Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மல்லாகத்தில் வாள் வெட்டு: பாடசாலை மாணவன் படுகாயம்

Featured Replies

மல்லாகத்தில் இன்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் படுகாயமடைந்தார். இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர் குழு மாணவனின் வீட்டுக்குள் நுழைந்தே அவரை வெட்டிக் காயப்படுத்தியது. இந்த சம்பவத்தில் மல்லாகம் மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் க.பிரசன்னா (வயது 19) என்பவரே தலையில் பலத்த காயமடைந்தார்.
 
இதேவேளை மல்லாகம், சுன்னாகம் பகுதியில் தொடர்ச்சியாக தினமும் இளைஞர் குழுக்கள் மோதல்களில் ஈடுபடுகின்றன. இதனால் இப்பகுதியில் அச்ச நிலை காணப்படுகின்றது.தவிர மோதல்களைக் கட்டுப்படுத்துவதில் சுன்னாகம் பொலிஸார் போதுமனாளவு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் இதனாலேயே இவ்வாறான மோதல்கள் அதிகரிக்கின்றன என்றும் மக்கள் தெரிவித்தனர்
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பூ... மரத்தைக் கூட, வெட்டும் போது.. இருதரம் நான் யோசிப்பேன்.
எப்படித்தான்..... ஒரு மனிதரை, வாளால் வெட்ட மனம் வருகுதோ. :o

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு முதலமைச்சர்... வடபிராந்திய சிங்கள பொலிஸ்மா அதிபர்.. சிறீலங்கா ஜனாதிபதி.. பிரதமர் இவர்கள் இருந்து சட்டத்தை நிலை நாட்ட முடியல்ல என்றால்.. வடக்குக் கிழக்கு நிர்வாகத்தை முன்னாள் விடுதலைப்புலிகளிடம் கையளித்து விட்டு சற்று தள்ளி நின்று வேடிக்கை மட்டும் பாருங்கள். 24 மணி நேரத்தில் சட்டம் சரியா அமுலுக்கு வரும். :rolleyes::icon_idea:

  • தொடங்கியவர்

வசமாக மாட்டியது வாள்வெட்டு மாத்தையா குழு

 

கட்டுவன் பகுதியில் வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒரு குழு நேற்றிரவு 8 மணியளவில் வீடு தேடிச் சென்று இளைஞர் ஒருவை வாளால் வெட்டியதில் அவர் படுகாயமடைந்தார்.

இந்த வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்தில் சம்பவத்துடள் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் மாத்தையா குழுவென கூறப்படும் குழுவொன்னைச் சேர்ந்த இளைஞர்கள் மூவர் தெல்லிப்பழை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
 
வாள் வெட்டில் காயமமடைந்த எஸ்.நிதர்சன் என்ற இளைஞர் உடனடியாக மீட்கப்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதேவேளை சம்பவத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை எனத் தெரிவித்த பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும், மாத்தையா குழுவென அறியப்பட்ட இந்தக் குழு இதற்கு முன்னரும் பல அட்டகாசங்களைப் புரிந்தவர்கள் எனவும் தெரிவித்தனர்.
 
  • கருத்துக்கள உறவுகள்

விழுப்புண் பட்டது க.பிரன்சன்னாவா எஸ்.நிதர்சனா யாரெண்டு சரியா சொல்லுங்கப்பா !!!

  • கருத்துக்கள உறவுகள்

வெட்டவேண்டியவைகளை வளரவிட்டுவிட்டு

தன்னைத்தானே வெட்டும் வீரம் எனது இனத்துக்கு மட்டுமே உண்டு....

 

பிரன்சில் இவ்வாறு எம்மவர்களுடன் வெட்டுப்பட்டுவிட்டு

சிறை சென்றவர்களிடம்

சிறையிலுள்ள மற்ற இனத்தவர் கேட்பார்களாம் எதற்காக உள்ளே வந்தாய் என்று.

இவர்களும் வீரமாக 4 பேரை சாய்த்திட்டு வந்தனான் என்பார்களாம்.

யாரை? அவர்கள் என்ன இனம்? என்று கேட்க இவர்களும் என்ர இனம் தான் என்பார்களாம் பெருமையாக. 

உன்ர இனத்தவரையே நீ வெட்டி விட்டு வீரமா? என 

காறித்துப்பி அடித்து துரத்துவார்களாம்

எங்களோட சேரவேண்டாம் என்று....

  • கருத்துக்கள உறவுகள்

வட பகுதியில் வாள் வெட்டு 

 

என இனிவருங்காலங்களில் இந்தத் திரியையே தொடரலாம்.

 

அந்தளவிற்கு  வாளின் வீச்சு வட பகுதியில் கொடிகட்டிப்பறக்கின்றது

  • தொடங்கியவர்

குழு மோதலில் ஈடுபட்ட மூவர் கைது

 

article_1430652956-aa.jpg

 
 
புத்தூர் கிழக்குப் பகுதியில் சனிக்கிழமை (02) இரவு மோதலில் ஈடுபட்ட 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக, அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அனு பாலித ஞாயிற்றுக்கிழமை (03) தெரிவித்தார்.
 
புத்தூர் கிழக்கு அன்னம்மார் கோயில் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில், அதேபகுதியைச் சேர்ந்த இரத்தினம் மெபாகர் (வயது 21) என்ற இளைஞன் தலையில் படுகாயங்களுக்குள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபர்களைக் கைது செய்ததாக பொலிஸ் பொறுப்பதிகாரி கூறினார்.
 

 

வெட்டவேண்டியவைகளை வளரவிட்டுவிட்டு

தன்னைத்தானே வெட்டும் வீரம் எனது இனத்துக்கு மட்டுமே உண்டு....

பிரன்சில் இவ்வாறு எம்மவர்களுடன் வெட்டுப்பட்டுவிட்டு

சிறை சென்றவர்களிடம்

சிறையிலுள்ள மற்ற இனத்தவர் கேட்பார்களாம் எதற்காக உள்ளே வந்தாய் என்று.

இவர்களும் வீரமாக 4 பேரை சாய்த்திட்டு வந்தனான் என்பார்களாம்.

யாரை? அவர்கள் என்ன இனம்? என்று கேட்க இவர்களும் என்ர இனம் தான் என்பார்களாம் பெருமையாக.

உன்ர இனத்தவரையே நீ வெட்டி விட்டு வீரமா? என

காறித்துப்பி அடித்து துரத்துவார்களாம்

எங்களோட சேரவேண்டாம் என்று....

நல்லாதா போச்சுது, வெட்டினவங்களை பிடிச்சு பிரான்ஸ் ஜெயிலுக்கு அனுப்பினாத்தான் இசங்களுக்கு புத்திவரும்.

நல்லாதா போச்சுது, வெட்டினவங்களை பிடிச்சு பிரான்ஸ் ஜெயிலுக்கு அனுப்பினாத்தான் இசங்களுக்கு புத்திவரும்.

பிரான்ஸ் சிறையில் அப்படி என்ன விசேடம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரான்ஸ் சிறையில் அப்படி என்ன விசேடம்?

 

காலைச்சாப்பாடு பாணும் சம்பலுமாம்...

  • கருத்துக்கள உறவுகள்
இதற்கு கல்வி துறையில் வீழ்ச்சி காரணமா ?
கல்வியிலும் மாணவர்கள் கொடி  கட்டி பறக்கிறார்கள் ....
இவர்களும் வாழ்வெட்டி சாய்கிறார்கள்.
 
இலக்கில்லாத வாழ்க்கைதான் காரணம் என்று நினைக்கிறன்....
வெளிநாட்டில் இருந்து இறங்கும் பாரிய அளவிலான பணம் 
இளைஞர்களை சோம்பேறி ஆக்குவது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
 
முன்பும் 1980களில் வெட்டினார்கள்தானே ?
அது வேற குருப் (வேறு வர்க்கம்)
இது வேற குருப் (இது வர்க்கம்) 
என்பது எனது எண்ணம். 
 
பொது அறிவு என்பது தமிழர்களுக்கு குறைவாகவே இருக்கிறது.
சுயநலம் சார்ந்து பொது அறிவை வளர்க்க பின்நிட்கிறார்கள் 
இப்படி வீழ்ந்து கிடக்கும் நிலையில் கூட பொது அறிவு சார்ந்து சிந்திக்க தெரியவில்லை என்றால் 
இனி எக்காலத்திலும் சிந்திக்க மாட்டார்கள் என்பது திண்ணம். 
  • தொடங்கியவர்

வாள்வெட்டுக் குழுக்களுக்கு பெயர் சூட்டவேண்டாம்

 

article_1430831617-rft.jpg

 

 
யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்களுடன் கைது செய்யப்படும் குழுக்களுக்கு பெயர்கள் சூட்டவேண்டாம் என்று வலிகாமம் தெற்கு (உடுவில்) பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா பிரகாஸ் தெரிவித்தார்.
 
யாழ். மாவட்ட சிவில் பிரதிநிதிகள் கலந்துரையாடல் யாழ்.மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (05) நடைபெற்ற போது, வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடமே பிரகாஸ் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
 
யாழ். மாவட்டத்தில் தற்போது குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகமான இடம்பெறுகின்றன. ஒருவர் ஒரே குற்றத்துக்காக பலதடவைகள் கைது செய்யப்படுகின்றார்.
இதற்கு வழங்கப்படும் தண்டனைகள் உறுதி செய்யப்படவேண்டும். நீதிமன்றில் இவர்களுக்கு பிணை வழங்குவது தொடர்பில் நீதிபதி பொலிஸாரிடம் கேட்டே பிணை வழங்குகின்றார். பொலிஸார் சரியான அணுகுமுறைகளை மேற்கொள்ளவேண்டும்.
 
வாள்வெட்டு, கஞ்சா போதைப்பொருள் போன்ற சமூக கலாசாரங்கள் கடந்த காலங்களில் எமது சமூகத்தில் காணப்படவில்லை. தற்போது உருவெடுத்துள்ளது. தமிழீழ சட்டத்தில் தண்டனைகள் பெரிதாக இருந்தன. குற்றவாளிகள் வழக்கறிஞர்களை அணுகுவதற்கு இடமிருந்ததில்லை.
 
பொலிஸார் பொதுமக்களுடன் இணைந்து வலுவான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
இதற்குப் பதிலளித்த சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க,
கைது செய்யப்படும் குழுக்களுக்கு பொலிஸார் பெயர் சூட்டவில்லை. அவர்களது சமூகம் தான் பெயர் சூட்டுகின்றது. அதை ஊடகங்கள் பெரிதாக வெளிப்படுத்துகின்றன.
குற்றவாளிகள் நீதிபதியை அணுகுவதற்கு இலங்கை சட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து இடமுள்ளது. மற்றப்படி காட்டுச் சட்டங்களை எல்லாம் நாம் கவனத்தில் எடுக்க முடியாது என்றார்.
 
 
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் சிறையில் அப்படி என்ன விசேடம்?

 

தன்னினத்துக்குள் அடிபடுபவனுக்கு  

கைதிகளால் தண்டனையும் ஒதுக்குதலும் உண்டாம்...

  • கருத்துக்கள உறவுகள்

தன்னினத்துக்குள் அடிபடுபவனுக்கு  

கைதிகளால் தண்டனையும் ஒதுக்குதலும் உண்டாம்...

 

பிராண்ஸ் கைதிகள் ஒழிக.....:D சகல பிராண்ஸ் கைதிகளையும் சிறிலங்காவுக்கு மாற்றும் படி ஐ.நா.சபைக்கு தந்தி அடிக்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

 

வாள்வெட்டுக் குழுக்களுக்கு பெயர் சூட்டவேண்டாம்

 

 
யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்களுடன் கைது செய்யப்படும் குழுக்களுக்கு பெயர்கள் சூட்டவேண்டாம் என்று வலிகாமம் தெற்கு (உடுவில்) பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா பிரகாஸ் தெரிவித்தார்.

 

 

சமுதாயப்பொறுப்புள்ள  வேண்டுகோள்...

பிராண்ஸ் கைதிகள் ஒழிக..... :D சகல பிராண்ஸ் கைதிகளையும் சிறிலங்காவுக்கு மாற்றும் படி ஐ.நா.சபைக்கு தந்தி அடிக்கவேண்டும்

 

எனது கவலை எல்லாம்

நம்மவர்கள் அவர்களையும்  பழுதாக்கிவிடுவார்களோ என்பது தான்.. :(

  • தொடங்கியவர்

பல்கலை மாணவனின் துண்டாடப்பட்ட கையின் பெருவிரல் மாத்திரம் இயங்குகிறது 

 

-எம்.றொசாந்த் யாழ். செல்லமுத்து மைதானத்தில் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் மணிக்கட்டுடன் கையை இழந்த மாணவனின் கை பொருத்தப்பட்டுள்ளதுடன், அதில் பெரு விரலில் மாத்திரம் தற்போது உணர்ச்சியுள்ளதாக காணப்படுகின்றதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றைய 4 விரல்களும் உணர்ச்சி வருவதற்கான சந்தர்ப்பம் குறித்து பதில் கூறுவதற்கு 1 மாதகாலம் செல்லும் எனவும் அதுவரையில் மாணவன் தொடர்ந்து சிகிச்சை பெறவேண்டியுள்ளது எனவும் அத்தகவல்கள் குறிப்பிட்டன.

 

மேற்படி இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற வாள்வெட்டியில் வவுனியாவைச் சேர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவன் ந.முரளிதரன் (வயது 23) என்ற மாணவனின் கை மணிக்கட்டுடன் வெட்டப்பட்டது. மேலும் இரு மாணவர்களும் படுகாயமடைந்தனர். வெட்டப்பட்ட கை மற்றும் மாணவன் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 6 சந்தேகநபர்கள் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

http://www.tamilmirror.lk/145672#sthash.zHQCXG8L.dpuf

  • தொடங்கியவர்

மூன்று பிள்ளைகளின் தந்தை வெட்டிக்கொலை

 

 

 
கிளிநொச்சி வன்னேரிக்குளத்தில்  மூன்று பிள்ளைகளின் தந்த ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
 
வன்னேரிக்குளம் சோலை கிராமத்தைச் சேர்ந்த நடராசா பரமேஸ்வரன் என்பவரே வெடிக்கொலை செய்யப்பட்டு காட்டுக்குள் புதைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
 
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
கடந்த நான்கு நாட்களாக நடராசா பரமேஸ்வரனை காணவில்லை என உறவினர்கள், ஊரவர்கள் தேடிய போதும் காணாத நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் பரமேஸ்வரனுடன் முரண்பாடுகளுடன் காணப்பட்ட அதே இடத்தைச் சேர்ந்து துரைசிங்கம் விமலாகரன் என்பவரை ஊரவர்கள் பிடித்து அடித்து விசாரித்த போது தானும் செல்வராசா சதானந்தராஜா என்பவரும் சேர்ந்து வெட்டிக் கொலை செய்து புதைத்துள்ளதாக தெரிவித்து புதைத்த இடத்தினையும்  இன்று காலை பத்து மணியளவில் விமலாகரன் அடையாளம் காட்டியுள்ளார்.
இதனையடுத்து அக்கராயன்  பொலிஸ் காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டு மேற்படி இரு சந்தேக நபர்களையும் அக்கராயன் பொலிஸார் கைது செய்து கிளிநொச்சி பொலிஸாரிடம் கையளித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை செய்யப்பட்டவர் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளிட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும்,. தனிப்பட்ட பகையே கொலைக்கு காரணம் என உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.
 

என்று தணியும் இந்த வாள்வெட்டு கலாச்சாரம்.

  • தொடங்கியவர்

அபாயகரமான ஆயுதங்களுடன் கைதானவர்களுக்கு பிணை மறுப்பு 

 

 

article_1431434438-unnamed%20(1).jpg

 

 
சுன்னாகம் மயிலிணி பகுதியில் அபாயகரமான ஆயுதங்களுடன் குழுச் சண்டையில் ஈடுபட்ட அறுவருக்கு பிணை வழங்க சுன்னாகம் பொலிஸார் ஆட்சேபனை தெரிவித்தமையடுத்து, எதிர்வரும் 25ஆம் திகதி விளக்கமறியில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், செவ்வாய்க்கிழமை (12) உத்தரவிட்டார்.
 
கடந்த மாதம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து வாள்கள், பெற்றோல் குண்டுகள், கோடாரிகள் என்பன மீட்கப்பட்டதுடன் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்கள் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குமாறு மன்றில் கோரினார். 
சந்தேகநபர்கள் வெளியில் வந்தால், மீண்டும் குழப்பம் ஏற்படுத்தி குழு மோதலில் ஈடுபடுவார்கள் என பொலிஸார் ஆட்சேபனை தெரிவித்தனர்.
இதனையடுத்து, சந்தேகநபர்களுக்கு பிணை மறுக்கப்பட்டதுடன் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
 
 

 

எமது சமுதாயம் இழந்தவைகள் போதும். இவர்கள் குற்றவாளிகளாயின் இவர்களை வெளியிலே வரவிடக்கூடாது.  உள்ளேயே இந்த திமிரெடுத்த வாலிபத்தை தொலைக்க வேண்டும். அப்பவாவது புத்தி வரலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.