Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளிகள் ஒன்றிணைந்து 'ஜனநாயகப் போராளிகள்' கட்சி உதயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ விசுகு,

1) இன்றைக்கும் அவர்களுக்கு கட்டுக் காசு மிஞ்சப் படாது என்பதே என் நிலை.

2) நேற்றுவரை மிஞ்சாது என்றுதான் கணிப்பு இருந்தது. கடந்த ஒரு மாதமாய் யாழ்பாணத்தில் மட்டும் ஒரு, ஒரு சீட் வெல்லும் வாய்ப்பு உள்ளது போல் தெரிகிறது.

என் நிலைபாடு (1) மாறவில்லை. என் கணிப்பு (2) நான் அவதானிப்பவற்றின் அடிப்படையில் மாறுகிறது. அப்படி மாறாவிட்டால் அது கணிப்பல்ல, பிரச்சாரம்.

ஆனால் வித்தியின் இந்த அமைப்பு வரவால் அதிகம் பாதிக்கப் படப் போவது ததேமமு தான்.

  • Replies 53
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு ஜனநாயக அமைப்பில் எவரும் கட்சி தொடங்கலாம் தேர்தலில் போட்டியும் இடலாம் வென்றால் பாராளுமன்றம் செல்லலாம் முடிந்தால் ஆட்சியும் அமைக்கலாம் .இதில் யாரும் விதி விலக்கில்லை.

மக்கள் தீர்ப்பை மதிக்கத்தான் வேண்டும் .

வீட்டுக்கு வீடு ஆமி / கத்தி வாள் கூட்டங்களை இருத்திப்போட்டு மக்கள் தீர்ப்பாம் மகேசன் தீர்ப்பாம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் உங்களுக்கு ஒரு சந்தோசம் இருந்தால் அது என்பக்கியமே . அதுபற்றி  நான் உடனேயே தவறு என்று சொல்லிவிட்டேன் . அதற்க்கு மேல் என்ன செய்ய முடியும் .

அதற்குரிய காரணத்தையும் சொல்லியிருந்தேன் . இலங்கையில் படிக்காமல் இந்தியாவில் கப்பல் ஓடின ஒருவரை, அன்ன காவடிகள் அப்துல்கலாம் லெவலுக்கு தூக்கிய படியால்தான் அப்படி யோசிக்க வேண்டி வந்தது என்றும். ஆனால் ஒன்று, இனி நீங்கள் யாரையும் குதிரை ஓடினவர்கள் -அது உண்மையோ பொய்யோ என்பதர்ற்கு மேல்,  என்று சொல்ல முடியாதுதானே?

மற்றது:

அண்ணை, சனம் ததேமு வைத் தெரிந்தால் தற்கொலை முடிவு எண்டு நீங்கள் சொல்லுவீர்கள். அதே நேரத்தில கூட்டமைப்பை தெரிந்த நாங்கள் ஒன்றும் சொல்ல கூடாது . 

இந்த  இரட்டைத்தனம்தான் எனக்கு பிடிக்கவில்லை . 

புலி பிழைவிட்டது; அதலேதான் இந்தளவு அழிவும் அலங்கோலமும் என்று சொல்லாத ஆள் இல்லை . ஆனால் , புலியை சாட்டி தமிழர் பிரதேசத்தில் வாக்கு கேட்டுக்கொண்டு சிங்களவனுக்கு சேவகம் செய்கிறவர்களை மக்கள்-படித்த மக்கள், திருத்த வேண்டும் என்று சொன்னால், யாழ் நிர்வாகமும் ஏதோ ஒரு அழுத்தத்தாலே அந்த கருத்தை தூக்குகிறது . அதுதான் இன்றைய ஊடக வெளி . 

சனம் பத்திரிகை வாசித்து வாக்கு போடுவதில்லை என்றால் என்ன காரணத்திற்காக ,  ஒருமுறை உதயன் போலி பத்திரிகை தேர்தல் தினத்தன்று வந்ததற்கு வழக்கு எல்லாம் போட்டு குயோ மாயோ என்று கத்தினவர்கள் ?

எழுத வேண்டும் என்கிறதிக்காக எழுத வேண்டாம் . 

சம்பந்தர் ஒரு இடத்தை பத்திரிகை முதலாளிக்கு கொடுக்கும் போது, அவரது பின்கதவு சகா பத்திரிகை சுதந்திரம், நடந்து முடிந்த மாற்றத்தினால் வந்த அருமருந்து என்னும் போது , அவர்களது அடிபொடிகள், அவரை துதி பாடும் நபர்கள்....அது அப்படி இல்லை, சரா ஒரு சுதந்திர போராட்ட வீரர் ; அவருக்கு கொடுக்கபட்ட பாராளுமன்ற கதிரைக்கும் அவரது பத்திரிகைக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்கிறார்கள் . இதை யாரிடம் சொல்லி அழ?

முன்னர் போராளிகள் அரசியலின் திசையை நிர்ணயித்தார்கள், இபோ முன்னாள் போராளிகளை வைத்து யாரோ அரசியலை நடத்துகிறார்கள்.

இரு நூறு மாணவர்களுக்கு மூன்று நாலு ஆசிரியர்கள் .இப்படிதான் நான் பார்ப்பது அதானால் கோவம் பெரிதாக வருவதில்லை ஆனால்  இடைக்கிடை பிரம்பும் எடுக்க வேண்டிக்கிடக்கு .மற்றவர்களுக்கு தெரியாததை சொல்லிக்கொடுப்பதில் தப்பில்லை எத்தனை பேருக்கு அறிவை ஊட்டியிருக்கின்றோம் .

செமக்காமடி, நேரம்வரும்போது சிரிக்குறேன்

புலி பிழைவிட்டது; அதலேதான் இந்தளவு அழிவும் அலங்கோலமும் என்று சொல்லாத ஆள் இல்லை . ஆனால் , புலியை சாட்டி தமிழர் பிரதேசத்தில் வாக்கு கேட்டுக்கொண்டு சிங்களவனுக்கு சேவகம் செய்கிறவர்களை மக்கள்-படித்த மக்கள், திருத்த வேண்டும் என்று சொன்னால், யாழ் நிர்வாகமும் ஏதோ ஒரு அழுத்தத்தாலே அந்த கருத்தை தூக்குகிறது . அதுதான் இன்றைய ஊடக வெளி . 

யாழ் நிர்வாகத்தின் மீது எதுவிதமான அழுத்தங்களும் அரசியல் கட்சிகளாலோ அல்லது பிற அமைப்புக்கலாலோ பிரயோகிக்கப்படவில்லை என்பதை உறுதியாகக் சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம்.

களவிதிகளை மதிக்காமல் இழிவாகவும், அநாகரீகமாகவும் அரசியல்வாதிகளை கொச்சையாக விமர்சிக்கும் கருத்துக்களை அவற்றின் சொல்லாடல்களுக்காகவே நீக்கவேண்டி ஏற்படுகின்றது.

கள உறுப்பினர்கள் தமது அரசியல் பார்வைகளையும், கருத்து விமர்சனங்களையும் பண்பாகவும், நாகரீகமாகவும் யாழ் கருத்துக்களத்தில் வைத்து காத்திரமான, ஆக்கபூர்வமான கருத்தாடல்களைப் புரியவேண்டும் என்று விரும்புகின்றோம்.

நாமார்க்கும் குடியல்லோம்.

  • தொடங்கியவர்

ஜனநாயக போராளிகள் கட்சிக்கு ஈ.பி.டீ.பி வரவேற்பு

article_1436081710-Hands300.jpg

தமிழ் பேசும் மக்கள் மத்தியிலிருந்து புதிதாக உருவாகியிருக்கும் ஜனநாயக போராளிகள் கட்சியை நாம் நேசம் கரம் நீட்டி வரவேற்போம் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'அரசியல் கட்சிகள் தோன்றுவதும் அவைகள் சுதந்திரமாக செயற்படுவதும் அவரவர் ஜனநாயக உரிமை. அதை மறுப்பதும் தடுப்பதும் அப்பட்டமான ஜனநாயக மறுப்பாகும். முன்னாள் போராளிகள் வெறுமனே புனர்வாழ்வு பெற்றுவிட்டு ஊமைகளாக உறங்கிக்கொண்டிருக்க வேண்டும் என சிலர் நினைக்கிறார்கள்.

புதிய கட்சிகளின் வரவை எண்ணி சிலர் அச்சப்படுவது தாம் கொண்டிருக்கும் அரசியல் கொள்கை மீதான நம்பிக்கையீனங்களையே எடுத்துக்காட்டுகிறது. எமக்கென்றொரு இலட்சியக்கனவு உண்டு. அதற்கான நம்பிக்கை தரும் யதார்த்த வழியும் கொண்ட கொள்கையின் உறுதியும் எம்மிடம் உண்டு.

எந்தவொரு புதிய கட்சிகளின் வரவையும் நாம் நேசமுடன் வரவேற்போம் என்றும் தயாராகவே இருப்போம். ஆயிரம் பூக்கள் மலரட்டும். ஒவ்வொரு கட்சிகளும் எமது மக்களின் இலட்சிய நலன் சார்ந்து யதார்த்த வழியில் செயலாற்றி புனித இலட்சிய பயணம் தொடரட்டும். அனுபவங்களை பாடங்களாக ஏற்று திருத்தி எழுதிய பாதையில் தீர்வின் திசை நோக்கி யார் வந்தாலும் வரவேற்போம்' என்று அவர் மேலும் கூறினார்.

: http://www.tamilmirror.lk/149711#sthash.Ag07PeWv.dpuf

  • தொடங்கியவர்

புலிகள் இயக்கத்தினர் அரசியல் கட்சி தொடக்கம் : இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்கு வழிவகுக்கும் - தலைவர்கள், விமர்சகர்கள் வரவேற்பு

puligal_2462895f.jpg
 
இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி கள் இணைந்து புதிய அரசியல் கட்சி தொடங்கியிருப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர் கள், விமர்சகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி நடக்கவுள்ள நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இலங் கையில் நேற்று முன்தினம் ஒன்று கூடி ஆலோசனைக் கூட்டம் நடத் தினர். இதில், ‘ஜனநாயக போராளி கள் கட்சி’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தனர்.

இதை தமிழக மற்றும் இலங்கை யைச் சார்ந்த அரசியல் தலை வர்கள், விமர்சகர்கள் வரவேற் றுள்ளனர். இதுதொடர்பாக ‘தி இந்து’விடம் அவர்கள் கூறியதாவது:

இலங்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன்:

முன்னாள் போராளிகள் ஜனநாயக அரசியலுக்கு வரு வதை வரவேற்கிறோம். புதிய அரசியல் கட்சி தொடங்கியிருப்பது நம்பிக்கை அளிக்கிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்போடு இணைந்து செயல்படுவோம் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக அவர்களிடம் இருந்து எந்த கோரிக்கையும் எங்களுக்கு வரவில்லை. கோரிக் கைகள் வந்த பிறகு, எங்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் உரிய முடிவு எடுப் போம்.

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன்:

புதிதாக கட்சி தொடங்கியிருப்பவர்களின் பின்னணி குறித்து எனக்கு தெரிய வில்லை. எனினும், சிறிசேனா, சந்திரிகா குமாரதுங்கா, ராஜபக்ச என சிங்களர்கள் அனைவரும் ஒன்றாக இணைகின்றனர். இந்த சூழலில் தமிழர்களும் ஒன்றி ணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் போராளி கள் மட்டுமின்றி, தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும். அப்போதுதான், தமிழர்கள் இல்லாமல் சிங்க ளர்கள் ஆட்சி அதிகாரத்தை பெற முடியாது என்கிற நிலை உரு வாகும். அதன் மூலம்தான் இலங் கையில் தமிழர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும்.

புலம்பெயர்ந்த இலங்கை எழுத்தாளர் ஷோபா சக்தி:

பிரபாகரன் ஜனநாயக ரீதியான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று தான் நாங்கள் எல்லாம் விரும்பினோம் ஜன நாயகத் தன்மை இல்லாத தால்தான் அந்த இயக்கம் பலவீனம் அடைந்தது. இந்நிலையில் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் சிலரது முயற்சியில் ஜனநாயக ரீதியான அரசியல் இயக்கம் உரு வாகியுள்ளது என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. இது வரவேற்கத் தக்கது. அந்த அரசியல் இயக்கத் தின் செயல்பாடுகள் மற்றும் அதன் வெற்றி எவ்வாறு அமையும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்:

தந்தை செல்வா ஜன நாயக அரசியலைதான் முன்னெடுத் தார். அகிம்சை வழியில் போராடி யவர்கள் ஆயுத தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டனர். அதன் விளை வாகவே தமிழர்கள் கையில் ஆயுதங்கள் திணிக்கப்பட்டன. இன்றைக்கு இலங்கையில் தமி ழர்கள் பெருமளவில் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் ஜனநாயகவழிப் போராட்டம்தான் தமிழர்களின் விடியலுக்கான கடைசி அஸ்திரம். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் புதிய கட்சி தொடங்கியிருப்பது வரவேற் கத்தக்கது.

எந்த அரசியல் அதிகாரம் தமிழர் களை அழித்ததோ, அந்த அதிகாரத்தை பெற்று சிறப்புடன் வாழ ஜனநாயக போராட்டம் முக்கியமானது. இயக்கம் தொடங்கிவிட்டு அவர் துரோகி, இவர் துரோகி என்று குறை கூறாமல், அதை சரியாக முன்னெடுத்தால் மகிழ்ச்சியே.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் கேட்டபோது, ‘‘புதிய இயக்கம் தொடர்பான தகவல் எதுவும் எனக்கு தெரியாது’’ என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/புலிகள்-இயக்கத்தினர்-அரசியல்-கட்சி-தொடக்கம்-இலங்கைத்-தமிழர்-மறுவாழ்வுக்கு-வழிவகுக்கும்-தலைவர்கள்-விமர்சகர்கள்-வரவேற்பு/article7388982.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

இனி ததேமமு க்குரிய தேவை இல்லை. 

புலிகள் இயக்கத்தினர் அரசியல் கட்சி தொடக்கம் : இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்கு வழிவகுக்கும் - தலைவர்கள், விமர்சகர்கள் வரவேற்பு

puligal_2462895f.jpg
 
அட அதுக்குள்ள இதுவும் நடந்திட்டா? 

தேர்தல் முடிவுகள் வந்தபின்னர் தான் சேதாரம் தெரியும்.

கஜேந்திரகுமார் தெரிவாவதில் எனக்கும் விருப்பமுள்ளது. ஆனாலும் வாக்களிக்கப்போவது நாமில்லையே.

யாராகினும் மக்கள் தெரிவே என் தெரிவும்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் ஜனநாயக ரீதியான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று தான் நாங்கள் எல்லாம் விரும்பினோம் ஜன நாயகத் தன்மை இல்லாத தால்தான் அந்த இயக்கம் பலவீனம் அடைந்தது. இந்நிலையில் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் சிலரது முயற்சியில் ஜனநாயக ரீதியான அரசியல் இயக்கம் உரு வாகியுள்ளது என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. இது வரவேற்கத் தக்கது. அந்த அரசியல் இயக்கத் தின் செயல்பாடுகள் மற்றும் அதன் வெற்றி எவ்வாறு அமையும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிரபாகரன் ஜனநாயகம் தமிழர்களுக்கு எந்த தீர்வையும் தரவில்லை என்பதால் தான் ஆயுதம் தூக்கினார்.(இன்னும் சில இயக்கங்களூம்).எந்தக்கட்டத்தில் அவர் ஜனநாயகத்துக்கு திரும்ப வேண்டும் என சோபா சக்தி நினைக்கிறார்.

இன்னும் சிலர் ஆயுதம் தூக்கியவர்கள் போராடாமலே ஆயுதத்தை கீழே வைத்ததாக பீற்றிக்கொள்கிறார்கள். இவர்களை ஆயுதத்தை கீழே வைக்க எது தூண்டியது. இதில் இவர்கள் ஆயுதத்துடன் நடாத்திய கொலைகள், கொள்ளைகள் உள்ளடங்கவில்லை. குறிப்பாக புளட்டை குறிப்பிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் அவர்கள் ஜனநாயகம் தமிழருக்கு தீர்வைத் தரப்போவதில்லை என்பதால் ஆயுதம் தூக்கினார். ஆனால் தூக்கிய அந்த ஆயுதம் ஆயுத முனையில் முறியடிக்கப்பட்டு மீண்டும் ஜனநாயக வழியில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆயுதம் தூக்கிய போராளிகள் இப்போது புனர்வாழ்வளிக்கப்பட்டு இலங்கையின் இறைமையை ஏற்று ஜனநாயக வழியில் பாராளுமன்றம் செல்ல ஆயத்தமாகிவிட்டார்கள்.  ஆம் மீண்டும் ஜனநாயக வழிக்குத் திரும்பிவிட்டார்கள்!

ஜனநாயக வழியில் தீர்வை பெறமுடியாமல் போனதால் தான் ஆயுதத்தை தூக்கினார்கள் .அப்போ மக்களும் அதை ஆதரித்தார்கள் .ஆனால் ஆயுதத்தை தூக்கியதும் சிங்கள அரசு எதை செய்ததோ அதையே இயக்கங்களும் செய்ய தொடங்கிவிட்டன .ஒரு புரட்சிகர அமைப்பிற்குரிய அம்சங்கள் எந்த அமைப்பிலும்  இருக்கவில்லை .குறிப்பாக தலைமைகள் அனைத்தும் வெறும் தேசிய இராணுவ கண்ணோட்டத்தில் தான் இருந்ததன .பல போராளிகள் நினைத்ததை நடைமுறைபடுத்தமுடியவில்லை .அப்போதே இதுதான் தலைமைகளினதும் இயக்கங்களினதும் முடிவு என்று எதிர்பார்க்கபட்டதுதான் .

தூக்கிய ஆயுதம் ஒன்றில் இலக்கை அடைந்திருக்க வேண்டும்,

அல்லது சர்வதேச நிலைமைகளை விளங்கி பலத்துடன் இருக்கும் போதே அரசியல் செய்து ஒரு தீர்வை பெற்றிருக்க வேண்டும்,

எதுவுமில்லாமல் எவர் சொல்லும் கேளாமல் கடைசியில் எதிரியிடமே சரணடைய வைத்தது .

அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் கட்சி தொடங்குவதை தவிர அவர்களுக்கும் வேறு வழியில்லை தானே .நல்ல விடயம் ஆனால் மீண்டும் வேதாளம் முருங்க மரத்தில் ஏறாமல் இருந்தால் சரி .

  • தொடங்கியவர்

வித்தி வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் ஆவதற்கு கடுமையாக முயற்சி செய்தவர் ,இந்திய தூதரகமூடாகவும் முயற்சி செய்த்தாக ஊடகங்கள் தெரிவித்திருந்தன......... அதனையும் தாண்டி விக்கினேஸ்வரன் அவர்கள் முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டார் (கடவுள் அரிதாக தமிழரைக் காப்பாற்றிய சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று, அப்போது இந்தியாவுக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனைப் பற்றி  சரியான கணிப்பீடுகள் இருக்கவில்லை என்பது ஒரு காரணம்) இதனால் மிகவும் கடுப்பில் இருந்த வித்தி தனது மலரும் இணையத்தளத்தில் கம்பு கழக ஜெயராஜை வைத்து "சர்ச்சை களம் " எனும் பத்தி யில் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை கடுமையாக விமர்சித்து தனது அழுக்கை முழுமையாகக் காட்டியிருந்த சந்தர்ப்ப வாதி..... மக்களின் கடுமையான எதிர்ப்பினால் அந்தப் பத்தி இடையில் கைவிடப்பட்டது, (ஜெயராஜையும் காணோம் அவர் இப்போது புலம் பெயர் தமிழரையும் , தாயக தமிழரையும் பிரிக்கும் வேலயில் பிசி யாக இருக்கிறார்)

இப்போது கூட தனக்கு கூட்டமைப்பில் வேட்பு மனு கிடைக்காது  என 100 வீதம் தெரிந்த பின் தான் இப்படியான செயல்களில் வித்தி ஈடுபடுகிறார்.

கடந்த முறை தமிழரின் வாக்குகளைப் பிரிப்பதற்காக அரசாங்கம் , புலிகளின் முன்னால் அரசியல் பிரிவு தலைவர் யோகி மூலம் கிளிநொச்சியில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தது, எனினும் புலிகளின் அரசியல் பிரிவு நீண்ட காலம் செய்ற்படாமையால் அந்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன, 
இப்போதும் அதே வேலையைத்தான் அரசாங்கம் வித்தி மூலம் செய்கிறதோ என எண்ணத்தோண்றுகிறது.

  • தொடங்கியவர்

தலைவர் அவர்கள் ஜனநாயகம் தமிழருக்கு தீர்வைத் தரப்போவதில்லை என்பதால் ஆயுதம் தூக்கினார். ஆனால் தூக்கிய அந்த ஆயுதம் ஆயுத முனையில் முறியடிக்கப்பட்டு மீண்டும் ஜனநாயக வழியில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆயுதம் தூக்கிய போராளிகள் இப்போது புனர்வாழ்வளிக்கப்பட்டு இலங்கையின் இறைமையை ஏற்று ஜனநாயக வழியில் பாராளுமன்றம் செல்ல ஆயத்தமாகிவிட்டார்கள்.  ஆம் மீண்டும் ஜனநாயக வழிக்குத் திரும்பிவிட்டார்கள்!

"இலங்கையின் இறைமையை ஏற்று" இது என்ன உங்களின் கண்டுபிடிப்பா? அது சரி நீங்கள் என்ன செய்வீர்கள், உங்களின் எஜமானர் சொல்வதை நீங்கள் எழுதுவீர்கள் , அதற்கேற்ற ஊதியமும் உங்களுக்குக் கிடைக்கும்...............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள அரசுகள் செய்தது இன அழிப்பு எமக்கான உரிமைகளை தர மறுத்தது.

எந்தவொரு இயக்கமும் சிங்கள பொதுமக்களை கொல்லவில்லை.

தமிழ் இளைஞர்களுக்கு ஆயுத பலமே எமது உரிமைகளுக்கு விடுதலை பெற்றுத்தரும் என உரம் ஊட்டியவர்கள் தான்....இன்று ஊரார் மேடைகளில் துயில் கொள்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசுகள் செய்தது இன அழிப்பு எமக்கான உரிமைகளை தர மறுத்தது.

எந்தவொரு இயக்கமும் சிங்கள பொதுமக்களை கொல்லவில்லை.

தமிழ் இளைஞர்களுக்கு ஆயுத பலமே எமது உரிமைகளுக்கு விடுதலை பெற்றுத்தரும் என உரம் ஊட்டியவர்கள் தான்....இன்று ஊரார் மேடைகளில் துயில் கொள்கின்றா

எல்லா உரிமையும் இருந்தது புலி ஆயுதம் தூக்கியபடியால்தான் உரிமைகள் இல்லாமல் போய்விட்டது...

சிங்கள அரசுகள் செய்தது இன அழிப்பு எமக்கான உரிமைகளை தர மறுத்தது.

எந்தவொரு இயக்கமும் சிங்கள பொதுமக்களை கொல்லவில்லை.

தமிழ் இளைஞர்களுக்கு ஆயுத பலமே எமது உரிமைகளுக்கு விடுதலை பெற்றுத்தரும் என உரம் ஊட்டியவர்கள் தான்....இன்று ஊரார் மேடைகளில் துயில் கொள்கின்றார்கள்.

எல்லா உரிமையும் இருந்தது புலி ஆயுதம் தூக்கியபடியால்தான் உரிமைகள் இல்லாமல் போய்விட்டது...

Hidden Content

எல்லா உரிமையும் இருந்தது புலி ஆயுதம் தூக்கியபடியால்தான் உரிமைகள் இல்லாமல் போய்விட்டது...

கிடைத்த உரிமைகளையும் இல்லாமல் பண்ணிய பெருமை என்றும் அவர்களுக்கு இருக்கு .

இனி முடிந்தால் இலங்கை -இந்திய ஒப்பந்தத்தில் இருந்த அளவு உரிமைகளை எடுத்துப்பாருங்கள் .பார்ப்பம் 

  • கருத்துக்கள உறவுகள்

கிடைத்த உரிமைகளையும் இல்லாமல் பண்ணிய பெருமை என்றும் அவர்களுக்கு இருக்கு .

இனி முடிந்தால் இலங்கை -இந்திய ஒப்பந்தத்தில் இருந்த அளவு உரிமைகளை எடுத்துப்பாருங்கள் .பார்ப்பம் 

அந்த உரிமைகளையும் சிங்கள அரசுகள் அனுபவிக்க விட்டிருக்கமாட்டார்கள்........சிங்கள அரசிடம் இணக்க அரசியல் நடத்தினால் அதிக உரிமைகள் கிடைக்கும்....இந்தியா தனது நலனுக்காக எதையும் செய்யும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிடைத்த உரிமைகளையும் இல்லாமல் பண்ணிய பெருமை என்றும் அவர்களுக்கு இருக்கு .

இனி முடிந்தால் இலங்கை -இந்திய ஒப்பந்தத்தில் இருந்த அளவு உரிமைகளை எடுத்துப்பாருங்கள் .பார்ப்பம் 

https://www.facebook.com/jeya.kiri/videos/vb.1393063418/10207147885800839/?type=3&theater

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வித்தி வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் ஆவதற்கு கடுமையாக முயற்சி செய்தவர் ,இந்திய தூதரகமூடாகவும் முயற்சி செய்த்தாக ஊடகங்கள் தெரிவித்திருந்தன......... அதனையும் தாண்டி விக்கினேஸ்வரன் அவர்கள் முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டார் (கடவுள் அரிதாக தமிழரைக் காப்பாற்றிய சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று, அப்போது இந்தியாவுக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனைப் பற்றி  சரியான கணிப்பீடுகள் இருக்கவில்லை என்பது ஒரு காரணம்) இதனால் மிகவும் கடுப்பில் இருந்த வித்தி தனது மலரும் இணையத்தளத்தில் கம்பு கழக ஜெயராஜை வைத்து "சர்ச்சை களம் " எனும் பத்தி யில் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை கடுமையாக விமர்சித்து தனது அழுக்கை முழுமையாகக் காட்டியிருந்த சந்தர்ப்ப வாதி..... மக்களின் கடுமையான எதிர்ப்பினால் அந்தப் பத்தி இடையில் கைவிடப்பட்டது, (ஜெயராஜையும் காணோம் அவர் இப்போது புலம் பெயர் தமிழரையும் , தாயக தமிழரையும் பிரிக்கும் வேலயில் பிசி யாக இருக்கிறார்)

இப்போது கூட தனக்கு கூட்டமைப்பில் வேட்பு மனு கிடைக்காது  என 100 வீதம் தெரிந்த பின் தான் இப்படியான செயல்களில் வித்தி ஈடுபடுகிறார்.

கடந்த முறை தமிழரின் வாக்குகளைப் பிரிப்பதற்காக அரசாங்கம் , புலிகளின் முன்னால் அரசியல் பிரிவு தலைவர் யோகி மூலம் கிளிநொச்சியில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தது, எனினும் புலிகளின் அரசியல் பிரிவு நீண்ட காலம் செய்ற்படாமையால் அந்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன, 
இப்போதும் அதே வேலையைத்தான் அரசாங்கம் வித்தி மூலம் செய்கிறதோ என எண்ணத்தோண்றுகிறது.

இது ஒரு சிக்கலான நிலைமை. அடிப்படையில் , நீண்ட நோக்கியில் நன்மை இருந்தாலும், இந்த முயற்சியில் பலரும் குளிர் காயவே முனைகிறார்கள். துரதிஷ்ட வசமாக இதில் அடிபட போவது ததேமுவே . 

மற்றவர்களுக்கு கிடைக்கும்வரை லாபம் என்கிற நிலைதான் .அது டக்லஸ் ஆக இருந்தால் என்ன , மகேஸ்வரனின் மனைவியாக இருந்தால் என்ன.  ஒரு போராளியின் மனைவியை, தங்களது தேவைக்கு பாவித்து விட்டு கழற்றி எறிந்தவர்களுக்கு  இன்னும் 3-4 பேரை தங்கள் தேவைக்காக பயன்படுத்துவது இலகுவான காரியமே . 

யாரோ ஒருவர் சொல்லியிருந்தார் , சாராவுடன் ஒப்பிடும் போது வித்தி ஓகே என்று.  எனக்கு தெரிந்த வகையில் இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்கள் . மக்கள் கவனமாக இருந்தால் சரி . ஆனால் துரதிஷ்ட வசமாக சரியான செய்திகள் போவது குறைவு . 

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதத்தை தூக்காதவர்கள் ஜனநாயக வழியில் தற்போது செயற்படுபவர்கள் சரியான வழியி அதாவது  தீர்வை  எடுத்து தருவார்கள் என்பற்கான அறிகுறிகள் ஏதாவது தென்படுகிறதா? இதே ஆட்களால் 30 வருடத்துக்கு முன்பு நடாத்தப்பட்ட போராட்டம் படு தோல்வியில் முடிந்ததால் தான் தமிழ் இளைஞர்கள் ஆயுதமே தூக்கப்பட்டது. இப்பவும் எங்கேயோ உதைக்கிறதே??

கிடைத்த உரிமைகளையும் இல்லாமல் பண்ணிய பெருமை என்றும் அவர்களுக்கு இருக்கு .

அப்படி கிடைத்த உரிமைகள் சில மக்களால் அனுபவிக்கப்பட்டிருந்தால் அவற்றை உங்களால் பட்டியல் இட முடியுமா?

அப்போ புலிகள் எந்த உரிமைகளும் எமக்கு தேவை இல்லை. நாம் முசுபாத்திக்காவது உயிரை ஆயுதமாக பாவித்தாவது சாவோம் என அடம் பிடித்தார்கள் சரியா??

கிடைத்த உரிமைகளையும் இல்லாமல் பண்ணிய பெருமை என்றும் அவர்களுக்கு இருக்கு .

இனி முடிந்தால் இலங்கை -இந்திய ஒப்பந்தத்தில் இருந்த அளவு உரிமைகளை எடுத்துப்பாருங்கள் .பார்ப்பம் 

என்னப்பு கிடைத்த உரிமை . கிட்டத்தட்ட யாழ்ப்பணத்தில் இப்ப நடப்பது ...உங்களுக்கு உரிமையா ...
கூட்டி கொடுத்து கும்மாளம் அடித்து வார போற பெண் பிள்ளைகளை என்னவும் செய்து ....

பெருமாள் செய்த அமைச்சர் பதவி உங்களுக்கு உரிமையா ... மாமாக்கள் சொல்லலாம் ஆனால் உணர்வுள்ள தமிழன் அதனை உரிமை என்று சொல்வானா ? 

இப்படிப்பட்ட விளக்கம் இல்லாதவர்களுக்கும்  சேர்த்து தான் மாவீரர்கள் இறந்தார்கள் என்னும் பொது வெட்கமாக உள்ளது .... 

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குத்தானே பொறுமையாக வகுப்பு எடுக்கின்றோம் .நாங்கள் என்னவோ சொல்ல அவர்கள் ஏதோ பதில் போடுவார்கள் இருந்தாலும் நாலு பேருக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் நாங்கள் பொறுமையை இழக்க கூடாது .

ஊரில் ஒரு பழமொழியுண்டு

சூரியனைப்பார்த்து அந்த ********** 

அவரும் இப்படித்தான் தன்னைத்தானே நினைத்துக்கொள்வாராம்...........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.