Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காடையர்களால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட 16 வயது மாணவி: வன்னியில் பயங்கரம்

Featured Replies

 
[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 12:48.16 PM GMT ]
raped_student_001.jpg
கனகராயன்குளம் கொல்லர்புளியங்குளத்தை சேர்ந்த 16 வயதுடைய மாணவியொருவர் காடையர்களால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்தச்சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் 27ம் திகதி இடம்பெற்றுள்ளது.

க.பொ.த.சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவி செல்வராசா சரணிகா என்ற மாணவியே இவ்வாறு வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை வன்னி மாவட்ட எம்.பிக்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் நேற்று நேரில் சந்தித்து சம்பவம் தொடர்பில் கேட்டறிந்துள்ளனர்.

அத்துடன், கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்துக்கும் சென்று, மாணவியின் மரணத்துடன் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

rape_student_001.jpg

rape_student_002.jpg

rape_student_003.jpg

rape_student_004.jpg

rape_student_005.jpg

http://www.tamilwin.com/show-RUmtyDTYSUmp3H.html

 

 

 

வெளி நாட்டிலிருந்து சென்ற தமிழர்கள் மதுபானக்கடைகளை நடாத்தினால் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ?இளம் வட்டங்களை சந்திக்கவேண்டுமாயின் மாலை ஆறுமணிக்கு அங்கு சந்திக்கலாமாம்.கவனம் தாய் சகோதரங்களும் உள்ளனர்

  • தொடங்கியவர்

வவுனியா, கனகராயன் குளத்தைச்சேர்ந்த 16வயது பாடசாலை மாணவி உயிரிழந்தமைக்கு கூட்டுவன்புணர்வே காரணமென கண்டறியப்பட்டுள்ளது. அவர் 10 பேரினைக்கொண்ட கும்பலால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டமையே காரணம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

யுத்த நடவடிக்கையின் போது தனது பெற்றோரை இழந்த குறித்த சிறுமி தனது பேர்த்தியாருடனேயே வாழ்ந்துவந்துள்ளார்.சில தினங்களிற்கு முன்னதாக மகாசிவராத்திரிக்கென கேதீஸ்வரம் சென்றிருந்துள்ளார்.பின்னர் நண்பி வீட்டினிலிருந்த போதே கூட்டுவன்புணர்வுக்குள்ளாகியதாக கூறப்படுகின்றது.

1484217_10153162099674396_34145001764401

 

from facebook

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டு வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட கனகராயன்குளம் சிறுமி சரண்யாவின் மரணம்

துரித விசாரணைக்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் கோாிக்கை - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வவுனியா:-

Child_CI.JPG


கனகராயன்குளம் மன்னகுளம் சந்தியைச் சேர்ந்த பாடசாலை மாணவியின் மரணம் குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கபட வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் வவுனியா மாவட்ட வடமாகாணசபை உறுப்பினர்களும் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கனகராயன்குளம் மகாவித்தியாலய மாணவியான 15 வயதுடைய செல்வராசா சரண்யா என்ற சிறுமி சிவராத்திரியை முன்னிட்டு, தெரிந்தவர்களுடன் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குச் சென்றதாகவும், இரண்டு தினங்கள் கழித்து திரும்பி வந்த அவர், சுகயீனம் காரணமாக மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேல் வைத்தியத்திற்காக, கிளிநொச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, அவர் அங்கு உயிாிழந்துள்ளார்.

தொண்டை நோகின்றது கதைக்க முடியாத என்ற காரணத்திற்காகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆயினும், இவருடைய மரணம் தொடர்பான விசாரணைகளின் பின்னர் நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில், இந்தச் சிறுமி மோசமான முறையில் பலரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டதாக சிறுமியின் அம்மம்மாவுக்கும், இந்த சிறுமியின் மரணத்தையடுத்து, அவர்களுக்கு உதவிபுரிவதற்காகச் சென்றிருந்த ஊர் முக்கியஸ்தர்களிடமும், வைத்தியசாலையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கிளிநொச்சி மரண விசாரணை அதிகாரி திருலோகமூர்த்தி விசாரணைகளை நடத்தியதன் பி;ன்னர் சிறுமியின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது, இதனையடுத்து சிறுமியின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது.

சுகயீனம் காரணமாக கடந்த புதன்கிழமை மாங்குளம் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ட இந்தச் சிறுமி மறுநாள் வியாழக்கிழமை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் மரணமாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டு வல்றுறவுக்கு இந்தச் சிறுமி உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்ப்பட்டுள்ள போதிலும், சிறுமியின் மருத்துவ பரிசோதனை அறிக்கை இன்னும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தனது அம்மம்மா சீதையம்மாவிடம் வளர்ந்து வந்த இந்த சிறுமிக்குப் பெற்றோர் இருவரும் இல்லை. இயல்பாக பாடசாலைக்குச் சென்று வந்த இந்தச் சிறுமி, அவருடைய மூத்த சகோதரன் தங்கியிருக்கின்ற வீட்டில் உள்ள இரண்டு சிறுமிகளுடன் நட்பு கொண்டிருந்ததாகவும், அந்தச் சிறுமிகளின் தாயாருடனும் நன்றாகப் பழகி வந்ததாகவும், அவர்களுடைய வீட்டில் இருந்தே இந்தச் சிறுமியும் ஏனையோரும் திருக்கேதீஸ்வரம் போய் வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம் 16 ஆம் திகதி திருக்கேதீஸ்வரம் சென்றிருந்த இந்தச் சிறுமி இரண்டு தினங்களின் பின்னர் 18 ஆம் திகதி திரும்பி வந்து, ஒரு வாரம் கழிந்த நிலையில் கடந்த புதன்கிழமையே சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சிறுமியை வைத்தியசாலைக்குக் கூட்டிச் சென்று அனுமதித்த அந்த வீட்டுப் பெண், இது குறித்து சிறுமியின் அம்மம்மாவிற்கோ அல்லது வேறு உறவினர்களுக்கோ உடனடியாகத் தகவல் தெரிவிக்கவில்லை என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.தியாகராஜா, ஜி.ரிலிங்கநாதன், தர்மபால செனிவிரத்ன ஆகியோர் உயிரிழந்த சிறுமியின் அம்மம்மா மற்றும் அந்தக் கிராமத்து முக்கியஸ்தர்கள், மாதர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து விபரங்களைக் கேட்டறிந்துள்ளனர்.

அதன்போது, சிறுமி சரண்யா கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதன் காரணமாகவே அவர், அநியாயமாக  உயிரிழந்துள்ளார் என்றும், இதனை பிரேத பரிசோதனை நடத்திய வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும், இந்த சிறுமியின் மரணம் தொடர்பாக மரண விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், இன்னும் எவருமே பொலிசாரினால் கைது செய்யப்படாமல் இருப்பது தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், இதனால், இந்த விடயத்தை இருட்டடிப்பு செய்வதற்காக சிலர் முயன்று வருவதாகவும் எனவே, இதுவிடயத்தில் நீதி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் முக்கியஸ்தர்கள் கோரியிருக்கின்றார்கள்.

பாடசாலை மாணவி ஒருவர், கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் உயிரிழந்திருப்பது பொலிசாருக்கோ, சிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளுக்கோ அல்லது மகளிர் மற்றும் சிறுவர் நலன்களுக்கான பிரிவின் அதிகாரிகளுக்கோ சாதாரண விடயமாகிவிட்டதோ? அதன் காரணமாகத்தான் சிறுமி சரண்யாவின் மரணத்தின் பின்னரும் அவர்கள் எவரும் இந்த விடயத்தில் எந்தவிதமான அக்கறையும் காட்டாமல் மௌனமாக இருக்கின்றார்கள் என்று ஊர் முக்கியஸ்தர்கள் சீற்றத்தோடு மக்கள் பிரதிநிதிகளிடம் வினா எழுப்பியிக்கின்றார்கள்.

இதனையடுத்து, கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் நிர்வாகப் பிரிவு பொறுபு;பதிகாரி ஆகியோரையும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் சந்தித்து சரண்யாவின் மரணம் தொடர்பான விபரங்களைக் கேட்டறிந்துள்ளனர்.

இந்த மரணம் தொடர்பாக விசாரணைகள் நடைபெறுவதாகத் தெரிவித்த கனகராயன்குளம் குற்றப்பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி, சிறுமி சரண்யா மீது கூட்டு பாலியல் வல்லுறவு குற்றம் புரியப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். ஆயினும் இந்தச் சிறுமியின் மரணம் குறித்து இன்னும் தெளிவில்லாத காரணத்தினால், அவருடைய உடலின் சில பாகங்கள் அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையைத் தாங்கள் எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், சிறுமியின் மரணம் தொடர்பான இறுதி மருத்துவ பரிசோதனை அறிக்கை தங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றும் கனகராயன்குளம் குற்றப்பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இந்த மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணைகள் நடத்தி வாக்குமூலங்கள் பெறப்பட்டிருப்பதாகவும் இன்னும் விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிசார் மக்கள் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளனர்.

தங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி, சிறுமி தங்கியிருந்த வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த நபர் ஒருவர் இறந்த சிறுமி சரண்யா மற்றும் அந்த வீட்டுப் பெண்ணின் இரு மகள்களாகிய சிறுமிகள் ஆகியோருக்கு கைத்தொலைபேசியில் பாலியல் வீடியோ காட்சிகளைக் கொடுத்து பார்க்கச் செய்திருந்ததாகவும், மற்றுமொருவர் தன்னை பொலிஸ் சிஐடி என கூறிக்கொண்டு அந்த வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவதாகவும், அதேநேரத்தில் பெற்றோர்கள் இல்லாத நிலையில் தமது அம்மம்மாவுடன் வாழ்ந்து வந்த சிறுமி சரண்யாவின் மூத்த சகோதரன் இரண்டு மகள்களுடன் வசித்து வந்த பெண்ணின் வீட்டில் ஏன் வசித்து வந்தார் என்றும், அத்துடன் அவர் ஏன் தனது சகோதரி சரண்யாவையும் அங்கு அடிக்கடி சென்று வர அனுமதித்திருந்ததுடன், திருக்கேதீஸ்வரத்திற்குப் போய் வந்ததன் பின்னர் சிறுமி சரண்யா என்ன காரணத்திற்காக அம்மம்மாவிடம் செல்லாமல் அந்த வீட்டிலேயே தங்கியிருந்ததன் பி;ன்னர் சுகயீனம் என தெரிவித்து அம்மம்மாவுக்கு, தகவல் தெரிவிக்காமல் சரண்யாவை மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதித்தார் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று மக்கள் பிரதிநிதிகள் கனராயன்குளம் பொலிசாரிடம் கேட்டுக்கொண்டனர்.

அத்துடன், மாங்குளத்தில் உள்ள பிரதி பொலிஸ் மா அதிபரையும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் சந்தித்து மீதான கூட்டுப் பாலியல் கூட்டு வல்லுறவுககு உடபடுத்தப்பட்டதன் பின்னர் மரணமாகிய சிறுமி சரண்யாவின் மரணம் குறித்து விரிவாக எடுத்துக் கூறி இந்தச் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் நடத்தி குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/117255/language/ta-IN/article.aspx

 

 

  • கருத்துக்கள உறவுகள்
கிளிநொச்சியில் சிறுமி சாவு; விசாரணைகளை ஆரம்பித்தது பொலிஸ்
139a1ac8e8b14c8e3bfd86383d124723.jpg
வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதால் உயிரிழந்தார் என சந்தேகிக்கப்படும்  சிறுமியின்  சாவு தொடர்பில் சந்தேக நபர்கள் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
 
கிளிநொச்சியில் சிறுமியொருவர் சாவடைந்த நிலையில் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டே  கொலை செய்யப்பட்டுள்ளார் என ஊரவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையிலேயே பொலிஸார் சந்தேக நபர்களைத்  தேடி விசாரணைகள்  ஆரம்பித்துள்ளனர். 
 
அதற்கமைய சிறுமி தங்கியிருந்தார் எனக் கூறப்படும் வீட்டிற்கு அடிக்கடி  செல்லும் இரு ஆண்கள் குறித்தே பொலிஸார் விசாரணைகளை முதற்கட்டமாக ஆரம்பித்துள்ளனர். 
 
சந்தேகத்தில் தேடப்பட்டு வருபவர்களில் ஒருவர் இந்தியாவில் வசிப்பவர் என்றும் அவர் தற்பூது கனகராயன்குளத்தில் உள்ள கிறேசர் ஒன்றில் சமையல் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார் என்றும்  விசாரணைகளில் தெரிய வருகின்றது.
 
எனினும் குறித்த சந்தேக நபரைத் தேடிச் செல்லும் போது அவர் இந்தியாவுக்கு சென்று விட்டார் என அங்கிருந்தவர்கள்  தெரிவித்துள்ளனர் .அவர் கோபி என அழைக்கப்படுவார் என்றும் அவரது முழுப்பெயர் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். 
 
அத்துடன்  ஆபாசப்படங்களைக் காட்டினார் என்ற சந்தேகத்திலும் ஒருவர் தேடப்பட்டு வருகின்றார். எனினும்  சிறுமியின் உடற்கூற்றுப்பரிசோதனை அறிக்கை நீதிமன்றிற்கு கிடைத்த பின்னரே முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் சிறுமியின் மாதிரிகள் சில கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளன. எனவே கொழும்பு அறிக்கையினையும் இணைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்தியஅதிகாரியு தெரிவித்துள்ளார். 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=411763901705518180#sthash.zrwDlmil.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்பட்ட சிறுமியின் படத்தை எதற்கு வெளியிடுகிறார்கள்?

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Edited by இசைக்கலைஞன்

பாதிக்கப்பட்ட சிறுமியின் படத்தை எதற்கு வெளியிடுகிறார்கள்?

ஆழ்ந்த இரங்கல்கள்..!

 

பொதுவாக பாதிக்கப்பட்டவர் உயிருடன் இருக்கும் போது படத்தினை வெளியிடுவதை நேர்மையான ஊடகங்கள் தவிர்ப்பதுண்டு. ஆனால் பாதிக்கப்பட்டவர் கொலை செய்யப்பட்டு / இறந்து விட்டாலோ புகைப்படத்தினை போடுவதுண்டு. 

ஒரு விளக்கமும் இல்லாத குழந்தை போலிருக்கு .வாசிக்கும் செய்திகள் மிக குழப்பமாக வேறு கிடக்கு .

 

டெல்கியில் நடந்த சம்பவமும் அதன் தொடர்பாக வரும் செய்திகளையும் இன்று கூட வாசிக்க  நாம் எங்கே இருக்கின்றோம் என்று இருக்கு .

பி பி சீ ஆவணப்படம் கூட வியாபார உத்தியில் எடுத்தது போலிருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். நேர்மையான முறையில் விசாரணை நடைபெற மக்கள் உதவ வேண்டும்.  பணத்தை கொடுத்து விசாரணையை திசை திருப்ப நிறைய வாய்ப்புக்கள் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். 

 

போரின் வடுக்கள் இவை....

பொருளாதாரரீதியாகவும்

தொழில்நுட்ரீதியாகவும் எமது மக்கள் முன்னேற்றப்படணும்

அதற்கு புலம் பெயர் மக்கள் ஒன்றிணைந்து தம்மால் முடிந்ததை உடனே செய்யணும்

தாமதமாகும் ஒவ்வொரு வேளையும்

நாமும் இவற்றிற்கு பொறுப்பாளிகள் என்பதை உணரணும்....

டெல்கியில் நடந்த சம்பவமும் அதன் தொடர்பாக வரும் செய்திகளையும் இன்று கூட வாசிக்க  நாம் எங்கே இருக்கின்றோம் என்று இருக்கு .

பி பி சீ ஆவணப்படம் கூட வியாபார உத்தியில் எடுத்தது போலிருக்கு .

 

இல்லை அர்ஜுன் பிபிசியின் நிகழ்ச்சி எமது சமுதாயத்தின் தோலை உரித்துக்காட்டியது என்றே நினைக்கின்றேன். அதிலும் ஒரு தந்தை கல்யாணத்திற்கு முன்பு தனது மகள் பாலியல் தொடர்பை வைத்திருந்தால் பெற்றோல் ஊத்திக் கொளுத்துவன் என்பதெல்லாம் வெறும் ஆணாதிக்கம்.
 
இன்றுதான் பிபிசியின் நிகழ்ச்சி பார்த்தேன். மனதைப் பாதித்த ஒரு நிகழ்வு.

இன்று இவை தொடர்பாக முகநூலில் நான் பதிந்த குறிப்பி இது:

 

எம் சமூகத்தில் தொலைக்காட்சியில் ஆணும் பெண்ணும் முத்தமிடும் காட்சி வரும் போது பிள்ளைகள் பார்த்துக் கொண்டு இருந்தால் உடனே வேறு நிகழ்ச்சிக்கு மாற்றி விடுவோம்..

 

ஆனால் ஒரு பெண்ணை கணவனோ, சகோதரனோ அல்லது உறவுகளில் உள்ள பெரியவரோ அடிக்கும் காட்சி சினிமாவிலோ அல்லது தொலக்காட்சி நாடகத்திலோ வந்தால் பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு குதூகலமாக ரசிப்போம்.

 

இத்தகையை, பெண் மீதான வன்முறையை ரசிக்கும் / ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருக்கும் எம் இந்திய / ஈழச் சமூகத்தில் தான் பாலியல் வல்லுறவு / பாலியல் கூட்டு வல்லுறவு என்பதும் ஒரு சாதாரண விடயமாக நிகழத் தொடங்கியுள்ளது.

 

டெல்லி பாலியல் வல்லுறவுக் குற்றவாளியின் பேட்டி வந்து இருக்கும் இன்றைய நாளில் தான் கிளிநொச்சியில் 15 வயதுச் சிறுமி கூட்டு வல்லுறவு மூலம் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தியும் வந்துள்ளது.

 

பேட்டியில் கதைக்கும் அவ் குற்றவாளியின் குரல் தனித்த அவரது குரல் மட்டுமல்ல.. ஒட்டு மொத்த சமூகத்தின் குரல்.. கூட்டு மனநிலையின் ஒருமித்த குரல்

 

அக் குரல் தம் மன அழுக்குகளையும் வெளிக்காட்டுகின்றது என்பதால் தான் பெரும்பான்மையான இந்திய சமூகம் அதை தடை செய்ய முயல்கின்றது

 

சமாந்தரமாக, கிளிநொச்சி சிறுமி மீதான கூட்டு வல்லுறவை மூடி மறைத்து சாதாரண மரணம் என்று காட்டவே எம் சமூகத்தின் பெரும்பாலானவர்களும் எத்தனிக்கின்றனர்.

 

நிழலி!
 
இன்று யாழ்கள உறவுகள் யாவருமே அநியாயத்திற்கு நல்ல கருத்திடுகிறார்கள். பச்சைதான் இல்லை.
  • கருத்துக்கள உறவுகள்

 

இன்று இவை தொடர்பாக முகநூலில் நான் பதிந்த குறிப்பி இது:

 

எம் சமூகத்தில் தொலைக்காட்சியில் ஆணும் பெண்ணும் முத்தமிடும் காட்சி வரும் போது பிள்ளைகள் பார்த்துக் கொண்டு இருந்தால் உடனே வேறு நிகழ்ச்சிக்கு மாற்றி விடுவோம்..

 

ஆனால் ஒரு பெண்ணை கணவனோ, சகோதரனோ அல்லது உறவுகளில் உள்ள பெரியவரோ அடிக்கும் காட்சி சினிமாவிலோ அல்லது தொலக்காட்சி நாடகத்திலோ வந்தால் பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு குதூகலமாக ரசிப்போம்.

 

இத்தகையை, பெண் மீதான வன்முறையை ரசிக்கும் / ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருக்கும் எம் இந்திய / ஈழச் சமூகத்தில் தான் பாலியல் வல்லுறவு / பாலியல் கூட்டு வல்லுறவு என்பதும் ஒரு சாதாரண விடயமாக நிகழத் தொடங்கியுள்ளது.

 

டெல்லி பாலியல் வல்லுறவுக் குற்றவாளியின் பேட்டி வந்து இருக்கும் இன்றைய நாளில் தான் கிளிநொச்சியில் 15 வயதுச் சிறுமி கூட்டு வல்லுறவு மூலம் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தியும் வந்துள்ளது.

 

பேட்டியில் கதைக்கும் அவ் குற்றவாளியின் குரல் தனித்த அவரது குரல் மட்டுமல்ல.. ஒட்டு மொத்த சமூகத்தின் குரல்.. கூட்டு மனநிலையின் ஒருமித்த குரல்

 

அக் குரல் தம் மன அழுக்குகளையும் வெளிக்காட்டுகின்றது என்பதால் தான் பெரும்பான்மையான இந்திய சமூகம் அதை தடை செய்ய முயல்கின்றது

 

சமாந்தரமாக, கிளிநொச்சி சிறுமி மீதான கூட்டு வல்லுறவை மூடி மறைத்து சாதாரண மரணம் என்று காட்டவே எம் சமூகத்தின் பெரும்பாலானவர்களும் எத்தனிக்கின்றனர்.

 

Best comparison and contrast !

தமிழில் சரியாக சொல்ல தெரியவில்லை மன்னிக்கவும்!

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான சம்பவங்கள் பெருக.. எமது மண்ணை ஆக்கிரமித்துள்ள.. பெரும் இனப்படுகொலைக்கு தண்டனை அனுபவிக்காத சிங்கள.. இராணுவத்தினதும்.. காவல்துறையினதும்.. கட்டுப்பாட்டில் எமது மக்கள் விடப்பட்டுள்ளமையே காரணம்.

 

எமது மக்களுக்கு தாங்களே தங்களை ஆளவும் நிர்வகிக்கவும் உரிமைகள் கிடைக்கும் வரை.. இப்படியான சமூக அவலங்கள் தொடரவே செய்யும். அவற்றை முடிவுறுத்த.. எமது மக்களுக்கு அரசியல் உரிமைகள்.. மனித உரிமைகள் கிடைப்பதை உலகம் உறுதி செய்ய வேண்டும். 

 

இசைப்பிரியாவில் இருந்து.. இந்தச் சிறுமி வரை கதை ஒன்றுதான். ஆட்கள் தான் வேறு வேறு.  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.