Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

72 மணிநேரத்தில் மயூரனுக்கு மரணதண்டனை! - பாலித் தீவுக்கு உறவினர்கள் அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிப் பார்க்கப்போனால்.. பாஸ்போட் இல்லாமல் மேற்கு நாடுகளுக்குள் சட்டவிரோதமாக.. நுழைந்த நுழையும் தமிழர்களை எல்லாம் சிறையில் அடைச்சிருக்க வேண்டும். தண்டிச்சிருக்க வேண்டும்.

 

அவர்களால்.. பல நாடுகளில் பல பிரச்சனைகள். அதில் போதைவஸ்துக் கடத்துவோரை உருவாக்கியதும் அடங்கும். கள்ளக் காட் போடுவதை உருவாக்கியதும் அடங்கும். குழுச் சண்டைகளை வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதும் அடங்கும். அவர்கள் எல்லாம்.. அகதி.. பிரஜா உரிமை பெற்று வாழ அனுமதிக்கப்படும் போது... ஒரு மனிதன்.. செய்த குற்றத்தை உணர்ந்து திருந்துகிறேன்.. திருந்தி நடக்கிறேன் என்று நிரூபித்த பின்னும் அவனுக்கு/அவளுக்கு மரண தண்டனை என்பது மோசமானது.

 

மயூரன் போதைவஸ்து கடத்துவார் என்று இன்னும் நம்பினால்.. அவரை ஆயுள் சிறையில் வைக்கலாம். அல்லது கண்காணிப்புச் சிறையில் வைக்கலாம். மயூரனை கொல்வதன் மூலம் உலகில் போதைவஸ்துப் பாவனையில் எத்தனை சதவீதத்தை குறைக்கப் போகிறார்கள். இவர் இல்லாட்டி இன்னும் 100 பேர் கடத்துவான். அது பலருக்கு குறுகிய காலத்தில் பணம் பார்க்கும் மார்க்கமாக உள்ள வரை தொடரவே செய்யும். போதைவஸ்துப் பாவனையை நிறுத்த செய்வதன் மூலம் விற்பனைக்கான மார்க்கங்களை தடுப்பதன் மூலம் போதைவஸ்துக் கடத்தல் வியாபாரத்தை கட்டுப்படுத்தலாம். எத்தனை அரசுகள் இதில் இதய சுத்தியோடு செயற்படுகின்றன. பல அரசுகள்.. இதை நேரடியாக எதிர்த்துக் கொண்டு மறைமுகமாக வளர்க்கின்றன. காரணம் பல பில்லியன் டாலர்கள் அங்கே பிழங்குவதுதான். இதனை யாரும் மறுதலிக்க முடியுமா..??!

 

அந்த நிலையை போக்காமல்.. ஓரிருவரை மட்டும் தண்டிப்பதன் மூலம்.. அதுவும் திருந்தி நடக்கிறோம் என்று நடந்து காட்டும் கைதிகள் மீதான... மரண தண்டனைகள் மூலம் இந்த உலகம் எதனை சாதிக்க நினைக்கிறது..??!

 

நாங்கள் அப்பாவிகள் என்று கருதும்... பேரறிவாளனை.. ஹிந்திக்காரங்கள் கொலையாளிகள் என்று கருதுகிறார்கள். அங்கும் எம்மவர்கள் ஹிந்தியர்கள் வழங்கும்... மரண தண்டனையை ஏற்றுக் கொள்வார்களா..??!

 

எய்தவன் இருக்க அம்புகளை முறிச்சுப் போடுவதன் மூலம்.. கிடைக்கும் நன்மை என்ன..?! :icon_idea::rolleyes:

Edited by nedukkalapoovan

  • Replies 51
  • Views 4.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
சட்டங்கள் மனிதனை சீர்திருத்த பயன்பட வேண்டும் 
மனிதனை கொல்வதற்கு அல்ல.
 
நாம் நேரிடையாகவோ மறைமுகமாகவோ ...
ஏகாபத்தியத்திட்கு துணை நின்று தினமும் ஆயிர கணக்கானவர்களை 
ஆப்ரிக்கா போன்ற மூன்றாம்தர நாடுகளில் கொலை செய்ய துணை நிற்கிறோம்.
 
இந்த கொலை குற்ற உணர்வால் எந்த யோக்கியனும் தற்கொலை செய்ததில்லை.
குறைந்த பட்சம் இனி துணை போக மாட்டேன் என்று கூறி ஏகாபத்தியத்தில் இருந்து விலகுவதும் இல்லை.
தமக்கு கிடைக்கும் சுகபோகங்களை பற்றிக்கொண்டு 
அடுத்தவனுக்கு நீதி பேசி அதே ஏகபத்திய சிந்தனை ஆசியுடன் 
தம்மை யோக்கியர்களாக சித்தரித்து காட்டுகிறார்கள்.
 
சில ஆண்கள் இழைக்கும் கொடுமைகளால் பெண்கள் இறந்துபோனால் 
எல்லா ஆண்களுக்கும் மரணதண்டனை எனும் பாணியில்தான் மேலே சில கருத்துக்கள் இருக்கின்றன. 
 
போதைவஸ்தை கடத்தல் காரர்கள் வில்லங்கமாக யாருக்காவது ஏற்றுகிரார்களா ?
இன்னொருவரின் பலவீனத்தை இவர்கள் சாதகம் ஆக்குகிறார்கள்.
ஏகாபத்தியம் இதற்கு விதிவிலக்கா ???  
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் நாடற்ற தமிழனுக்கு...?

அதைவிட தமிழன் என்று பாராதீர்கள்

குற்றவாளி என்று பாருங்கள் என தமிழரிடம் ஒரு பிரிவு.... :(  :(  :(

 

விசுகு ... அவுஸ்ரெலிய பிரஜை என்ற வகையில் அந்த இருவருக்கும் ,அவுஸ்ரேலியா அரசும், சில மனித உரிமை அமைப்புக்களும் தங்களால் முயன்றளவுக்கு முயற்சி செய்தார்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு ... அவுஸ்ரெலிய பிரஜை என்ற வகையில் அந்த இருவருக்கும் ,அவுஸ்ரேலியா அரசும், சில மனித உரிமை அமைப்புக்களும் தங்களால் முயன்றளவுக்கு முயற்சி செய்தார்கள்.....

 

 

பிரச்சினையே அங்க தான் ஆரம்பிக்குது...

அவுசின் பிரசை என்பதால் தான் இசுலாமிய இந்தோனிசியா இவரைப்பலி இடுகிறது...

இவர்களில் போட்டாபோட்டிக்குள் 

சந்திரனுக்குப்போன நாயின் நிலைதான் இவரின் நிலை...

 

மற்றும்படி 

யாழில் தற்பொழுது எழுதப்படும் கருத்துக்களும் அதே வகைகளே..

ஒரு கருத்தாளரை ஓரம்கட்ட

அல்லது கடுப்பேத்த எழுதவேண்டும் என்று எழுதப்படும் கருத்துக்களேயன்றி

உணர்ந்து

நிலமைகளை ஆராய்ந்து எழுதப்படுபவை அல்ல...

 

ரகு இங்கு எழுதியுள்ளபடி

பழிதீர்க்க அவரைச்சுட்டுவிட்டு  வீசியிருந்தாலும்

நான் அஞ்சலி செலுத்தினால் 

உங்கட தம்பிக்கு  சரியான தண்டனை என எழுதிக்கொண்டிருப்பார்கள்...

 

என்னைப்பொறுத்தவரை

இந்தோனிசிய சட்டங்களும் நீதியும்

சிறீலங்கா சட்டத்துக்கு எந்தவிதத்திலும் குறைந்தவையல்ல..

இவர் சுற்றவாளி என்று எங்கும் எழுதவில்லை

விடுதலை செய்யப்படணும் என்றும் எங்கும் எழுதவில்லை

ஆகக்குறைந்தது

அவர்களது நாடுகளிடம் சட்டப்படி ஒப்படைக்கணும் 

அந்த நாட்டுச்சட்டங்களின்படி தண்டிக்கப்படணும் என்பதே எனது வேண்டுகோள்.

நன்றி.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

மரணதண்டனை உலகில் இருந்து ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று.ஒரு நிரபராதிக்கு மரணதண்டணை விதித்து விட்டால் அவர் நிரபராதி என்று காலந்தாழ்த்தி தெரிந்தால் அவருக்கான நீதியை வழங்க முடியாது. மயூரனின் விடயத்தில் ஆயுள் தண்டனை வழங்குதே சிறந்தது.( அவர் குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டாலும்)

  • கருத்துக்கள உறவுகள்

தீர்ப்பை எழுதினமா தூக்கில போட்டமா எண்டு இருக்கவேணும்.தூக்கிலபோடப்போறம் எண்டு சொல்லி காலத்தை இழுத்து பயம் காட்டிக்கொண்டு இருப்பதுதான் கொடுமை.

  • கருத்துக்கள உறவுகள்

மரண தண்டனை ஒரு மகா காடுமிராண்டித்தனம். அதை விட காட்டுமிராண்டித்தனம் ஒன்று இருக்குமானால் அது நம் "தம்பி" ( பாசத்தில நெஞ்ச நக்கீடாங்க) செய்யும் போதை பொருள் வியாபாரம்.

வாழ்நாள் பூரா இப்படி கொல்லுவோம்/மாட்டோம் என்று அந்தரிக்க வைக்கும் தண்டனையே நம் அன்புத்தம்பிக்கு பொருத்தமானது. ஆனால் கொல்லக்கூடாது.

தம்பி கடத்திய போதைக்கு அடிமையாகி எத்தனை அப்பாவிகள் சொந்த வாழ்கையை ஆயுள் தண்டனை ஆக்கி இருப்பார்கள்.

தம்பி அதில் 10 வீதமாவது அநுபவிக்க வேண்டாமா?

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சில வகைகள் உள்ளன.

1) தெரிந்து செய்தாரா?

2) தெரியாமல் செய்தாரா?

3) தெரியாமல் செய்து பிறகு தெரிந்து செய்ததாக சொன்னால் ஓரளவு கருணை கிடைக்கும் என்று ஆலோசனை வழங்கப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொண்டாரா? (அமெரிக்காவில் சில வழக்குகளில் நடந்துள்ளது.)

நடந்தது 1) ஆக இருந்தால் அதிகம் செய்ய முடியாது. சரியோ, பிழையோ உள்நாட்டுச் சட்டங்கள்தான் செல்லுபடியாகும். மற்ற இரண்டில் ஒன்றாக இருந்தால் எதிர்த்து குரல் எழுப்புவது இன்றியமையாதது.

சிங்கப்பூரிலும் மிக இறுக்கமான சட்டங்கள் உண்டு. ஆனால் நான் முதன்முதலில் சிங்கை சென்றபோது இந்தச் சட்டங்கள் எதையும் அறிந்திருக்கவில்லை. அதிக எடை கொண்டு வருகிறவர்கள் சிறிய பொதிகளுடன் போகிறவர்களிடம் தங்கள் பொதியையும் சேர்த்துப் போடுமாறு கேட்பது வழமையாக இருந்தது. அதில் ஏதாவது போதைப்பொருள் வாடை இருந்தாலே அப்பாவி ஒருவர் மாட்டுப்பட வேண்டியதுதான். குற்றத்தைத் தண்டிக்கலாம். ஆனால் அறியாமைக்கு சிறிது கருணை காட்ட வேண்டும்.

இவர் எந்த வகை என்பது சரியாகத் தெரியவில்லை.

Edited by இசைக்கலைஞன்

எது எப்படியோ, மரணதண்டனை என்பது இல்லாது செய்யவேண்டும். அதற்கு பதிலாக வேறு தண்டனை குடுக்கலாம். மேலும் போதை பொருள் கடத்தல் மற்றும் பாவனை முற்று முழுதாக தடுக்கப்பட வேண்டும். ஆனால் சாத்தியம் இல்லை.
யாழ்பாணத்திலும் இப்ப போதைபொருள் பாவனை கூட எண்டு கேள்வி :(  :(
  • கருத்துக்கள உறவுகள்

எந்த நாட்டுக்குப் போனாலும் நாம் அந்த நாட்டின் சட்டத்துக்கு உட்பட்டவர்கள். இந்தோநேசியா தவிர் ஏனைய நாடுகளில் போதை வஸ்து கடத்துவபனை யாரும் அள்ளி எடுத்து கொஞ்சுவதில்லை. எனவே தெரியாமல் செய்தார் என்பது நகைப்புக்கிடமானது.

மாட்டமாட்டோம் என்று நம்பித்தான் எல்லா கள்ளரும் களவு எடுப்பது.

பொய்யாய் அசைலம் அடித்தல், கள்ள மட்டை, கடை வைத்திருந்தால் அதில் டாக்ஸ் சுத்தல், கீழ்கூலிக்கு விசா இல்லாதவனை உறிஞ்சல், சோசல் காசை கொள்ளை அடித்தல் இப்படி சகல கேடு கெட்ட விடயங்களையும் செய்துகொண்டு - அதை ஒரு வீரப்பிரதாபம் போல பேசும் ஒரு அபத்தம் புலம்பெயர் சமூகத்தில் உண்டு.

ஆகவே போதை வஸ்து கடத்துவது "தம்பி அறியாவயதில் தெரியாம செய்த்தது" என்று எங்களால் விளக்கம் கொடுக்க முடிகிறது.

இப்படி குற்றங்களை ஏற்கும் அல்லது புகழாய் பார்க்கும் கோணல் புத்தியே மயூரன் தப்ப வேண்டும் என்பதற்கான உங்கள் கூச்சலின் அடிநாதம்.

இதில் வெள்ளையாய் இருப்பவன் பொய்சொல்ல மாட்டான் என்பது போல தமிழன் என்றபடியால் கண்ணை மூடிக்கொண்டு சப்ப்போர்ட்!

  • கருத்துக்கள உறவுகள்

சரி நாட்டாமையல்,ஆளைப்போடுவமா விடுவமா:)

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நாட்டுக்குப் போனாலும் நாம் அந்த நாட்டின் சட்டத்துக்கு உட்பட்டவர்கள். இந்தோநேசியா தவிர் ஏனைய நாடுகளில் போதை வஸ்து கடத்துவபனை யாரும் அள்ளி எடுத்து கொஞ்சுவதில்லை. எனவே தெரியாமல் செய்தார் என்பது நகைப்புக்கிடமானது.

மாட்டமாட்டோம் என்று நம்பித்தான் எல்லா கள்ளரும் களவு எடுப்பது.

பொய்யாய் அசைலம் அடித்தல், கள்ள மட்டை, கடை வைத்திருந்தால் அதில் டாக்ஸ் சுத்தல், கீழ்கூலிக்கு விசா இல்லாதவனை உறிஞ்சல், சோசல் காசை கொள்ளை அடித்தல் இப்படி சகல கேடு கெட்ட விடயங்களையும் செய்துகொண்டு - அதை ஒரு வீரப்பிரதாபம் போல பேசும் ஒரு அபத்தம் புலம்பெயர் சமூகத்தில் உண்டு.

ஆகவே போதை வஸ்து கடத்துவது "தம்பி அறியாவயதில் தெரியாம செய்த்தது" என்று எங்களால் விளக்கம் கொடுக்க முடிகிறது.

இப்படி குற்றங்களை ஏற்கும் அல்லது புகழாய் பார்க்கும் கோணல் புத்தியே மயூரன் தப்ப வேண்டும் என்பதற்கான உங்கள் கூச்சலின் அடிநாதம்.

இதில் வெள்ளையாய் இருப்பவன் பொய்சொல்ல மாட்டான் என்பது போல தமிழன் என்றபடியால் கண்ணை மூடிக்கொண்டு சப்ப்போர்ட்!

கோசான்.. நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன்.

நான் முன்னரே சொன்னதுபோல, இந்தோனேசியாவுக்கு போதை கடத்தினால் மரணதண்டனை என்று தெரிந்தும் கட்த்தியிருந்தார் என்றால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அதை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்திருக்க வேண்டும். (இந்தோநேசிய நீதித்துறையில் மேலை நாட்டவரக்கு நம்பிக்கை இல்லை.. ஊழலில் அவர்களுக்கு எந்த இடம் என்பவை எல்லாம் சிந்திக்கப்பட வேண்டியவை.)

ஆனானப்பட்ட அமெரிக்காவில் நடந்த கொலைவழக்கு ஒன்று இதைப் புரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்.

ஒரு பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில் இருவர் தண்டனை பெறுகிறார்கள். (சாகும்வரை சிறையில் என்பது போன்றது (40+ வருடங்கள்). பிணையில் வெளிவர முடியாதது.

குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு ஒரு காரணம், குற்றம் நடந்த இடத்திற்கு அருகே இவர்கள் இருவரும் இருந்துள்ளார்கள். ஒருவர் குற்றத்தை ஏற்கவில்லை. மற்றவர் ஏற்றுக்கொண்டார்.

பல வருடங்கள் சிறையில் இருந்துள்ளார்கள். இதனிடையே குற்றத்தை மறுத்தவரை சிறைக்கைதிகள் தாக்கி அவருக்கு மூளையும் பிசகிவிட்டது.

பல வருடங்களுக்குப் பிறகு, உண்மைக் கொலையாளி மாட்டிக்கொண்டார். இவர்கள் இருவரும் விடுதலையானார்கள்.

அப்போது ஒரு கேள்வி எழுந்தது. ஏன் செய்யாத குற்றத்தை இந்த ஆள் ஒத்துக்கொண்டார் என்பது. விசாரணை நேரத்தில் கொடுக்கப்பட்ட மன ரீதியிலான துன்புறுத்தலை தாங்க முடியாமல் இவர் ஒத்துக்கொண்டு விட்டார். அதன் பிறகு மீட்சி என்பது கிடைக்கவில்லை.

இந்த மயூரன் விடயத்தில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது என்பதை முன்பே கூறிவிட்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மயூரனுக்கு வழங்க பட்டுள்ள தண்டனை மிகவும் அதிகபட்ச தண்டனை என்பதில் சந்தேகமல்ல. தங்களுடைய  நாட்டு பிரஜைகள் என்பதற்காக ஆஸி நடத்தும் போராட்டம் பாராட்டுக்குரியது. இந்த இந்தோனேசியா நாட்டில் நாள் தோறும் லட்ச கணக்கான ஆடுகளும், மாடுகளும் மற்று பிற உயிரினங்கள் உணவுக்காக கொல்ல பட்டு கொண்டு தான் இருக்கிறது. அந்த உணவுக்கொலைகள் அவர்கள் மதத்தில் ஏற்று கொள்ள பட்டுள்ள நற்செயல். ஆனால் தவறை உணர்ந்து விட்டேன் என்று சொல்லும் 10 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்த மயூரனுக்கு மட்டும் கரிசனம் காட்ட மாட்டோம் என்று சொல்லும் பொது இந்த நாடு நிச்சயம் வெட்க பட வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

கோசான்.. நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன்.

நான் முன்னரே சொன்னதுபோல, இந்தோனேசியாவுக்கு போதை கடத்தினால் மரணதண்டனை என்று தெரிந்தும் கட்த்தியிருந்தார் என்றால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அதை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்திருக்க வேண்டும். (இந்தோநேசிய நீதித்துறையில் மேலை நாட்டவரக்கு நம்பிக்கை இல்லை.. ஊழலில் அவர்களுக்கு எந்த இடம் என்பவை எல்லாம் சிந்திக்கப்பட வேண்டியவை.)

ஆனானப்பட்ட அமெரிக்காவில் நடந்த கொலைவழக்கு ஒன்று இதைப் புரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்.

ஒரு பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில் இருவர் தண்டனை பெறுகிறார்கள். (சாகும்வரை சிறையில் என்பது போன்றது (40+ வருடங்கள்). பிணையில் வெளிவர முடியாதது.

குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு ஒரு காரணம், குற்றம் நடந்த இடத்திற்கு அருகே இவர்கள் இருவரும் இருந்துள்ளார்கள். ஒருவர் குற்றத்தை ஏற்கவில்லை. மற்றவர் ஏற்றுக்கொண்டார்.

பல வருடங்கள் சிறையில் இருந்துள்ளார்கள். இதனிடையே குற்றத்தை மறுத்தவரை சிறைக்கைதிகள் தாக்கி அவருக்கு மூளையும் பிசகிவிட்டது.

பல வருடங்களுக்குப் பிறகு, உண்மைக் கொலையாளி மாட்டிக்கொண்டார். இவர்கள் இருவரும் விடுதலையானார்கள்.

அப்போது ஒரு கேள்வி எழுந்தது. ஏன் செய்யாத குற்றத்தை இந்த ஆள் ஒத்துக்கொண்டார் என்பது. விசாரணை நேரத்தில் கொடுக்கப்பட்ட மன ரீதியிலான துன்புறுத்தலை தாங்க முடியாமல் இவர் ஒத்துக்கொண்டு விட்டார். அதன் பிறகு மீட்சி என்பது கிடைக்கவில்லை.

இந்த மயூரன் விடயத்தில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது என்பதை முன்பே கூறிவிட்டேன்.

அவர் விடயத்தில் என்ன நடந்தது என்பது எங்களுக்கு தேவையில்லாத விடயம்.
 
போதைபொருளால் எவளவு குடும்பம் சீரழிகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
சென்ற வாரம் கூட ஒரு போர்ன் நடிகை அளவுக்கு மீறி பாவித்து இறந்ததாக செய்தி வந்திருக்கு.
அந்த அப்பாவி நடிகையின் உயிரை மயூரன் மீட்டு தருவாரா ??
 
இந்த காட்டுமிராண்டிகளுக்கு தூக்கு தண்டனைதான் சரியான தீர்ப்பு.
 
 
வைட்டமின் எ சி மற்றும் ஈ சத்து குறைவானவர்கள் இதில் ஓவரு கிளாஸ் நாளும் அடிக்கவும்.
Ballance-Whiskey-Serving-Set.jpg
 
உங்கள் குடும்பமும் சீரும் சிறப்பும் பெற வேண்டும் என்றால் 
மேலே இருப்பதுடன் இதிலும் ஒரு பக்கெட் நாளும் அடிக்கவும். 
CIGARETTE_2696249b.jpg
  • கருத்துக்கள உறவுகள்

Miscarriage of justice என்பது எல்லா நாட்டிலும் நடப்பதுதான். பேர்மிங்காம் 6 தொடங்கி பலர் இப்படி அநியாயமாக தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள். மேற்குலகிலும், இப்போதும்.

எனவேதான் நான் மரண தண்டனையை கொள்கை அளவில் எதிர்ப்பது. ஆனால் தண்டனை கிடைத்து விட்டது என்பதற்காக - மனதில் தோன்றியபடி வழக்கு தப்பாக நடந்தது, ஊழல் நடந்திருக்கலாம் என்று சொல்ல முடியும் என்றால். மேற்குலகை தவிர உலகில் வேறு எந்த நீதிமன்றும் யாரையும் தண்டிக்க முடியாது என்றாகி விடும்.

அவுஸ் 10 வருடம் முயற்சித்தும் உடைக்க முடியாதளவுக்கு வழக்கு பலமாக இருக்கு.

நானறிந்த வரையில் இவர் குற்றமிழைக்கவில்லை என்று யாரும் நம்புவதாக தெரியவில்லை.

போதை வஸ்து பற்றி ஒரு அநுபவ உண்மை. நமது ஊர்பையன் ஒருவன் ஒரு வெள்ளைக்கார பெண்ணுடன் அடிக்கடி சுத்தித்திரிவான். அப்போ அவனுக்கு 32 வயதிருக்கும். பெட்டை 21 தாண்டாது. ஒரு சமயம் மதுப் போதை ஏறிய சமயத்தில் - வேணுமெண்டா நீங்களும் அவளிடம் ஒரு ரவுண்ட் போகலாம் என்ற வகையில் பேசினான். பிறகு மறுநாள் கேட்ட போது அவள் நான் என்ன சொன்னாலும் செய்வாள் என்று பீத்திக் கொண்டான். அப்படியே விட்டு விட்டேன். பின் அவளை வைத்து வீசாவும் எடுத்தான்.

இத்தனைக்கும் அவள் அவனில் தங்கி இருந்த ஒரே காரணம் - அவன் தூள் வாங்கப் பணம் கொடுக்கிறான் என்பதுதான். அதற்க்காக தன் ஆன்மாவை அடகுவைத்து ஒரு நவயுக அடிமை போலிருந்தால் அந்தப் பெண்.

இங்கே வந்து சோசலிசம் கதைப்போருக்கும், மனித நேயம் கதைப்போருக்கும் போதை வஸ்து ஒரு மனிதனின் உடலையும் ஆன்மாவையும் உள்ளிருந்து கொல்லுவதும் அதற்க்கு இந்த supply chain இல் உள்ள ஒவ்வொரு கேடு கெட்ட ஜென்மமும் காரணம் என்பது ஏனோ புரியவில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
மற்ற சப்ளை சையின் எல்லாம் மக்களுக்கு சக்தி கொடுக்கிறது .....
போதைவஸ்துதான் கொல்கிறது ??
 
ஏகாபத்தியத்திட்கு பங்கு பிரித்து வரி எனும் பெயரில் கொடுத்தால் 
எல்லாம் நல்ல விடயம் 
பாவிப்பவர்கள் தான் அடிமையாகாது பார்த்துக்கொள்ள வேண்டும்.
 
ஏகாபத்தியத்திட்கு பங்கு வராத விடயங்கள மரண தண்டனை குற்றங்கள் ??

  • கருத்துக்கள உறவுகள்

மருது,

விதண்டாவாதம் வேண்டாம்.

சிகரெட் தண்ணியை விட அடிமையாக்கும் தன்மை 1000 மடங்கு உள்ளவை இந்த கிலாஸ் ஏ வஸ்துகள். இதற்கு அடிமையானவர்களை வைத்து எந்த இழி வேலையையும் செய்ய முடியும்.

ஒரு மனிதன் இன்னொருவனின் உடலை, உழைப்பை ஆன்ம சுதந்திரத்தை (spiritual freedom) ஒவ்வொரு தனிப்பட்ட ரீதியிலும் மனிதன் மனிதனாக சுரண்டும் ஒரு கொடிய அடிமைக்கருவி இது.

இதை போய் வேறு எந்த சமூக கேடுடனும் ஒப்பிட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
மரணத்தை முத்தமிட சிலமணி நேரங்களே உள்ள நிலையில் இந்தோனேசிய சிறைக்குள் தோழியை மணந்தார் ஆண்ட்ரூசான்:
27 ஏப்ரல் 2015
 

இந்தோனேசிய சிறைக்குள் மரண தண்டனை நிறைவேற்றஇன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில்ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கைதிகளில் ஒருவரான ஆண்ட்ரூசான் தனது இறுதி ஆசைப்படி நீண்டநாள் தோழியானஇந்தோனேசிய இளம்பெண்ணை இன்று திருமணம் செய்துகொண்டார்.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அனைவரும்நுசாகம்பங்கன் தீவில் உள்ள பாதுகாப்பு மிக்க சிறையில்வைக்கப்பட்டுள்ளனர்.  மிகவும் நெருங்கிய குடும்ப உறவினர்கள்முன்னிலையில் சிறை அலுவலகத்தில் நடைபெற்ற இந்ததிருமணத்துக்கு சாட்சியாக இருந்து ஆசீர்வாதம் செய்தஆண்ட்ரூ சானின் சகோதரர், 'இது மிகவும் இக்கட்டான நேரம்.இடையில் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வும் நடந்தேறியுள்ளது. இந்தோனேசிய அதிபர் எப்படியாவது மனமிறங்கி என் சகோதரைமன்னித்து விடுதலை செய்வார். அவரை புது மனைவியுடன்வாழ அனுமதிப்பார் என்று நான் இன்னும்கூட நம்புகிறேன்’என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும்மற்றொரு கைதியான மயூரன் சுகுமாறன் தனது இறுதிநிமிடங்களை ஓவியம் வரைவதில் செலவிட்டு வருகிறார்.நேற்று இவரது பெற்றோர் சிறையில் மயூரனை சந்தித்துபேசினர். 

இவர்களின் மரண தண்டனையை எப்படியாவது நிறுத்தி விடவேண்டும் என்று ஆஸ்திரேலியா நினைக்கிறது. அதற்கேற்பமரண தண்டனையை நிறுத்திவிட்டு ஆஸ்திரேலியாவுடன்இணைந்து உரிய தீர்வு காண வேண்டும் என்றுஇந்தோனேசியாவிடம் பிரான்சு வலியுறுத்தியுள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119139/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

மருது,

விதண்டாவாதம் வேண்டாம்.

சிகரெட் தண்ணியை விட அடிமையாக்கும் தன்மை 1000 மடங்கு உள்ளவை இந்த கிலாஸ் ஏ வஸ்துகள். இதற்கு அடிமையானவர்களை வைத்து எந்த இழி வேலையையும் செய்ய முடியும்.

ஒரு மனிதன் இன்னொருவனின் உடலை, உழைப்பை ஆன்ம சுதந்திரத்தை (spiritual freedom) ஒவ்வொரு தனிப்பட்ட ரீதியிலும் மனிதன் மனிதனாக சுரண்டும் ஒரு கொடிய அடிமைக்கருவி இது.

இதை போய் வேறு எந்த சமூக கேடுடனும் ஒப்பிட முடியாது.

உங்கள் கருத்து சரியானதுதான் ......
 
அதற்காக அதற்குள் போய் வீழ்பவர்கள் குற்றவாளிகள் இல்லையா ?
எல்லாம் தெரிந்துதானே செய்கிறார்கள் .....
 
போதைவஸ்து பாவனையையோ 
கடத்தலையோ நான் நிஜாய படுத்தவில்லை 
 
சில கருத்துக்களுடன் உடன்பட முடியவில்லை. 

Bali Nine executions: Families of Andrew Chan, Myuran Sukumaran say last goodbyes

 

MOMENTS after they said their final goodbyes, the Chan and Sukumaran families were inconsolable as they spoke of their “torture”.

Speaking at Cilicap port after they left their loved ones on Nuskambangan island, Myuran Sukumaran’s mother, brother and sister were a portrait of grief.

“I just had to say goodbye to my son and I won’t see him again,” Sukumaran’s mother, Raji, said through tears.

“They are going to take him at midnight and shoot him

“He is healthy and he is beautiful ... I’m asking the government please don’t kill him today. Please don’t hold the execution. Please don’t kill my son.”

 

Myuran’s brother said they had spent the day talking.

“We didn’t have much time, there were so many things to talk about,” Myruan’s brother Chinthu said of their final five hours together.

“We did talk about the death penalty and he knows this is just a waste. It’s not going to solve anything with drugs.

“Tomorrow, next week, next month, it’s still not going to stop anything.

“Please don’t let my mum and my sister and my brother have to bury my brother.

 

His sister Brintha had to be supported as she sobbed: “Please don’t take my brother from me, please, please.”

The families repeated their plea to the Indonesian President to spare their lives.

“We still have hope right up to the last second that the president will ... show mercy,” said Chintu.

Andrew Chan’s brother Michael said it was still not too late for mercy.

“To walk out of there and say goodbye for the last time, it’s torture and no family should have to go through that,” he said.

 

“There has to be a moratorium on the death penalty because now the family is going to have a grieve for the rest of their lives.

“I just hope the President, that somewhere in his heart he can find some courage to show some mercy to these nine individuals and call this off.

“It’s not too late. It’s up to him.”

The pair spent their final day trying to calm their fellow condemned, according to

Chan and Sukumaran spent their final day trying to help support the seven others who were to die with them.

 

In the past two days they have arranged for guards to allow them to conduct several joint prayer sessions in a cell where all nine prisoners prayed together and they have arranged for meals as well.

Some have no family members here in Indonesia and since they were all placed in one block of isolation cells Myuran and Andrew have tried to help the others, asking their families each day to bring in enough food for all the nine prisoners.

Sukumaran’s brother Chinthu said that as they walked to the gates to leave for the last time both the men were brave to the end.

 

533479-8503ed56-ed91-11e4-a93e-1e8761188

Staggering ... all nine doomed prisoners signed Myuran Sukumaran's last artwork, a heart dripping blood. Source:Supplied

 

And they promised they will be there for the others.

Chinthu said that the final meal for all nine was planned to be KFC.

The previous night they had ordered pizza and the night before it was again fried chicken.

Chinthu said that in the past few days his brother has been painting furiously and operating on little sleep. On Monday night Myuran painted until midnight, then woke at 3am yesterday morning to finish his final works - an Indonesian flag dripping blood, a heart signed by all the condemned.,

All nine who will die dipped their fingerprints into the red of the blood depicted.

One of the self-portraits was called The Last Chapter and the other was Purgatory.

Despite only being at Nusakambangan since March 4 the two Australians were already on good terms with the guards, the same as they had been in Kerobokan jail in Bali where they spent the bulk of their ten-year sentence.

“They were running the show,” he said.

 


 
530399-6b72d1f4-ed91-11e4-a93e-1e8761188

Agony ... Raji Sukumaran, the Bali Nine ringleader’s mother, is comforted by her daughter. Picture: Adam Taylor Source:News Corp Australia

 


530347-634f2176-ed91-11e4-a93e-1e8761188

Devastation ... Chinthu Sukumaran and Brintha after seeing their brother Myuran Sukumaran for the last time. Picture: Adam Taylor Source: News Corp Australia

 

 

http://www.news.com.au/world/asia/bali-nine-executions-families-of-andrew-chan-myuran-sukumaran-say-last-goodbyes/story-fnh81fz8-1227325532925


http://en.wikipedia.org/wiki/Myuran_Sukumaran

Edited by Sooravali

 

 

desktop.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

மயூரன் 10 வருடங்களுக்கு முன்பு பாலித்தீவில் கைது செய்யப்பட்டபோது அது ஒரு சாதரண செய்தியாக எனக்கு தென்பட்டது. சில வருடங்களுக்கு முன்பு பென்டில்கில் புகையிரத நிலையம் அருகில் ஒரு பெண்மனியைப் பார்த்தேன். எங்கேயோ பார்த்த ஞாபகமாகத் தென்பட்டது. யார் என்று தெரியவில்லை. பிறகுதான் இவரை தொலைக்காட்சியில் பார்த்த ஞாபகம் வந்தது. அவர்தான் மயூரனின் தாயார். பிறகு அடிக்கடி பார்த்திருக்கிறேன். சோகம் படர்ந்த முகத்துடன் நடந்து செல்வார். அவுஸ்திரெலியா ஊடகங்களில்(குறிப்பாக தொலைக்காட்சியில்) அவரை அடிக்கடி காண்பிப்பார்கள். கடந்த சில நாட்களாக எல்லாச் செய்திகளிலும் மயூரனின் தாயார், சகோதரி, சகோதரனின் பேட்டிகள், செய்திகள் காண்பிக்கப்பட்டுவருகின்றது. மயூரன் செய்தது குற்றம்தான். போதைவஸ்து பாவனையினால் பல உயிர்கள் பாதிக்கப்படும். ஆனால் மரணதண்டனை சரியா என்னுள் எழும் கேள்வி?. நாம் எல்லோரும் ஒரு நாள் இறக்கப்போகிறோம். ஆனால் எப்பொழுது இறப்போம் என்பது தெரியாது. ஆனால் தான் இன்றுதான் இறப்பேன். என்னுடைய மகன் இன்று கொள்ளப்படுவான். எனது சகோதரன் இன்று கொல்லப்படுவான் என்று எங்கி அழும் தாயார், சகோதர, சகோதரிகளின் பேட்டிகளைக் கேட்கும் பொழுது என்னை அறியாமல் ஒரு வேதனை ஏற்படுகின்றது. இரண்டு மூன்று நாட்களாக இதே சிந்தனைதான். ஒருவேளை தமிழர் என்பதினால்தானா? அல்லது அவுஸ்திரெலியா ஊடகங்களை அடிக்கடி பார்ப்பதினாலா?. மயூரன் செய்த குற்றத்திற்காக ஏன் பெற்றோர்கள், சகோதரர்கள் தண்டனை பெறவேண்டும். மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கந்தப்பு எனக்கும் இரண்டு நாட்களாக மயூரன் பற்றிய சிந்தனை தான். அவர் தமிழர் என்பதால் எனக்கு ஏற்பட்ட  கரிசனை என்று நினைக்கிறேன். மேலும் இந்தோனேசியா நாடு நடத்தும் இந்த கேவலமான மரண நாடகமும் கூட இருக்கலாம். இந்தியாவில் போதை பொருள் பழக்கம் மிக பெரிய அளவில் உள்ளது. ஆனால் இங்கே மயூரனை போன்று ஒருவருக்கு  கூட மரண தண்டனை விதிக்க படவில்லை. அதனால் கூட இது மரண தண்டனை கொடுக்க வேண்டிய குற்றமா என்று கூட தோன்றுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

Mayuran Sukumaran and Andrew Chan were executed by Indonesian death squad 12:25 am (Indonesian time) !!!

  • கருத்துக்கள உறவுகள்

Mayuran Sukumaran and Andrew Chan were executed by Indonesian death squad 12:25 am (Indonesian time) !!!

 

 

ஒரு மனிதனை

பல நாட்களுக்கு முன்பே அவனுக்கு அறிவித்து விட்டு

எல்லோருக்கும் சொல்லிவிட்டு பலியிடுதல் நிறுத்தப்படணும்

பல கோடி மக்கள் இன்று இதற்காக வேதனைப்படுவர்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.