Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

https://video-ord1-1.xx.fbcdn.net/hvideo-xft1/v/t42.1790-2/11251030_10206451996852519_18423848_n.mp4?efg=eyJybHIiOjQyOCwicmxhIjoxMTg1fQ%3D%3D&rl=428&vabr=238&oh=57fcf0a54d1e9b4d2acb6beb4389ec28&oe=55CA17C3

 

 

"இறுதிக்கட்டப்போரில் விடுதலைப் புலிகள் சரணடைய எடுக்கப்பட்ட முயற்சியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய எமக்குத் தெரியாமல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பஷில் ராஜபக்சவுடன் பேசியுள்ளார். ஆனாலும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. பசிலும் கஜேந்திரகுமாலும் செய்துகொண்ட உடன்பாட்டை இப்போது வெளிப்படுத்துவாரா?".

என்று கேட்டிருக்கிறாராம் மாவை.

இறுதி யுத்தம் நடைபெற்று மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த காலப்பகுதியில் இந்தியாவில் உல்லாசச் சற்றுலா சென்றிருந்த மாவை சம்பந்தன் சுமந்திரன் உள்ளிட்டவர்களுக்கு அப்போது நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது என்ன என்பதோ மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என தம்மர்ல இயன்றதைச் செய்து கொண்டிருந்தவர்கள் யாரோடு பேசினார்கள் என்ன பேசினார்கள் என்பதோ தெரிந்திருக்க நியாயமில்லை தான்.

இது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ் ஊடக மையத்தில வைத்து மிக விளக்கமான ஒரு செய்தியாளர் மாநாட்டை நடத்தியிருந்தார்.

6 வருடங்களாக நித்திரையில் இருந்து விட்டு இப்போது தான் முழித்து மாவை கேள்வி கேக்கிறார். ஆராவது அந்த உடன்படிக்கையை அல்லது அந்தப் பேச்சில் என்ன பேசப்பட்டது என்பதை சொல்லி விடுங்கோ அப்பா..

  • கருத்துக்கள உறவுகள்

"இறுதிக்கட்டப்போரில் விடுதலைப் புலிகள் சரணடைய எடுக்கப்பட்ட முயற்சியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய எமக்குத் தெரியாமல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பஷில் ராஜபக்சவுடன் பேசியுள்ளார். ஆனாலும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. பசிலும் கஜேந்திரகுமாலும் செய்துகொண்ட உடன்பாட்டை இப்போது வெளிப்படுத்துவாரா?".

என்று கேட்டிருக்கிறாராம் மாவை.

இறுதி யுத்தம் நடைபெற்று மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த காலப்பகுதியில் இந்தியாவில் உல்லாசச் சற்றுலா சென்றிருந்த மாவை சம்பந்தன் சுமந்திரன் உள்ளிட்டவர்களுக்கு அப்போது நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது என்ன என்பதோ மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என தம்மர்ல இயன்றதைச் செய்து கொண்டிருந்தவர்கள் யாரோடு பேசினார்கள் என்ன பேசினார்கள் என்பதோ தெரிந்திருக்க நியாயமில்லை தான்.

இது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ் ஊடக மையத்தில வைத்து மிக விளக்கமான ஒரு செய்தியாளர் மாநாட்டை நடத்தியிருந்தார்.

6 வருடங்களாக நித்திரையில் இருந்து விட்டு இப்போது தான் முழித்து மாவை கேள்வி கேக்கிறார். ஆராவது அந்த உடன்படிக்கையை அல்லது அந்தப் பேச்சில் என்ன பேசப்பட்டது என்பதை சொல்லி விடுங்கோ அப்பா..

அதை நாங்க சொல்லி அவர் கேட்பதற்குள் 

தேர்தல் முடிந்துவிடும்

இனி அடுத்த தேர்தலுக்கு வேண்டமானால் .....

Edited by விசுகு

2009 மே18 அதிகாலை அங்கு சிக்குண்டு உயிருக்காக போராடிக்கொண்டிருந்த ஒன்றரை இலட்சம் மக்களது உயிரை நினைத்து நானும் மாவை அண்ணரும் அழுதோமென தெரிவித்தார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று பத்திரிகையாளர்களிடையே பேசிய அவர் அந்த கடைசி கணங்களினில் அவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு அரசியல் துறைப்பொறுப்பாளர் நடேசன் மற்றும் சமாதான செயலகப்பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் கோரியிருந்தனர்.

gajenthirakumar_press_11082015_01.png

அப்போது மஹிந்த நாட்டில் இன்மையால் பஸிலுடனேயே பேசவேண்டியிருந்தது. ஆலோசனைகளினைப்பெற இந்தியாவிலிருந்த கட்சி தலைவர் சம்பந்தனை அழைத்த போது அவர் தொலைபேசி இணைப்பினை துண்டித்துவிட்டார். சுரேஸோ தனது கைத்தொலைபேசியினை செயலிழக்க செய்திருந்தார். உண்மையில் மாவை மட்டும் பதிலளித்தார்.

gajenthirakumar_press_11082015_02.png

நானும் அவரும் இயலாமையினால் ஒரு கணத்தில் அழுதோம். ஆனால் மாவையும் தொலைபேசியினை அணைத்துவிட்டதாக என்னால் பொய் சொல்ல முடியும். ஆனால் என் தாய் மீதாக நான் பொய் சொல்லவிரும்பவில்லை.

gajenthirakumar_press_11082015_03.png

அரசு உறுதியளித்தற்கு மாறாக தாக்குதல்களினை நடத்திக்கொண்டிருந்தது. சரண் அடைவது இல்லாவிடின் வீரச்சாவை தழுவிக்கொள்வதென்பதே அங்கிருந்தவர்களிற்கு எஞ்சியிருந்த வழிவகையாக இருந்தது.

ஆனால் அதனையெல்லாம் மறந்து மாவை இப்போது சொல்கின்றார் நான் பஸிலுடன் இரகசிய பேச்சு நடத்தினேனாம். மனச்சாட்சியை தொட்டு சொல்லட்டும். அல்லது நிரூபிக்கட்டும். நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியுறப்போகும் அச்சத்தில் இப்படி பொய் சொல்லுகின்றார்கள் என்பது மக்களிற்கு தெரியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாற்றம் தேவையென்பது மக்கள் மத்தியில் ஆணித்தரமாக பதிந்துவிட்டது. அதனால் தோல்வி பயத்தில் தனிநபர் தாக்குதல்களில் கூட்டமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

இதயத்தால் இணைந்த ரணில் சொல்கின்றார் ஜ.நாவிற்கு கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் பதில் சொல்லப்போகின்றாராம். அவர்களது கட்சி எதனால் இணைந்ததென்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

http://www.pathivu.com/news/42201/57/2009--18/d,article_full.aspx

உண்மை எது மக்களே உண்மையை அறிந்துகொள்ளுங்கள் -என் அம்மாமேல் சத்தியம் 
விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, Transnational Government of TamilEelam, www.lankasri.com,tgte-us, naathamnews.com, முள்ளிவாய்க்கால்,tamilwin , நாம் தமிழர்,Mahindha,www.tgte-icc.org

2009 மே18இல் நடந்தது என்ன?
மாவையும் நானும் கண்ணீர் விட்டோம்
இது என் தாய் மேல் ஆணை-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.


 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திரு.கஜேந்திரகுமார் வீட்டை இரண்டாக உடைத்தார். கருணா புலிகளின் ஆன்மாவை உடைத்தது போல் உடைக்க பார்க்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் உட்பட கூட்டமைப்பில் பலர் இறுதி யுத்தத்தில் குளிர்காய்ந்தார்கள் என்பது அப்பட்டமான உண்மை. கருணா.. மாத்தையா வரிசையில் வைக்கப்பட வேண்டியது கஜேந்திரகுமார் அல்ல. சம்பந்தன் வகையறாக்கள்.ஏனெனில்.. இதில் புலிகளை.. மட்டும் இவர்கள் அழிக்கவில்லை.. சொந்த மக்களை மண்ணை அழித்து ஒழித்துள்ளனர். !!!

இப்போ ஒட்டுமொத்த இனத்தையும் மண்ணையும்.. சிங்களவனுக்கு கூறுபோட்டு விற்க முனைகிறார்கள்.:unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இறுதி யுத்த சமயத்தில் துரோகம் செய்தது இவர்கள் யாருமல்ல. பணத்தின் மேலும் உல்லாச வாழ்க்கையுலுமே குறியாக இருந்த புலிவாலுகள்தான் இவர்களை விசில் குஞ்சுகள் எனவும் அழைப்பர். முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது புலம் பெயர் தமிழர் வேறு புலிவாகள் வேறு. இந்தப் புலிவால்கள் போராட்டத்தை வைத்து புலம்பெயர் தமிழரிடம் காசு பண்ணி சீவியம் நடந்தினர். கஜே தெரியாத்தனமா புலிவால் கோஸ்டியிடம் அம்பிட்டிட்டார். அதிலிருந்து விடுபட்டு நல்ல புத்தியடைந்து வரும் காலம் வெகு தொலைவில் இல்லை. வரும் நாள்களில் இலங்கையில் நடக்கும் நல்ல காரியங்கள் புலிவால்களுக்கு உவப்பானதாக இருக்காது மட்டுமல்ல புலம்பெயர் தமிழர்களிடமிருந்தும் அவர்களை அந்நியமாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

77ல் தமிழ் காங்கிரசில் நின்ற திரு குமாரசாமி அவர்களை(சாவகச்சேரி தொகுதி) இதே கூட்டமைப்பினர் கோழிக்கள்ளன் என பிரச்சாரம் செய்தார்களாம். அப்படி இருந்தும் அவரால் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பெற முடிந்தது.

சம்பவத்தின் உண்மை பொய் தெரியா விட்டாலும் தனி நபர் தாக்குதல் கேவலமான அரசியலையே காட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் புலிகளிள் யார் யாருடன் பேசினார்கள் போன்ற விபரத்தை சந்திரநேருவுக்கு முன் கஜேந்திரகுமார் தான் ஒரு காணொளியில் சொல்லி இருந்தார் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு யாழ் களத்தின் உறாவுகல் சிலர் எங்கெறிந்தாலும் காலை நொண்டுவதுபோல் புலம்பெயர் புலிவால்களாகிய எங்களில் குற்றாம் கண்டுபிடிக்கினம், இதுவரை கல்லெறிந்த கஜேந்திரகுமார் அப்பாவியாகிப்போட்டார்,கஜேந்திரகுமார் என்ன எங்களைப்போல சந்திவழியில குந்தியிருந்திட்டு ஊரில அரசியல் செய்ய வந்தவரோ? தெரியாத்தனமா மாட்டுப்பட, அல்லது கொமிசன் பணத்தில கூடியவீதத்தைத்தான் கொடுத்துவைத்திருக்கிறாமோ?

எந்தவிதமான விவாதத்தையும் முன்வைக்கும்போது "அறம்" முன்னுக்கு நிற்கவேண்டும், மண்டையன்குழுத் தலவரும் சம்பந்தனும் முள்ளிவாய்க்கால்ச் சமயத்தில் எங்கிருந்தார்கள் எப்படிச்செயல்பட்டார்கள் என்பதை மாவையினது ஒரு தவறான அறிக்கையினால் அநியாயத்துக்கும் வெளிவந்துள்ளது.கருத்துக்குக் கருத்து அதையொட்டியே இருக்கவேண்டுமே தவிர குறுக்குச்சால் ஓட்டக்கூடாது, 

கூட்டமைப்பின்எசமானர்களான தமிழர்விரோததேசமாகிய இந்தியாவுக்கும் அறத்தின்மீது நம்பிக்கை இல்லை, இங்கு கருத்தெழுதும் புண்ணியவான்களுக்கும் புலிவால்களைத்தவிர வேறெவரும் தெரிவதில்லை.

யாழ்களத்தின் ஏனையவர்கள் எப்படியோ அதைப்பத்தி எனக்குத் தெரியாது ஆனால் நான் புலிவால்தான் அதைச் சொல்வதற்கும் ஒரு திராணிவேண்டும் இதுபோலஇந்திய எடுபிடிகள் தங்களை ஒப்புக்கொள்ளும் காலம் எப்போதும் வராது.

  • கருத்துக்கள உறவுகள்

களவெடுத்தாலும் நான் கள்ளன் எண்டு சொல்ல ஒரு கட்ஸ் வேணும். ஆனால் பிள்ளைகளைத்தான் கள்ளண்ட மக்கள் எண்டு ஊர் சொல்லும்.  (நான் இங்கு புலிவால்கள் எவரும் களவெடுத்தார்கள் எண்டுசொல்லவரேல்லை. அம்மா பிச்சை போடுங்கம்மா பிச்சை ):cool:

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள யாழ்கள உறவு வாலி அவர்கட்கு உங்களால் முடியுமாகில் நான் வாழும் நாட்டுக்கு வந்து எனது விருந்தினராக ஒருநாளாவது தங்கிச்செல்லவும் அப்போது யார் கள்வன் யார் கள்வரது பிள்ளைகள் என்பதை அறிவீர்கள் 

மாவையின் கீழ்த்தரமான பொய்யும் கஜேந்திரகுமார் நண்பர்களின் விளக்கமும்!

11738050_601155440024303_326217974083921927_n

மாவையின் பொய்:

“இறுதிக்கட்டப்போரில் விடுதலைப் புலிகள் சரணடைய எடுக்கப்பட்ட முயற்சியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய எமக்குத் தெரியாமல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பஷில் ராஜபக்சவுடன் பேசியுள்ளார். ஆனாலும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. பசிலும் கஜேந்திரகுமாலும் செய்துகொண்ட உடன்பாட்டை இப்போது வெளிப்படுத்துவாரா?”.

- மாலுசந்திப் பகுதியில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மாவையரே: இது பற்றி கஜேந்திரகுமார் ஏற்கனவே பகிரங்கமாக பேசியுள்ளார். கஜேந்திரகுமார் பசிலுடன் பேசியது பற்றி அமெரிக்க தூதுவரிடம் கூறியிருந்தார். அது விக்கிலீக்சிலும் உள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே இப்பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தோம்:

https://www.facebook.com/friendsofgajen/photos/a.1607439282807061.1073741828.1607426422808347/1648822702002052/?type=1&theater

அதில் பின்வருமார் சொல்லியிருந்தோம்:

“2009 யுத்த நிறைவு காலப் பகுதியில் கஜேந்திரகுமார் நாட்டில் தான் இருந்தார். அமெரிக்க தூதுவரோடும் விடுதலைப் புலிகளோடும் (கே. பி, நடேசன், புலித்தேவன் ஆகியோருடன்) கடைசி நேரம் வரை அவர் தொடர்பில் இருந்தார். மே 17 அன்று அமெரிக்க தூதுவரோடு தொடர்பு கொண்டு 100,000 மேற்பட்ட மக்கள் முள்ளிவாய்க்காலில் சிக்குண்டு இருப்பதை பற்றி தெரிவித்தார் (அங்கு சிவிலியன்கள் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்து வந்தமை தெரிந்ததே). ஆயுதத்தை மௌனிக்கும் தீர்மானத்தை மே 16 அன்று விடுதலைப் புலிகள் எடுத்திருக்க கத்தோலிக்க ஆயர் ஒருவரின் துணையோடு மக்களின் பாதுக்காப்பான வெளியேற்றம் தொடர்பில் வழியமைத்துக் கொடுக்க கே. பியுடனும் பசில் ராஜபக்சவுடனும் அமெரிக்க தூதுவரிடமும் கஜேந்திரகுமார் இந்த இறுதி நாட்களில் பேசி வந்தார். பசில் ராஜபக்ச இந்த பேச்சுவார்த்தையில் இருந்து ஒரு தலைப்பட்சமாக பின்னர் விலகிக் கொண்டார். யுத்தத்தை தம்மால் நிறுத்த முடியாது என்று பசில் தெரிவித்து விட்டார். யுத்தம் விடுதலைப் புலிகளால் நிறுத்தப்பட்ட பின்னரும் தமிழ் மக்கள் மீது தொடர்ந்து குண்டு வீசியது அரசாங்கம் என்பதற்கான முக்கிய சாட்சி கஜேந்திரகுமார்.

இவற்றிற்கான ஆதாரம் அமெரிக்காவின் கேபிள்களில் உண்டு. பார்க்க:https://wikileaks.org/plusd/cables/09COLOMBO535_a.html
கஜேந்திரகுமாரிற்கு எதிராக அச்சுறுத்தல்கள் தொடர்ந்து விடுக்கப்பட்டுள்ளன. இது பற்றி அமெரிக்க தூதுவர் 2007 இல் தனது கேபிள் ஒன்றில் குறிப்பிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். இறுதி நேரத்தில் நடந்தவை பற்றி சாட்சியம் வழங்குவது தொடர்பிலும் ஆழமாக யோசித்து பாதுகாப்பு அச்சுறுத்தல்களைப் பொருட்படுத்தாது மக்களுக்கு நடந்த அநீதி ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக அந்த சாட்சியத்தை வழங்கினார். இந்த சாட்சியம் வழங்குவதை பற்றி பகிரங்கமாக பேசினால் தான் தனது உயிருக்கு பாதுகாப்பு என்றும் கஜேந்திரகுமார் முடிவு செய்தார். அவ்வாறே செய்தார்.https://youtu.be/0W1cstK_jRE (மக்கள் தீர்ப்பாயத்திற்கு வழங்கிய சாட்சியம் தொடர்பில்)”

சென்னையில் தங்கியிருந்த சம்பந்தன் ஐயாவிடம் இவ்விடயம் தொடர்பில் கஜன் தகவல் வழங்க முயற்சித்திருந்தார். காலை 1 மணிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்தார் கஜன். சம்பந்தன் ஐயாவின் மனைவி தொலைபேசியை எடுத்தார். சம்மந்தரை அழைத்து வருவதாக கூறினார். அவரிடம் கஜனின் அழைப்பு பற்றி சொன்னது கஜனுக்கு தொலைபேசி வழியே கேட்டது. அதன் பின்னர் மனைவி அழைப்பை கஜனிடம் எதுவும் கூறாமலேயே துண்டித்தார். சுரேசும் தொலைபேசிக்கு வரவில்லை. மாவையிடம் இது பற்றி கஜன் பேசியிருந்தார். ஆனால் இன்று பச்சையாக பொய் பேசுகிறார்.

நன்றி : கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் நண்பர்கள் (முகநூல்)

http://tamilleader.com/?p=50580

  • கருத்துக்கள உறவுகள்

தூ......

கேவலம் கெட்ட பொன்னம்பல அரசியல்.

மாவீரர்களினை விற்றுப் பிழைக்கும் வாக்குப் பொறுக்கி அரசியல்.

நீங்கள் அரசியலில் பிரபல்யமடைவதற்காக தலைவர் பிரபாகரன் மற்றும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினால் போதுமா?

யுத்தம் டம் பெற்ற 2009ம் ஆண்டு வெளிநாட்டில் ஓடி ஒழிந்து கதைக்காமல்நின்றது ஏன்

 

இவர்களை வைத்து எதைச் செய்வது எப்படிச் செய்வது சிந்தியுங்கள் மக்களே காரணம் வெளிநாட்டில் உள்ளவர்களைப் பற்றி கவலைப்படும் இவரால் மண்ணின் மக்களைப் பற்றி சிந்திக்க முடியுதா இல்லை 2010 வரையும் இருந்து கழிக்காத சாதணையை இனி வரும் காலத்தல் கிழிக்கவா போகிறார் கடந்த காலமும் நித்திரை தான் வரும் காலமும் நித்திரை தான் எத்தனை இளைஞர்கள் சிறையில் தடுப்பில் ஒரு நாளாவது நீதிமன்றின் படி ஏறியுள்ளாரா இல்லை கதைக்க விடுங்க பார்ப்பம் தாத்தா அப்பாவும் மிக நல்ல வக்கில் இவரோ நீதிமன்ற படி ஏறாத சட்டத்தரணி

கஜேந்திரர்களிடம் மட்டும் ஏன் இந்த கேள்வி என நினைக்கலாம் புலிகளை வைத்து பிழைப்பு நடத்தியவர்களில் இவர்கள்பிரதானமானவர்கள் வெளிநாடுகளில் இருக்கும் எமது உறவுகளிடம் இருந்து அதிக நிதிபெறுபவரும் இவர்தான். பெறப்படும் நிதி சரியான முறையில் பயன்படுத்துவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமார் மே 2009 இல் தான் இலங்கையில் இருந்ததாக சொல்லி உள்ளார். வெளிநாட்டில் ஓடி ஒழித்தது இன்றய கூட்டமைப்பினரே

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

ஓடி ஒழியவேண்டிய தேவை அவருக்கு இருக்கவில்லை ஏனெண்டால் அவர் பசிலின் செல்லப் பிள்ளை :)

 

  • தொடங்கியவர்

ஓடி ஒழியவேண்டிய தேவை அவருக்கு இருக்கவில்லை ஏனெண்டால் அவர் பசிலின் செல்லப் பிள்ளை :)

 

இங்கே கருத்தெழுதும் மாற்றுக் கருத்தாளர்கள் மத்தியிலே நான் மதிப்பளிக்கும் ஒரேயொருவராக இருப்பவர் நீங்கள் மட்டுமே. காரணம் இதுவரை என்னுடன் இடம்பெற்ற கருத்துப் பரிமாறல்களில் நீங்கள் காத்திரமான வகையில் கருத்துக்களால் மோதினீர்கள். (மற்றவர்களுடன் எப்படியென்று எனக்குத் தெரியாது)

உங்கள் மனச்சாட்சிக்கு உட்பட்டுப் பதில் சொல்லுங்கள். கஜேந்திரகுமார் பசில் றாஜபக்சவுடன் இரகசிய உடன்படிக்கை ஒன்றைச் செய்து அவரது செல்லப்பிள்ளையாக இருக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 

அல்லது தேர்தல் மேடையில் துள்ளித் துள்ளீ மாலையர் பேசியதை வைத்துக் கொண்டு இந்தக் கருத்தை எழுதுகிறீர்களா? 

நேற்றைய தினம் கஜேந்திரகுமார் செய்தியாளர் மாநாட்டில் பேசிய விடயமம் சந்மபந்தமாக மாவையின் கருத்தை அறிந்து சொல்ல முடிந்தால் அதையுமம் சொல்லுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமாருக்கு நடந்தது எல்லாம் தெரியும். 2009 -2015 வரை கள்ள மெளனம் காத்தார். இதே தறுவாயில் நாட்டில் இருந்து, நடந்த உண்மையை சொன்னதால் உயிரச்சம் ஏற்பட்டு, இங்கிலாந்தில் தஞ்சம் கோரினார் சந்திரநேரு சந்திரகாந்தன்.

ஆனால் பொன்னர் ஒரு பிரச்சினையும் இல்லாமல் கொழும்பில் உலா வந்தார்.

இப்போதும் கூட மாவை போட்டு உடைத்திராவிடில் ஒன்றும் சொல்லி இருக்க மாட்டார்.

இதே விளையாட்டைதான் 90 களில் குமாரும் விளையாடினார். மேடையில் சிஐடி யை விளாசுவார். பின்னேரம் பாரில் அதே சிஐடி ஆபிசார்களோடு உல்லாசுவார்.

அந்த அதிகாலை நேரம் கொழும்பு 7 இல் இருந்து வெள்ளவத்தைக்கு எந்த நண்பியை பார்க்க வந்த போது கொல்லப்பட்டார் என்றாவது தெரியுமா? அந்த நண்பி எந்த அமைப்பால் இயக்கப் பட்டார் தெரியுமா?

நான் முன்பே சொல்லி இருக்கிறேன் பொன்னம்பலம்களின் கேடு கெட்ட அரசியல் புரிய கொஞ்சம் காலம் எடுக்கும்.

வெய்ட் அண்ட் சீ

 

தேர்தல் முடிவு வரும்வரை காத்திருப்போம். புலம் பெயர் வாலுகளின் பலம் அன்றுதான் தெரியும் 

எழுத நினைப்பதை எழுதினாலும் குற்றம் எழுதாவிட்டாலும் மௌனம் காத்தீர்கள் என்றும் வரும் 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

சம்பந்தர் ஐயா ஏன் போன் எடுக்கவில்லை என நாளைக்கு சொல்கிறாராம்.

களவெடுத்தாலும் நான் கள்ளன் எண்டு சொல்ல ஒரு கட்ஸ் வேணும். ஆனால் பிள்ளைகளைத்தான் கள்ளண்ட மக்கள் எண்டு ஊர் சொல்லும்.  (நான் இங்கு புலிவால்கள் எவரும் களவெடுத்தார்கள் எண்டுசொல்லவரேல்லை. அம்மா பிச்சை போடுங்கம்மா பிச்சை ):cool:

தெரிந்து எடுப்பதை காட்டிலும் சம் சும் மாவை மாதிரி எங்களை கொன்ற கொலையாளிகளிடமே பணம் எடுப்பது ...என்பது ....பக்கத்து வீட்டு காரனுடன் .....போல ....கேவலம் கேட்ட ஜென்மங்கள் ,,,

கூட்டமைப்பு தான் வெல்ல வேண்டும் ஆனால் இந்த சம் சும் மாவைக்கு பதிலாக துடிப்பான இளையவர்களை நாங்கள் கூட்டமைப்பில் உள் புகுத்தவேண்டும் ...இதுவே காலத்தின் தேவை 

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் புலத்தவர் எல்லோரும்

புண்ணாக்கு

அதன் பின்

வியாபாரிகள்

பின்னர் ஒருசிலர்தான் 

புண்ணாக்கு

வியாபாரிகள்

இப்ப பிச்சை  எடுப்பவர்கள்...

ஒரு சிலரை வைத்து பல லட்சம் நலன் விரும்பியவர்களை மதிப்பீடு செய்வது என்பது எந்த விதத்திலும் உண்மையாகாது

வாந்திக்கு வேண்டுமானால் சுவை சேர்க்கலாம்....

தமிழ் தேசிய மக்கள் முன்னணி அல்லது வித்யாதரன் தலைமையிலான கட்சியோ தமிழ் மக்களிடம் நம்பிக்கையை பெறுவதற்கு இதுவரை போதியளவு முயற்சி எடுக்கவும் இல்லை, அவர்களது நம்பகத்தன்மையை வெளிபடுத்த தாம் என்ன செய்வோம், தமது வழிமுறைகள் என்ன, தாம் இதுவரை மக்களுக்கு என்ன செய்தார்கள் என்று சொல்வதற்கு ஒன்றுமே இல்லை.
பத்திரிகையாளர் வித்யாதரன் அவர்கள் மஹிந்த ஆட்சி காலத்தில் வெள்ளை வான் மூலம் கோடபாயாவினால் கடத்தபட்டு கோடபாயவினால் புனர்வாழ்வு அளிக்கபட்டு விடுவிக்கபட்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும். கோடாபாயவின் கையில் அகப்பட்டு விடுவிக்க பட்வர்கள் தவிர மட்ட்ரவர்களுக்கு என்ன நடந்தது என்பது எல்லோரும் அறிவார்கள். விடுவிக்கபட்ட சிலர் மஹிந்த ஆதரவாளர்களாக மாறியதும் மக்கள் அறிவார்கள். திடீர் என தேர்தலுக்குள் நுழைந்த அவர் செயல் மக்கள் மத்தியில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதை யாரும் மறுக்கமுடியாது. தமிழ் மக்கள் முநாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம், புலிகளின் ஊடக பேச்சாளர் தய மாஸ்டர் என்பவர்களை எளிதில் மறகமாட்டர்கள். தமிழர்கள் புலிகளை எப்போதும் அவர்களது தியாகத்தை மதிபவர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.