Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த அரசாங்கம் செய்தது தமிழ் இனஅழிப்புடன் கூடிய யுத்தக் குற்றமே! விஜயகலா மகேஸ்வரன்

Featured Replies

இன அழிப்பானது 30 ஆயிரம் அங்கவீனர்களையும்,  90 ஆயிரத்திற்கு மேற்பட்ட விதவைகளையும், 12 ஆயிரம் அனாதை சிறுவர்களையும்,  7 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆதரவற்ற முதியவர்களையும் உருவாக்கியுள்ளது. தமிழ் மக்களை இன அழிப்புச் செய்து யுத்தக் குற்றத்தினை புரிந்துள்ள மகிந்த அரசாங்கம்  மீண்டும் கதிரையேற அனுமதிக்க கூடாதென முன்னாள் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 

vijayalala_maheswaran_vedpumanu_01.png


நேற்று வெள்ளிக்கிழமை மாலை யாழ்.மாவட்ட செயலகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவினை தாக்கல் செய்த பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஜக்கிய தேசியக் கட்சி 100 ற்கும் அதிகமான ஆசனங்களை கைப்பெற்றி ஆட்சி அமைக்கும். பிரதமராக மக்களால் ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்படுவார். யாழ்.மாவட்டத்திலும் ஜ.தே.க 3 ஆசனங்களை கைப்பெற்றும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.கடந்த காலங்களில் அடாவடித்தன அரசியல் வாதிகளே அரசாங்கத்தினை அமைத்து எமது நாட்டை குட்டிச்சுவராக்கியிருந்தனர். குறிப்பாக மகிந்த அரசாங்கம் அப்பாவித் தமிழ் மக்களைக் கொண்று குவித்து இனப்படுகொலை ஒன்றினையே வடக்கில் செய்திருந்தார்கள்.ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடமாகணாகத்தினை மேசமான நிலையில் மகிந்த அரசாங்கம் பழிவாங்கியுள்ளது. இதுமட்டுமல்லாமல் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிப்பதற்கு எமது கட்சிகள் தீர்மானித்துள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/news/41486/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

விஜயகலா மகேஸ்வரனை இத் தேர்தலில், வெற்றி பெற வைக்க.... மக்கள் எப்போதோ தீர்மானித்து விட்டார்கள்.

உந்த ஆட்டம்  எல்லாம்  புலிகள் இருக்கும் போது மகேஸ்வரனுடன்  போய்விட்டது.  

இவா  மகிந்தாவின்  ஆட்சியில்  பாய  எத்தனையோ  காத்திருந்தா.  இப்போ புளிக்குது.    ஜ.தே க   க்கு  மகேஸ்வரன்  பெயரை விட்டா அங்க ஒருத்தரும்   காசு செலவழிக்க  ஆட்கள் இல்லை

அதுதான் இவா விட்ட கொடுத்திருக்கு.  

இந்த முறை சரிவராது.

ஆமிக்காரன் நேவிக்காறான்  கொடுத்த வீட்டு காசிலேயே கண பேரிடம் பிடுங்கி எடுத்துப்போட்டா என்டு   அவாவினர தொகுதிக்காரரே இந்த முறை எதிரா நிக்கினம்

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாவட்டத்தில் ஐ.தே.க 03 ஆசனங்களை கைப்பற்றும்; விஜயகலா மகேஸ்வரன் நம்பிக்கை
 

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி மூன்றுக்கும்  மேற்பட்ட ஆசனங்களை கைப்பற்றும் என கட்சியின் தலைமை வேட்பாளர் திருமதி  விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
 
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர். அதன்பின்னர் ஊடகங்களிடம்  கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
ஐ.தே.க நாடளாவிய ரீதியில் 100 மேற்பட்ட ஆசனங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.  
 
கடந்த ஆட்சியில் நாடு குட்டிச்சுவராகி கிடந்தது. முன்னைய காலத்தில் அடாவடித்தனமாக செயற்பட்டனர். எங்களுடைய வடக்கு மக்கள் இனப்படுகொலைக்கு உட்பட்டிருந்தார்கள். வடக்கு மாகாணம் பழிவாங்கப்பட்ட நிலையில் இருந்தது.
 
இதனால் ஆயிரக்கணக்கானவர்கள் அங்கவீனர்களாகவும் பெற்றோரை இழந்தும் விதவைகளும் வாழ்ந்து வருகின்றனர். முன்னைய அராஜகம் இன்று எமது ஆட்சியில் இல்லை.
 
அத்துடன்  நான் ஐ.தே.கவின் பிரதி அமைச்சராக இருந்தேன். வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் வைத்து வாகனத்தில் இருந்து இறக்கி நடக்க வைத்தனர்.
 
பொலிஸார் கூறியதற்காக நான் சட்டத்தை கடைப்பிடித்தேன்.இங்குள்ள பொலிஸார் சட்டத்தை சரியா பயன்படுத்தவில்லை. வடக்கில்  69 வீதத்திற்கு மேற்பட்ட  எமது மக்களின்  வீடுகளில் பொலிஸார் பொலிஸ் நிலையங்களை அமைத்துள்ளனர்.
 
அவர்கள் சட்டத்திற்கு புறம்பாகவே செயற்படுகின்றனர். பொலிஸ் நிர்வாகனம் சீரின்றியே காணப்படுகின்றது என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தார்.
- See more at: http://onlineuthayan.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடிவேலு கணக்காகத்தான் எல்லோரும் கதைக்கிறார்கள்- இவாவினது கட்சிக்கு 3 ஆசனம் என்று சொல்லுவதை. 

 
முடிவுகளும் அப்படி வராவிட்டால் சரி. 
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த அரசாங்கம் செய்தது தமிழ் இனஅழிப்புடன் கூடிய யுத்தக் குற்றமே! விஜயகலா மகேஸ்வரன்

 

மிக சுயநலமான

ஐ.தே.கட்சியையும் சந்திரிகாவையும்

சிங்களத்தையும் காப்பாற்றி

மகிந்த மட்டும்தான் இனஅழிப்பாளி எனக்காட்டும் யுக்தி.

இதை அவான்ரை தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின்ரை வாயாலை சொல்லச் சொல்லுங்கோ! நான் என்ரை சொந்தக்காறர் எல்லாரையும் ஆக்காக்கு வோட் பண்ணச் சொல்லுறன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை அவான்ரை தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின்ரை வாயாலை சொல்லச் சொல்லுங்கோ! நான் என்ரை சொந்தக்காறர் எல்லாரையும் ஆக்காக்கு வோட் பண்ணச் சொல்லுறன்.

இது இங்கே ஒரு தளபாடகடை இருக்குது-kane என்று அமெரிக்காவில் இருபவர்களுக்கு தெரியும், கடையில் நேற்று சேர்த்தவன் முதல் ஸ்டோர் மேனேஜர்வரை சமான்விக்கும் மட்டும் எதுவும் சொல்லாம். ஆனால் வாங்கி முடிந்த அடுத்த நாள் கோல் பண்ணினால் , நீங்கள் யாரோ அவர்கள் யாரோ. அது போல, தேர்தல் மட்டும் இது இவர்களுடைய  ஸ்பெஷல் பொலிடிகல் பார்வை . 

சில வேளைகளில் ரணிலும் இதையே சொல்லக்கூடும். மகிந்த போற்குற்றவாளி, நடந்தது இன அழிப்பு என்று தமிழ் பிரதேசத்தில். இப்ப வடக்கு கிழக்கில் புலிகள் சுதந்திர வீரர்களாகவும் அதற்க்கு வெளியே பயங்கர வாதிகளாகவும் கூட்டமைப்புக்கு தெரிவது போல.

  • கருத்துக்கள உறவுகள்

டக்கிளசை.. சிங்கக் கொடியை தூக்கிப் பிடிச்சுக்கிட்டு.. சிங்கள சுதந்திர தினம் கொண்டாடுற.. சம்பந்தனை.. சுமந்திரனை விட விஜய கலா பறுவாயில்லை எனலாம்.

விஜய கலா மாத்திரம் என்ன குறைஞ்சவாவே...  இவ்வளவுகாலமும் வாய் மூடி இரு ந்து விட்டு இப்ப அனுதாப அரசியலுக்காக  ஜ.தே,க   களம் இறக்கி விட்டுள்ளார்கள்.

மகேஸ்வரனின் தம்பிக்காரன் தான் தான்  ஜ.தே.க யின்  யாழ் மாவட்ட அமைப்பாளர் என்கிறார்,   அவருக்கு சீட் இல்லை.  

இன்னொரு தம்பி  சுவாமிநாதனை பிடிச்சு  எதுவுமே  தெரியாத  மீன்வளம் சம்பந்தமான  ஒரு  அரசின் கீழ் உள்ள    அமைப்புக்கு  தலைவர் ஆகி விட்டார்.

ஆனல் அவருக்கும் சீட் இல்லை. மகேஸ்வரன் பெயரை  வைத்து  ஒரு சீட் என்றாலும் வரும் என்ற நப்பாசையில் தான்   விஜய கலா வை இறக்கி விட்டுள்ளார்கள்.

யு என் பி ஆட்சி அமைத்து தானும் எம் பி யாக வந்தால் தமது வியாபரத்தை இன்னும் பெருக்கலாம் என்ற ஒரே நல்ல நோக்கம் தான் .

புலிக்கே மண்எண்ணையில் தண்ணியை காட்டியவரின் மனைவி இவர் .

யு என் பி ஆட்சி அமைத்து தானும் எம் பி யாக வந்தால் தமது வியாபரத்தை இன்னும் பெருக்கலாம் என்ற ஒரே நல்ல நோக்கம் தான் .

புலிக்கே மண்எண்ணையில் தண்ணியை காட்டியவரின் மனைவி இவர் .

ஏனப்பா எப்ப பார்த்தாலும் புலி வாந்தி எடுக்கின்றரர் இதனை விட்டால் எழுத வராதோ ? தமிழ் வகுப்பிக்கு போவது நல்லம் . கிணற்று தவளையா ?

கலா அக்கா நீங்க நல்லவரா?...கெட்டவரா?

கீழே உள்ள படங்கள் தாங்கள் மகிந்தவுடன் கொஞ்சி குலாவுவதை காட்டுகின்றது

கேக்கிரவன் மடையன் எண்டா என்னவேண்டும்என்றாலும் சொல்லுவீர்களா?

வித்தியா விடயத்தில் சுவிஸ் குமார் தப்பி சென்றதில் உங்களிலும் சந்தேகம் உள்ளது அக்கா

 
 
 

 

mahi01.jpg

mahi05.jpg

mahi06.jpg

<<Home

 

யு என் பி ஆட்சி அமைத்து தானும் எம் பி யாக வந்தால் தமது வியாபரத்தை இன்னும் பெருக்கலாம் என்ற ஒரே நல்ல நோக்கம் தான் .

புலிக்கே மண்எண்ணையில் தண்ணியை காட்டியவரின் மனைவி இவர் .

தாங்கள் மகேஸ்வரனுக்கு அப்பொழுது விளக்கு பிடித்தீர்களா? அவர் தண்ணி காட்டியது UP எனும் ஆமி கொமாண்டருக்கு

சும்மா காதில விழுந்ததை எல்லாம் புலியோட கோத்துவிடுறதே வேலையா திரியிரியல்

  • கருத்துக்கள உறவுகள்

10470777_1440776109534427_32634900500418

மகேஸ்வரன் மாதிரி கத்த ஒருத்தரும் இல்லை. இவாவும்    தெரிவு செய்யப்பட்டா  கொழும்பில குந்தி விடுவா. வோட்டு போடு ற  மக்கள் தான் யோசிக்கனும்..

 

இவாவுக்கு என்ன  அரசியல் விளங்கும் ?  சும்மா எல்லாரும்  கேட்கினம் என்டு மகேஸ்வரன் விட்டு போன காசை என்ன செய்கிறது ,  நாலு போஸ் ஒட்டுறவர்களுக்கும், அவாவுக்கு ஆட்டோ ஓட்டுவர்களுக்கும் நாலு பணம் வந்து சேரும்.  அப்ப்டியாவது கொடுத்திட்டு போகட்டும்.

மகேஸ்வரன் மாதிரி  நானும் பாராளுமன்றத்தை    தமிழருக்காக  பயன்படுத்துவேன் என்றா  வடி வேலு காமடி தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.