Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரண தண்டனையால் ஹீரோவான ஆமி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பகலவனின் நீண்ட விளக்கங்களில் என்னால் பூரணமாகவே உடன்படமுடிகின்றது. தலைவர் இயன்றவரை விடுதலைப் புலிகள் அமைப்பை கட்டுக்கோப்பாக நடத்தினார் என்பதும், அவருக்குப் பின்னர் அமைப்பைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கமுடியாது என்பதையும் உணர்ந்துதான் இருந்தார். அதனால்தான் இராணுவப் போராட்டம் தன்னுடனேயே முடிந்துவிடவேண்டும் என்று விரும்பியிருந்தார்.

கோஷான், சம்(பந்தர்), சும்(ந்திரன்) போகும் வழி சிறந்தது என்று சொல்லியுள்ளீர்கள். அவர்கள் போகும்வழி தமிழ் மக்களை எங்கு அழைத்துச் செல்லும் என்று உங்களுக்குத் தெரிந்ததாக எடுத்துக்கொள்வதால், எங்களுக்கு முடிவிடத்தைச் சொல்லுங்கள். அவர்கள் போவது சரிதானா என்று உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

போரில் புலிகளை வென்ற பின்னர் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை ஓரளவேனும் திருப்திப்படுத்த எதுவித காத்திரமான நடவடிக்கைகளையும் எடுக்காத மகிந்த அரசு சிங்கள இனவாதத்தையும், வெற்றிவாதத்தையும் வளர்த்துவிட்டுள்ளது. படித்த நடுத்தர, தாராளவாத சிந்தனையுடைய பெரும்பாலான சிங்களவர்களுக்கே தமிழ் மக்களின் பிரச்சினை என்னவென்பது தெரியாது. புலிகளை அழித்ததன் மூலம் தமிழ் மக்களை விடுதலை செய்துவிட்டோம். இப்போது உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கொழும்பில் நிறுவனம் ஒன்றில் பலவருடங்கள் வேலை செய்யும் எனது நண்பனை கேட்டபோது அவன் மிகவும் கொதித்துப்போனான்.

 

கொழும்பில் இருந்தாலும், புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் இருந்தாலும், தாயகத்தில் இருந்தாலும் தமிழ் மக்கள் விரும்புவது தமது அரசியல் சுதந்திரத்தையே. புலிகளில் தற்கொலை அரசியல் பிழையானது என்று சொல்லி தமிழர்கள் சிங்களவர்களுடன் புரிந்துணர்வை ஏற்படுத்தி,  முரண்பாடுகளை நீக்கி, ஒத்திசைவாக வாழவேண்டும் என்று சொல்வதும் மிகவும் தவறான அரசியலே.

வெற்றிவாதத்தில் திளைத்திருக்கும் சிங்களவர்களை தமிழ் மக்களுடனான அரசியல் முரண்பாடுகளை நீக்கி, தமிழர்களையிட்டுப் பயப்படாமல், தமிழர்களின் நிலங்களை சூறையாடாமல், தமிழர்களைப் பொருளாதார ரீதியில் ஒடுக்காமல், தமிழர்களின் நியாயமான கல்வி, வேலை வாய்ப்புக்களைத் தடுக்காமல், தமிழர்களை இரண்டாம்தர பிரஜைகளாகக் கருதாமல் இருப்பதற்கான வேலைத் திட்டங்களை எந்தச் சிங்கள அரசியல் கட்சி இதய சுத்தியுடன் ஆரம்பித்திருக்கின்றது என்று சொல்லுங்கள்.

ஆட்சிக்கு வரவிரும்பும் மைத்திரியின் கட்சியோ, அல்லது ரணிலின் கட்சியோ இத்தகைய வேலைத் திட்டங்களை முன்னெடுக்கப் போவதில்லை. கடும்போக்கான சிங்களவர்களை திருப்திப்படுத்துவதிலும், மகிந்தவின் அரசியல் செல்வாக்கைக் குறைக்க முயற்சிப்பதிலும் அவர்கள் முழுமூச்சாக இயங்கவேண்டியிருக்கும். தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வுகளைப் பற்றிக் கதைத்து தமது வாய்ப்புக்களை அவர்கள் குறைக்க முயற்சிக்கபோவதில்லை.

இதையெல்லாம் நன்கு தெரிந்த சம்சும்,  மேற்கு நாடுகளின் அழுத்தங்களோடு, திரைமறைவில் தாங்கள் தமிழர்களுக்கான நியாயமான அரசியல் தீர்வுக்காகப் பாடுபடுகின்றோம் என்று சொல்லி தமிழ்மக்களிடம் மீண்டும் வாக்குக் கேட்டுவருவார்கள். துணைக்கு தாரை, தப்பட்டைகளாக  தாயகம், தேசியம்,  தன்னாட்சி,சுயநிர்ணய உரிமைகளையும் கொண்டுவருவார்கள். பிரபாகரன் மாவீரன் என்று முழங்குவார்கள். தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள், சுதந்திரத்திற்கான வேட்கை அப்படியே இருக்கும். இதுதான் சம்சும் காட்டும் வழி. அதாவது அப்படியே நகராமல் இருத்தல்.

 

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து உங்கட அலம்பறைகளை ஒரு பக்கம் வைத்து விட்டு,முகநூலில், முதலில் இது குறித்து ரிப்போர்ட் பண்ணுங்கள். 

Under: Race and Hate 

Edited by Nathamuni

முகநூல் வைத்திருப்பவர்கள் இந்த பக்கத்தை ரிப்போர்ட் செய்ய வேண்டும். நான் செய்து விட்டேன் நீங்களும் செய்யுங்கள். 

report this page => I think it shouldn't be on FaceBook => It's hate speech => A race or ethnicity => Submit to facebook for review

முதலில் மன்னிக்கவும் தாமதமான பதிலுக்கு.

உங்களின் கருத்தை நான் மதிக்கிறேன்.

அதேவேளை தலைவர் மீதான உங்கள் ஒரு குற்றச்சாட்டை மறுதலிக்கும் நிலையிலும் நான் இருக்கிறேன்.

விடுதலைப்புலிகள் அமைப்பு மக்களிடம் இருந்து தோன்றிய ஒரு போராட்ட குழு.

ஆரம்பத்தில் கெரில்லா அமைப்பாக இருந்து படிப்படியாக வளர்ந்து ஒரு கட்டுகோப்பான மரபுவழி இராணுவ அமைப்பாக மாறிய விடுதலைப்போராளிகள்.

சாதரணமாக ஒழுக்க கட்டுப்பாடுகள் நிரம்பிய நாகரீக நாடுகளில் வாழும் எத்தனை குடும்பங்கள் தங்களின் பிள்ளைகளை கட்டுகோப்பாக வளர்க்க முடிகிறது. இருபதினாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளை ஒரு கட்டுகோப்பான நிர்வாகத்தினுள் வழிநடத்த ஒரு ஆற்றல் மிகுந்த தலைமைத்துவம் தேவை அது தலைவர் பிரபாகரனிடம் இருக்கிறது.

ஒரு 100 பேர் வேலை செய்யும் ஒரு அலுவலகத்தில் எத்தனை தவறுகள் நடக்கின்றன. அவை அந்த நிறுவனங்களின் தலைமைக்கு தெரிய எவ்வளவு நாட்கள் எடுக்கின்றன. இது இப்படி இருக்க ஒரு புறம் போராடிக்கொண்டே மறுபுறம் தவறுகளை கண்டறிந்து தண்டனை வழங்க நாட்கள் எடுக்கும். ஆனால் தவறு என்று கண்டறியப்பட்டால் தண்டனை வழங்காமல் தலைவர் இருந்ததில்லை. (இறுதி யுத்த தவறுகளுக்கு தண்டனை வழங்கும் கால அவகாசத்தை/சூழ்நிலையை  எதிரிகள் எமக்கு தரவில்லை).

பாலியல் குற்றங்களுக்காக மரண தண்டனை வழங்கப்பட்ட தளபதிகள் முதல் போராளிகள் வரை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

யாழ்மாவட்டத்தில் சுயநலனுக்காக புலிகளின் பெயரால் கொல்லப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்கப்பட்டு அதை செய்த புலனாய்வு பொறுப்பாளருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது தெரிய வாய்ப்பில்லை.

மக்களின் நிதி மோசடி, ஊழல் போன்றவற்றிக்கு கூட எத்தனையோ வருடங்களாக போராடிய எத்தனையோ போராளிகளுக்கு மரண தண்டனை வழங்கபட்டிருக்கிறது.

என்ன கோசான், இதை இப்போ சொல்வதற்கோ, அறிக்கை மூலம் வெளியிடவோ, உரிமை கூறவோ யாருமே இல்லை என்ற நினைப்பில் தான் குற்றச்சாட்டுகள் எழுந்தமானமாக வைக்கபடுகின்றன.

தலைவர் தவறு இழைக்கவில்லை என்று நான் கூறவரவில்லை. ஆனால் அதை இப்போது விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தான் நினைக்கிறேன். தலைவரும் எங்களை போன்றே ஒரு சாதாரண தமிழ் தாயின் வயிற்றில் பிறந்தவர் தான். அவரை கடவுளாக மாற்றி தவறே இழைக்காதாவராக மாற்றியது அவரை வைத்து வியாபாரம் செய்த/செய்யும் கூட்டம் மட்டும் தான். அவரை புகழ்வதன் மூலம் தங்களுக்கு லாபமீட்டி கொண்ட கூட்டம்.

2009 தை விசுவமடு சந்திப்பில் தலைவர் சொன்ன வசனம் இதுக்கு பொருந்தும் என்று நம்புகிறேன்.

"நான் இருக்கும் வரை இந்த போராட்டத்தை நகர்த்துகிறேன், எனக்கு பிறகு நீங்கள் விடுதலை புலிகள் அமைப்பை மொத்தமாகவோ சில்லறையாகவோ வித்து கொள்ளுங்கோ". "இந்த யுத்தம் முடியும் போது நாங்கள் வென்றிருப்போம் இல்லை நான் இறந்திருப்பேன்."

இந்த பெரிய ஒரு தமிழ் விடுதலை போராளிகளை ஒழுக்க கட்டுப்பாட்டுடன் (உலகம் சொல்லும்) வளர்க்க ஒரு தலைமைத்துவம் வேண்டும். அது என் வாழ்நாளில் தலைவர் பிரபாகரனிடம் கண்டேன். 

இந்த மாவீர்களால் நடாத்தப்பட்ட போராட்டம் "விழலுக்கு இறைத்த நீர்" என்று ஒரு பதத்தை குறிப்பிட்டிருந்தீர்கள்.

இந்த போராட்டத்தால் தான் இன்று எங்கள் இன விடுதலை போராட்டம் உலகமயப்பட்டிருக்கிறது. எங்களுக்கு ஒரு பிரச்சனை இருக்கு என்று உலகத்துக்கு தெரிகிறது. இன்னொரு போராட்டம் இப்படி வரக்கூடாது என்றாவது தீர்வு கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இல்லை என்றால் தீர்மானம் போட்டுவிட்டு சத்தியாக்கிரகம் செய்துவிட்டு பொல்லுகளால் அடிவாங்கி, ரயர் போட்டு கொளுத்தி இலங்கையில் ஒரு தமிழனும் இல்லாமல் பண்ணியிருப்பார்கள் சிங்களவர்கள். இது ஒரு ஊகமாக தான் நான் சொல்கிறேன். ஆனால் அப்படி நடந்திருக்காது என்று உங்களாலும் கூறமுடியாது தானே.

நாங்கள் ஒரு தேசிய இனம், எங்களுக்கு விடுதலை தேவை என்ற எண்ணத்தை விதைத்து சென்றது ஆயுதம் ஏந்திய விடுதலைப்போராட்டம் தான்.

இப்போது திரு.சம்பந்தர் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு அறுவடை செய்யும் வாக்குகள், விடுதலை போராட்டம் என்ற அடித்தளத்தில் உருவானது என்பதை உங்களால் மறுக்கமுடியுமா.?

இந்த போராட்டத்தால் தான்  தமிழர்கள் புலம்பெயர்ந்து இன்னும் தாயகத்தை பொருளாதார ரீதியாக விழாமல் காப்பாற்றி வருகிறார்கள். உள்நாட்டு யுத்தம் நடந்த ஆபிரிக்க நாடுகள் போல இல்லாமல் எமது தாயக மக்கள் இன்னும் பட்டினியால் சாகாமல் இருக்க இந்த புலம்பெயர் பொருளாதாரம் தான் காரணம்.

தாயக மக்களை பயத்தினாலும் அடக்குமுறைகளினாலும் அடக்கிவிட்டால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நினைத்த அரசுக்கு தடைக்கல்லாக இருப்பது புலம்பெயர் தமிழர்கள் தான். அரசு கூட பேச்சுக்கு அழைக்கும் அளவுக்கு பலம் இருக்கு.

நீங்களும் "வாறதாக" குறிப்பிட்டிருந்தீர்கள். நன்றி. அது திரு.சம்பந்தரோ அல்லது திரு சுமந்திரனோ தியாகங்கள் வீண் போகாது, எங்கள் மக்களின் உரிமைகளை வென்று எடுத்து தருவார்களானால் அவர்களை வாழ்த்தும் முதல் மக்கள் கூட்டத்தில் நாங்களும் இருப்போம்.

மௌனிக்கப்பட்ட ஆயுதங்களை கையிலெடுக்க உங்களை அழைக்கவில்லை. உரிமைகளை ஆயுதங்களால் மட்டுமே வென்று எடுக்க முடியாது என்று உணர்ந்து காலங்கள் ஓடிவிட்டன.

அந்த மாவீரர்களால் இன்று எங்களுக்கு தந்திருக்கும் ஒரு பலத்தை கூட ஒற்றுமை இல்லாமல் வீணடிக்க வேண்டாம் என்று தான் உங்களை தாழ்மையாக கேட்டுகொள்கிறேன்

 

 

 

நன்றிகள் பகலவன் , இதனை விட சிறப்பானதாக உண்மையை சொல்ல முடியாது ... மிகவும் பாராட்டுகின்றேன் 

 

தயவு செய்து உங்கட அலம்பறைகளை ஒரு பக்கம் வைத்து விட்டு,முகநூலில், முதலில் இது குறித்து ரிப்போர்ட் பண்ணுங்கள். 

Under: Race and Hate 

நாதம் நீங்க எங்கேயோ போய்டியல், இனி உங்கக்கூட யொல்லு விட பயமாய் இருக்கின்றது

சிங்களவன் இப்பவும் இனவாதம் பேசித்தான் சிங்களவர்களின் வாக்குகளை பெற முடியும் என்ற மன நிலையில் உள்ள போது சம் சும் அவர்களின் விட்டு கொடுப்பு அரசியலால் கடைசியில் தமிழருக்கு ஒரு பிரச்சனையும் இங்க இல்லை என்று இவர்களின் வாயாலே சொல்ல வைப்பார்கள் ...

பொறுத்து இருந்து பாருங்கள் .. அதற்காக எங்களது மாவீரர்களின் தியாகங்களை வீணடிக்க கூடாது ...
இனி பொறுத்து இருக்க முடியாது ...அதற்கான கால அவகாசம் இல்லை ... 

எங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்க கூட முடியாத இந்த வீண் பேச்சு தலைவர்களை என்ன புகழ் பாடவா முடியும் ... உலத்திகே எடுத்து காட்டான வீரமான போராட்டத்தை நடத்திய தலைவனை புகழ்வதில் எந்த தப்பும் இல்லை ... அதற்கான தகுதி இருந்ததால் ... 

கோசன் சொல்கின்ற  மாதிரி ,... சில வெளிப்படை உதரணங்களை எழுதி தன்னை நியாயம் காட்டி  பிரபா எதிர்ப்பு கொள்கையை மட்டுமே அவர் எழுத்தில் காண முடிகின்றது ....

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகலவன் உங்களது நேரத்துக்கும் கருத்துப்பகிர்வுக்கும்..

 

ஆனால் நீங்கள் ஒரு விடயத்தை உள்வாங்கி இங்கு பதிகின்றீர்களா? என்பது தெரியவில்லை...

யாழில் தற்பொழுது எதிர்க்கருத்துக்களாக பதியப்படும்

புலிகள்

புலத்தவர்

தேசியம் சார்ந்து ஒத்த கருத்து எழுதுவோரை 

எதைக்காட்டியாகினும் 

எதைக்கிளறியாகினும்

ஓரம் கட்டுவதும்

அவர்களை பேசவிடாது தடுத்தலுமாகும்.

இதற்கு அவர்கள் எதையும் தோண்டுவர்

எதையும் புடுங்குவர் என்பது வெள்ளிடை மலை.

இன்னும்  கூர்மையாக சொன்னால் அர்யூனையும் அவரது கருத்துக்களையும் முன்னிறுத்தித்தான் இந்த தர்க்கங்கள் முன் வைக்கப்படுகிற்றன.

இங்கு நான் சொல்வது அர்யூனின் கருத்துக்களுடன் முரண்படுங்கள் என்பதல்ல

அவரது கருத்துக்களை வாசித்திருக்கின்றீர்களா என்பதே...

அதை கடந்த பல வருடங்களாக வாசித்திருந்தால்

முயலுக்கு 3 கால்கள் என்பது எங்கிருந்து வந்தது என்பதைக்கண்டு கொண்டால்.....

அங்கிருந்து ஆரம்பிக்கணும் என்பதே எனது வேண்டுகோள்

ஆனால் நேரம் மிக மிக பொன்னானது என்பது எனது உங்களுக்கான ஆலோசனை.....

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

மே விலங்கு தமா திபென்னே நும்பட்ட நொவ புத்துனே, அப்பட்ட லபா துன் நிதஹஸட்ட! 

இந்த விலங்கு உனக்குப் போடப்படவில்லை மகனே, (நீ) எமக்குப் பெற்றுக்கொடுத்த சுதந்திரத்துக்குப் போடப்பட்டிருக்கிறது!

இது  பேரினவாதிகளை மீண்டும் அடையாளம் காட்டியிருக்கிறது. அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள் எனத் தெரிந்தும் அது நாட்டின் விடுதலை அல்லது சுதந்திரத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது.  இந்த கொடியவனைப் பார்க்கும்போதே அடிமட்டு முட்டாள் என்று தெரிகின்றது.  உள்நாட்டில் ஒரு நேர்மையான விசாரணை நடந்தால்கூட  (அப்படி நடக்காது) அதனைச் சிங்களம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.  அதே போன்று தமிழர் தரப்பும் ஏற்றுக்கொள்ளாது. இந்தச் சம்பவம் இறுதி போர் தொடங்க முன்னர்  நடைபெற்ற சம்பவமாகும். இவ்வாறான சம்பவங்கள் விசாரிக்கப்படுமிடத்து போரில் ஈடுபட்ட இருதரப்பின் மீறல்களும் செயற்பாடுகளும் விசாரிக்கப்படும்.      பன்னாட்டுப் பொறிமுறை ஏற்பட்டால் கூட அதன் தீர்ப்பு சிங்களத்துக்கு மட்டுமல்ல தமிழர் தரப்புக்கும் கசப்பாகவே இருக்கும். (இந்தியா தவிர்ந்த பன்னாட்டுப் பொறிமுறையே நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்து). மூன்று பத்து ஆண்டுகளுக்கு மேல் நடந்த போர் தமிழ் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும் சிங்கள இனவாதிகளுக்கும் வாய்ப்பாக அமைந்துவிட்டது.  அவர்கள் தங்களது பாக்கட்டுகளை நிரப்பினார்களே தவிர அப்பாவிப் பொதுமக்கள் மத்தியில் விரோத மனப்பான்மையை விதைத்தார்கள். இந்த நிலைமையை ஓர் இரவுக்குள்ளாக மாற்றிவிடமுடியாது. 

சிங்கள மக்களைக் குழப்பும் நோக்கில் செயற்படும் இனவாதிகளும், தமிழ் மக்களைக் குழப்பும் நேக்கில் செயற்படும் விசில் குஞ்சுகளும் அப்புறப்படுத்தப்படும்வரை அமைதியை நேக்கிய பயணம் கடினமாகவே இருக்கும்.  ஆனாலும் தாயகத்தில் உள்ள பெரும்பான்மையான தமிழர்களும் சிங்களவர்களில் (முன்னர் இருந்ததை விட) கணிசமானோரும் இந்த சூழ்ச்சிக்காரர்களை அடையாளம் கண்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது. 

நாட்டில் மக்களும் அரசியல்வாதிகளும்  யதார்த்தத்தை உணர தொடங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது .எல்லாவற்றிகும் முட்டுக்கட்டையாக இருந்தவர்களும் இப்போது இல்லை அவர்களால் உருவாக்கிவிட்டு சென்ற சிங்கள அரசியல்வாதிகளை அப்புறப்படித்தினால் விடிவு தூரமில்லை.

எது எப்படியோ, முப்பதுவருட அரசியல் போராட்டம் அதிலிருந்து முப்பதுவருட ஆயுத போராட்டம், அதன் முடிவில் இருந்து மீண்டும் அரசியல் ராஜதந்திர போராட்டம்.

ஒவ்வொரு போராட்ட முடிவிலும் நாங்கள் முன்னேறினதாக பீற்றிகொள்கிறோம் அனால் ஒட்டு மொத்த அறுபது ஆண்டு கால பகுதியில் தமிழரின் நிலை சரிந்தே வந்திருக்கின்றது. 

இருந்தாலும் கடைசி தமிழன் இருக்கும் வரை போராட்டம் தொடரும் அனாலும் தீர்வு வராது. 

அப்படியே இலங்கைத்தீவு இறுதியில் சிங்கள மயமாகிவிடும்.

 

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

 அப்படியே இலங்கைத்தீவு இறுதியில் சிங்கள மயமாகிவிடும்.

அதுக்குத்தான் சிலர்... ராஜதந்திரம் என்று, பீத்திக் கொண்டு திரிகிறார்கள்.
அவர்களைப் பார்த்து சில, "ரியூப் லைட்டுகள்", ஆகா..... ஓஹோ... என்று,
 மாறி, மாறி..... முதுகு  சொறிந்து கொண்டு  இருக்கிறார்கள்.

எனது நண்பன் சொன்னதுதான் இங்கு நினைவு வருகின்றது ."புலிகள் எப்போ தமிழ் ஈழம் எடுக்கும் என்று பார்த்துக்கொண்டு இருக்கின்றாராம் நிம்மதியாக போய் கொழும்பில் இருக்க " 

புலிகளின் தமிழ் ஈழத்தை விட சிங்களவனின் இலங்கை ஆயிரம் மடங்கு திறம்தான் .

அதுக்குத்தான் சிலர்... ராஜதந்திரம் என்று, பீத்திக் கொண்டு திரிகிறார்கள்.
அவர்களைப் பார்த்து சில, "ரியூப் லைட்டுகள்", ஆகா..... ஓஹோ... என்று,
 மாறி, மாறி..... முதுகு  சொறிந்து கொண்டு  இருக்கிறார்கள்.

சிறி நான் சொன்னது மொத்தம் 65/70 ஆண்டுகள் போயிருந்தாலும் சிங்களவனிட்ட இருந்து இன்னும் ஒரு தந்திரத்தையும் யாரும் படிச்சதாயும் இல்லை அதில அரசியல் போராட்டமும் வருது ஆயுத போராட்டமும் வருது. 

ஊரைவிட்டு ஓடிப்போனதுகள் போனதுகள் தான் இனிவராதுகள், கொஞ்சம் செத்து போச்சுதுகள் இருக்கும் கொஞ்சம் பிச்சை வேண்டாம் நாயபிடி என்றளவுக்கு கொந்தாயிர்று இன்னும் ஒரு சிறு தொகை சீரழிந்து போகுதுகள்.

கவுண்டர் சொன்னமாதிரி இனிமேல் நீங்க வயசுக்கு வந்தாத்தான் என்ன வரலாட்டாத்தான் என்ன?

 

 

எனது நண்பன் சொன்னதுதான் இங்கு நினைவு வருகின்றது ."புலிகள் எப்போ தமிழ் ஈழம் எடுக்கும் என்று பார்த்துக்கொண்டு இருக்கின்றாராம் நிம்மதியாக போய் கொழும்பில் இருக்க " 

புலிகளின் தமிழ் ஈழத்தை விட சிங்களவனின் இலங்கை ஆயிரம் மடங்கு திறம்தான் .

புலிகளை மட்டும் தவிர்த்து அர்ஜூனால் ஒன்றும் எழுத முடியவில்லை என்பதே உண்மை ..
முன்னால் உள்ள எதிரி சிங்களவனை நம்பினாலும் இப்படியான பின்னால் குத்தும் ஆட்களை தான் நம்ப முடியாது ...

இதுவரையில் ஆக்கபூர்வமான எந்த கருத்தையும் எழுத தெரியவில்லை .. ஒன்று மட்டும் தெரியும் புலி எதிர்ப்பு ...

இப்படியான வண்டிகளை நம்பினால் அவ்வளவுதான் ... 

  • கருத்துக்கள உறவுகள்

 

புலிகளை மட்டும் தவிர்த்து அர்ஜூனால் ஒன்றும் எழுத முடியவில்லை என்பதே உண்மை ..
முன்னால் உள்ள எதிரி சிங்களவனை நம்பினாலும் இப்படியான பின்னால் குத்தும் ஆட்களை தான் நம்ப முடியாது ...

இதுவரையில் ஆக்கபூர்வமான எந்த கருத்தையும் எழுத தெரியவில்லை .. ஒன்று மட்டும் தெரியும் புலி எதிர்ப்பு ...

இப்படியான வண்டிகளை நம்பினால் அவ்வளவுதான் ... 

இந்தளவிற்கு சமந்தரும் சுமந்திரனும் இணக்க அரசியல் செய்யும் சிங்கள அரசே இப்போதும் புலிகளை வைத்தே சிங்கள மக்களிடம் அரசியல் செய்கின்றனர்.
இவர்களுக்கு வேறு எந்தத் தெரிவு  இருக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

நாதம் நீங்க எங்கேயோ போய்டியல், இனி உங்கக்கூட யொல்லு விட பயமாய் இருக்கின்றது

தாங்கள் பார்த்த வகையில அங்க ஒன்றையுமே காணவில்லை எண்டு சொல்லுவினம்:

அவை அனுப்பிற பதில் மெயிலில சிமிளில முதலாவதை செலக்ட் பண்ணினால் உங்களுக்கு, மேலதிக கமென்ட் போடலாம்.

அதில் இந்த லிங்கை போட்டு விடுங்கள்:

http://www.dailymirror.lk/77509/8-idps-murdered-in-jaffna-soldier-sentenced-to-death

இந்தளவிற்கு சமந்தரும் சுமந்திரனும் இணக்க அரசியல் செய்யும் சிங்கள அரசே இப்போதும் புலிகளை வைத்தே சிங்கள மக்களிடம் அரசியல் செய்கின்றனர்.
இவர்களுக்கு வேறு எந்தத் தெரிவு  இருக்கும்?

எந்த விடயத்தால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டார்களோ அந்த விடயத்தை வைத்துதான் எவரும் பிரச்சாரம் செய்வார்கள் .அது பெருமைப்படும் விஷயம் அல்ல வெட்கப்பட வேண்டிய விடயம் .பயங்கரவாதத்தை ஒழித்து விட்டோம் என்றால் உங்களுக்கு ரொம்ப பெருமை போல .

இந்தியாவில் ஊழலை முதன்மை படுத்தி பிரச்சாரம் செய்வார்கள் .

எந்த விடயத்தால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டார்களோ அந்த விடயத்தை வைத்துதான் எவரும் பிரச்சாரம் செய்வார்கள் .அது பெருமைப்படும் விஷயம் அல்ல வெட்கப்பட வேண்டிய விடயம் .பயங்கரவாதத்தை ஒழித்து விட்டோம் என்றால் உங்களுக்கு ரொம்ப பெருமை போல .

இந்தியாவில் ஊழலை முதன்மை படுத்தி பிரச்சாரம் செய்வார்கள் .

உங்களுக்கு புலிகளால் தான் சிங்களவன் தமிழன் மீது அநியாயம் செய்தான் . உங்கள் கருத்துகள் எப்பவுமே இப்படிதான் உள்ளது ... 

இப்படியான அறிவு சூனியங்கள் இருப்பதால் தான் தமிழனின் தண்டவாளம் தெறித்து ஓடுகின்றது ..

எந்த விடயத்தால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டார்களோ அந்த விடயத்தை வைத்துதான் எவரும் பிரச்சாரம் செய்வார்கள் .அது பெருமைப்படும் விஷயம் அல்ல வெட்கப்பட வேண்டிய விடயம் .பயங்கரவாதத்தை ஒழித்து விட்டோம் என்றால் உங்களுக்கு ரொம்ப பெருமை போல .

இந்தியாவில் ஊழலை முதன்மை படுத்தி பிரச்சாரம் செய்வார்கள் .

அப்ப உங்கட பிரச்சாரங்களும் இந்த வகையை சார்ந்தது என்று ஒத்துக்கொள்கிறீர்கள்:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

@Nathamuni @தெனாலி

இதுக்கு என்ன செய்யிறது?

https://www.evernote.com/l/AAJtjly2wNdFxoRZytUhUaaR1_-cDTiu-zU

 

 

நமக்கும் அதே பதில்தான் வந்தது 
என்ன செய்வது....?

  • கருத்துக்கள உறவுகள்

@Nathamuni @தெனாலி

இதுக்கு என்ன செய்யிறது?

https://www.evernote.com/l/AAJtjly2wNdFxoRZytUhUaaR1_-cDTiu-zU

 

 

அந்தப் பக்கத்தில் கீழே, Give Your Feedback இருக்கிறது பாருங்கள். அதன் கீழ் தரப்பட்டுள்ள Smilies களில் முதலாவதை அமத்த, மேலதிக காமொன்ஸ் போட முடியும். அதில் நான் தந்த லிங்கை போட்டு விடுங்கள். முடிந்தால், majority, minority, unhcr, war crime விபரங்களை போடுங்கள்.

முதல் தடவை report போடுபவர்கள், போடும்போதே லிங்கை போடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

@Nathamuni  submit பட்டனை அமத்தியாச்சு.

https://www.evernote.com/l/AAIylJgHompBq4LzmcWfVgNdg4TcnxteGVo

எங்கையிருந்தப்பா.... கிளம்பி வாறீக.:wub:

சனியன்.... செவன் இன் காFவ்.:rolleyes::lol:

Edited by தமிழ் சிறி
ஒரு... வசனம் சேர்ப்பதற்காக, திருத்தப் பட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.