Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரயிலில் மோதிப் படுகாயமடைந்த யாழ்.இந்து மாணவன் சாவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேள்விப்பட்டவரை, இந்த ரயில்பாதையில் ரயில் வரும்போது சைக்கிளில் கடப்பது என 3 மாணவர்கள் பெட் பிடித்தனர். அப்படியே முயற்சித்தபோது, முதல் 2 மாணவர்களும் ரயில் வருமுன் பாதையை கடந்துவிட, 3வது மாணவர் ரயிலில் மோதி மரணமடைந்தார். மூவரும் யாழ் இந்து மாணவர்கள்.  விபத்து நடந்தது ரயில்வே கடவையே அல்ல. அப்பகுதியை சேர்ந்த ஒருவர், தாம்  மோட்டார் பைக்கில் கடந்து செல்ல தண்டவாள உயரத்துக்கு மண்ணால் போட்டு வைத்திருந்த  ஏற்றம் அல்லது பிட்டி.

அண்ணை நடந்தது எதுவாக இருந்தாலும் புகையிரதப்பாதையின் பாதுகாப்பு எவ்வளவு தரமாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். மேற்குலகில் காடுகளிற்கூடாகப் பயணிக்கும் பாதைகளைக் கூடச் சரியான பாதுகாப்பு வேலிகள் மூலம் உறுதிப்படுத்தியிருப்பார்கள்.

இலங்கையில் உள்ள கடவைகளோ பாதைகளோ திறந்த வெளிகளாகவே இருக்கும்.

அதுவும் ஊர்மனைகளினூடாகச் செல்லும் பாதைகளில் எந்தப்பாதுகாப்பும் இருக்காது.

நூறு அமைச்சர்களை வைத்து அரசாங்கத்தைத் தான் காப்பற்ற முடியும். அமைச்சர்கள் தங்கள் பைகளை நிரப்புவார்கள்.

பாதிப்பு மக்களுக்குத்தான்.

  • Replies 80
  • Views 3.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது உண்மைதான். ஆனையிறவு கடந்தபின் நாவற்குழி வரை ரெயில்வே பாதைக்கு மிக நெருக்கமாக வீடுகள் உள்ளன.  வெளிநாடுகளில் ஹைவேக்களில் போடுவது போல இரும்பு தடுப்பு அமைத்திருக்கலாம். அதன்பின் வீடுகள் குறைவு. ஆனால், அருகே வீதிகள் உள்ளன.

Edited by sabesan36

சிறீலங்கா அரசாங்கத்தின் நிர்வாகத்தவறுகளை கள உறவுகள் சுட்டிக்காட்டினால. கூட சில அதை ஏற்று கொள்ளாமல் எஜமான் விசுவாசம் கொண்டு அதற்கு வக்காலத்து வாங்க ஒரு கூட்டம் இங்கே அலையுது.

  • கருத்துக்கள உறவுகள்
ஆழ்ந்த இரங்கல்கள்.. யாழ் இந்து மைந்தனுக்கு.... 
 
அநியாயமாக இழந்த உயிரை பற்றியும் இனிமேல் இவ்வாறு நடக்கா வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் சம்மந்தமாகக் கருத்துக்கள் வைப்பதை விட்டு இரங்கல் பகுதிக்குள்ளும் வந்து குழு வாதமாக ஆதாரமற்ற செய்தி மூலமும் இறந்த மாணவனின் மீது சேறடிப்பு , சிங்கள பகுதிக்குள் அடிக்கடி நடைபெறுகின்றது ஆகவே இங்கும் நிகழலாம் எனும் சப்பைகட்டு ,இந்தியாவில் மொபைல் போனை கதைத்தபடியால் ரயில் மரணங்கல் எனும் ஒப்பீடு நீங்கள் எல்லாம் இந்த இரங்கல் திரியில் நின்று கொஞ்சமும் மனச்சாட்சி அற்று யாரை காப்பற்ற கூப்பாடு போடுகின்ரீர்கள் ?

Edited by பெருமாள்

உண்மையிலேய வாசிக்க மனதுக்கு கடினமாக உள்ளது பெருமாள்

பனையால விழுந்தவனை மாடேறி மிரிப்பது போல் உள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சாதாரணமாக ஒரு வீதியை புனருத்தாரணம் செய்யும் போது அல்லது புதிதாக போடும் போது இன்னும் நூறுவருடங்களை முன்னோக்கி சிந்தித்து செயல்படுவார்கள். நிச்சயமாக புதிய தொழில்நுட்பங்களுடன் நிர்மாணிப்பார்கள்.
அவசரத்திற்கு போட்ட புகைரதவீதிதானே....இருந்ததைவிட மோசமாகத்தானிருக்கும்....
 
இதற்குள் சிங்கள ஏரியாவிலும் நடக்கின்றதென்று சொல்லி சமநிலைப்படுத்தல் வக்காலத்து வேறு.......
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே குழு நிலை விவாதம் செய்யாதேங்கோ என்று சொல்லி சொல்லி அதையே செய்கிறார்கள் சிலர்.

சிங்களப் பகுதியில் நடக்குது எண்டு நான் சொன்னது - நியாயப் படுத்தவல்ல, இது வளரும் நாடுகள் எல்லாவற்றிலும் நடப்பதே. என்பதை சுட்டவே.

கொள்ளுபிட்டிய முதல் அங்குலான வரை பாதுகாப்பில்லாத ரயில் கடவைகள் எத்தனை பீச்சுக்கு போகுது என்று போய்ப் பார்த்தால் தெரியும்.

வெளிநாடுகளில் இருந்த படியால் எமக்கு இது பெரிய விசயமாய் தெரிகிறது. அங்கே இது வாழ்வின் ஒரு அங்கம்.

என் தந்தையின் மோட்டார் சைக்கிள் எரிபொருள் தாங்கியில் ஏறி இந்த ஊரெல்லாம் சுத்தி வந்தவன் நான். ஆனால் ஊருக்கு இப்போ போய் என் மகனை அப்படி இருத்தி ஓட முடியவில்லை. ஏனென்றால் என் ஹெல்த் அண்ட் சேப்பிடி அவயர்னஸ்.

ரயில்வே போட்டுத்தந்த இந்தியாவிலேயே சனம் கூரைக்கு மேலே இருந்தும் போறது. இதில் அவர்கள் கடவையும் போடவில்லை என்று நோவது கேலிக்குரியது.

இது வெள்ளைக்காரன் போட்ட ரயில், அவன் காலத்தில் எல்லா கடவையிகும் ஆள் நிண்டதா? அல்லது விபத்துகள்தான் நடக்கவில்லையா?

வேண்டாத பொண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டா குற்றம் என்று எழுதுகிறீர்கள்?

ரயில் கடவையில் ஒரு வருடத்துக்கு 3 பேர் படி அடிச்சு கொண்டு தமிழர் விகிதாசாரத்தை குறைக்கலாம் எண்டு சில மோட்டுத்தமிழர் நினைக்கலாம் ஆனால் சிங்களவர் அந்தளவு மோடையர் அல்ல.

ஆமியை விடக்கூடாது - ராணுவ பிரசன்னத்தை குறையுங்கோ எண்டு நாக்கு வரள குழறிப்போட்டு நாங்களே ஆமியை குடிமனைகளுக்க கூப்பிடுவதா?

அப்படி ஆமி நிண்டா ஐயோ எல்லாம் ராணுவமயம் என்று முதலில் கூவப்போவது நீங்கள்தானே?

இதைத்தான் ஊரில் சொல்லுவீனம் "பிறண்ட வழத்துக்கு குறி சுடுவது என்று" :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
கடைசியுத்ததில் மட்டும் நவீனரக குண்டுகள்/நச்சுவாயுகுண்டுகள்  உபயோகிக்க தெரிந்தவர்களுக்கு.....புகைரதவீதிகள் அமைப்பதற்கு 100 வருடங்களுக்கு முந்திய தொழில்நுட்பமாம்.
பேசாமல் சீனாவையே விட்டிருக்கலாம். :icon_mrgreen:
மேற்குலக நாடுகள் போன்று தண்டவாளத்திற்கு இருபுறமும் கம்பி வேலி அடைத்து கடப்போருக்கு தண்டவாளத்திற்கு மேலாகவோ கீழாகவோ பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும். அதுவும் இந்தியா செய்யணும். நல்லா இருக்கு.
 
இதுதான் இலங்கை போன்ற நாடுகளின் நிலை. நாம்தான் அவதானமாக இருக்கவேண்டும். இதற்கான புரந்துணர்வு எம்மிடமிருந்துதான் வரவேண்டும். இங்கு நெடுக்ஸ் குறிப்பிட்ட கடவையில் என்றுமே பாதுகாப்பு இருந்ததில்லை. இப்போது மட்டும் போடுவார்களா? வாகன போக்குவரத்து அதிகமாக உள்ள கடவுகளிலேயே பாதுகாப்பு இருந்தது. மற்றய கடவுகளிற்கு பல நூறு மீட்டர்களின் முன்னரேயே ஹோர்ண் அடிக்க வேண்டிய அறிவுப்பலகை இருக்கும். சாரதியும் அதற்கேற்ப முதலில் இருமுறையும் பின்னர் அருகே வரும்போது ஒருமுறையும் அடிப்பார். ஹோர்ண் சத்தத்தை கேட்டிருந்தால் தெரியும் அதன் வீரியம். 
 
இங்கு தப்பு நிச்சயமாக இறந்த பிள்ளையிலும் உண்டு. இவ் இழப்பாவது மற்றவர்களின் கண்களைத் திறக்கட்டும், மேற்கொண்டு இவ்வாறான அழிவுகளைத் தடுக்கட்டும்.
 
இதுவும் இலங்கை அரசின் இனப்படுகொலை என்பவர்கள் எந்த சுவரிலாவது முட்டிக்கொள்ளுங்கள். என்னை விடுங்கள்.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் ஒரு வருடத்துக்கு 3 பேரை கொல்ல, கோடிகணக்கில் செலவு செய்து ரயில் பாதை அமைத்துள்ளார்கள். இது ஒரு நூதன இனப்படுகொலை முறை.

உங்களுக்கு புரியாட்டி நீங்கதான் போய் சுவரில முட்டணும். எங்கட மண்டேக்க இருக்கிற களிமண் அவ்வளவு கெட்டி. நாங்க முட்டினா சுவர்தான் உடையும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
மேற்குலக நாடுகள் போன்று தண்டவாளத்திற்கு இருபுறமும் கம்பி வேலி அடைத்து கடப்போருக்கு தண்டவாளத்திற்கு மேலாகவோ கீழாகவோ பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும். அதுவும் இந்தியா செய்யணும். நல்லா இருக்கு.

நான் தான் செய்தனான் செய்து குடுத்தனான் எண்டு மார்தட்டுறவன் ஒழுங்காயெல்லோ செய்து குடுக்கோணும்.....இனி வேலியடைக்க சீனாவும் வராது பாக்கிஸ்தானும் வராது

ஜீவன் நீங்களகவே இங்கு வந்து இன்ப படுகொலை என்றுவிட்டு என்னை விடுங்கள் என்கின்றீர்கள் இந்த விடயத்தை சிறீலங்கா அரசின் பாராமுகம், அசண்டயீனம், நிர்வாக தவறுகளில் ஒன்று என்று தான் கள உறவுகள் குறிப்பிட்டார்கள். எவருமே இனப்படுகொலை என குறிப்பிடவில்லை. இனப்படுகொலை என்ற பத்ததை பாவித்தததே நீங்கள் ஒருவர்தான். எனவே நீங்கள் மட்டும் தான் சுவரில் முட்ட வேண்டும். மற்றவர்களல்ல.

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் ஒரு மனித உயிரைக் காப்பாற்ற எவ்வளவோ முயற்சிகளை எடுக்குது. தமிழினம் மட்டும் தொடர்ந்து அநியாயமாக.. சிங்களத்தின் கவனக் குறைவுக்கும்.. பலியாகனும்.. என்று இங்கு சிலர் விதி எழுதி வைக்கிறார்கள். 

அதிலும்  உந்த தொடரூந்து விடுறதை தமிழர்களிடமே கையளிக்கலாம். தமிழர்கள் தங்களுக்கு வேண்டிய உலக தரத்திலான பாதுகாப்போடு தொடரூந்து விடுவார்கள்.

மத்திய லண்டனில்.. விபத்துக்களை.. விட விபத்துக்கள் நடக்காது என்பதை பயணிகள் உணர செய்யப்பட்ட ஏற்ப்பாடுகளும் செலவுகளும் மிக அதிகம். அவை எங்க சிங்களவன் எங்க.. அவனுக்கு வக்காளத்து வாங்கும் எங்கட அறிவாளிகள் எங்க.  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மாணவனுக்கும் குடும்பத்திற்கும் என் அனுதாபங்கள்!

பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் வடக்கில் மட்டுமல்ல சிறி லங்காவின் எல்லாப் பகுதிகளிலும் பிரச்சினை தான் இன்றும். சிங்கள அரசு இதை வேண்டுமென்று செய்கிறது என்று ஆதாரத்தோடு நிரூபிக்க இயலுமோ தெரியாது. அப்படி நிரூபிக்க முயற்சிக்கிறதை விட தமிழர்கள் மேல் அக்கறை கொண்ட நாங்கள் ஒன்று செய்யலாம்! ரயில் பாதையும் அது குறுக்கிடும் வீதியும் யாருக்கும் சொந்தமாக இருக்கட்டும். ஆனால் அந்தக் கடவையை மட்டும் வடமாகாண அரசு பொறுப்பெடுத்து ஒரு காவலாளியையும் எளிமையான மூங்கில்/சலாகைத் தடுப்பையும் உருவாக்கலாம்! பிரேமதாசா இப்படித் தான் சில ஆயிரம் பேருக்கு நாடு முழுவதும் வேலை கொடுத்தார். நாங்கள் வடமாகாண மட்டத்தில் ஏதாவது செய்ய முடியாதா? நிதி வேண்டுமென்றால் புலம்பெயர் தமிழர்கள் வழங்கலாம், அல்லவா?

ஜீவன் நீங்களகவே இங்கு வந்து இன்ப படுகொலை என்றுவிட்டு என்னை விடுங்கள் என்கின்றீர்கள் இந்த விடயத்தை சிறீலங்கா அரசின் பாராமுகம், அசண்டயீனம், நிர்வாக தவறுகளில் ஒன்று என்று தான் கள உறவுகள் குறிப்பிட்டார்கள். எவருமே இனப்படுகொலை என குறிப்பிடவில்லை. இனப்படுகொலை என்ற பத்ததை பாவித்தததே நீங்கள் ஒருவர்தான். எனவே நீங்கள் மட்டும் தான் சுவரில் முட்ட வேண்டும். மற்றவர்களல்ல.

அரசியல் மயப்படுத்தப்பட்ட இரயில் விடுதல்களும்.. சிங்களத்தின் தமிழ் மக்கள் மீதான.. ஏனோ தானோ கொள்கைகளுமே யாழ் தேவி வரவோடு நிகழும் பல மரணங்களுக்குக் காரணம்.

இது எங்கோ வாசித்ததல்ல இத்திரியில்தான் உள்ளது. நான் தவறாகப் புரிந்து கொண்டிருந்தால் எனது குறைந்த தமிழ் அறிவிற்காக மன்னிப்பு கோருகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மாணவனுக்கும் குடும்பத்திற்கும் என் அனுதாபங்கள்!

பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் வடக்கில் மட்டுமல்ல சிறி லங்காவின் எல்லாப் பகுதிகளிலும் பிரச்சினை தான் இன்றும். சிங்கள அரசு இதை வேண்டுமென்று செய்கிறது என்று ஆதாரத்தோடு நிரூபிக்க இயலுமோ தெரியாது. அப்படி நிரூபிக்க முயற்சிக்கிறதை விட தமிழர்கள் மேல் அக்கறை கொண்ட நாங்கள் ஒன்று செய்யலாம்! ரயில் பாதையும் அது குறுக்கிடும் வீதியும் யாருக்கும் சொந்தமாக இருக்கட்டும். ஆனால் அந்தக் கடவையை மட்டும் வடமாகாண அரசு பொறுப்பெடுத்து ஒரு காவலாளியையும் எளிமையான மூங்கில்/சலாகைத் தடுப்பையும் உருவாக்கலாம்! பிரேமதாசா இப்படித் தான் சில ஆயிரம் பேருக்கு நாடு முழுவதும் வேலை கொடுத்தார். நாங்கள் வடமாகாண மட்டத்தில் ஏதாவது செய்ய முடியாதா? நிதி வேண்டுமென்றால் புலம்பெயர் தமிழர்கள் வழங்கலாம், அல்லவா?

ஆமோதிக்கின்றேன்...

எப்பொழுதும் எமது கருத்தும் 

அதற்கான பரிந்துரையும்  

செயலும் இருப்பதே நல்ல கருத்தாகும்.....

அதுவே இன்றைய தேவை....

ஏனோ தானோ கொள்கைகள் என்றால் அக்கறையின்மை என்று அர்த்தம் ஜீவன். இனப்படுகொலை அல்ல. உங்களுக்கு அப்படி புரிந்ததற்கு காரணம் நீங்கள் உங்கள் பதிலை கேள்விக்கு முன்பே தயார் செய்ததால்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் இது ஒரு நல்ல ஐடியா.

யாருக்காவது அமைச்சர் ஐங்கர நேசனின் இமெயில் தெரியுமா? இதை அவரிடம் எடுத்து சென்று பார்ப்போம்?

சபேசனின் ஊர் ஆள்தான் யாழ் ஸ்டேசன் மாஸ்டர்

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண இணையத்தளத்திலேயே இருக்கிறது, இதோ!

aygaranesan59@gmail.com

  • கருத்துக்கள உறவுகள்

Hon. Ponnuthurai Ayngaranesan

Minister of Agriculture and Agrarian Services, Animal Husbandry, Irrigation, Water Supply, Food Supply and Distribution, Environment and Co-operative Development

Agriculture Minister's Office,

No.295, Kandy Road, Ariyalai, Jaffna, Sri Lanka

Tel: +94-21-221 1266

Fax: +94-21-221 1267

Email:

aygaranesan59@gmail.com

http://www.np.gov.lk/index.php?option=com_content&view=category&layout=blog&id=14&Itemid=120

ஜஸ்டின் இது ஒரு நல்ல ஐடியா.

யாருக்காவது அமைச்சர் ஐங்கர நேசனின் இமெயில் தெரியுமா? இதை அவரிடம் எடுத்து சென்று பார்ப்போம்?

சபேசனின் ஊர் ஆள்தான் யாழ் ஸ்டேசன் மாஸ்டர்

விக்கியை தெரிகிறது, சமந்திரனை தெரிகிறது இது தெரியலயோ?

....

ஆனால் அந்தக் கடவையை மட்டும் வடமாகாண அரசு பொறுப்பெடுத்து ஒரு காவலாளியையும் எளிமையான மூங்கில்/சலாகைத் தடுப்பையும் உருவாக்கலாம்! பிரேமதாசா இப்படித் தான் சில ஆயிரம் பேருக்கு நாடு முழுவதும் வேலை கொடுத்தார். நாங்கள் வடமாகாண மட்டத்தில் ஏதாவது செய்ய முடியாதா? நிதி வேண்டுமென்றால் புலம்பெயர் தமிழர்கள் வழங்கலாம், அல்லவா?

இதை விட 25 வருடங்களின் பின்னர் புகையிரதத்தை சந்திக்கும் எமது அடுத்த சந்ததியினருக்கு விழிப்பூட்டல்களை வழங்கி வடமாகாண சபையின் நிதியை வேறு ஆக்கபூர்வமான விடயங்களுக்கு பயனபடுத்தலாம் என்பது எனது கருத்து.
 
ஒருநாளில் வரும் 4 அல்லது 5 புகையிரதத்திற்காக நாள்பூரா சிலரை வேலைக்கு அமர்த்தலாமா. என்னால் முடியாது சாமி. தேவையற்ற மனிதவள துஷ்பிரயோகம்.
  • கருத்துக்கள உறவுகள்

தொடரூந்தை தயாரித்து விட்ட நாடு கூட பாதுகாப்பற்ற கடவைகள் தொடர்பில்.. மிகக் கடுமையான சட்டத்திட்டங்களை இயற்றி உள்ளதோடு.. தானியக்கி.. பொறிமுறைகளைப் பயன்படுத்தி விபத்துக்களை குறைக்க நிற்கிறது.  எமது மக்கள் சிங்களத்தின் தொடரூந்துத் தடையால் அதனைப் பார்க்கேல்ல.. என்ற ஒரு காரணத்திற்காக.. விபத்துக்களை தவிர்க்கும் அறிவோடு பிறக்கவும் வளரவும் வேண்டும் என்பது போல் கொடுமையான சிந்தனைகளை எம்மவர்கள் எங்கிருந்து தான் பெறுகிறார்களோ.

மக்கள்.. பொறிமுறைகள்.. பொறிகள் பற்றி அன்றாடம் சிந்தித்துக் கொண்டிருக்க முடியாது. அவற்றை மக்கள் முன் தமது வருவாய்க்காக பயன்படுத்துவோர் தான் மக்களின் பாதுக்காப்பை உறுதி செய்யும் கடப்பாட்டை அதிகம் பெற்றிருப்பதோடு மக்களை தேவையான இடத்தில் அறிவுறுத்தும் கடப்பாட்டையும் கொண்டுள்ளனர். 

எதுக்கும் ஒரு 25 வருடக் கணக்கு வைச்சிருக்கிறார்கள்.. சிலர். எம் மக்கள் மீது சவாரி செய்ய.  :icon_idea:

மாணவனுக்கும் குடும்பத்திற்கும் என் அனுதாபங்கள்!

பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் வடக்கில் மட்டுமல்ல சிறி லங்காவின் எல்லாப் பகுதிகளிலும் பிரச்சினை தான் இன்றும். சிங்கள அரசு இதை வேண்டுமென்று செய்கிறது என்று ஆதாரத்தோடு நிரூபிக்க இயலுமோ தெரியாது. அப்படி நிரூபிக்க முயற்சிக்கிறதை விட தமிழர்கள் மேல் அக்கறை கொண்ட நாங்கள் ஒன்று செய்யலாம்! ரயில் பாதையும் அது குறுக்கிடும் வீதியும் யாருக்கும் சொந்தமாக இருக்கட்டும். ஆனால் அந்தக் கடவையை மட்டும் வடமாகாண அரசு பொறுப்பெடுத்து ஒரு காவலாளியையும் எளிமையான மூங்கில்/சலாகைத் தடுப்பையும் உருவாக்கலாம்! பிரேமதாசா இப்படித் தான் சில ஆயிரம் பேருக்கு நாடு முழுவதும் வேலை கொடுத்தார். நாங்கள் வடமாகாண மட்டத்தில் ஏதாவது செய்ய முடியாதா? நிதி வேண்டுமென்றால் புலம்பெயர் தமிழர்கள் வழங்கலாம், அல்லவா?

ஜஸ்ரின் உங்கள் கருத்து ஆக்கபூர்வமானது. எனினும் ஒரு கேள்வி ரயில்வே திணைக்களத்தின் நிர்வாக விடயங்களில் தலையீடு செய்ய வடமாகாண சபையால் முடியுமா?

அல்லது Contract  அடிப்படையில் ரயில்வே திணைக்களத்திற்காக வடமாகணசபை இந்த பணியை பொறுப்பெடுத்து ரயில்வே திணைக்களத்திடம் பணத்தை அறவிடலாமா?  அதற்கு இலங்கை சட்டத்தில் இடமிருக்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்

இதை விட 25 வருடங்களின் பின்னர் புகையிரதத்தை சந்திக்கும் எமது அடுத்த சந்ததியினருக்கு விழிப்பூட்டல்களை வழங்கி வடமாகாண சபையின் நிதியை வேறு ஆக்கபூர்வமான விடயங்களுக்கு பயனபடுத்தலாம் என்பது எனது கருத்து.
 
ஒருநாளில் வரும் 4 அல்லது 5 புகையிரதத்திற்காக நாள்பூரா சிலரை வேலைக்கு அமர்த்தலாமா. என்னால் முடியாது சாமி. தேவையற்ற மனிதவள துஷ்பிரயோகம்.

இதுவும் உண்மை தான்! வெளிநாடுகள் அல்லது கொழும்பு கரையோரப் பாதைகள் போல ரயில் போக்கு வரத்து வடக்கில் இல்லைத் தான். பிரேமதாசா காலத்தில் நடந்தது போல, அனேகமான காவலாளிகள் வீட்டில் உறங்கி விட்டு, ரயில் நேரத்திற்கு மட்டும் வந்து நிற்கும் நிலையும் (வராமல் விட்டால், விபத்து நடக்கும் வாய்ப்புகளும்) அதிகமாக ஏற்படலாம்-விரயம் தான்.

ஆனால், அதிக வீதிப் போக்குவரத்துள்ள இடத்தில் காவலாளி தடுப்பு இல்லாவிட்டாலும், "ரயில் வருகிறது" என்று அண்மிக்கும் ரயிலின் வரவைத் தெரிவிக்கும் flashing indicators ஆவது வைக்கலாம். இந்தத் தொழில் நுட்பம், இந்தக் காலத்தில் ஒரு எளிமையாகக் கிடைக்கும் தொழில் நுட்பம் என நினைக்கிறேன். தற்போது இருப்பதெல்லாம் "கோச்சி வரும் கவனம்" என்று எச்சரிக்கும் துருப்பிடித்த பழைய இரும்புப் பலகைகள் தான்! ("பின்னால கொப்பரும் வருவேர் கவனம்" எங்கள் தமிழ் நகைச்சுவையாளர் ஒருவர் கிண்டலடித்ததைக் கேட்டிருக்கிறேன்!)

ஜஸ்டின் நியாயமான கருத்து. இத்துடன் தானியங்கி கதவுகளையும் பொருத்தலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.