Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்.ரீ.ரீ.ஈ தலைவரை சரணடையும்படி கூறவில்லை: கனிமொழி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு பதில் சொல்ல வேண்டி வரும் என்று தான் அவர்கள் அழிந்து போனார்கள்....உண்மையிலயே இவர்களை நம்பியா சரணடைந்தார்கள்?

அது கூட... தெரியாமல் தான்.... சிலர் கருத்து எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். :D 

அவ்வளவு... அரசியல் அறிவு? :lol:

  • Replies 65
  • Views 5.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலர் அன்றைய கனிமொழியை.. கருணாநிதியின் சட்டத்திற்கு புறம்பாக பிறந்த மகள் என்று பார்க்கின்றனர் போலும்.

அன்று கனிமொழி..

* திமுக சார்பு நாடாளுமன்ற எம்பி.

* இணை அமைச்சர்.

* தி முக நாடாளுமன்றில் செல்வாக்குள்ள கட்சி. அதன் தலைவரின் அரசியல் வாரிசு.

* சோனியாவுக்கு நெருக்கமாக தி முக சார்பில் அவரோடு தொடர்பில் இருந்த ஒருவர்.

கனிமொழி இந்திய அரசு சார்பில் விடுதலைப் புலிகளோடு பேசவல்ல ஏஜென்டாக நியமிக்கப்பட்டிருக்கலாம். முன்னைய பேச்சு வார்த்தைகளிலும் சிதம்பரம் போன்றவர்கள் இதனைச் செய்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல.. 2002 ஓயாத அலைகள் 4 இல் விடுதலைப்புலிகள் யாழ் நகரை நெருங்கிய போது.. 40,000 சிங்களப் படைகளை காக்க.. சந்திரிக்காவின் கெஞ்சலுக்கு மத்தியில்..இந்திய இராணுவம் கப்பல்படை விமானப்படை.. திருவனந்தபுரத்தில் தனது முப்படைகளையும்.. தயார் செய்த போது சிங்கள இராணுவத்தின் வீரத்துக்கு என்னானது..?! இது அண்ணன்கள் சிலருக்கு கேவலமாகத் தெரியவில்லைப் போலும்.

முள்ளிவாய்க்காலில் எமது இனம் இந்திய - சிங்கள... கூட்டு வஞ்சனைக்கு அழிந்து போனது என்ற உண்மையின் சாட்சிகளில் கனிமொழி ஒருவர். அவர் அதில் இருந்து தப்பி இவ்வளவு காலமும் காத்த மெளனம் இப்ப தான் அனந்தியால் சிறுகக் கலைக்கப்பட்டுள்ளது. எனி இன்னும் அறியாத உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளது.

யுத்தக் குற்ற விசாரணை என்று வந்தால்... கனிமொழியும் கருணாநிதியும் விசாரிக்கப்பட வேண்டியவர்களாவர். அதுதான் டெசோவை தூசு தட்டி எடுத்து.. இன அழிப்பில் தங்கள் பாத்திரத்தை மூடி மறைக்க முயன்றார் கருணாநிதி. இங்கு வஞ்சகன் கருணாநிதி. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஓடி வந்த வேகத்தில் நாட்டில் நடந்த பல விடயங்கள் தெரியாது போலிருக்கு .ஆனால் வரலாறு அப்படியல்ல ..

கனிமொழியிடம் உதவி கேட்டு வெள்ளை கொடி பிடிக்கும் கேவலத்தை வேறு எந்த இயக்கமும் கடைசிவரை செய்து இருக்கமாட்டாது

சிங்களத்திற்கு எதிராக ஆரம்பித்து சில வருடங்களிலேயே சிங்களத்தின் காலை நக்கிய வரலாறு புளட். வெளிநாட்டில் இருந்தவைக்கு நாட்டில் நடந்த பல விடயங்கள் தெரியாதுதான். ஆனால் இந்தியாவோட ஓடி வந்தவைக்கு சுத்த மோசம்.

  • கருத்துக்கள உறவுகள்

கனிமொழிஇஜெகத் கஸ்பார் ஆகியோருடன் கடைசி நேரத்தில் புலிகள் தொடர்பில் இருந்தது என்பது பலருடைய பேட்டிகளில் இருந்து ஏற்கனவே தெரிந்த விடயந்தான். கனிமொழி சிதம்பரத்திற்கு மிகவும் நெருக்கானவர் என்பதால் கனிமொழி சிதம்பரத்தோடு பேசுவதற்கு ஒருஇடைநிலைத்தொடர்பாளராக இருந்திருக்கிறார்.மற்றும் படி நடந்த விடயங்களுக்கும் கனிமொழியால் போரை நிறுத்த முடியாது என்பதும்புலிகளுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். ஆனால் சிதம்பரத்தால் மத்திய அரசுக்கு ஓரளவு அழுத்தம் கொடுத்திருக்க முடியும். ஆனால் தடைசெய்யப்பட்ட புலிகளுடன் சிதம்பரம் நேரடியாகத் தொடர்பு கொள்ள சில இராஜதந்திரத் தடைகள் இருக்கின்றன.கடைசி நேரத்திலேயே புலிகள் இப்படியான தொடர்பை சுபவிஇதிருமாவளவன்இகஸ்பார் ஆகியோரை த் தொடர்பு கொள்ள அவர்கள் கனிமொழிமூலமாக இந்திய அரசுடன் பேசி இருக்கின்றனர். அவர்கள் சொன்னதை கனிமொழி இவர்களுக்குச சொல்லியிருக்கலாம். ஆக கனிமொழிமேல் பெரிய குற்றம் இல்லை. அவர்துணிந்து இதை வெளியில் சொல்லலாம். அனால் அவரைத் தடுப்பது அவர் இதை வெளியில் சொன்னால் சிதம்பரமும் காங்கிரஸ் தலமையும் அவர் மீது அதிருப்தி அடையய நேருடும் கருணாநிதியின் கூட்டணி அரசியலுக்கு இது பாதகமானது. .அதுவும் தற்போதைய திமுகவின் பலவீனமான நிலையில் கனிமொழி இதை வெளியில் சொல்லத்தயங்குவார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு செடி கொடி 

ஒரு மிருகம்

பறவைகள் மீது நெருப்புப்பிடித்தால்

அகோரத்தாக்குதல் நடாத்தப்பட்டால்

தூக்கிக்காப்பாற்றி

வருடிவிடும் உலகில்

தனக்காக இறுதிவரை உயிரைக்கொடுக்க தயாராக  இருந்த

சக சகோதரர்களை

எரிந்திருக்கணும்

தப்பியிருக்கக்கூடாது என நக்கலடித்து மகிழும் ஒரு கூட்டம்

தமிழனாக மட்டுமே உலகில் இருக்கமுடியும்.... :(  :(  :(

முகங்கள் தெரியும்  காலம்....

  • கருத்துக்கள உறவுகள்

சரணடைந்தோர் கொல்லப் பட்ட வழக்கில், கனி, ஜெகத், சீமான், சந்திர நேரு, சொல்கேய்ம் என பலர் இடைத்தரகர்களாய் இருந்துளனர்.

புலித்தேவன், நடேசன், எழிலன் இப்படி இரண்டாம் மட்டத் தலைவர்களே சரணடையும் கோரிக்கையோடு வந்திருந்தனர்.

எழிலன் என்றால் யாரென்றே தெரியாது என்பது கனி மொழி சொல்லும் பச்சைப் பொய். அவர்களை எனக்குத்தெரியும், இந்தியாவுடன் அவர்களுக்காக பேசி உத்தரவாதம் பெற்றுக் கொடுத்தேன் என கனி சொன்னால் அவரிற்கும் அவர் காதலன் ராசாவுக்கும் காலம் பூராவும் களிதான்.

எனவேதான் சந்திரநேரு போல் உண்மையா சொல்லாமல், மழுப்புகிறார் கனி.

கோத்த மண்டையில் போடச் சொன்னது இதில் இந்தியாவை ஆதாரத்துடன் கோர்த்து விட.

கனி, ஜெகத், சுபவீ ஆகியோர் எப்படி பட்ட அரசியல் வியாபாரிகள் என்பதை சாகும் தறுவாயில் சரணடைய வந்த புலிகள் உணர்திருப்பர்.

புல வாலுகள் இன்னும் உணராமல் இருப்பது - இதை விட மோசமான அரசியல் யாவாரி சீமான் என்பதை.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் ஒப்படைக்கப்பட்ட பணியை இதய சுத்தியோடு செய்கிறார். அவரை கனிமொழி.. ஜெகத் கஸ்பார்.. சுபவீ.. இப்படிப்பட்ட 2009 மே க்குப் பின்.. மகிந்தவுக்கு துதிபாடிவிட்டு.. மெளனமாகி.. ஓய்ந்துவிட்ட கேடுகெட்ட ஜென்மங்களோடு ஒப்பிடவே முடியாது.

சீமானுக்குள்ள பலம்.. பலவீனம் அறிந்து அவருக்கு வழங்கப்பட்டதை அவர் விசுவாசத்துடன் செயற்படுத்துகிறார். இங்கு சிலர் சீமானை இதில் கோர்த்துவிட்டு தமிழினத்தின் எஞ்சியுள்ள அந்த இன உணர்வையும்.. சிங்கள.. ஹிந்திய எஜமானர்களுக்கு காட்டிக்கொடுக்க முனைகிறார்கள். :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சீமான்Jeeக்கு டண்டணக்கா! :D

11393215_1596094223995637_57165603538362

• கனிமொழிக்கு ஆனந்தியை தெரியாமல் இருக்கலாம்
கூடி இருந்த கஸ்பார் அடிகளாரையுமா தெரியாது?

புலிகள் சரணடைவதற்கு தான் ஏற்பாடு செய்யவில்லை என்று கனிமொழி தற்போது மறுக்கிறார்.

அதுமட்டுமல்ல எழிலனையும் யார் என்று தனக்கு தெரியாது என்கிறார்.

அப்படியென்றால் புலிகள் சரணடைவதற்கு கனிமொழி ஊடாக தான் ஏற்பாடு செய்தேன் என்று கஸ்பார் அடிகளார் கூறியது பொய்யா?

2010ல் கஸ்பார் அடிகளார் கூறியது பொய் என்றால் ஏன் அப்போது அதை கனிமொழி மறுக்கவில்லை?

அல்லது கஸ்பார் அடிகளாரையும் யார் என்று தெரியாது என்று இப்போது கனிமொழி கூறுவாரா?

கனிமொழி அவர்களே!

துரோகம் செய்து விட்டு அதை மறுப்பதற்கு இது ஒன்றும் உங்கள் "2ஜி" ஊழல் இல்லை.

உங்கள் குடும்பத்து துரோகத்தால் பலியானது 40 ஆயிரம் அப்பாவி தமிழர்கள்.

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டது போhக்குற்றம் என்றால் அதில் உங்களுக்கும் பங்கு உண்டு.

கொல்லப்பட்டவர்களின் ரத்தம் காயுமுன்னர் இலங்கை வந்து மகிந்தவுடன் விருந்து உண்டு பரிசில்கள் பெற்று சென்றதை நாம் கண்டோம்.

வரலாறு உங்களை ஒருபோதும் மறக்கப் போவதுமில்லை. மன்னிக்கப்போவதுமில்லை.

சும்மா டண்டனக்கா இல்லை. முன்னாள் சீமான், இந்நாள் டண்டணக்கா :)

சொல்புத்தி - கேட்பவருக்கு மட்டுமே வேலை செய்யும். தேத முக்காலம் உணர்ந்தவர். அவருக்கு நாம் சொல்வதெல்லாம் சும்மா டண்டனக்கா...டனக்குநக்க...நாக்குமுக்கா...

 கோசான்  ஐயா தி தா வை விட நீங்கள் தான் முக்காலமும் உணர்ந்தவர்.  :D
 முன்னாள் சீமான் இன்னாள் டண்டனக்கா இன்னாள் சீமான் முன்னாள் டண்டனக்கா.  :lol:
 அருமையான கண்டு பிடிப்பு.  நல்லா ரூம் போட்டு யோசிக்கிறீங்கள் ஐயா.  :icon_idea:
என்ன ஒரு ஞானம் தெளிந்த சிந்தனை. டண்டனக்கா டணக்குணக்கா   :D  :D  :D
  • கருத்துக்கள உறவுகள்

அது யாரப்பா தி தா? :)

தேத என்பது தேசியத்தலைவர் என்பதை, பவ்வியமாய் சுருக்கிச் சொல்லுவதே.

விடுதலைப்புலிகள் பலரை அமெரிக்கா கைது செய்தது யதார்த்தமான உண்மை.அரூபா மற்றும் சிலி சென்றவர்களுக்கு ஓரளவு புரிந்திருக்கும்.

11313074_1593449190926807_62363714299365

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகள் பலரை அமெரிக்கா கைது செய்தது யதார்த்தமான உண்மை.அரூபா மற்றும் சிலி சென்றவர்களுக்கு ஓரளவு புரிந்திருக்கும்.

11313074_1593449190926807_62363714299365

 உலகப்படம் மாதிரி இருக்கு  :D

கனிமொழி என்பது சகல கள்ளத்தனங்களுக்கும் பெயர் போன ஒரு ஆள் அதுவும் கரு நாய் இன் கள்ளப்புத்திரி ....
எப்படி நீதி நியாயம் நேர்மை இருக்கும் ....
 
தமிழனின் சாபகேடு இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.   
  • கருத்துக்கள உறவுகள்

சரணடைதல் என்பது ஒருபோதுமே பிரபாகரனுக்கு ஒரு தெரிவாக இருந்திருக்கப் போவதில்லை. தான் எதிரிகளிடம் பிடிபடும் தருணம் ஒன்று வருமாயின் தன்னைக் கொன்றுவிட்டு எரித்துவிடும்படி தன்னுடன் இருந்த போராளிகளிடம் அவர் கூறியிருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் அவர் சரணடைந்திருப்பார் என்றோ அல்லது கனிமொழியினி பேச்சைக் கேட்டிருப்பார் என்றோ நினைக்கவில்லை. 

பொதுமக்களைத் தன்னுடன் கூடவே அழைத்துக்கொண்டுபோனது பற்றிய வாதப் பிரதிவாதங்களுக்கு நான் வரவில்லை. சிலரைப் பொறுத்தவரை அது சரி, இன்னும் சிலருக்கு அது பிழை. 

தம்மைக் கொல்வதையே ஒரே குறியாகக் கொண்டு முன்னேறி வரும் ராணுவத்திடம் போய்ச் சேர்வதற்கு எத்தனை பொதுமக்கள் தயாராக இருந்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இதற்கு யுத்தம் முடிவடைந்தபின்னர் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களே சாட்சி.

அதேவேளை ஒரு விடுதலை இயக்கத்துக்கு தம்முடன் இருக்கும் பொதுமக்களே எல்லாவகையான தேவைகளுக்கும் மூலமாக இருப்பதால், அவர்களையும் தம்முடன் அழைத்துக்கொண்டுபோக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கலாம். இதில் சரி பிழை சொல்லுவதற்கு எதுவுமேயில்லை. புலிகளுடன் அவர்கள் இருந்திருக்காவிட்டலும் கூட அவர்களைக் கொலவதென்பது சிங்கள ராணுவத்திற்கு ஒருபோதுமே பிரச்சினையாக இருந்ததில்லை என்பதே சரித்திரம். புலிகளோ அல்லது வேறு எந்த போராளி இயக்கமோ தோன்றுவதற்கு முன்னமே தமிழர் மேல் சிங்களம் நடத்திய படுகொலைகளே இதற்குச் சாட்சி. ஆகவே புலிகளால்த்தான் அவர்கள் இறந்தார்கள், புலிகள் இல்லாமலிருந்தால் அவர்களை அரசாங்கம் சொல்லியதுபோலவே, 'மனிதாபிமான நடவடிக்கை' ஒன்றின்மூலம் தமது மென்மையான கைகளில் ஏந்தி கண்ணின் மணிபோலக் காத்திருப்பார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

உண்மையாக நடந்ததோ இதுவரை காலமும் புலிகளின் வெற்றிகளுக்கும், பலத்துக்கும் மூல காரணமாக இருந்த மக்களுக்கு ஒரு பாடம் ஒன்றினை அவர்களை அதிகளவில் அழிப்பதன் மூலம் செய்துகாட்டியது சிங்கள ராணுவம். 

ஆகவே புலிகள் இழுத்துக்கொண்டு போனார்கள், அதனால்த்தான் அழிந்தார்கள் என்பதெல்லாம் வேண்டுமென்றால் ஒரு விதண்டாவத்தத்திற்கு உதவலாம். 

நன்றாக சிந்தித்து எழுதிய.... அருமையான கருத்து, ரகுநாதன். :)

Edited by தமிழ் சிறி

யதார்த்தமான விளக்கம் ரகுநாதன் ... உண்மையும் இதுதான் ...இதனை உணரமருக்கின்றவர்கள் தான் புனை கதைகளை எழுதுகின்றார்கள் .....

  • கருத்துக்கள உறவுகள்

ரகு,

புலிகள் மீதுள்ள அபிமானத்தால் மக்களை பகடையாய் அவர்கள் பயன் படுத்தியயை நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு ஏற்பது போல், மனிதாபிமானமுள்ளோர் ஏற்க முடியாது.

நடந்த விடயங்கள் பெரும்பாலும் உரிய சாட்சிகளிடம் பேட்டி கண்டு ஐ நா விற்கே கொடுத்தாகிவிட்டது .இப்ப வந்து இப்படித்தான் இருக்காலாம் என்று அண்ணை வாழைபழத்தில் ஊசி ஏற்றுவது போல நைசாக புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்று கதை விடுகின்றார்.

புலி விசுவாசிகள் உங்கள் விருப்பம் போல நீங்கள் எதையும் சொல்லுங்கள் எழுதுங்கள் பிரச்சனை இல்லை ஆனால் அங்கு நடந்த அனைத்து உண்மைகளும் உலகிற்கு தெரியும் .

மகிந்தா அண்ட் கோ சிங்கள படையை உலகத்திலேயே கண்ணியமான ஆர்மி என்பதற்கும்  ரகுவின் கருத்திற்கும் எதுவித வேறுபாடுமில்லை .

'தம்மைக் கொல்வதையே ஒரே குறியாகக் கொண்டு முன்னேறி வரும் ராணுவத்திடம் போய்ச் சேர்வதற்கு எத்தனை பொதுமக்கள் தயாராக இருந்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இதற்கு யுத்தம் முடிவடைந்தபின்னர் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களே சாட்சி.'

இப்படி ஒரு முழு கற்பனையை எழுதுபவரிடம் வேறு எதை எதிர்பார்க்கமுடியும் .

வேறு எதுவும் தேவையில்லை கடைசி நவநீதம்பிள்ளையின் அறிக்கையையாவது வாசித்து இருக்கலாம் .சரணடைய வந்த மக்களுக்கு இடையே கூட தற்கொலை தாக்குதல் செய்ததும் பதிவில் இருக்கு .

சரணடைதல் என்பது ஒருபோதுமே பிரபாகரனுக்கு ஒரு தெரிவாக இருந்திருக்கப் போவதில்லை. தான் எதிரிகளிடம் பிடிபடும் தருணம் ஒன்று வருமாயின் தன்னைக் கொன்றுவிட்டு எரித்துவிடும்படி தன்னுடன் இருந்த போராளிகளிடம் அவர் கூறியிருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் அவர் சரணடைந்திருப்பார் என்றோ அல்லது கனிமொழியினி பேச்சைக் கேட்டிருப்பார் என்றோ நினைக்கவில்லை. 

பொதுமக்களைத் தன்னுடன் கூடவே அழைத்துக்கொண்டுபோனது பற்றிய வாதப் பிரதிவாதங்களுக்கு நான் வரவில்லை. சிலரைப் பொறுத்தவரை அது சரி, இன்னும் சிலருக்கு அது பிழை. 

தம்மைக் கொல்வதையே ஒரே குறியாகக் கொண்டு முன்னேறி வரும் ராணுவத்திடம் போய்ச் சேர்வதற்கு எத்தனை பொதுமக்கள் தயாராக இருந்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இதற்கு யுத்தம் முடிவடைந்தபின்னர் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களே சாட்சி.

அதேவேளை ஒரு விடுதலை இயக்கத்துக்கு தம்முடன் இருக்கும் பொதுமக்களே எல்லாவகையான தேவைகளுக்கும் மூலமாக இருப்பதால், அவர்களையும் தம்முடன் அழைத்துக்கொண்டுபோக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கலாம். இதில் சரி பிழை சொல்லுவதற்கு எதுவுமேயில்லை. புலிகளுடன் அவர்கள் இருந்திருக்காவிட்டலும் கூட அவர்களைக் கொலவதென்பது சிங்கள ராணுவத்திற்கு ஒருபோதுமே பிரச்சினையாக இருந்ததில்லை என்பதே சரித்திரம். புலிகளோ அல்லது வேறு எந்த போராளி இயக்கமோ தோன்றுவதற்கு முன்னமே தமிழர் மேல் சிங்களம் நடத்திய படுகொலைகளே இதற்குச் சாட்சி. ஆகவே புலிகளால்த்தான் அவர்கள் இறந்தார்கள், புலிகள் இல்லாமலிருந்தால் அவர்களை அரசாங்கம் சொல்லியதுபோலவே, 'மனிதாபிமான நடவடிக்கை' ஒன்றின்மூலம் தமது மென்மையான கைகளில் ஏந்தி கண்ணின் மணிபோலக் காத்திருப்பார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

உண்மையாக நடந்ததோ இதுவரை காலமும் புலிகளின் வெற்றிகளுக்கும், பலத்துக்கும் மூல காரணமாக இருந்த மக்களுக்கு ஒரு பாடம் ஒன்றினை அவர்களை அதிகளவில் அழிப்பதன் மூலம் செய்துகாட்டியது சிங்கள ராணுவம். 

ஆகவே புலிகள் இழுத்துக்கொண்டு போனார்கள், அதனால்த்தான் அழிந்தார்கள் என்பதெல்லாம் வேண்டுமென்றால் ஒரு விதண்டாவத்தத்திற்கு உதவலாம். 

நீங்கள் எதை கூறி வாத பிரதிவாதங்கள் வேண்டாம் என்று சொன்னிர்களோ அதையே தர்க்கித்து முடித்திருக்கிரிர்கள்.

இன்னும் துலங்காத பல விடயங்கள் இறுதி நாட்களில் நடந்திருக்கின்றன, அவைகள் வெளிவரும்போது என்னும் ஆச்சரியம் காத்திருக்கலாம்.

என்னும் எதிர்பாராத பலரின் மேல் குற்றம் சாட்டப்படலாம். 

நடந்த விடயங்கள் பெரும்பாலும் உரிய சாட்சிகளிடம் பேட்டி கண்டு ஐ நா விற்கே கொடுத்தாகிவிட்டது .இப்ப வந்து இப்படித்தான் இருக்காலாம் என்று அண்ணை வாழைபழத்தில் ஊசி ஏற்றுவது போல நைசாக புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்று கதை விடுகின்றார்.

புலி விசுவாசிகள் உங்கள் விருப்பம் போல நீங்கள் எதையும் சொல்லுங்கள் எழுதுங்கள் பிரச்சனை இல்லை ஆனால் அங்கு நடந்த அனைத்து உண்மைகளும் உலகிற்கு தெரியும் .

மகிந்தா அண்ட் கோ சிங்கள படையை உலகத்திலேயே கண்ணியமான ஆர்மி என்பதற்கும்  ரகுவின் கருத்திற்கும் எதுவித வேறுபாடுமில்லை .

'தம்மைக் கொல்வதையே ஒரே குறியாகக் கொண்டு முன்னேறி வரும் ராணுவத்திடம் போய்ச் சேர்வதற்கு எத்தனை பொதுமக்கள் தயாராக இருந்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இதற்கு யுத்தம் முடிவடைந்தபின்னர் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களே சாட்சி.'

இப்படி ஒரு முழு கற்பனையை எழுதுபவரிடம் வேறு எதை எதிர்பார்க்கமுடியும் .

'தம்மைக் கொல்வதையே ஒரே குறியாகக் கொண்டு முன்னேறி வரும் ராணுவத்திடம் போய்ச் சேர்வதற்கு எத்தனை பொதுமக்கள் தயாராக இருந்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இதற்கு யுத்தம் முடிவடைந்தபின்னர் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களே சாட்சி.'

இப்படி ஒரு முழு கற்பனையை எழுதுபவரிடம் வேறு எதை எதிர்பார்க்கமுடியும் .

வேறு எதுவும் தேவையில்லை கடைசி நவநீதம்பிள்ளையின் அறிக்கையையாவது வாசித்து இருக்கலாம் .சரணடைய வந்த மக்களுக்கு இடையே கூட தற்கொலை தாக்குதல் செய்ததும் பதிவில் இருக்கு .

 உங்கள் கருத்துகளை பர்ர்த்தால் அப்பட்டமான புலி எதிர்ப்பு கருத்து ஒழிய ஒரு யதார்த்தமும் இல்லை ...
நவநீதன் பிள்ளை யின் அறிக்கை என்ன வேத வாக்கா  ? ஐ .நா விசாரணையை என்ன ஒரு உண்மையான அக்கறையான விசாரணை என்று சொல்லனுமா ?
 
எல்லாம் ஒரு கண்துடைப்பு நாடகம் ... உண்மையை குழி தோண்டி புதைக்கும் விசாரணை ...
இறுதி நாட்களில் நடந்தது எல்லாருக்கும் தெரியும் ... அதனை உங்கள் கருத்திக்கு ஏற்றால் போல இங்க எழுத கூடாது ....
 
மக்களுக்காக போராடியவர்களை எல்லா நாடுகளும் சேர்ந்து அழிக்க வரும் போது மக்களும் தங்களால் முடிந்ததை செய்யத்தான் வேண்டும் ... மக்கள் கூட இருந்தால் உலக நாடுகள் குண்டு போட அனுமதிக்க மாட்டார்கள் என்பது ஒரு விடயம் தான் ... ஆனால் நடந்தது வேற ... இதனை ஆளாளுக்கு விமர்சனம் செய்வது வீம்புதணம் ஒழிய .. சிறந்த விமர்சனம் இல்லை .
 
புலிகள் பெற்ற எத்தனை வரலாற்று வெற்றிகளை பாருங்கள் அங்கெல்லாம் மக்களை வைத்தா வென்றார்கள் ... ஓயாத அலை 2,3,4 இதற்கு உதாரணம் ....
 
உண்மைகளை புதைத்து விமர்சனம் எழுதக் கூடாது ....இதனை கூடி நின்று செய்த நாடுகளும்  இலங்கையும் தான் அப்பட்டமான் கேவலமான் குற்றவாளிகள் .புலிகள் அல்ல ....
  • கருத்துக்கள உறவுகள்

கோஷான், 

புலி அபிமானி, அரச அபிமானி....இப்படி எல்லோருமே ஏதோ ஒருவகையில் எவரினதோ அபிமானிகள்தான். நடுவுநிலமை என்று எவருமில்லை. ஏன், உங்களயே எடுத்துக்கொள்ளுங்கள், புலிகளை வசைபாடுவதைத்தவிர வேறு ஏதாவது அவர்கள் பறி இதுவரையில் ஏதாவது எழுதியிருக்கிறீர்களா? அப்படியிருக்கும்போது, நான் புலிகள் பக்கமாக சாய்ந்து எழுதுவதில் தவறிருப்பதாக நீங்களும் நினைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். 

புலிகள் மக்களைப் பகடைக் காய்களாகப் பாவித்தார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. இது நீங்கள் மட்டுமில்லாமல், சிங்கள அரசு, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, இந்தியா, ஐ.நா என்று எல்லோரும் பாவித்த "Human Shield" என்கிற சர்வதேச ரீதியில் புலிகளுக்கு மிகவும் பாரிய அவப்பெயரை ஈட்டிக் கொடுத்த பதம்தான். அதேபோல அர்ஜுன் அண்ணா சொன்னதுபோல, இறுதியில் மக்கள்மேல் தற்கொலைத் தாக்குதல் உற்பட பல தாக்குதல்களை நடத்தினார்கள் என்பது நான் கேள்விப்பட்டதுதான். இவை நடந்திருக்கலாம், அதை நான் மறுக்கவில்லை. நான் கூறவந்தது இவற்றை செய்வதற்கு புலிகளுக்கு காரண்மானவை எவை என்பதைத்தான், ஆனால் அவை நியாயமானவை என்பதை நானும் ஏற்கவில்லை. இறுதிவரை பொதுமக்கள் தம்முடன் இருக்கும்வரை, இராணுவம் கடூரமான தாக்குதல் ஒன்றை நடத்தாது என்றும், இதன்மூலம் கிடைக்கும் கால அவகாசத்தை வைத்து சர்வதேச அழுத்தம் ஒன்றின்மூலம் யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவரலாம் என்றும் நினைத்திருக்கலாம். இதுமட்டுமல்லாமல், ஒருவேளை யுத்தம் புலிகளுக்குச் சாதகமாக மாறும் நிலை ஏற்பட்டால், தம்முடன் பக்க பலமாக பொதுமக்கள் இருக்கவேண்டும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.

இவை எல்லாமே என்னுடைய ஊகம்தான். ஆனால், இது சரித்திரத்தில் இப்போதுதான் முதன்முறையாக நடப்பதாக நான் நினைக்கவில்லை. 2 ஆம் உலக யுத்தத்தில்கூட, ரஷ்ஷியாவினுள் ஜேர்மனியப் படைகள் நுழைந்தபோது, அவர்களை வரவேற்றது எரிந்துபோய், மக்கள் நடமாட்டம் இல்லாத பேய் நகரங்கள்தான். ஜேர்மனிய ராணுவம் உள்ளே வரும்போது அவர்கள் தங்குவதற்கோ, உணவு வளங்களைப் பெறவோ, இன்னோரென்ன தேவைகளுக்கே மிகவும் அத்தியாவசியமான மக்கள் வளத்தை ரஷ்ஷியர்கள் விட்டுவைக்கவில்லை. மக்களின் விருப்பத்திற்கு உற்பட்டோ அல்லது மீறியோ அவர்களை தம்முடன் அழைத்துக்கொண்டு போனார்கள்லிதனாலேயே மிகப்பெரிய நிலப்பரப்பினுள் உள்வாங்கப்பட்ட ஜேர்மனிய ராணுவம் சிறுகச் சிறுக சிதைக்கப்பட்டு இறுதியில் தோற்றும்போனது. இதை சரியென்று வாதாடும் நாம், புலிகள் செய்தபோது தவறு என்கிறோம். இரண்டிற்குமிடையிலான வித்தியாசம் வெற்றியும், தோல்வியும் மட்டுமே. இங்கே வெற்றி பெற்றவன் சொன்னது சட்டம், தோற்றவன் செய்ததெல்லாம் குற்றம் என்கிற கோட்பாட்டிற்குள் நான் நின்றுவிடுகிறோம். ஒருவேளை, புலிகள் இந்தப் போரில் வென்றிருந்தால் நீங்கள் என்ன சொல்லியிருப்பீர்கள் என்று கேட்க ஆசை எனக்கு.. 

ஆனால், நீங்கள் பார்க்க மறுக்கும் இன்னொரு பக்கத்தையும் நான் எழுதலாம் என்று நான் நினைக்கிறேன். அர்ஜுன் அண்ணா கேட்ட நவிப்பிள்ளையின் ஆவணப் பத்திரத்தை நானும் படித்தேன். அதேபோல கோர்டன் வைஸ், பிரான்ஸிஸ் ஹரிஸன் எழுதிய இரு புத்தகங்களையும் படித்தேன். இவை எல்லாவற்றிலும் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட ஒருவிடயம்தான், பொதுமக்களை வேண்டுமென்றே இராணுவம் குறிவைத்துத் தாக்கியது என்பது. முக்கியமாக மோதல் தவிர்ப்பு வலயம் என்று தானே அறிவித்து விட்டு, பொதுமக்களை அங்கே வரப்பண்ணி அவர்கள் மீது கடூரமான தாக்குதலை தொடுத்து ஆயிரக் கணக்கில் அவர்களை கொன்றழித்தது. அதுமட்டுமல்லாமல் தெளிவாக அடையாளமிடப்பட்ட வைத்தியசாலைகள் மீது, ஆயிரக்கணக்கில் காயப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்தும் தாக்குதல் நடத்தி, அங்கும் மக்களை கொன்றழித்தது. 

அடுத்தது, உள்ளே அகப்பட்டிருந்த மக்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டது. இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீறர்கள்? பதில் சுலபமானது, ஒன்று, மக்களைக் குறைத்து காட்டினால், அதாவது 420,000 பொதுமக்களை வெறும் 70,000 மட்டுமே என்று கணக்குக் காட்டினால், எல்லோருக்கும் உணவு அனுப்பவேண்டிய தேவை இருக்காது. ஏற்கனவே அமுலாக்கப்பட்டிருந்த கட்டாய மருந்து தடையினால் கொல்லப்பட்டுக்கொண்டிருந்த மக்களை மேலும் பட்டினி போட்டுக் கொல்லலாம் என்று அது கணக்குப் போட்டது. ஆனால் முக்கியமான காரணம் இன்னொன்று இருக்கிறது, அதுதான், தான் இறுதியாக நடத்தத் திட்டமிருந்த பாரிய அழித்தொழிப்பு யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கான கணக்கை மக்களை குறைத்து மதிப்புடுவதன் மூலம் மறைத்துவிடலாம் என்பது. இவை நான் ஊகித்தவை அல்ல, மாறாக கோர்டன் வைஸ் மற்றும் ஹரிஸன் அம்மையாரால் அவ்வப்போது சொல்லப்பட்டவைதான்.  

புலிகள் இழுத்துக்கொண்டுபோய் கொன்றார்கள் என்று அடிக்கொருதரம் கவலைப்படும் நீங்கள் இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

புலிகளை வசைபாடுவதைத்தவிர வேறு எதுவுமே நீங்கள் செய்ய முன்வராதபோது, நான்மட்டும் ஏன் புலி அபிமானியாக இருக்கக் கூடாது ? இறூதிவரை மக்களுக்காக தம்மை அர்ப்பணித்தார்கள் என்கிற நன்றிக்காக அவர்களின் அபிமானியாக இருப்பது ஒன்றும் தப்பில்லையே?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ராணுவம் மக்களை ஒருபோதுமே வேண்டுமென்று கொல்லவில்லை என்று நம்பும் ஒருவரால் மட்டும்தான், புலிகள் அழைத்துக்கொண்டுபோய் மக்களைக் கொன்றார்கள் என்று சொல்லவும், எழுதவும் முடியும் என்று நாம் நம்புகிறேன். சிங்கள தேசத்தினதும், சிங்கள இனவாதத்தினதும், அதனடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட ஒரு முற்றுமுழுதான் ஆக்கிரமிப்பு ராணுவத்தினதும் மனோநிலையை இன்றுவரை உணராத அல்லது உணர மறுக்கும் ஒருவரால்த்தான், புலிகளே மக்களின் கொலைக்குக் காரணம் என்று கண்ணை மூடிக்கொண்டு எழுதமுடியும் ! சாதாரண மனநிலையில் இருக்கும் ஒருவருக்கு நடந்தவை பற்றித் தெளிவான பார்வை இருக்கும் என்று நாம் நம்புகிறேன். 

அடிப்படையையே மறந்து எழுதுகின்றீர்கள் .ஆயுதம் தூக்கி போராட போனவர்கள் எல்லாம் சிங்கள அரசிற்கு எதிராகத்தான் ஆயுதம் தூக்கப்போனார்கள் .

இன்று வரை எமது எதிரி சிங்கள பேரினவாதமே. அதை வெல்ல என்ன செய்யலாம் என்றுதான் இன்று வரை அனைத்து தமிழர்களும் போராடுகின்றார்கள் .இதில் மிதவாதம் தீவிரவாதம் என்று அவரவர் சிந்தனைக்கு சரி என்று படுவதைத்தான் அவரவர் செய்கின்றார்கள் .எதிரிக்கான இந்த போரட்டத்தில் கருத்து வேறுபாடுகள்  இருக்கலாம் ஆனால் எதிரி சிங்கள அரசுதான் .

பல இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்ட ஆயுத போராட்டம் புலிகளின் போராட்டமாக மட்டும் வியாப்பித்தது உண்மை அதானால் அவர்கள் அரசியல் ,ஆயுத செயற்பாடுகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல .புலிகள் போகும் பாதை பயகரவாதமாக மாறி முழு தமிழினத்தையும் படுகுழியில் தள்ளபோகின்றது என்று நினைத்து புலிகளை விமர்சித்தால் அதற்கு பெயர் அரச ஆதரவு என்று ஆகாது .

ஜோர்ஷ் புஷ் தொடக்கம் புலிகள் வரை தம்முடன் உடன்படாதவர்களை எதிரிகளாக பார்த்துதான் அவர்கள் அரசியல் .அந்த அரசியலை தான் சரி என்று நிறுவ எதிரியை விட தம்மை விமர்சித்தவர்களை அதி கூடிய எதிரியாக பார்த்தார்கள் .

முள்ளிவாய்கால் வரை மக்களை கூட்டிக்கொண்டு செல்ல பல ஆண்டுகள் முதலே புலிகளின் கொலை  அரசியல் எமது போராட்டத்தை இப்படிதான் கொண்டு போய் முடிக்கப்போகின்றது என்று பலர் பல தடவைகள் திருப்ப திருப்ப சொன்னார்கள் எழுதினார்கள் .

அவர்களை துரோகிகளாக்கி தமது பாதையிலேயே கொலை அரசியலை தொடர்ந்து துரோகியானவர்கள் சொன்ன பாதையிலேயே போராட்டம் முடிந்தது .

மக்களை கேடயம் ஆக்கி போராடியது புலிகள் மட்டுமல்ல பல போராட்டங்களில் இன்று வரை நடப்பதுதான் அதற்காக அது சரியென்று ஆகாது .

மகிந்த அரசு இவ்வளவு அப்பாவி தமிழர்களையும்பலியெடுக்க காரணாமாக அமைந்தது புலிகள் கடைசி நேரம் வரை செய்த அடாவடிகள் தான் .போரை முடிக்கக்கதான் சர்வதேசம் உதவியது ஆனால் இவ்வளவு அப்பாவிகளின் உயிரையும் பலியெடுக்க உதவியது புலிகள் தான் .

எதிரி சிங்களவன் தான் ஆனால் நாம் செய்யும் பிழையான அரசியல் அவனுக்கு சாதகமாக அமைந்தால் ஆக கூடிய பிழை அதை செய்தவர்கள் மீது தான் .இது இன்று கூட்டமிப்பிற்கும் பொருந்தும் .

சிட்னி ஆஸியில் இருக்கும் முன்னாள் தோழரை சந்தித்துவிட்டு  இப்போதான் வீடுவந்தேன் .எவ்வளவு தெளிவாக எமது அரசியல் கதைத்தார் .நன்றி T3S.  (TAMIL EELAM SCHOOL FOR SOCIAL SCIENCE) 

Edited by arjun

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.