Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் பார்த்த யாழ்பாணம் -2

Featured Replies

குப்பைகளை தெருவோரம் எறிந்துவிட்டுபோவது, அதிலும் இப்போ குப்பை கட்டி எறிவதற்கு வசதியாக பிளாஸ்டிக் பைகள் தாரளமாக கிடைகின்றது......சாப்பாடு கட்டுவதிலிருந்து..(சொதி,சம்பல்..)...ஷாப்பிங் வரை எல்லாமே பிளாஸ்டிக் பைதான்...பல இடங்களில் குப்பைகளை கட்டி தண்ணீர் ஓடும் கானிட்குள் (Canal: இதை சுருக்கமாக “கான்” இப்படிதான் யாழ்ப்பாணத்தவர் கூறுவர்) எறிந்துவிட்டிருந்தார்கள், சில காலியாக இருக்கும் வளவுக்கு முன் குவிந்து கிடந்தது......காலியாக வளவு இருந்தால் (வளவின் சொந்தகாரர் வெளிநாட்டில் இருந்தால் பக்கதுவீட்டுகாரர்கள் அந்தவளவை குப்பைபோடும் இடமாக மாற்றிவிடுவார்கள் (இது என் சொந்த அனுபவமும் கூட).....
 
மாநகரசபை குப்பைகளை வெளியில் வைக்குமாறும்....பின் அவைகளை எடுத்துச்செல்லுவதாக கூறியும்.....தம்மால் அப்படி ஒருநாள் தன்னும் விட்டு வைக்க முடியாமலுள்ளது.....நாய், பூனை, காகங்கள் அவற்றை கிளறி மேலும் அசிங்கம் பண்ணிவிடும்....ஆகவே தாமே குப்பைகளை சேர்த்துவைத்து பின் வாகனம் பிடித்து கொண்டுபோய் கொட்டுவதாக கூறினார் ஒரு நண்பி......சிலர் உடனுக்குடன் எரித்து விடுகிறார்கள்.....சிலர் கிடங்கு வெட்டி தாக்கிறார்கள்.....பிளாஸ்டிக்கை வெட்டி தாட்டலும் “டெர்மினேட்டர் படத்தில் அர்னோல்ட்டை அழிக்க அழிக்க மீண்டும்...மீண்டும் எழுந்து வந்துகொண்டே இருப்பார் அது மாதிரி....பிளாஸ்டிக் அழியாது....அதேநேரம் இந்த பிளாஸ்டிக் பைகள் எரிந்து அதனால் வரும் புகையும்... யாழ்பாணத்தில் புற்றுநோயின் வீதம் அதிகரிப்பிற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
 
மேலும்.... ஒரு மழைநாளில் யாழ்பாண டவுனிட்குள் சென்றபோது ஒரு சிறிய கானிட்கு பக்கத்தால் நடக்கவேண்டி வந்துவிட்டது.....கானிட்குள் பிளாஸ்டிக் பைகள் நிறைந்து கால்வாய் அடைபட்டு பலூன்களை ஊதி வைத்தமாதிரி.... கழிவுத்தண்ணீர் ஓடவழியில்லாமல் வெளியே வந்து ஒரே கறுப்பாகவும், யாரோ சத்தி எடுத்தமாதிரியும் இருந்தது.....அதை கண்டவுடன் எனக்கும் சத்தி வரும்போல் இருந்தது......ஐயோ இதை இப்படியே மறந்துவிடவேண்டும்.....சாப்பிடும் போது நினைக்கக்கூடாது என எண்ணியபடியே துப்பிக்கொண்டே நடந்தேன். சின்ன கான், பெரிய கான் என்றில்லாமல் சரமாரியாக எங்கும் குப்பை கொட்டப்பட்டிருக்கிறது.
சில இடங்களில் மாடுகள் கூட குப்பை பிளாஸ்டிக் பைகளை நோண்டிக்கொன்டிருந்தன.....
இதைவிட பலவித எறும்புகள் (கடி எறும்பு (நல்ல பிரவுன் கலரில் இருக்கும் மிகவும் சிறியது), இது எங்களுடைய வளவுக்குள் போய் நின்றால் இருக்க நிக்கவிடாது கடித்துத் தள்ளிவிடும்... பெரிய கருப்பு கொள்ளி எறும்பு (அது ஒருமாதிரி தன் பின்பக்கத்தை தூக்கிக்கொண்டு நடக்கும் (இவை என்னுடன் வேலைசெய்த சில கருப்பு இனபெண்களை ஞாபகபடுத்தியது), சின்ன கறுப்புகொள்ளி எறும்பு...இவை இப்போ கடிப்பதை விடுத்து வீடுகளில் புத்தெடுத்து உளுத்திக்கொண்டிருகின்றன , நுள்ளான் (சீனி வாங்கி வைத்தவுடன் எப்படியோ வந்துசேர்ந்துவிடும்.... மேலும் அட்டைகள் (சிவப்பட்டை, சரக்கட்டை, பேனை அட்டை), பூரான், மட்டத்தேள், கொடுக்கன், பாம்பு.... இப்படி தாராளமாகப் பெருகிவிட்டன.....காரணம் மக்களின் இடம்பெயர்வும், நீண்ட காலம் கவனிப்பாரற்று கிடக்கும் காணிகள், வீடுகள்.
 
.....ஒருதடவை நானும் நண்பியும் வீட்டின் போர்டிகோவில் இருந்து கதையளந்து கொண்டிருக்குபோது நண்பியின் காலில் சிவப்பு அட்டை ஒன்று ஏறிவிட்டது....நான் போட்ட கூப்பாட்டில் அவருக்கு கோபம் வந்துவிட்டது....தான் எதோ இலையான் என்று நினைத்துவிட்டாராம்..(நான் எப்பவுமே அலேர்ட்) வெயில் கூட இம்முறை அதி உச்சமாக எறித்ததாக கூறினார்கள்......இப்போ மழையும் கூட முன்னொரு போதுமில்லாத அளவுக்கு கொட்டிதள்ளுகிறது என் அறிந்தேன்....நல்லகாலம் நான் தப்பிவிட்டேன்.
 
தொடரும் ........
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடக்கின் வசந்தம் வரும்போது குதுகாலித்தவர்கள் ........ வசந்தம் வந்த பின் குதுகாலிக்கவில்லை. :cool:

  • கருத்துக்கள உறவுகள்

எமது மக்களுக்கு சுகாதாரம் பற்றியும் இனி கவுன்சிலிங் செய்யவேண்டும். அத்தனை அசுத்தம் என்று என் கணவரும் கூறினார்.

வாசிக்கக் கவலையாக இருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நடக்கும் அரசியல் விவாதங்களை மாதிரி இப்படியான பிரச்சனைகளுக்கும் எப்படி தீர்வு கானலாம் என்று விவாதிக்கலாம்.இங்கு விவாதித்து அங்கு என்ன நடக்கப்போகுது என்று நினைத்தால் அரசியலும் அப்படியே.

  • கருத்துக்கள உறவுகள்

காலம்,காலமாய் யாழ்ப்பாணத்தில் அட்டைகள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. என்னவோ இப்பத் தான் அட்டைகளை கண்ட மாதிரி எழுதி இருப்பது சிரிப்பாய் இருக்குது

யாழ்பாணத்தின் மிக முக்கியமான தீர்க்கபடவேண்டிய பிரச்சனையை அலசியிருக்கிறீர்கள். நன்றி அர்ஜீன். சுற்றாடலை சுத்தமாக வைத்திருப்பதற்கான விழிப்புணர்வு எமது மக்களிடம் இல்லை என்பது கவலைக்குரிய விடயம். நவீன  ஸமாட்ர் போன் வரை அத்தனை மேற்குலகின் தொழில் நுட்பத்தையும்  விரைவாக பெற்று கொள்வதில் ஆர்வம் காட்டும் எமது மக்கள் சுற்றாடல் சுகாதாரத்த்தை பாதுகாக்கும் விடயத்தில்  மேற்குலகை ஏறெடுத்து பார்க்கவும் விரும்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நாம் வெளிநாடு வந்தபடியால் இதெல்லாம் அரியண்டமாகவும் ,அறுவறுப்பாகவும் உள்ளது அங்கு வாழ்ந்திருந்தால் நாமும் இதே மாதிரி வாழ்ந்திருப்போம்.....புலம்பெய‌ர்ந்த நாம் அவ‌ர்களுக்கு சுகாதார பாடம் எடுப்பது அவ்வளவு அழகில்லை.... :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

இன்று நாம் வெளிநாடு வந்தபடியால் இதெல்லாம் அரியண்டமாகவும் ,அறுவறுப்பாகவும் உள்ளது அங்கு வாழ்ந்திருந்தால் நாமும் இதே மாதிரி வாழ்ந்திருப்போம்.....புலம்பெய‌ர்ந்த நாம் அவ‌ர்களுக்கு சுகாதார பாடம் எடுப்பது அவ்வளவு அழகில்லை.... :unsure:

அடிப்படைச் சுகாதாரம் என்பது வாழும் இடத்தைப் பொறுத்துத் தீர்மானிக்கப் படுவதில்லை. இந்தப் பதிவிலும் முதல் பதிவிலும் குறிப்பிடப் பட்டிருக்கும் விடயங்கள் மனிதனுக்கு வரும் நோய்களோடு தொடர்பானவை! நோய்த்தடுப்புக்காக இவை பற்றிப் பாடம் எடுப்பது எப்படி அழகில்லாமல் போகும்? என்னைப் பொறுத்தவரை புலம் பெயர்ந்தோர் இது போன்ற விடயங்களில் தான் செல்வாக்குச் செலுத்த வேண்டுமேயொழிய தாயகத்தின் கிராம சபை, நகர சபை, மாகாண சபை அரசியலில் அல்ல!

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எழுதப்பட்டிருந்த ஒரு கருத்தை முற்றாக ஒரு அன்பர் வெட்டி எறிஞ்சிட்டார்.

இப்ப அவரிடம் ஒரு கேள்வி..

12342277_10153234106037944_3410361049113

இது லண்டனில் ஒர் ஆலய திருவிழாவில் எடுத்த படம். இந்த வாடகை மைதானத்தில் கூடியது எம்மவர்கள். குப்பையை போட தொட்டிகள் வைக்கப்பட்டும்.. மைதானம் முழுவதும் இப்படி குப்பை. இந்தக் குப்பையை அகற்ற கவுன்சிலுக்கு கூடிய பணமும் செலுத்தப்பட வேண்டிய கட்டாயம்.

இதே ஊரில்.. மாநகர சபையிடம் மட்டுப்படுத்திய வசதி. அவர்களால்... அதிக நிதியும் செலவிட முடியா நிலை.

ஊரில் உள்ள மக்களுக்கு இங்கு போதனை செய்பவர்கள்.. லண்டனில்.. வசதியான மேற்கு நாடுகளில்.. இவ்வளவு அறிவுத்தல்களின் கீழும் ஒழுங்காக வாழத் தெரியாத.. எம்மவர்களுக்கு என்ன ஆலோசனை வழங்கப் போகிறீர்கள்...??!

இது நாங்க லண்டனில் கண்டது. எம்மவர்களின் குப்பைத்தனம். அதுவும் சுவாமி கும்பிட வரும் இடத்தில்................

இதை மேற்குறிப்பிட்ட தற்புகழ்பாடும் ஆக்கத்தை எழுதியவர் உட்பட அனைவரும் பார்க்கனும். ஊர் வெப்ப வலயம். அங்க அட்டை.. பூரான்.. இளையான் இருக்கும். ஆனால்.. குளிர்நாடுகளில் எம்மவர் வீடுகளுக்கு ஒரு சமருக்குப் போய் பாருங்கள். இவை அனைத்தும் இங்கும் அவர்களிடம் எப்படி..???!

நாங்க மொத்தமா திருந்தினால் அன்றி ஊரில உள்ளவன் குப்பை.. நாங்க இஞ்ச வெளிநாட்டில திறம் என்ற படம் காட்டல் எல்லாம்.. சுயபுகழ்ச்சி.. தற்புகழ்ச்சி.. மட்டுமே. சமூகச்சிந்தனை அல்ல..!

இது.. மீள்பதிவாக களவிதி மீறியல்ல. ஆதாரப்பதிவாகிறது. இதனை வெட்டினால்.. தனிமடலில் வெட்டியதற்கு விளக்கம் தரவும். :rolleyes:

(எங்களால்  மேற்படி இடத்தில் மேற்கொள்ளபட்ட ஒளிப்பதிவில் இருந்து பெற்ற படம்.)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 29.11.2015, 10:28:22, சுவைப்பிரியன் said:

இங்கு நடக்கும் அரசியல் விவாதங்களை மாதிரி இப்படியான பிரச்சனைகளுக்கும் எப்படி தீர்வு கானலாம் என்று விவாதிக்கலாம்.இங்கு விவாதித்து அங்கு என்ன நடக்கப்போகுது என்று நினைத்தால் அரசியலும் அப்படியே.

அரசியலும் இறுக்குப்பிடியான அரசியல் சட்டங்களும் தான் ஒரு நாட்டை / மக்களை சீரமைக்க முடியும். மக்களால் அரசை சீரமைக்க முடியாது. புலம்பெயர் தேசங்களில் பிறந்து வளர்ந்த எம்மவர் பிள்ளைகள் கூடுதலாக இவ்விடயங்களில் அவதானத்துடனும் கட்டுக்கோப்புடனுமே வாழ்கின்றனர்.

இந்திய,இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் அரசியல்வாதிகளை கழுவி வடித்தெடுக்க வேண்டும். மக்கள் நலம் பெறுவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.