Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச தலையீட்டுடன் கூடிய விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டும் - ஐ.நா:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச தலையீட்டுடன் கூடிய விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டும் - ஐ.நா:-

16 செப்டம்பர் 2015
 

இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஷ்பிரயோகங்கள் மோசமானவை: ஐ.நா- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

சர்வதேச தலையீட்டுடன் கூடிய விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டும் - ஐ.நா:-

Sri Lanka Press Release 16-09-2015 Tamil by deranapics

சர்வதேச தலையீட்டுடன் கூடிய விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டுமென ஐக்கிய நடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை குறித்த விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.


இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இரண்டு தரப்புக்களும் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


2002ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு  வரையிலான காலப்பகுதியில் அரசாங்கப்படையினரும், தமிழீழ விடுதலைப் புலிகளும் மனிதாபிமானத்திற்கு எதிரான வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


கலப்பின வகை நீதிமன்றமொன்றை உருவாக்கி அதன் ஊடாக மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


சர்வதேச ரீதியிலான நீதவான்கள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்களின் பங்களிப்புடன் இந்த பொறிமுறைமை முன்னெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.


நீதிக்கு புறம்பான வகையிலான எறிகணைத் தாக்குதல், சட்டவிரோத படுகொலைகள், பலவந்த காணாமல் போதல்கள், பாரியளவிலான சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமைகள், சிறுவர் போராளிகளை படையில் இணைத்தல் உள்ளிட்ட பாரியளவிலான குற்றச் செயல்களில் இரண்டு தரப்பும் ஈடுபட்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


இலங்கையின் அரசியலில் புதிய மாற்றமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அறிக்கை வெளியிடப்டுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார்.


உள்நாட்டு ரீதியான விசாரணைப் பொறிமுறைமை வரவேற்கப்பட வேண்டியது என்ற போதிலும், இலங்கையின் நீதிக் கட்டமைப்பு குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தக்கூடிய இயலுமையை கொண்டதில்லை என அவர் சுட்டிக்காட்யுள்ளார்.


பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாக்கும் திட்டமொன்று அமுல்படுத்தாமையே மிகப் பெரிய பலவீனமாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஷ்பிரயோகங்கள் மோசமானவை: ஐ.நா

தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள் மீது இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஷ்பிரயோகங்கள் –

சில தருணங்களில் மிக மோசமானதாக - மேற்கொள்ளப்பட்டன என ஐக்கிய நாடுகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது –

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/124006/language/ta-IN/article.aspx

  • Replies 168
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உள்நாட்டு ரீதியான விசாரணைப் பொறிமுறைமை வரவேற்கப்பட வேண்டியது என்ற போதிலும், இலங்கையின் நீதிக் கட்டமைப்பு குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தக்கூடிய இயலுமையை கொண்டதில்லை என அவர் சுட்டிக்காட்யுள்ளார்.


பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாக்கும் திட்டமொன்று அமுல்படுத்தாமையே மிகப் பெரிய பலவீனமாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஷ்பிரயோகங்கள் மோசமானவை: ஐ.நா

தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள் மீது இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஷ்பிரயோகங்கள் –

சில தருணங்களில் மிக மோசமானதாக - மேற்கொள்ளப்பட்டன என ஐக்கிய நாடுகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது –

 

 

சர்வதேச தலையீட்டுடன் கூடிய விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டும் - ஐ.நா:-

சிறீலங்கா  எதிர்பாராதது....

இதற்கு உடன்பட்டே ஆகணும்

அல்லது அடுத்தது கடுமையாகும்....

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் மட்டுமே ஐ நா வின் இந்த வலியுறுத்தலிற்கான முக்கிய காரணம்.
2009 க்குப் பின்னர் இவ்வாறு பல முறை ஐ நா இலங்கையைக் கேட்டுக்கொண்டது??? வலியுறுத்தியது???
சுட்டிக்காட்டியது??? அறிவுறுத்தியது???
இப்போது புதிய ஆட்சியைக் காட்டி மீண்டும் வலியுறுத்துகின்றது.
முடிவு  மகிந்த, கோத்தா  காப்பாற்றப்பட்டுள்ளார்கள்
ராணுவத்தைக் காட்டிக்கொடுக்க எந்தக் கட்சியும் முன்வராது.
தொடரும் அறிக்கைப் போர்களாவே இருக்கப்போகின்றது.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.bbc.com/news/world-asia-34266471

முழு அறிக்கையும் இந்த இணைப்பில் ஆங்கிலத்தில் பெற்றுக் கொள்ளலாம்

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த குற்றங்கள் அல்லது மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என கருதப்படக்கூடிய படுகொலைகளை இலங்கையில் மோதலில் ஈடுபட்ட இருதரப்பும் மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐ.நா விசாரணை அறிக்கையில் சட்டவிரோத படுகொலைகள் என  மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

இலங்கை குறித்து விசாரணை மேற்கொண்ட அலுவலகத்திற்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இலங்கை பாதுகாப்பு படையினரும், அவர்களுடன் தொடர்புபட்ட துணைப்படையினரும் பொதுமக்கள் மற்றும் ஏனையவர்களிற்கு எதிராக பரந்து பட்ட படுகொலைகளில் ஈடுபட்டனர் என நம்புவதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன.

குறிப்பிட்ட சில காலப்பகுதியில் தமிழ் அரசியல்வாதிகளும், ஊடகவியலாளர்களும், வர்த்தகர்களும் இலக்கு வைக்கப்பட்டனர். ஆனால் படுகொலை செய்யப்பட்டவர்களில் அப்பாவி பொதுமக்களும் காணப்பட்டனர்.

இந்த படுகொலைகள் ஓரு குறிப்பிட்ட வகையில் இடம்பெற்றுள்ளன என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. உதாரணத்திற்கு பாதுகாப்பு படையினரின் காலவரண்கள், சோதனைச்சாவடிகள்,  இராணுவமுகாம்களிற்கு அருகிலும் மேலும் பாதுகாப்பு படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளை தனிநபர்களும் படுகொலைக்குள்ளாகியுள்ளனர்.

இவைகள் நீதிமன்றின் முன்னிலையில் உறுதிப்படுத்தப்பட்டால் இடம்பெற்ற சூழ்நிலைகளை அடிப்படையாக வைத்து யுத்தகுற்றங்களாகவோ அல்லது மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாகவோ கருதப்படலாம்.

விடுதலைப்புலிகள் தங்களிற்கு ஆதரவில்லாதவர்கள் என கருதிய தமிழ் முஸ்லீம் சிங்களவர்களை படுகொலை செய்தமைக்கான வலுவான ஆதாரங்கள் உள்ளமையும் இலங்கை குறித்து விசாரணை மேற்கொண்ட அலுவலகத்திற்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தெரியவருகின்றது.

விடுதலைப்புலிகள்  தங்களிற்கு எதிரான அரசியல் சக்திகள், தகல்களை வழங்குபவர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்கள், மாற்றுக்கருத்துடைய தமிழ் அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், அரச அதிகாரிகள் மற்றும் எதிர்க்குழுக்களை சேர்ந்தவர்களை இலக்குவைத்தனர். விடுதலைப்புலிகளின் கண்முடித்தனமான தற்கொலைகுண்டு தாக்குதல் மற்றும் கிளைமோர் தாக்குதலில்பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர்.
 

இவைகள் நீதிமன்றின் முன்னிலையில் உறுதிப்படுத்தப்பட்டால் இடம்பெற்ற சூழ்நிலைகளை அடிப்படையாக வைத்து யுத்தகுற்றங்களாகவோ அல்லது மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாகவோ கருதப்படலாம்.

மே 18 ம்திகதி விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் மற்றும் தனிநபர்கள் சட்டவிரோத படுகொலைக்குள்ளனது குறித்த குற்றச்சாட்டுகள் பற்றியும் விசாரணைகள் இடம்பெற்றன.இவர்களில் சிலர் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவர்கள். பல விடயங்கள் இன்னமும் உறுதிப்படுத்தப்படவேண்டியுள்ள போதிலும், கண்ணால் கண்டவர்களின் சாட்சிகள், புகைப்பட ஆதாரங்கள்,வீடியோ ஆதாரங்கள், போன்றவற்றை அடிப்படையாக வைத்து பார்க்கின்ற போது பலர் இராணுவத்தினால் தடுத்துவைக்கப்பட்ட பின்னர் படுகொலைசெய்யப்பட்டனர் என்பதற்கான போதிய தகவல்கள் உள்ளன. இவைகள் நீதிமன்றின் முன்னிலையில் உறுதிப்படுத்தப்பட்டால் இடம்பெற்ற சூழ்நிலைகளை அடிப்படையாக வைத்து யுத்தகுற்றங்களாகவோ அல்லது மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாகவோ கருதப்படலாம்.
 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/124013/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அறிக்கையின் சாராம்சம் இனஅழிப்பு என்பதை வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் போர்க்குற்றங்கள் நடந்துள்ளது என்பதை உறுதிப் படுத்துகின்றது.உண்மையை அமெரிக்காவினாலோ இந்தியாவாலோதடுக்க முடியாது என்பது நிரூபணமாகியுள்ளது. இதன் தொடர்சியாக வரும் செயற்பாட்டில்தான் அறிக்கையின் வெற்றி அடங்கி இருக்கிறது. அன்றேல் வெறும் காகிதக்கட்டாக அமைந்துவிடும்.

 

ஐ.நா விசாரணை அறிக்கையின் சுருக்கம் – முழுமையாக

SEP 16, 2015 | 12:43by புதினப்பணிமனைin செய்திகள்

UNHRCசிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா நடத்திய விசாரணை அறிக்கை இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் அறிக்கையின் சுருக்கம், ஆங்கிலத்தில் 19 பக்கங்களில் இடம்பெற்றுள்ளது. இரண்டாவது பகுதி 261 பக்கங்களில் உள்ளது.

இந்த அறிக்கையின் சுருக்கத்தை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இன்று ஜெனிவாவில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

அவரது அறிக்கையின் தமிழ் வடிவத்தை முழுமையாகப் படிக்க இங்கே அழுத்துங்கள்-

281310514-Sri-Lanka-Press-Release-16-09-2015-Tamil1

http://www.puthinappalakai.net/2015/09/16/news/9748

 

இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஷ்பிரயோகங்கள் மோசமானவை: ஐ.நா

தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள் மீது இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஷ்பிரயோகங்கள் –

சில தருணங்களில் மிக மோசமானதாக - மேற்கொள்ளப்பட்டன என ஐக்கிய நாடுகள் அறிக்கையில் தெரி

 

 

 

என்னையா இது? வழக்கமாக நடக்கிற விசயந்தான் இருந்தாலும் சில சமயங்களில் ஓவரா போயிருக்கும் எண்டமாதிரி சமாளிப்பா இருக்கு. ஓவரா போனதுக்கு விசாரணையா அல்லது வழக்கமான சம்பவம் என்று விசாரனையே வேண்டாமா? 

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே பார்வையில் - ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணை அறிக்கை:-

ஐக்கிய நாடுகள்  மனித உரிமைப் பேரவை விசாரணை அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை சில முக்கிய தலைப்புக்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டிருந்தது.


சட்டவிரோத படுகொலைகள்


இலங்கை இராணுவமும் துணை இராணுவக்குழுக்களும் தமிழ் சிவிலியன்களையும், பாதுகாக்கப்பட்ட நபர்களையும் சட்டவிரோதமான முறையில் படுகொலை செய்தமைக்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. தமிழ் அரசியல்;வாதிகள், ஊடகவியலாளர்கள், மனிதாபிமான தொண்டர்கள் உள்ளிட்டவர்கள் குறிப்பாக இலக்கு வைக்கப்பட்டதுடன், சாதாரண பொதுமக்களும் கொல்லப்பட்டமைக்கான ஆதாரங்கள் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. பாதுகாப்புப் படையினர் செறிந்திருக்கும் சோதனைச் சாவடிகள், முகாம்களுக்கு அருகாமையிலும், பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பங்களிலும் இவ்வாறான கொலைகள் இடம்பெற்றிருந்தமை கவனிக்கப்பட வேண்டியது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றில் விசாரணை நடத்தப்பட்டால் அவை யுத்தக் குற்றச் செயலாக அல்லது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயலாகவே கருதப்படும்.


தமிழீழ விடுதலைப் புலிகளும் சட்டவிரோத படுகொலைகளில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம்கள் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டவர்கள், முரண்பட்ட அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டவர்கள், சந்தேகத்திற்குரிய உளவாளிகள் உள்ளிட்டவர்களை புலிகள் படுகொலை செய்துள்ளனர். புத்திஜீவிகள், துணை இராணுவக்குழு உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் அதிகளவு பொதுமக்களே கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றில் விசாரணை நடத்தப்பட்டால் அவை யுத்தக் குற்றச் செயலாக அல்லது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயலாகவே கருதப்படும்.


2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி மற்றும் அதனை அண்டிய திகதிகளில் அடையாளம் காணப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் அடையாளம் காணப்படாதவர்களும் சட்டவிரோதமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சில விடயங்கள் பற்றி உறுதி செய்ய வேண்டியிருப்பினும், வீடியோ மற்றும் ஏனைய ஆதாரங்களின் அடிப்படையில் இந்த விடயங்கள் கூறப்பட்டுள்ளன. கைதுசெய்பய்பட்டதன் பின்னர் கொலை செய்யப்பட்டமைக்கு போதியளவு ஆதாரங்கள் காணப்படுகின்றன. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றில் விசாரணை நடத்தப்பட்டால் அவை யுத்தக் குற்றச் செயலாக அல்லது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயலாகவே கருதப்படும்.


சுதந்திரத்தை ஒடுக்குதல் குறித்த உரிமை மீறல்கள்


இலங்கை இரர்ணுவத்தினர் சட்விரோத கைதுகள், தடுத்து வைத்தல்கள் போன்றவற்றை மேற்கொண்டுள்ளது. துணை இராணுவக் குழுக்கள் கடத்தல்களில் ஈடுபட்டுள்ளன. இவ்வறான அநேக சந்தர்ப்பங்கள் பலவந்த கடத்தல்கள் மற்றும் சட்டவிரோத படுகொலைகளாக பதிவாகியுள்ளன.


சட்டவிரோத கடத்தல்கள் மற்றும் கைதுகள் தொடர்பிலான சம்பவங்களுடன் தொடர்புடைய தரப்பினர் வெள்ளை வான்களைப் பயன்படுத்தி இவற்றை மேற்கொண்டுள்ளனர். இந்த நபர்களின் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு படையினர் தடை ஏற்படுத்தவில்லை. இவ்வாறான நடவடிக்கைகள் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு புறம்பானது.


பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் ஆகியனவற்றை பயன்படுத்தி சட்டவிரோத கைதுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன, இந்த இரண்டு சட்டங்களும் 2011ம் ஆண்டு வரையில் முழுமையாக அமுலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான சட்டவிரோத கைதுகள் தடுத்து வைத்தல்கள் தெளிவான சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு புறம்பானது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றில் விசாரணை நடத்தப்பட்டால் அவை யுத்தக் குற்றச் செயலாக அல்லது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயலாகவே கருதப்படும்.


பலவந்தமான காணாமல் போதல்கள்


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணை உட்படுத்திய காலப்பகுதியில் பல்லாயிரக் கணக்காணவர்கள் பலவந்தமான முறையில் காணாமல் போகச்செய்யப்பட்டுள்ளமைக்கான வலுவான ஆதாரங்களும் சாட்சியங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. குறிப்பாக வடக்கு கிழக்குமாகாணங்களில் இவ்வாறான சம்பவங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. யுத்தத்தின் பின்னர் பாரியளவில் கைது செய்யப்பட்டவர்களில் பலர் இவ்வாறு பலவந்தமான அடிப்படையில் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளனர்.


காணாமல் போனர்வர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளை அரசாங்கம் திட்டமிட்ட வகையில் ஒடுக்கியுள்ளமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறிப்பாக பலவந்தமாக காணாமல் போகச்செய்யப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படாமை ஒர் உரிமை மீறலாகும். காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களும் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


சிவிலியன் நிலைகள் மீது திட்டமிட்ட வகையில் தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான போதியளவு சாட்சியங்கள் காணப்படுகின்றன. படையினர் இவ்வாறு சிவிலியன்ளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதனாலும் பலவந்தமான காணாமல் போதல்கள் பதிவாகியுள்ளன. படையினரிடம் சரணடைந்த அல்லது ஒப்படைக்கப்பட்டவர்கள் புலிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் காணாமல் போகச்செய்யப்பட்டுள்ளனர்.


சித்திரவதைகள் மற்றும் மிகக் கொடூரமான துன்புறுத்தல்கள் துன்புறுத்தல்கள்


இலங்கை இராணுவத்தினர் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதைகளில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. யுத்தத்தின் பின்னர் உடனடியாக பாரியளவில் சிவிலியன்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் தடுத்து வைக்கப்பட்டனர். இராணுவ முகாம்கள், காவல் நிலையங்கள் மற்றும் புனர்வாழ்வு மையங்களிலும், இனம் தெரியாத இரகசிய முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டனர்.


மிகவும் திட்டமிட்ட வகையில் பாரியளவில் சித்திரவதைகள் மேற்கொண்டமைக்கான சாட்சியங்கள் ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. இவ்வாறான ஓர் பின்னணியில் இலங்கையில் பாரியளவில் சித்திரவதைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றில் விசாரணை நடத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டால், அவை யுத்தக் குற்றச் செயலாக அல்லது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயலாகவே கருதப்படும்.


பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பால் நிலை சார் வன்முறைகளும்:-


ஆண்கள் மற்றும் பெண்கள் மீது இராணுவப் படையினர் பாலியல் வன்கொடுமைகளையும், ஏனைய வழிகளிலான பாலியல் சித்திரவதைகளையும் மேற்கொண்டதாகக் கருதத் தேவையான சாட்சியங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறிப்பாக யுத்தத்தின் பின்னர் இந்த நிலைமை அதிகரித்தது. விசாரணகைளின் போது தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும், தண்டனை விதிக்கவும் இவ்வாறு பாலியல் வன்கொடுமைகளை படையினர் ஒர் கருவியாகப் பயன்படுத்தியுள்ளனர். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர்.


பாலியல் வன்கொடுமை குறித்த சமூகப் பார்வை, அழுத்தங்கள், அடக்குமுறைகள்; காரணமாக கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் பற்றிய பூரண தகவல்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை. எவ்வாறெனினும், இலங்கை அரச படையினர் பாரியளவில் பாலியல் வன்கொடுமைகளையும், பாலியல் சித்திரவதைகளையும் மேற்கொண்டமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றில் சில குற்றச்செயல்கள் யுத்தக் குற்றச் செயல்களாகவே கருதப்பட வேண்டும்.


கடத்தல்கள் மற்றும் பலவந்த ஆட்சேர்ப்பு


2009ம் ஆண்டு வரையில் தமிழீழ விடுதலைப் புலிகள் வயது வந்தவர்களை படத்தி படையில் இணைத்துக் கொண்டமைக்கான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இராணுவ மற்றும் ஏனைய உதவிகளை வழங்க இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் பணிக்கப்பட்டனர். குடும்பத்துடன் தொடர்புகளைப் பேண இவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பலவந்தமான ஆட்சேர்ப்பு நடவடிக்ககள் அதிகளவில் இடம்பெற்றன. கடத்தப்பட்டவர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் தப்பிக்கவோ அல்லது கடத்தப்பட்டவர்களை விடுவி;க்கவோ முயற்சித்த போது உடல் ரீதியாக தாக்கப்பட்டதுடன் வேறும் அடக்குமுறைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர்.


பலவந்தமான ஆட்சேர்ப்பு பலவந்தமாக பணிக்கு அமர்த்துவது ஜெனீவா பிரகடனத்திற்கு முரணானது. பலவந்தமாக கடத்தப்பட்டு படையில் இணைக்கப்பட்டவர்களின் சுதந்திர நடமாட்டம் முழுமையாக தடுக்கப்பட்டது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றில் விசாரணை நடத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டால், அவை யுத்தக் குற்றச் செயலாக அல்லது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயலாகவே கருதப்படும்.


சிறுவர் போராளிகளை படையில் சேர்த்தல் மற்றும் யுத்தத்தில் ஈடுபடுத்தல்


தமிழீழ விடுதலைப் புலிகள் பல ஆண்டுகளாக சிறுவர் போராளிகளை படையில் இணைத்து அவர்களை யுத்தத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். இறுதிக் கட்ட போர் இடம்பெற்ற மாதங்களில் இந்த நடவடிக்கை அதிகளவில் மேற்கொள்ளப்பட்டது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அல்லது கருணா தரப்பும் பாரியளவில் சிறுவர் போராளிகளை இணைத்துக் கொண்டமைக்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. இந்த நடவடிக்கையானது சர்வதேச சிறுவர் உரிமை சட்டங்களுக்கு முரணானது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றில் விசாரணை நடத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டால், அவை யுத்தக் குற்றச் செயலாக அல்லது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயலாகவே கருதப்படும்.


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் கருணா குழுவின் சிறுவர் படை சேர்ப்பு விவகாரம் படையினருக்கு தெரிந்திருந்தும் அது கண்டுகொள்ளப்படவில்லை. எனவே இதன் ஊடாக இலங்கை அரசாங்கம் சர்வதேச சிறுவர் உரிமைச் சட்டங்களை மீறியுள்ளது. இலங்கை சர்வதேச சிறுவர் உரிமை பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


யுத்தத்தினால் சிவிலியன்களுக்கும் சிவிலியன் உடமைகளுக்கும் ஏற்பட்ட பாதிப்பு:-


அநேகமான தாக்குதல் சம்பவங்கள் யுத்த விதிமுறைகளுக்கு முரணான வகையில் இடம்பெற்றுள்ளது. யுத்த சூன்ய வலயத்தில் காணப்படும் இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு அனுமதியுண்டு என்ற போதிலும், அதனால் தற்செயலாக ஏற்படக்கூடிய சிவிலியன் பாதிப்புக்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். சிவிலியன்இழப்புக்களை வரையறுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். பதுங்கு குழிகளில் இருக்க முடியாத பலர் யுத்த சூன்ய வலயத்தில் இருந்த போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் சிறுவர்கள் உள்ளிட்ட சிவிலியன் கொல்லப்பட்டனர்.


பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதியில் காணப்படும் இராணுவ நிலைகள் மீதான தாக்குதல்கள் மிகுந்த நிதானத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் சிவிலியன் நிலைகளிலிருந்து நிலை கொண்டிருந்தாலும், தாக்குதல் நடத்தினால் சிவிலயின்களுக்கு ஏற்படக்கூடிய இழப்புக்களை கவனத்திற்கொண்டிருக்க வேண்டும். சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் அடிப்படையில் சிவிலியன்களின் பாதுகாப்பு மிகவும் அவசியமானது. யுத்தத்தில் பங்கேற்கும் ஒரு தரப்பின் தவறுகள் காரணம் காட்டி சிவிலியன் இழப்புக்கள் குறித்த பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது. எவ்வாறெனினும் சிவிலியன் இழப்புக்கள் குறித்த பூரணமான விசாரணை நடத்தப்படவில்லை, இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.


வன்னி வைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகள் மீது தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் வைத்தியசாலைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த முடியாது. மனிதாபிமான நோக்கங்களிலிருந்து விலகிச் செயற்பட்டால் மட்டுமே தாக்குதல் நடத்தப்பட முடியும். இந்த வைத்தியசாலைகள் இராணுவ தேவைகளுக்காக பயன்படுத்பட்டமைக்கு எவ்வித சான்றுகளும் கிடையாது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றில் விசாரணை நடத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டால், அவை யுத்தக் குற்றச் செயலாக அல்லது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயலாகவே கருதப்படும்.


மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் படையினர் பயன்படுத்தி ஆயுதங்கள் கவனிக்கப்பட வேண்டியது. மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும் போது மிகவும் துல்லியமாக இலக்கை மட்டும் தாக்கக்கூடிய ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய சாத்திய இருந்தால் அவ்வாறான ஆயுதங்கள் பயன்பாட்டை படையினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாது படையினர் நடத்திய தாக்குதல்களில் சிவிலியன் இழப்பு ஏற்பட்டிருந்தால் அது மனிதாபிமான மீறலாகவே கருதப்படும்.


தாக்குதல் நடத்தப்படும் போது எச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இராணுவத் தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக அறிவித்து மக்களை அந்தப் பகுதியிலிலிருந்து வெளியேற போதியளவு கால அவகாசம் வழங்கி அதன் பின்னரே தாக்குதல் நடத்தப்பட வேண்டும்.


தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய சிவிலியன் நிலைகளை இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தவில்லை என விசாரணைகளின் மூலம் ஊர்ஜிதமாகியுள்ளது. எவ்வாறெனினும், எறிகணைத் தாக்குதல்களுக்கு எதிர் தாக்குதல் நடத்தும் மையங்களை புலிகள் பொதுமக்கள் வாழும் பகுதிகளுக்கு அருகமையில் நிறுவியமைக்கான சான்றுகள் காணப்படுகின்றன. இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களின் போது பொதுமக்கள் பாதிக்கப்படுவதனை தடுக்கும் வகையில் புலிகள் செயற்படவில்லை. இதன் ஊடாக தமிழீழ விடுதலைப்புலிகள் பொதுமக்களை பாதுகாக்கத் தவறியுள்ளனர்.


நடமாட்டத்தை வரையறுத்தல்


தமிழீழ விடுதலைப் புலிகள் சிவிலியன்கள் வன்னியலிருந்து வெளியேறுவதனை தடுத்தனர் என நம்புவதற்கான காரணங்கள் விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதன் ஊடாக புலிகள் மக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கு தடை ஏற்படுத்தியுள்ளனர். 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த சட்டம் கடுமையாக்கப்பட்டது. இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். தப்பிச் செல்ல முயற்சித்த சிறுவர்கள் உள்ளிட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், தாக்குதலுக்கும் இலக்காகியுள்ளனர். இதன் போது சிலர் உயிரிழந்தனர். யுத்தத்தின் போது அல்லாமல் இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றில் விசாரணை நடத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டால், அவை யுத்தக் குற்றச் செயலாக அல்லது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயலாகவே கருதப்படும்.


யுத்தம் இடம்பெற்ற பகுதியில் மக்களை தங்கியிருக்க வற்புறுத்தியதன் மூலம் புலிகள் யுத்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டனர்.


மனிதாபிமான உதவிகளை வழங்க மறுத்தல்


வன்னியில் இலங்கை அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. மக்கள் நடமாட்டம் முதல் கொண்டு பல்வேறு வழிகளில் கட்டுப்பாடுகள் விடுக்கப்பட்டிருந்தன. மனிதாபிமான தொண்டர்களின் நடாட்டமும் வரையறுக்கப்பட்டது. சிவிலியன்களுக்கு நலன்களை வழங்க மனிதாபிமான தொண்டர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.


தமிழீழ விடுதலைப் புலிகளும் மனிதாபிமான தொண்டர்கள் சுயாதீனமாக நடமாட அனுமதிக்கவில்லை.


யுத்த வலயத்தில் மக்கள் கடுமையான மனிதாபிமான தேவைகளை எதிர்நோக்கயிருந்த போதிலும் அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து மக்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியது. குறிப்பாக உணவு, மருந்துப் பொருள் விநியோகம் கூட தடைப்பட்டது. இதனால் பொதுமக்கள் பட்டினி பிணியை எதிர்நோக்க நேரி;ட்டது. இந்த நடவடிக்கையானது சர்வதே மனிதாபிமான சட்டங்களுக்கு முரணானது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றில் விசாரணை நடத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டால், அவை யுத்தக் குற்றச் செயலாக அல்லது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயலாகவே கருதப்படும்.


உள்ளக இடம்பெயர்வாளர்களின் உரிமைகளை முடக்குதல்
மனிக்பாம் மற்றும் ஏனைய இடம்பெயர் முகாம்களில் வாழ்ந்து வந்த மக்களின் உரிமைகள் முடக்கப்பட்டதுடன் அவர்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டனர். சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் இடம்பெயர் மக்களின் உரிமைகள் உறுதி செய்யப்படவில்லை. மக்களுக்கு போதியளவு சுகாதார வசதிகள் வழங்கப்படவில்லை. உணவு, குடிநீர், ஏனைய சுகாதார வசதிகள் உரிய முறiயில் இடம்பெயர் முகாம்களுக்கு வழங்கப்படவில்லை.


தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காக இடம்பெயர் மக்கள் சந்தேக நபர்களாக  நோக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்த நடவடிக்கையானது சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் மனித உரிமை மீறலாகும். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றில் விசாரணை நடத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டால், அவை யுத்தக் குற்றச் செயலாக அல்லது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயலாகவே கருதப்படும்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/124016/language/ta-IN/article.aspx

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

2002 இலிருந்து 2011 வரை......
சந்திரிகா ஜனாதிபதி
மகிந்த ஜனாதிபதி
ரணில் பிரதமர்
மைத்திரி பிரதிப் பாதுகாப்பு அமைச்சர்

இவர்கள்  எல்லோரும்  விசாரிப்பப்படுவார்களா??

  • கருத்துக்கள உறவுகள்

2002 இலிருந்து 2011 வரை......
சந்திரிகா ஜனாதிபதி
மகிந்த ஜனாதிபதி
ரணில் பிரதமர்
மைத்திரி பிரதிப் பாதுகாப்பு அமைச்சர்

இவர்கள்  எல்லோரும்  விசாரிப்பப்படுவார்களா??

விசாரணைக்கு ஒத்துழைப்பதைப்பொறுத்தது ...

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே அறிக்கையை பார்த்து ஷாக் ஆயிட்டேன் .....சயீத் குசேன் சொன்னதுபோல 12000 V உடம்பில பாஞ்சது போல இருந்தது 
இனி என்ன விசாரணை தானே ....? நடத்தினால் போச்சு 

 அறிக்கை மீதான வாக்கெடுப்பின் பின்னால் தானே சர்வதேச விசாரணை பொறிமுறை அமைக்கப்படும் ? 

இடையில் அமெரிக்க தீர்மானமும், இந்தியாவின் நரித்தனமும் உள்ளதே...   எனக்கு நம்பிக்கையில்லை. ஒரு சர்வதேச விசாரணை நடப்படும் என்று...

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் விசாரணை குழுவிலும் 
சர்வதேச வழக்கறிஞர்கள் இருந்தார்கள்தானே ?

நீதி பேசவும் ஒரு மூஞ்சி வேணும்.
இன்று சிரியாவின் படுகொலைகளை அரங்கேற்றி நடத்தி வருவது யார் ?


இலங்கையில் இருந்து சீனாவை அகற்றுவது என்றால் 
கட்டி புரள்வதை தவிர வேறு வழி  இல்லை ...

கட்டி புரள்வதை தவிர 
வேறு ஏதும் நடக்கும் என்று எதிர்பார்ப்பதே அடி முட்டாள் தனம்.

இதெல்லாம் முன்பு நாங்கள் கிராமங்களில் படிக்குபோது 
வந்து போகும் ஆங்கில வாத்தியார் மாதிரி 
வருசத்திற்கு ஒருக்கா வந்து எ பி சி டி சொல்லி விட்டு போவார்கள்.
நாங்களும் இங்கிலிஷ் படிக்கிறோம் என்று ஒரு மமதையில் இருப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்

குழப்பம் விளைவிக்கக் கேட்கவில்லை, பெரிய தலைகள் எல்லாம் இங்கின நிக்கிறதால கேக்கிறன்! இந்த அறிக்கையில் சிங்கள அரசின் முறைகேடுகளை மட்டும் தான் நம்புகிறோமா? புலிகள் பற்றிய கருத்துகளை மௌனமாகக் கடந்து போகிறோமா?

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் மனைவியின் 
உடை அலங்காரம் பற்றி நீங்கள் உங்கள் மனைவியுடன் பேசுவதற்கும் 


அடுத்த வீட்டு ஜோனின் மனைவியிடம் 
சென்று பேசுவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு 


எதுவும் இல்லாதவர்கள் 

என்பது போல்.


நட்டு கலண்டவர்கள்தான் 
நடுநிலைமை என்று 
ஒரு வெறு நிலையை உருவாக்க முடியும்.

சங்கரை .....
சீலனை ...
எல்லாம் புலிகள்தான் கொன்றார்கள் 
புலிகள் இல்லாது போயிருந்தால் 
இன்று சீலன் வீட்டிற்கும் ஒரு ஆம்பிளை பிள்ளை இருந்திருக்கும். 

சமைத்தது சாப்பிட்டு முடிய 
திண்ண்டது செமிக்க 
நெருப்பில் எரிந்த விறகிட்கு 
சுதந்திரம் வேண்டும் என்று சிலர் வேடிக்கை காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆறாறிவு உள்ள மனிதன் அதை கடந்துபோக கடவ. 


30 வருடம் இன சுத்திகரிப்பை செய்து வெறி ஆடிய ஒருவனுடன் 
பிராந்திய அரசியல் சார்ந்து பிணையவேண்டிய தேவை 
உள்ளவன் நடுநிலைமை வேடிக்கை காட்டத்தான் வேண்டும் ....

தெரியாமல்தான் கேட்கிறேன் 
நான் தமிழன் !
என்னை புலியும் அடித்தது 
சிங்களவனும் அடித்தான் 
ஐநா எனக்கு சொன்ன நீதி என்ன ?
நீதி சொல்ல வக்கிலாதவந்தான் விக்கி கொண்டு இருக்க வேண்டும்.

அதுபோல்தான் இங்கும் சிலர் 
புலி புராணம் பாடி 
தமக்கு வெள்ளை அடிக்க வேண்டும். 

ஆறறிவுக்கு முதலில் 
நீதிக்கும் அநீதிக்கும் வித்தியாசம் புரியவேண்டும் 
அது புரியாத போதே 
அறிவு ??
கேள்வி குறி மட்டுமே. 

????????????????
கேள்விகுறியோடு நின்று 
எதை வேண்டுமென்றாலும் பேசலாம்.

யாழ் களம் என்று ஒன்று இருக்கா ?
என்றும் ஒரு தலைப்பு திறந்து விவாதிக்கலாம். 

(எதுவும் இல்லாதவர்கள் 

we are modern 

என்பது போல்.)

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes:மருதர், உங்கள் அலட்டல் வாசிக்க தனியாக நேரம் ஒதுக்குகிறேன் பிறகு! இப்ப கேள்விக்கு ஆம் அல்லது இல்லை பதில் மட்டும் தாருங்கள்:

புலிகள் யுத்த நேரம் மக்களுக்கு எதிராக குற்றங்கள் புரிந்ததை ஏற்றுக் கொள்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்


புலிகள் என்பவர் யார் ?
நீங்கள் மக்கள் என்று சொல்பவர்கள் யார் ?
குற்றம் என்று நீங்கள் சாடுவது என்ன ?

இவை சரியாக விளங்க படுத்த முடியாத இடத்து 
விளங்காத கேள்விக்கு 
விளக்கம் இல்லாதவர்கள்தான் 
ஒரு பதிலை கூற முடியும். 

கேள்வியை விளக்கமாக கேட்டால்தானே பதில் கூற முடியும். 


நீங்கள் யுத்தம் என்று குறிப்பிடுவது எதை ??

  • கருத்துக்கள உறவுகள்

குழப்பம் விளைவிக்கக் கேட்கவில்லை, பெரிய தலைகள் எல்லாம் இங்கின நிக்கிறதால கேக்கிறன்! இந்த அறிக்கையில் சிங்கள அரசின் முறைகேடுகளை மட்டும் தான் நம்புகிறோமா? புலிகள் பற்றிய கருத்துகளை மௌனமாகக் கடந்து போகிறோமா?

அறிக்கையிலேயே சொல்லப்பட்டுள்ளது.

புலிகள் 

அமைதி காப்பு அரண்களுக்கு பக்கத்திலிருந்து தாக்குதல் செய்திருந்தாலும்

எதிரியின் தாக்கத்துக்கு மறு தாக்குதல் என்று ஒரு அரசு சொல்லமுடியாது என்று.

  • கருத்துக்கள உறவுகள்

அறிக்கையிலேயே சொல்லப்பட்டுள்ளது.

புலிகள் 

அமைதி காப்பு அரண்களுக்கு பக்கத்திலிருந்து தாக்குதல் செய்திருந்தாலும்

எதிரியின் தாக்கத்துக்கு மறு தாக்குதல் என்று ஒரு அரசு சொல்லமுடியாது என்று.

அது மட்டும் தான் சொல்லப் பட்டிருக்கா? பலவந்தமாக ஆக்களைப் பிடித்தது, தப்ப முனைந்த சிவிலியன்களைச் சுட்டது, இதெல்லாம் உங்களுக்குத் தெரியவில்லையா? இவை மனதில் வைத்தே நான் கேட்டேன். நீங்கள் நம்பும் ஐ.நாவின் அறிக்கையில் இவை வந்திருப்பதால் இது -உரிய சந்தர்ப்பம் என்று நினைத்துக் கேட்டேன். மருதர் நழுவி விட்டார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் விசுகர்?

  • கருத்துக்கள உறவுகள்

அது மட்டும் தான் சொல்லப் பட்டிருக்கா? பலவந்தமாக ஆக்களைப் பிடித்தது, தப்ப முனைந்த சிவிலியன்களைச் சுட்டது, இதெல்லாம் உங்களுக்குத் தெரியவில்லையா? இவை மனதில் வைத்தே நான் கேட்டேன். நீங்கள் நம்பும் ஐ.நாவின் அறிக்கையில் இவை வந்திருப்பதால் இது -உரிய சந்தர்ப்பம் என்று நினைத்துக் கேட்டேன். மருதர் நழுவி விட்டார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் விசுகர்?

ஐயா

இந்தக்குற்றச்சாட்டுக்களுடன் அறிக்கை நிற்கவில்லை

நான்  எழுதிவரிகளுடன் அரச பொறுப்பைக்கூறி நிற்கிறது.

புலிகளை இவர்கள் எவரும் அங்கீகரிக்கவில்லை

எனவே அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் எடுபடா.

அதனால் தான் புலிகள் தம்மை முழுமையாக அழித்திருந்தார்கள்

அத்துடன் சரணடைந்தவர்களை வைத்திருந்தால்

அவர்கள் மீதாவது சில விசாரணைகளை குற்றங்களை கையாண்டிருக்கமுடியும்

ஆனால் அவர்களையும் அழித்து தான் மட்டுமே என்கின்ற நிலைக்குள் சிறீலங்கா வந்திருக்கிறது.

ஓரளவுக்கு எதிர்பார்த்தது தான்..

 

மருதர் நழுவி விட்டார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் விசுகர்?

ஒன்றை மட்டுமே நான் நம்புகின்றேன்

நாம் பறி கொடுத்தவற்றை மட்டுமே நாம் கேட்டோம்.

எங்கள் பக்கம் நியாயம் இருந்தது. தர்மம் இருந்தது.  

அதற்கு என்றாவது ஒரு நாள் தீர்வு கிடைக்கும்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா

இந்தக்குற்றச்சாட்டுக்களுடன் அறிக்கை நிற்கவில்லை

நான்  எழுதிவரிகளுடன் அரச பொறுப்பைக்கூறி நிற்கிறது.

புலிகளை இவர்கள் எவரும் அங்கீகரிக்கவில்லை

எனவே அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் எடுபடா.

அதனால் தான் புலிகள் தம்மை முழுமையாக அழித்திருந்தார்கள்

அத்துடன் சரணடைந்தவர்களை வைத்திருந்தால்

அவர்கள் மீதாவது சில விசாரணைகளை குற்றங்களை கையாண்டிருக்கமுடியும்

ஆனால் அவர்களையும் அழித்து தான் மட்டுமே என்கின்ற நிலைக்குள் சிறீலங்கா வந்திருக்கிறது.

ஓரளவுக்கு எதிர்பார்த்தது தான்..

 

மருதர் நழுவி விட்டார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் விசுகர்?

ஒன்றை மட்டுமே நான் நம்புகின்றேன்

நாம் பறி கொடுத்தவற்றை மட்டுமே நாம் கேட்டோம்.

எங்கள் பக்கம் நியாயம் இருந்தது. தர்மம் இருந்தது.  

அதற்கு என்றாவது ஒரு நாள் தீர்வு கிடைக்கும்

 

 

எதிர்பார்த்த நழுவல் தான் விசுகர்! உங்கள் போன்ற தீவிர தமிழ்வாதிகளின் பிரச்சினையே இது தான். ஒரு பிழையை பிழை என்று ஒரு வரியில் சொல்லும் நேர்மை உங்களிடம் இல்லை. அதுவே இல்லாத போது நீங்கள் தர்மம் நியாயம் என்று சொல்லும் கதைகளுக்கு எவர் காது கொடுப்பார் என்று நினைக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

 

எதிர்பார்த்த நழுவல் தான் விசுகர்! உங்கள் போன்ற தீவிர தமிழ்வாதிகளின் பிரச்சினையே இது தான். ஒரு பிழையை பிழை என்று ஒரு வரியில் சொல்லும் நேர்மை உங்களிடம் இல்லை. அதுவே இல்லாத போது நீங்கள் தர்மம் நியாயம் என்று சொல்லும் கதைகளுக்கு எவர் காது கொடுப்பார் என்று நினைக்கிறீர்கள்?

ஐயா

நான் பேசுவது எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதற்கான காரணங்களிலிருந்து தொடங்குகிறது

அந்த காரணங்கள் முடிவுக்கு கொண்டு வரப்படணும்

அதற்கொரு தீர்வு வேண்டும்..

அது தான் எனது நிலையும் குறிக்கோளும்..

அதற்கு எமது தமிழ்மக்களுக்கெதிராக நடாத்தப்பட்ட போர்க்குற்றங்கள் ஒரு வழியைத்திறக்கும் என நம்புகின்றேன்

உங்களுக்கு வேறு வழிகளில் நாட்டமுண்டாயின்

அவை தீர்வைத்தருமாயின் முயலுங்கள்.

நன்றி.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்த்த நழுவல் தான் விசுகர்! உங்கள் போன்ற தீவிர தமிழ்வாதிகளின் பிரச்சினையே இது தான். ஒரு பிழையை பிழை என்று ஒரு வரியில் சொல்லும் நேர்மை உங்களிடம் இல்லை. அதுவே இல்லாத போது நீங்கள் தர்மம் நியாயம் என்று சொல்லும் கதைகளுக்கு எவர் காது கொடுப்பார் என்று நினைக்கிறீர்கள்?

இன்று ஐ நா எதை சொல்கிறதோ அதைதான் மூன்றாம் உலக நாடுகள் கேட்க வேண்டும் 
ருவாண்டாவில் இன படுகொலை நடக்கும்போது 
ஐ நா பிணங்களை கடந்து வெளியேறுகிறது 
ஐ நா விடம் நீங்கள் நீதி கேட்டீர்களா ? 

அமெரிக்கா சொல்வதைத்தான் உலக நாடுகள் கேட்க வேண்டும் 
இதுதான் நிலைமை.

யார் கேட்கிறார் ?
யார் சொல்கிறார் ?
என்பது எனது கருத்தல்ல 

எனது கருத்து நீங்கள் வர்ணம் அடிக்கும் தர்மம் நியாயம்  சார்ந்தது 

நீங்கள் குறிப்பிட்ட "யுத்தம்" என்ற சொல்லைக்கூட உங்களால் விரிவாக்க முடியாது  
என்ன யுத்தம் ?
ஏன் யுத்தம் ?
யார் மீது யுத்தம் ?
எங்கிருந்து தொடங்கியது யுத்தம் ?

இவற்றை எல்லாம் மழுப்பிவிட்டு 
புலிகள் சரியா ? தவறா ?
என்று உங்களுக்கு பிடித்த பதிலை மட்டும் பிடுங்கி எடுக்கும் ஆதிக்க தனத்திற்கு சென்று விடுகிறீர்கள். 

எங்களுக்கு அந்த வில்லங்கம் இல்லை.
விறகை எரித்தால்தான் ....
அடுப்பில் சமைக்க முடியும் 
என்பது சாப்பிடும் ஆறறிவுக்கு புரிய வேண்டும்.

அது புரியவில்லை என்றால் ...
அது அறிவு சார்ந்த விடயம்.

புலிகள் பிழை என்றால் .....
1978இலேயே பிழைதான் 
தமிழ் பிள்ளைகளை எதோ ஒரு வடிவில் கொன்றுகொண்டுதான் இருந்தார்கள்.
ஏன் முள்ளி வாய்க்காலில் குத்துகரணம் அடிக்கிறீர்கள் ?

அடுத்த வீடு எரியும்போது ....
வெளிச்சமாக இருந்தது 
அது சொந்த வீட்டுக்கு பரவும்போதுதான் 
நெருப்பு சுடும் என்று தெரிகிறதா ? 

இல்லை 
அப்போதான் நாங்கள் நடுநிலைமை வாதிகள் 
என்று ஒரு வெறு  நிலைமைக்கு 
உங்களால் வெள்ளை அடிக்க முடியும். 
கிட்டதட்ட ஐ நா போல .....

ஐ நா உருவாகியதே .....
யூதர்களின் படுகொலையை மைய படுத்தி 
இன்று மியன்மாரில் ஒரு இனம் பூண்டோடு அழிகிறது 
எந்த ஐ நா நாய் போய் என்ன என்று பார்க்கிறது ?
எல்லாம் முடிய என்ன அறிக்கை வந்தால் என்ன ?
உங்களை  போன்ற சில போலி நடுநிலைமை பேசுபவர்களுக்கு 
சிலவேளை பொழுது போக்காக இருக்கும்.

ஒரு அரச இயந்திரம் ...
சிறுபான்மை இனத்தை  குழுமத்தை 
நசுக்கினால் தட்டிகேட்க உருவாக்க பட்ட ஐ நா 
கிளிநொச்சியில் இருந்து ஏன் வெளியேற வேண்டும் ? 

நீதியையும்..... தர்மத்தையும் 
யார் கேட்கிறான் என்பது எனக்கு தேவை இல்லை.
நான் பேசுவதில் அது இருந்தால் போதும். 

அடுத்தவன் பார்த்து கைதட்டுவான் 
என்பதற்காக ....
மனைவியின் ஆடைகளை களையும் 
அடிமட்ட எண்ணம் இதுவரையில் இல்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.