Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரில் மடிந்த புலிகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டும்! - நாடாளுமன்றத்தில் சுமந்திரன் கோரிக்கை 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போரில் மடிந்த புலிகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டும்! - நாடாளுமன்றத்தில் சுமந்திரன் கோரிக்கை 
[Sunday 2015-11-22 09:00]

போரில் மடிந்த புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு அவர்களது உறவுகள் அஞ்சலி செலுத்துவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், நேற்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்ட விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர், நவம்பர் மாதத்தில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது உலக வழக்கமாக இருந்து வருவதன் அடிப்படையில் போரினாலோ அதன் தாக்கத்தினாலோ உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை யாவருக்கும் உண்டு. வடக்கில் மாவீரர் துயிலும் இல்லங்கள் புல்டோசர் மூலம் அழித்தொழிக்கப்பட்டுள்ளன. இதனால் உறவுகளுக்கு அஞ்சி செலுத்துவதற்குக் கூட அங்குள்ள மக்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது.

நவம்பர் மாதத்திலேயே உயிர்நீத்த வீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதனை முன்னிட்டே பொப்பி மலர் அணியும் வழக்கமும் வந்தது. அந்தவகையில் தான் நானும் பொப்பி மலர் அணிந்து வீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தியிருந்தேன். இதன்மூலம் ஒவ்வொரு போராளி அல்லது வீரரும் நினைவு கூரப்பட வேண்டும். சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்றல்லாது நினைவுகூரல் என்பது சகலருக்கும் சமனானதாக இருக்க வேண்டும்.

நான் ஆழியவளை மற்றும் உடுத்துறை ஆகிய பிரதேசங்களுக்கு சென்றிருந்தேன். அங்கு மாவீரர் துயிலும் இல்லங்கள் புல்டோசர்கள் மூலம் அழிக்கப்பட்டுள்ளன அவ்விடங்கள் தற்போது தென்னந்தோப்புகளாக மாறியுள்ளன. நவம்பர் மாதத்தில் இறந்த ஆத்மாக்கள் நினைவு கூரப்படுகின்ற நிலையில் மேற்படி ஆழியவளை மற்றும் உடுத்துறை பிரதேசங்களில் குறிப்பிட்ட ஒரு பகுதியினருக்கு தமது இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை இல்லாது செய்யப்பட்டுள்ளது.

முன்னைய அரசாங்கத்தினால் அஞ்சலி நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததை நாம் அறிவோம். எம்மைப் பொறுத்தவரையில் நாம் ஆயுதங்களை ஏந்தவில்லை. பிரிவினையையும் கோரவில்லை. மாறாக இறந்துபோன உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு இடமளிக்குமாறே கேட்கின்றோம். யுத்தத்தின் போதும் யுத்த காரணங்களினாலும் மரணித்த உறவுகளுக்கு அவர்களது உறவுகள் அஞ்சலி செலுத்துவதற்கு அரசாங்கம் அனுமதியை வழங்க வேண்டும் என்று கோரிக்கையை விடுக்கிறேன் என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=145371&category=TamilNews&language=tamil

  • Replies 65
  • Views 2.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிங்களவராவது சுமந்திரன் கேட்டதற்கு பதிலளிப்பார்களா அல்லது தட்டிக்கழிக்க போகிறார்களா வழமை போல என பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் மாறிமாறிப் பேசுவார். இது பகிடிக்கு சொல்லுறார் எண்டு சிங்களவன் நினைப்பான். 

றோவான நகர்வு ..

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

ஒரு சிங்களவராவது சுமந்திரன் கேட்டதற்கு பதிலளிப்பார்களா அல்லது தட்டிக்கழிக்க போகிறார்களா வழமை போல என பார்க்கலாம்.

தமிழின உரிமையை, விடுதலையை வேண்டிப் போராடி, போரில் மடிந்த போராளிகளுக்கு அவர்களது உறவுகள் அஞ்சலி செலுத்துவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்றத்தில் வேண்டியிருந்தால்...! அது ஒரு உண்மையான தமிழின உணர்வோடு வேண்டப்பட்ட கோரிக்கை என்பதாக ஏற்றுக்கொள்ள முடியும்!! அரசும் அதுபற்றி ஆலோசிக்க இடமுண்டு!!!

வேண்டுமென்றே புலிகள் என்ற பதம் பாவிக்கப்பட்டுள்ளது. புலிகள் என்ற பெயர் வந்தாலே சிங்களம் அனுமதிக்காது என்பது திருவாளர் சுமந்திரனுக்கு தெரியாதா..?? புலிகள் என்ற பெயரைப் பாவித்தால் தனது வேண்டுகோளை அரசு ஏற்றுக்கொள்ளாது என்பதும், இந்த அரசியல் சாணக்கியனுக்குத் தெரியாத விடயமா என்ன.....???
 
சிங்கனை பாராட்டாமல் இருக்க முடியாது. நோக்கம் என்னவாக இருந்தாலும்.  பாராட்டுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழக்கோரிக்கைகாக போராடிய போராளிகளுக்கு என்று சொல்லவேண்டும் அப்ப தான் மாற்றுகருத்து மாணிக்கங்களும் சப்போர்ட் பண்ணிவினம்.

7 minutes ago, putthan said:

ஈழக்கோரிக்கைகாக போராடிய போராளிகளுக்கு என்று சொல்லவேண்டும் அப்ப தான் மாற்றுகருத்து மாணிக்கங்களும் சப்போர்ட் பண்ணிவினம்.

அதுக்கு தான் வீர மக்கள் தினம் எண்ட ஒண்டு இருக்கே.  

அதுக்கு கூட்டம் போட யாரும் காசு குடுக்கிறாங்கள் இல்லை எண்ட கடுப்பிலை மாவீரர்நாளை கரிச்சு கொட்டுவினம். அதுக்கு சேர்த்த காசுக்கு கணக்கும் கேப்பினம். இதுகே இருக்கிற கொஞ்ச பேருக்கு நேரம் போதும் எனும் போது . ஆதரவு தரவா போகினம்...? 

சும்மா போங்கண்ணை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, காத்து said:

இராணுவம்தான் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடினவ‌ர்கள் என்று சொன்னாலும் நம்ப சனம் இருக்கு:)

  • கருத்துக்கள உறவுகள்

சு மந்தி ரன் கேட்டால் இதற்கு என்ன அர்த்தம் எண்டு சிங்களத்துக்கு தெரியாதா என்ன

திரு. சுமந்திரன் சும்மா அரசியலுக்கு இப்படி பேசியிருந்தாலும் அவரை இந்த இடத்தில் ஆதரிக்கிறேன். 

நல்ல விடயம் .நாட்டுக்காக மரணித்தவர்கள் எவரென்றாலும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தவேண்டும் .

சுமந்திரன் புலிகள் என்று பேசியதற்கு காரணம் மற்ற அமைப்பினருக்கு அஞ்சலி செலுத்த அரசு எப்பவோ அனுமதி அளித்துவிட்டது .

இன்று யாழ்பாணத்தில் நாபாவின் பிறந்த தினம் நடைபெர்ருக்கொண்டு இருக்கின்றது .

12241684_1691709137709895_20699739579852

12241311_1691709171043225_44580868612243

12274189_1691715401042602_82735847491727

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாக மக்களுக்காக போராடி மடிந்தவர்களுக்கு ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களிடமிருந்து அங்கீகாரம் கிடைப்பது.கடினம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இப்படி கேட்டுவிட்டு அடுத்த கிழமையே விடுத்தபுலிகளை பயங்கரவதிகள் என்று இவரின் நாக்கு சொல்லும் . இப்படி கதைப்பது அரசியல் சாணக்கியம் என்பவர்களுக்கு இதுவரை தமிழனுக்கு எண்ணத்தை செய்தவர் ? என்று கேட்டால் பதில் இல்லை. 

ஆனால் சம் சும் இருவராலும் சிங்களவனுக்கு ஏன் சொல்லுவான் இன்று சம்  "நாகதீப பெயரை நயினாதீவு என மாற்றக்கூடாது! வட மாகாண சபையின் தீர்மானம் முட்டாள்தனமானது " என்று காவடி எடுக்கினம் . தமிழனை வித்து பிழைக்கவே இருவரும் அரசியலுக்கு வந்துள்ளது போல் இவர்களின் அரசியல் நகர்வுகள்.

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

உண்மையாக மக்களுக்காக போராடி மடிந்தவர்களுக்கு ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களிடமிருந்து அங்கீகாரம் கிடைப்பது.கடினம்தான்.

அப்ப இதுவரை எவருமே உண்மையாக போராடவில்லையா? உண்மைதான் மக்களைக் காப்பாற்றவெனச் சொல்லி ஏந்தப்பட்ட துப்பாக்கிகள் ஈற்றில் மக்களை நோக்கியே திருப்பப்பட்ட வரலாறு கண்முன்னே இருக்க பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்க முடியாதுதானே!

Edited by வாலி
எழுத்துப் பிழை

3 hours ago, arjun said:

நல்ல விடயம் .நாட்டுக்காக மரணித்தவர்கள் எவரென்றாலும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தவேண்டும் .

சுமந்திரன் புலிகள் என்று பேசியதற்கு காரணம் மற்ற அமைப்பினருக்கு அஞ்சலி செலுத்த அரசு எப்பவோ அனுமதி அளித்துவிட்டது .

இன்று யாழ்பாணத்தில் நாபாவின் பிறந்த தினம் நடைபெர்ருக்கொண்டு இருக்கின்றது .

இந்த நாளில் பத்மநாபா இந்திய படைகளோடு சேர்ந்து ஆடிய வெறியாட்டத்தையும் கொல்லப்பட்ட பொதுமகளையும் பற்றி தங்களை போண்ற நடுநிலையான வீரம்மிக்கவர்கள் கட்டாயம் பேசுவதோடு தங்கட கண்டனத்தையும் பதிவு செய்வார்கள் எண்டு நம்புகிறேன்..

அதையும் படங்களோடு இங்கே இணைப்பீர்கள் எண்றும் நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பசுத்தோல் போர்த்திய புலிகள் - பழமொழி

தமிழ்தோல் போர்த்திய சிங்கங்கள் - புதுமொழி 

49 minutes ago, காத்து said:

இந்த நாளில் பத்மநாபா இந்திய படைகளோடு சேர்ந்து ஆடிய வெறியாட்டத்தையும் கொல்லப்பட்ட பொதுமகளையும் பற்றி தங்களை போண்ற நடுநிலையான வீரம்மிக்கவர்கள் கட்டாயம் பேசுவதோடு தங்கட கண்டனத்தையும் பதிவு செய்வார்கள் எண்டு நம்புகிறேன்..

அதையும் படங்களோடு இங்கே இணைப்பீர்கள் எண்றும் நம்புகிறேன்.

இந்த நாளில் தேசியத்தலைவர் இலங்கைப்  படைகளோடு சேர்ந்து ஆடிய வெறியாட்டத்தையும் கொல்லப்பட்ட பொதுமக்களையும் பற்றி தங்களைப் போன்ற வீரம்மிக்கவர்கள் கட்டாயம் பேசுவதோடு தங்கட கண்டனத்தையும் பதிவு செய்வார்கள் எண்டு நம்புகிறேன்..

அதையும் படங்களோடு இங்கே இணைப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.

55 minutes ago, காத்து said:

இந்த நாளில் பத்மநாபா இந்திய படைகளோடு சேர்ந்து ஆடிய வெறியாட்டத்தையும் கொல்லப்பட்ட பொதுமகளையும் பற்றி தங்களை போண்ற நடுநிலையான வீரம்மிக்கவர்கள் கட்டாயம் பேசுவதோடு தங்கட கண்டனத்தையும் பதிவு செய்வார்கள் எண்டு நம்புகிறேன்..

அதையும் படங்களோடு இங்கே இணைப்பீர்கள் எண்றும் நம்புகிறேன்.

மாவீரர் தினத்திலும் அப்படியே செய்யுங்கோ .பிறகு நாலு ஐந்து மண்டபங்கள் எடுக்கவேண்டிவரும் .

7 minutes ago, ஜீவன் சிவா said:

இந்த நாளில் தேசியத்தலைவர் இலங்கைப்  படைகளோடு சேர்ந்து ஆடிய வெறியாட்டத்தையும் கொல்லப்பட்ட பொதுமக்களையும் பற்றி தங்களைப் போன்ற வீரம்மிக்கவர்கள் கட்டாயம் பேசுவதோடு தங்கட கண்டனத்தையும் பதிவு செய்வார்கள் எண்டு நம்புகிறேன்..

அதையும் படங்களோடு இங்கே இணைப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.

சுள் எண்டு சுட்டு போட்டுது போல கிடக்கு..  கற்பூரம் அண்ணை நீங்கள்...

ஈழத்திலை புலிகளின் மாவீரர்கள் 40 ஆயிரம்.  கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட போராளிகள் 10 ஆயிரத்துக்கும் மேல்..  அப்ப போராளிகள் மாவிரர் குடும்பம் எத்தினை என்பதை நீங்களாக விளங்கி கொள்ளுங்கோ.. 

சிங்கள ஆதிக்கத்துக்கு எதிராக போராடி மடிந்ய்தவர்களா இல்லை இந்தியாவுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் ஒட்டுண்ணியாக இருந்து மடிந்தவர்களா மண்ணுக்காகவும் மக்களுக்காகவும்  சாவடைந்தவை.? 

போர் எண்றால் இழப்புக்கள் இல்லாமை இல்லை எண்றதை தெரியாமல் மக்கள் ஈழத்திலை ஆதரவு கொடுத்தார்கள் எண்றா சொல்ல வாறியள். இல்லை போரிலை யாரும் இறக்காமல் நடப்பது தான்  போர் எண்றா சொல்ல வாரியள்.? 

தமிழர்கள் தரப்பு தமிழர்களுக்கு சரியாகவும் சிங்களவர் சிங்களவர்களுக்கு சரியாகவும் நடந்த போது இடையிலை நீங்கள் கொஞ்சப்பேர்தான் .  எது சரி எண்டு தெரியாமல் குத்தி முறிஞ்சனீங்கள்.. 

தேசியத்தலைவர் மட்டும்தான் எமது மக்களுக்காக ஏதாவது செய்வார் என்ற விவாதத்திலிருந்து வெளியே வாங்கோ. எமது இனத்துக்காகப் போராடப் புறப்பட்ட ஒவ்வொருவரும் தமிழனும் போராளியே. அவர்களை மக்கள் தூக்கி எறியவில்லை - மாறாக தேசியத்தலைவரின் ஆயுதத்தினால் அழிக்கப்பட்டவர்கள். சரி அழித்தவர்களாவது ஏதாவது செய்வார்கள் என்று பார்த்தால் அதுவும் முள்ளிவாய்க்காலில் மக்களை அழித்து முடிந்து போனது.

இப்போது சம்பந்தர் துரோகி, சுமந்திரன் துரோகி. வாய்ச்சவடால் விடுபவர்கள் போராளிகள். எமது மக்கள் இவர்களைத் தேர்ந்தெடுத்த பின்னரும் உங்கள் குரல்கள் மாறவில்லை. மறுபடியும் துரோகிப்பட்டம்.

உங்கள் விருப்பப்படி மறுடியும் தேசியத்தலைவரின் அணி வந்து போராடட்டும் - அதுவரை இவர்கள் துரோகிகளாகவே இருக்கட்டும் உங்கள் பார்வையில். ஆனால் எனது மக்களின் பார்வையில் இவர்கள் என்றும் ஹீரோக்கள்தான்.

தாங்கள் ஆதரவளிப்பவர்களை நினைவுகூர அனுமதி இருக்கு நீங்க ஆதரிப்பவர்களை நினைவுகூர அனுமதி இல்லை. எப்படிதான் இப்படி அசிங்கமா கீழ்த்தரமாய் அதுவும் புனிதமான வாரத்தில் கதைக்கிராங்க்களோ?????????

அதுக்குள்ள தாங்கள் பெரிய அதிகப்பிரசங்கி மாதிரி 

நம்மவர்களை நினைவுகூர அனுமதி எதற்கு?

32 minutes ago, ஜீவன் சிவா said:

இந்த நாளில் தேசியத்தலைவர் இலங்கைப்  படைகளோடு சேர்ந்து ஆடிய வெறியாட்டத்தையும் கொல்லப்பட்ட பொதுமக்களையும் பற்றி தங்களைப் போன்ற வீரம்மிக்கவர்கள் கட்டாயம் பேசுவதோடு தங்கட கண்டனத்தையும் பதிவு செய்வார்கள் எண்டு நம்புகிறேன்..

அதையும் படங்களோடு இங்கே இணைப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.

என்ன இலங்கைப்  படைகள் வெறியாட்டம் ஆடினாரகளா? சொல்லவே இல்லை

நான் புலியின் தீவிர ஆதரவாளன் எண்ட உங்கட கருத்தில் இருந்து நீங்கள் முதலில் வெளியில் வாங்கோ.. 

புலிகள் போராட்டத்தை தங்களின் கைகளுக்குள் தாங்களாகவே எடுத்து கொண்டார்கள். அதை பின்னர் புலிகள் தனித்தே நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டுக்குள்ளும் தள்ளப்பட்டார்கள்.  இது ஒரு துரதிஸ்ரவசமானது. 

இதுக்கு முற்று முழுதாக புலிகள் தான் காரணம் எனும் உங்களின் மோட்டு தனமான வாதங்கள் நீங்கள் மக்களை படிக்கவில்லை எனும் உண்மையைதான் சொல்லி நிக்கிறது.

கையில் ஆயுதங்கள் ஏந்திய பல அமைப்புகளை ( TEA , TELO, EPRLF, PLOT , EROS TELA )  எண்று பல  அமைப்புகள் . புலிகளின் அந்த கால உறுப்பினர் எண்ணிகையும் சரி ஆயுத கையிருப்பும் அந்த ஒட்டு மொத்த இயக்கங்களைவிட புலிகளிடம்  பல மடங்கு குறைவு. ஆனாலும் புலிகளால் அவர்களை ஒடுக்க முடிந்தது...   அப்படியானால் போராட புறப்பட்ட அந்த இயக்கங்களின் ஒற்றுமையும் , செயல்திறனும் இங்கே கேள்வியில் நிக்கிறது.

அதைவிட்டாலும்...  தப்பியோடிய எஞ்சியவர்கள் மீண்டும் வந்தார்கள் இந்திய படைகளோடு... ஆனாலும் புலிகள் எங்கும் ஓடவில்லை..  அவர்களுக்கு ஒட்டி நிக்க இந்திய படையினதோ இலங்கை படையினதோ பாதுகாப்பு தேவையும் படவில்லை.. 

இங்கை தான் எனது கேள்வியே.  அது எப்படி மக்களோடு எப்போதும் நிக்க புலிகளால் மட்டும் முடிந்தது....? 

Edited by காத்து
இலக்கண தவறு

13 minutes ago, காத்து said:

புலிகள் போராட்டத்தை தங்களின் கைகளுக்குள் தாங்களாகவே எடுத்து கொண்டார்கள். அதை பின்னர் புலிகள் தனித்தே நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டுக்குள்ளும் தள்ளப்பட்டார்கள்.

இப்போதுதான் யாருமே இல்லையே. மக்கள் சம், சும்மைத் தேர்ந்துள்ளார்கள். அவர்களை விடுங்களேன் ஏதாவது எமது மக்களுக்காக செய்ய. மறுபடியும் ஏன் மக்களின் பிரதிநிதிகளுக்கு எதிரான இந்த கூக்குரல்கள். இவர்கள் ஆயுதமுனையில் தாம்தான் ஏகப்பிரதிநிதிகள் என்று மற்றவர்களை அழித்தபின் கூறவில்லை. மக்கள் விருப்பம் இவர்கள்தான், இவ்வழிதான் எமது மக்களின் பிரச்சனைக்கு தீர்வைக் கொண்டு வரும்.

Edited by ஜீவன் சிவா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.