Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பும், ஜிரிஎவ் வும் செய்வது அப்பட்டமான துரோகம்! உண்மையைப் போட்டுடைக்கிறார் கஜேந்திரகுமார்!! Video in

Featured Replies

நடந்தது இன அழிப்புத்தான் என்பதை ஏற்றுக்கொள்ள இன்று வரை மறுக்கின்ற கூட்டமைப்பும் ஜிரிஎவ்ப் அமைப்பினரும் பிரிட்டனில் நடத்திய ரகசிய சந்திப்பு தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்டுள்ள அப்பட்டமான துரோகமென தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார்.


ஜெர்மனில் பேர்கொவ் பவுண்டேசன் ஏற்பாட்டினில் நடைபெற்ற கூட்டத்தினில்  நடந்தது இன அழிப்புத்தான் என்பதை ஏற்றுக்கொள்ளவும் பொதுசன வாக்கெடுப்பு தேவையில்லையென்ற நிலைப்பாட்டையும் கடைப்பிடித்திருந்த கூட்டமைப்பும் ஜிரிஎவ்ப் அமைப்பினரும் இன்று வரை அதனையே கடைப்பிடிக்கின்றனர்.அத்தகைய தரப்பினர் நடத்திய இரகசிய சந்திப்பு எத்தகையதாக இருக்குமென்பது பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

வீடமைப்பு உதவிகள் பற்றி தான் பேசுவதென்றால் அதனை கொழும்பினிலேயே பேசியிருக்கலாம்.இலண்டனிற்கு பறந்து திரிந்திருக்கவேண்டியதில்லையெனவும் அவர் மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையினில் அவர் கருத்து வெளியிட்டார்.
20 வது திருத்த சட்டம் என்பது அரசுகள் சிறுபான்மையின வாக்குகளினில் தங்கியிருக்க கூடாதென்ற அடிப்படையினில் கொண்டுவரப்படும் முயற்சியென தெரிவித்த அவர் தமிழ் மக்களிற்கான நிரந்தர அரசியல் தீhவொன்று தரப்படாத நிலையினில் இத்திருத்தம் பற்றி பேசுவது பயனற்றதெனவும் தெரிவித்தார்.

 

http://www.pathivu.com/news/40829/57//d,article_full.aspx

நல்ல தலைப்பு " போட்டு உடைக்கிறார்" 

 

 

அரசியல் விளக்கம் குறைந்த சுமந்திரன், சுரேந்திரன் போன்றோரை சிறிலங்கா அரசு பயன்படுத்தி சர்வதேச ரீதியாக போலியான ஒரு தோற்றப்பாட்டை  ஏற்படுத்தி சர்வதேச போர்க்குற்ற விசாரணையை மழுங்கடுத்து தமிழார் போராட்டத்தை முடக்க  முனைகிறது. சுறேசும், கஜனும் மிகச் சிறப்பான அரசியல் கேள்விகளை எழுப்பி உள்ளனர். கூட்டமைப்பு சுமதிரனைக் கட்டுக்குள் கொண்டுவராவிட்டால் ,அவரால் தமிழார் போராட்டம் அழித்து ஒழிக்கப்படும்.   

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் விளக்கம் குறைந்த சுமந்திரன் ....

அரசியலில் விளக்கம் கூடிய நீங்கள் பாராளுமன்றத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்று எந்த அரசியல் தலைமையும் விரும்பியதாக தெரியவில்லையே? சுமேந்திரன் பாரளுமன்றத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்று கூட்டமைப்பு விரும்பி அழைத்ததானாலேயே அவர் பாராளுமன்ற அங்கத்தவராக இருக்கிறார்.

 

கூட்டமைப்பு சுமதிரனைக் கட்டுக்குள் கொண்டுவராவிட்டால் ,அவரால் தமிழார் போராட்டம் அழித்து ஒழிக்கப்படும்.

தமிழர் போராட்டம் என்று எதை சொல்கிறீர்கள்?

  • தமிழ் நாட்டில் நடக்கும் பிராமண எதிர்ப்பு போராட்டத்தையா?
  • அல்லது தமிழ் நாட்டில் நடக்கும் தமிழ் தேசிய போராட்டத்தையா?
  • இலங்கையில் நடந்து முடிந்த தமிழ்ஈழ ஆயுத போரட்டத்தையா?
  • அல்லது எல்லாம் ஒன்றான தமிழர் போரட்டத்தையா? இந்த எல்லாம் ஒன்றான தமிழர் போரட்டத்தைத்தான் இந்தியாவும், இலங்கையும், அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும், மலேசியாவும், சீனாவும், ஆஸ்திரேலியாவும் ஒன்றிணைந்து எதிர்க்கின்றன. தமிழ்ஈழ ஆயுத போரட்டம் இந்த எல்லாம் ஒன்றான தமிழர் போரட்டத்தின் அங்கமாக இருந்ததனால் தான் இந்த நாடுகளால் ஒன்றிணைந்து அழிக்கப்பட்டது.
சுமேந்திரன் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு தன்னால் முடிந்ததை செய்கிறார். இந்த எல்லாம் ஒன்றான தமிழர் போரட்டம் தான் இலங்கையில் தமிழ் மக்களின் முதல் எதிரி.
  • கருத்துக்கள உறவுகள்

யாராவது சாய்மான கதிரையை இழுத்து வெளிய போடுங்கப்பா.

சுமந்திரனுக்கு அரசியல் அறிவில்லை.

தொன் கணக்கில் அறிவை சேர்த்து வைத்திருப்போர், புலத்தில் தமது பொன்னான நேரத்தை வீணடிக்காமல் ஊருக்குப் போய் அறிவார்ந்த அரசியலை ஆரம்பிக்க வேண்டியதுதானே?

சரி இங்கே இருந்து ஆரம்பிக்க வேண்டியதுதானே?

ஆரம்பிக்கலாம் ஆனா தென்னாபிரிக்கா, நோர்வாயில் இருந்து வார சொந்த பந்தங்களோடதான் பேசலாம் :)

கதிரையில் ஏறி பல்பு மாத்த தெரியாதவன்,

கூரை ஏறி கோழி பிடிக்க முயற்சிப்பவனை பார்த்துச் சிரித்தானாம் :)

கதிரையில் ஏறி பல்பு மாத்த தெரியாதவன்,

கூரை ஏறி கோழி பிடிக்க முயற்சிப்பவனை பார்த்துச் சிரித்தானாம் :)

 

பழமொழியை இப்படியுமா மாத்துவாங்க.
போகப் போக எவன் எதை எப்படி மாத்துவான்னே புரியவில்லை.
 
எழுதும் போதுகூட சிரிப்பு நிற்கவில்லை.
நிச்சயமாக இவ்வாறான பேச்சுவார்த்தை சரவதேசத்தின் அனுசரணையுடன்தான் நடந்திருக்க முடியும். இவ்வாறான பேச்சுவார்த்தைக்கு முன்னரே கூட்டமைப்பிற்கு சில வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கலாம். அவற்றை வெளியே சொல்வதனால் ஏற்படக்கூடிய அசௌகரியத்தை தவிர்ப்பதற்காக இவை சக உறுப்பினர்களுடன் பகிரப்படாமல் இருந்திருக்கலாம். முன்பே வெளியே சொல்லியிருந்தால் ஆளாளுக்கு பேட்டி கொடுத்து ஒண்ணுமே இல்லாமல் பண்ணியிருப்பாங்கள். அதைவிட கூட்மைப்பு இப்படிச் செய்வதே சரி. 
 
கூட்மைப்பு சரியான பாதையில்தான் பயணிக்கின்றது என்பது எனது கணிப்பு. அப்படி இல்லையாயின் வரும் தேர்தல் அவர்களிற்கு மக்கள் நிச்சயம் ஒரு பாடம் புகட்டுவார்கள். தாயகத்து மக்கள் எம்மைப்போலில்லை - அவர்கள்தான் பிரச்சனைகளை முகம் கொடுப்பவர்கள், நிச்சயமாக உறுதியான முடிவெடுப்பார்கள். அதுவரை நாம் பொறுக்கலாமே.
  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக,

கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற பொறுப்பான பதவியில் இருந்து கொண்டும் சுரேஸ், சுயநல அரசியலுக்காக எல்லாத்தையும் போட்டுடைப்பார்.

அவருக்கு அவர் எம்பி பதவிதான் முக்கியம்.

இப்பாடியானவர்களிடம் சொல்லாமல்தான் சில நகர்வுகளை செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக இவ்வாறான பேச்சுவார்த்தை சரவதேசத்தின் அனுசரணையுடன்தான் நடந்திருக்க முடியும். இவ்வாறான பேச்சுவார்த்தைக்கு முன்னரே கூட்டமைப்பிற்கு சில வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கலாம். அவற்றை வெளியே சொல்வதனால் ஏற்படக்கூடிய அசௌகரியத்தை தவிர்ப்பதற்காக இவை சக உறுப்பினர்களுடன் பகிரப்படாமல் இருந்திருக்கலாம். முன்பே வெளியே சொல்லியிருந்தால் ஆளாளுக்கு பேட்டி கொடுத்து ஒண்ணுமே இல்லாமல் பண்ணியிருப்பாங்கள். அதைவிட கூட்மைப்பு இப்படிச் செய்வதே சரி.

கூட்மைப்பு சரியான பாதையில்தான் பயணிக்கின்றது என்பது எனது கணிப்பு. அப்படி இல்லையாயின் வரும் தேர்தல் அவர்களிற்கு மக்கள் நிச்சயம் ஒரு பாடம் புகட்டுவார்கள். தாயகத்து மக்கள் எம்மைப்போலில்லை - அவர்கள்தான் பிரச்சனைகளை முகம் கொடுப்பவர்கள், நிச்சயமாக உறுதியான முடிவெடுப்பார்கள். அதுவரை நாம் பொறுக்கலாமே.

கூட்டமைப்பு சரியான பாதையில் பயணிக்கிறதா இல்லையா என்பதை எப்போ எங்கே எப்படி கணிக்கப் போகிறீர்கள் ? வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனில் எதை வைத்து அவர்கள் தீர்மானிக்கப் போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எதை வைத்தாவது மக்கள் முடிவு செய்து, தம் முடிவை வாக்கு மூலம் தெரிவிப்பார்கள்.

கூட்டமைப்பு வெண்டால் -சம்பந்தனின் தலைமையில் நடக்கும் நகர்வுகளுக்கான மக்கள் ஆணையாகவே அது கருதப் படவேண்டும்.

கூட்டமைப்பு தோற்றால் - வெல்லும் தரப்பு முன்வைத்த நகர்வை மக்கள் ஆதரிப்பதாய் ஏற்றுக் கொள்ளலாம்.

தன்னால் கூட்டமைப்பில் இருந்து அதன் பாதையை மாற்ற அல்லது தன் பாதையை மாற்ற முடியாதெனில், சுரேஸ் கூட்டமைப்பில் இருந்து வெளியேறணும்.

அப்படி போனால் ஈபி யில் அவர் தம்பி சர்வேசை தவிர வேறு யாரும் இவருடன் போகமாட்டீனம் என்பது என்கணிப்பு.

ஈபியை ஐங்கரநேசன் தலைமை தாங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

 வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனில் எதை வைத்து அவர்கள் தீர்மானிக்கப் போகிறார்கள்.

 

இன்றைய உலகில் தாயக மக்களிற்கும் இவை தெரிந்தே இருக்கும். அவர்களும் கணனி, பத்திரிகைகள் ... போன்ற பல ஊடகங்கள் மூலம் தம்மைச்சுற்றி என்ன நடக்குது என்பதை தெரிந்தே வருகின்றார்கள். தமிழ்நாடு போலில்லை எனது நாடு இங்கு மக்கள் படிப்பறிவுள்ளவர்கள் தமக்கு எது தேவை என்பதை தாமாகவே முடிவு செய்யக்கூடியவர்கள்.
 
தேவை அவர்களது
தெரிவும் அவர்களது
 
நாம்தான் நடுவில்.
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

59 mins ·

.

இனப்படுகொலையை மூடிமறைக்கவே மங்கள-சுமந்திரன்-சுரேந்திரன் கூட்டணி!

ஈழவிடுதலைப் போராட்டம் பெரும் அழிவுகளைச் சந்தித்து நிற்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அமெரிக்காவின் எதிர்நிலைப்பாடு வலுவான தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்ததை யாரும் மறுத்துவிட முடியாது.

சிறிலங்காவின் இன்றைய அரசின் பங்காளியாகவும் தமிழர்களின் இனப்பிரச்சினை விடையத்திற்கு தீர்வுகாணும் குழுவின் தலைவியாகவும் விளங்கும் சந்திசிக்கா பண்டாரநாயக்கா அவர்களின் ஆட்சிக்காலத்தில்தான் தமிழர்களது விடுதலைப் போராட்டத்திற்கு அனைத்துலக அளவில் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா தடைசெய்வதற்கு சந்திரிக்கா அரசின் வெளிவிவகார அமைச்சராக இருந்த இலக்சுமன் கதிர்காமரின் அதிதீவிர செயற்பாடே காரணமாக அமைந்திருந்தது.

சிங்களத்தின் தமிழர் விரோத செயற்பாட்டிற்கு துணைபோகும் தமிழர்களைப் பயன்படுத்தி தமிழர்களையே அழித்தொழிக்கும் சதித்திட்டத்தில் சிங்கள தேசத்தின் ஆட்சிபீடமேறிய தலைவர்கள் அனைவரும் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் கதிர்காமர் ஏற்படுத்திக் கொடுத்த பாதையில் மங்கள சமரவீர பயணப்பட்டு மகிந்தவுடன் இணைந்து தமிழர்களது விடுதலைப் போராட்டத்தை அழிக்கும் திட்டத்தை நிறைவேற்றியிருந்ததுடன் இன்றும் மைத்திரியுடன் இணைந்து அதனை செயலாக்கம் கொடுத்துவருகின்றார்.

மகிந்த இராசபக்சே ஆட்சிக்காலத்தில் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த மங்கள சமரவீர அமெரிக்காவுடன் நெருக்கமான உறவினை ஏற்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒட்டுமொத்த செயற்பாடுகளையும் முடக்கும் விதமாக ஒரு செயலணிக்குழுவினை ஏற்படுத்தியிருந்தார்.

இந்த செயலணியின் உருவாக்கத்தின் பின்னரே புலிகளின் சர்வதேச செயற்பாடுகள் பாரிய நெருக்கடிக்குள்ளாகியிருந்தது. கனடா எல்லைவழியாக அமெரிக்காவில் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்வதற்காக சென்றிருந்த விடுதலைப்புலிகள் கைதுசெய்யப்பட்டிருந்ததன் பின்னணியிலும் இந்த சிங்கள-அமெரிக்க செயலணிக் குழுவே இருந்துள்ளது.

ஹாவாய்த் தீவில் உள்ள பசுபிக் கட்டளைப் பீடத்தின் கீழ் உள்ள 7வது கடற்படை அணியின் போர்க் கப்கலான ‘யு.எஸ்.எஸ். புளு றிட்ஜ்’ இல் இருந்து விடுதலைப் புலிகளின் கப்பல்களின் நடமாட்டம் பற்றிய செய்மதிப்படங்கள் சிறிலங்கா அரசிற்கு வழங்கப்பட்டன. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் ஊடாகவே இந்த செய்மதிப்படங்கள் சிறிலங்கா இராணுவத்திற்கு கொண்டு சேர்க்கப்பட்டிருந்தது.

இவ்வாறு பெறப்பட்ட செய்மதிப்படங்களை ஆய்வுசெய்துகொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள் சிறிலங்கா இராணுவத்தில் அப்போது யாரும் இருந்திருக்கவில்லை. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மூலம் மேஜர் கெலும் மத்துமகே என்ற சிறிலங்கா இராணுவ அதிகாரிக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டு கொலராடோவில் உள்ள இராணுவ அக்கடமியில் இதுகுறித்த பயிற்சிநெறி வழங்கப்பட்டிருந்தது.

சிறிலங்கா கடற்படைத் தளபதியாக இருந்த அட்மிரல் வசந்த கரன்னகொட பேர்ள் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விடுதலைப் புலிகளின் கடற் செயற்பாடுகளைத் தடுப்பதற்கான சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டிருந்தது. கரையில் இருந்து 900 கடல் மைல் தொலைவில் வைத்து இப்பயிற்சி வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறான சிறப்புப் பயிற்சிகளுடன் நிறுத்திக் கொள்ளாமல் சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதல்களை மேற்பார்வை செய்து வழிநடத்தியிருந்தது அமெரிக்க கடற்படை.

தமிழீழ விடுதலைப் போராட்டம் பெரும் அழிவுகளுடனும் இழப்புக்களுடனும் முள்ளிவாய்க்காலில் முகம்புதைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கு புலிகளின் சர்வதேச செயற்பாடுகள் முடக்கப்பட்டதே காரணமாக அமைந்திருந்தது. சர்வதேச ஆயுத விநியோக வழிகள் தடுக்கப்பட்டமை பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது.

இவையாவற்றிற்கும் அடித்தளமாக அமைந்தது தற்போது புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் நல்லுறவை ஏற்படுத்தத் துடிக்கும் மங்கள சமரவீரவின் சதிச்செயலே காரணமாகும். அன்று மட்டுமல்ல இன்றும் மங்களவின் அமெரிக்காவுடனான உறவு ஆழமானதாகவே இருந்து வருகின்றது. அதுவே இந்த ஆட்சிமாற்றத்திற்கான அடிப்படையாகவும் அமைந்திருந்தது.

புலிகளின் சர்வதேச செயற்பாடுகளை முடக்குவதற்காக அன்று அமெரிக்க கடற்படை சிங்களத்திற்கு உதவியது. அதே போன்று கடந்த ஏப்ரல் 19ம் திகதி அன்றும் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இரகசிய சந்திப்பு நடைபெற்றுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பாதுகாப்பு இராசாங்க அமைச்சர் ருவான் விஜேயவர்த்தன, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா உள்பட மேலும் நான்கு கடற்படை அதிகாரிகள் கொண்ட குழுவினர் அமெரிக்க கடற்படையின் பிரத்தியேக பயன்பாட்டில் இருக்கும் விமானம் மூலமாக விமானம் தாங்கிக் கப்பலுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்கள்.

சிறிலங்கா கடற்கரையில் இருந்து 225 கடல் மைல் தொலைவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மிதக்கும் தீவு போன்று கடலில் நகர்ந்துகொண்டிருக்கும் அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் என்ற விமானம்தாங்கிக் கப்பலிற்கு மங்கள தலையிலான குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

அதியுயர் இராணுவ இரகசியங்கள் பேணப்படும் யு.எஸ்.எஸ். கார்ல் வின்சனுக்கு இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டமை சாதாரனவிடையமாக கருதிவிட முடியாது. மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டிருந்த தேக்கநிலையே ஆட்சிமாற்றத்திற்கான அடிப்படையாக அமைந்திருந்தது. அதன் தொடர்ச்சியாக புதிய அரசுடன் அமெரிக்காவின் உறவானது சுமூகமாக இருந்துவரும் நிலையில் பாதுகாப்பு விடையங்களில் ஏற்படப்போகும் நெருக்கத்தை வெளிப்படுத்துவதாகவே இச்சந்திப்பு உணரப்படுகின்றது.

அமெரிக்க சிறிலங்கா இருதரப்பு உறவானது முன்னரைக்காட்டிலும் வேகமாக பலம்பெற்று வருவதானது தமிழர்களது நீதிக்கான குரலை வலுவிழக்கச்செய்துவிடும். மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டிருந்த இடைவெளியை நிரப்புவதுடன் இந்துமாகா சமுத்திரப் பிராந்தியத்தில் தமது மேலாதிக்கத்தினை நிலைநிறுத்துவதற்காக சிங்களத்துடனான உறவை முக்கியமானதாக அமெரிக்கா கருதுகின்றது.

அமெரிக்கா தலைமையில் உலகநாடுகளை அணிதிரட்டி பயங்கரவாதம் என்ற போர்வையில் திட்டமிட்டு தமிழினப்படுகொலையை நிகழ்த்திய சிங்கள அரசு அதுகுறித்த சர்வதேச விசாரணைக்காக எழுப்பப்படும் குரல்களையும் பலவீனப்படுத்த தொடர் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றது. ஆட்சிகள் மாறினாலும் இவ்விடையத்தில் யாரும் புதியவர்கள் கிடையாது என்பதால் அம்முயற்சி தங்குதடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

உலகத்தை கைக்குள் போட்டுக்கொண்ட சிங்களத்திற்கு என்றும் பெரும் சவாலாக விளங்குவது புலம்பெயர் தமிழர்கள்தான். பல்வேறு நெருக்கடிகள் சூழ்ந்துநிற்கின்ற போதிலும் விடுதலைப் போராட்டத்தை உயிர்ப்புடன் முன்னகர்த்திச் செல்வதோடு நீதிக்கான குரலை வலிமையாக எழுப்பியும் வருகின்றனர் புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள். அவர்களை தலைமைதாங்கும் அமைப்புகளுக்கிடையே இருக்கும் பிளவு நிலையை சாதகமாக்கி எம்மை பலவீனப்படுத்தும் முயற்சிகள் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து வருகின்றது.

தாயகத்தில் சுமந்திரனை வைத்து பெரும் குழப்பத்தை ஏற்படுத்த எடுத்த முயற்சி பெருமதிப்பிற்குரிய நீதியரசர் விக்னேசுவரன் அய்யாவின் உறுதியான தெளிவான நிலைப்பாடுகாரணமாக தேக்கநிலையை அடைந்தபோதிலும் மனம்தளராது சுமந்திரன் மூலமாக புலம்பெயர் தளத்திலும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றது சிங்களம்.

அதன் வெளிப்பாடுதான் உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அவர்களின் பங்கேற்புடன் மேலும் சில புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் எரிக்சொல்கேய்ம் உள்ளிட்ட சர்வதேச பிரமுகர்களையும் ஒன்றுகூட்டி லண்டனில் மேற்கொள்ளப்படும் சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

புலம்பெயர்வாழ் இலங்கை மக்களுடன் நல்லிணகத்தை ஏற்படுத்தும் முயற்சி என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் இச்சந்திப்பானது சுமந்திரன்களைப்போன்று சிங்களத்திற்கு முறைவாசல் செய்யும் இழிபிறவிகளுக்கு மகுடம்கூசூட்டும் விதமாகவே திட்டமிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதன் மூலமாக இனப்படுகொலைக்கு நீதிகேட்டு சர்வதேச விசாரனையை வலியுறுத்தி உரிமைக்குரலெழுப்பும் அமைப்புகளை புறக்கணித்து பலவீனப்படுத்திவிடலாம் என்பதே இதன் நோக்கமாகும். அதற்காகவே தாயகம் மற்றும் புலத்தில் உண்மையாக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைகளை தவிர்த்து சுமந்திரன், சுரேந்திரன் போன்றவர்களை முன்னிலைப்படுத்துகின்றது சிங்களம்.

ஒட்டுமொத்த சிங்களத்தின் பிரதிநிதியாக மங்கள சமரவீரவே இன்று செயற்பாட்டாளராக உள்ளுரிலும் வெளிநாடுகளிலும் செயற்பட்டுவருகின்றார். சிங்கள அரசால் திட்டமிட்டு தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இனப்படுகொலையை மூடிமறைப்பதே மங்களவின் பிரதான வேலையாகும்.

தாயகத்தில் சுமந்திரனை வைத்து காரியம் சாதித்துவிடலாம் என நினைத்த சிங்களத்திற்கு எதிர்பாராத நெருக்கடியாக நீதியரசர் விக்னேசுவரன் அய்யா அவர்கள் உருவெடுத்துள்ளார். வழக்கம்போல் புலி முத்திரை குத்தி ஒதுக்கித்தள்ளிவிட முடியாதவாறு நீதியரசர் விக்னேசுவரன் திகழ்கின்றார்.

நல்லிணக்கம் என்ற பெயரில் தமிழர்களுக்கான நீதியை தாமதப்படுத்தி தடுத்துவிட நினைத்த சிங்களத்திற்கு நீதியரசர் விக்னேசுவரன் அய்யா பெரும் முட்டுக்கட்டையாக உருவெடுத்துள்ளதால் தனது பார்வையை புலம்பெயர் தளத்திற்கு திருப்பியுள்ளது. இவை அனைத்தும் நன்கு திட்டமிட்டு வல்லாதிக்க நாடுகளின் ஆலோசனையுடன் முன்னெடுக்கப்படும் நிகழ்வுகளாகும்.

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியில் சிங்களத்துடன் சேர்த்து இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட இந்த சர்வதேச சமூகத்திற்கும் பெரும்பங்குண்டு. அதனால் தமக்குத்தானே தண்டனை வழங்கும் நிலையில் இருப்பவர்கள் அதனை தவிர்க்கவே சிங்களத்துடன் இணைந்து திட்டமிடுகின்றார்கள்.

சுமந்திரன், சுரேந்திரன் போன்றவர்களை அரவணைத்து தமிழர்களது தலையில் அரைகுறை தீர்வுத்திட்டம் ஒன்றை ஒப்பிற்கு வழங்கி சர்வதேச விசாரனை குறித்த கோரிக்கையை மழுங்கடிக்கப்பார்க்கிறார்கள்.

இந்த நோக்கத்துடன் சிங்கப்பூரில் நடைபெற்ற முதலாவது இரகசிய சந்திப்பினைத் தொடச்சியே தற்போது லண்டனில் நடைபெற்றுவரும் சந்திப்பாகும். இச்செயற்பாட்டை வன்மையாக கண்டித்திருக்கும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய வடமாகாண சபை உறுப்பினருமான சிவாசிலிங்கம் அண்ணா குறிப்பிடுகையில், இந்த சந்திப்பு ஒரு ஏமாற்று வேலை என்றும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை பலவீனப்படுத்துவதற்கும் இனப்படுகொலையாளிகளைப் பாதுகாக்கும் ஒரு முயற்சியாக குறிப்பிட்டுள்ளார். அதுதான் உண்மை.

தமிழர்களின் விடுதலைக்கு வேட்டுவைக்கும் விதமாகவும் இனப்படுகொலையாளிகளை காப்பாற்றவும் முயற்சிக்கும் மங்கள சமரவீர-சுமந்திரன்-சுரேந்திரன் ஆகியோரின் முயற்சியை தமிழர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்போம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.”

- ம.செந்தமிழ்

நிச்சயமாக,

கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற பொறுப்பான பதவியில் இருந்து கொண்டும் சுரேஸ், சுயநல அரசியலுக்காக எல்லாத்தையும் போட்டுடைப்பார்.

அவருக்கு அவர் எம்பி பதவிதான் முக்கியம்.

இப்பாடியானவர்களிடம் சொல்லாமல்தான் சில நகர்வுகளை செய்ய வேண்டும்.

கூழும் வேணும் மீசையும் வேணும் என்பது போல என்ன??

  • கருத்துக்கள உறவுகள்

கூழும் இல்லை மீசையும் இல்லை. கூட்டமைப்பு உடையக்கூடாது என்பதுக்காக.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய உலகில் தாயக மக்களிற்கும் இவை தெரிந்தே இருக்கும். அவர்களும் கணனி, பத்திரிகைகள் ... போன்ற பல ஊடகங்கள் மூலம் தம்மைச்சுற்றி என்ன நடக்குது என்பதை தெரிந்தே வருகின்றார்கள். தமிழ்நாடு போலில்லை எனது நாடு இங்கு மக்கள் படிப்பறிவுள்ளவர்கள் தமக்கு எது தேவை என்பதை தாமாகவே முடிவு செய்யக்கூடியவர்கள்.

தேவை அவர்களது

தெரிவும் அவர்களது

நாம்தான் நடுவில்.

நீங்கள் நடுவிலோ தெரியவில்லை எனக்கும் இன்றும் இலங்கையில் வாக்குரிமை உள்ளது 2010 தேர்தலிலும் எனது வாக்கை இட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக,

கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற பொறுப்பான பதவியில் இருந்து கொண்டும் சுரேஸ், சுயநல அரசியலுக்காக எல்லாத்தையும் போட்டுடைப்பார்.

அவருக்கு அவர் எம்பி பதவிதான் முக்கியம்.

இப்பாடியானவர்களிடம் சொல்லாமல்தான் சில நகர்வுகளை செய்ய வேண்டும்.

கோசான் அண்ணை 

 

அப்போ உள்ளுக்கை சில சித்து விளையாட்டுகள் நடக்குது என்று நீங்களும் ஏற்று கொள்கிறீர்கள் 

கவனம் எங்களை வித்து விடப்போகிறார்கள்.....

தேர்தலில் ஒரு கடுக்காய் குடுத்தால் எல்லாமே தானாக தெளிந்து ஒரு தெளிவு வரும் அதுக்காக தான் காத்துகொண்டிருக்கிறோம்

(அண்ணை கடுக்காய் குடுப்பதில் நாங்களும் ஸ்பெஸல்) 

மாற்றத்தைப் பலப்படுத்தும் நோக்கிலான லண்டன் சந்திப்பு - நிலாந்தன்:-
14 ஜூன் 2015

 

 

இவ்வாறு தடைகளை அகற்றும் போது  புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள  மிதவாத சக்திகளை  இலங்கை அரசாங்கத்தோடு ஏதோ ஒரு இணக்கத்துக்குக் கொண்டுவரலாம் என்று மேற்குநாடுகள் நம்புகின்றன.  அவ்வாறு  சில அமைப்புக்கள் அரசாங்கத்தோடு இணக்கத்துக்கு வருமிடத்து அவை  தீவிர தேசிய நிலைப்பாடுகளை முற்றாகக் கைவிட வேண்டியிருக்கும்.   அவ்வாறு அவை தீவிர நிலைப்பாடுகளைக் கைவிடுமிடத்து அரசாங்கம் அதை தனது வெற்றியாகக் காட்டமுடியும். அப்படியொரு நிலைமை வந்தால் அதை  மகிந்தராஜபக்ஷ தனக்கு சாதகமாகக் கையாள முடியாமல் இருக்கும் என்று மேற்கு நாடுகள் நம்புகின்றன.

 

புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள சில அமைப்புக்களை சக்திமிக்க நாடுகளும் அவற்றின் முகவர் அமைப்புக்களும் கையாள முடிகிறது என்று சொன்னால் அவ்வாறு கையாள முடியாத தரப்புக்கள் ஓரணியாகத் திரண்டு தமிழ் மக்களின் சரியான பிரதிநிதிகள் தாங்களே என்று ஏன் நிரூபிக்க முடியாமல் போயிற்று?  புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில்  ஆகக் கூடியபட்சம் பெரும்பாலானவர்களால் ஏற்றுக் கொள்ளப்படத்தக்க ஜனவசியம்மிக்க ஒரு தலைமைத்துவமோ அல்லது செயற்திறன்மிக்க அமைப்போ  கிடையாது.  தாயகத்தில்  மக்களாணையைப் பெற்ற கூட்டமைப்பும் அவ்வாறான ஒரு தலைமைத்துவத்தை வழங்கப்போவதில்லை. அது அவர்களுடைய  நிகழ்ச்சி நிரலே அல்ல சொல்ஹெய்ம் ஒருமுறை தனது ருவிட்டர் தளத்தில் தமிழ் டயஸ்போறாவை 'உலகின் சக்திமிக்க டயஸ்போறாக்களில் ஒன்று' என்று வர்ணித்திருந்தார்.  ஆனால்  லண்டன் சந்திப்பையும்  அதன் பின்னரான  புலம்யெர்ந்த  தமிழர்களின் செயற்பாடுகளையும் வைத்துப் பார்த்தால்   அப்படியா தெரிகிறது? 

12.06.2015

அரசியலில் விளக்கம் கூடிய நீங்கள் பாராளுமன்றத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்று எந்த அரசியல் தலைமையும் விரும்பியதாக தெரியவில்லையே? சுமேந்திரன் பாரளுமன்றத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்று கூட்டமைப்பு விரும்பி அழைத்ததானாலேயே அவர் பாராளுமன்ற அங்கத்தவராக இருக்கிறார்.

 

தமிழர் போராட்டம் என்று எதை சொல்கிறீர்கள்?

  • தமிழ் நாட்டில் நடக்கும் பிராமண எதிர்ப்பு போராட்டத்தையா?
  • அல்லது தமிழ் நாட்டில் நடக்கும் தமிழ் தேசிய போராட்டத்தையா?
  • இலங்கையில் நடந்து முடிந்த தமிழ்ஈழ ஆயுத போரட்டத்தையா?
  • அல்லது எல்லாம் ஒன்றான தமிழர் போரட்டத்தையா? இந்த எல்லாம் ஒன்றான தமிழர் போரட்டத்தைத்தான் இந்தியாவும், இலங்கையும், அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும், மலேசியாவும், சீனாவும், ஆஸ்திரேலியாவும் ஒன்றிணைந்து எதிர்க்கின்றன. தமிழ்ஈழ ஆயுத போரட்டம் இந்த எல்லாம் ஒன்றான தமிழர் போரட்டத்தின் அங்கமாக இருந்ததனால் தான் இந்த நாடுகளால் ஒன்றிணைந்து அழிக்கப்பட்டது.
சுமேந்திரன் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு தன்னால் முடிந்ததை செய்கிறார். இந்த எல்லாம் ஒன்றான தமிழர் போரட்டம் தான் இலங்கையில் தமிழ் மக்களின் முதல் எதிரி.

 

சுமந்திரனை , சம்பந்தரே கொண்டு வந்தார். தா தே கூடமைப்பு அல்ல. அவர் ஒரு சிறந்த சட்டத் தரணியாக இருக்கலாம், ஆனால் அவரை சிறிலங்கா அரசு பயன்படுத்துகிறது, அவரும் அதற்கு  உடந்தையாக இருக்கிறார். 
 
தமிழார் போராட்டம் என்பது, தமிழர்களின் போராட்டம். தம்மைத் தமிழர்கள் என அடையாளம் காணும் மக்களின் போராட்டங்கள்      அனைத்தும் தமிழார் போராட்டங்களே. தங்களை சிறிலங்கன் எனஅடையலம்  காட்டுவோரின்  போராட்டங்கள் 'தமிழரின்' போராட்டங்கள் அல்ல. 
 
சிறிலங்காப் பாரளுமன்றம் சென்று தமிழர்கள் தங்கள் உரிமையைப் பெற முடியும் என்று நான் கருதவில்லை. இன்று தா தே கூ எம்பிக்கள் வாங்கப்பட்டுள்ள  செய்திகளும் வருகின்றன. இவை அனைத்தும் சிறிலங்கா அரசின் போரின் பிந்திய கலகத் தடுப்புக் கோட்ப்பாட்டின் அம்சங்க்களே தவிர , நியாயமான அரசியல் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும்         நடவடிக்கைகள் அல்ல. காலம் இதற்குப் பதில் சொல்லும் . 

http://youngasia.tv/connections/connections-december-26-2011-2/

 

– Dr Rohan Gunaratna talks on “Defeating the LTTE on Foreign Soil”

 

மேலே தந்திருக்கும் இணைப்பில் பிரபல சிறிலங்கா பாதுகாப்பு ஆய்வாளரும் கோதபாயாவின்  நண்பரும் ஆனா ரொகான் குணவர்த்தன , சுமந்திரன் போன்றோரை  ஊக்குவிக்க வேண்டும் என்று பெயர் குறிப்பிட்டுக் கூறி உள்ளார். இது 2011 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட உரை. 


 

Full speech of Dr. Rohan Gunaratna, head of the International Centre for Political Violence and Terrorism Research in Singapore.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.