Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயகுமாரி விடுவிக்கப்பட்டதை வரவேற்கிறது அமெரிக்கா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
jen-psaki-200-news.jpg

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஒரு வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயக்குமாரியை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்தமையை வரவேற்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ஜென் சகி இதனை தெரிவித்தார்.

தமிழ் சிறுபான்மையினரை நோக்கி புதிய அரசாங்கத்தின் நல்லலெண்ண நடவடிக்கை இது எனத் தெரிவித்த அவர் இலங்கையில மனித உரிமையை நிலைநாட்டுவதை நோக்கிய சாதகமான நடவடிக்கை எனவும் வர்ணித்தார்.

http://seithy.com/breifNews.php?newsID=128184&category=TamilNews&language=tamil

யாராயினும் ஒருவருடன் உங்களுக்கு நல்லெண்ண நடவடிக்கையை காட்டவேண்டும் என்றால் அவரிடம் குடும்பத்தில் ஒருவரை கடத்தி நாலு தட்டு தட்டி இரண்டு வருடம் உள்ளே வைத்திருந்து கொஞ்சகாலத்தின் பின்னால் அவரை விடுதலை செய்யலாம். நல்ல ஐடியா.

திருடர்கள் இனி கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்து விட்டு ஒரு பத்தாயிரம் ரூபாவை உரியவரிடம் திருப்பி ஒப்படைத்து தமது நல்லெண்ணத்தை காட்டலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் கொஞ்சப்பேரை வெளியிலை விட்டால் தமிழர்ரை பிரச்சனை முடிஞ்சதுக்கு சமன்... :D

அவர் பிடிபட்டதைக் கண்டித்தார்களா ? இல்லை. அப்படியென்றால் அவர் கைது செய்யப்பட்டதையும் அவர் பயங்கரவாதம் புத்துயிர் பெற உதவி செய்ததாகவும் சிங்களம் செய்த பிரச்சாரத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்று தானே பொருள். இப்போது அந்த அம்மா அதாவது பங்கரவாதம் புத்துயிர் பெற உதவிசெய்த பெண்ணை விடுதலை (மன்னிக்கவும் பிணையில் விடப்பட்டதை) செய்யப்பட்டதை வரவேற்பதன் மூலம் பங்கரவாத்ததை வளர்ககும் அமெரிக்காவின் தீய எண்ணத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இன்னும் கொஞ்சப்பேரை வெளியிலை விட்டால் தமிழர்ரை பிரச்சனை முடிஞ்சதுக்கு சமன்... :D

இல்லை
 
ஆனால் எத்தனையோ குடும்பத்திற்கு மகிழச்சி, நின்மதி. ஏன் உங்களிற்கு இது புரியவில்லை. 80களில் யாழ்பாணத்திலுள்ள ஒரு விளையாட்டு கழகத்தில் நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டிருந்தோம். எங்களில் யாருக்குமே எந்த இயக்க தொடர்புகளும் இருந்ததில்லை.
 
எனது அம்மா ஒவ்வொரு நாளும் குருநகர் முகாம் வாசலில் வந்து நிற்பா என்னைப் பார்க்க அனுமதி கிடையாது ஆனால் என்னால் யன்னலினூடாக பார்க்க முடியும். இது வெறும் 11 நாட்கள்தான் ஆனால் இவர்கள் வருடக்கணக்கில். தமிழ்ஈழத்தை ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு மனிதர்களாக மானிடம் மிக்கவர்களாக தயவு செய்து கருத்திடவும்.
 
உங்களை கெஞ்சிக் கேட்டுக் கொள்கின்றேன்.
 
நன்றி

சிங்கள இனத்தின் எண்ணமும் இதுதான்.

தமிழர்கள் பிரிவினையைக் கைவிடவேண்டும்.

அப்பாவிகளையாவது பிடித்து உள்ளே போட்டால்

மற்றவர்கள் அடங்கிவிடுவார்கள்.

இருக்கும் வரை உயிர் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தை தமிழ் மக்களிடையே பரவச் செய்வதே சிங்கள இனவாதிகளின் நோக்கம்.

அதில் அவர்களுக்கு வெற்றி என்பதையே உங்கள் கருத்துக் கூறுகின்றது.

உங்களின் கருத்து ஏற்புடையதில்லை.
 
விமானம் ஏறி இன்னொரு நாட்டில் எந்தவித மனித உரிமை மீறல்களும்மில்லாத நாட்டில் வசதியாக வாழும் உங்கள் கருத்து இதுவென்றால் இதில் கருத்திடுவது எனக்கே வெட்கமாகவுள்ளது.
 
உங்கள் சகோதரர்களில் ஒருவருக்கு இந்த நிலமை வந்திருந்தால் உங்கள் கருத்து இப்படியா இருந்திருக்கும்.
 
உங்கள் இலட்சியம் எதுவாகவும் இருக்கட்டும் ஆனால் சிறையில் உள்ளவரகளைப் பகடைக்காய்களாக்க வேண்டாம்.
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்துக்களை எழுதிய... ரிங்கோ, குமாரசாமி அண்ணா, மணிவாசகன், வாத்தியார் எல்லோரும்....
அமெரிக்காவின் பச்சோந்தி தனத்தை தான்... குறிப்பிடுகிறார்கள் என்பது, ஜீவன் சிவாவுக்கு.... புரியாமல் போனது ஏனென்று புரியவில்லை.

எனது கருத்து ரிங்கோ, வாத்தியார் மற்றும் முக்கியமாக குமாரசாமிக்கானது இதற்குள் மணிவாசகனை சேர்க்காதீர்கள். அவரது கருத்து தெளிவாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

யாராயினும் ஒருவருடன் உங்களுக்கு நல்லெண்ண நடவடிக்கையை காட்டவேண்டும் என்றால் அவரிடம் குடும்பத்தில் ஒருவரை கடத்தி நாலு தட்டு தட்டி இரண்டு வருடம் உள்ளே வைத்திருந்து கொஞ்சகாலத்தின் பின்னால் அவரை விடுதலை செய்யலாம். நல்ல ஐடியா.

திருடர்கள் இனி கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்து விட்டு ஒரு பத்தாயிரம் ரூபாவை உரியவரிடம் திருப்பி ஒப்படைத்து தமது நல்லெண்ணத்தை காட்டலாம்.

சரியாச் சொன்னீங்க. அமெரிக்காவின் கொள்கை இதுதான்.  :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை
 
ஆனால் எத்தனையோ குடும்பத்திற்கு மகிழச்சி, நின்மதி. ஏன் உங்களிற்கு இது புரியவில்லை. 80களில் யாழ்பாணத்திலுள்ள ஒரு விளையாட்டு கழகத்தில் நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டிருந்தோம். எங்களில் யாருக்குமே எந்த இயக்க தொடர்புகளும் இருந்ததில்லை.
 
எனது அம்மா ஒவ்வொரு நாளும் குருநகர் முகாம் வாசலில் வந்து நிற்பா என்னைப் பார்க்க அனுமதி கிடையாது ஆனால் என்னால் யன்னலினூடாக பார்க்க முடியும். இது வெறும் 11 நாட்கள்தான் ஆனால் இவர்கள் வருடக்கணக்கில். தமிழ்ஈழத்தை ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு மனிதர்களாக மானிடம் மிக்கவர்களாக தயவு செய்து கருத்திடவும்.
 
உங்களை கெஞ்சிக் கேட்டுக் கொள்கின்றேன்.
 
நன்றி

அடுத்தவரின் கருத்தை நீங்கள்தான் புரிய மாட்டேன் என்கிறீர்கள்.

சில ஆசாமிகளின் நடிப்பை பார்த்து நீங்கள் மயக்கத்தில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

அவா உள்ளுக்கு இருப்பது யாருக்கு சந்தோசம்?

அவாதான் வெளியில் வந்துவிட்டாரே.....

அவர் ஏன் உள்ளுக்கு போனார்?

அவருடைய போராட்டம் எதிர்பார்ப்பு வெற்றி பெற வேண்டும் என்றால் தொடர் போராட்டம்தான் ஒரே

வழி.

நல்லண்ணை

மன்னண்ணை

எல்லாம் பெரியவர்கள் தங்களை பரிசுத்தமானவர்களாக காட்ட பேசும் வார்த்தைகள்.

அந்த அம்மாவின் பிள்ளைகளை யார் மீட்டு கொடுப்பது?

எங்கே என்று கேட்டதற்கு ஒருவருடம் உள்ளே போட்டார்கள்.

உங்களை அவர்கள இப்போதும் உள்ளே வைத்திருந்தால்..... உங்கள் அம்மாவின் நிலை என்ன ???

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணைக்கு 11 குருநகர் முகாம் சிறையோட தமிழீழம் வெறுத்துப் போய் நோர்வேக்கு வந்திட்டார். பாவம்.. அவர் வெறுத்துப் போன தமிழீழத்துக்காய் இன்னுயிர் ஈர்த்தவர்களை அவர் நினைக்கவே மாட்டார். 

இதில அவர் மானுடம் பற்றி பாடம் எடுக்கிறார். எல்லாம் கொடுமை. நல்ல போர்வையை போர்த்திக்கிட்டு விசத்தை கக்குகிறார்கள்.. அவ்வளவே..!  :)  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக ஜீவன் இத்தோடு இந்த திரிக்கும் நாமம் போட்டுடுவார் எண்டே நினைக்கிறேன்.

மூன்பு ஆமிக்கு ஒரு பழக்கம். ஆனையிறவில் வாங்கி கட்டினால், அந்த கடுப்பில் கோட்டையில் இருந்து அப்பாவி சனங்களை நோக்கி செல் அடித்து, சனத்தை பிச்சு உதறுவான்.

இப்படி ஒரு ஷெல்தான் என்ர அப்பப்பாவையும் கொண்டு போனது.

திடீரென ஏனோ எனக்கு இது இப்போ நியாபகம் வருகுது.

ஜீவன் அங்கால - பேராசிரியர் சிவச்சந்திரன் சொன்னதைப் பற்றி கிருபன் ஒரு திரி திறந்திருக்கிறார். அங்கால போய் கண்ணியமாய்ப் பேசலாம் வாங்கோ :)

  • கருத்துக்கள உறவுகள்

முந்தி எனக்கொரு ஞாபகம்.. கோட்டையில் இருந்து ஆமி வெளிக்கிட புளொட் சங்கூதிட்டு.. ஈபியை சக்கை அடிக்க வைச்சிட்டு.. கூட்டுக்கொண்டு ஓடிடும். பிறகு புலி வந்து தான்.. உந்த வெட்டிக்கூட்டம் வெளில விட்ட ஆமியை உள்ள அடிச்சு கலைக்கிறது. 

ஜீவன் அண்ணர் சங்கூதிட்டார். மற்றவர் சக்கை அடிச்சிட்டார். எனி ஓடிப்போய் காரைநகர் பக்கமா நில்லுங்க.  :lol:  :D  :icon_idea:

உப்படி ஒரு சக்கை அடியிலதான் எங்கட அம்மம்மாவுக்கு காது சவ்வு வெடிச்சது.  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் அது பெரிய கொமெடியா இருக்கும். அதிலும் முழு நிலா வெளிச்சத்தில் ஈபி காரைநகர் காம்ப் அடித்த ஜோக் இன்னுமொரு பேய்க்காமெடி.

ஆனால் அப்ப டெலோவும் கொஞ்சம் உசாராத்தான் நீண்டது. ஆனா கிட்டர் அளவுக்கு யாராலும் படம் காட்ட முடியேல்லை.

உங்கள் அம்மாவின் காதுச் சவ்வை கிழித்தற்க்காக புளொட் மீது நீங்கள் வழக்குப் போட வேண்டும் நெடுக்கு. சித்தரின் அட்ரஸ் வேணுமா?

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டர் படம் காட்டினாரோ இல்லையோ.. ஆமியை வெளில வரவிடல்ல. சங்கூதின புளொட்டும்.. சக்கை அடிச்ச.. ஈபியும் ஆமியை முனியப்பர் கோயில் தாண்டி..  யாழ் தபால் கட்டைச் சந்தி வரை வரவிட்டிட்டு தான் ஓடுறது. 

அப்படியே ஓடிற கையோட.. பேப்பர்காரரை வெருட்டிட்டு ஓடுறது.. நாங்கள் அடிச்சு விரட்டினம் என்று செய்தி வரணும் என்று. கடைசில.. கிட்டு மாமா வந்து தான்.. ஆமி அடங்கும். 

உரிமை கோரல்.. புளொட்.. ஈபி. புலிக்கு பத்திக்கிட்டு வருமோ... வராதோ..?!  :lol:  :D

இந்தத் தலைப்பிலும் அதே.  :icon_idea:

அவர் லண்டன் வந்து அதை விட பெரிய படம் காட்டினார் .

அதுதான் அவருக்கே ஆப்பானது .

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் அப்ப டெலோவும் கொஞ்சம் உசாராத்தான் நீண்டது. ஆனா கிட்டர் அளவுக்கு யாராலும் படம் காட்ட முடியேல்லை.

உங்கள் அம்மாவின் காதுச் சவ்வை கிழித்தற்க்காக புளொட் மீது நீங்கள் வழக்குப் போட வேண்டும் நெடுக்கு. சித்தரின் அட்ரஸ் வேணுமா?

இப்படி ஒரு ஷெல்தான் என்ர அப்பப்பாவையும் கொண்டு போனது.

உங்கட அப்பப்பாவை செல் அடிச்சு கொன்ற சிங்களவனையே மன்னிச்சுட்டியள்.. சக்கை.. போட்ட ஈபி புளொட்டை.. மட்டும்.. கோட்டில நிற்பாட்ட நிற்கிறேள். அசைலம் அடிக்க ஆக்களுக்கு கதை சொல்ல தேவை வரும் பத்திரமா வைச்சிருங்க.  :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் புலிக்கு பத்திகிட்டு வர உடனடியா எல்லாரையும் தடை செய்து, தன் கொடுஞ்சினத்தை தீர்க்க மற்றைய இயக்க அடிநிலை அப்பாவிப் போராளிகளை போட்டுத்தள்ளியது.

  • கருத்துக்கள உறவுகள்

அதில இவர்தான் கூட நின்று யார் அடிநிலை.. யார் கடிநிலை என்று தலையாட்டி விட்டவர். வந்திட்டார் தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள.

வெளில விட்ட ஆமியை அடிச்சு விரட்டிட்டு.. பத்திக்கிட்டு புலி வர.. சனம்.. தண்ணி வார்த்து.. தம்பிமாரை கட்டியணைச்சுத்தான்.. வளர்த்துவிட்டதுகள். அதுதான் இப்பவும் புலிக்கொடி பறக்குது உலகம் பூராவும். புளொட் கொடி என்ன கலர். ஈபி கொடி என்ன நிறம்.  :lol:  :D

இல்லை
 
ஆனால் எத்தனையோ குடும்பத்திற்கு மகிழச்சி, நின்மதி. ஏன் உங்களிற்கு இது புரியவில்லை. 80களில் யாழ்பாணத்திலுள்ள ஒரு விளையாட்டு கழகத்தில் நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டிருந்தோம். எங்களில் யாருக்குமே எந்த இயக்க தொடர்புகளும் இருந்ததில்லை.
 
எனது அம்மா ஒவ்வொரு நாளும் குருநகர் முகாம் வாசலில் வந்து நிற்பா என்னைப் பார்க்க அனுமதி கிடையாது ஆனால் என்னால் யன்னலினூடாக பார்க்க முடியும். இது வெறும் 11 நாட்கள்தான் ஆனால் இவர்கள் வருடக்கணக்கில். தமிழ்ஈழத்தை ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு மனிதர்களாக மானிடம் மிக்கவர்களாக தயவு செய்து கருத்திடவும்.
 
உங்களை கெஞ்சிக் கேட்டுக் கொள்கின்றேன்.
 
நன்றி

ஜீவன் உங்களுக்கு  உண்மையிலேயே  விளங்கவில்லையோ அல்லது வேண்டுமென்றே விளங்காததுபோல் நடிக்கிறீர்களோ?  நீங்கள் கூறுவது போல் எவரும் சிறிலங்கா அரசாங்கத்தால் உள்ளே போடபட்ட அப்பாவி மக்களின் விடுதலைக்கு எதிராக கருத்து எழுதவில்லை. மக்களின் பலவீனத்தை எப்படி அடக்குமுறையாளர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதற்கான கண்டனத்தயும் அதை தோலுருத்து காட்டும் வகையிலான கருத்துகளையுமே  எல்லோரும் தத்தம் பாணியில் தெரிவித்தார்கள். அதை உங்களால் எப்படி பாதிக்கபட்ட மக்களுக்கு எதிராக கருத்தாக பார்க்க முடிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்கா ஊடகங்களில் ஜெயக்குமாரியை அப்பாவி பொதுமகள் என்று கூறாமல் மனித உரிமை ஆர்வலர் என்றல்லவா வர்ணித்து உள்ளன. அப்படியென்றால் தவறு எங்கே?

அமெரிக்கா ஊடகங்களில் ஜெயக்குமாரியை அப்பாவி பொதுமகள் என்று கூறாமல் மனித உரிமை ஆர்வலர் என்றல்லவா வர்ணித்து உள்ளன. அப்படியென்றால் தவறு எங்கே?

நீங்கள் குறிப்பிட்ட அமெரிக்க ஊடகத்தின் பதிவை நான் பார்க்கவில்லை. இருப்பினும் ஜெயகுமாரி காணாமல் போன மகனிற்காகப் போராடினாலும் இவ்வாறு காணாமல் போனவர்களிற்கான பொதுவான போராட்டமே. நாங்கள் அவ்வாறுதான் இவரது போராட்டத்தைப் பார்க்கவேண்டும். அவ்வாறு பார்த்தால் இவரது போராட்டம் மனித உரிமைக்கானதே.
 
ஆகவே ஜெயகுமாரி மனித உரிமை ஆர்வலர்தான்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lanka Grants Bail to Tamil Rights Activist

http://www.nytimes.com/2015/03/11/world/asia/sri-lanka-grants-bail-to-tamil-activist-jeyakumari-balendran.html?_r=0 

Sri Lanka Government Grants Bail to Tamil Activist

http://www.wsj.com/articles/sri-lanka-government-grants-bail-to-tamil-activist-1426010939

Sri Lanka frees Tamil activist Jeyakumari Balendran on bail

http://www.bbc.com/news/world-asia-31812030

US welcomes release of Sri Lanka activist

http://news.yahoo.com/us-welcomes-release-sri-lanka-activist-183613128.html

  • கருத்துக்கள உறவுகள்

கிழவி

ஜெயக்குமாரி போரில் வன்முறையில் பங்கெடாத, ஒரு குற்றமும் செய்யாத அப்பாவி (innocent). அதே சமயத்தில் காணாமல் போன மகனை தேடி ஆர்ப்பாட்டம் செய்த ஒரு மனித உரிமை செயற்பாட்டாளர் (ஆர்வலர் அல்ல).

எனவே she is both a human rights activist as well as an innocent human being.

வ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.