Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனந்திக்கு யாழில் சீற்? சிவாஜிலிங்கத்திற்கு வழங்கக்கூடாது என உத்தரவு! தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சிதைக்கவும் முயற்சி!!

Featured Replies

கிருபன் நீங்கள் சொல்வது சரிதான். இவர்கள் என்னதான் குத்தி முறிந்தாலும் மக்கள் முட்டாள்கள் இல்லை. மகிந்த யாழ்ப்பாணத்தில் நின்று வெற்றி பெற்றால் அதனையும் மக்கள் தீர்ப்பாக என்னால் ஏற்றுக் கொள்ளமுடியும்.
 
ஆனால் தாயக மக்கள் சார்பில் யார் தேர்தலில் நிற்பது, யாருக்கு மக்கள் வாக்களிப்பது என்பது அவர்கள் விருப்பம். சும்மா இன்னும் மக்கள் ஆயுதத்திற்கு பயப்பட வேண்டும் என்று சிலர் விரும்பினால் அதுவும் தமிழீழம் போல் ஒரு கனவுதான்.
 
கனவு காண்பவர்கள் நிஜத்தில் வாழ்வதில்லை.
  • Replies 50
  • Views 2.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல தாயக மக்கள் முடிவெடுக்கட்டும்.. அப்புறம் நாங்க அடிபடுவம். அவங்க இதைத்தான் நினைக்கிறாங்க என்று நாங்க நினைக்கிறதை கருத்தில் விதைக்கலாம்.. அது இலகு. ஆனால்.. அவங்க என்ன நினைக்கிறாங்க என்பதை தேர்தல் முடிவுகள் தான் இனங்காட்ட முடியும். :icon_idea::)

அதைதான் நானும் சொல்கின்றேன் .பிறகு நான் பெரிது நீ பெரிது என்று அடிபடுவதில் அர்த்தம் இல்லை .இதற்குள் சிலர் புலிகளால் உருவாக்கப்பட்டது என்று கதை வேறு .புலிகள் தோன்றமுதலே எம் பியாக இருந்தவர் சம்பந்தர் .

காங்கிரஸ் - தமிழரசு - கூட்டணி-கூட்டமைப்பு . 

இதுதான் தமிழ் மக்களின் அரசியல் பிரதிபலிப்பு .விட்டு பிரிந்தவர்கள் மண் கவ்வியதுதான் சரித்திரம் .

தமிழரசு கட்சி தில் இருந்தா கூட்டமைப்பில் இருந்து விலகி தனித்து கேட்டு பார்க்கட்டும் ... முடியுமா அவர்களால் .... தெர்யும் சம்பந்தன் , சுமந்திரனின் புண்ணாக்கு அரசியல் எல்லாருக்கும் தெரியும் ... அர்ஜுன் சொல்லி இருந்தார் சம்பந்தன் அப்பவே எம்.பி என்று .... தெரியாமல் தான் கேட்கிறான் ஒரு ஆக்கபூர்வமான செயல் சொல்ல முடியுமா .... சிங்கக்கொடி பிடித்ததும் , சுதந்திர தினத்திக்கு போனதுதான் அவர் செய்த பெரும் செயல் .... அதுக்கு இவர்களின் பக்கவாத்தியம் வேற .... கொடுமையடா சாமி ....
 
தந்தை செல்வா தெளிவாக சொன்னதற்கு பிறகும் கூத்தாடும் சம்பந்தனை என்னவென்பது .... 
  • கருத்துக்கள உறவுகள்

 

நன்றி
 
1- இதைத்தான் நானும் சொல்கின்றேன். கூட்டமைப்பு என்பது பல கட்சிகளால் சேர்ந்து அமைக்கப்பட்ட, எமது அரசியல் அபிலாசைகளை முன்னிறுத்தி செயற்பட வேண்டிய ஒரு அரசியல் அமைப்பு. அதில் புலியும்இருக்கலாம் புளொட்டும் இருக்கலாம். இது தாயக மக்களின் தெரிவு, அவர்களது விருப்பம். இங்கு யாரும் (நானும்தான்) யாருக்கும் வக்காளத்து வாங்கத் தேவையில்லை.
 
 
மக்கள் முடிவெடுக்கட்டும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைத்தான் சக களஉறுப்பினரிடம் எதிர்பார்க்கின்றேன்.
 
இன்னொரு முக்கியமான விடயம் :
இனி அரசியல் பேசமாட்டேன் என்பதை நாங்கள் நம்பியது தான் கடைசி நம்பிக்கை
அதுவும் போச்சு...
 
2- இங்கு சக கள உறுப்பினர் அரசியல் பேசுவது தப்பா? ஏதோ கோபத்தில் அவர் சொல்லியிருக்கலாம். ஆனால் என்ன பேசுவதென்பது அவர் உரிமை. அதை மறுத்தால் அல்லது அதை இகழ்ந்தால் நாம் கடந்த 30 வருடங்களில் எதையுமே புரிந்திருக்கவில்லை என்றுதான் தெரிகிறது.

 

 

1-இந்தத்திரியில் அனந்தி வெளியில்போய் வென்று காட்டட்டும் என்று எழுதியது நானல்ல. அவர் அவ்வாறு எழுதியதாலேயே நானும் எழுதவேண்டிவந்தது.

அவர் அனந்தி வெளியில் போகட்டும் என்பதை ஏற்கும் தாங்கள் கூட்டமைப்பு எவருக்கும் சொந்தமல்ல என்றும் எழுதுவது உங்களுக்குள்ளேயே உள்ள கருத்து முரண்பாடு.

 

2- தமிழீழம் என்பது தமிழர்களின் கனவு. அதை பலமுறை தாயகத்தமிழர்கள் நிரூபித்தும் உறுதிப்படுத்தியும் உள்ளனர்.

அதை நியமாக்க பல்லாயிரம் புலிகள் 

புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம் என இறுதி மூச்சிலும் சொல்லி தமிழருக்காக உயிரைக்கொடுத்தார்கள்.

அவர்களது கனவை தியாகத்தை நக்கலடிக்கமுடியும் என்றால்

அதை நீங்கள் மறந்துவிடுவீர்கள் என்றால்

நேற்றுச்சொன்னது என்னாச்சு என்றுதான் கேட்கமுடியும்??

முதலில் 

அவர்களது கருத்துக்களை உள் வாங்குங்கள்

 

அடுத்து  ஒட்டுக்குழு

ஒட்டாத குழு என்று நான் எங்கு எழுதியுள்ளேன் எனக்காட்டுங்கள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக்கட்சி தனித்து நின்று வென்று காட்டினால் நாங்கள் அதற்குத் தலைவணங்குவோம்.சம்பந்தர் இந்த முறை தமிழர் தாயகம்,தேசியம் ,சுயநிர்ணய உரிமையை குழிதோண்டி புதைக்கப் போவது உறுதி.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் குறூப்க்கு வாழ்த்துக்கள்,தேர்தலில் வெல்வதற்கு.ஆனால் தலைவரையோ புலிகளையோ புகழ்ந்து பேசுவதை கூட்டங்களில் தவிர்க்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் குறூப்க்கு வாழ்த்துக்கள்,தேர்தலில் வெல்வதற்கு.

ஆனால் தலைவரையோ புலிகளையோ புகழ்ந்து பேசுவதை கூட்டங்களில் தவிர்க்கவேண்டும்.

 

தேர்தலில்  வெல்ல  வாழ்த் துச்சொல்கிறீர்கள்

ஆனால் வெல்லும் வழிக்கு தடை போடுகின்றீர்கள்

வேறு எப்படி வெல்வதாம்..... :(

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு மாற்னுக்கருத்து மாணிக்கங்கள் கிண்டும் அல்வாக்களை மக்களிடம் கொடுத்து வெல்லட்டும்.

எங்கு எதை பேச வேண்டும் என்று அரசியல்வாதிகளுக்கு நன்கு தெரியும் .தலைவரை புலிகளை மட்டும் அல்ல அவர்களை அழித்தவர்களையும் புகழ்ந்து பேசுவார்கள் .

 

யாழ்ப்பாணத்தமிழனுக்கு யார் வென்றாலும் பிரச்சனையில்லை்

ராமன் ஆண்டாலென்ன ராவணன் ஆண்டாலென்ன பின் கதவால வந்த குரங்கு ஆண்டாலென்ன அவன் சுழிச்சு தன்ட வாழ்க்கையை வாழ்ந்து போய்க்கிட்டேயிருப்பான். டக்ளஸ் தேவாங்கையே தொடர்ந்து வெல்ல வைக்கிறவனுக்கு சுமந்திரன் எம்மாத்திரம். சும்மா நச்சுன்னு வாக்க குத்தி போய்க்கிட்டேயிருப்பான்.

இதே தென் தமிழீழத்திற்கு வாங்கடி வப்பம் உங்களுக்கு ஆப்பு. ஒருக்கா திருமலயில வச்சமில்ல.

என்ன சனத்திற்கு வேற தெரிவில்லாதபடியா அங்கு கூட்டமைப்பு வெல்லுது. ஆனா இந்த முறை சனம் ஆப்பிறுக்கும் போலத்தான் தெரியுது.

இதே தென் தமிழீழத்திற்கு வாங்கடி வப்பம் உங்களுக்கு ஆப்பு. ஒருக்கா திருமலயில வச்சமில்ல.

 

 

செந்தமிழா 
மக்கள் ஆப்பென்ன ஆணியே இறுக்கட்டும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைத்தான் சக கள உறவுகளிடம் எதிர் பார்க்கின்றேன்.
  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் வடக்கில் போட்டியிட்டால்.....
த. தே. கூ. வுக்கு.... விழும் வாக்குகளும்,
சுமந்திரனை விட.... டக்ளஸ் பரவாயில்லை என்று....
டக்ளசுக்கு... வாக்களித்து, விடுவார்கள்.
சம்பந்தர் அய்யாவும்... இதுக்குத்தான், பிளான் போடுகிறார் போலை கிடக்கு. :huh:  :(  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

 

எழுத மறந்த விடயம்.
 
"மற்றம்படி எவரையும் ஒட்டும் ஒட்டாத குழுக்கள் என்பதற்கும் 
கூட்டமைப்புக்குள் எவருக்கும் அதிகாரமில்லை."  -  விசுகு
 
புலிகளுடன் உடன்பாடில்லாதவர்களை ஒட்டுண்ணி, ஒட்டுக்குழு, ஒட்டாதகுழு, துரோகிகள், அடிவருடிகள்... இப்படி எத்தனையோ வார்த்தைகளால் வர்ணிக்கும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது.

 

 

ஊர் கூடி... தேர் இழுக்கும் போது.....

அதற்கு... தானும் இழுக்காமல், ஒதுங்கியும் இருக்காமல்....

நெடுகவும்... முட்டுக்கட்டை போட்டுக் கொண்டு,  இருந்தவர்களை.....

ஒட்டுண்ணி, ஒட்டுக்குழு, ஒட்டாதகுழு, துரோகிகள், அடிவருடிகள்...  என்று சொல்வதில் தப்பில்லை ஜீவன் சிவா :)

சுமந்திரன் வடக்கில் போட்டியிட்டால்.....

த. தே. கூ. வுக்கு.... விழும் வாக்குகளும்,

சுமந்திரனை விட.... டக்ளஸ் பரவாயில்லை என்று....

டக்ளசுக்கு... வாக்களித்து, விடுவார்கள்.

சம்பந்தர் அய்யாவும்... இதுக்குத்தான், பிளான் போடுகிறார் போலை கிடக்கு. :huh:  :(  :icon_idea:

 

உங்கள் ஆசைப்படி மக்கள் தாம் விரும்பி டக்லஸுக்கே வாக்களிக்கட்டும். இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை. மக்கள் வாக்களித்து தெரிவு செய்த டக்லஸையும் மக்களின் பிரதிநிதியாக ஏற்றுக் கொள்ளுங்களேன். 
 
இங்குதான் உங்கள் பிரச்சனையின் ஆரம்பம். உங்கள் தெரிவுகளிற்குத்தான் மக்கள் வாக்களிக்க வேண்டுமென்ற நினைப்பை ஆயுத கலாச்சாரம் ஒழிக்கப்பட்ட தாயகத்தில் என்றோ இழந்துவிட்டீர்கள். ஆயுதத்தால் மக்களை இனியும் அடிமைப்படுத்த முடியாது. அவர்கள்  கணனியில் கதைப்பவர்களை விட மிகவும் புத்திசாலிகள். அவர்கள் தமது தேவைகளை, விருப்பங்களை துல்லியமாக வெளிக்காட்டுவார்கள். மக்கள் கருணாவிற்கு/ஆனந்தசங்கரிக்கு வாக்களித்தாலும் அவரை எமது மக்களின் பிரதிநிதியாக நான் ஏற்றுக்கொள்வேன். ஏனென்றால் அது மக்கள் தெரிவு. 
 
 
 
உங்களால் முடியுமா?

ஊர் கூடி... தேர் இழுக்கும் போது.....

அதற்கு... தானும் இழுக்காமல், ஒதுங்கியும் இருக்காமல்....

நெடுகவும்... முட்டுக்கட்டை போட்டுக் கொண்டு,  இருந்தவர்களை.....

ஒட்டுண்ணி, ஒட்டுக்குழு, ஒட்டாதகுழு, துரோகிகள், அடிவருடிகள்...  என்று சொல்வதில் தப்பில்லை ஜீவன் சிவா :)

 

இதைத்தானே நானும் திரும்ப திரும்ப திரும்ப சொல்கின்றேன். மக்கள் ஆயுத அச்சமின்றி ஜனநாயக ரீதியாக தமது விருப்பத்தை சொல்கிறார்கள். சம்சும் கொடியை ஆட்டினாலும் மக்கள் அவர்களிற்கே வாக்களிக்கிறார்கள். 
 
எனவே மக்கள் எந்த ஆயுத அச்சுறுத்தலும் இல்லாமல் தாமாக சேர்ந்து தேர் இழுக்கின்றார்கள். அதற்கு எதிராக இருப்பவர்கள் முட்டுக்கட்டை போடுபவர்கள் ஒட்டுண்ணி, ஒட்டுக்குழு, ஒட்டாதகுழு, துரோகிகள், அடிவருடிகள்தானே.

சூப்பர் ஜீவன் பின்னுறிங்க.

பலருக்கு கடைசி தாம் வசிக்கும் நாடுகளில் என்ன நடக்குது என்றாவது தெரிந்திருக்கலாம் . :icon_mrgreen:

 

ஊர் கூடி தண்டா போடா முடியாத தேரை இழுத்து தேர் கடைசியில் அவர்கள் தலையில் விழுந்ததுதான் மிச்சம் .முன் கூட்டியே அதை கணித்த ஒட்டுக்குழுக்கள் தான் தீர்க்கதரிசிகள் .

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் சிவாவுக்கு, அரசியல் அறிவு... பத்தாது போலை கிடக்கு. :rolleyes: 
201 வாக்கு வாங்கிய, டக்ளஸ் ஸ்ரீலங்கா தேர்தலில், வெற்றி பெற்று... அமைச்சராக முடியும் என்றால்...
உங்கடை.... சன நாயகத்தை தூக்கி, குப்பையில் போட்டு விட்டு, "சமையல் குறிப்பில்" கருத்து எழுதுங்கள். :D  :icon_idea:

Edited by தமிழ் சிறி

ஜீவன் சிவாவுக்கு, அரசியல் அறிவு... பத்தாது போலை கிடக்கு. :rolleyes: 

 

 

நன்றி

 

இது உங்களுக்கு இப்பவாவது புரிந்ததே நான் முட்டாள் என்று.

 

ஆனால் ஒரு விடயம் நான் எனது மக்களை மதிப்பவன், அவர்களது கருத்தையும் மதிப்பவன்.

சுமந்திரனுக்கு, என்ன இழவுக்கு... இடம் ஒதுக்க வேண்டும்.

அதை... சிவாஜிலிங்கத்துக்கு கொடுக்கலாம்.

 

 

இதுதான் இத்திரியில் முதல் பதிவு அதுவும் உங்களது. 

சுமந்திரனை... அனுராதபுரம், மதவாச்சி தொகுதிகளில்... போட்டியிட வைத்தால்,

சிங்களவர்களே.... அவரை பாராளுமன்றத்துக்கு, அனுப்பி... வைப்பார்கள்.

பின்வாசல் சுமந்திரன் என்ற அவப் பெயரும்.. அத்துடன் நீங்கும். :icon_idea:

 

எவரும் உங்கள் பதிவிற்கு பதில் தராதபோதும் இரண்டாவதாக மறுபடியும் நீங்களே பதிவிட்டீர்கள். இதுதான் இவ்வளவிற்கும் காரணம்.

 

"திரியின்... தலைப்பை, திசைமாற வைத்தவர் கோசான் சே... அண்ணை."

 
நான் முட்டாள் என்பதால் சும்மா லொள்ளு பண்ணாதீங்க தமிழ்சிறீ
 
என்ன செலக்ரிவ் அம்னீசியாவா

Edited by ஜீவன் சிவா

ஜீவன் சிவாவுக்கு, அரசியல் அறிவு... பத்தாது போலை கிடக்கு. :rolleyes:

201 வாக்கு வாங்கிய, டக்ளஸ் ஸ்ரீலங்கா தேர்தலில், வெற்றி பெற்று... அமைச்சராக முடியும் என்றால்...

உங்கடை.... சன நாயகத்தை தூக்கி, குப்பையில் போட்டு விட்டு, "சமையல் குறிப்பில்" கருத்து எழுதுங்கள். :D:icon_idea:

சிறி அண்ணா நீங்கள் அப்படியே நகைச்சுவை பகுதியில் கருத்து எழுதுங்கள் அண்ணா. அரசியல் உங்களுக்கு வெகுதூரம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் சிவா,
நான்... அந்தப் பதிவை இட்ட நேரம், இங்கு காலை 5:27 , அடுத்தது 5:38
முதலில் எழுதிய, கருத்துக்கு.... வலு சேர்க்கவும், மறந்த விடயங்களை அதில் இணைக்கவுமே...

இரண்டாவது கருத்தையும், வைத்தேன்.
 

இந்த நேரத்தில்... யாருடைய பதிலையும்... நான் எதிர் பார்ப்பது என்பது, முழு முட்டாள் தனம். :)

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணா நீங்கள் அப்படியே நகைச்சுவை பகுதியில் கருத்து எழுதுங்கள் அண்ணா. அரசியல் உங்களுக்கு வெகுதூரம்.

 

ஓகே.. ஆரணி.

நீங்கள், சொல்லுகிற படியே... செய்ய, முயற்சிக்கின்றேன். :D  

 

உங்களை... கனகாலம் கண்டு, ஆரணி.

வேலையில், பிஸியோ.... :icon_idea:

ஆனந்திக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இடம் வழங்கமாட்டார்கள் .அவ விரும்பினால் கஜன் குழுவுடன் ( குதிரைகளுடன் சேர்ந்து கொள்ளுத் தின்னலாம் )இணைந்து போட்டியிடலாம் .

ஆனந்தி அப்பிடி என்ன பெரிதாக மக்களுக்கு செய்துவிட்டா ,போராட்டத்திற்கு பல ஆயிரக்கணக்கானவர்கள் சென்றார்கள் அதில் எழிலனும் ஒருவர் பலர் காணாமல் போயுள்ளார்கள் ,பலர் வீரமரணம் அடைந்தார்கள் ,அனால் அந்த குடும்பங்கள் எல்லாம் ஆனந்தியை போல சுயநலமாக சிந்திக்கவில்லை .

திருகோணமலை மாவட்டத்தில் மூதுர் பிரதேசத்தில் கங்குவேலி கிராமம் ,இக்கிராமத்தை சுற்றிசிங்கள கிராமங்களும் இராணுவமுகாங்களும் இங்குள்ள குடும்பமொன்றின் கணவர் (மக்களின் பிரச்சனைகளுக்காக முன்னின்று செயல்பட்டவர் )91இல் இராணுவத்தால் கொண்டு செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார் , இரண்டு பிள்ளைகள் மாவீரர்கள் ,புலிகளில் சென்றவர்களை விசாரிப்பதற்காக இன்னொரு மகனையும் இராணுவம் கொண்டு சென்றது இன்றுவரை இவருடைய விபரம் தெரியாது ,89இல் பிறந்த மகளுக்கு தகப்பனுடைய முகமும் தெரியாது தகப்பனுடைய பாசமும் இல்லாமல் வளர்ந்தார் .

இந்த குடும்பத்துடன்(இவர்கள் எவரிடமும் உதவிகேட்கவில்லை ) ஆனந்தியை ஒப்பிடும் போது யார் அதிக வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்திருப்பார்கள் ?

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்திக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இடம் வழங்கமாட்டார்கள் .அவ விரும்பினால் கஜன் குழுவுடன் ( குதிரைகளுடன் சேர்ந்து கொள்ளுத் தின்னலாம் )இணைந்து போட்டியிடலாம் .

ஆனந்தி அப்பிடி என்ன பெரிதாக மக்களுக்கு செய்துவிட்டா ,போராட்டத்திற்கு பல ஆயிரக்கணக்கானவர்கள் சென்றார்கள் அதில் எழிலனும் ஒருவர் பலர் காணாமல் போயுள்ளார்கள் ,பலர் வீரமரணம் அடைந்தார்கள் ,அனால் அந்த குடும்பங்கள் எல்லாம் ஆனந்தியை போல சுயநலமாக சிந்திக்கவில்லை .

திருகோணமலை மாவட்டத்தில் மூதுர் பிரதேசத்தில் கங்குவேலி கிராமம் ,இக்கிராமத்தை சுற்றிசிங்கள கிராமங்களும் இராணுவமுகாங்களும் இங்குள்ள குடும்பமொன்றின் கணவர் (மக்களின் பிரச்சனைகளுக்காக முன்னின்று செயல்பட்டவர் )91இல் இராணுவத்தால் கொண்டு செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார் , இரண்டு பிள்ளைகள் மாவீரர்கள் ,புலிகளில் சென்றவர்களை விசாரிப்பதற்காக இன்னொரு மகனையும் இராணுவம் கொண்டு சென்றது இன்றுவரை இவருடைய விபரம் தெரியாது ,89இல் பிறந்த மகளுக்கு தகப்பனுடைய முகமும் தெரியாது தகப்பனுடைய பாசமும் இல்லாமல் வளர்ந்தார் .

இந்த குடும்பத்துடன்(இவர்கள் எவரிடமும் உதவிகேட்கவில்லை ) ஆனந்தியை ஒப்பிடும் போது யார் அதிக வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்திருப்பார்கள் ?

இங்கு யார் மக்களுக்கு பெரிதாக செய்தது என்பதை அவர்கள் இழந்ததை வைத்தா அளவிடுகிறீர்கள்? அப்படி என்றால் நீங்கள் குறிப்பிட்ட குடும்பத்தை விட எனது குடும்பமும் எனது வாழ்க்கைத்துணையின் குடும்பமும் இழந்தது அதிகம் இன்றும் வேதனையில் அனுபவித்துக் கொண்டுதான் தான் இருக்கின்றோம்.

அனந்தி சுயலமாக சிந்திக்கிறார் என்று நான் நினைக்கவில்லை. ( தமிழரசு கட்சிதான் வாக்கிற்காக தம் சுயநலத்திற்காக அனந்தியை பாவித்தார்கள்) அவர் எழிலனையும் அவருடன் இணைந்து சரண்டைந்தவர்களையும் எங்கே என கேட்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி சுயநலமாய் சிந்திக்கவில்லை.

அப்படி எண்டால் மகிந்தவுடன் சேர்ந்திருக்கலாம்.

அனந்தி புல வாழிகளின் பேச்சுக்கு எடுபட்டு மொக்குத்தனமாய் சிந்திகிறா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.