Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோசமான பந்துவீச்சினால் தோல்வியைத் தழுவிய இலங்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சிட்னியில் அவுஸ்த்திரேலியாவுக்கும் இலங்கைக்குமான குழு நிலைப் போட்டி நடைபெற்றது. கடந்த மூன்று போட்டிகளிலும் வெற்றிகளை ஈட்டிக் கொண்டு இந்தப் போட்டிக்கு வந்திருந்த இலங்கை அணியிடம் நிறைய எதிர்பார்ப்புக்கள் இருந்திருக்கும். அதேபோல ஆப்கானிஸ்த்தானுடனான போட்டியில் 417 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்திருந்த அவுஸ் அணியும் அதீத நம்பிக்கையுடன் களமிறங்கியது. ஆட்டம் நடைபெறும் மைதானம் சிட்னி என்பதனால் இலங்கையணிக்ககான  ஆதரவுக்குக் குறறைச்சல் இருக்கவில்லை. சுமார் 36,000 ரசிகர்கள் அரங்கில் கூடியிருக்க ஆட்டம் ஆரம்பமாகியது. இந்த ரசிகர்களில் குறைந்தது 50% ஆனவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றால் அது மிகையாகாது.

 

 நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அவூஸ்த்திரேலிய தொடக்க ஆட்டக் காரர்கள் நிதானமாக ஆடத் தொடங்கினார்கள். ஆனால் டேவிட் வோர்னர் 9 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையிலும், ஆரன் பிஞ்ச் 24 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையிலும் ஆட்டமிழந்தபோது அவுஸ்த்திரேலியா 41 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தது. அவுஸ்த்திரேலிய அணியின் மிகச் சிற்ந்த ஆரம்பத் துடுப்பாட்டக் காரர்களான இந்த இரு வீரர்களும் கடந்த பல போட்டிகளில் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்து பல வெற்றிகளுக்குக் காரணமாக இருந்தவர்கள். ஆகவே இவர்கள் இருவரும் 41 ஓட்டங்களை அணி பெற்றிருந்தபோது ஆட்டமிழந்தது இலங்கையைப் பொறுத்தவரையில் மிகவும் ஆறுதலான விடயம் என்பதில் ஐய்யமில்லை. 

 

ஆனால் இன்று விளையாடிய அவுஸ்த்திரேலிய அனியின் துடுப்பாட்ட வரிசை மிகவும் நீளமானதென்பது இலங்கைக்கு எப்போதுமே தலையிடியாக இருந்தது. 7 ஆவது துடுப்பாட்டக் காரராக களமிறங்கும் ஜேம்ஸ் போக்னரின் ஓட்டச் சராசரி போட்டி ஒன்றிற்கு 43 ஓட்டங்கள் என்பதும், இவருக்கு அடுத்தபடியாகக் களமிறங்கும் விக்கெட் காப்பாளர் பிரட் ஹட்டினின் சராசரி 31.5 ஓட்டங்கள் என்பதும் குறிப்பிடத் தக்கவை. மீதமுள்ள 3 வீரர்களில் மிக்கேல் ஜோன்சனின் துடுப்பாட்ட வேகம் பற்றி அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள் என்பது திண்ணம். ஆக, 9 துடுப்பாட்டக் காரர்களைக் கொண்ட அணியை இலகுவாக வீழ்த்திவிட முடியாதென்பதை இலங்கை நன்கே உணர்ந்திருக்கும். 

Edited by ragunathan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத் துடுப்பாட்டக்காரர்கள் இருவரும் ஆட்டமிழந்தபோதும்கூட, அவர்களுக்குப் பிறகு வந்த ஆட்டக் காரர்களான மைக்கல் கிளாக் மற்றும் ஸ்மித் ஆகியோர், விக்கெட் இழப்பினால் ஓட்டச் சராசரி தொய்யாமல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு ஓட்டங்களைக் குவிக்கத் தொடங்கினார்கள். 8 ஆவது ஓவரில் ஜோடி சேர்ந்த இவர்கள் இருவரும் 41/2 என்று இருந்த ஓட்ட எண்ணிக்கையை 32 ஓவர்களில் 175 இற்கு உயர்த்தினார்கள். ஏறக்குறைய ஓவர் ஒன்றிற்கு 6 ஓட்டங்கள் என்ற விகிதப்படி இவர்கள் இட்ட பலமான அடித்தளம் பின்னால் வந்த அதிரடி ஆட்டக் காரர்களுக்கு மிகச் சாதகமான ஒரு ஏவுதளத்தை அமைத்துக் கொடுத்தது. 175 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், 177 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும் ஸ்மித் மற்றும் கிளாக் ஆட்டமிழந்தபோது இலங்கையணி நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கும் என்பதில் ஐய்யமில்லை. இங்கேதான் அவுஸ்த்திரேலிய அணியின் நீண்ட மற்றும் அதிரடியான துடுப்பாட்ட வரிசை பற்றி இலங்கையணி கணிக்கத் தவறியது. 

 

5 ஆவது 6 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த கிளென் மக்ஸ்வெல் மற்றும் ஷேன் வொட்ஸன் ஆகியோர் மிகப் பிரபலமான அதிரடி ஆட்டக் காரர்கள். பல அணிகளுக்கு சிம்ம சொப்பமனமாக இருப்பவர்கள். எந்தவொரு பந்துவீச்சையும் சில நேரத்தில் துவசம் செய்து அழிக்கக் கூடியவர்கள். இவர்களின் விக்கெட்டுக்களை ஆரம்பத்திலேயே எடுக்கத் தவறும் பட்சத்தில் மிகப் பலமான சேதத்தை உண்டுபண்ணக் கூடியவர்கள். அதிலும் குறிப்பாக கிளென் மக்ஸ்வெல் கடந்த ஐ.பி.எல் போட்டிகளில் மிக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரர் என்பதும், அவர் அந்த போட்டிகளில் தனி ஆளாக பல போட்டிகளை ஜெயித்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. அவரது போட்டி ஒன்றிற்கான  ஓட்டக் குவிப்பு வீதம் 100 பந்துகளுக்கு 215 ஓட்டங்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

 

ஆக இவரும் ஷேன் வொட்சனும் ஜோடிசேர்ந்து ஆடத் தொடங்கினார்கள். 177 ஓட்டங்களை அணி பெற்றிருந்த போது ஜோடி சேர்ந்த இவர்கள் இருவரும் வெறும் 13 ஓவர்களில் 160 ஓட்டங்களைக் குவித்தனர். ஆரம்பத்தில் சிக்கனமாகப் பந்துவீசிய பிரசண்ணா, மத்தியூஸ் மற்றும் பெரேரா ஆகியோரின் இறுதிநேரப் பந்துவீச்சில்  அதிகமான ஓட்டங்களைக் குவித்தது இந்த ஜோடி. 

 

இதுவரை ஒருநாள்ப் போட்டிகளில் சதம் எதனையும் பெறத்தவறிய மக்ஸ்வெல் இன்று 53 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 4 சிக்ஸர்கள், 10 பவுன்டரிகள் அடங்கலாக 102 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது பெரேராவின் பந்துவீச்சில் மலிங்கவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். இது இவரது கன்னிச்சதம் என்பது குறிப்பிடத் தக்கது. இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜேம்ஸ் போக்னர் ஆட்டமேதும் பெறாமலேயே ரண் அவுட் ஆகியதும், பிரட் ஹட்டின் களமிறங்கினார். ஹட்டினும் வொட்ஸனும் சேர்ந்து 2 ஓவர்களில் மட்டுமே 30 ஓட்டங்களைக் குவித்தனர். 

 

இறுதியாக வொட்ஸன் 41 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் அடங்கலாக 67 ஓட்டங்களையும், பிரட் ஹட்டின் வெறும் 9 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஒரு சிக்ஸர் 4 பவுண்டரிகள் அடங்கலாக 25 ஓட்டங்களையும் குவித்து அவுஸ்த்திரேலிய அணியின் ஓட்ட எண்ணிக்கையை 376 இற்கு உயர்த்தினர். 

 

இந்த அதிகப்படியான ஓட்ட எனண்ணிக்கைகுக் காரணம், இலங்கையணியின் பந்துவீச்சாளர்களில் மலிங்கவைத் தவிர வேறு எவருமே சோபிக்கவில்லை என்பதும், வழமையான சுழற்பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத் கையில் ஏற்பட்ட காயத்தினால் ஓய்விலிருப்பதால் அனுபவமில்லாத பிரசன்னவினால் துடுப்பாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாததும் ஆகும். இதற்கும் மேலாக சில பிடிகளை இலங்கையணியின் களத்தடுப்பாளர்கள் கோட்டை விட்டதையும் காண முடிந்தது. ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக அவுஸ்த்திரேலிய அணியின் அதிரடி ஆட்டமே இந்தளவிற்கு ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியது என்பதே உண்மை. இறுதி ஓவர்களில் அவுஸ்த்திரேலிய அணி அசுரத்தனமாக ஆடும், ஆகவே அதற்கான திட்டங்களை வகுக்காமல் இலங்கையணி வெறுமனே எப்போதும்போல வழமையான பாணியில் ஆடிக்கொண்டிருந்ததை பல வர்ணனையாளர்களும் குறிப்பிடத் தவறவில்லை. 

 

புல்டொஸ்களாக பந்துகளை பெரேரா இன்றும் எறிந்ததையும், அவை கதறிக் கொண்டு எல்லைக் கோட்டிற்குப் பாய்ந்து போனதையும் அடிக்கடி காணக்கூடியதாக இருந்தது. அதேபோல துடுப்பாட்டக் காரரின் ஓஃப் சையிட்டில் பந்துகளைப் போட்டாலாவது அடிப்பதைக் குறைக்கலாம் என்று இலங்கையணி செய்த தந்திரங்களும் பலிக்கவில்லை. ஒன்றில் இந்தப் பந்துகள் வைட்டுகளாக மாறின அல்லது அவையும் எல்லைக் கோட்டை நோக்கி ஓடிக்கொண்டிருந்தன. 

 

ஆக, எந்தவித மாற்றுத்திட்டத்தையும் வைத்திருக்காத இலங்கையணி இன்று அவுஸ்த்திரேலியாவின் அதிரடித் துடுப்பாட்டக் காரர்களின் கைய்யில் அகப்பட்டு சின்னாபின்னமாகிப் போனது. 50 ஓவர்களில் 377 ஓட்டங்களை எடுப்பதென்பது இலங்கையணியைப் பொறுத்தவரை முடியப் போகும் காரியமாக இருக்கவில்லை என்பது இலங்கையணி துடுப்பெடுத்தாட முன்னரே தெரிந்திருந்தது.

Edited by ragunathan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதிலுக்குத் துடுப்பெடுத்தாட நுழைந்த இலங்கையணியின் ஆரம்பத் துடுப்பாட்டக் காரரான திரிமான 1 ஓட்டத்தை மட்டுமே பெற்றிருந்த நிலையில் ஜோன்சனின் பவுன்ஸர் பந்தொன்றில் ஹட்டினிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தபோது இலங்கையணி 2 ஓவர்களில் 5 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தது. இமாலய ஓட்ட எண்ணிக்கைய ஓவர் ஒன்றிற்கு 7.6 ஓட்டங்கள் வீதம் குவிக்கவேண்டியிருந்த இலங்கையணிக்கு திரிமாண 1 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தது நிச்சயம் மகிழ்ச்சியாக இருந்திருக்க வாய்ப்பில்லை.

 

திரிமானவிர்குப் பின்னர் களமிறங்கியவர் இலங்கையணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார. கடந்த இரு போட்டிகளிலும் ஆட்டமிழக்காத அதிரடிச் சதங்களைக் குவித்திருந்த சங்கக்கார, மற்றைய ஆரம்பத் துடுப்பாட்டக் காரரான தில்சானுடன் ஜோடி சேர்ந்து ஆடத் தொடங்கினார். 

 

இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்காக 19 ஓவர்களில் 130 ஓட்டங்களைக் குவித்தனர். இதில் குறிப்பிடத் தக்க விடயம் ஜோன்சனின் ஓவர் ஒன்றில் தில்ஷான் 6 பவுனண்டரிகளை விளாசித் தள்ளியது. முதலிரு பந்துகளிலும் பவுண்டரிகளை தில்சான் அடித்தபோது அவரைப் பார்த்து வசை பாடிய ஜோன்சன், மீதமிருந்த 4 பந்துகளுக்கு தில்சான் பவுண்டரிகளை அடித்தபோது வாயை மூடிக்கொண்டு ஏதும் பேசாமல் தனது போலிங் இடத்திற்குத் திரும்பிச் சென்றதுதான். ஒரு கட்டத்தில் 11 ஓவர்களில் 76 ஓட்டங்கள் என்று மிகச் சிறந்த ஓட்டச் சராசரியைக் கொண்டிருந்த இலங்கையணியின் ஓட்டச் சராசரி ஸ்டாக் பந்துவீச தொடங்கியதும் குறையத் தொடங்கியது. 

 

ஓட்ட எண்ணிக்கையைக் கூட்ட தில்சான் எடுத்த முயற்சி அவரது விக்கெட்டை இழந்ததுடம் முடிந்தது. போக்னரின் பந்தை அடித்தாட முயன்று எல். பி. டபிள்யூ முறையில் அவர் ஆட்டமிழந்தார். அவரது 62 ஓட்டங்கள் 60 பந்துகளில் பெறப்பட்டது.

 

அவரின் பின்னர் களமிறங்கிய ஜயவர்த்தன, சங்கக்காரவுடன் சேர்ந்து 9 ஓவர்களில் 53 ஓட்டங்களைக் குவித்தார். ஆனால், ஸ்டாக்கின் பந்துவீச்சில் தடுமாறிக் கொண்டிருந்த அவர், சடுதியான ஓட்டமொன்றை எடுக்க முனைந்து கிளாக்கின் எறியில் ரண் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அவர் 22 பந்துகளை எதிர்கொண்டு 19 ஓட்டங்கள் பெற்றிருந்து வெளியேறியபோது இலங்கையணி 31 ஓவர்களில் 188 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 

 

மறுபுறத்தில் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த சங்கக்கார தனது தொடர்ச்சியான 3 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். இது உலகக் கிண்ண வரலாற்றில் ஒரு சாதனை என்பது குறிப்பிடத் தக்கது.

 

அணித்தலைவர் மத்தியூஸும் சங்கக்காரவும் இணந்து ஓட்ட எண்ணிக்கையை 201 ஆக உயர்த்தியிருந்த நிலையில் சங்கக்கார போக்னரின் பந்துவீச்சில் 104 ஓட்டங்கள் பெற்றிருக்க ஆட்டமிழந்தபோது இலங்கையணியின் சிறிதளவாவது இருந்த நம்பிக்கையும் தொலைந்து போனது. 

 

ஆனாலும் அதன்பிறகு களமிறங்கிய சந்திமாலும், மத்தியூசும் இணைந்து 7 ஓவர்களில் 80 ஓட்டங்களைக் குவித்தபோது இலங்கையணிக்கு இன்னும் சந்தர்ப்பம் இருப்பதாகவே வர்ணனையாளர்கள் சொல்லிக்கொண்டிருந்தனர். சந்திமால் 24 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்களைக் குவித்திருந்தபோது கால் உபாதை காரணமாக கட்டாய ஓய்வுக்குச் செல்லவேண்டியேற்பட்டது. இது இலங்கையணியின் வெற்றிவாய்ப்பை வெகுவாகப் பாதித்தது என்றால் அது மிகையாகாது. இவர் வெளியேறிய இரு பந்துகளில் அணித்தலைவர் மத்தியூஸும் பவுன்ஸர் பந்தொன்றை ஹூக் செய்ய முயன்று விக்கெட் காப்பாளரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். 

 

அதன்பிறகு களமிறங்கிய பெரேரா மூன்று பந்துகளில் 8 ஓட்டங்களைப் பெற்று வெளியேறியபோது இலங்கையணியின் தோல்வி உறுதி செய்யப்பட்டது. 

 

இறுதியாக 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 312 ஓட்டங்களை மட்டுமே பெற்று 64 ஓட்டங்களால் இலங்கையணி தோல்வி கண்டது.

 

இன்றைய ஆட்டத்தில் இலங்கையணியின் துடுப்பாட்டம் சிறப்பாக அமைந்திருந்தாலும் கூட, அதிகப்படியான ஓட்டங்களை அவுஸ்த்திரேலியாவுக்கு வாரி வழங்கியதே அதன் தோல்விக்குக் காரணமாக அமைந்திருந்தது. அவுஸ்த்திரேலிய அணியின் ஓட்ட என்ண்ணிக்கையை குறைந்தது 30 அல்லது 40 ஓட்டங்களால் ஆவது குறைத்திருந்தால், இலங்கையணி இன்றைய போட்டியில் வென்றிருக்கும் என்பதி சந்தேகமில்லை.

 

376 ஓட்டங்களை ஒரு அணி பெற்றுவிட்ட நிலையில் அந்த அணியே வெல்லப்போவது உறுதி என்று எதிர்பார்க்கப்பட்டாலும் கூட, இலங்கையணி கடுமையாகப் போராடி , மிகச் சிறந்த அவுஸ்த்திரேலிய அணியின் பந்துவீச்சுக்கு முகம் கொடுத்து  312 ஓட்டங்கள்வரை அடித்துச் சென்றது குறிப்பிடத்தக்க விடயம். 

 

இலங்கையணிக்கு அடுத்த கட்டத்திற்குச் செல்லும் வாய்ப்பு இருக்குமானால், அது தொடர்ந்தும் முன்னேறும் என்பதில் சந்தேகமில்லை !

Edited by ragunathan

நன்றி ரகு உங்கள் நேரத்துக்கும் ஆய்வுக்கும்,



 

இலங்கையணிக்கு அடுத்த கட்டத்திற்குச் செல்லும் வாய்ப்பு இருக்குமானால், அது தொடர்ந்தும் முன்னேறும் என்பதில் சந்தேகமில்லை !

 

ஏன் இந்த சந்தேகம் :D  ஸ்ரீலங்கா கால் இறுதி போவது உறுதி. johnson இன் பந்தில் டில்ஷன் அடித்த அந்த 6 பௌண்டரிகள் தான் மறக்கமுடியாது.

 

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

சொறிலங்காவின் தோல்வியை வரவேற்கிறோம்.  :icon_idea:  :)

  • கருத்துக்கள உறவுகள்

சொறிலங்காவின் தோல்வியை வரவேற்கிறோம்.   :icon_idea:   :)

  • கருத்துக்கள உறவுகள்
இந்த போட்டியை பார்க்க போவதென்றால் ............
மூன்று நேர சாப்பாடு முடிந்தால் இரவு படுக்கைக்கு தலையணை பெட்சீட் எல்லாம் கொண்டு போக வேண்டுமா?
 
இப்படி கிரிகெட் மேட்ச் பார்க்க டிக்கெட் எடுத்து போனவர்களின் அனுபவத்தை கேட்டக விரும்புகிறேன்.
யாரவது தொடர்ந்தும் அடித்துக்கொண்டு இருந்தால் இரவு ஆகும்போது என்ன செய்வார்கள் ???
  • கருத்துக்கள உறவுகள்

50 பந்து பரிமாற்றங்களுடன் ஒருநாள் போட்டி முடிந்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அணியை சிறிலங்கா அணி என்பதை விட சிங்களவர் அணி என்று சொல்வது பொருத்தமாகும்

30 % சனத்தொகையில் இருந்து ஒரு தமிழ் வீரர் கூட அணியில் இல்லை, அந்தளவிட்க்கு திறமையான  ஆட்கள் இல்லை என்பது கூட நம்பக்கூடிய மாதிரி இல்லை, இன்னும் முரளியை நினைத்து கொட்டாவி விட்டுக்கொண்டு இருக்கிறோம்.  
எனது நண்பர் ஒருவர் தீவிர சொறிலங்கா ஆதரவாளர், இதே கேள்வியை கேட்டேன் உடனே விளையாட்டை விளையாட்டாய் பார்க்க சொன்னார் ,ஆனால் சிங்களவன் இதனை விளையாட்டாகவா பார்க்கிறான் என்று திருப்பிகேட்டேன் அண்ணன் கப் சிப்
யாழ் களத்தில் யாருக்காவது விடை தெரிந்தால் சொல்லுங்கோ கேட்போம் (அதற்காக சங்ககாரவின் அப்பா அந்த காலத்தில் சிங்கள காடயனிகளிடம் இருந்து தமிழனை காப்பாற்றியவர் எண்டு உந்த நொண்டி சாட்டுகளை விடாமல் உண்மைகளை மட்டும் சொல்லுங்கள் )  

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பெடியளை கிளப் லெவலிலயே காலி பண்ணிவிடுவோம்.. பிறகு எப்படி வாறது.. :lol:

கொழும்பில் தமிழ்யூனியன் கிரிக்கட் கிளப் என்று உள்ளது.. உள்ளூர் போட்டிகளில் பங்குபற்றும் அணி இது. ஆனால் அதில் விளையாடுபவர்கள் அநேகமாக எல்லோரும் சிங்களவர்கள்.. :huh:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ரகு அண்ணா. 300 தாண்டினாலே காணும் என யோசித்திருந்தேன். மிகச்சிறந்த துடுப்பாட்டம். SCG யில் மின்னொளியில் இந்த இலக்கைத் திரத்துவது முடியாத காரியம். இலங்கை வேணுமென்றுதான் சிலரை விளையாடாது விட்டார்கள் என நினைக்கிறேன். இலங்கைப் பொருத்தவரை இந்த ஆட்டத்தை வெல்லவேண்டிய அவசியமே இல்லை. அவர்களின் குறி காலிறுதி மற்றும் அரை இறுதியே. எனக்கு இந்தியாவுக்கு சமமாகப் பிடிக்காத அணி அவுஸ்திரேலியா. விளையாட்டை விளையாட்டாக எடுக்கத் தெரியாதவர்கள். டில்சான் பந்தை எல்லைக்கு அனுப்பியது மகிழ்ச்சியிலும் மகிழ்ச்சி. வர்ணனையாளர்களின் பக்கச்சார்புத் தன்மையை காது கொடுத்து கேட்க முடியவில்லை. மார்க் டெயிலரை கண்டால் மூஞ்சயிலே ஒரு குத்து விடுவதாக முடிவெடுத்திருக்கிறேன்.

இங்கிலாந்துக்கு போறவன் வாறவன் எல்லாம் அடிக்கிறாங்கள். பங்களாதேஷ் கூட இண்டைக்கு வச்சு தீத்தி விட்டாங்கள். இவளத்துக்கு ஊருக்கு கிளம்பியிருப்பாங்கள் எண்டு நினைக்கிறேன்.

தமிழன் எழுபது வீதம் இருந்தாலும் விளையாட தெரியாவிட்டால் ஒன்றும் செய்யமுடியாது .

 

காலம் காலமாக அவ்வப்போது தமிழர்கள் இலங்கை அணியில் விளையாடிக்கொண்டுதான் வந்தார்கள் .

ரவி சதாசிவம் ,சிறிதரன் ஜெகநாதன் ,நீல் சண்முகம் ,டென்னிஸ் சண்முகம் ,வினோதன் ஜோன்.பின்னர் முரளி ,ஆர்னோர்ல்ட் இன்றைய அணித்தலைவர் மத்தியூஸ் அரை தமிழர் (வத்தளையை சேர்ந்தவர் ).

 

பாரபட்சம் இருந்தது என்று பார்த்தால் எமக்கு இருந்த வசதி குறைவுகள் தான் ஒழிய தெரிவில் இல்லை .

 

பிள்ளையை விளையாடவிடாமல் படி படி என்று இருக்கும் பெற்றோரை கொண்டதுதான் தமிழ் இனம் .சில வருடங்களுக்கு முதல் யாழ் இந்துவில் ஒரு மிக சிறந்த வீரர் அடையாளம் காணப்பட்டு பயிற்சிக்கு அழைத்தார்கள் .அவரின் தாயார் யாழ் இந்து ஆசிரியர் .பெற்றோர் அவரை அனுமதிக்கவில்லை . அது புலம் பெயர் தேசங்களிலும் தொடருது .

கனடாவில் தமிழர்களால் தொடங்கபட்ட கிரிக்கெட் டீம் செஞ்சுரியன் .முன்றாம் தர நிலை ஆட்டத்தில் தொடங்கி ஒவ்வொரு வருடமும் முதல் மூன்று அணிக்குள் வந்ததால் ஐந்து வருடங்களில் பிரீமியர் டிவிசனுக்கு வந்துவிட்டார்கள் .ஆனால் விளையாட்டு வீரர்கள் தமிழர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் குறைந்து சிங்களவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனது காரணம் அவர்களே சொல்லுவார்கள் அவங்கள் எங்களை விட உண்மையில் திறம் என்று .(செஞ்சுரியன் விளையாடுவீரர்கள் சிங்களம் தமிழ் என்று பார்ப்பதில்லை ).

கனேடிய அணியிலும் தமிழர்களை விட மற்றைய அனைத்து இனங்களில் இருந்து விளையாடுபர்கள் தான் அதிகம் (இந்தியா ,பாகிஸ்தான் ,கயானா ,சிங்களவர்கள் )

சும்மா மற்றவனில் பிழை பிடிக்காமல் உங்கள் பிள்ளைகளையாவது விளையாட அனுமதியுங்கள் .

சிறீலங்கா நேற்றைய ஆட்டத்தில் தோற்றாலும் அவர்கள் விளையாடிய நேர்த்தி தான் எனக்கு மிகவும் பிடித்த விடயம் .இங்கிலாந்துடனும் அதே நேர்த்தி இருந்தது .

இந்த சிறிய தீவு இவ்வளவு திறமையாக விளையாடுவதை பாராட்டாமல் இருக்கமுடியாது .கால் இறுதிக்குள் வந்துவிட்டார்கள் .அதுவே ஒரு பெரிய வெற்றிதான் . :icon_mrgreen:

 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தின் திறமையின்மையால்.. சொறிலங்கா.. தொடர்ந்து உலகக் கோப்பையில் விளையாட முடிகிறது. என்ன பரிதாபம்.. வங்கதேசம்.. இவர்களை முந்தி நிற்பது தான்.  :lol:  :D

 இங்கிலாந்திடம் ஒன்றுக்கும் வக்கில்லை :lol:  கிழிந்த வாய் மாத்திரம் இருக்கு :o  அடுத்த போட்டியில் ஆப்கானிஸ்தானும் அடிக்கும் அதையும் நின்று வாங்கி கொண்டு வரட்டும் :D

சிறீலங்கா நேற்றைய ஆட்டத்தில் தோற்றாலும் அவர்கள் விளையாடிய நேர்த்தி தான் எனக்கு மிகவும் பிடித்த விடயம் .இங்கிலாந்துடனும் அதே நேர்த்தி இருந்தது .

இந்த சிறிய தீவு இவ்வளவு திறமையாக விளையாடுவதை பாராட்டாமல் இருக்கமுடியாது .கால் இறுதிக்குள் வந்துவிட்டார்கள் .அதுவே ஒரு பெரிய வெற்றிதான் . :icon_mrgreen:

 

எனது கருத்தும் இதுதான்.

 

  • கருத்துக்கள உறவுகள்

பந்து விச்சாளர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் களத்தடுப்பு ஏற்படுத்தப்படவில்லை,குறிப்பாக ஆட்டத்தின் மத்திய பகுதியில் கிளார்க்,சிமித் சுழற் பந்து வீச்சாளர்க்களினை அளவு குறைந்த பந்து வீச்சை தூண்டும் வகையில் மைதானத்திற்கு முன்னேறி வந்தாடினார்கள்,புதிய ஆட்டக்காரரை நிலையெடுக்க அனுமதிக்கும் வண்ணம் தற்காப்பு களத்தடுப்பினை பயன்படுத்தினர்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் எழுபது வீதம் இருந்தாலும் விளையாட தெரியாவிட்டால் ஒன்றும் செய்யமுடியாது .

 

காலம் காலமாக அவ்வப்போது தமிழர்கள் இலங்கை அணியில் விளையாடிக்கொண்டுதான் வந்தார்கள் .

ரவி சதாசிவம் ,சிறிதரன் ஜெகநாதன் ,நீல் சண்முகம் ,டென்னிஸ் சண்முகம் ,வினோதன் ஜோன்.பின்னர் முரளி ,ஆர்னோர்ல்ட் இன்றைய அணித்தலைவர் மத்தியூஸ் அரை தமிழர் (வத்தளையை சேர்ந்தவர் ).

 

பாரபட்சம் இருந்தது என்று பார்த்தால் எமக்கு இருந்த வசதி குறைவுகள் தான் ஒழிய தெரிவில் இல்லை .

 

பிள்ளையை விளையாடவிடாமல் படி படி என்று இருக்கும் பெற்றோரை கொண்டதுதான் தமிழ் இனம் .சில வருடங்களுக்கு முதல் யாழ் இந்துவில் ஒரு மிக சிறந்த வீரர் அடையாளம் காணப்பட்டு பயிற்சிக்கு அழைத்தார்கள் .அவரின் தாயார் யாழ் இந்து ஆசிரியர் .பெற்றோர் அவரை அனுமதிக்கவில்லை . அது புலம் பெயர் தேசங்களிலும் தொடருது .

கனடாவில் தமிழர்களால் தொடங்கபட்ட கிரிக்கெட் டீம் செஞ்சுரியன் .முன்றாம் தர நிலை ஆட்டத்தில் தொடங்கி ஒவ்வொரு வருடமும் முதல் மூன்று அணிக்குள் வந்ததால் ஐந்து வருடங்களில் பிரீமியர் டிவிசனுக்கு வந்துவிட்டார்கள் .ஆனால் விளையாட்டு வீரர்கள் தமிழர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் குறைந்து சிங்களவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனது காரணம் அவர்களே சொல்லுவார்கள் அவங்கள் எங்களை விட உண்மையில் திறம் என்று .(செஞ்சுரியன் விளையாடுவீரர்கள் சிங்களம் தமிழ் என்று பார்ப்பதில்லை ).

கனேடிய அணியிலும் தமிழர்களை விட மற்றைய அனைத்து இனங்களில் இருந்து விளையாடுபர்கள் தான் அதிகம் (இந்தியா ,பாகிஸ்தான் ,கயானா ,சிங்களவர்கள் )

சும்மா மற்றவனில் பிழை பிடிக்காமல் உங்கள் பிள்ளைகளையாவது விளையாட அனுமதியுங்கள் .

அர்ஜூன் அண்ணை 

நீங்கள் எடுத்துவிட்டிருக்கும் பட்டியலில் முக்கால்வாசிப்பேர் இலங்கை கிரிக்கட்டில் அரசியல் ஊடுருவ முன் விளையாடியவர்கள் இவர்களில் சிலபேரை நீங்களும் விட்டுவிட்டீர்கள் (Roy Diaz போன்றவர்கள் )

அடுத்த அரைவாசி முழுதும் அரை வேக்காடுகள் தமிழ் பேசத்தெரியாத தமிழர்கள் Tyronne Mathews மகனிட்கு(அதுதான் உங்கள் Angelo Mathews) தெரிந்த மொழிகள் ஆங்கிலம் ,சிங்களம்.  சிங்களவர்களோடு கிடந்தது அவர்களோட வாழ்ந்து மொழி,பாரம்பரியம் முதற்கொண்டு பெயரை கூட இழந்து விட்ட இந்த அரை வேக்காடுகள் Wikipedia வில் தேடி தமிழர் என்று நீருபிக்கவேண்டியவர்கள் . இவர்களில் இன்னொருவரும் இருக்கிறார் கறுப்பையா raveendra Pushpakumaara (1996 Wills World cup squad)

இவர் தனது அப்பாவின் பெயரை எங்கும் பாவித்ததில்லை. சிங்கள அணியில் விளையாட முற்றிலும் சிங்களவர்களாக மாறிவிட்டவர்கள் இவர்கள் .

இன்னும் சில கேள்விகள் என்னிடம் உள்ளன  முரளிக்கு ஏன் அணித்தலைவர் பதவி வழங்கப்படவில்லை ....?

இது தவிர நீங்கள் மறந்து விட்ட ஒருவரும் இருக்கிறார்  Pradeep Jayaprakashdaran

Indian Oil Cup(2005) இல் அறிமுகமானவர் முதல் ஆட்டத்திலேயே சேவாக்கை பெவிலியனிட்கு திருப்பி அனுப்பியவர் அத்துடன் அவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள் . 

இதனை விட இன்னும் இருவர் உள்ளனர் எனக்கு தனிப்பட்ட ரீதியில் தெரிந்தவர்கள் ஒருவர் உயிரோடு இல்லை (கிரிக்கட் தான் ..அரசியல் கிரிக்கட் தான் காவு வாங்கியது) கொழும்பில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் அவரது குடும்பத்தார் அனுமதியில்லாமல் அவர் பெயரை வெளியிட முடியாது . சிங்களவன் கிரிக்கட் விளையாட திறமை போதும் தமிழன் விளையாட அதிதிறமை வேண்டும் அதாவது உலகத்தரம் ,உலகசாதனை படைக்கும் திறமை , மகெல ஜெயர்வர்தன ஒரு காலத்தில் சொதப்பிய சொதப்பலை விடவா ..?அவரோட மனிசியை சக வீரரே அடிச்சிட்டு ஓடிய காலமேண்டு நினைக்கிறேன் ,அதுக்குப்பெயர் கிரிக்கெட்டா ...? அப்போதும் அணியில் வச்சிருந்தாங்கோ தானே ...?

நிலைமை இப்படியிருக்க இந்துவில் இருந்து ஒருவரை விடவில்லையாம் ..?எப்படி விடுவார்

எந்த தாயார் தான் தனது பிள்ளை 

8,9 வருடம் கஷ்ட்டப்பட்டு பயிற்சி செய்து 2 கிரிக்கட் மேச் மட்டும் ஆட அனுமதிப்பார்

நிச்சயமாக எனது பிள்ளையை இப்படியொரு  கிரிக்கட் விளையாட அனுமதிக்கவே மாட்டேன்      

Edited by அக்னியஷ்த்ரா

கிரிக்கேட் பற்றி எழுதுவீர்கள் என்று பார்த்தால் தனிப்பட்ட பிரச்சனைகளில் தான் உங்கள் பதிவு அதிகம் இருக்கு (பழக்க தோஷம்).

Pradeep Jayaprakashdaran இவரின் ஆட்டம் பார்த்து நானும் வியந்த காலம் இருந்தது .சேவாக்கை இவர் அனுப்பிய மட்சில் இலங்கை அணி காப்டன் அத்தபத்து இவரை முழுமையாக பாவிக்கவில்லை என்ற எண்ணமும் எனக்கு ஏற்பட்டதும் உண்மை .இவர் கோண்டாவிலை சேர்ந்தவர் .இவர் தந்தையாரை எனக்கு நன்கு தெரியும் .இவரின் நியுசீலந்தில் இருக்கும் பெரியப்பா இப்பவும் என்னுடன் தொடர்பில் இருக்கின்றார் .என்ன நடந்தது என்று கேட்டுப்பார்க்கின்றேன் .

 

முரளி அணித்தலைவர் ? எங்கேயோ உதைக்குது .நான் இலங்க அணி தெரிவு  பொறுப்பில்  இருந்தாலும் முரளியை காப்டன் ஆக்கியிருக்கமாட்டன்.

எங்கேயோ இருந்த முரளி வந்து உலக சாதனை படைக்கலாம் என்றால் அதற்கு திறமை தான் காரணம் .முதலில் அதை நிரூபியுங்கள் .

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை மேலே எழுதியிருப்பதெல்லாம் கிரிக்கெட்டை பற்றித்தான் 
மகேலவின் தனிப்பட்ட வாழ்கையை பற்றி எழுதவில்லை ...மஹேல நொண்டிய காலத்தை குறிப்பிடவே அதை எழுதினேன் 
நான் கூறவந்தது (தொடர்ந்து 7 அல்லது 8 ஆட்டத்தில் பங்குபற்றி எல்லாவற்றிலும் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் வெளியேறி மிகப்பெரிய சராசரி வைத்திருந்த காலம் )  அப்பொழுது கூட அணியில் அவரை வைத்திருந்ததை பற்றித்தான் 

 

முரளிக்கு தலைமைப்பதவி சரி வராது என்று நீங்கள் எப்படி கூறலாம் அதை வழங்கி பார்த்து பின் பறித்திருக்கலாம் (ஆனந்தராஜாவிட்க்கு போலிஸ் மா அதிபர் பட்டம் கொடுத்து பின் பறித்தெடுத்தது போல்)
tendulkar கூட தலைவராக இருந்தபோது குஸ்தி அடித்தவர்தான். ஆக pradeep  இற்கு ஏதோ நடந்திருக்கிறது என்று ஏற்று கொள்கிறீர்கள் .

 

இதைத்தான் நான் முதலிலையே சொன்னேன் ,இப்போது நீங்கள் விழுந்து விழுந்து புளுகும் சங்ககாரவின் ஆரம்ப கால கிரிக்கெட் ஆட்டத்தை மறந்து விட்டீர்களா ...? அறிமுகமான காலத்தில் இப்போது விளையாடுவது போலவா விளையாடியவர் ....?
முரளியை நினைத்து கொட்டாவி விட வேண்டியது தான் ...

அண்ணை Chance கிடைத்தால் தான் Sachin Tendulkar 
வாய்ப்பு கிடைத்தால் தான் முத்தையா முரளிதரன் 

என்னதான் நீங்கள் சிங்களவனுக்காக உருகி ஊத்துப்பட்டாலும் நடப்பதுதான் நடக்கும் 
திறமையை கனடா வந்துதான் நிரூபிக்கவேணும் 

அண்ணை Chance கிடைத்தால் தான் Sachin Tendulkar 
வாய்ப்பு கிடைத்தால் தான் முத்தையா முரளிதரன் 

 

சான்ஸ் கிடைக்கும் எல்லோரும் முரளியும் தண்டுல்கரும் ஆகிவிட முடியாது .உங்கள் சிந்தனையில் தான் பிழை.

 

உங்களை மாதிரி சிந்தித்தால் ஒவ்வொரு ஆஸி குடிமகனும் எனக்கு சான்ஸ் தந்தால் வார்னே ஆகியிருப்பேன் பாகிஸ்தானில் இருப்பவன் சான்ஸ் தந்தால் வாசிம் ஆக்ரம் ஆகியிருப்பேன் என்று சொல்லிக்கொண்டு திரியலாம் .

ஆட தெரியாவிட்டால் மேடை சரியில்லை என்று சொல்லகூடாது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.