Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூரில் சுமந்திரன்! -மீளக்குடியேறும் மக்களை சந்திப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சம்பூரில் சுமந்திரன்! -மீளக்குடியேறும் மக்களை சந்திப்பு photo.png

[sunday 2015-05-24 08:00]
sampoor-sumanthiran-240515-380-seithy.jp

திருகோணமலை சம்பூர் பகுதிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் திடீர் விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

 

நேற்று மாலை 5.30 மணியளவில் கிழக்குமாகாண கல்வியமைச்சரும், மீள்குடியேற்ற அமைச்சருமான தண்டாயுதபாணி அவர்களுடன் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தற்போது மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் சம்பூர் மக்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்துள்ளார்.

  

 

sampoor-sumanthiran-240515-seithy%20%281

 

sampoor-sumanthiran-240515-seithy%20%282

 

sampoor-sumanthiran-240515-seithy%20%283

 

sampoor-sumanthiran-240515-seithy%20%284

 

sampoor-sumanthiran-240515-seithy%20%285

http://www.seithy.com/breifNews.php?newsID=132635&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

9 வருசமாக இந்த சனங்கள் முகாமில் இருக்கும் போது எட்டிப்பார்க்காதவர்

ஓட்டு பொறுக்கி அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

9 வருசமாக இந்த சனங்கள் முகாமில் இருக்கும் போது எட்டிப்பார்க்காதவர்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் கருத்துச் செழுமை நிரம்பி வழிவதாலும், உண்மைக்குப் புறம்பான சேறடித்தல்கள் நிகழாமையாலும், இந்த அமைதிப்பூங்காவில் என் கருத்துக்களால் கலகம் விளைவிக்க நான் விரும்பவில்லை.

பஜகோவிந்தம், பஜகோவிந்தம், பஜகோவிந்தம், பஜ மூடமதே.

நன்றி, வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

நிலைமைகளை அறிந்துகொள்ள சென்றார் சுமந்திரன்.
தமது உறவுகளை உடனடியாக விடுதலை செய்யும்படி அவர்கள் கேட்கிறார்கள்....
அமைச்சர் ஏதும் செய்வாரா?
அல்லது அடுத்த தேர்தலுக்குதான் வருவாரா??

நிலைமைகளை அறிந்துகொள்ள சென்றார் சுமந்திரன்.

தமது உறவுகளை உடனடியாக விடுதலை செய்யும்படி அவர்கள் கேட்கிறார்கள்....

அமைச்சர் ஏதும் செய்வாரா?

அல்லது அடுத்த தேர்தலுக்குதான் வருவாரா??

எந்த அமைச்சரைப்பற்றி கேட்கிறீங்கள் ?

9 வருசமாக இந்த சனங்கள் முகாமில் இருக்கும் போது எட்டிப்பார்க்காதவர்

  • கருத்துக்கள உறவுகள்

ஓகோ இவர் அவருக்கு வேண்டப்பட்ட ஆளோ..! அதுதான் இத்தனை குத்தி முறிவோ.

 

சுமந்திரன் தான்.. சிங்கள மீனவக் குடியேற்றங்கள் காரணமாக.. கொக்குத்தொடுவாய் பறிபோவதற்கும் காரணமோ..?!

 

அதுபோக...

 

கிழக்கில்.. இருந்து எழும் குரல் இப்படி இருக்கே....

 

  • கருத்துக்கள உறவுகள்

கரி நான் ஆராய்ந்து எழுதவில்லை. நான் அங்கு சென்ற போது அந்த முகாம் மக்கள் என்னிடம் நேரடியாக கூறியதை பார்த்ததை வைத்தே எழுதுகிறேன்.

சொந்த மண்ணில் மீள்குடியேற எவ்வித அனுமதியும் பெறுவதில்லை சம்பூரில் மீள் குடியேறுகின்றனர் மக்கள்

 

samp2_CI.jpg

 

 சொந்த மண்ணில் மீளக்குடியேற எந்தவித அனுமதியும் பெறுவதில்லை என்ற அறிவிப்புடன் விடுவிக்கப்பட்ட சம்பூர் பகுதிகிளில் மக்கள்  மீளக்குடியமர தொடங்கியுள்ளனர்.  

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவியின் சகோதரரிற்கு தாரை வார்க்கப்பட்ட 831 ஏக்கர் நிலப்பரப்பினை அவர் யப்பான், மற்றும் இந்திய நிறுவனங்களிற்கு பங்கிட்டு வழங்க முற்பட்டிருந்தார். 

அவ்வகையில் இந்திய நிறுவனமொன்று அனல்மின்னிலையம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுமிருந்தது.

எனினும் தமது நிலத்தை விடுவிக்க கோரி விரட்டப்பட்ட மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 9வருடங்கள் தொடர்ந்திருந்த நிலையில் தற்போது அக்காணிகள் விடுவிக்கப்பட்டுவிட்டன. எனினும் கடற்படையினர் ஒரு பகுதியை தொடர்ந்தும் தம் வசம் வைத்திருப்பதுடன் அதனை விடுவிக்க ஆறு மாத கால அவகாசம் கோரியுமுள்ளனர்.

சர்வதேச நாடுகளிற்கு குத்தகை அடிப்படையில் வழங்க ஏதுவாக அப்பகுதி கட்டடங்கள் ஏதுமற்ற பகுதிகளாக இடித்து துப்பரவாக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களது வீடுகள் அனைத்தும் தடயம் தெரியாது இடித்தழிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் தறப்பாள்கள் சகிதம் மீளக்குடியமர வந்திருந்த மக்கள் தற்போது துப்புரவாக்கல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் கொட்டகைகளினை அமைத்து வாழ்க்கையினையும் ஆரம்பித்துள்ளனர்.

இலங்கை அரசிடமிருந்து சொல்லிக் கொள்ளத்தக்கதான உதவிகள் தமக்கு கிடைத்திருக்கவில்லையெனக்கூறும் அம்மக்கள் அண்மையினில் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்து வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

எதிர்வரும்15இற்குப் பின்னரே சம்பூரில் மீள்குடியேற்றம்!

சம்பூரில் முதலீட்டு ஊக்கு விப்பு வலயத்துக்கு வழங்கப் பட்ட காணிகளை விடுவிக்கும் ஜனாதி பதியின் உத்தரவுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத்தடை நீக்கப்பட்டுள்ளபோதும், எதிர்வரும் 15ஆம் திகதியின் பின்னரே அப்பகுதியின் மீள்குடியேற்றப் பணிகள் துரிதப்படுத்தப்படும் என எதிர்பார்க் கப்படுகிறது.

நீதிமன்றத்தின் இடைக்காலத்தடை நீக்கப்பட்டு அப்பகுதிக்கு மக்கள் சென்று தமது காணிகளைத் துப்புரவுசெய்து வருகின்றபோதும், காணி விடுவிக்கப் படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி நடைபெறவிருப்பதால் அதன் பின்னரே உறுதியானதொரு முடிவு எடுக்கப்பட்டு மீள்குடியேற்றப் பணிகள் துரிதப்படுத்தப்படும் எனத் தெரியவருகிறது.

நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து உறுதி யாகக் கூறமுடியும். காணிகளை விடுவிப் பதற்கு வழங்கப்பட்ட தடையுத்தரவு நீக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்தார்.

மக்கள் தமது காணிகளுக்குச் செல்வது தொடர்பில் அவரிடம் கேட்டபோது, “நீதிமன்றத்தில் இந்த விடயம் தொடர்பான வழக்கு இருப்பதால் இது தொடர்பில் தெரிவிக்கும் கருத்துக்கள் வழக்கில் தாக்கம் செலுத்திவிடும். எனவே இதுபற்றி எதுவும் கூற விரும்பவில்லை” என்றார்.

நீதிமன்றத் தடையுத்தரவு நீக்கப்பட்ட பின்னர் மக்கள் தமது காணிகளுக்குள் சென்று அவற்றைத் துப்புரவுசெய்யும் பணியில் ஈடுபட்டிருப்பதாக கிழக்கு மாகாணசபை அமைச்சர் தண்டாயுதபாணி தெரிவித்தார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தண்டாயுதபாணி ஆகியோர் சம்பூருக்குச் சென்று மக்களைப் பார்வையிட்டிருந்தனர். 

சம்பூர் மீள்குடி யேற்றத்தைப் பாதிக்கும் வகையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமையாது என நம்புவதாகக் குறிப்பிட்ட தண்டாயுதபானி, நீண்டகாலமாக தமது சொந்தக் காணிக ளுக்குத் திரும்பமுடியாதிருந்த மக்கள் வெகு ஆவலாக இருப்பதாகவும் கூறினார்.

மக்களுக்குக் காணிகள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையிலேயே குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதாகக் கருதவேண்டியுள்ளது. எனினும், ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய முதலீட்டு ஊக்குவிப்பு சபையால் வழங்கப்பட்ட 818 ஏக்கர் காணிகள் மீண்டும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 

இந்தக் காணிகளுக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களை வழங்கும் நடவடிக்கைகள் வெகு விரைவில் அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாக சம்பூரில் பொதுமக்கள் காணிகள் முதலீட்டு ஊக்குவிப்புச் சபைக்காக சுவீகரிக்கப்பட்டன. இந்தக் காணிகள் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்தபோதும் அங்கு எதுவித செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்படவில்லை. தமது காணிகளை துரிதமாகத் தமக்கு வழங்க வேண்டும் என்பதே சம்பூர் மக்களின் ஆதங்கமாகவுள்ளது.

சம்பூர் காணி விவகாரம் தொடர்பில் 15ஆம் திகதி நடைபெறவிருக்கும் நீதிமன்ற விசாரணையின் போது மீள்குடியேற்ற அமைச்சின் சார்பில் நியமிக்கப்பட்ட குழு அறிக்கையொன்றை சமர்ப்பிக் கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/120123/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கிழக்கு மாகாண அமைச்சர் தண்டாயுதபாணி தலைமையில் சம்பூர் மீள்குடியேற்றத்தின்போது தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள்பற்றியும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் மக்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது

image.jpg

சிங்களம், சுமந்திரனை எப்படியாவது ஈழத்தமிழ் மக்களின் தலைவராக்கி விடுவது என்று தலை கீழாக நின்று செயற்படுகிறது. எம்மில் இருந்தும் இந்த நாடகத்துக்கு விசில்கள் 

Edited by no fire zone

மாகாண அமைச்சு அதிகாரிகள் குழு சம்பூருக்கு விஜயம்
 
26-05-2015 01:55 PM
 

article_1432629147-c.jpg

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

திருகோணமலை, சம்பூர்  பிரதேசத்துக்கு  கிழக்கு மாகாண அமைச்சுக்களின் அதிகாரிகளைக்  கொண்ட குழுவொன்று திங்கட்கிழமை (25) நேரடி விஜயமொன்றை மேற்கொண்டு அங்குள்ள நிலைமை தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

காணி, கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி மற்றும் விவசாயம் உள்ளிட்ட  அமைச்சுக்களின் அதிகாரிகளுடன் கிழக்கு மாகாண  கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணியும் சம்பூருக்கு விஜயம் செய்திருந்தார்.

மீள்குடியேற்றத்துக்கு முன்னரும்  மீள்குடியேற்றத்தின் பின்னரும் அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்படவேண்டிய  பணிகள் தொடர்பாக ஆராய்வதற்காக  இவர்கள் அங்கு விஜயம் செய்திருந்தனர்.

மீள்குடியேற்றத்துக்காக  காணிகளை துப்பரவு செய்துகொண்டிருந்த மக்களை மாகாணசபை அதிகாரிகள் குழு சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் பற்றி கேட்டறிந்துள்ளதாக இந்த சந்திப்பில் கலந்துகொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் குமாரசாமி நாகேஸ்வரன்  தெரிவித்தார்.

article_1432629165-e.jpg

 

: http://www.tamilmirror.lk

  • கருத்துக்கள உறவுகள்

உங்க நடந்த முரண்பாடுகளை எழுதுங்கையா

  • கருத்துக்கள உறவுகள்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! தனியார் நிறுவனம் தாக்கல் செய்ய முடியுமென உயர்நீதிமன்றம் அறிவிப்பு
[ வியாழக்கிழமை, 28 மே 2015, 02:48.32 AM GMT ]
court_002.jpg
சம்பூர் முதலீட்டு வலய காணி தொடர்பில் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்துள்ள கடிதம் உண்மையாக இருக்குமானால், ஸ்ரீலங்கா கேட்வே இன்டஸ்ரீஸ் லிமிடெட் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யலாம் என்று பிரதமநீதியரசர் கே ஸ்ரீபவன் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே இந்தக்காணியை விசேட வர்த்தமானி மூலம் ஜனாதிபதி அரசுடையாக்கி அதில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர முடியும் என்ற அறிவித்தலை விடுத்திருந்தார்.

எனினும் இதனை ஆட்சேபித்து கேட்வே லிமிடெட், மனுத்தாக்கல் செய்து விசேட வர்த்தமானிக்கு இடைக்கால தடையுத்தரவை பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில் கடந்த 20ஆம் திகதியன்று இடைக்கால தடையுத்தரவை நீடிக்கக்கோரி குறித்த நிறுவனம் மனு செய்தபோதும் அதனை நீதிமன்றம் நிராகரித்தது.

ஜூன் 15ஆம் திகதிவரை இந்த விடயத்தை வழக்குடன் தொடர்புடைய தரப்புக்கள், முன்னைய நிலைமையை கடைபிடிக்க வேண்டும் (அதாவது இந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை என்ற நிலைப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்) என்றும் நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டிருந்தது.

எனினும் சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்திரனை கோடிட்டு பல ஊடகங்கள், ஒருப்பக்க செய்தியை மாத்திரம் அதாவது சம்பூர் தொடர்பான விசேட வர்த்தமானிக்கு இடைக்கால தடை கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது என்று செய்தியை மாத்திரம் வெளியிட்டன.

இது பிழையான செய்தி என்ற அடிப்படையில் சம்பூரில் மீளக்குடியேறக்கோரும் மக்கள் உட்பட்டவர்கள் மத்தியில் இது பரப்பப்பட்டது.

இதனையடுத்து சுமார் 70 பேர் வரை சம்பூர் காணியில் தற்காலிக கொட்டைகளை அமைத்துள்ளதாகவும் தெரிவித்து மனுதாரர் தரப்பு நேற்று மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இது தொடர்பில் கேட்வே நிறுவனம் சார்பில் பொலிஸிடம் முறையிட்டபோதும் பொலிஸ் முறைப்பாட்டை ஏற்கவில்லை என்றும் மனுதாரர் தரப்பு தமது மனுவில் குற்றம் சுமத்தியிருந்தது.

இந்தநிலையிலேயே மனுதாரர் தரப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்ய முடியும் என்று பிரதமநீதியரசர் தெரிவித்தார்.

 

tamilwin

 

Edited by புலிக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம், சுமந்திரனை எப்படியாவது ஈழத்தமிழ் மக்களின் தலைவராக்கி விடுவது என்று தலை கீழாக நின்று செயற்படுகிறது. எம்மில் இருந்தும் இந்த நாடகத்துக்கு விசில்கள் 

 

ஆயுதப்போராட்டத்துக்கு விசிலடித்து முள்ளிவாய்க்காலில் கொடுத்தவர்கள் சுமேந்திரனுக்கு விசிலடிப்பதால் வரும் இழப்புகள் என்று எதுவும் இருக்காது என்று நினைப்பது தவறில்லை அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதப்போராட்டத்துக்கு விசிலடித்து முள்ளிவாய்க்காலில் கொடுத்தவர்கள் சுமேந்திரனுக்கு விசிலடிப்பதால் வரும் இழப்புகள் என்று எதுவும் இருக்காது என்று நினைப்பது தவறில்லை அல்லவா?

 

சுமத்திரனுக்கு விசிலடிப்பதால் மீண்டும் ஒரு போராட்டம் , அதனால் இன்னோரு முள்ளிவாய்கால் உருவாகும் என சிலர் நினைப்பதிலும் தப்பில்லைதானே

ஆயுதப்போராட்டத்துக்கு விசிலடித்து முள்ளிவாய்க்காலில் கொடுத்தவர்கள் சுமேந்திரனுக்கு விசிலடிப்பதால் வரும் இழப்புகள் என்று எதுவும் இருக்காது என்று நினைப்பது தவறில்லை அல்லவா?

 

முதலில் ஜூட் எங்கு நிற்கிறீர்கள்? புலிகள், ஒட்டுக்குழுக்கள், இலங்கை அரசு, நாடு கடந்த அரசு, இன்று கூட்டணி. நீண்ட காலமாக பல தொப்பிகள் அளவாகின்றது.

 

ஆயுதப்போராட்டத்துக்கு விசிலடித்து தொடக்கி விட்டவர்களை, "பின் வாசல்" சுமந்திரனுக்கு தெரிந்திருக்காது? தளபதி மாவை அன்ட் கோவை கேட்டால் ஒன் யுவர் மார்க் சொல்லி விசிலடித்து தொடக்கியதை சொல்லிக் கொடுப்பார்.  

இப்பிடி விசிலடிச்சு விசிலடிச்சு சீரழிந்த இனம்தான் நாங்க.

இன்னொருக்கா விசிலடிக்க கேட்கினம் அடிச்சா போச்சு.

இதை சிட மோசமன நிலைக்கு இனி போகமுடிதாது அதனால யாருக்கும் சிசிலடிக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஜூட் எங்கு நிற்கிறீர்கள்? புலிகள், ஒட்டுக்குழுக்கள், இலங்கை அரசு, நாடு கடந்த அரசு, இன்று கூட்டணி. 

 

எனது பக்கம் மட்டுமே நான் எப்போதும் நிற்கிறேன்.

யாரையும் விமரிசிக்கவும், ஆதரிக்கவும், எதிர்க்கவும் கருத்து சுதந்திரம் உள்ள களத்தில் நிற்கிறேன்.

 

 

 நீண்ட காலமாக பல தொப்பிகள் அளவாகின்றது.

 

 

நான் தொப்பிகள் அணிவதில்ல. அதனால் அவை அளவாக வேண்டிய அவசியமும் இல்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மே 18 இல் சுமந்திரன், சம்பந்தன் எங்கே ஒளித்தார்கள்? தமிழன் என்று சொல்ல தயங்குகின்றார்களா? - ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு.

 

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆயுப்போராட்டமும் அதனைத் தாங்கிசென்ற விடுதலைப்புலிகளும், லட்சத்துக்குமேலான மக்களும் கொன்றொழிக்கப்பட்ட தினமான மே18 ஆனாது ஈழத்தமிழர்கள் மட்டுமல்லாது, தமிழகத்து தமிழர் மட்டுமன்றி மனிதத்தினை மதிக்கும் அனைத்துலக மக்களாலும் மறக்கமுடியாமல் போன ஒரு துன்பியல் நாள். இந்நாளில் கொல்லப்பட்ட மக்களிற்கான நீதி கிடைத்தால் கூட அந்நாள் அனைத்து மக்களின் மனங்களில் வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாத வலிகள் நிறைந்த நாளாகவே இருக்கும். இனப்படுகொலை நடைபெற்று 6 ஆண்டுகள் கடந்தாலும், குறித்த நாளில் அனைத்து தமிழர்களும் ஏதோ ஒரு வகையில் பல அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது அஞ்சலி செய்து கொண்டே வந்துள்ளனர்.

 

ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்பின்னர் தமிழ்மக்களின் தலைவராக வந்தவராக சொல்லப்படும் திரு சம்பந்தன் அவர்களும், அரசியல் இராஜதந்திரியாக தன்னை வெளிப்படுத்தி வரும் திரு. சுமந்திரன் ஆகியோர்கள் வடகிழக்கில் நடைபெற்ற எந்த அஞ்சலி நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவில்லை.

தமிழ் மக்களால் புறக்கணிக்கப்பட்டு வெறுக்கபட்ட சிங்கக் கொடியை ரணில் அவர்களோடு சேர்ந்து உயர்த்திக் காட்டியபோதும், தந்தை செல்வா காலம் தொட்டு புறக்கணித்து வந்த சிறிலங்கா சுதந்திர தின விழாவில், சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தது அது காலத்தின் தேவை என மழுப்பினார்கள்.

சிங்கள படைகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொள்ளாமல் விட்டமையானது இவர்கள் மீது மிகுந்த கோபத்தினையே தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. இப்படியான இவர்கள் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்று தருவார்கள் என்றோ, எமது மக்களிள் விடிவிற்காக எப்படி குரல் கொடுப்பாகள் என்றோ நம்பவே முடியாது. கலந்து கொள்ளாமைக்கான காரணங்கள் எதைச் சொன்னாலும்; மக்கள் எனியும் அதனை நம்ப தயாராகவில்லை.

தமிழ் மக்களின் நிகழ்வில் கலந்து கொண்டால் சிங்கள ஆட்சியாளர்களை அல்லது சிங்கள மக்களின் இதயத்தை நோக வைக்கும் என்று நினைத்து அன்று ஓய்வு எடுத்தார்களோ தெரியவில்லை.

அல்லது சர்வதேச அழுத்தம், இந்தியாவின் அழுத்தம் என்று காரணத்தை சொல்லப்போகின்றார்களோ தெரியவில்லை. ஆனால் அவர்கள் என்ன காரணத்தினை சொன்னாலும், தமிழ் மக்களின் முக்கியமான ஒரு நினைவு நாளில் கண்டிப்பாக கலந்து கொள்ளாமையானது பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்துவதோடு கடும் சினத்தினையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் தான் தமிழ் இனத்தின் தலைவர்கள் என்று சர்வதேசம் பார்க்கும் போது, அவர்களே தமிழ் மக்களின் நினைவு தினத்தினை புறக்கணிப்பு செய்யும் போது அனைத்துலகத்திற்கு பிழையான ஒரு எண்ணப்பாட்டினை ஏற்படுத்துவதோடு, தமிழ் மக்களோ ஐ. நா நோக்கிய எமக்கான நீதியை வேண்டி கையேந்திக் கொண்டிருக்கும் போது, இப்படியான தலைவர்கள் மக்களின் எதிர்பார்ப்பினை சிதைத்து, இனப்படுகொலை நடைபெற்றதை மறுதலித்து சிறிலங்கா அரசாங்கமே விசாரணையை மேற்கொண்டு தீர்கட்டும் என்ற நிலையை ஏற்படுத்தி விடுவார்களோ என்று எண்ண தோன்றுகின்றது.

சிங்கள் மக்களின் மனங்களை வெல்லவேண்டும் என்றும் ஆட்சியாளர்களின் இதையத்தோடு பின்னி பிணைந்திருக்க வேண்டும் என்றும் அறிக்கை விட்டு இறுதியில் தமிழ் மக்களின் மனங்களில் இருந்து நிரந்தரமாக பிரியவேண்டிய நிலைக்கு வந்துவிட்டார்களோ என எண்ணத் தோன்றுகின்றது.

தமிழ் மக்களின் மனங்களில் இருந்து நிரந்தரமாக பிரிந்தாலும் பறவாயில்லை, ஆனால் எமது மக்கள் என்ன நோக்கத்திற்காக மாண்டு போனார்களோ அவர்களின் நோக்கத்தை இலட்சியத்தினை, விடுதலைக் கனவை ஏறி மிதித்து தமிழர்களை நிரந்தர அடிமைகள் ஆக்கப்பார்க்கின்றார்கள் என்று எண்ணத்தோன்றுகின்றது.

இதற்கு எந்த தமிழ் மக்களும் இடம் கொடுக்கமாட்டார்கள் என்பதோடு, ஜனநாயக வழியில் அவர்களுக்கான தண்டனையை மக்கள் நிச்சயம் கொடுத்து அவர்களை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்புவார்கள்.

- ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு-

http://www.tamilsforobama.com/

 

 

ஜனாதிபதி ஒபாமா நிர்வாகம் இராசபக்ச அரசின் பிடியில் தமிழர் சந்தித்த அதீத கொடுமைகள் பற்றி எதுவும் ஏன் அங்கு உதாரணம் காட்ட வில்ல என “ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு” கேள்விக் கணைகள்-கண்டனங்கள்-அறிக்கைகள் விட்டதாகத் தெரியவில்லை.

 
11351179_935715266485270_770654064135329

"யார் வேண்டுமானாலும் தலைவனாக செயல்படலாம். ஆனால் நல்ல தொண்டனாக இருப்பது கடினம்" _ சுவாமி விவேகானந்தர்

மே 18 நிகழ்வுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர்கள் திரு. இரா. சம்பந்தன், திரு. சுமந்திரன் ஆகியோர் கலந்து ஏன் கொள்ளவில்லை என எள்ளன அறிக்கை ஒன்று "ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு" என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.

அதனை மறுதலிக்கும் பொருட்டே சுவாமி விவேகானந்தரினை மேற்கோள்காட்டி, திரு. இரா. சம்பந்தன், திரு. சுமந்திரன் ஆகியோர் அரசியல் சாயம் போடப்பட்ட மே 18 "பொது அஞ்சலி" நிகழ்வுகளில் கலந்து கொள்ளாதமை போற்றத்தக்கது என பின்வரும் எனது தனிப்பட்ட கருத்தினைப் பதிவு செய்கின்றேன்:

வடக்கு - கிழக்கில் தமிழ் தலைமை அரசியல்வாதிகள் சிலர் மே 18-19 தொடர்பில் நிகழ்த்தியது துன்பியல் நாளுக்கான அஞ்சலியாகவோ அல்லது இனப்படுகொலை கண்டனமாகவோ இன்றி, வெறும் தமது கட்சிகள், தாம் செய்த, செய்து கொண்டிருக்கும் "தமிழ் தேசியம்" என்பதற்கு தாமே உரிமையாளன் என்பதனை முரசறையும் சுயலாப அரசியல் நிகழ்வாகவே நடாத்தப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை அரசின் இனப்படுகொலையில் அழித்தொழிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கிலான பொதுமக்களின் உயிர்களினை அவமதிக்கும் பச்சோந்தித்தனமாகவே இது அரங்கேறியுள்ளது.

பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் மரணித்த முள்ளிவாய்க்கால் உட்பட்ட மற்றும் வடமராட்சியிலும் தமிழ் அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகள் மாவீரர் ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வு போன்ற அதே வடிவிலான பந்ததிற்கு தீ மூட்டும் நிகழ்வுகளினை நடாத்தியுள்ளனர்.

படுகொலை செய்யபட்டது வெள்ளைக் கொடி ஏந்திய விடுதலலைப் புலி வீரர்களும்தான். அவர்களுக்காக ஈகைச்சுடர் ஏற்றுவதற்கு மாவீரர் தினம் கார்த்திகையில் வருகிறது. இல்லை மே மாதத்திலும் முள்ளிவாய்க்காலில் ஈகைச்சுடர் ஏற்ற வேண்டும் என முன் நிற்போர் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு அறிக்கையில் (Revisiting Sri Lanka's Bloody War http://www.nytimes.com/…/revisiting-sri-lankas-bloody-war.h…) விடுதலைப் புலிகள் தொடர்பிலான குற்றங்களினை தாம் பொறுபேற்பார்களா?

புலவர் தருமி "திருவிளையாடல்" இல், "பாடலில் எவ்வளவுக்கு எவ்வளவு குறை இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு பரிசுத் தொகையை குறைத்துக் கொள்ளுங்களேன்" என்பது போல் கூட இல்லாமல், "பாடலில் குறை இருந்தாலும் பரிசுத் தொகை முழுவதையும் கோருகிறோம்" - ஐ:நா நிபுணர் நிலைப்பாட்டினை புறம் தள்ளி அரசியல் செய்வோர் நடவடிக்கைகள் பல, புறநிகழ்வுகள் பற்றித் தமக்கு கரிசனை இல்லை என்பதனைப் போலவே முன்னெடுக்கப்படுகின்றன.

முன்னர் 2009 இலும் மேற்குலக புலம்பெயர் தமிழர் வீதிப் போராடங்கள் அரசியல்மயப் படுத்தப்பட்டதாய் இடம்பெற்றதாக சில தரப்பினர் அன்றும், இன்றும் குறை கூறுகின்றனர்.

மரணித்த தமிழ் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விடயத்தில் உண்மை மக்கள் தொண்டனாக செயற்படுபவர்களே சுவாமி விவேகானந்தர் வாசகத்தின்படி மிளிர்கின்றனர்.

“ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு” என்ற பெயரிலான அமைப்பில் "ஜனாதிபதி" என்ற சொல் இல்லாததனாலோ என்னவோ, ஜனாதிபதி ஒபாமாவின் இராஜங்க செயலாளர் ஜோன் கெரி மே 2ஆம் திகதி கொழும்பில் உள்ளடக்கிய போருக்குப் பின்னரான முன்னுதாரண மீள் எழுச்சி பெற்றுள்ள கார்த்திகா என்கிற தமிழ் இந்து இளம் பெண்ணினை- உலகெங்கினும் அராஜகங்களுக்கு மத்தியில் வாழும் இளைஞர்-யுவதிகளுக்கு அவர்கள் தமது இன்னல்களில் இருந்து மீண்டெழும் புத்துயிர் வடிவமாக போற்றப்பட்டிருப்பது தெரிவதில்லைப் போலும்! எனேனில், இராஜங்க செயளாளர் ஜோன் கெரி "அராஜகமாக" இங்கு சுட்டிக்காட்டுவது, கார்த்திகா 14 வயதில் பலவந்தமாக விடுதலைப் புலிகளில் சேர்க்கப்பட்டது மட்டுமின்றி, போரில் ஒரு கண் பார்வையியினை இழந்தும், 11 வருடங்கள் குடும்பத்தினருக்கு கார்த்திகா பற்றி எதுவும் தெரியாதிருந்தது எனவும் கூறியுள்ளார். (Strengthening the U.S.-Sri Lanka Partnership for Human Rights and Lasting Peace: Remarks by Secretary of State John Kerry: http://srilanka.usembassy.gov/sp-2may2015-2.html)

ஜனாதிபதி ஒபாமா நிர்வாகம் இராசபக்ச அரசின் பிடியில் தமிழர் சந்தித்த அதீத கொடுமைகள் பற்றி எதுவும் ஏன் அங்கு உதாரணம் காட்ட வில்ல என “ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு” கேள்விக் கணைகள்-கண்டனங்கள்-அறிக்கைகள் விட்டதாகத் தெரியவில்லை.

இத்தகைய சூழலில் புதிய அரசு மே 18இனை "யுத்த வெற்றி நாள்" என்பதில் இருந்து அதனை எல்லோருக்கும் பொதுவான "நினைவு நாள்" என மாற்றியுள்ளது. இது ஒரு சிலரின் தூற்றல் - துரோகி - கொடும்பாவி எரிப்பு என்பவற்றினையும் பொருட்படுத்தாது, "மரணித்தவர்களுக்கு நீதி" என்பது மட்டுமின்றி, "போரில் இருந்து மீண்டவர்களுக்கான வாழ்வியல், வாழ்வாதார, சுயமரியாதை என்பன பெறுவதற்கான உரிமை" என்பதனையும் முதன்மையாக கொண்டு திரு. இரா. சம்பந்தன், திரு. சுமந்திரன் ஆகியோர் மேற்கொண்டுவரும் துணிகர தலைமைத்துவத்தினால் கிடைக்கப்பெற்ற மாற்றம்!

இந்த மாற்றத்தினாலேயே முன்னரினை விட பகிரங்கமாகவே 2015 இன் மே 18 நிகழ்வுகள் சில ஈகைச் சுடர் ஏற்றுதலினை ஒத்ததாக கூட - மே 18 நிகழ்வுகள் விடயத்தில் நீதிமன்ற தடை உத்தரவு - சில நிபந்தனைகளுடனான தடை இருந்தும் - அவை நடந்து முடிய ஏதுவானது. (New government more conciliatory, but processions, protests still banned: http://www.ucanews.com/…/sri-lanka-tamils-openly-reme…/73614)

தமிழ் தலைவர்கள் எவரினையும், நீதி மன்ற தடை உத்தரவுகள் மீறும் போது விசாரணை செய்யாத மைத்திரி அரசு, கோத்தபாய இராசபக்சவிற்கு ஆதரவு தெரிவித்து, இலஞ்ச ஊழல் அலுவலகம் முன் நீதி மன்ற தடையினயும் மீறி ஆர்ப்பாட்டம் செய்தவர்களினை விசாரித்தது ஏன் என மகிந்த இராசபக்ச தரப்பினர் வினவுகின்றனர்.

இந்த மாற்றம் தமது அரசியல் தலைமையினால் வந்தது எனத் தம்பட்டம் அடித்து மே 18 "பொது" நிகழ்வுகளில் திரு. சம்பந்தனோ, திரு. சுமந்திரனோ கலந்து கொள்ளவில்லை. மாறாக ஏனைய "தலைவர்கள்" படச் சந்தர்ப்பவாதத்தினை நழுவ விடாமல் விளக்கேற்றி புலம்பெயர்ந்த ஊடகங்களில் உலா விட்டுள்ளனர்.

இவ்வாறான புறச் சூழல்களில் வடக்கு-கிழக்கு தமிழ் மக்களினை வெறும் அரசியல்-"தமிழ் தேசிய" உணர்வு பூர்வமானதாக மட்டுமின்றி, வடக்கு-கிழக்கில் மேலும் அழிவுகள்-கெடுபிடிகள் வராமல் தலமைத்துவம் அளிக்கும் திரு. இரா. சம்பந்தன், திரு. சுமந்திரன் ஆகியோரினை வாக்காளர்கள் புறந்தள்ளப் போவதில்லை.

இதற்கிடையில் மே 17 - 20 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சம்பூர் மக்கள் மீள தமது கிராமங்களுக்கு செல்வது தொடர்பில் சம்பூருக்கும் - கொழும்பில் உயர் நீதிமன்றத்திற்கும் இடையில் பயணித்துக் கருமமாற்ற வேண்டிய சட்ட வேலைப் பணிகளும் திரு. சுமந்திரனுக்கு இருந்திருப்பது அங்கிருந்து வரும் செய்தி-நிலவரங்கள் மூலம் அறியக்கிடைக்கின்றது.

மக்களுக்கு விடிவு வேண்டும் என நேர்மையாக, ஆணித்தரமாக அரசியல் செய்யும் திரு. இரா. சம்பந்தன், திரு. சுமந்திரன் போன்ற தலைவர்கள் நீதிமன்ற தடை உத்தரவுகளினை புறம் தள்ளி, பன்முக நிலவரங்களினையும் கருத்தில் கொள்ளாது "கடைத் தேங்காயோ, வழிப் பிள்ளயாரோ" என்பது போல் நடந்து கொள்ளப்போவதில்லை. அவ்வாறான தடைகளினை கருத்தில் எடுக்காது உடைக்கும் தமிழ் தலைமைகள், பின்னர் இலங்கை நீதி ஆணைகளினையும் மீறும் இராசபக்ச தரப்பினரினை தண்டிக்கும்படி எவ்வாறு கோருவார்கள்?

சட்டம்-ஒழுங்கு வடக்கு-கிழக்கில் எவ்வளவு துரிதமாக சீர்குலையும், அதனை சாதகமாக்கி தமிழ் மக்களிற்க்கு பாதகமான நிலைகளினை எற்படுத்திவிடலாம் என கூட்டத்தில் "கோவிந்தா கோவிந்தா" என்று சத்தமிட்டு களமிறங்க பலர் ஆவலாய் உள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னர் "ஆர்ப்பாட்டம்" ஒன்றின் போது யாழ் நீதிமன்றம் சேதப்படுத்தப்ட்டது, "தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல்" என்கிறார் மகிந்த இராசபக்ச. ஒமோம், இவற்றினைக் காரணம் காட்டி, இராணுவக் கெடுபிடிகளினை அதிகரித்து விடுவார்கள் என இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டிற்கு ஆமோதித்துள்ளார் வடமாகாண சபை முதலமைச்சர் திரு. சி.வி. விக்னேஸ்வரன்.

யாழ் பல்கலைக்கழக உளநல பேராசிரியர் தயா சேமாசுந்தரம் அதே இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் சமூக மற்றும் கல்வி, மற்றும் நிர்வாக கட்டமைப்புக்கள் துரிதில் மீள கட்டியெழுப்பப்படுவது காலத்தின் கட்டாயம் எனச் சுட்டிக்காடியுள்ளார். (Post-War Systemic Breakdown Blamed For Jaffna Rape and Mayhem http://www.newindianexpress.com/…/…/05/22/article2827962.ece)

இத்தகைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்க்கு தலைமைத்துவ மதிப்பு அளித்துள்ளமையே திரு. சம்பந்தன், திரு. சுமந்திரன் வழங்கும் முன்னுதாரணம்.

போரில் இருந்து மீண்ட அன்னை திருமதி. ஜெயகுமாரியினை விடுதலை செய்து தாய், சேய் விபூஷிகாவுடன் இணைய வேண்டுமென எத்தனையோ சொல் வீச்சுக்கள் இடம்பெற்றன. இன்று விடுதலையான தாய், தனது மகளினை மீளவும், சிறுவர் இல்லத்தில் சேர்ப்பித்துள்ளார். போரில் இருந்து மீண்டவர்கள் உண்மை துயர நிலவரம் இதுவே.

- க. திருக்குமாரன்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"இதற்கிடையில் மே 17 - 20 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சம்பூர் மக்கள் மீள தமது கிராமங்களுக்கு செல்வது தொடர்பில் சம்பூருக்கும் - கொழும்பில் உயர் நீதிமன்றத்திற்கும் இடையில் பயணித்துக் கருமமாற்ற வேண்டிய சட்ட வேலைப் பணிகளும் திரு. சுமந்திரனுக்கு இருந்திருப்பது அங்கிருந்து வரும் செய்தி-நிலவரங்கள் மூலம் அறியக்கிடைக்கின்றது."

 

சிங்களத்தினால் கொன்றொழிக்கப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொள்ளாது இருந்ததற்கு இங்கு சொல்லப்பட்ட காரணம் சுத்த முட்டாள்தனம். சம்பூர் மக்களே இதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சம்பூர் மக்களிடம் பொய்யான செய்தியை  கொண்டு சென்ற சமந்திரன் மக்களை மீண்டும் மீண்டும் முட்டாள் ஆக்கப்பார்க்கின்றார்.

 

மரணித்த மக்களுக்கு அஞ்சலி செலுத்த காரணத்தினை தேடும் ஒருவர் எப்படி மக்களின் தலைவராக இருக்கமுடியும்.

 

உங்கள் கூற்றுப்படி நீதிமன்ற பணிகளில் சுமந்திரன் இருந்தார் என்று வைத்துக்கொண்டாலும் அவர்களுக்கு ஏற்ற ஒரு பொது இடத்தில் அஞ்சலி செய்திருக்கலாமே. உலகம் இதனை அசதானித்திருக்கும் அல்லவா? 24 மணிநேரத்தில் ஒரு 5 நிமிடமோ 10 நிமிட நேரமா அவர்களுக்கு கிடைக்காடமல் போய்விட்டது.
 
இப்டியான பொய்யர்களுக்கா சம்பந்ப்படவர்களே சொல்ல விரும்பாத நொண்டிச்சாட்டை ஏன் நீங்கள் சொல்லுகின்றீர்கள்.
ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு பற்றிய விமர்சனங்கள் இருப்பினும் அவர்களால் சொல்லப்பட்ட செய்தியானது இங்கு மிக முக்கியமானதும் உண்மையானதுவுமாகும். பல தமிழ் ஊடகங்களால் மறைக்கபட்ட உண்மையை ஒமாமாவுக்கன தமிழர் என்னும் அமைப்பு போட்டுடைத்துள்ளமையானது நல்ல விடையமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.