Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரு சுமந்திரனிடம் சில கேள்விகள்

Featured Replies

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காகக் களமிறங்கியுள்ள தமிழ் தேசியக் 4ட்டமைப்பின் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.

சர்வதேச விசாரணைகளை ஆதரிப்போம் என்கிறார் ஒருவர். தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துவோம் என்கிறார் இன்னொருவர். விடுதலைப் புலிகளின் இலட்சியம் வீண்போக விட வேண்டாம் என்கிறார் இன்னொருவர். இந்த நிலையில் கட்சியின் கொள்கையை இவர்கள் பிரதிபலிக்கிறார்களா அல்லது வாக்குகளைப் பறிக்க தமதிஸ்டத்திற்கு அள்ளி வீசுகிறார்களா என்று புரியாத நிலையில் யார் என்ன சொன்னாலும் கட்சியின் அரசியல் நகர்வுகள் என்றாலென்ன அரசுடனான பேச்சுக்கள் என்றால் என்ன சர்வதேச அதிகாரிகளுடனான பேச்சுக்கள் என்றால் என்ன சகல முடிவுகளையும் எடுக்கப் போவது சம்பந்தனும் சுமந்திரனும் மட்டுமே என்பதால் உங்களது கருத்துக்களை அறிவதற்காக சில கேள்விகளை இங்கே இணைத்துள்ளேன். முகநூலினூடாக நீங்கள் பதில்களை வழங்க இருக்கிறீர்கள் என்று பேசப்படுவதால் இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் கிடைடக்கும் என எதிர்பார்க்கிறேன்.

இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்கப்பெற்றால் தமிழ் மக்களின் பிரதான கருத்து;ககளங்களில் ஒன்றான யாழிலும் உங்கள் பதில்களை இணைக்க ஆர்வமாக இருக்கிறேன்.

கேள்வி 1:

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வை சில மாதங்களில் பெற்றுத் தருவதாக சம்பந்தனும் ஏனைய உறுப்பினர்களும் தேர்தல் பிரச்சாரங்களில் கூறி வருகின்றனர். பேச்சுவார்த்தைகளுக்குப் பொகும் போது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு ஒன்றை நீங்கள் ஆரம்பத்தில் முன்வைக்க வேண்டியிருக்கும். அப்படியென்றால் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு என்று எதனை முன்வைக்க உத்தேசித்திருக்கிறீர்கள்?

கேள்வி 2:

தமிழர் நிலங்களில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் என்று ஒரு சாராரும் சிறிலங்கா அரசாங்கம் நடத்த இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் உள்நாட்டு விசாரணைக்கு ஆதரவாகச் சிலரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதில் நீங்கள் எந்தக் கருத்தை ஆதரிக்கின்றீர்கள்

கேள்வி 3.

தமிழ் மக்களுக்கு ஒரு விடிவொன்றை பெற வேண்டும் என்ற வேணவாவில் போராடிய விடுதலை இயக்கங்களை குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பிலும் அதன் போராளிகள் தொடர்பிலுமான உங்களது கருத்து என்ன ?, அவர்களை விடுதலைப் போராளிகள் என ஏற்றுக் கொள்கிறீர்களா அல்லது அவர்களைப் பயங்கரவாதிகள் என்று பார்க்கிறீர்களா?

கேள்வி 4.

தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் திம்புப் பேச்சினடிப்படையிலான தீர்வு என்ற விடயத்தை பேசி வருகிறார். இந்தக் கருத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

கேள்வி 5

கொழும்பில் வாழும் தமிழ் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்ற கருத்தை நீங்கள் வலியுறுத்தி கொழும்பிலும் போட்டியிட வேண்டும் எனக் கோரியதான செய்தி ஒன்று வெளிவந்திருந்தது. இது குறித்த உங்கள் தரப்பு நியாயத்தை அறியத் தருவீர்களா?

கேள்வி 6.

கொழும்பு தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறித்துப் பேசிய நீங்கள் பல ஆண்டு காலமாக ஆயுததாரிகளின் பிடியிலிருந்த போதும் தமிழ் துசியக் கூட்டமைப்பை ஆதரித்து வாக்களித்து வந்த தீவுப் பகுதி மக்களின் பிரதிநிதி ஒருவருக்குக் கூட தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்காதது ஏன்? மாறாக வடமராட்சியைப் பிரநிதித்துவப்படுத்தும் பலரை பட்டியலில் உள்வாங்கிய நோக்கம் என்ன?

கேள்வி 7.

ஜனாதிபதித் தேர்தலில் மாற்றம் ஒன்றிற்காக மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களிக்குமாறு கேட்டீர்கள், அதன்படி சிங்களப் பிரதேசங்களில் நூறு நாள் திட்டத்தினடிப்படையில் பல மாற்றங்கள் விழைந்திருக்கின்றன. ஆனால் பல்லாண்டுகளாக விசாரணை ஏதுமின்றி வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் வீடுதலை போன்ற விடயங்களைக் கூட உங்களால் செயல்படுத்த முடியாமல் போனது ஏன்?

கேள்வி 8.

தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளில் நீங்க்ள பங்குபற்றியதான செய்தியை எங்கும் காணவில்லை. அப்படியான நினைவு நிகழ்வுகளில் நீங்கள் பங்குபற்றியிருந்தீர்களா? பங்குபற்றாவிட்டால் அதற்கு ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா?

இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் பதில்களைத் தந்தால் உங்களதும் உங்களது கட்சி தொடர்பிலும் சரியான நிலைப்பாட்டை அறிந்து கொண்டு அதற்கேற்ப வாக்களிப்பதற்கு மக்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படும். எனவே இந்தக் கேள்விகளுக்கு பதில் தருவீர்கள் என் எதிர்பார்க்கிறேன்.

அப்படி உங்களது பதில்கள் கிடைக்கப் பெற்றால் அதனை யாழ் இணையத்திலும் இணைத்து விடுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மணிவாசகன் "வரும் ஆனால் வராது" இந்த வாசகம் மனதில் வந்து தொலைக்குது .

  • கருத்துக்கள உறவுகள்

சிந்தனையைத் தூண்டும் கேள்விகள்! 

பதில் வரும் என எதிர்பார்ப்போம்!

நம்பிக்கை தானே வாழ்க்கையில் அடித்தளம்!:unsure:

சேகுவேராவின் வாயில் சுருட்டு இருக்கின்றதா அல்லது இல்லையா என்று கவனமாகப் பார்த்தே கருத்து எழுத வேண்டியுள்ளது!:grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய அரசியல்வாதிகளுக்கு கேள்வி கேட்பவர் கூட்டம் கேள்விகளை முதலே கேட்கும் கேள்விகளை எழுதி கொடுக்கவேண்டும்.

அதில் சிறந்த பதிலளிக்கக்கூடிய கேள்விகளை மட்டும்  பகிரங்கமாக கேட்கும்படி சிபாரிசு செய்வார்கள். இதுதான் நிஜ இன்றைய அரசியல் நிலை. :innocent:

இப்படியிருக்க.....
 
மணியர்!  ஈழத்தமிழரின் ஆதியும் அந்தமும் உள்ளுணர்வுகளும் தெரியாத ஒரு போலி பிரமுகரிடம் கேட்கக்கூடாத கேள்விகளை கேட்கின்றீர்கள் . :cool:

சுமந்திரனின் பேச்சு இரு தடவைகள் நேரடியாக கேட்டேன் .பின்னர் கேள்வி பதில் நிகழ்விலும் பங்குபற்றினார் .

எமது அரசியலில் இன்று அவரை விட சிறந்த அரசியல் ஞானமும் அறிவும் புலமையும் உள்ளவர்கள் எவரும் இல்லை என்பதுதான் என் கணிப்பு .(விக்கியர் இதில் அடங்காது ). உலக அரசியல் அறிந்து மிக யதார்த்தமாக தான் பேசினார் .சின்னதொரு நையாண்டியும் பேச்சில் இருந்தது .

மாவை இன்னமும் எண்பதுகளில் தான் வாழுகின்றார் .

சம்பந்தர் ஒரு விடாக்கண்டர் . சரியான தடிப்பு இருக்கு .அனுசரிப்பு என்பது துளியும் இல்லை .

சிறீதரன் பற்றி எழுத தேவை இல்லை.

சரவணபவன் வெறும் வியாபாரி . 

சித்தர் உலகம் அழிந்தாலும் பரவாயில்லை தான் பதவிக்கு வந்தால் காணும் என்ற நினைப்புத்தான் .

எம்மவர் நிலை இப்பவும் விசில் அடிக்கும் அரசியல் தான் .சாத்தியமே இல்லாத ஒன்றை சும்மா அள்ளிவிட்டால் புல்லரித்து விடுவார்கள் .அதனால் தான் மூன்றாம் தர அரசியல்வாதிகள் பலர் இப்பவும் அரசியல் செய்ய முடிகின்றது .

கனடா வந்த போது மணி இந்த கேள்விகளை அவரிடம் கேட்டிருக்கலாம் இனி பதில் வருவது சாத்தியமில்லை என்றே நம்புகின்றேன் .

Edited by arjun
மேலதிக இணைப்பு .

  • கருத்துக்கள உறவுகள்

கேட்ட... எட்டுக் கேள்வியும், அந்த மாதிரி.
இதற்கு... சுமந்திரனிடம் இருந்து பதில் வந்தால், நான்.... மொட்டை அடிப்பேன்.user posted image:grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா கண்ட கண்ட ஆக்கள் இணையத்திலை இருந்து கேக்கிறதுக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்கேலாது! முந்தி கேள்வி கேட்டால் மண்டையில வெடி விழும். இப்ப அப்படி செய்ய ஆக்கள் இல்லை. அதோட அதை தமிழரசுக் கட்சியால் எப்பவுமே செய்யவும் ஏலாது. கேள்வி கேட்கும் ஜனநாயகம் இருக்கு எண்டு மட்டும் நல்லாத் தெரியுது.  அந்த வகையில் மகிழ்ச்சியே!

  • கருத்துக்கள உறவுகள்

beach_and_sea_of_hawaii_jy160_350a.jpg

கேள்வியை... 24 மணித்தியாலமும் கேட்கச் சொல்லிப் போட்டு....
பதில் சொல்ல மாட்டன், என்றால்.... என்ன அர்த்தம்?
animierte smilies Smileys lieben es zu lachen, fett zu grinsen, happy zu sein, sich zu freuen, froh zu sein und einfach witzig zu sein. Der typische und meist gebrauchteste Smilie der Welt ist sicher der 'Lachende Smiley
அது சரி... "பானையில் இருந்தால் தானே.... அகப்பையில் வரும்.":grin:

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

அந்தக் கேள்விகளுக்கு பதில் தர விரும்பாவிட்டால் இந்தாங்கோ இந்தக் கேள்விகளுக்கு பதிலைச் சொல்லுங்கோ!

1. தமிழரசுக் கட்சியில் இருக்கக் கூடிய சிறந்த படிப்பாளிகளில் ஒருவரின் பெயரைச் சொல்லுங்கள்.

2. தமழரசுக் கட்சியில் இருக்கக் கூடிய சிறந்த படிப்பாளி ஒருவரின் பெயரைச் சொல்லுங்கள்.

3. சிங்கள தொலைக்காட்சிகளில் போய் தமிழரின்ரை உரிமைகள் பற்றி ஒரு வசனமும் பேசாமல் 100 நாள் ஆட்சியைப் பற்றி புகழ்ந்து தள்ளும் உருவரின் பெயரைச் சொல்லுங்கள்.

4. வீட்டுச் சின்னத்தில் வடமராட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடும் ஒரு வேட்பாளரின் பெயரைச் சொல்லுங்கள்

4. சு வில் தொடங்கி ன் இல் முடியும் ஒரு தமிழரசுக் கட்சியின் தூணின் பெயரைச் சொல்லுங்கள்..

இது முன்னாள் யாழ் கள உறவின் இன்றைய பதிவு .

நல்லாட்சி .... ம்ம் ?

இம்முறை ஒரே ஒரு கிரடிட் காட்டோடு நாட்டின் பாதியை வலம் வர முடிந்தது புதுமையாக இருந்தது.

பகல் - இரவு என சுத்திய போதும் எவரும் நிறுத்தவில்லை. சோதனை இல்லை. அடையாள அட்டை - கடவுச் சீட்டு இல்லாமல் திரிந்தேன்.

நான் அரசியல் பேசவில்லை - அவதானிப்பதோடு நிறுத்திக் கொண்டேன்.

திடீர் சுகவீனம் சுகம் தந்தது எனக்கு மட்டுமல்ல - நாட்டுக்கும் என தெரிகிறது.

சில தமிழர்கள் இது எமது அரசு என்றார்கள். ம்ம்ம்....

புலம் பெயர்ந்த பலருக்கு நாட்டில் குண்டு வெடிக்காமல் நாலு உயிர் போகாமல் பலருக்கு நித்திரை வர மறுக்குதாம் .

1977 ம் ஆண்டிற்கு முன்னனர் இதை விட நிலமை சிறப்பாக இருந்தது. தற்போது இருப்பதைப் பொல இராணுவ முகாம்கள் இருக்கவில்லை. பொதுமக்களின் காணிகள் இவ்வளவிற்கு கையகப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

அரசாங்கத்தின் அங்கமாக இருந்து கொண்டு யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா யாழ்ப்பாணத்தை அழகு கொழிக்கும் நகராக மாற்ற முயற்சித்துக் கொண்டிருந்தார்.

ஆனால் அமிர்தலிங்கம் சம்பந்தன் மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்கள் தனித் தமிழீழமே எமக்குத் தேவை என்று வட்டுக்கோட்டையில் தீர்மானம் பொட்டு தமிழ் இளைஞர்களை தவறான வழிக்குத் திருப்பிக் கொண்டிருந்தார்கள். 

சிறைச்சாலை பூஞ்சோலை தூக்குமேடை பஞ்சணை மெத்தை என அமிரும் அவரது சகாக்களான சம்பந்தன் மாவை உள்ளிட்டவர்களும் கோசம் போட அகப்பை ஏந்தும்கையால் வாளேந்துவோம் என மங்கையர்க்கரசி பெண்களை உசுப் பேத்திக் கொண்டிருந்தார்.

சிங்கள அரசாங்கத்துடன் இதயங்களால் இணைந்து நல்லிணக்கம் காண முற்பட்ட பொத்துவில் கனகரத்னம் தேவநாயகம் போன்றவர்களை துரோகி துரோகி என்று மேடைக்கு மேடை கை நீட்டி அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என அடையாளப்படுத்திக்கொண்டிருந்தார்கள் இந்தக் கூட்டணியினர். 

போகாதே போகாதே என் கனகா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் என மன்னாரின் தூண் சூசைதாசன் பாடி அவருக்கு நேரப் போவதை எதிர்வுகூறிக் கொண்டிருந்தார்.

இவ்வாறு அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்யும் தமிழர்ளுக்கு இயற்கை மரணம் வராது என்று சொல்லி அவர்கள் அகாலமாய் இறக்க வேண்டும் என்று அதாவது கொல்லப்பட வேண்டும் என்று மேடை போட்டுச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

சோறா சுதந்திரமா என்று கேட்டு பேசாமல் சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை அயுதம் தூக்க வைத்தார்கள் இந்தக் கூட்டணியினர்.

ஆக 40 வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலமை இதை விடச் சிறப்பாக இருந்ததென்றால் எதற்காக அரசியல் உரிமைகள் வேண்டும் என்ற கோசம் எழுப்பப்பட்டது என்ற கேள்வியும் எழுகிறது

சுமந்திரனின் பேச்சு இரு தடவைகள் நேரடியாக கேட்டேன் .பின்னர் கேள்வி பதில் நிகழ்விலும் பங்குபற்றினார் .

எமது அரசியலில் இன்று அவரை விட சிறந்த அரசியல் ஞானமும் அறிவும் புலமையும் உள்ளவர்கள் எவரும் இல்லை என்பதுதான் என் கணிப்பு .(விக்கியர் இதில் அடங்காது ). உலக அரசியல் அறிந்து மிக யதார்த்தமாக தான் பேசினார் .சின்னதொரு நையாண்டியும் பேச்சில் இருந்தது .

மாவை இன்னமும் எண்பதுகளில் தான் வாழுகின்றார் .

சம்பந்தர் ஒரு விடாக்கண்டர் . சரியான தடிப்பு இருக்கு .அனுசரிப்பு என்பது துளியும் இல்லை .

சிறீதரன் பற்றி எழுத தேவை இல்லை.

சரவணபவன் வெறும் வியாபாரி . 

சித்தர் உலகம் அழிந்தாலும் பரவாயில்லை தான் பதவிக்கு வந்தால் காணும் என்ற நினைப்புத்தான் .

எம்மவர் நிலை இப்பவும் விசில் அடிக்கும் அரசியல் தான் .சாத்தியமே இல்லாத ஒன்றை சும்மா அள்ளிவிட்டால் புல்லரித்து விடுவார்கள் .அதனால் தான் மூன்றாம் தர அரசியல்வாதிகள் பலர் இப்பவும் அரசியல் செய்ய முடிகின்றது .

கனடா வந்த போது மணி இந்த கேள்விகளை அவரிடம் கேட்டிருக்கலாம் இனி பதில் வருவது சாத்தியமில்லை என்றே நம்புகின்றேன் .

சுமந்திரனின் பேச்சு இரு தடவைகள் நேரடியாக கேட்டேன் .பின்னர் கேள்வி பதில் நிகழ்விலும் பங்குபற்றினார் .

எமது அரசியலில் இன்று அவரை விட சிறந்த அரசியல் ஞானமும் அறிவும் புலமையும் உள்ளவர்கள் எவரும் இல்லை என்பதுதான் என் கணிப்பு .(விக்கியர் இதில் அடங்காது ). உலக அரசியல் அறிந்து மிக யதார்த்தமாக தான் பேசினார் .சின்னதொரு நையாண்டியும் பேச்சில் இருந்தது .

மாவை இன்னமும் எண்பதுகளில் தான் வாழுகின்றார் .

சம்பந்தர் ஒரு விடாக்கண்டர் . சரியான தடிப்பு இருக்கு .அனுசரிப்பு என்பது துளியும் இல்லை .

சிறீதரன் பற்றி எழுத தேவை இல்லை.

சரவணபவன் வெறும் வியாபாரி . 

சித்தர் உலகம் அழிந்தாலும் பரவாயில்லை தான் பதவிக்கு வந்தால் காணும் என்ற நினைப்புத்தான் .

எம்மவர் நிலை இப்பவும் விசில் அடிக்கும் அரசியல் தான் .சாத்தியமே இல்லாத ஒன்றை சும்மா அள்ளிவிட்டால் புல்லரித்து விடுவார்கள் .அதனால் தான் மூன்றாம் தர அரசியல்வாதிகள் பலர் இப்பவும் அரசியல் செய்ய முடிகின்றது .

கனடா வந்த போது மணி இந்த கேள்விகளை அவரிடம் கேட்டிருக்கலாம் இனி பதில் வருவது சாத்தியமில்லை என்றே நம்புகின்றேன் .

சுமந்திரன் அரசுடன் முரண்படும் போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்றோ இணக்க அரசியல் செய்யக் கூடாது என்றோ நான் சொல்லவில்லை. அதற்கான சுதந்திரம் அவருக்கு இருக்கிறது.

ஆனால் தனது கொள்கையை தான் அரசியலில் கடைப்பிடிக்கப் போகும் போக்கை மக்களிடம் கூறி அவர்களது வாக்குக்களைப் பெற்றுக் கொண்டு பாராளுமன்றம் சென்று இதயங்களால் இணைந்து இணக்க அரசியல் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. 

மாறாக 1977 இல் அமிர் சிவசிதம்பரம் சம்பந்தன் ஆகியோர் செய்தததைப் போல தமிழ் மக்களிடம் உரிமை சுதந்திரம் அது இது என்று உணர்ச்சி பொய்கப் பேசி விட்டு வெற்றி பெற்றுப் பாராளுமன்றம் போய் வேறு விதமான அரசியல் செய்வதையே வெறுக்கிறேன். 

அதனால் தான் மேலுள்ள கேள்விகளுக்கு தனது சரியான நிலைப்பாட்டைத் தெரிவித்து விட்டு வாக்குக்களைப் பெற்று பாராளுமன்றம் செல்லட்டும் என எதிர்பார்த்தேன் அதுவும் மக்கள் தங்கள் சந்|தேகங்களைக் கேட்டால் 24 மணித்தியாலமும் பதில தரத் தயாராயிருப்பதாய் சுமந்திரன் தரப்பு  பகிரங்கமாக அறிவித்ததன் பின்னர் மட்டுமே இந்தக் கேள்விகளை முகநுhல் மூலமாக அனுப்பினேன்

  • கருத்துக்கள உறவுகள்

அடடே இப்ப இது ஒரு புது ட்ரெண்ட் ஆக இருக்கு நாலைஞ்சு கேள்வியைக் கேக்கிறது. அதன் மூலம் தங்களை காண்பிக்க முனைகிறார்கள் சிலர். சூப்பர் இனி நாங்கள் அடுத்த ரவுண்டுக்கு ரெடியாயிட்டம் இல்ல! இனி எங்களுக்குப் பிடிக்காத யாரையும் விட மாட்டம். இருங்கோ நானும் ஒபாமாவிட்ட அவர்ட மகளைப்பற்றி நாலைஞ்சு கேள்வி கேக்கவேணும்! 

  • கருத்துக்கள உறவுகள்

அடடே இப்ப இது ஒரு புது ட்ரெண்ட் ஆக இருக்கு நாலைஞ்சு பதில் தர முடியாத  கேள்வியைக் கேக்கிறது. அதன் மூலம் தங்களை பெரிய விண்ணர்கள் என்று காண்பிக்கும் இதய இணைவு புகழ் சம் சும் கூட்டத்தை உரிந்து  காண்பிக்க முனைகிறார்கள் சிலர். சூப்பர் இனி நாங்கள் அடுத்த ரவுண்டுக்கு ரெடியாயிட்டம் இல்ல!.....இருக்கும் மிச்ச சொச்சத்தை வித்து தமிழர் பிச்சையெடுக்கும் நிலை வரை கொண்டுவராமல் விட மாட்டம். இருங்கோ நானும் ஒபாமாவிட்ட அவர்ட மகளைப்பற்றி நாலைஞ்சு கேள்வி கேக்கவேணும் ஏனென்றால் தமிழர் பிரச்சினை அரசியல் தீர்வு இவற்றை  விட ஒபமாவின் மகள் யாரோடு ஓடுவார் என்பது   ரொம்ப முக்கியம்  ! 

  • கருத்துக்கள உறவுகள்

ஆ..... ஆ....... (வாயுக்க கட்டெறும்பு போயிட்டுது! தூ எண்டு துப்பீட்டு வாறன்) ஆ.. ஆல் ரெடி நாங்கள் முள்ளிவாய்காலிலை எல்லாத்தையும் வித்து தமிழரை பிச்சை எடுக்கும் நிலைக்குக் கொண்டு வந்திட்டம். அதுக்கு நாங்கள் தான் உரிமை கோரமுடியும். அந்த உரிமையை எவருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டம்! எல்லா  தீர்க்கதரிசனம்தான். அதைத்தானே எங்கட புலிவால் உபய விண்ணணியும் செய்யுது!

  • கருத்துக்கள உறவுகள்

1977 ம் ஆண்டிற்கு முன்னனர் இதை விட நிலமை சிறப்பாக இருந்தது. தற்போது இருப்பதைப் பொல இராணுவ முகாம்கள் இருக்கவில்லை. பொதுமக்களின் காணிகள் இவ்வளவிற்கு கையகப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

அரசாங்கத்தின் அங்கமாக இருந்து கொண்டு யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா யாழ்ப்பாணத்தை அழகு கொழிக்கும் நகராக மாற்ற முயற்சித்துக் கொண்டிருந்தார்.

ஆனால் அமிர்தலிங்கம் சம்பந்தன் மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்கள் தனித் தமிழீழமே எமக்குத் தேவை என்று வட்டுக்கோட்டையில் தீர்மானம் பொட்டு தமிழ் இளைஞர்களை தவறான வழிக்குத் திருப்பிக் கொண்டிருந்தார்கள். 

சிறைச்சாலை பூஞ்சோலை தூக்குமேடை பஞ்சணை மெத்தை என அமிரும் அவரது சகாக்களான சம்பந்தன் மாவை உள்ளிட்டவர்களும் கோசம் போட அகப்பை ஏந்தும்கையால் வாளேந்துவோம் என மங்கையர்க்கரசி பெண்களை உசுப் பேத்திக் கொண்டிருந்தார்.

சிங்கள அரசாங்கத்துடன் இதயங்களால் இணைந்து நல்லிணக்கம் காண முற்பட்ட பொத்துவில் கனகரத்னம் தேவநாயகம் போன்றவர்களை துரோகி துரோகி என்று மேடைக்கு மேடை கை நீட்டி அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என அடையாளப்படுத்திக்கொண்டிருந்தார்கள் இந்தக் கூட்டணியினர். 

போகாதே போகாதே என் கனகா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் என மன்னாரின் தூண் சூசைதாசன் பாடி அவருக்கு நேரப் போவதை எதிர்வுகூறிக் கொண்டிருந்தார்.

இவ்வாறு அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்யும் தமிழர்ளுக்கு இயற்கை மரணம் வராது என்று சொல்லி அவர்கள் அகாலமாய் இறக்க வேண்டும் என்று அதாவது கொல்லப்பட வேண்டும் என்று மேடை போட்டுச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

சோறா சுதந்திரமா என்று கேட்டு பேசாமல் சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை அயுதம் தூக்க வைத்தார்கள் இந்தக் கூட்டணியினர்.

ஆக 40 வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலமை இதை விடச் சிறப்பாக இருந்ததென்றால் எதற்காக அரசியல் உரிமைகள் வேண்டும் என்ற கோசம் எழுப்பப்பட்டது என்ற கேள்வியும் எழுகிறது

சுமந்திரன் அரசுடன் முரண்படும் போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்றோ இணக்க அரசியல் செய்யக் கூடாது என்றோ நான் சொல்லவில்லை. அதற்கான சுதந்திரம் அவருக்கு இருக்கிறது.

ஆனால் தனது கொள்கையை தான் அரசியலில் கடைப்பிடிக்கப் போகும் போக்கை மக்களிடம் கூறி அவர்களது வாக்குக்களைப் பெற்றுக் கொண்டு பாராளுமன்றம் சென்று இதயங்களால் இணைந்து இணக்க அரசியல் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. 

மாறாக 1977 இல் அமிர் சிவசிதம்பரம் சம்பந்தன் ஆகியோர் செய்தததைப் போல தமிழ் மக்களிடம் உரிமை சுதந்திரம் அது இது என்று உணர்ச்சி பொய்கப் பேசி விட்டு வெற்றி பெற்றுப் பாராளுமன்றம் போய் வேறு விதமான அரசியல் செய்வதையே வெறுக்கிறேன். 

அதனால் தான் மேலுள்ள கேள்விகளுக்கு தனது சரியான நிலைப்பாட்டைத் தெரிவித்து விட்டு வாக்குக்களைப் பெற்று பாராளுமன்றம் செல்லட்டும் என எதிர்பார்த்தேன் அதுவும் மக்கள் தங்கள் சந்|தேகங்களைக் கேட்டால் 24 மணித்தியாலமும் பதில தரத் தயாராயிருப்பதாய் சுமந்திரன் தரப்பு  பகிரங்கமாக அறிவித்ததன் பின்னர் மட்டுமே இந்தக் கேள்விகளை முகநுhல் மூலமாக அனுப்பினேன்

100 வீதம் உடன்படுகின்றேன்

எனக்கும் இது தான் ஆதங்கம்

சுத்துமாத்து செய்கிறார்கள் என்று தெரிந்தபின்பும்

கண்ணை மூடி இருத்தலும் குற்றத்துக்கு  உடன்படுதலே..

சுத்துமர்த்து என்றபின் 

நல்லசுத்துமாத்து

தப்பான சுத்தமாத்து என்று உள்ளதா??

சர்வதேசிய அரசியல் அறிவு எதுவுமின்றி  பழம்பெருமை, வீரம் பேசி  முள்ளிவாய்க்கால்  வரை அள்ளிக் கொடுத்துவிட்டு அலைந்து  திரியும்  மக்களிடம்  நடைமுறை சாத்தியமான அடுத்த  தெரிவு என்ன  என்று பேசும்  அரசியல்வாதியே    இன்றைய தேவை. இதை வெளிப்படையாக   கூறும் சுமந்திரனை விமர்சிப்பதை  ஆரோக்கியமாக விமர்சிக்க  வேண்டும்.

கனடா வந்த போது மணி இந்த கேள்விகளை அவரிடம் கேட்டிருக்கலாம் இனி பதில் வருவது சாத்தியமில்லை என்றே நம்புகின்றேன் .

அவர் உலகை சுத்திப்பார்த்துவிட்டு சிலரின் தலையில் மிளகாய் அரைத்துவிட்டு சென்றதாக சுப்பண்ணை சொன்னார்

மகிந்த வேட்டியுடன் போறான் இவையல் கோட்சூட்......

எல்லாத்துக்கும் ஒரு அடித்தளம் வேண்டும்

TNA-MPs_Washington_Oct2011.jpg

Edited by Surveyor

  • தொடங்கியவர்

மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர் நாங்கள் இலங்கைப் பிரச்சினையை ஐநா வாசல் வரை கொண்டு சென்று விட்டோம். அதனை உள்ளே கொண்டு செல்வதற்கு எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டிருக்கிறாராம். இப்படியான பிரச்சாரங்களைச் செய்து வாக்குக் கேட்டு விட்டு வேறு திசையில் செல்வதற்குப் பதிலாக தங்கள் உண்மையான கொள்கை இது தான் அரசுடன் இணக்க அரசியல் செய்து தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுத் தருகிறோம் என்று நேரடியாகச் சொல்லி வாக்குக் கேட்க வேண்டியது தானே. பாராளுமன்றத்தில் அல்லதுதென்னிலங்கை ஊடகங்களுக்குச் சொல்வது போல புலிகள் பயங்கரவாதிகள் அவர்களை நாம் எ;பபோதும் ஆதரித்ததில்லை அத்துடன் ஆயுதக் கறை படியாத எங்கள் கரங்களுக்கு வாக்களியுங்கள் என்று சொல்லி நேர்மையாக வாக்குக் கேட்க வேண்டியது தானே

வெளிநாட்டுக்கு வந்தபின்னர் இநத உடுப்புகளை கண்ட புலன்பெயந்தவர்கள் இவர்கள்  சாமத்தியசடங்குக்கு அல்லது பிறந்த நாள்  விழாவுக்கு போகிறார்கள் என்று நினைகிறார்கள் போலும்.

Edited by ஆரூரன்

  • கருத்துக்கள உறவுகள்

TNA-MPs_Washington_Oct2011.jpg

எல்லோருடைய... சேட், கோட் பொக்கற்ரிலும் ஒரு பேனை இருக்குது.:innocent:
தெரியாமல்தான் கேட்கிறன்.... உந்த உடுப்புப் போட்டால், பேனையையும்  மறக்கமால்... எடுத்து செருக வேணுமா? :grin:

பள்ளிக்கூடம் போனனாங்கள் என்று எப்படிக்காட்டுவதாம்........

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக்கூடம் போனனாங்கள் என்று எப்படிக்காட்டுவதாம்........

சம்பந்தன் ஐயா.... கட்டியுள்ள, "ரை".... மகிந்தரின், சால்வை நிறத்தில் உள்ளது.animierte smilies erstaunt überraschung überrascht
அதுக்கும், இதுக்கும்..... ஏதாவது தொடர்பு இருக்குமோ... விசுகு.animierte smilies erstaunt überraschung überrascht :innocent:

அவர் உலகை சுத்திப்பார்த்துவிட்டு சிலரின் தலையில் மிளகாய் அரைத்துவிட்டு சென்றதாக சுப்பண்ணை சொன்னார்

மகிந்த வேட்டியுடன் போறான் இவையல் கோட்சூட்......

எல்லாத்துக்கும் ஒரு அடித்தளம் வேண்டும்

TNA-MPs_Washington_Oct2011.jpg

சம்பந்தன் ஜயா என்ன சாக்குப் பையையா suit போட்டிருக்கிறார் அவரால்   weight தாங்க முடியவில்லை போல்  உள்ளது

என்ன இருதாளும் எங்கட சம் சிங்கம் தான் ஹிந்தி பட ஹீரோ  மாதிரி விடுறார் ஒரு லூக்கு

எதுக்குமா மாவை ஜயா தலைக்கு ஒழுங்க்காக முடி வெட்டி சிங்காரிச்சுக்குப் போநாள் என்னவாம் ? தலைக்கு மை அடிக்க மறந்து போனார்

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுக்கு வந்தபின்னர் இநத உடுப்புகளை கண்ட புலன்பெயந்தவர்கள் இவர்கள்  சாமத்தியசடங்குக்கு அல்லது பிறந்த நாள்  விழாவுக்கு போகிறார்கள் என்று நினைகிறார்கள் போலும்.

சூப்பர் ஆரூரன். நல்லா மனம்விட்டு சிரிச்சன். :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளிநாட்டுக்கு வந்தபின்னர் இநத உடுப்புகளை கண்ட புலன்பெயந்தவர்கள் இவர்கள்  சாமத்தியசடங்குக்கு அல்லது பிறந்த நாள்  விழாவுக்கு போகிறார்கள் என்று நினைகிறார்கள் போலும்.

சட்டையள் போடுறதுக்கும் ஒரு தகுதி தராதரம் வேணும் பாருங்கோ....அங்கை ரோட்டிலை நிண்ட களிசறையள் எல்லாம் வெளிநாடு வந்ததாலை படிச்சவன் செய்யிற வேலையெல்லாத்தையும் இஞ்சை தாறுமாறாய் குழப்பிக்கொண்டு நிக்குதுகள்....30வருசத்துக்கு முதல் முடியவேண்டிய பிரச்சனையை நாசமாக்கிப்போட்டு இருக்குதுகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.