Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியும் பிரதமரும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது எம்மை ஏமாற்றி விட்டார்கள் : மாவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஜனாதிபதியும் பிரதமரும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது எம்மை ஏமாற்றி விட்டார்கள் : மாவை
76e752acbf5c5894b9e3388b745f3ec2.jpg
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் ஆகிய இருவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எம்மை அவர்கள் ஏமாற்றி விட்டார்கள்.எனவே குறித்த விடயம் தொடர்பில் எதிர்வரும் 23ம் திகதி நாடாளுமன்றம் கூடும் வேளையில் அவர்களுடன் பேசி ஒரு முடிவை எடுக்க உள்ளோம். என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
 
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைமைகளுக்கு இடையில் யாழ்.மார்டீன் வீதியில் உள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று காலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
 
அந்த சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
 
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கு பிறகு தமிழ் மக்கள் இந்த ஆட்சியை மாற்ற வாக்கு அளித்த பின்னர் உடனடியாக அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கோரிக்கை விடுத்து இருந்தோம். 
 
இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவித்து அவற்றை அதன் உரிமையாளருக்கு வழங்க வேண்டும். அவர்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும் என நாங்கள் பேசி தேர்தல் அறிக்கையில் நூறு நாள் திட்டத்தில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டு வாக்குறுதி தரப்பட்டது போல அந்த நிலங்கள் விடுவிக்கப்படவில்லை. 
 
ஆயிரம் ஏக்கர் நிலத்தை வலி. வடக்கில் விடுவித்து மீள் குடியேற்றம் செய்வோம் என ஜனாதிபதி பிரதமர் முன்னாள் ஜனாதிபதி என எல்லோரும் வந்து விடுவிக்கப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு அந்த காணி சான்றிதழ்கள் வழங்கும் போதும்இ எந்த மக்களிடம் இருந்து காணிகள் அபகரிக்கப்பட்டதோ அந்த காணிகளை அந்த மக்களிடமே மீள் கையளிக்கப்படும் என வாக்குறுதி வழங்கி இருந்தார்கள்.
 
வாக்குறுதி அளித்தபடி  ஆரம்பத்தில் ஆயிரம் ஏக்கர் நிலம் விடுவிக்கப்டும் என அறிவித்து இருந்தார்கள் வளலாயில் மற்றும்  வலி.வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்ததில் ஒரு பகுதி  நிலம் விடுவிக்கப்பட்டது.
 
வலி. வடக்கில் 564 ஏக்கர் காணி தான் விடுவிக்கப்பட்டுள்ளது வளலாயில் ஒரு பகுதி 437 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. வளலாயில் விடுவிக்கப்படும் என முன்னைய அரசு விடுவிப்பதாக கூறிய நிலத்தையே தற்போதைய அரசு விடுவித்தது. இன்னமும் 403 ஏக்கர் காணி விடுவிக்கபப்டவில்லை 
 
வலி.வடக்கில் 6 ஆயிரத்து 371 ஏக்கர் நிலத்தில் 564 ஏக்கர் நிலம் மட்டுமே ஆட்சி மாற்றம் ஏற்பட்ட ஆறு மாத காலப்பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளது 
 
 
விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீள் குடியேறிய மக்கள் அந்த காணிகளை துப்பரவு செய்யவோ வேறு உதவிகளை செய்வோ நிதி இல்லை என மீள் குடியேற்ற அரசு சொல்லி இருக்கின்றது. 
 
அதே போன்று சம்பூர் பிரதேசத்தில் 876 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படும் என ஜனாதிபதியே வர்த்தமானியில் கையெழுத்து வைத்த பின்னரும் அங்கு மீள் குடியேற்றத்தை தாமதப்படுத்தப்படுகின்றது .மீள் குடியேறிய மக்களையும் பொலிசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி உள்ளனர்.
 
தேர்தலுக்கு முன்னர் தந்த வாக்குறுதிகளை தேர்தலில் வென்ற பின்னர் அவற்றை நிறைவேற்றவில்லை.
 
அதேவேளை சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கோரிக்கை விடுத்து இருந்தோம் பல இளைஞர்கள் 20 வருட காலத்திற்கு மேலாக எந்தவிதமான விசாரணைகளும் இன்றி சிறைகளில் வாடுகின்றார்கள் 
 
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட அந்த மாதத்திலேயே விடுவிக்கப்படுவார்கள் என ஜனாதிபதியும் பிரதமரும் எமக்கு வாக்குறுதி தந்து இருந்தார்கள் தற்போது ஆறுமாத காலமாகியும் இன்னமும் அந்த இளைஞர்கள் விடுவிக்கப்படவில்லை. 
 
பட்டதாரி மாணவர்கள் வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி அவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை அவர்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். அவர்கள் பலர் வடக்கு கிழக்கில் உழைப்பற்றவர்களாக இருக்கின்றார்கள் அவர்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என கோரி இருந்தோம். 
 
ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்து இவை தொடர்பில் பேசி ஒரு முடிவை எட்ட வேண்டும் என இக் கூட்டத்தில் தீர்மானித்து உள்ளோம். 
 
23 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் வேளையில் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியின் படி நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும், மீள் குடியேறியவர்களுக்கு உதவிகள் வழங்க வேண்டும் சிறையில் உள்ள அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் இத்தகைய அனைத்து விடயங்களையும் இந்த அரசுடன் பேச்சுக்கள் நடாத்தி ஒரு முடிவை எட்ட உள்ளோம். எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=591214089716876631#sthash.T5Cvv7E0.dpuf

 

  • Replies 52
  • Views 2.9k
  • Created
  • Last Reply

ஆனால் நாங்கள் இதே அரசாங்கத்தைக் காப்பற்ற லண்டனில வெளிநாட்டமைச்சரோடு பேசுவோம் . இதைவிடக் கேவலம் ஒன்றும் இல்லை. இப்படிச் செய்திகள் யாழ் கூட்டமைப்பின் பிரச்சாரகர்களுக்குத்  தெரிவதில்லையா?   

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே?

எங்கே போய் தொலைந்தார்கள் இந்த பிரசாரகர்கள்?

ஒரு வேளை புலத்தில் சாய்மானக் கதிரைகளில் இருந்த படி மகிந்தவை, ரணிலை, மைத்திரியை ஒட்டுமொத்த சிங்கள இனத்தையே வெற்றி கொள்ளும் அசகாய திட்டம் எதையும் தம் தொன் கணக்கான அறிவை பாவித்து தீட்டுகிறார்களோ என்னமோ.

வணங்கா மண் புகழ் வீரர்கள் அல்லவா,

கட்டாயம் தென் காடான், வட கீடான் இன்னும் பல இல்லாத நாடுகளின் உதவியுடன் தமிழ் ஈழம் கண்டே தீருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் நடக்கும் என்று திருப்பித் திருப்பிச் சொன்னார்கள் கேட்டீர்களா? இதயத்தால் இணைந்துள்ளோம் என்ற அலப்பறை வேற.

அதுதானே?

எங்கே போய் தொலைந்தார்கள் இந்த பிரசாரகர்கள்?

ஒரு வேளை புலத்தில் சாய்மானக் கதிரைகளில் இருந்த படி மகிந்தவை, ரணிலை, மைத்திரியை ஒட்டுமொத்த சிங்கள இனத்தையே வெற்றி கொள்ளும் அசகாய திட்டம் எதையும் தம் தொன் கணக்கான அறிவை பாவித்து தீட்டுகிறார்களோ என்னமோ.

வணங்கா மண் புகழ் வீரர்கள் அல்லவா,

கட்டாயம் தென் காடான், வட கீடான் இன்னும் பல இல்லாத நாடுகளின் உதவியுடன் தமிழ் ஈழம் கண்டே தீருவார்கள்.

சும்மா இட்டு கட்டாதீர்கள். கூட்டமைப்பு சரியான பாதையில் போகிறதெண்ட சேர்டிபிக்கட் வேற

  • கருத்துக்கள உறவுகள்

செல்வா, அமிர், தேத

என எல்லோருக்கும் சிங்களன் நல்லா தீத்தினதுதானே.

இப்போ இவர்களின் முறை. ஆமாம் ஆசையில் அப்படியே சாப்பிடுவோம் :)

ஆமா இந்த ஏமாத்தின விசயமாவது சுரேசுக்கு தெரியுமாமா? :)

  • கருத்துக்கள உறவுகள்

முதலில சம் சும் க்கு தெரியுமா? சும் வழக்கு போட்டு பேட்டி குடுக்குறதில பிசி

எங்களுக்கிடையில் எழுதப்படாத ஒப்பந்தம் இருக்கு, அது இருக்கு இது இருக்கு என்டினம் இப்ப கோமணம் கூட இல்லை.

தமிழத் தேசியக் கூடமைப்பைப் பற்றிக் கதைத்தால் சிலர் *** சம்பந்தம் இல்லாமல் வணங்கா மண் என்றும் சூடான் என்றும் சாய்மனைக் கதிரை  என்றும் உளறுகின்றன. யாருக்காவது இவற்றிற்கும் மேலே  உள்ள செய்திக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியுமா?     தமிழத் தேசியக் கூட்டமைப்பு ஏதாவது கப்பல்  கட்டி சூடானுக்கு சாய்மனைக் கதிரையில இருந்து விட்டதோ?

 

 

நியானி: சீண்டும் பதம் ஒன்று நீக்கப்பட்டுள்ளது,

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி பிரதமர் ஏமாற்றியதை சம் சும் ஏன் அறிவிக்கவில்லை

மாவையோ, விக்கியோ, சுரேஸோ, சிறிதரனோ தலையில் அடித்து செத்த வீட்டில் ஒப்பாரி வைத்து அழ தொடங்குகிறார்கள். அங்காலை பின் வாசல் சுமந்திரன் சிங்களத்துக்கு கலியாணத்துக்கு மாமா வேலை பார்த்து ஆள்பிடிக்க உலகெங்கும் அலைகிறார். 

ஆட்டுக்குள் மாட்டை?

 

அதுசரி, உங்களுக்கு வரலாறு தெரியாது போல, போய் மாவையை கேளுங்கள் சொல்லுவார் எப்படி ஒன் யுவர் மார்க் கெட் செட் ரெடி சொல்லி விசிலடித்து மண்டையில் போடும் கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்த வரலாற்றை!

 

அப்போ யதார்த்தம் அறிவீர்கள்.

 

பி.கு: இப்போதெல்லாம் புலம்பெயர் ஒட்டுக்குழு மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் திருந்தீட்டார்களாம், என்ன, பின்வாசல் சுமந்திரனுக்கு ஆதரவாம். :icon_mrgreen:

இந்தச் செய்திக்கு குளோபல் தமிழ் செய்தி இணையத்தில் வந்த வாசகர் பதிவொன்று

 

"நீங்கள் இலகுவில் ஏமாற்றப் படக்கூடியவர்கள் என்பதனால்தான் ஆத்திக்க சக்திகள் நீங்கள் எங்கள் பிரதிநிதிகளாக இருப்பதை விரும்புகின்றன. தேர்தல் அண்மிக்கும் வேளையில் அவர்கள் திட்டமிட்டு உங்களிற்காக மறைமுகமாகச் செயற்படுவார்கள். பாவம் நாம் அப்பாவிகள். இச்சூத்திரம் எங்களிற்கு இலகுவில் புரிவதில்லை"

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/120937/language/ta-IN/-----.aspx

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் நேரத்தில் ஏமாத்துறான் எண்டு கூச்சல் இடுவது, பின்பு ரணிலிடம் கூழைக் கும்பிடு போடுவது. இது புளிச்சுப் போன தமிழரசுக் கட்சி அரசியல்.

சம்-சுன்-விக் இதிலிருந்து கொஞ்சம் வித்தியாசமாய் (எப்போதும் இல்லை) நடக்க முற்படுகிறார்கள்.

தமிழ் மக்கள் முன் உள்ள தலைமைகள் இவைதான்

1) சம்-சும்-விக்கி தலைமையில், அனந்தி, சிவாஜி போன்ற கோமாளிகளையும், சுரேஸ், சித்தர், சரவணபவன் போன்ற சுயநலமிகளையும் சேர்த்த கூட்டமைப்பு

2) கஜன் தலைமையில், கஜேந்திரன், பத்மினி, அப்புறம் வணங்காமண் கோமாளிகள் போன்ற புலத்து காமெடி பீசுகளையும் சேர்த்து, சுயநலமிகளான புலயாவாரிகள் நெடியவன், தலைமை செயலகம் போன்ற மாபியாக்கள் வழி நடத்தும் தமிழ் தேசிய மக்கள் முண்ணனி.

ஒரு இலட்சிய (ஐடியல்) உலகில் கூட்டமைப்பு கஜனை எடுத்துக் கொண்டு சுரேஸ், சரா. அனந்தி, சிவாஜி, சித்தர் போன்றோரை அங்கால அனுப்பினால். கூட்டமைப்பு நல்ல தொரு அரசியல் அமைப்பாகவும், மறுபுறம் ஒரு சூப்பர் சர்கஸ் கம்பனியாகவும் மிளிரலாம்.

இப்படி நடக்க வாய்ப்பு குறைவாதலால் - கூட்டமைப்பும் கோமாளிகள் வசம் போகாமல் இருப்பது அவசியமாகிறது.

அந்த வகையில் சம்-சும்-விக் கூட்டை விட்டால் மக்களுக்கு வேறு தெரிவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஜனாதிபதியும் பிரதமரும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது எம்மை ஏமாற்றி விட்டார்கள் : மாவை

 

 

அண்டு தொடக்கம் படிச்சு படிச்சு சொன்னமே கேட்டியளே!!!!!! சரி அதை விடுவம். 
 
சிங்களவனாலை ஈழத்தமிழனுக்கு 60வருசமாய் நடந்த அழிவுகளுமா உங்கடை நினைவுக்கு வரேல்லை?
 
இனியாவது திருந்துங்கள். 
 
திருநாளைப்போவார் கதையள் இனியும் வேண்டாம்.  :icon_idea:

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த வகையில் சம்-சும்-விக் கூட்டை விட்டால் மக்களுக்கு வேறு தெரிவில்லை.

போன போன போக்கில் எழுதாதீர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் ஆட்சிப்பீடத்தில் எவர் இருந்தாலும், நடப்பது ஒரு ஒழுங்கான முறையில் வடிவமைக்கப்பட்ட,  காலம் காலமாக மிகவும் திட்டமிட்ட ரீதியில் கட்டியெழுப்பப்பட்ட சிங்களப் பெளத்த ஆட்சிதான் என்பதை நாம் ஏனோ அவ்வப்போது மறந்துவிடுகிறோம். யார் ஆட்சிக்கு வந்தாலும், ஏற்கனவே வகுக்கப்பட்ட சிங்களப் பெளத்த பேரினவாதப் பாதையில் போவதைத்தவிர அவருக்கோ அல்லது அவவுக்கோ வேறு வழியில்லை.

 

சரி, இந்த நன்கு திட்டமிட்ட , காலம் காலமாக வகுக்கப்பட்ட பாதையில் போவதில் என்ன தவறு என்று கேட்கிறீர்களா? இலங்கையின் ஆட்சி மொழி சிங்களம், இலங்கையின் ஆட்சி மதம் பெளத்தம், இலங்கையின் முதலாம்தரக் குடிமக்கள் சிங்களப் பெளத்தர்கள், மற்றையோர் எல்லோரும் ஒன்றில் வந்தேறுகுடிகள், அல்லது பாரிய ஆலமரத்தைச் சுற்றிப் படரும் ஒட்டுண்ணிகள் அல்லது கொடிகள். இன்னொரு வழியில் சொல்வதானால், இரண்டாம்தரக் குடிமக்கள்.

 

அந்தவகையில், இப்போது நல்லாட்சி நடத்த வந்திருக்கும், மைத்திரியாகட்டும், ரணிலாகட்டும் இந்த நன்கு நிறுவனமயப்படுத்தப்பட்ட வழியில் நின்று ஒழுகுவதைத்தவிர வேறு வழியில்லை. அவர்கள் ஆட்சிக்கு வருவதற்காக இரண்டாம்தரக் குடிமக்களின், வந்தேறுகுடிகளின், ஒட்டுண்ணிகளின் தயவு தேவைப்பட்டது, ஆகவேதான் இந்த இரண்டாம்தரக் குடிமக்களின் ஏக பிரதிநிதிகள் நிபந்தனையேதுமற்ற ஆதரவை ரணிலுக்கும் மைத்திரிக்கும் வழங்கினார்கள். இப்போது ஆட்சிக்கு வந்தாயிற்று, இனிமேல், நிறுவனமயப்படுத்தப்பட்ட சிங்கள பெளத்த இயந்திரம் என்ன செய்யச் சொல்கிறதோ அதைத்தான் அவர்களால் செய்யமுடியுமே தவிர, இரண்டாம் தரக் குடிமக்களின் ஏக பிரதிநிதிகளின் சொல்லுக்கு ஏற்ப ஆட முடியாது. இது காலம் காலமாக இரண்டாம்தர குடிமக்களின் ஏக பிரதிகளாக இருந்த எல்லோருக்கும் சிங்களப் பெளத்தம் எடுத்துவரும் பாடம்தான். ஆனால் அதை உணர்ந்து கொள்ளும் பக்குவமோ, ஞானமோ இரண்டாம்தரக் குடிமக்களுக்கு எப்போதுமே இருந்ததில்லை, இனிமேலும் இருக்கப்போவதில்லை.இரண்டாம்தரக் குடிமக்களுக்கும், அவர்களை வழிநடத்தும் ஏக பிரதிநிதிகளுக்கும் தேவையானதெல்லாம், இப்போதிருக்கும் ஆட்சி மாற்றம் என்பதே எப்போதும் தேவையாக இருந்திருக்கிறது. ஆனால் தாம் அரியணையிலிருந்து இறக்கியவருக்கும், புதிதாக அரியணையில் ஏற்றியவருக்கும் இடையே என்ன வித்தியாசத்தைக் கண்டீர்கள் என்றால், "இப்போதுதானே ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள், ஏன் அவசரம்? விட்டுத்தான் பிடிப்போமே"? என்கிறார்கள். இந்த விட்டுப் பிடித்தல் கடந்த 65 வருடங்களாக நடந்துவருவதை இரண்டாம்தரக் குடிமக்கள் அவ்வப்போது மறந்துவிடுகிறார்கள். 

 

இடையில் ஒருத்தர் வந்தார், இந்த விட்டுபிடித்தல் எல்லாம் சரிவராது, சிங்களப் பெளத்த பேரினவாதம் இரண்டாம்தரக் குடிமக்களுக்கு எதையுமே தரப்போவதில்லை, ஆகவே ஆயுதம்தான் வழியென்று இளைஞர்களைக் கூட்டிக் கொண்டு போராடப் போனார். அவரையும், அவரது போராளிகளையும் நிறுவனமயப் படுத்தப்பட்ட சிங்களப் பெளத்த பேரினவாதமும், பக்கத்திலுள்ள இன்னொரு நிறுவனமயப்படுத்தப்பட்ட இந்துத்துவா பிராந்திய மேலாதிக்க வாதமும் சேர்ந்து அடித்து முடித்தன. 

 

ஆக மீண்டும், விட்டுப்பிடித்தலுக்கு வந்திருக்கிறார்கள் இரண்டாம்தரக் குடிமக்கள். இன்னொரு 65 வருடங்கள் விட்டுப் பிடிப்பதற்கான காய் நகர்த்தல்களை இரண்டாம்தரக் குடிமக்கள் சார்பில் அவர்களது ஏக பிரதிநிதிகள் ஆரம்பித்திருக்கிறார்கள். 

 

அதுசரி, இந்த இரண்டாம்தரக் குடிமக்களுக்கு இப்போதைக்கு இந்த விட்டுப் பிடித்தலைத்தவிர வேறு வழியிருக்கிறதா? சத்தியமாக எதுவுமேயில்லை !

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

வழியில்லை என்பதுக்கா உங்கள் முருகன் எரித்தியாவில் இருந்துவரும் வரை மக்கள் அப்படியே இருப்பதா?

அதுதான் விட்டுப்பிடி அரசியலைஆதரிக்கிறார்கள்.

புலத்தில் சுகமாய் இருந்து "விடாதே பிடி " அரசியல் செய்பவர்கள் வியாபாரம் படுத்து விடுமோ என அஞ்சுகிறனர்.

  • கருத்துக்கள உறவுகள்

வழியில்லை என்பதுக்கா உங்கள் முருகன் எரித்தியாவில் இருந்துவரும் வரை மக்கள் அப்படியே இருப்பதா?

அதுதான் விட்டுப்பிடி அரசியலைஆதரிக்கிறார்கள்.

புலத்தில் சுகமாய் இருந்து "விடாதே பிடி " அரசியல் செய்பவர்கள் வியாபாரம் படுத்து விடுமோ என அஞ்சுகிறனர்.

 

 

எனது முருகன் எரித்திரியாவில் இருக்கிறார் என்று எப்போதாவது உங்களிடம் சொன்னேனா? எதுக்கு எதற்கெடுத்தாலும் சண்டைக்கு வருகீறீர்கள்? உங்களுடைய கருத்துத்தான் எப்போதுமே சரியாக இருக்கவேண்டும், மற்றறையவர்கள் எது எழுதினாலும் பிழை என்கிற மனோபாவத்தை எப்போது விடப்போகிறீர்கள்?

 

உங்களுக்கு புலிகளை அறவே பிடிக்கவில்லை, புலத்திலுள்ளவர்களைப் பிடிக்கவில்லை, இன்னும் பலரைப் பிடிக்கவில்லை. அதற்காக எவர் என்ன எழுதினாலும் உடனே வந்து ஒரு நக்கல், அல்லது நைய்யாண்டி எழுதிவிட்டு மகிழ்ச்சி அடைகிறீர்கள். 

 

மற்றையவர்கள் எது எழுதினாலும் அது பிழையாகப் படுகிறது உங்களுக்கு. இங்கே சரியானதை மட்டுமோ அல்லது பிழையானதை மட்டுமோ எழுதுவதற்கு யாரும் பரீட்சை நடத்தவில்லையே? அவரவர் தனக்குச் சரியானதை எழுதுகிறார், அதை ஏற்றுக்கொள்ளுங்கள். அவருடைய கருத்தில் உடன்பாடு இல்லாவிட்டால், அதை சொல்வதற்கும் ஒரு முறை இருக்கிறதே? எதுக்கு நக்கலும், நையாண்டியும் ?

 

இங்கே நான் எழுதும் கருத்தினால் நீங்களோ அல்லது நீங்கள் எழுதும் கருத்தினால் நானோ எமது எண்ணங்களை மாற்றிக் கொள்ளப்போவதில்லை. பிறகு ஏன் இந்த ஆத்திரமும், நக்கலும்?

இந்த அறிக்கையை மாவையார் இப்ப செளியிட்டாலும் இது எப்பொவோ தயாரித்த அறிக்கைதான்.

தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டதும் என்னும் பல அறிக்கைகள் வர காத்து கிடக்கின்றன.

தாங்களும் மடையர்களாகி மற்றவர்களையும் மடையராக்கும் தலைப்பு இது.ஏற்கனவே தந்தைச் செல்வா கூறியதைத்தானே இப்போ நீங்கள் கூறுகிறீர்கள்.தந்தைச் செல்வா கூறி வட்டுக்கோட்டைத்தீர்மானம் பின்னர் ஆயுதம் போராட்டம்.இதற்கிடையில் காலம் காலமாக இந்தியாவுடன் கூடியிருந்த கூட்டணியும் இனப்படுகொலையில் பங்கேற்க வேண்டும்.உங்களுக்கும் விடுதலைப்புலிகளும் அவர்களோடு சேர்ந்து வாழ்பவர்களும் கொல்லப்படுவார்கள் என்ற செய்தியை இந்தியா கூறியிருக்கக் கூடும்.ஏனெனில் முள்ளி வாய்க்காலில் ஒரு கூட்டணி உறுப்பினர் கூட மாட்டவில்லையே.ஆகவே நீங்கள் அரசியல் பண்ணி சம்பளமும் எடுத்து கொண்டு அங்கு கிடைக்கும் அனுபவிப்புகளையும் அனுபவித்துகொண்டு ஜனாதிபதி ஏமாற்றி விட்டார். என்ற பதம் மக்களும் ஏமாந்து விட்டார்களென்றாகாது.சிங்களவனுக்கும் தமிழனுக்கும் ஒத்து வராது.இது தான் உண்மை

 

அண்டு தொடக்கம் படிச்சு படிச்சு சொன்னமே கேட்டியளே!!!!!! சரி அதை விடுவம். 
 
சிங்களவனாலை ஈழத்தமிழனுக்கு 60வருசமாய் நடந்த அழிவுகளுமா உங்கடை நினைவுக்கு வரேல்லை?
 
இனியாவது திருந்துங்கள். 
 
திருநாளைப்போவார் கதையள் இனியும் வேண்டாம்.  :icon_idea:

 

       நாய் வாலை நிமிர்த்த முடியாது, நறுக்கினால் தான் உண்டு: சுருண்டிருக்கும் வாலுக்குள் இலையான் போயிருந்தால் அது தமிழருக்கு ஆபத்து என்பது ஐதீகம்.ஆகவே கூட்டணியினரின் வால் நறுக்கப்பட்டு விவேகமுள்ள அரசியல் அறிவுள்ள இளைஞர்களிடம் கையளிக்கப்பட வேண்டும்.அண்மையில் சந்திரிகா அம்மையார் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது சம்பந்தர் தூங்கி வழிந்து கொண்டிருந்தார்.அவர் என்ன பேசினார் என்று இவருக்கு தெரியுமா?தமிழருக்கு எதுவுமே வழங்க மாட்டோம் என்று பேசியிருக்கக் கூடும்.ஆகவே இந்த தூங்கி வழியும் கூட்டம் அடுத்தவருக்கு வழியை விட்டு விலகியிருப்பது சாலச் சிறந்தது

கோசான்
 
நீங்கள் அடிக்கடி ஒரு சொற்றொடரை களத்தில் பாவிக்கின்றீர்கள் (இத்திரியில் இச்சொற்றொடர் நீக்கப்பட்டுள்ளது)  மிகவும்  வக்கிரம் நிறைந்த இச்சொற்றொடர் ; கருத்துக்களோடோ, செய்திகளோடோ சற்றும் தொடர்பில்லாது, மற்றவர்களை மனம் நோகச் செய்வதற்கென்றே இங்கு உங்களால் பாவிக்கப்படுகிறது. 
 
நடந்தவற்றை திரும்பி போய் மாற்ற முடியாது , இனி நடப்பவற்றையாவது வெற்றிகரமாக மாற்றுவோம் என பல்வேறு மன அழுத்தங்களில் இருந்து விடுபட்டு செயற்பட நினைப்பவர்களை , நீங்கள் உங்கள் வக்கிர வார்த்தைப் பிரயோகத்தால் சிதைக்கிறீர்கள். அதற்காக விடப்பட்ட பிழைகளை சுட்டிக் காட்டக் கூடாது என்பதல்ல, ஆனால் அதனை நீங்கள் உங்களின் நக்கல் நையாண்டிகளுக்கு பயண்படுத்துகிறீர்கள். அதன் வெளிப்பாடுதான் இப்படியான வக்கிரம் நிறைந்த சொற்றொடர்.
 
இச் சொற்றொடர் மற்றவர்களை எப்படி காயப்படுத்தும் என்பது நிச்சயமாக உங்களுக்குத் தெரியும். ஆனால் நீங்கள் மீண்டும் மீண்டும் அதனை விரும்பிப் பாவிக்கிறீர்கள். இதன் மூலம் உங்கள் மன வக்கிரம் தெளிவாக வெளிப்படுகிறது .
 
உங்களைப் போன்றவர்களுடன் விவாதம் செய்தே பலர் தங்களின் நேரத்தினை வீணடிப்பதாக நான் நினைப்பதுண்டு, ஆனால் இன்று அந்த லிஸ்டில் நானும் ............ என்ன செய்வது மிகவும் காயப்படுத்தும் உங்களை ஒவ்வொரு முறையும் மெளனமாக கடந்து செல்ல முடியவில்லை.
 
எனது பார்வையில்,
நிறைந்த பால்குடமான யாழ் இணையத்தில் நீங்களும் ,அர்ஜுனும் ,(சில சமயங்களில் வாலியும்) நச்சுத்துளிகள்.
 

Edited by Athavan CH

சம்பந்தன் சுமந்திரன் மாவை இந்த கோமாளிகள் ... அல்ல விசமிகள் இப்படிதான் சொல்வார்கள் இது எப்பவோ தெரிந்த விடயம் தானே ... மகிந்தவை துரத்த வேணும் என்பது தமிழ் முஸ்லிம் மக்களின் சொந்த அவா .. அதனால் எதிராகத்தான் வாக்கு போடுவார்கள் என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும் .. ஆனால் இவர்களின் நினைப்பு ஏதோ தங்களின் கருத்தால் மட்டுமே மக்கள் மனம் மாறி வாக்கு போட்டார்கள் என்று ... இந்த பில்ட் அப் வேற .... சாக்கடைகள் .. எப்பதான் மக்களுக்காக அரசியல் செய்யப்போரர்கள் ....
 
இந்த முறை இந்த நச்சு பாம்புகளை துரத்தி விட்டு புதிய இளைய புத்திசாலிகள் உள் வாங்கப்படவேண்டும் .....இது நடக்குமா ... 
 

Edited by பிரபாதாசன்

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் தலைப்புக்குக் கருத்து எழுதுங்கள்.சம்சும் .விக்கி கூட்டணிதான் நல்லது. என்கிறீர்கள். தலைப்பின் சாரம் என்னவென்றால் விக்கி ஐயா மற்ற இருவரையும்(ததேகூட்டமைப்பின் தலைமை இவர்கள் இருவருவரும்தான்)குற்றஞ்சாட்டப்பட்டது.பற்றியதுதான். அவர்கள் பெயரை நேரடியாகப் பாவிக்காமல் விட்டாலும் ததேகூட்டமைப்பின்மீதான குற்றச்சாட்டுக்களுக்குப் பொறுப்புக் கூறவேண்டிய பொறுப்பாளிகள். இதற்குள் தமிழரசுக் கட்சியின் தலைவர் ஏன் குத்தி முறியிறார் என்று தெரியவில்லை.தேர்தல் நெருங்க மாவை கொளுத்திப் போடும் பட்டாசுகள் அப்படித்தான் வெடிக்கும்.தேர்தல் முடிந்து பதவிக்கு வந்ததும்; எல்லாம் புஸ் என்று போய் விடும். மாவையின் வெடிகளை 1977 இற்கு முன்னிருந்து கேட்டு வருகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் நேரத்தில ஏன் இப்படி ஒப்பாரி வைக்கிறீர்கள்.போனமா சுதந்திரதினத்தில கலந்து கொண்டமா!கொட்டவி விட்டுத் தூங்கினமா!திடீரென முழித்து சிங்கக் கொடியைத் துக்கிப்பிடித்தமா என்பதை விட்டு இப்படிக் கத்திக் கப்பலைக் கவிழ்க்கக் கூடாது.அங்க இலண்டனில் சுமத்திரன் எவ்வளவு கஸ்ரப் பட்டு நல்லாட்சி பற்றி விளக்கம் கொடுக்கிறார். நீங்க அவங்கள் ஏமாத்திறாங்கள் எண்டா நாங்க எப்பிடி நம்பிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.