Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் மக்களிடையே பிளவை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி

Featured Replies

புலம்பெயர்ந்த மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கிலேயே, அரசாங்கம் உலக தமிழர் பேரவையுடன் பேச்சுவார்த்தையை நடத்தவிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் கூறியுள்ளார்.
 
தமிழீழ மக்களும், தமிழக மக்களும் மற்றும் புலம்பெயர்ந்த மக்களும் ஒரே நோக்கத்தில் செயற்பட்டால் விரைந்து அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.பதிவு இணைய செய்தி
 
ஆனால் இதனை முறியடிப்பதற்கான சூழ்ச்சியாகவே தற்போதைய பேச்சுவார்த்தைகள் அமைகின்றன.பதிவு இணைய செய்தி
 
புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடையே பிளவை ஏற்படுத்து, தங்களுக்கு சாதகமான சூழ்நிலை ஒன்றை ஒருவாக்கிக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கிறது.பதிவு இணைய செய்தி
 
அத்துடன் புலம்பயர்ந்த அமைப்புகளை சிக்கலில் தள்ளிவிடும் சூழ்ச்சியாகவும் இதனை பார்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

http://www.pathivu.com/news/40726/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

புலியை பிளந்தவர்களுக்கு.....புலம்பெயர்ந்தவர்களை பிளப்பது பெரிய விடயம் இல்லை :D...லிங்கத்தார் இன்னும் அர்சியலில் இருக்கிறார் போல....ஒரே அறிக்கையா விடுகிறார்

நினைவேந்தல் நிகழ்வுகளை சாடும் கம்பவாரிதி:-
 
kampan_CI.jpg
 
புலம்பெயர் தமிழர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்த நினைவேந்தல் நிகழ்வுகள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டுமென கம்பவாரிதி ஈ.ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.
 
நாட்டின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தினை சீர்குலைக்கும் வகையில் புலம்பெயர் தமிழர்கள் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் புலம்பெயர் தமிழர்களுக்கு பொழுது போக்காக மாற்றமடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
கனேடிய வானொலிச் சேவைக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
புலம்பெயர் தமிழர்கள் அனைத்து சுகபோகங்களுடனும் செழிப்பாக வாழ்ந்து வருவதாகவும், இவர்கள் தங்களது தாளத்திற்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்களை ஆட்டுவிக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
அண்மையில் நடைபெற்ற கம்பன் விழாவில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அழைத்தமை தொடர்பில் கம்பவாரிதி ஜெயராஜிற்கு கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் சமாதான மற்றும் நல்லிணக்க முனைப்புக்களை சில புலம்பெயர் தரப்பினர் எதிர்த்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
வடக்கு கிழக்கு மக்களின் தீர்மானங்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமே தவிர அவர்களது சொல்லுக்கு மக்களை ஆட்டுவிக்க புலம்பெயர் தமிழர்கள் முயற்சிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் அடுத்த தலைமுறைக்கு தமிழை எழுதவோ பேசவோ தெரியாமல் போகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
30 ஆண்டுகளாக இடம்பெற்று வரும் யுத்தத்தை புலம்பெயர் தமிழர்கள் வெளியில் இருந்து வேடிக்கை பார்த்து வருவதாகவும், புலம்பெயர் தமிழர்களுக்கு யுத்தம் பொழுதுபோக்கு அம்சமாக மாறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 

புலம்பெயர்ந்த மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கிலேயே, அரசாங்கம் உலக தமிழர் பேரவையுடன் பேச்சுவார்த்தையை நடத்தவிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் கூறியுள்ளார்.

 

தமிழீழ மக்களும், தமிழக மக்களும் மற்றும் புலம்பெயர்ந்த மக்களும் ஒரே நோக்கத்தில் செயற்பட்டால் விரைந்து அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.பதிவு இணைய செய்தி

 

ஆனால் இதனை முறியடிப்பதற்கான சூழ்ச்சியாகவே தற்போதைய பேச்சுவார்த்தைகள் அமைகின்றன.பதிவு இணைய செய்தி

 

புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடையே பிளவை ஏற்படுத்து, தங்களுக்கு சாதகமான சூழ்நிலை ஒன்றை ஒருவாக்கிக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கிறது.பதிவு இணைய செய்தி

 

அத்துடன் புலம்பயர்ந்த அமைப்புகளை சிக்கலில் தள்ளிவிடும் சூழ்ச்சியாகவும் இதனை பார்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

http://www.pathivu.com/news/40726/57//d,article_ful

 

இறுதி யுத்தத்துக்கு பிறகு புலம்பெயர் அமைப்புக்களுக்குள் பல பிரிவு உருவாக்கி விட்டது.

 

புலிகளில் சர்வதேச அமைப்புக்குள்ளேயே பிரிவுகள்.

 

இப்போ அரசாங்கம் ஒன்றும் புதுசா பிளவுகளை ஏற்படுத்தவில்லை இருக்கும் சூழலை நன்றாக பயன்படுத்துகின்றது.

 

நான்தான் பெரிது நாம் சொவதை தான் மற்றவர்கள் கேட்கவேண்டும் என்று இருந்தால் இப்பிடித்தான் முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

அதைப்பற்றி சிந்திக்க வேண்டியவர்கள் புலம்பெயர்ந்தவர்கள்.......ராமருக்கு உவர் காவடி எடுக்கலாம் என்றால் நாங்கள் நினைவெந்தல் செய்வது தப்பில்லை

  • கருத்துக்கள உறவுகள்

அதைப்பற்றி சிந்திக்க வேண்டியவர்கள் புலம்பெயர்ந்தவர்கள்.......ராமருக்கு உவர் காவடி எடுக்கலாம் என்றால் நாங்கள் நினைவெந்தல் செய்வது தப்பில்லை

 

 

அது தானே

இவர் இந்திய ராமருக்கு காவடி எடுக்கலாம்

நாங்க பிரபாகரனுக்கு பாட்டுப்பாடக்கூடாதோ....?

இவருக்கு கொஞ்சம் வாய் நீளுது

நல்லதற்கல்ல...

தம்பி குருபரன் அவர்கட்கு 
நீங்கள் பிரசுரித்த செய்தியின் உண்மைத் தன்மை பற்றியும் அதற்கு நீங்கள் கொடுத்த கவர்ச்சி மிகு தலைப்பு பற்றியும் கவலையடைவதைத் தவிர வீறு என்ன செய்ய முடியும்? முதலில் நீங்கள் அந்தக் கொழும்பு ஊடகத்தின் செய்தியை அப்படியே கொடுத்திருந
்தால் சுலபமாக இருந்திருக்கும். சிலோன் ருடே ஆங்கில பத்தி ரிகையில் வந்த செய்தி தான் உங்கள் செய்திக்கு அடிப்படை. அதில் குறிப்பிட்டது போல கனடாவின் எந்த வானொலிக்கும் கம்பவாரிதி செவ்வி கொடுக்கவில்லை. சிட்னியில் இயங்கும் எஸ்.பி.எஸ் தமிழ் வானொலியின் நிருபர் ஒருவர் அவரை புதுவைக் கம்பன் விழாவில் ஒரு நாள் சந்தித்து செவ்வி கண்டார். அதன் இணைப்பையும் சிலோன் ருடே இணைப்பையும் கீழே காணலாம்.
சமூக வலைத்தளங்களும் மின்னூடகங்களும் பெருகியுள்ள இக்காலத்தில் நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறனும் இன்றி வஞ்சனை செய்பவர்கள் அவதூறு சேய்திகளைப் பரப்புகிறார்கள். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

திருநந்தகுமார் .


11391222_10205871502541039_4593194977805


பார்க்க பெருமையாக இருக்கிறது .நால்வரும் யாழ் இந்து .இருவர் எனது வகுப்பு மற்ற இருவரும் அடுத்த வகுப்பு .

தம்பி குருபரன் அவர்கட்கு 

நீங்கள் பிரசுரித்த செய்தியின் உண்மைத் தன்மை பற்றியும் அதற்கு நீங்கள் கொடுத்த கவர்ச்சி மிகு தலைப்பு பற்றியும் கவலையடைவதைத் தவிர வீறு என்ன செய்ய முடியும்? முதலில் நீங்கள் அந்தக் கொழும்பு ஊடகத்தின் செய்தியை அப்படியே கொடுத்திருந்தால் சுலபமாக இருந்திருக்கும். சிலோன் ருடே ஆங்கில பத்தி ரிகையில் வந்த செய்தி தான் உங்கள் செய்திக்கு அடிப்படை. அதில் குறிப்பிட்டது போல கனடாவின் எந்த வானொலிக்கும் கம்பவாரிதி செவ்வி கொடுக்கவில்லை. சிட்னியில் இயங்கும் எஸ்.பி.எஸ் தமிழ் வானொலியின் நிருபர் ஒருவர் அவரை புதுவைக் கம்பன் விழாவில் ஒரு நாள் சந்தித்து செவ்வி கண்டார். அதன் இணைப்பையும் சிலோன் ருடே இணைப்பையும் கீழே காணலாம்.

சமூக வலைத்தளங்களும் மின்னூடகங்களும் பெருகியுள்ள இக்காலத்தில் நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறனும் இன்றி வஞ்சனை செய்பவர்கள் அவதூறு சேய்திகளைப் பரப்புகிறார்கள். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

திருநந்தகுமார் .

11391222_10205871502541039_4593194977805

பார்க்க பெருமையாக இருக்கிறது .நால்வரும் யாழ் இந்து .இருவர் எனது வகுப்பு மற்ற இருவரும் அடுத்த வகுப்பு .

அடுத்த வகுப்பில் படித்த இருவரும் என் பெரியப்பாவோடு படித்தவர்கள் :)

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியை சந்தித்த விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்தியில்.. தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு பணம் வழங்கப்பட்டிருப்பதாகவும்.. அந்தப் பணம் மக்களின் அபிவிருத்தி என்று வழங்கப்பட்டிருப்பதாகவும்.. அது தவறான அணுகுமுறை என்றும்... அபிவிருத்தியை வடக்கு மாகாண சபையூடாக முன்னெடுக்கவும்.. நிதிகளை முதலமைச்சர் நிதியம் ஒன்றை ஆரம்பித்து அதனூடாக வழங்கும் படியும்.. அவ் நிதியத்தின் கணக்காய்வுகளை மத்திய அரசு மேற்கொண்டு நிதிப்பயன்பாட்டை கண்காணிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

 

இது இப்படி இருக்க.. தேர்தலை நோக்காகக் கொண்டு புலம்பெயர் தமிழர்களை குழப்பவும்.. உண்டியல் குலுக்கவும்.. லண்டன் வந்துள்ள சுமந்திரன்.. மீள் குடியேற்றத்தைக் காரணம் காட்டி புலம்பெயர் மக்களிடம் நிதி கேட்கிறார்.

 

ஆனால்.. அரசியல் முடிவுகளில் புலம்பெயர் மக்கள் பார்வையாளர்கள் மட்டும் தானாம்.

 

இது புலம்பெயர் மக்களை புறந்தள்ளி தாயக மக்கள் மீது நல்லிணக்கம்.. ஒருமைப்பாடு.. சாந்தி.. சமாதானம் என்ற பதங்களூடு சிங்கள பேரினவாத ஆதிக்கத்தை திணிக்க சம் சும் கும்பல் எடுக்கும் நடவடிக்கையாகவே உள்ளது. இதற்கு மாற்றீடாக சிங்களம் தேர்தலுக்கு முன்னர் பணமும்.. தேர்தலுக்கு பின்னர் பதவிகளும் வழங்கலாம் என்று தெரிகிறது.

 

இது ரணிலின் நரித்தன அணுகுமுறையின் இன்னோர் வடிவம்.

 

இது குறித்து தாயக மக்கள்.. புலம்பெயர் மக்கள்.. தமிழக மக்கள் எல்லோரும் மிக விளிப்போடு செயற்பட்டு இவர்களின் சதித்திட்டங்களை முறியடிக்க வேண்டும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கில ஊடகத்துக்கு சிவாஜிலிங்கம் ஊமைப் பாசையிலையா பேட்டி குடுத்தவர்?

கம்பவாரிதியின் பேச்சுக்களில் உண்மை இல்லாமலும் இல்லை!

நினைவேந்தல் நிகழ்வுகளை சாடும் கம்பவாரிதி:- என்ற தலைப்பிட்டு குளோபல் தமிழ்ச் செய்திகளில் வெளிவந்த செய்தி தொடர்பில் எமது கொழும்பு செய்தியாளர் அனுப்பி வைத்த குறிப்பு.....

அன்புடன் அண்ணா.....


ஆங்கிலப் பிரதியில் முன்னதாக Mourning என தலைப்பிடப்பட்டிருந்தது.

எனினும், தற்போதைய பிரதியில் mongering என குறிப்பிடப்பட்டுள்ளது.
 

 

Mourning  என்பது இரங்கலை குறிப்பதாக அமைந்துள்ளது, mongering என்பது விருப்பத்தகாத விடயத்தை, ஒர் உணர்வை, செயற்பாட்டை, சூழலை ஊக்குவிப்பவரை குறிப்பதாக அமைந்துள்ளது.

தற்போது ஈ பேப்பரில் பிரதியிடப்பட்டுள்ளது, எனினும் நான் டெக்ஸ்டை பார்த்து இதனை மொழி பெயர்த்திருந்திருந்தேன்.

குறிப்பு (லண்டன் நேரம் அதிகாலை 3.30. 4.30 ற்கு இடையில் பல செய்திகளை இலங்கையில் இருந்து கிடைக்கப்பெறுவோம்...)

எது எப்படி இருந்த போதும் 

நினைவேந்தல் நிகழ்வுகளை சாடும் கம்பவாரிதி:- என்ற தலையங்கம், அதனுடன் கூடிய புலம்பெயர் தமிழர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்த நினைவேந்தல் நிகழ்வுகள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டுமென கம்பவாரிதி ஈ.ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.


யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் புலம்பெயர் தமிழர்களுக்கு பொழுது போக்காக மாற்றமடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனேடிய வானொலிச் சேவைக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ( கனேடிய வானொலி அல்ல அவுஸ்ரேலிய வானொலி) என்ற விடயங்களை மீளப்பெறுவதோடு பொறுப்பான ஊடகம் என்ற வகையில் கம்பவாருதி அவர்களிடமும் - கம்பன் கழகத்தின் உறுப்பினர்கள், ஆதரவாளர்களிடமும், உலகலாவிய எமது நேயர்களிடமும் எமது வருத்தத்தை தெரிவிப்பதுட் மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன்..


எனினும் கம்பவாருதி வழங்கிய கடுமையான செவ்வியின் ஏனைய விடயங்கள் குறித்த எமது செய்தி வெளியிட்டீல் தவறு இல்லை என்பதனையும்  அதற்கான இணைப்புகளையும் தருகிறோம்...
 

 
 
link
 
 
 
 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

 

 
30 ஆண்டுகளாக இடம்பெற்று வரும் யுத்தத்தை புலம்பெயர் தமிழர்கள் வெளியில் இருந்து வேடிக்கை பார்த்து வருவதாகவும், புலம்பெயர் தமிழர்களுக்கு யுத்தம் பொழுதுபோக்கு அம்சமாக மாறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 

 

 

புலம்பெயந்தவன் எல்லாம் வேடிக்கை பாத்த வேளை இவர் தான் கொழுப்பில் சமாதானப் பேச்சுக்களுக்குத் தலைவராம் உண்மையோ 

 

நன்றி ஆதவன் இணைப்பிற்கும் விளக்கத்திற்கும்.

 

இங்கு முதலில் ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இவ்வருடம் கம்பன் விழாவில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் மன்னார் ஆயரே கௌரவிக்கப்பட இருந்தார். வரும் வழியில் மன்னார் ஆயர் விபத்தொன்றில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதனால் அவரால் வரமுடியவில்லை. நானும்தான் போயிருந்தேன் - முக்கியமாக சுமந்திரனும் வந்திருந்தார். முதல்வர் சிவி, சம்மந்தனும்தான் முன்னர் கௌரவிக்கப்பட்டனர். மைத்திரி தலைமை வகித்ததில் தப்பு எதுவுமில்லை. ஆனாலும் மைத்திரி இந்த விழாவிற்கு எதுவித ஆர்ப்பாட்மும் இல்லாமல் வந்து இறங்கினார். எந்த வீதியும் மூடப்படவில்லை, இராணுவம் எங்குமில்லை, வெறும் ஒரு ஜீப்பில் பொலிசார் சேரந்து வந்திருந்தனர். அட இது இலங்கையா என்று நானே வியந்து போனேன்.

 

அப்புறம், இங்கும் யாழ் இந்துக்கல்லூரியின் இவ்வருட ஆண்டுவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பல பஸ்களில் யாழில் இருந்து மாணவர்களும் வந்திருந்தார்கள்.

 

ஆமா அப்படி என்னதான் தப்பா சொல்லீட்டார் என்று குத்தி முறிகின்றீர்கள்.

 

மற்றய முக்கியமான விடயம் - இங்கு கம்பன் கழக ஜெயராஜ் சொல்வதைத்தானே ஒட்டுக்குழு, ஒட்டாத குழு, ஒட்டுண்ணி என்று பேரெடுத்தவர்கள் முக்கி முக்கி எழுதுகிறோம். 
 
என்னத்தை புரிஞ்சுதோ - தயவு செய்து ஆதவனின் இணைப்பிலுள்ள பேட்டியைக் கேட்டபின் கருத்திடவும்.
 
மாற்றம் தேவை தேவை என்று கத்தினோம். இப்போது அவரகள் மாறினாலும் ஐயோ நடிக்கின்றாங்கள் என்கின்றோம் - நல்லா வருவம்.

 

 

ஆங்கில ஊடகத்துக்கு சிவாஜிலிங்கம் ஊமைப் பாசையிலையா பேட்டி குடுத்தவர்?

கம்பவாரிதியின் பேச்சுக்களில் உண்மை இல்லாமலும் இல்லை!

 

சிவாஜிலிங்கம் இப்போது மாகாணசபை உறுப்பினதானே? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.