூற முடியாது. ஏற்றுகொள்ளவேண்டியது. ஆனால்  எமக்காக ஒரு காலத்தில் உயிரை கொடுக்க தயாரான நிலையில் போராடப்போன ஒரு பெண் ஏதோ அவரது துரதிஷ்ரத்தால் கைது செய்யபட்ட சம்பவம் தொடர்பாக எம்மவர்கள் இங்கு விமர்சனம் என்ற போர்வையில் கொட்டும்  நக்கல் விஷக் கருத்துகள் அவரவர் தனிமனித பண்பை மிக தெளிவாக காட்டுகிறது. அப்பெண்ணிற்கு ஆதரவாக கருத்து எழுத மனமில்லாதவர்கள் ஆக குறைந்ததது மெளனத்தின் மூலமாவது எமக்காக ஒரு காலத்தில் போராடிய அந்த பெண்ணிற்கு உரிய கெளரவத்தை கொடுத்திருக்கலாம்.

யதார்த்தத்தை உண்மையை பேசுபவர்களாக இல்லாமல் போலியாக வேஷம் போட்டு பொய் வாழ்வு வாழுவதுவதுதான் கெட்டித்தனம் என்று எம்மவர் பலர் நினைக்கின்றார்கள் .

மேலே உள்ள பின்னூட்டங்களை பார்த்தாலே நடிகர் திலகங்களை இனம் காணலாம் . 

இணையத்தில் வந்து அழுதுவிட்டு மூக்கு முட்ட சாப்பிட்டு விட்டு நித்திரைக்கு போவதே பலருக்கு தொழிலாகிவிட்டது .

பிரச்சனை எதுவென்றாலும் அதை முகம் கொடுத்து நியாயத்தை கதைக்கவேண்டும் அதைவிட்டு கள்ள மௌனம் பேணக்கூடாது .

இது ஊரில் உள்ள ஒருவர் போட்டு கொடுத்த வேலை போல தெரிகிறது

உண்மையும் அது தான்.தற்போதைக்கு மேலதிகமாக எதையும் கூற விரும்பவில்லை.முன்பு  ஒரு சில  வருடங்களுக்கு முன்னர் கனடாவிலிருந்து ஒருவர் யாழ் சென்றிருந்தார்.அப்போ கனடாவிலிருந்த அவரது நண்பர் இலங்கைப்புலனாய்வாளர்களுக்கு போராட்டக்காலங்களில் இவர் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட படத்தை அனுப்பி வைத்திருந்தார்.அவர் கைது செய்யப்பட்டார்.கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் வெளிவிகார அமைச்சின் உதவியுடன் விடுவிக்கப்பட்டார்.அவரது நண்பர் போட்டுக்கொடுக்க காரணம் பண விவகாரம்.இது காணி விவகாரமாகக் கூடவிருக்கலாம்

மேற்கு நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் வழங்கும் அகதி உரிமையை நம்மவர்கள்.. தவறாகப் பயன்படுத்தும் விளைவுகளில் இதுவும் ஒன்று.

அகதி அந்தஸ்துக் கிடைச்சா.. சிவனேன்னு.. இருக்கிறதை விட்டிட்டு.. ஊருக்கு ஓடுறது.. சோவுக்கு. அப்பா அம்மாவைப் பார்க்கனும் என்று நினைக்கிறவை.. பிற நாடுகளுக்கு அழைச்சுப் பார்த்திட்டுப் போறது.

எம்மவர்கள் அகதி அந்தஸ்தை பொருண்மிய எடுப்பாகக் கருதி அதை ஊருக்கு காட்டப் போறதால தான் இத்தனையும். இவர்களுக்காக பரிதாபப்பட முடியவில்லை.  :icon_idea:  :rolleyes:

ஐஐயோ நீங்கள் பரிதாபப்பட எல்லாம் வேண்டாம், இப்படி வார்த்தைகளால் கொல்லாமல்  இருந்தாலே காணும்!

Edited by மீனா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.