Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்மை நாமே ஆளுகின்ற அதிகாரங்கள் வேண்டும்! - இரா.சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
எம்மை நாமே ஆளுகின்ற அதிகாரங்கள் வேண்டும்! - இரா.சம்பந்தன்
[Monday 2015-06-29 07:00]
எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கின்ற, எம்மை நாமே ஆளுகின்ற அதிகாரங்கள் வேண்டும். அதனைத் தான் நாம் கோருகின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை தமிழர் அபிவிருத்தி ஒன்றியத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்டத்தின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆயர் அதிவணக்கத்திற்குரிய நோயல் இம்மானுவலை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சர்வோதய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கின்ற, எம்மை நாமே ஆளுகின்ற அதிகாரங்கள் வேண்டும். அதனைத் தான் நாம் கோருகின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை தமிழர் அபிவிருத்தி ஒன்றியத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்டத்தின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆயர் அதிவணக்கத்திற்குரிய நோயல் இம்மானுவலை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சர்வோதய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

  

இந்தநிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மக்கள் தமது அனுபவம் மற்றும் அறிவின் அடிப்படையில் தாமக்காக வேலை செய்யக்கூடிய பிரதிநிதியினை தெரிவு செய்ய வேண்டும். மக்களது பிரச்சினைகளை தீர்ப்பதாக இருந்தால் அவற்றை நிறைவேற்றக்கூடிய அதிகாரம் அவர்களிடம் இருக்கவேண்டும். அதைத்தான் நாங்கள் கேட்கின்றோம். இந்த சந்தர்ப்பத்தை நாங்கள் முழுமையாக பயன்படுத்தவேண்டும். எனவும் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=135019&category=TamilNews&language=tamil

 

 
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் நெருங்க நெருங்க சம் சும் கும்பலின் பேச்சும் மாறும். தேர்தல் முடிஞ்சதும்... மீண்டும்.. அது பழைய நிலைக்கு திரும்பிடும்.இதுவே வாடிக்கையாப் போச்சு. இதற்கு எப்ப முடிவுரை வரப் போகுதோ..?! :o:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அதைத்தான் நாங்களும் சொல்கிறோம் நீங்கள் தேர்தல் வந்தவுடன் சொல்லி தேர்தல் முடிந்தவுடன் மறந்திடுவீர்கள்.

1977 இல் MP ஆகி 2001 இல் இருந்து 14 ஆண்டுகளாக தொடர்ச்சியாக கதிரையை கெட்டியாக பிடித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.  82 வயசாச்சு இனியாவது ஒதுங்கி இருக்கலாமே? 

 

இலங்கையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சம்பளம் மற்றும் சலுகைகள் இதோ,

salary -54,485 Rs 
fuel -30,000 Rs 
transport-10,000 Rs 
Entertainment- 10,000 Rs 
mobile phone -2000 Rs 
meeting each -500Rs 
Current bill - free 
Land line phone - free 
train ticket first class free
Air tickets 40 free For Him and for his wife or PA (tow persons)

மற்றும்

Secretary 
Vehicle 
Quarters 
Computers
Bodyguards

ஆக மொத்தம் சராசரி மாதாந்த சம்பளம் 120,000/= வருடத்திற்கு 1,440,0000/=

ஜந்து வருடத்திற்கு ஒரு எம.பி க்கு மொத்த சம்பளம் - 7,200,000/=

இதைவிட வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரம்( ஒரு கோடி????)

 

ஒரே ஒரு முறை தேர்தலில் வென்று MP ஆகினால் போதும் ஆயுட் காலம் முழுவதும் ஓய்வூதியம். தற்போது 39,000 மேல். 

ஆனால் இவர்கள் மக்களுக்கு என்ன சாதித்தார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது எத்தினையாவது திருத்த சட்டத்தில வரும்? அது எப்ப வரும் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

எம்மை நாமே ஆளுகின்ற அதிகாரங்கள் வேண்டும்! - இரா.சம்பந்தன்

 

அன்று தொடக்கம் இதை சொல்லித்தானே ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களையும் நிர்க்கதியாக்கி விட்டீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இனி அடுத்த தேர்தலில் அதிகாரம் பற்றி சிந்திக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்

எம்மை நாமே ஆழுகின்ற 'பக்குவம்' எமதினதுக்கு இன்னும் ஏற்படவில்லை என்றே கருதுகிறேன்!

'சுய நலம்' மேலோங்கி நிற்கின்ற ஒரு சமுதாயத்தில்.... 'பொது நலம்' எப்போதும் இரண்டாமிடத்தையே எடுத்துக்கொள்ளும்!

சந்தர்ப்ப வாதங்கள்.. சாகின்ற வேளையொன்று வருமெனில்...அன்று நாம் எம்மை ஆழ்வது பற்றிச் சிந்திக்கலாம்!:rolleyes:

 

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

சம்மந்தன் ஐயா நம்மை நாம் ஆள முடியாது ஐயா அடிச்சிட்டு செத்துடுவோம் அன்று தொடக்கம் இன்று வரை இதைதான் செய்கிறோம்:unsure:

என்ன அண்ணாச்சி இப்பிடியெல்லாம் கதைகிறிங்க ... அப்படியான சிந்தனை இப்பவும் உள்ளதா ? அல்லது தலையில் பச்சை மிளகாய் அரைக்க தயாரா ? 

இதுக்ககதானே எத்தனை ஆயிரம் போராளிகள் , மக்கள் தங்கள் உயிரை கொடுத்து போராடி இந்த உலகத்திக்கு எங்கள் தேவையை உணர்த்தி சென்றார்கள் ..

ஆனால் நீங்களும் சுமந்திரனும் தான் ...நாங்கள் அப்படியல்ல சிங்களவனுடன் காதல் காமம் செய்கின்றோம் . 
என்று அந்தர் பல்டி அடித்து ஏமாற்ற்றுவதே பிழைப்பாக வைத்துள்ளீர்கள் ... 

இப்ப என்ன சுடலை ஞானமா ? அல்லது அடுத்த ஆப்பா ? ...

இந்தமுறை இருக்கு உங்களது பம்மாத்து அரசியலுக்கு செருப்படி ? இந்த கிழட்டு வயதிலையும் கள்ள அரசியலுக்கு முற்று புள்ளி வைக்கும் எண்ணம் இல்ல . உங்களுக்கு பிறகு சுமந்திரனை தயார் படுத்திறிங்களா ? அடுத்த கள்ள அரசியல் செய்ய 

  • கருத்துக்கள உறவுகள்

அட.... சம்பந்தன்  பையனுக்கு, சுடலை ஞானம் வந்திட்டுது.:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.