Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை - அன்றும் இன்றும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

சென்னையின் நுழைவாயில் சைதாப்பேட்டையின் "மறைமலை அடிகள் பாலம்"

இன்றைய (02-12-2015) மழை வெள்ளத்தால் மூழ்கும் அபாயம்! bouh.gif

 

மூன்று வருடத்திற்கு முன் இப்பாலம்.. dubitatif.gif

 

 

இன்று இப்பாலம்.. vil-triste2.gif

 

Edited by ராசவன்னியன்

வன்னியன் சார்,

சாக்கடையாக மாறியிருந்த கூவம் (நதி?)  இந்த வெள்ளத்தினால் மீண்டும் ஆறாக மாறிவிட்டது என்றும் துர்நாற்றம் அகன்று விட்டது என்றும் கேள்விப் பட்டேன். உண்மையா ? படங்கள் ஒளிக்காட்சிகள் ஏதும் இருக்கா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

_jpg-large%20dfg_zpsjo6ccyzc.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

வன்னியன் சார்,சாக்கடையாக மாறியிருந்த கூவம் (நதி?)  இந்த வெள்ளத்தினால் மீண்டும் ஆறாக மாறிவிட்டது என்றும் துர்நாற்றம் அகன்று விட்டது என்றும் கேள்விப் பட்டேன். உண்மையா ? படங்கள் ஒளிக்காட்சிகள் ஏதும் இருக்கா?

அரக்கோணத்திற்கும், திருவள்ளூரும் இடையே உற்பத்தியாகும் இந்த கூவம் நதி, பூந்தமல்லி அருகே வந்ததும், புறநகர் மற்றும் சென்னைவாசிகளால் சட்டவிரோதமாக அதன் கரையோரங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, அகலம் குறுகியதோடுமட்டுமில்லாமல், தொழிற்சாலை கழிவுகள், சாக்கடைகளை கலப்பதால், நதியானது ஓடையாகி. தூர் படிந்து கடலில் கலக்காமல் தண்ணீர் நிலையாகிவிட்டதால், நகரெங்கும் ஒரே துர்நாற்றமே எஞ்சியுள்ளது..

மற்றொரு நதியான அடையாறு நதி, செம்பரம்பாக்கம் குடிநீர் ஏரி வரை நதியாகவிருந்து, ஏரிக்கப்புறம் உபரிநீர் திறக்கும் வரை இதே சென்னைவாசிகளால் ஆக்கிரமிப்பிற்கும், கழிவுகளை கொட்டவுமே இவைகளை பயன்படுத்துகின்றனர். இவ்விரு நதிகளையும் தூர்வாறி, மாசு நீக்க போட்ட திட்டங்கள், ஊழலால் சுருட்டப்பட்டு அரைகுறையாக நின்றுவிட்டது..

இதுபற்றிய விரிவான அறிக்கைகளும் காணொளிகள் மற்றும் படங்களை தேடி விரைவில் இணைக்கின்றேன்.

சென்னையின் நீர் வளங்களை ஆக்கிரமித்ததை பொறுக்காமல், வருண பகவான் இப்பொழுதாவது கண் திறந்துள்ளாரே என்றுதான் சொல்லவேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்தால் என்ன புலம்பெயராவிட்டால் என்ன ஈழத்தமிழங்க சுத்தச் சுயநலவாதிங்க. அதனாலும் தான் அவங்க அழிவை உலகம் வேடிக்கை பார்த்தது. அவங்கள் அடிமைப்படுவதை உலகம் ரசித்தது. தாய் தமிழகம் இன்று வெள்ளத்தில் மிதக்கிறது. சுப்பிரமணியம் சுவாமி போன்றதுகள் தமிழனைப் பழிவாங்கும் அதே எண்ணத்தோடு.. வெள்ள நிவாரணம் வழங்கக்கூடாது என்றாங்க. இந்த நிர்க்கதியான வேளையில் சக தமிழன் வெள்ளத்தில் மிதக்க ஈழத்தமிழர்கள் அவர்களுக்காக துடிப்பதை காணமுடியவில்லை. தமிழகத்துக்கு வேண்டிய உதவிகளில்.. நிவாரணத்தில் ஒரு சிறிய அளவை ஏனும் ஏன் ஈழத்தமிழர்கள் அளிக்கக் கூடாது. கஸ்டம் வரும் போது தமிழகம் ஓடி வரணும் என்று எதிர்பார்க்கும்.. ஈழத்தமிழங்க.. சிந்தியுங்க. !!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய செய்தி.. enpleurs07.gif

அடையாறு ஆற்றின் மேல் இரண்டாவது ஓடுதளம் கொண்ட சென்னை விமான் நிலையம், கடும் வெள்ளத்தால் சூழ்ந்திருப்பதால், டிசம்பர் 6ந் திகதி வரை மூடப்படுகிறது..

 

chennai-airport_2642807f.jpg

Chennai-Airport-Twitter1.jpg

Chennai-Airport-Twitter.jpg

chennaiairport-650_635846824654790029.jp

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ள அவலங்கள் உலகின் சகல நாடுகளிலும் இருப்பதுதான். அந்த அவலங்களை வைத்து அவர்கள் அரசியல் லாபம் தேடுவதில்லை.

ஆனால் இன்றைய தமிழ்நாட்டு அரசியல் கூத்துக்களை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கின்றது.


சென்னை மக்களின் வாழ்க்கை சீக்கிரம் வழமையான இயல்பு நிலைக்கு திரும்ப எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

 

vil-up2.gif  நன்று!

துயரத்தில் வந்த மலை போன்ற இக்கோபம், தேர்தல் காலத்தில் கிட்டும் இலவசங்களைக் கண்டு கரையாமல் இருக்குமா?

இதே சனங்கள்தான், அரசியல்வியாதிகளுக்கு எளிதில் அதிகம் விலைபோக ஏதுவானவர்கள்!

2 hours ago, nedukkalapoovan said:

புலம்பெயர்ந்தால் என்ன புலம்பெயராவிட்டால் என்ன ஈழத்தமிழங்க சுத்தச் சுயநலவாதிங்க. அதனாலும் தான் அவங்க அழிவை உலகம் வேடிக்கை பார்த்தது. அவங்கள் அடிமைப்படுவதை உலகம் ரசித்தது. தாய் தமிழகம் இன்று வெள்ளத்தில் மிதக்கிறது. சுப்பிரமணியம் சுவாமி போன்றதுகள் தமிழனைப் பழிவாங்கும் அதே எண்ணத்தோடு.. வெள்ள நிவாரணம் வழங்கக்கூடாது என்றாங்க. இந்த நிர்க்கதியான வேளையில் சக தமிழன் வெள்ளத்தில் மிதக்க ஈழத்தமிழர்கள் அவர்களுக்காக துடிப்பதை காணமுடியவில்லை. தமிழகத்துக்கு வேண்டிய உதவிகளில்.. நிவாரணத்தில் ஒரு சிறிய அளவை ஏனும் ஏன் ஈழத்தமிழர்கள் அளிக்கக் கூடாது. கஸ்டம் வரும் போது தமிழகம் ஓடி வரணும் என்று எதிர்பார்க்கும்.. ஈழத்தமிழங்க.. சிந்தியுங்க. !!!

 

36 minutes ago, குமாரசாமி said:

வெள்ள அவலங்கள் உலகின் சகல நாடுகளிலும் இருப்பதுதான். அந்த அவலங்களை வைத்து அவர்கள் அரசியல் லாபம் தேடுவதில்லை.

ஆனால் இன்றைய தமிழ்நாட்டு அரசியல் கூத்துக்களை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கின்றது.

சென்னை மக்களின் வாழ்க்கை சீக்கிரம் வழமையான இயல்பு நிலைக்கு திரும்ப எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகின்றேன்.

நல்ல கருத்து..

பச்சை முடிஞ்சுது...     congratulation.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

vil-soap.gifமழை வெள்ளத்திற்கு முன் கூவம் முகத்தை பார்ப்போமா?

கூவம் நதியோரம் ராமன் நடந்தான்..
கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்..
மெல்ல நடந்தாள்.. !

சென்னை மட்டும் இன்னமும் ஆங்கிலேயர் பிடியிலிருந்தால் தமிழ்சினிமா கவி இப்படியும் பாடியிருக்கலாம்.. :rolleyes:

சென்னைக்கு 'பக்கிங்காம் கால்வாய்' அமைத்து படகு போக்குவரத்து நடாத்தியவர்கள் அவர்கள்!

 

Cooum.jpg

திருவள்ளூர் அருகே பற்றைகளால் சூழப்பட்ட கூவம் நதி

 

2hwguia.jpg

1905ல் சென்னையில் கூவம் நதி

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு குடிசைகளிலும்,வீதிகளிலும் வசிக்கும் வறுமைக் கோட்டுக்குள்ள மக்களை நினைக்கத் தான் பரிதாபமாய் இருக்குது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மழை நல்லது !!

மெகா சீரியல்களில் மூழ்கி கிடந்த பெண்மணிகள், முதல் முதலாய் "சென்னையை சுற்றி செம்பரம்பாக்கம், பூண்டி போன்ற நீர்தேக்கங்கள் உள்ளன" என்று தெரிந்துகொள்வார்கள்!

"தலையா? தளபதியா ?? தோணியா? சானியா ??" என்று வெத்து பேச்சு பேசிக் கொண்டிருந்த இளைஞர்கள், முதல் முதலாய் "ஏன் இந்த வெள்ளம்..?" என்று யோசிப்பார்கள்!!

"எம்எம்டிஏ" என்றால் என்ன ? "டவுன் பளானிங்" என்றால் என்ன ? 'ஆக்கிரமிப்பு' என்றால் என்ன ? என புரிந்துக் கொள்வார்கள்!!!

"எங்க ஏரியாவில் ப்ளாட்டு விலை சதுரடிக்கு ஏழாயிரம், எட்டாயிரம்" எனப் பெருமை பேசிக் கொண்டிருந்த நடுத்தர வயதினர் எல்லாம் "நீர் மேலான்மை" என்றால் என்ன? என அறிவார்கள். !!!!

இயற்கையை நீங்கள் அலட்சியப்படுத்தினால், இயற்கை உங்களை அழிக்கும். இயற்கையை அழிப்பவர்களை எதிர்த்து ஒரு மிகப்பெரும் விழிப்புணர்வு அவசியப்படுகிறது. நீர் மேலான்மை குறித்து மிகப்பெரும் புரட்சி அவசியப்படுகிறது. அதற்கு இந்த மழை மிக மிக அவசியமாகிறது.

ஆகையால் "மழை நல்லது"

- a whatsup message quote from social network.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னைவாசிகள், 'கூவம் நதிக்கரையை எப்படி ஆக்கிரமித்துள்ளார்கள், நதியில் எப்படியில் கழிவைக் கொட்டுகிறார்கள்,' என்பதற்கு சில சான்றுகள் இப்படங்கள் !

 

Arumbakkam%252520Bridge%25252C%252520Jaw

Venkatachalapathy%252520Street%25252C%25

Venkatachalapathy%252520Street%25252C%25

West%252520Cooam%252520Road%252520and%25

Janakiraman%252520colony%25252C%252520Po

Janakiraman%252520colony%25252C%252520Po

West%252520Cooam%252520Road%252520and%25

Muthu%252520Mariyamman%252520Koil%252520

Brewary%252520Road%25252C%252520Shenoy%2

Dr.%252520Radhakrishnan%252520Nagar%2525

Bharathupuram%252520Lane%25252C%252520Br

Brewary%252520Road%25252C%252520Shenoy%2

Janakiraman%252520colony%25252C%252520Po

Janakiraman%252520colony%25252C%252520Po

Janakiraman%252520colony%25252C%252520Po

Janakiraman%252520colony%25252C%252520Po

Link%252520Road%25252C%252520Egmore%2525

Janakiraman%252520colony%25252C%252520Po

 

- நன்றி: சுபாஷ் காந்தி.

சென்னையில் பணிபுரியும்போது கூவம் ஆற்றை பலமுறை கடந்து சென்றிருக்கிறேன்..திருவள்ளூர் அருகே தமிழ்நாடு பொதுப்பணித்துறை பொறியாளர்களுடன் நதிக்கரையில் உலாவியுமுள்ளேன்.. அப்பகுதியில் நீரவரத்து சிறிதேயாகினும், சென்னையின் அளவிற்கு அந்நதி அங்கே மாசுபடவில்லை.

கூவம் ஆறு பற்றிய சிறு விளக்கக் காணொளி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வந்தது..அதை இங்கே இணைக்கிறேன்..!

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த மழையில், நுங்கம்பாக்கம் அருகே கூவம் நதியில் வெள்ளம்!

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

வருங்காலத்தில் கூவமும், அடையாறும் இப்படி மாற்றம் பெறுமாம்!

 

003.jpg

 

002.jpg

 

சென்னை நதிகள் புனரமைப்பு குழுமத்தின் திட்டப்படி மாசு படிந்த கூவம் மற்றும் அடையாறு நதிகளை மீளமைக்க திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது.. அதன் விபரங்களை இந்த இணையத்தில் காணலாம்!

சென்னை நதிகள் புனரமைப்புக் குழுமம்

On 02/12/2015, 20:26:20, குமாரசாமி said:

_jpg-large%20dfg_zpsjo6ccyzc.jpg

குமாரசாமி அண்ணை கொண்டுட்டீங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணவு பைகளில் 
ஜெ படம் போடுவதற்கு தாமதம் ஆனதால் 
5000 உணவு பொட்டலங்கள் கெட்டுப்போனது.. 
வீணான உணவினை அமைஞ்சகரையில் கொட்டினர்.-செய்தி
..
இதையெல்லாம் மன்னிக்கவே கூடாது..
அங்கே.. ஒருவேளை சோத்துக்கு குழந்தைகள் கையேந்தி நிற்பதை கண்டு மனம் வேகிறது..
சோத்துல என்ன மயிரு அரசியல் வேண்டி கெடக்கு..
இன்னும்  ஐயாயிரம்  கோடி வாங்கி  அதில் அரைவாசிய ஆட்டையை  போட்டு  மிச்சத்திற்கு இந்த  ஊழலியின் படம்  போட்டு  மக்களுக்கு  கிடைக்கிறதுக்குள்ள எல்லாரும் பட்டினி  வந்து  செத்துடுவாங்க.

1. இன்று மழை வெள்ளத்தால் தங்கும் வசதியில்லாத சென்னை வாழ் சகோதர, சகோதரிகள், சத்யம் சினிமா தியேட்டர் (ராயபேட்டை) இரவு முழுக்க திற‌ந்திருக்கும். இன்றிரவு தங்குவதற்கு உபயோகித்துக்கொள்ளுங்கள். தயவு செய்து இதனை உடனடியாக ஷேர் செய்யவும் அதிகமதிகம் ஷேர் செய்யுங்கள்.

SATHYAM CINEMAS (ROYEPETTAH) will be opened for everyone tonight for stay,do get in touch .

2. ஜிஎஸ்டி சாலையில் சிக்கிக்கொண்டிருப்போருக்கு எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் தங்கிக்கொள்ள அந்த நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. உணவும் வழங்கப்படுகிறது. உதவி தேவைப்படுவோர் இந்தத் தொலைபேசிக்குத் தொடர்புகொள்க: திரு ஜொகானி 9840042152.
இதனை உடனடியாக ஷேர் செய்யவும் அதிகமதிகம் ஷேர் செய்யுங்கள்.
SRM University is accommodating ppl in their buildings Whoever standed in GST pls go there
For Food 
Contact Mr.Jogani 9840042152

3. மழையில் பாதிக்கப்பட்டு கைக்கழந்தைகளுடன் அவதிப்படுபவர்கள் (ஏற்கனவே இங்கு சிலர் இருப்பதால்) 10 முதல் 15 நபர்கள் மேலும் தங்கலாம்.
இடம் டி.யூ.ஜே தலைமை அலுவலகம், 12,குமரன் காலனி மெயின் ரோடு, வடபழனி, சென்னை.
மேலும் தகவல் அறிய 044 23621494.

டி.எஸ்.ஆர்.சுபாஷ்.

4. மிக அவசரம்.
சென்னை மாநகரத்தின் தற்போதைய நிலை மிகவும் அச்சுறுத்துகிறது.
யார் காரணம்? எதனால் இப்படி ஆனது? யார் பொறுப்பு? என்ற எல்லா கேள்விகளையும் தற்போதைக்கு தவிர்த்து விடுவோம். பேரிடருக்கும், பெரும் நாசத்துக்கும் இந்த அரசியல் உதவாது.
அரசை குறை சொல்வதை தவிர்த்து, அவரவரால் முடிந்த சிறிய உதவிகளை, பிறருக்கு செய்வோம். இது உயிர் பிரச்சனை.
பாலவாக்கத்துக்கு அருகில் இருப்பவர்களுக்கு உணவு, இருப்பிடம், மருத்துவ உதவி தேவையெனில் எனது தங்கை Dr. Latha & அவர் கணவர் Dr. Sai kishore ஐ தொடர்பு கொள்ளலாம்.
தொடர்பு எண்கள் : 9840017184 , 04424490073
இரவு, பகல் எந்நேரமும் உதவிடக் காத்திருக்கின்றனர். நண்பர்கள் இந்தச் செய்தியை பகிர்ந்து கொள்ள 
வேண்டுகிறேன்.

5. உணவின்றி வாடுபவர்கள் தொடர்பு கொள்க: 5000 உணவு பொட்டலங்கள் தயார் நிலையில் உள்ளது. 
தொடர்புக்கு: vineet Jain 9840426263 , Gaurav Jain 9841062626 000 (சென்னை)

food pkts are ready for distribution

Pls contact 
vineet Jain 9840426263 
Gaurav Jain 9841062626

6. Indian Navy - 10 of their expert divers & rescue personnel with boats at Gandhi Nagar, Adyar.Contact 04425394240 Navy helpline

அடையார்-காந்தி நகர் பகுதியில் வெள்ளம் அபாயத்தில் சிக்கிக்கொண்டவர்கள் 04425394240 என்ற கடற்படை உதவி எண்ணில் உதவிக்கு அழைக்கவும்.

7. 75 முதல் 100 பேர் தூங்கும் இடமும் 1000 பேருக்கு உணவும் தயாராக உள்ளது நுங்கம்பாக்கத்தில் Call 7092020207

8. மின் கம்பிகள் அறுந்து விழந்தால்.இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்:1077

9. பாரிஸ் கார்னர் பகுதியில் 10 பேர் தங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொடர்புக்கு 8939141233

10. மிதக்கும் படகு உதவி தேவையெனில் அழைக்கவும்..
இராயபுரம் 9445190005
திருவிக நகர் 9445190006
அம்பத்தூர் 9445190007
அண்ணா நகர் 9445190008

‪#‎இந்த‬ பதிவுகளுக்கு தயவு செய்து லைக்குகள் தேவையில்லை. அதிகமாக ஷேர் செய்யுங்கள். யாருக்கு தெரியும், நீங்கள் செய்யும் ஏதேனும் ஒரு ஷேரினால் கூட, யாரவது ஒருவராவது கூட பயன் பெற இயலும் தோழர்களே. அதிகம் ஷேர் செய்யுங்கள்.

இங்க ஷேர் பண்ணுறதால மக்களுக்கு எந்த பயனும் இல்லை எனும் எண்ணம் வேண்டாம் டிவிட்டர்,பேஸ்புக் முலமா பலர் மீட்க்கபடுறாங்க

 

fb

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை நகருக்குள்ளே வெளி மாவட்ட வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்கும்விதமாக அமைக்கப்பட்ட வெளிவட்ட விரைவுப் போக்குவரத்து சாலையின்(Outer Ring Road-ORR) நிலையை இந்த மழை வெள்ளத்தால் மூழ்கியிருப்பதை பாத்தால் மழையும், வெள்ளத்தின் வீரியமும் புரியும்.

 

f0mW9iz.jpg

.

  • கருத்துக்கள உறவுகள்

மிகக் கடும் மழை தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய சென்னையின் வானிலையை விளக்கும் படம்

 

650x366_12031429_hd31.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த இரு படங்களும் எங்கே எடுத்தது என தெரிகிறதா?

'கேரளா' இல்லிங்கோ சென்னையில் தான்..! :mellow:

 

31THURBANJUNGLE1_1413130g.jpg

1961ல் மயிலாப்பூரிலுள்ள 'ஹாமில்டன் பிரிட்ஜ்' அதாவது சென்னை தமிழில் 'அம்பட்டன் வாராவதி'(வாராவதி என்பது சென்னை தமிழில் 'பாலம்')யின் கீழேயோடும் பக்கிங்காம் கால்வாயில் கோவளம் வரை படகுப் போக்குவரத்து..! :rolleyes:

 

 

31THURBANJUNGLE2_1413131g.jpg

"வாராய்.. நீ வாராய்.. போகுமிடம் வெகு தூரமில்லை..!" என நாங்களும் ஒரு காலத்தில்(1959) சென்னை அடையாறு நதியில்,  அம்மா சுட்ட அடையை சுவைத்துக்கொண்டே படகோட்டி பாடினோம்...!  இப்போ அடையும் இல்லை, அந்த மாசில்லா ஆறும் இல்லை..!! :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.