Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் 2015: முடிவுகள் ஒரே திரியில்

Featured Replies

பொதுத் தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில்...

பொதுத் தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில்...

8வது பொதுத் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் நேற்றையதினம் காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகி அமைதியான முறையில் பாரிய வன்முறைச் சம்பவங்கள் எதுவுமின்றி மாலை 04.00 மணிக்கு நிறைவடைந்தது.

இதன்படி இன்று முழுமையாக வௌியிடப்பட்டுள்ள தேர்தல் முடிவுகளின் படி, 5,098,927 வாக்குகளைப் பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி 93 ஆசனங்களை பெற்று முன்னிலை வகிப்பதோடு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 4,732,669 வாக்குகளுடன் 83 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெருவாரியாக வெற்றி பெற்றுள்ள இலங்கை தழிழரசுக் கட்சி 14 ஆசனங்களை வசப்படுத்தியுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஐந்து ஆசனங்களையும், மட்டக்களப்பில் மூன்று ஆசனங்களையும் வன்னியில் நான்கு ஆசனங்களையும், திருகோணமலை மற்றும் திகாமடுல்லையில் ஒரு ஆசனத்தையும் இம்முறை தமிழரசுக் கட்சி தனதாக்கியுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி நான்கு ஆசனங்களை பெற்றுள்ளதோடு, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன தலா ஒரு ஆசனங்களை கைப்பற்றியுள்ளன.

இதன்படி இம்முறை பொதுத் தேர்தல் முடிகள் மாவட்ட அடிப்படையில் இதோ!

வட மாகாணம்

வன்னி

01) இலங்கை தமிழரசுக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 89,886 (54.55%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 4

02) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 39,513 (23.98%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 1

03) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 20,965 (12.72%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 1

யாழ்ப்பாணம்

01) இலங்கை தமிழரசுக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 2,07,577 (69.12%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 5

02) ஈழ மக்கள் ஜனநாயக கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 3,0232 (10.07%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 1

03) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 2,0025 (6.67%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 1

கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு

01) இலங்கை தமிழரசுக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 127,185 (53.25%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 03

02) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 32,359 (13.55%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 01

03) ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்

பெற்ற மொத்த வாக்குகள் - 38,477 (16.11%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 01

திருகோணமலை

01) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 83638 (46.36%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 2

02) இலங்கை தமிழரசுக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 45894 (25.44%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 1

03) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 38463 (21.32%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 1

திகாமடுல்ல

01) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 151,013 (46.30%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 04

02) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 89,334 (27.39%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 02

03) இலங்கை தமிழரசுக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 45,421 (13.92%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 01

மத்திய மாகாணம்

கண்டி

01) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 440,761 (55.57%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 07

02) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 309,152 (38.98%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 05

மாத்தளை

01) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 138,241 (49.84%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 3

02) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 126,315 (45.54%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 02

நுவரெலியா

01) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 228,920 (59.01%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 05

02) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 147,348 (37.98%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 03

மேல் மாகாணம்

கொழும்பு

01) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 640,743 (53.00%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 11

02) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 474,063 (39.21%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 07

03) மக்கள் விடுதலை முன்னணி

பெற்ற மொத்த வாக்குகள் - 81,391 (6.73%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 01

களுத்துறை

01) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 310,234 (44.47%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 04

02) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 338801 (48.56%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 05

03) மக்கள் விடுதலை முன்னணி

பெற்ற மொத்த வாக்குகள் - 38,475 (5.52%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 01

கம்பஹா

01) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 577,004 (47.13%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 09

02) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 549,958 (44.92%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 08

03) மக்கள் விடுதலை முன்னணி

பெற்ற மொத்த வாக்குகள் - 87,880 (7.18%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 01

தென் மாகாணம்

காலி

01) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 265,180 (42.48%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 04

02) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 312,518 (50.07%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 06

மாத்தறை

01) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 186,675 (39.08%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 03

02) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 250,505 (52.44%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 05

ஹம்பாந்தோட்டை

01) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 130,433 (35.65%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 02

02) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 196,980 (53.84%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 04

03) மக்கள் விடுதலை முன்னணி

பெற்ற மொத்த வாக்குகள் - 36,527 (9.98%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 01

வடமேல் மாகாணம்

குருநாகல்

01) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 441,275 (45.85%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 07

02) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 474,124 (49.26%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 08

புத்தளம்

01) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 180,185 (50.40%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 05

02) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 153,130 (42.83%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 03

வட மத்திய மாகாணம்

அனுராதபுரம்

01) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 213,072 (44.82%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 04

02) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 229,856 (48.35%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 05

பொலன்னறுவை

01) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 118,845 (50.26%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 03

02) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 103,172 (43.63%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 02

ஊவா மாகாணம்

பதுளை

01) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 258,844 (54.76%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 05

02) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 179,459 (37.97%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 03

மொனராகலை

01) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 110,372 (41.97%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 02

02) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 138,136 (52.53%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 03

சப்ரகமுவ மாகாணம்

இரத்தினபுரி

01) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 323,636 (51.19%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 06

02) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 284,117 (44.94%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 05

கேகாலை

01) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 247,467 (49.52%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 05

02) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 227,208 (45.47%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 04

(அத தெரண தமிழ்)

http://tamil.adaderana.lk/news.php?nid=71777

  • Replies 571
  • Views 32.9k
  • Created
  • Last Reply

தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு  மாற்றாக  ஒரு கட்சியும் வரக் கூடாது என்று இல்லை ஆனால் புலது தமிழர்கள்  'கிங் மேக்கராக ' செயற்ப்பட்டது தான்  தவறானதாக எனக்கு பட்டது . மற்றது   சிறிதரனோடு ஒப்பிடும் போது சுமந்திரன்   மேல் என்பது என் கருத்து..

.

Edited by வினித்

  • கருத்துக்கள உறவுகள்

மிகச்சரியான பார்வை.....

  • கருத்துக்கள உறவுகள்

மிகச்சரியான பார்வை.....

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி விருப்பு வாக்கு நிலவரம் என்ன மாதிரி ?

  • கருத்துக்கள உறவுகள்

விருப்பு வாக்கு அடிப்படையில் முதலாவதாக நின்ற சித்தார்த்தனை சிறீதரன், மாவை போன்றோர் திட்டமிட்டு தமக்கு பின்னுக்கு வரச் செய்து இருக்கின்றனர். சரி, மூன்றாவதாக நின்ற சித்தார்த்தனை சுமந்திரன் தன்னை மூன்றாவதாக விடுமாறு கேட்டு அந்த அடிப்படையில் நான்காவது சித்தார்த்தன் சென்று இருக்கின்றார். இது அவர் அனைவரையும் சமாளித்துச் செல்லும் பலவீனமான குணத்தினால் வந்தது.

நான் தெரிவிக்கும் மேற்படி கருத்துக்கள் பொய் என்று நீங்கள் கருதினால் நேற்று வாக்களிப்பு எண்ணும் நிலையத்தில் நின்றிருந்த ஊடகவியலாளர்கள் யாரையாவது தொடர்பு கொண்டு கேளுங்கள்.

எது எப்படி இருப்பினும் புலத்தில் உள்ளவர்களின் எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் நான் அறிய புளொட் மொத்தமாக இரண்டு ஆசனங்களை பெற்றிருக்கின்றது.

மட்டக்களப்பில் புளொட்டால் நியமிக்கப்பட்ட அமல் மாஸ்டர் என்று அழைக்கப்படும் வியாளேஸ்வரன் மாஸ்டரே வெற்றி பெற்றவர்களுள் மற்றும் ஒருவர் ஆவார்.

விருப்பு வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் (மோசடி) செய்யலாமா என உங்களுக்கு சந்தேகம் எனில் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது செல்வராஜா கஜேந்திரனுக்கு இவ்வாறாக விடுதலைப் புலிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மாற்றம் செய்யப்பட்டு இருந்தது என்பதனை இந்த இடத்தில் நினைவூட்ட விரும்புகின்றேன்.

சிறீதரனை கூட்டமைப்புக் கொண்டு வந்தது சுரேஸ் பிரேமச்சந்திரன். அவரை திட்டமிட்டு தோற்கடிக்கச் செய்து இருக்கின்றார் சிறீதரன். என்னைப் பொறுத்த வரையில் சுரேஸ் தோற்று இருக்கக்கூடாது. சரவணபவன் போன்ற வியாபாரிகளுடன் ஒப்பிடும் போது சுரேஸ் எவ்வளவோ பரவாயில்லை.

எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதைவடைய அல்லது ஒற்றுமை குலையுமாயின் அது சிறீதரனால்தான் ஏற்படும். அனைவரும் இருந்து பாருங்கள்.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலன் நீங்கள் பல நல்ல கருத்துகளை எழுதுபவர்தான்.

ஆனால் இது நம்பும் படியாக இல்லை.

முன்னைய தேர்தல்கள் வேறு. அப்போதும் வோட்டுப் போட்ட பின் விருப்பு வாக்கை மாற்றவில்லை. போடும்போதே கள்ள வாக்குப் போடுவார்கள்.

சித்தர் என்ன அவ்வளவு லூசா?

மாகாண சபையில் எடுத்த அதே அளவு விருப்பு வாக்கை எடுதுள்ளார்.

இதுதான் அவரின் எல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு மைத்திரியோடு சேர்ந்து 2016 இல் தீர்வு ஒன்றை தமிழ் மக்களுக்குப் பெற்றுத்தரும்போது அவர்கள் இன்னமும் பலமாகவும் உறுதியாகவும் இருப்பார்கள்:oO:. எப்படி சிதைவடையமுடியும்?

மட்டக்களப்பு இறுதி வாக்குகளைப் பார்த்தேன். பிள்ளையான் 127 வாக்குகளால் எம்பியாக வரமுடியாமல் போய்விட்டது.

United National Party

32,359 13.55% - 1 MPs Selected

United People's Freedom Alliance

32,232 13.49%

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக ஆசனங்கள் தொடர்பில் யாராவது இங்கே பதிந்தார்களா தெரியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 2 ஆசனங்கள் மேலதிகமாக கிடைத்துள்ளது.

இந்த அடிப்படையில் பேராசிரியர் சிற்றம்பலம் வருவார். கிழக்கில் யாரை போடுகின்றார்களோ தெரியாது.

Edited by nirmalan

விருப்பு வாக்கு அடிப்படையில் முதலாவதாக நின்ற சித்தார்த்தனை சிறீதரன், மாவை போன்றோர் திட்டமிட்டு தமக்கு பின்னுக்கு வரச் செய்து இருக்கின்றனர். சரி, மூன்றாவதாக நின்ற சித்தார்த்தனை சுமந்திரன் தன்னை மூன்றாவதாக விடுமாறு கேட்டு அந்த அடிப்படையில் நான்காவது சித்தார்த்தன் சென்று இருக்கின்றார். இது அவர் அனைவரையும் சமாளித்துச் செல்லும் பலவீனமான குணத்தினால் வந்தது.

நான் தெரிவிக்கும் மேற்படி கருத்துக்கள் பொய் என்று நீங்கள் கருதினால் நேற்று வாக்களிப்பு எண்ணும் நிலையத்தில் நின்றிருந்த ஊடகவியலாளர்கள் யாரையாவது தொடர்பு கொண்டு கேளுங்கள்.

எது எப்படி இருப்பினும் புலத்தில் உள்ளவர்களின் எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் நான் அறிய புளொட் மொத்தமாக இரண்டு ஆசனங்களை பெற்றிருக்கின்றது.

மட்டக்களப்பில் புளொட்டால் நியமிக்கப்பட்ட அமல் மாஸ்டர் என்று அழைக்கப்படும் வியாளேஸ்வரன் மாஸ்டரே வெற்றி பெற்றவர்களுள் மற்றும் ஒருவர் ஆவார்.

விருப்பு வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் (மோசடி) செய்யலாமா என உங்களுக்கு சந்தேகம் எனில் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது செல்வராஜா கஜேந்திரனுக்கு இவ்வாறாக விடுதலைப் புலிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மாற்றம் செய்யப்பட்டு இருந்தது என்பதனை இந்த இடத்தில் நினைவூட்ட விரும்புகின்றேன்.

சிறீதரனை கூட்டமைப்புக் கொண்டு வந்தது சுரேஸ் பிரேமச்சந்திரன். அவரை திட்டமிட்டு தோற்கடிக்கச் செய்து இருக்கின்றார் சிறீதரன். என்னைப் பொறுத்த வரையில் சுரேஸ் தோற்று இருக்கக்கூடாது. சரவணபவன் போன்ற வியாபாரிகளுடன் ஒப்பிடும் போது சுரேஸ் எவ்வளவோ பரவாயில்லை.

எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதைவடைய அல்லது ஒற்றுமை குலையுமாயின் அது சிறீதரனால்தான் ஏற்படும். அனைவரும் இருந்து பாருங்கள்கித                                       இதை தான் நானும் சொல்கிறேன்

சிறிதரன் ஆபத்தனவர் அவரின் நோக்கம் பதவி

Edited by வினித்

மட்டக்களப்பு இறுதி வாக்குகளைப் பார்த்தேன். பிள்ளையான் 127 வாக்குகளால் எம்பியாக வரமுடியாமல் போய்விட்டது.

United National Party

32,359 13.55% - 1 MPs Selected

United People's Freedom Alliance

32,232 13.49%

கிருபன் நான் நினைக்கிறேன் ஹிஸ்புல்லா தான் அந்த வாய்ப்பை இழந்துள்ளார் என்று. எதுக்கும் விருப்பு வாக்குகள் வெளிவரும்வரை பொறுத்திருந்து பார்ப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலன் நீங்கள் பல நல்ல கருத்துகளை எழுதுபவர்தான்.

ஆனால் இது நம்பும் படியாக இல்லை.

முன்னைய தேர்தல்கள் வேறு. அப்போதும் வோட்டுப் போட்ட பின் விருப்பு வாக்கை மாற்றவில்லை. போடும்போதே கள்ள வாக்குப் போடுவார்கள்.

சித்தர் என்ன அவ்வளவு லூசா?

மாகாண சபையில் எடுத்த அதே அளவு விருப்பு வாக்கை எடுதுள்ளார்.

இதுதான் அவரின் எல்லை. 

விருப்பு வாக்குக்களை மாற்றம்  செய்தே 2004 இல் மாவை அண்ணன் வந்ததாக ஒரு தகவல் கேள்விப்பட்டேன். அன்று சிறி காந்தாவின் விருப்பு வாக்குக்கள் மாவை அண்ணரின் பெயருக்கு மாற்றப்பட்டிருந்ததாம்.

நான் அறிந்தவகையில் யாழில்  சித்தரே விருப்பு வாக்குக்களில் தேர்தலிற்கு முன்னரே மக்களின் தெரிவாக இருந்தார்.
இன்று சித்தார்த்தன் மட்டுமல்ல அருந்தவபாலன் ஐயாவின் விருப்பு வாக்குக்களும் சரா அவர்களின் பெயரிற்கு மாற்றப்பட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலன் நீங்கள் பல நல்ல கருத்துகளை எழுதுபவர்தான்.

ஆனால் இது நம்பும் படியாக இல்லை.

முன்னைய தேர்தல்கள் வேறு. அப்போதும் வோட்டுப் போட்ட பின் விருப்பு வாக்கை மாற்றவில்லை. போடும்போதே கள்ள வாக்குப் போடுவார்கள்.

சித்தர் என்ன அவ்வளவு லூசா?

மாகாண சபையில் எடுத்த அதே அளவு விருப்பு வாக்கை எடுதுள்ளார்.

இதுதான் அவரின் எல்லை. 

உங்களைப் போன்றுதான் நானும் நம்பாமல் இருந்தேன். ஆனால் ஊடகவியலாளர்கள் அனைவரும் சித்தார்த்தனை திட்டியபடியே இந்த கருத்தினை தெரிவித்தனர். மற்றும் படி எனது தனிப்பட்ட கருத்துக்கள் அல்ல. இவ்வாறான கருத்துக்களை எழுதும் போது ஊடகவியலாளர்கள் என்னையே அடையாளம் கண்டு கொள்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ஜிஸ்பு மச்சான் தான் இழந்துள்ளார்.

ஓட்டமாவடி காளி பழி வாங்கீட்டா ?

நிர்மலன் -இப்ப போடுறதில்லை - நியமிப்பது ?

கிழக்கில் திருமலை அல்லது அம்பாறையில் இருந்து ஒருவர் என்றே நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் நான் நினைக்கிறேன் ஹிஸ்புல்லா தான் அந்த வாய்ப்பை இழந்துள்ளார் என்று. எதுக்கும் விருப்பு வாக்குகள் வெளிவரும்வரை பொறுத்திருந்து பார்ப்போம். 

இருக்கலாம். முழுமையான தகவல் எங்கிருக்கின்றது என்று தெரியவில்லை.

Gnanamuttu Sri Nesan topped the ITAK list in the Batticaloa District with 48,221 preferential votes. Sathasivam Wijendran was second with 39,321 while Sinnathambi Yogeshwaran was third with 34,039.

Ali Zahir Moulana of the SLMC received 16,385 preferential votes while Ameer Ali of the UNP received 16,611 votes.

 புலம் பெயர்  அமைப்புக்கள்   தேவையில்லாமல் ஓடாத குதிரை மேல்  பந்தயம் கட்டி புலிகளுக்கு  கெட்ட பெயர் கொண்டு வருகிறாரகள்  ......

கள நிலவரம் யதார்த்ததை உணர்ந்து செயற்பட்டால் நல்லது..

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி விருப்பு வாக்கு நிலவரம் என்ன மாதிரி ?

The ITAK also claimed victory in the Wanni electoral district, while Charles Nirmala Nadan, topped the list with 34,620 preferential votes.

S. Adaikalanathan was second with 26,397 votes. Sivashakthi Anandan received 25,027 votes while Siva Mohan received 18,411 votes.

Rishad Bathiyutheen was elected from the UNP with 26,297 votes. Abdul Masthan who contested from the UPFA, was elected with 7,198 votes. 

  • கருத்துக்கள உறவுகள்

விருப்பு மாற்றங்களில் மாற்றம் செய்ய முடியுமா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர், அவரவர்களுக்குள் ஏற்பாடும் உடன்பாட்டினைப் பொறுத்து என்கின்றார்.

இவர்களின் கருத்துக்களின் உண்மைத்தன்மையினை அறிய வேண்டுமானால் அரசாங்க அதிபர்களாக கடமையாற்றிய அல்லது தேர்தல் பணிகளில் ஈடுபட்டவர்களை கேட்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அரியநேந்திரனும் அவுட்டா:shocked:

  • கருத்துக்கள உறவுகள்

 புலம் பெயர்  அமைப்புக்கள்   தேவையில்லாமல் ஓடாத குதிரை மேல்  பந்தயம் கட்டி புலிகளுக்கு  கெட்ட பெயர் கொண்டு வருகிறாரகள்  ......

கள நிலவரம் யதார்த்ததை உணர்ந்து செயற்பட்டால் நல்லது..

இதனைத்தானே நான் பல தடவை இங்கே கருத்துக்கள் பதிவிடும் போது குறிப்பிட்டிருந்தேன். ஆனால், என்னை எல்லோரும் வரிந்து கட்டிக் கொண்டு தாக்கினீர்களே.

கஜேந்திரகுமார் அணியுடன் தொடர்பில் உள்ள எனது நண்பரிடம் கஜேந்திரகுமார் ஆட்கள் புலம்பெயர் தமிழர்களின் சொற்கேட்டு நடக்காமல் சுயமாக நின்றால் மாத்திரமே வெல்ல முடியும் என்று குறிப்பிட்டிருந்தேன். ஆனால், அந்த நண்பரும் இம்முறை கஜேந்திரகுமார் ஆட்கள் 2 சீட் எடுப்பினம் அப்ப பாரும் உமது கருத்துக்கள் யாவும் புஸ்வானம் ஆகும் என்றார்.

அவரை நேற்றில் இருந்து தேடுகின்றேன். இணைப்புக்கு வருகின்றார் இல்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பெண் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்கின்றார். அவரின் பெயர் சாந்தினி சிறீஸ்கந்தராஜா. (பெயரினை சரி பார்க்கவும்)

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி சச்சிதாநந்தமா?

ஐயகோ இன்னோர் அனந்தி?

  • கருத்துக்கள உறவுகள்

அரியநேந்திரனும் அவுட்டா:shocked:

அரியநேத்திரன் தொடக்கத்திலேயே தோல்வி என உறுதிப்படுத்தப்பட்டவர்.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கோவிந்தம் கருணாகரன் (ஜனா) தெரிவாகவில்லை.

புளொட்டால் நியமிக்கப்பட்ட அமல் மாஸ்டர் என்று அழைக்கப்படும் ச.வியாளேந்திரன் தெரிவாகியுள்ளார். இவர் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர். அதாவது, வயதில் குறைந்த ஒருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இம்முறை செல்கின்றார்.

சாந்தி சச்சிதாநந்தமா?

ஐயகோ இன்னோர் அனந்தி?

இல்லை சாந்தினி சிறீஸ்கந்தராஜா என்பதே சரியான பெயர். இவர் போரில் ஒரு காலை இழந்தவர். அதற்காக இவர் போராளி அல்ல.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

தகவல்களுக்கு நன்றி கிருபன் மற்றும் நிர்மலன்.

மேலதிக ஆசனங்கள் தொடர்பில் யாராவது இங்கே பதிந்தார்களா தெரியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 2 ஆசனங்கள் மேலதிகமாக கிடைத்துள்ளது.

இந்த அடிப்படையில் பேராசிரியர் சிற்றம்பலம் வருவார். கிழக்கில் யாரை போடுகின்றார்களோ தெரியாது.

 தலைவருக்கு பொட்டு அம்மான் எனில்   சமந்தருக்கு சுமந்திரன்  என நினைக்கிறேன்...... அப்போ கருணா யாரா/?/ அது தான்  சிலவேளை  சிறிதரன் அந்த இடதுக்கு வருவார்...................

Edited by வினித்

  • கருத்துக்கள உறவுகள்

135,000 தமிழ் வாக்குகள் கொண்ட கொழும்பு மாவட்டத்தில் 69,200 வாக்குகள் பெற்று 11ம் இடத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளேன். வாக்களித்த தமிழ் மக்களுக்கு நன்றி. எனது வாக்கு தொகையில் பங்களித்த முஸ்லிம், சிங்கள சகோதரர்களுக்கும் நன்றி.

-மனோ கனேசனின் முகநூல்

Edited by zuma

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.