Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நினைத்ததனை விடவும் குறைவாகும் - பிரதமர்

Featured Replies

யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நினைத்ததனை விடவும் குறைவாகும் - பிரதமர்:


யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நினைத்ததனை விடவும் குறைவானதாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


சிங்கப்பூர் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்திற்கு அமைவாக, இலங்கை யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளில் வெளிநாட்டு நீதவான்கள் நீதவான்களை அனுமதிப்பது சில வேளைகளில் சிக்கல் மிகுந்ததாக அமையக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.


இலங்கையின் விசாரணை ஆணைக்குழுக்களில் ஏற்கனவே வெளிநாட்டு நீதவான்கள் பங்களிப்புச்செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


எனினும், யுத்தக் குற்றச் செயல் குறித்த விசாரணைகளில் ஆலோசனை பெற்றுக் கொள்வதாக அல்லது விசாரணை அமர்வுகளில் வெளிநாட்டு நீதவான்களை உள்வாங்கிக் கொள்வதே தற்போதைய கேள்வியாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்தியாவுடனான உறவுகள் வளர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


அரசாங்கம் இந்தியாவுடனும், சீனாவுடனும் சிறந்த முறையில் தொடர்புகளைப் பேணிக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125019/language/ta-IN/article.aspx

ஓய் ரணில் ... கொஞ்சம் பொறும், அவசரப்படாதீர்! ... நாளை நம்ம இதயங்களால் ஒன்றுபட்டவர்கள், இழப்புகள் தமிழர் தரப்பில் ஒன்றுமில்லை என்று அறிக்கை விடக்கூடும்,!! ... சில தினங்களுக்கு முன்னுக்கு இனவழிப்புக்கு ஆதாரங்கள் ஒன்றும் இல்லை என்று கூறவில்லையா??? ...  மகிந்த சொன்னது போல் "சீறோ ஃபேசன் சிவிலியன் கஸுவலிட்டீஸ்" என நம்மவர்களே அறிக்கை விடுவார்கள்??

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பத் திரும்பச் சொல்லப்படும் போது....பொய்யும் உண்மையாகி விடுகின்றது!

புலம் பெயர் தமிழர்கள் அமைப்புகள்...தங்கள் முன்னெடுப்புகளைச் சற்றும் தளர விடாது.. தொடர வேண்டிய கால கட்டம் இதுவாகும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்காவிலை ஒருபிரச்சனையும் நடக்கேல்லை எண்டு சொல்லுறதுக்கு எங்கடையளே குத்தி முறியுதுகள்....இதுக்கை என்ன கோதாரிக்கு தேவையில்லாமல் சிங்களவனை திட்டுவான்?

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் நடைபெற்றபோது சிங்களப் படைகளால் மக்கள் முற்றுமுழுதாகக் கொல்லப்பட்டனர் என ஒருவேளை ரணில் நினைத்திருக்கலாம். அது தவறு என்பதை தற்போது உணர்ந்து இருக்கின்றார் போல தெரிகின்றது. இதனை மேலும் விளக்கினால், உதாரணத்துக்கு  யுத்த காலத்தில் மொத்தமாக  50 000 பொது மக்கள் கொல்லப்பட்டனர் என எடுத்துக்கொள்வோம். ரணில் நினைக்கிறார்  சிங்களப்படைகளால் 50 000 பொதுமக்களும் சிங்களப்படைகளால் கொல்லப்பட்டனர் என்பதாக. ஆனால் இப்போது அவருக்குத் தெரியவருகின்றது சிங்களப்படைகள் கொன்றது 47 500 என்பதாக. ஆனால் உண்மையில் 50 000 மக்கள் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படுகிறது. எனவே மிகுதி 2 500 பேரும் இன்னொரு தரப்பினரால் கொல்லப்பட்டு இருக்கின்றனர்.:unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பாடா ஒருமாதிரி சமப்படுத்தியாச்சு....

  • கருத்துக்கள உறவுகள்

பேசாம இப்படி வைச்சுக்குவோம் சிங்களப்படைகளால் 1 உம் மிகுதி 49,999 பேரும் இன்னொரு தரப்பினராலும் என. 

  • கருத்துக்கள உறவுகள்

பேசாம இப்படி வைச்சுக்குவோம் சிங்களப்படைகளால் 1 உம் மிகுதி 49,999 பேரும் இன்னொரு தரப்பினராலும் என. 

அந்த ஒரு மரணத்துக்காகவாவது உங்களிட்டை..ஆதாரம் ஏதாவது இருக்கா மீரா?

அப்படின்னு கேள்விகள் வரக்கூடும்.. எதுக்கும் ஆயத்தமாய் இருங்கோ!

அந்த ஒரு மரணத்துக்காகவாவது உங்களிட்டை..ஆதாரம் ஏதாவது இருக்கா மீரா?

அப்படின்னு கேள்விகள் வரக்கூடும்.. எதுக்கும் ஆயத்தமாய் இருங்கோ!

புலிகளின் ஒரு கொலைக்கும் ஆதாரம் கேட்பவர்கள் போல சிங்கள படைகளின் ஒரு கொலைக்கும் ஆதாரத்தை அவர்கள் கேட்க கூடும் .tw_anguished:

  • கருத்துக்கள உறவுகள்

அன்னக் காவடி, பால் காவடி, தூக்குக் காவடி...
எங்கள் பாரம் பாரிய கலைகள் அழிந்து போகாமல்
இங்கே பாதுகாக்கப்படுகின்றன...

கபூர் 83 இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு வடக்கில் வந்து வாழ்ந்தவர், கபூர் ஒரு உன்னதமான போராளி. முற்போக்கு சிந்தனை கொண்டவர். கபூரின் குடும்பமே அப்படித்தான். கபூரின் இயற்பெயர் பாலசுப்பிரமணியம்.

ஈ பி ஆர் எல் எஃப் தடை செய்யப்பட்ட வேளையில் தோழர் கபூர் புலிகள் இயக்கத்தால் கடத்திச் செல்லப்பட்டார்

கபூரைத் தேடி புலிகளின் முகாம்களெல்லாம் சென்று குடும்பத்தினர் தேடினார்கள். கிட்டுவின் முகாமிற்குச் சென்று கிட்டுவைக் கேட்டபோது கபூர் தங்களிடம் இல்லை என்று கிட்டு கூறிவிட்டார்.

கபூரின் இளைய சகோதரர் ரவீந்திரன் ஹாட்லிக் கல்லூரி விஞ்ஞானபீட உயர்தர வகுப்பு மாணவன். கல்வியில் நல்ல கெட்டிக்காரன். மாணவர் அமைப்பில் இருந்தார். ஈபிஆர்எல்எஃப் அமைப்பிலும் செயற்பாட்டாளராக இருந்தார். உயர்தர வகுப்புப் பரீட்சை முடித்துவிட்டு பரீட்சை முடிவுகளுக்காக ரவீந்திரன் காத்திருந்தார்.

கபூர் குடும்பம் புலிகள் இயக்க உறுப்பினரான் தயா மாஸ்டருக்கு உறவுக்காரர்கள். ரவீந்திரனைக் கொல்ல புலிகள் திட்டமிட்டுள்ளார்கள் எங்காவது தப்பிச் செல்லும்படி என்று ரவீந்திரன் குடும்பத்துக்கு தயா மாஸ்டர் எச்சரித்திருந்தார். மறுநாள் எங்காவது தப்பிச் செல்லலாம் என்று ரவீந்திரன் திட்டமிட்டிருந்த வேளை புலிகள் முந்திக் கொண்டனர். ரவீந்திரன் அவரின் வீட்டில் வைத்தே புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உயர்தர வகுப்பு பரீட்சை முடிவுகள் சில நாட்களில் வந்தபோது ரவீந்திரன் நான்கு பாடங்களிலும் அதி விசேட சித்தி பெற்று பேராதனைப் பல்கலைக்கழத்தில் மருத்துவ பீட மாணவனாக தெரிவு செய்யபட்டிருந்தார். ஆனால் ரவீந்திரனின் உயிரைப் புலிகள் காவு கொண்டு விட்டனர்

 

அன்னகாவடி தூக்கும் ----------அர்ப்பணம் 

இவற்றை ஒதிக்கி விட்டு நாம் ஒரு அடியேனும் நகரமுடியாது உறவுகளே .

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளெல்ல்லம் தமிழில் எழுதவே வெட்கப்பட வேண்டும்....பொதுமக்கள் இறந்ததையே ஒத்துக்கொள்ளாமல் சிங்களவனுக்கு துதிபாடும் கூட்டம்....கபோர்கதை ரணில் சொல்லிக்கொடுத்தவர் போலை..என்ன மானம்கெட்ட பிழைப்பு.....

  • கருத்துக்கள உறவுகள்

எனது உறவினர் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டு யாழ்ப்பாணத்திலிருந்து செல்லும் போது வ்வுனியாவில் கைது செய்யப்பட்டு காணாமல் போனார். 

பல வருடங்களில் பின்னர் தெரியவந்தது, விடுதலைப் புலிகளின் முக்கியமான ஒருவரின் முக ஒற்றுமையை  கொண்டிருந்தமையால் கைதாகி விசாரணையில் அடித்தே கொன்றார்கள் புளொட்.

இன்னொரு உறவினர் 96இல் வேப்பங்குளம் இடைத்தங்கல் முகாமில் வைத்துக் காணாமல் போய் லக்கி முகாமில் உயிரை விட்டார்.

இன்னொருவர் 97இல் ஜெயசிக்குறு நேரம் கைதாகி ஜெயக்கொடி மூலம் 10 இலட்சத்துக்கு விடுதலையானார் ஒரு கால் முடமாக. 

இப்படி பல உள்ளன இவைகள் அனைத்தும்

சித்தருக்கு அன்னக்காவடி தூக்கும் -----------  அர்ப்பணம்.

 

 

 

 

நீதிக்கான தமது போராட்டத்தில் இழப்புகளை ஈடு செய்ய கெளரவமான அரசியல் தீர்வு நோக்கிய தாகத்துடன் தமிழ் மக்கள் இருக்க,

தனது இனத்தை சேர்ந்த சிறிலங்கா அரசாங்கம் செய்த மிருகதனமான அக்கிரமங்களை மறைப்பதற்கு ஸ்ரீலங்கா பிரதமர் முயற்சி செய்யகிறார்.

உலகில் எந்த அக்கிரமக்காரன் எந்த அக்கிரமத்தை செய்தாலும் பரவாயில்லை தனது எதிரியான புலிகள் மீது மட்டும் காழ்புணர்ச்சியை கொட்டுவோம் என்று செயற்படும்  சில கேடுகெட்ட ஆசாமிகளும் தம் பங்கிற்கு தமது கீழ்தரமான காழ்புணர்ச்சியை கொட்டிகொண்டேயுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

சிலரின் மனோநிலையை நினைத்து .....
தமிழர்கள் என்ற அடிப்படையில் சிலர் இங்கு கோபடுகிறார்கள்.

அநியாத்திட்கு இப்பிடி பேசுகிறார்களே என்று ... மனம் குமுறுகிறார்கள். 
தமிழ் மக்களுக்கு சிங்கள பேரினவாதிகளிடம்  நீதி வேண்டி நடக்கும் வழக்கில்.
என்னை நானே அடித்தேன் சில தடவைகளில் என்ற வாதம் .....
ஒரு பைத்தியகாரதனம் என்று எண்ணுகிறார்கள். 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ...
ஜோன் எப் கென்னெடியின் குற்றவாளியின் ஆதாரங்களை கொடுப்பது 
ஒருவித மன நோய் என்று எண்ணுகிறார்கள்.
சிங்களவரிடம் நீங்கள் இவளவு கொலையையும் செய்தீர்கள் இதற்கு நீதி வேண்டும் 
என்று கேட்கும்போது .....
புலிகள் இத்தனை செய்தார்கள் என்ற ஆதாரம் ஒரு மண்டை எய்த்துபோனவர்களின் 
வாதம் போலவே மேலோட்டமாக இருக்கும். 

ஒன்றை இங்கு எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.
30 வருட போராட்டத்தை சிலர் 30 நிமிட கட்டுரை புத்தகத்தில் எழுதி 
தம்மை சுயவிளம்பரம் செய்வது போல இது வருமானம் சார்ந்தது அல்ல.
அப்போ உங்களிடம் ஒரு கேள்வி வரலாம் ....
அவர்களாவது வருமானத்திற்கு எழுதுகிறார்கள் என்று .....???
ஆம்! இந்த கேள்வி மேலோட்டமானது என்றாலும்.
சைகாலோஜி ரீதியாக மிகவும் ஆழமான ஒன்று.

ஒரு பயனும் அர்த்தமும் இன்றி ஒன்றை ஒரு மனிதன் திரும்ப திரும்ப செய்தால் .....
அது சைகொலஜி ரீதியாகவே அணுக படவேண்டும். 
இப்போது அதை செய்யாதே என்று அவனை குறுக்கீடு செய்தால் ......?
ஏற்கனவே எந்த பயனும் இன்றி செய்துகொண்டிருப்பவனுக்கு 
இப்போது உங்களை எதிர்த்து செய்யும் ஒரு மனோ படலம் உருவாகி விடும்.
அதனால்தான் பிடியாற்றிக்ஸ் (சிறுவர் மருத்துவர்கள்) கள் கூட பிள்ளைகளை தடுக்க கூடாது என்று சொல்வார்கள். 
அவர்களுடன் பேச வேண்டும் என்று சொல்வார்கள்.
சிறுவர்கள் தெரியானமாக செய்பவர்கள்.
சைகொலோஜி ரீதியானது அப்படி அல்ல ...... இது இன்னும் கவனம் எடுக்க பட வேண்டியது. 
இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் ...
ஒன்று ஒரு பயிரை எப்படி நன்றாக வளர்ப்பது என்று சிந்திப்பது 
மற்றது ஒரு நோய்வாய் பட்ட பயிரை எப்படி காப்பது என்று சிந்திப்பது. 
அதற்கு நோயின் தாக்கம் அதன் தன்மை முதலில் கண்டறிய படவேண்டும்.
அதை தவிர்த்து நாம் வளர் வளர் என்று தண்ணீரும் பசளையும் போடுவது 
நேர விரயம் மட்டுமே. இதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

இரண்டாவது உலக மகா யுத்தம் நடந்த பூமி நாடு ஒன்றில் நீங்கள் வாழ்ந்து கொண்டு இருந்தால் 
இதை இலகுவாக புரியலாம். 
யுத்தம் நடந்து முடிந்து  இப்போ ... கிட்டதட்ட 75 வருடம் ஆகிறது.
ஆனால் அதன் தாக்கம் இப்போதும் தொடர்கிறது.
உடனடி குண்டு வெடிப்பு  உயிர் இழப்பு இதுதான் முடிந்தது. போரின் தாக்கம் இன்னமும் தொடர்கிறது.
அமெரிக்காவை பொருத்தவரை ..... (இதை சிலர் பகிடியாக எடுக்கலாம்) 
யுத்தத்தில் ஆண்கள் எல்லோரும் கட்டாயமாக ஈடுபடுத்த பட்டார்கள் 
போர் முடிந்து 1948-1949 பகுதியில் எல்லோரும் திரும்பி வருகிறார்கள் ...
இங்கு வேலை இல்லை பஞ்சம் வீடில் அடை படுகிறார்கள்.
பராபாலன் எல்லா வீடிலும் பெண்கள் கர்ப்பம் ஆகிறார்கள் .... பாரிய ஒரு குழந்தை பிறப்பு வீதம் 
நாட்டில் இதுவரை இல்லாத வாறு எகிறுகிறது.
அப்போது பிறந்த குழந்தைகள் எல்லோரும் இப்போது பென்ஷன் எடுக்கிறார்கள்.
ஊதிய தொகை என்பது .... வருமானம் ...செலவீனம் என்பதை சம படுத்தியே 
இருக்கும். இப்போ எமக்கு செலவீனம் திடிரென மேலோங்குகிறது.
அரசு கடன் வாங்கி பென்சன் கொடுக்கும் நிலையை அது தோற்றுவித்து இருக்கிறது. 
இங்கு இது என்றால் ஜப்பானில் ... இன்னமும் பிறக்கும் குழந்தைகள் பலவீனம் அடைந்துதான் 
பிறக்கிறார்கள். எல்லா நாட்டிலும் போரில் ஈடுபட்ட ஆண்கள் பலர் 
மன நோயால் பாதிக்க பட்டு .... ஒரு பின்தங்கிய சுற்றம் உருவாகி இருக்கிறது. 

அசோக மன்னனின் கதை எல்லோருக்கும் தெரியும்.
போரில் எல்லோரும் இறந்து கிடப்பதை பார்த்துவிட்டு மனம் குமுறி 
மனமாற்றம் அடைந்து ஒரு துறவியாகி போய் விடுகிறான். 
புத்தர் ஒரு மரணத்தை பார்த்தவுடன் ..... கேள்விகளால் நிரம்பி 
உடனே அரண்மனையை விட்டு வெளியேறி பதில்களை தேடி தவம் செய்ய  போகிறார்.
இவை எல்லாம் அவர்களுக்குதான் பொருந்தும் .... எல்லோரும் செய்தால் ?
மனித இனமே ஒரு மனநோய் குழுமமாக மாறிவிடும்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் நாம் பெரிய மனிதர் என்று கண்டவர்களின் வாழ்வே 
ஒரு சமூகத்திற்கு உதவாத ஒன்றுதான்.
அது கூட ஒருவகையில் ஒரு வித மனநோய் மன அழுத்தம்தான்.
அதுவே அப்படி இருக்கும்போது .......?
யாழ் களத்தை கொஞ்சம் யோசித்து பாருங்கள் ?
நிலைமை அதுதான் !

ஆம் இது நான் நீங்கள் சரி செய்ய கூடிய ஒன்று அல்ல ....
நிலைமை அந்த தளத்தை தாண்டிவிட்டது.
அதனால் யாரும் சிறுவிடயமாக இதை எண்ணி முயற்சி செய்யாதீர்கள்.
மறு முனையில் நீங்கள் இன்னமும் இதை தூண்டுகிறீர்கள்.
ஆ.... அப்பிடியா ??
என்பது கூட ஒரு தாக்கத்தை உண்டு பண்ணும்.

சின்னவயதில் குரங்கு தொப்பி எடுத்த கதை படித்திருப்ப்பீர்கள்.
அந்த குரங்கை பற்றி கொஞ்சம் யோசித்து பாருங்கள்.
தொப்பி வியாபாரி தனது தொப்பியை எறியும்போது .....
எல்லா குரங்கும் தங்களது தொப்பிகளையும் எறிகிறது.

அப்போ ஏன் குரங்குகள் கடினபட்டு தொப்பியை எடுத்தன ???
இந்த கேள்விக்கான விடையில்தான் ........
சிலரின் வாழ்கையே இருக்கிறது!
இதை கடவுள் நம்பிக்கை உடையவர்கள் ........ இறைவனின் சித்தம் என்று எண்ணலாம்.
கடவுளை நம்பாத என்போன்றவர்கள் சைகொலோஜி ரீதியாக அணுகுகிறோம்.
அதனால் குரங்கின் வளரும் வாழ்வு நிலையை ஆராய்ச்சிக்கு உட்படுத்துகிறோம். 

நன்றி + நன்று மருது

வழமைபோல இன்றைக்கும் ஒன்னுமே புரியல்ல - நன்றி

3 தடவைகள் வாசித்துப் பார்த்தேன். ம்ம்கும் எதுவுமே புரியவில்லை. எனது அறிவில்தான் பிழை இருக்க வேண்டும்.

 

Edited by ஜீவன் சிவா

... அது 84ம் ஆண்டு இறுதிப்பகுதி!

... அப்போது வடமராட்சி புளொட் பொறுப்பாளர் ச**ர் (இன்று கனடாவில் ... உண்மையில் விடுதலையை நேசித்து ஆயுதம் எடுத்தவன் ...), அவனுக்கு கீழிருந்தவன் முருகாணந்தன்   (முள்ளி வெளியில் மோட்டார் குண்டு பரிசோதிக்க வெளிக்கிட்டு, வெடித்த சிதறல்களால் பல வருடங்கள் யாழ் வைத்தியசாலையில் இருந்து .. பின் புளொட் தடை செய்யப்பட்ட பின்பும் ... புலிகள் நன்கு பராமரித்தார்கள் யாழ் வைத்தியசாலையில், ஆனாலும் மாறாத காயங்களால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டவன்! இவனது தம்பி சர்வாணந்தன் ஹாட்லிக்கல்லூரியில் படிக்கும்போது, அதே வகுப்பில் படித்த அவனது சில நண்பர்களுடன் புளொட்டுக்கு இந்தியா புறப்படும் போது மன்னார் கடற்பரப்பில் ... வாடகைக்கு அமர்த்தப்பட்ட நிறை குடி போதையில் இருந்த ஓட்டி, நேராக சிங்கள கடற்படையின் படகு முன்னால் கடலில் வள்ளத்தை விட, சர்வா உட்பட பலர் சுட்டுக்கொல்லப்பட, ஓரிருவர் காயங்களுடன் இறந்தவர்கள் போல் நடித்து, பிணங்களுடன் சிங்கள முகாமிற்கு இழுத்துவரப்பட்டபோது, உயிருடன் இருக்கிறார்கள் என அடையாளம் காணப்பட்டு, பின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிறைகம்பிகளை எண்ணி பின் இந்திய/இலங்கை ஒப்பந்த காலங்களில் விடுதலையானார்கள்!) ... அவனுக்கு கீழ் சிலஆயுத ஆசையில் பின்னும் முன்னும் திரிந்த சில பாடசாலை பாலகர்கள்! ... இவர்களில் ஒருவந்தான் ஆனந்தராஜா! ... ஏழ்மையான குடும்பம், தந்தையார் சிகை அலங்காரம் செய்து குடும்பத்தை ஓட்ட ... இவனோ, ஓர் ஃபக்கி (அக்காலத்தில் இயக்கம் என்று அடையாளம் காட்ட அணியும்) சேட்டையும் போட்டுக்கொண்டு, இவர்களின் பின்!

அக்காலத்தில் ஒபரோய் தேவன் சுட்டுக்கொல்லப்படுகிறான்! உடனடியாக ஒபரோய் தேவனின் ரெலா, புளொட்டினால் கையகப்படுத்தப்படுகிறது. அந்த ரெலாவை புலிகளுக்கு போட்டியாக வள்ர்க்கப்போகினமாம்! ... அப்போ புளொட் ... அது மக்கள் மக்கள் மக்கள் போராட்ட இயக்கமாம்!! ... அந்த ஆனந்தராஜா உட்பட்ட யாழில் பல பகுதிகளில் இழுக்கப்பட்ட தவ்வலுகள் ரெலாவில் இணைக்கப்பட்டு ஓடித்திரிய விடப்படுகிறார்கள்! இத்தவ்வல்களும் யாழெங்கும் ... யாரோ கோட்டையையும், பலாலியையும் , பருத்தித்துறை, வல்வெட்டித்துறையை சுற்றி காவல் காக்க ... எப்பயமுமற்றி ஓடோடு என்று ஓடுகிறார்கள்!

இந்த சீன் ஓடிக்கொண்டிருக்க .. திடீரென யாழெங்கும் புளொட்டிலிருந்து, அன்ரி புளொட் என்ற சந்ததியாரை போட்டதுடன் உடைந்ததொரு இயக்கம் ஓடத்தொடங்க ... இந்த ரேலாவில் திரிந்த சில தவ்வலுகளும் அதில் இணைய ... மேலிடத்துக்கோ ... புலிகளுக்கு எதிராகவே போராட புறப்பட்டவர்கள் ... இந்த தவ்வல்களின் மீது சந்தேகம்!

விளைவு ... ஓடிய தவ்வலுகள் ஒருவரையேனும் விட்டு வைக்கவில்லை! ...

பின்பு கேள்விப்பட்டோம் ... சிலர் சென்றும் பார்த்தார்கள் ... வல்லிபுர கோயிலுக்கு அருகாமையில் உள்ள சவுக்கம் காட்டில் பல எலும்புக்கூடுகள் தெரிகின்றன என்று! .. அங்கு சில பெண்களின் உடைகளும் அன்று கண்டெடுக்கப்பட்டன!

யுத்த நிறுத்த காலத்தில் ... அங்கு சென்றபோது ... தன் தள்ளாத வயதிலும் கெட்டு நொந்து போன குடும்பத்துக்காக .. தன் பழைய சவரக்கத்தியுடன் ... ஊர் வீடுகளை தட்டியபடி ... அந்த ஆனந்தராஜாவின் தந்தை!

... இதைப்போல் எத்தனை கதைகள் வேண்டும்! ... அன்னகாவடியோ ----------அர்ப்பணம் 

Edited by no fire zone

... அது 84ம் ஆண்டு இறுதிப்பகுதி!

... அப்போது வடமராட்சி புளொட் பொறுப்பாளர் ச**ர் (இன்று கனடாவில் ... உண்மையில் விடுதலையை நேசித்து ஆயுதம் எடுத்தவன் ...), அவனுக்கு கீழிந்தவன் முருகாணந்தன்   (முள்ளி வெளியில் மோட்டார் குண்டு பரிசோதிக்க வெளிக்கிட்டு, வெடித்த சிதறல்களால் பல வருடங்கள் யாழ் வைத்தியசாலையில் இருந்து .. பின் புளொட் தடை செய்யப்பட்ட பின்பும் ... புலிகள் நன்கு பராமரித்தார்கள் யாழ் வைத்தியசாலையில், ஆனாலும் மாறாத காயங்களால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டவன்! இவனது தம்பி சர்வாணந்தன் ஹாட்லிக்கல்லூரியில் படிக்கும்போது, அதே வகுப்பில் படித்த அவனது சில நண்பர்களுடன் புளொட்டுக்கு இந்தியா புறப்படும் போது மன்னார் கடற்பரப்பில் ... வாடகைக்கு அமர்த்தப்பட்ட நிறை குடி போதையில் இருந்த ஓட்டி, நேராக சிங்கள கடற்படையின் படகு முன்னால் கடலில் வள்ளத்தை விட, சர்வா உட்பட பலர் சுட்டுக்கொல்லப்பட, ஓரிருவர் காயங்களுடன் இறந்தவர்கள் போல் நடித்து, பிணங்களுடன் சிங்கள முகாமிற்கு இழுத்துவரப்பட்டபோது, உயிருடன் இருக்கிறார்கள் என அடையாளம் காணப்பட்டு, பின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிறைகம்பிகளை எண்ணி பின் இந்திய/இலங்கை ஒப்பந்த காலங்களில் விடுதலையானார்கள்!) ... அவனுக்கு கீழ் சிலஆயுத ஆசையில் பின்னும் முன்னும் திரிந்த சில பாடசாலை பாலகர்கள்! ... இவர்களில் ஒருவந்தான் ஆனந்தராஜா! ... ஏழ்மையான குடும்பம், தந்த சிகை அலங்காரம் செய்து குடும்பத்தை ஓட்ட ... இவனோ, ஓர் ஃபக்கி (அக்காலத்தில் இயக்கம் என்று அடையாளம் காட்ட அணியும்) சேட்டையும் போட்டுக்கொண்டு, இவர்களின் பின்!

அக்காலத்தில் ஒபரோய் தேவன் சுட்டுக்கொல்லப்படுகிறான்! உடனடியாக ஒபரோய் தேவனின் ரெலா, புளொட்டினால் கையகப்படுத்தப்படுகிறது. அந்த ரெலாவை புலிகளுக்கு போட்டியாக வள்ர்க்கப்போகினமாம்! ... அப்போ புளொட் ... அது மக்கள் மக்கள் மக்கள் போராட்ட இயக்கமாம்!! ... அந்த ஆனந்தராஜா உட்பட்ட யாழில் பல பகுதிகளில் இழுக்கப்பட்ட தவ்வலுகள் ரெலாவில் இணைக்கப்பட்டு ஓடித்திரிய விடப்படுகிறார்கள்! இத்தவ்வல்களும் யாழெங்கும் ... யாரோ கோட்டையையும், பலாலியையும் , பருத்தித்துறை, வல்வெட்டித்துறையை சுற்றி காவல் காக்க ... எப்பயமுமற்றி ஓடோடு என்று ஓடுகிறார்கள்!

இந்த சீன் ஓடிக்கொண்டிருக்க .. திடீரென யாழெங்கும் புளொட்டிலிருந்து, அன்ரி புளொட் என்ற சந்ததியாரை போடதுடன் உடைந்ததொரு இயக்கம் ஓடத்தொடங்க ... இந்த ரேலாவில் திரிந்த சில தவ்வலுகளும் அதில் இணைய ... மேலிடத்துக்கோ ... புலிகளுக்கு எதிராகவே போராட புறப்பட்டவர்கள் ... இந்த தவ்வல்களின் மீது சந்தேகம்!

விளைவு ... ஓடிய தவ்வலுகள் ஒருவரையேனும் விட்டு வைக்கவில்லை! ...

பின்பு கேள்விப்பட்டோம் ... சிலர் சென்றும் பார்த்தார்கள் ... வல்லிபுர கோயிலுக்கு அருகாமையில் உள்ள சவுக்கம் காட்டில் பல எலும்புக்கூடுகள் தெரிகின்றன என்று! .. அங்கு சில பெண்களின் உடைகளும் அன்று கண்டெடுக்கப்பட்டன!

யுத்த நிறுத்த காலத்தில் ... அங்கு சென்றபோது ... தன் தள்ளாத வயதிலும் கெட்டு நொந்து போன குடும்பத்துக்காக .. தன் பழைய சவரக்கத்தியுடன் ... ஊர் வீடுகளை தட்டியபடி ... அந்த ஆனந்தராஜாவின் தந்தை!

... இதைப்போல் எத்தனை கதைகள் வேண்டும்! ... அன்னகாவடியோ ----------அர்ப்பணம் 

அப்பாடா இது புரிந்தது ஆனால் தலைப்பிற்கும் பகிர்வுக்கும் என்ன சம்பந்தம். ஏதோ நம்மிலதான் பிழை போல கிடக்குது.

அப்பாடா இது புரிந்தது ஆனால் தலைப்பிற்கும் பகிர்வுக்கும் என்ன சம்பந்தம். ஏதோ நம்மிலதான் பிழை போல கிடக்குது.

அண்ணா ... உதுதான் உங்களுக்கு புரிந்ததா? மேலே எழுதிய சிலரின் கருத்துக்கள் ... தலைப்பிற்கும், பகிர்வுக்கும் ... உங்களுக்கு தெரியவில்லையா/புரியவில்லையா??? ... அனுதாபங்கள்

இங்கு உரையாடப்படுபனவற்றை  அப்படியே சிங்களத்தில் மொழி பெயர்த்து சிங்கள மக்களுக்கும்  வாசிக்க கொடுத்தால் ஒன்று என்ன பத்து முள்ளிவாய்க்கால்களை உருவாக்கினாலும் தமக்கு ஒரு பிரச்சனையும்  வராது என்று சந்தோசப்படுவினம்

 

 

Edited by நிழலி

புலி போட்டதென்றால் .. அது தலைப்போடு இருக்குமாம்!     ஒட்டுக்குழுக்களின் போடுகைகள் ... தலைப்போடு இல்லை! ... எனக்கு புரிகிறது இப்போ!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி + நன்று மருது

வழமைபோல இன்றைக்கும் ஒன்னுமே புரியல்ல - நன்றி

3 தடவைகள் வாசித்துப் பார்த்தேன். ம்ம்கும் எதுவுமே புரியவில்லை. எனது அறிவில்தான் பிழை இருக்க வேண்டும்.

 

ஒரு மனிதன் எனும் முறைமையில் எனக்கும் சில கடமைகள் உண்டு .....

மனித நாகரீகத்தை காக்கவேண்டும் .....
மனித சமூகத்தை ஒட்டியே வாழ வேண்டும் ...
என்னை அடிப்பவர்களை திருப்பி அடிக்க வேண்டும் .....
என்னை சார்ந்த சமூகத்தை அழிவில் கட்டி பாதுகாக்க வேண்டும் ..........

மருது

மனித நாகரீகத்தை காக்கவேண்டும் .....
மனித சமூகத்தை ஒட்டியே வாழ வேண்டும் ...
...
என்னை சார்ந்த சமூகத்தை அழிவில் கட்டி பாதுகாக்க வேண்டும் ..........

 

அண்ணா ... உதுதான் உங்களுக்கு புரிந்ததா? மேலே எழுதிய சிலரின் கருத்துக்கள் ... தலைப்பிற்கும், பகிர்வுக்கும் ... உங்களுக்கு தெரியவில்லையா/புரியவில்லையா??? ... அனுதாபங்கள்

இங்கு பதிவிடப்பட்ட பல கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லைத்தான். ஆனால் தலைப்பிற்கு ஏற்றவாறு பதிவிடுங்களேன் என்பதுதான் எனது ஆதங்கம்.

நிழலி ... நான் திரும்பத்திரும்ப கூறுவது ... அதில் உறுதியாகவும் ..

... எங்கள் கைகளில் அழுக்கு இல்லை என்றில்லை ... நிறைய அழுக்குகள்! சுட்டுக்காட்டப்பட வேண்டியவைகள், கழுவப்பட வேண்டியவையே! ஆனால் ... காலாகாலமாக சகதிக்குள் புரண்டு, படுத்து, உருண்டு விட்டு, எங்களை பார்த்து உங்கள் கைகளில் தான் அழுக்குகள் என்று கூற இவர்கள் யார்? கேட்க/கூற அருகதை உடையவர்களா??? ... இல்லவே இல்லை!

எமது போரட்டத்தில் நடந்தது சிங்களவனுக்கு தெரியாதா என்ன ?

ஒபரே தேவனை சுட்டபோது அத்துலத்முதலி அதை சொல்லியிருந்தார் .எமது தேடப்படும் லிஸ்டில் இருக்கும் முக்கிய நபர் ஒருவர் இன்று அவர்களாலேயே சுடப்பட்டிருகின்றார் இப்படியே தொடர்ந்தால் எமக்கு வேலை இருக்காது என்று .ஆது ஓரளவிற்கு உண்மையாக ஆகியிருக்கு .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.