Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அற்ப சலுகைகளுக்காக அரசுடன் முரண்பட முடியாது! - அரசியல் தீர்வே முக்கியம் என்கிறார் சம்பந்தன் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அற்ப சலுகைகளுக்காக அரசுடன் முரண்பட முடியாது! - அரசியல் தீர்வே முக்கியம் என்கிறார் சம்பந்தன் 
[Sunday 2015-12-13 09:00]

அற்ப விடயங்களுக்காக அரசாங்கத்துடன் முரண்பட்டு நாம் அடைய வேண்டிய பிரதான இலக்கான அரசியல் தீர்வு விவகாரத்தைப் பலவீனப்படுத்தி விடக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார். அடையவிருக்கும் அரசியல் தீர்வை மையமாகக்கொண்டே எதிர்வரும் 19 ஆம் திகதியும் வரவு – செலவுத் திட்டத்துக்கு த.தே.கூ. ஆதரவு நல்க இருக்கின்றது.

தீர்வு காலதாமதமாகப் போகுமாக இருந்தால் கிடைக்க வேண்டிய தீர்வு கை நழுவிப் போகலாம். வடக்கு, கிழக்கு மாவட்டங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களை நியமிப்பதில் அரசாங்கம் நியாயமாக நடந்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இருந்தபோதிலும் அந்த அற்ப விடயங்களைப் பேசி அரசாங்கத்திடம் சலுகைகளைப் பெறுவதிலும் பார்க்க நமது அரசியல் இலக்கை அடைய முயற்சிப்பதே முக்கியமானதாகும்.

தமிழ் அரசியல்கைதிகள் விடுதலை தொடர்பில் அரசாங்கம் ஆரம்பத்தில் எமக்களித்த வாக்குறுதிகளுக்கமைய நடந்து கொள்ளவில்லை என்பது எம்மை சீண்டிப் பார்க்கும் விடயம்தான். அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுள் சர்வதேசத்துக்கு கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடமை. வடகிழக்கு மாகாணங்களிலுள்ள மாவட்டங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்களின் தலைவர்களாக அரசாங்கம் தம் கட்சி சார்ந்தவர்களை நியமித்திருப்பதாக அறியமுடிகிறது. அது எந்தளவுக்கு உண்மையென்பது எனக்குத் தெரியாது. ஆனால், இன்றைய சூழ்நிலையிலும் காலக்கட்டத்திலும் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்களின் தலைவர் நியமனங்களை மிகவும் முக்கியமான விடயமாக எடுத்துக் கொள்ள நான் தயாராகவில்லை.

அரசாங்கத்திடமிருந்து சில உதவிகளைப் பெறுவதன் மூலம் எமது இலட்சியமாக இருக்க வேண்டிய அரசியல் தீர்வு பலவீனமடைந்து விடக் கூடாதென நான் கருதுகிறேன். ஆனால், இவ்வாறான விடயங்களை அரசாங்கம் கையாளுகின்றபோது நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். இந்நாட்டில் காணப்படுகின்ற மற்றுமொரு பிரச்சினை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரமாகும் அரசியல் கைதிகளைப் பொறுத்தவரை அரசாங்கம் எமக்கு ஆரம்பத்தில் அளித்த வாக்குறுதிகளுக்கு அமைய நடந்து கொள்ளவி்ல்லை. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முன்னைய அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் கடுமையான எதிர்ப்புக்களை காட்டி பல விபரீதமான வினாக்களை புதிய அரசாங்கத்திடம் வினவி, பலவிதமான அச்சங்களையும் சந்தேகங்களையும் ஊட்டி கைதிகளின் விடுதலையை தடுப்பற்கு கடுமையாக முயற்சிக்கின்றார்கள்.

கைதிகள் விடுதலையானது காலதாமதமாவதற்கு இதுவுமொரு காரணமாகும். இதைவிட அரச அலுவலகங்களும் அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்காமையும் மறைமுகமான காரணங்களாக இருக்கலாம். ஆனால், இவையெல்லாவற்றையும் தாண்டி நீண்ட காலமாக சிறையிலுள்ள கைதிகளை உடனடியாக விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்பதை நாங்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கி்ன்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசியும் இருக்கிறார்கள். நாம் எமது முயற்சிகளை எக்காரணம் கொண்டும் கைவிடப் போவதில்லை. வழமைக்கு மாறாக, வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பின் போது த.தே.கூ. ஆதரவாக வாக்களித்தது உண்மை. வாக்களித்தமைக்கான காரணமென்னவென்றால் தமிழ் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற அரசியல் தீர்வை விரைவில் பெற வேண்டுமாயின் அரசாங்கத்துக்கும் எமக்கிடையில் ஒரு நல்லுறவைப் பேணவேண்டுமென்பதற்காகவேயாகும். அது அவசியமும் கூட.

அவ்விதமான ஒரு தொடர்பு இல்லாமல் எம்மக்கள் எதிர்பார்க்கின்ற அபிலாஷை கொண்டுள்ள அந்த தீர்வை அடைய முடியாமல் போய்விடும். இன்றைய அரசாங்கமானது முன்னைய அரசாங்கத்திலும் பார்க்க, பல விடயங்களில் தமிழ் மக்களுக்கு சார்பாக நடந்திருக்கிறது. பல்வேறு எதிர்ப்புக்கள் காட்டப்பட்டு வருகின்ற போதும் அதைப் பொருட்படுத்தாது சில விடயங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். அதன் காரணமாகவே வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தோம். இன்றைய அரசியல் சூழ்நிலையில் எமது பயணத்தை தொடர்வதற்காக ஆதரவளிக்க வேண்டிய அவசியமொன்று எமக்கேற்பட்டிருக்கிறது. நாங்கள் எப்போழுதும் அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். அரசியலில் இணையுங்கள் என எமக்கு பல்வேறு அழைப்புக்கள் விடுக்கப்பட்டிருந்தன. ஆனால், நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றும் எதிர்கட்சியி்ல் தான் இருந்துகொண்டிருக்கின்றோம்.

எமது மக்களும் இந்த நாட்டில் சம அந்தஸ்த்து கொண்ட பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளப்படாதவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணையமுடியாது. இவ்விடயம் அரசாங்கத்துக்கு நன்றாகவே தெரியும். எனவேதான் எமது நல்லெண்ணத்தையும் உறுதியையும் அரசாங்கத்துக்கும் நாட்டுக்கும் நிரூபிக்கும் முகமாக வரவு - செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களித்தோம். தமிழ் மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அரசியல் தீர்வானது 2016 ஆம் ஆண்டு முடிவதற்கு முன் கொண்டுவரப்பட வேண்டுமென்பது அவசியமானது என நான் கருதுகின்றேன்.

தீர்வு கிடைக்க வேண்டுமென்பதற்காக பயனற்ற தீர்வை பெற நாம் தயாராகவுமில்லை. அவ்வாறானதொரு தீர்வை அரசு தர நினைக்குமாக இருந்தால் அதையும் நாம் ஏற்கத் தயாராகவில்லை. எமது சமூக, அரசியல், பொருளாதார, கலாசார அபிலாஷைகளை நாமே நிறைவேற்றக் கூடியவகையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் சில கருமங்களை ஆரம்பித்துள்ளது அதற்கு உதாரணமாக அரசாங்கத்தின் பேச்சாளர்களும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு பற்றி பேசுகிறார்கள். இவ்விடயத்தை நாம் பக்குவமாகவும் நிதானமாகவும் கையாள வேண்டிய அவசியமிருக்கிறது. மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள் குழம்பக்கூடிய விதத்தில் யாரும் செயற்படக்கூடாது. தேவையற்ற பிரசாரங்களில் ஈடுபடாமல் அடக்கமாகக் கையாள வேண்டும். எமது குறிக்கோளை அடைவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் கடுமையாக உழைப்போம். அந்த வாய்ப்பை நிறைவு செய்வதற்கு எம்மாலான முயற்சிகளை மேற்கொள்வோம்.

இன்று ஐ.நா.வினால் மனித உரிமை பேரவையினால் நிறைவேற்றப்பட்டிருக்கின்ற தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கையில் நிரந்தரமான நல்லிணக்கமும் புரிந்துணர்வும் ஏற்பட வேண்டுமாக இருந்தால் அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். கொண்டுவரப்படுகின்ற அரசியல் தீர்வினால் நாட்டில் இருந்து வரும் நிலைமைகள் மாறவேண்டும் முன்னைய நிலைமைகள் எதிர்வரும் காலங்களில் நடைபெறக்கூடாது என தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கிறது. அதற்காக நாம் எல்லோரும் முயற்சிகளை எடுக்க வேண்டும் என சம்பந்தன் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=146885&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்சித்தலவர் பதவியையும் அரசில் தீர்வுக்காக வேண்டாம் என்று சொல்லி இருக்கலாமே.எல்லாப்பழியையும் முன்னைய அரசாங்கத்தில் போட்டு விட்டு செயலற்று அரசாங்கத்தின் பேச்சாளர் போல் பேசுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

புலவர், எதிர்க்கட்சித் தலைமையை சம்பந்தர் விட்டிருந்தால் வேறு யார் அதை எடுத்திருப்பார்கள்? அதனால் தமிழர்களுக்கு என்ன நன்மை வந்திருக்கும்? 

பதில் இருக்கிறதா உங்களிடம்?

சம்பந்தன் சம தெளிவு 

  • கருத்துக்கள உறவுகள்

சட்டுப்புட்டு என்டு ஒரு முடிவுக்கு வாஙகோப்பா

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

புலவர், எதிர்க்கட்சித் தலைமையை சம்பந்தர் விட்டிருந்தால் வேறு யார் அதை எடுத்திருப்பார்கள்? அதனால் தமிழர்களுக்கு என்ன நன்மை வந்திருக்கும்? 

பதில் இருக்கிறதா உங்களிடம்?

இப்ப இவர் இருக்கிறதால் எங்களுக்கு என்ன நன்மை?

சிங்களவனை அமைதிப்படுதிறன்  எண்டு அடிக்கிற கூத்து தாங்க முடியல.

  • கருத்துக்கள உறவுகள்

Ponguthamil பொங்குதமிழ்'s photo.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

இப்ப இவர் இருக்கிறதால் எங்களுக்கு என்ன நன்மை?

சிங்களவனை அமைதிப்படுதிறன்  எண்டு அடிக்கிற கூத்து தாங்க முடியல.

புலம்பெயர் தமிழரான எங்களுக்கு ஒரு நன்மையும் இல்லை! அதுவும் தீவிர தேசியவாதிகளுக்குத் தீமை தான்! 

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் வடகிழக்கு தமிழருக்கு என்ன நன்மை இவரால் ?

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 12 மாதங்கள் இருக்கு திர்வுக்கு இன்னும் பல கட்டங்களாக மூடிய அறையில் மகிந்தவுடன் என்ன  பேசினார்கள் என்பதே தெரியாது . இதற்குள் மைத்திரியுடன் பேசுவதையா கூறப்போகிறார்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பெருமாள் said:

மன்னிக்கவும் வடகிழக்கு தமிழருக்கு என்ன நன்மை இவரால் ?

சர்வதேச அளவில் தாயக தமிழர்களின் தெரிவாக நிதானமாகப் பேசக் கூடிய ஒரு நபராக இருப்பதே நல்ல சமிக்ஞைகளை வெளியுலகத்திற்குக் கொண்டு செல்கிறது. அதுவே பெரிய நன்மை என் கருத்தில்.

மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் தாயகத் தமிழரிடம் தான் கேட்க வேண்டும். நான் அங்கே இல்லை, நீங்களும் அங்கே இல்லை என்பதை நான் அறிவேன்!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

சர்வதேச அளவில் தாயக தமிழர்களின் தெரிவாக நிதானமாகப் பேசக் கூடிய ஒரு நபராக இருப்பதே நல்ல சமிக்ஞைகளை வெளியுலகத்திற்குக் கொண்டு செல்கிறது. அதுவே பெரிய நன்மை என் கருத்தில்.

இவ்வளவு மொக்கையான பதிலை என்வீட்டு நாய்குட்டி கூட சொல்லும் .

கேட்ட கேள்விக்குரிய பதில் தரக்கூடிய மாதிரி இந்த வாழைபழ கட்சிகளின் இயங்கு நிலைமை இல்லை என்பதை நீங்கள் ஒத்துகொள்ள மாட்டீர்கள் என்பதும் தெரியும் நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Justin said:

சர்வதேச அளவில் தாயக தமிழர்களின் தெரிவாக நிதானமாகப் பேசக் கூடிய ஒரு நபராக இருப்பதே நல்ல சமிக்ஞைகளை வெளியுலகத்திற்குக் கொண்டு செல்கிறது. அதுவே பெரிய நன்மை என் கருத்தில்.

மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் தாயகத் தமிழரிடம் தான் கேட்க வேண்டும். நான் அங்கே இல்லை, நீங்களும் அங்கே இல்லை என்பதை நான் அறிவேன்!

இதையே கீழிருந்து மேலாக
நீங்கள் பெருமாளிடம் கேட்ட கேள்விக்கு பதிலாக கொள்ளலாம்.

தெளிவா என்ன பேசினார் ...?

என்று கொஞ்சம் தெளிவா எடுத்து விடுவீர்களா ?

அல்லது அதுக்கும் நாம் இனி தாயக மக்களைத்தான் தொடர்பு கொள்ள  வேண்டுமா ?

  • கருத்துக்கள உறவுகள்

அற்ப சலுகைகளுக்காக அரசுடன் முரண்பட முடியாது! - அரசியல் தீர்வே முக்கியம் என்கிறார் சம்பந்தன் 

அற்ப தீர்வு ஒன்றைத்தான் சிங்களம் தரப்போகிறது

அப்போ என்ன சொல்லப்போகிறார் ஐயா...

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின், சம்பந்தர் எதிர் கட்சி தலைவராய் வந்ததால் தமிழ் மக்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைத்தன. இலங்கையில் இனப்பிரச்சனை ஒன்றும் இல்லை, ஒரு தமிழரே எதிர் கட்சி தலைவராய் இருக்கிறார் என்று சொல்லி தங்களை நல்லவர்களாக்க எல்லா சிங்களவர்களும் சேர்ந்து போட்ட நாடகம் தான் உந்த பதவி. மற்றும்படி உதால தமிழ் மக்களுக்கு ஒரு நன்மையையும் கிடையாது. யாரவது எதிரா சொன்னால் உடனே தீவிர தேசியவாதி. ஆங்கிலம் என்பது ஒரு மொழி அதுதான் அறிவு என்பது உங்கள் நினைப்பு. இதை நான் இங்கே ஏன் எழுதுகிறேன் என்பது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். சம்பந்தர் கூட்டமைப்பின் தலைவராக இருந்தே இதை செய்து இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

அதுக்கும் நாம் இனி தாயக மக்களைத்தான் தொடர்பு கொள்ள  வேண்டுமா ?

அண்மையில் தாயகத்தில் ஒருவருடன் பேசியபோது...

சாமி கொடுத்தாலும்

பூசாரிகள்  விடமாட்டார்கள்..

(வடமாகாணசபை நிதி திரும்பிப்போவது  சம்பந்தமாக)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, விசுகு said:

அற்ப சலுகைகளுக்காக அரசுடன் முரண்பட முடியாது! - அரசியல் தீர்வே முக்கியம் என்கிறார் சம்பந்தன் 

அற்ப தீர்வு ஒன்றைத்தான் சிங்களம் தரப்போகிறது

அப்போ என்ன சொல்லப்போகிறார் ஐயா...

 மாற்றி மாற்றி ரீல் விடுவதற்கு தமிழுக்கா பஞ்சம்???? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

இவ்வளவு மொக்கையான பதிலை என்வீட்டு நாய்குட்டி கூட சொல்லும் .

கேட்ட கேள்விக்குரிய பதில் தரக்கூடிய மாதிரி இந்த வாழைபழ கட்சிகளின் இயங்கு நிலைமை இல்லை என்பதை நீங்கள் ஒத்துகொள்ள மாட்டீர்கள் என்பதும் தெரியும் நன்றி .

ஆமாம், தங்கள் வீட்டு நாய்க்குட்டியோடு அரசியல் பேசவேண்டிய நிலையில் தான் பல தீவிர த.தே.கூ எதிர்ப்பாளர்கள் இன்று இருக்கிறார்கள்! அதை நீங்களும் செய்தால் பலரின் நேரம் மிச்சமாகும், நொய்சும் குறையும்! :cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

ஜஸ்டின், சம்பந்தர் எதிர் கட்சி தலைவராய் வந்ததால் தமிழ் மக்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைத்தன. இலங்கையில் இனப்பிரச்சனை ஒன்றும் இல்லை, ஒரு தமிழரே எதிர் கட்சி தலைவராய் இருக்கிறார் என்று சொல்லி தங்களை நல்லவர்களாக்க எல்லா சிங்களவர்களும் சேர்ந்து போட்ட நாடகம் தான் உந்த பதவி. மற்றும்படி உதால தமிழ் மக்களுக்கு ஒரு நன்மையையும் கிடையாது. யாரவது எதிரா சொன்னால் உடனே தீவிர தேசியவாதி. ஆங்கிலம் என்பது ஒரு மொழி அதுதான் அறிவு என்பது உங்கள் நினைப்பு. இதை நான் இங்கே ஏன் எழுதுகிறேன் என்பது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். சம்பந்தர் கூட்டமைப்பின் தலைவராக இருந்தே இதை செய்து இருக்கலாம்.

உங்கள் ஆங்கிலம் பற்றிய கருத்துக்கு முதலில் பதில்: ஒரு திரியில் எழுதும் கருத்துக்கு அதே திரியில் தான் பதில் சொல்ல வேண்டும் என்பது களவிதி, இதை வாசித்துப் பின்பற்றி நீண்ட காலம் நிலைக்கப் பாருங்கள்! மற்ற படி என் அறிவு என்பது ஆங்கிலத்தில் மட்டும் தங்கியில்லை என்பதை என்னை தனிப்பட அறிந்த யாழ் உறுப்பினர்கள் அறிவர், உங்களுக்கு தேடல் இருந்தால் நீங்களும் அறிந்து கொள்ளலாம்!

உங்கள்  கருத்துக்கு: சம்பந்தர் உங்கள் மாதிரி சுத்தி வளைச்சு யோசிச்சு எதிர்க்கட்சிப் பதவியை ஏற்காது விட்டிருந்தால், மகிந்த அணி தான் ஏற்றிருக்கும்! அப்படி ஆகியிருந்தால், இலங்கையில் இன்னும் இனவாதம் தான் தமிழர்களை நசுக்கிறது என்று புலத்தில் வாழும் தீவிர தேசியர்கள் தங்கள் வாய்க்குக் கொள்ளுப் போட்டுக் காலத்தைக் கடத்தக் கூடிய மாதிரி மகிந்த ஆப்பு இறுக்கியிருப்பார் மைத்திரிக்கு! நிலங்கள் ஒரு அங்குலம் கூட விடுவிக்கப் படாது, இடைக்கால நிவாரணம் எதுவும் கிடையாது. இதை எல்லாம் உங்களுக்கு விளக்குவது கஷ்டம், ஏனெனில் தீவிர தமிழ் தேசியர்களாக வெளிநாடுகளில் இருப்போர் தாயக மக்களைப் பற்றியல்ல சிந்திப்பது! உதாரணமாக, சம்பந்தர் எதிர்க்கட்சித் தலைவரானதை விமர்சித்த எதிர்த்த ஒரு உள்ளூர் மக்களின் சமிக்ஞையை உங்களால் உதாரணம் காட்ட முடியுமா? குப்பனும் சுப்பனும் வந்து குப்பை கொட்டிப் போகிற முகநூல் பதிவுகளை மேற்கோள் காட்டாதீர்கள்!

4 hours ago, Maruthankerny said:

இதையே கீழிருந்து மேலாக
நீங்கள் பெருமாளிடம் கேட்ட கேள்விக்கு பதிலாக கொள்ளலாம்.

தெளிவா என்ன பேசினார் ...?

என்று கொஞ்சம் தெளிவா எடுத்து விடுவீர்களா ?

அல்லது அதுக்கும் நாம் இனி தாயக மக்களைத்தான் தொடர்பு கொள்ள  வேண்டுமா ?

கடந்த எலக்ஷனுக்கு முதல் நாள் கரி யாழில் இணைத்த பதிவில் சில வீடியோக்கள் இருக்கு! நீங்களே போய்ப் பார்க்கலாம்! கனடாவில் பேசியதும் யாழில் இருக்கு! அந்த பேச்சுகளில் இருந்த தெளிவு தான் அவுசில் பேசவிடாமல் விசர் நாய்கள் போல சில தீவிர தேசியர்களைக் கோபப் படுத்தியது!

உங்களுக்கு விளங்காததால் ஒருவர் தெளிவாகப் பேசவில்லை என்று நினைப்பது சகஜம், ஆனால் பலர் தெளிவாக சில விடயங்களை யாழில் கூறினாலும் உங்களுக்கு விளங்குவதில்லை என்பது என் அவதானிப்பு, அதனால் உங்கள் கிரகிப்பைப் பற்றியும் நீங்கள் யோசிக்க வேண்டும்,மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருக்க யாழ் முழு நேரத் தொழில் அல்ல எனக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின், எவ்வளவு நிலம் விடுவிக்கப்பட்டு இருக்கிறது எங்கெல்லாம் மக்கள் சென்று குடியேறி இருக்கிறார்கள் அவர்களுக்கு எனென்ன நிவாரணம் வழங்கப்படுகிறது அதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது என்று ஒரு தடவை தாயகம் சென்று பாருங்கள் அப்போது புரியும். நாங்கள் தாயக மக்களுக்கு என்னென்ன செய்தோம் என்ன செய்துகொண்டு இருக்கிறோம் என்று நாம் விளம்பரம் செய்வதில்லை.

குப்பனும் சுப்பனும் இப்ப கொஞ்ச காலமாகத்தான் யாழிலை வந்து குப்பையை கொட்டிக் கொண்டு இருக்கினம்.:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் எனது தேடல் உங்கள் அரசியல் அறிவு பற்றி அறிவதோ அல்லது உங்களை தனிப்பட அறிந்த யாழ் உறுப்பினர்கள் பற்றியதோ அல்ல. முன்னர் நடந்ததை எழுதி எழுதி நமக்குள் அடிபடாமல் வெளி நாடுகளில்  வாழும் எல்லோரும் ஒன்று சேர்ந்து எமக்கான நல்லதொரு தீர்வை வென்றெடுக்க வேண்டும் என்பதே.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தன்னை அலங்கரிக்க சிங்களவனின் கொடியை தூக்கிப் பிடிப்பார்.. அவனின் சுதந்திர தினத்தை அனுஷ்டிப்பார்... அவனிடம் எதிர்கட்சி தலைவர் பதவி கேட்பார்.

இந்தா அரசியல் கைதிகளை விடுவிக்கிறன் மைத்திரியோட போனில பேசிட்டன் என்று சொல்லி எத்தினை நாளாச்சு.. என்னாச்சு..?!

முஸ்லீம் அரசியல்வாதிகள்.. இருக்காத இடத்தில் எல்லாம் பெருக்கிக்கிட்டு வந்து இருத்திறாங்கள் தங்கட ஆக்களை..! எங்கட சனத்தை சம்பூரில.. குடியமர்த்த ஒரு ஆயத்தமும் இல்லை. மூதூரில இருந்து விரட்டி அடிக்கப்பட்ட தமிழர்களின் மீள் குடியேற்றம்.. கிழக்கில் இதர பகுதிகளில் இருந்து முஸ்லீம்களால் சிங்களவர்களால்..விரட்டி அடிக்கப்பட்ட தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் பற்றி எவராவது கதைச்சிருக்கினமா.. அப்படி நடந்ததாகக் காட்டிக்கொள்வது கூட இல்லை.

முஸ்லீம் அரசியல்வாதிகள்.. தங்கட இனத்துக்கு அரசோட முரண்படாமல் (தமக்கு  சின்ன ஆதாயம் வரும்.. தமிழருக்கு பெரிய அநியாயம் வரும் என்றால் முரண்படுவார்கள்) எவ்வளவோ செய்யுறாங்க.. தமிழ் - சிங்கள முரண்பாட்டை அதற்குப் பயன்படுத்திக்கிறாங்க.. அதில் அவர்கள் ஆதாயம் தேடிக் கொள்கிறார்கள். தமிழ் - சிங்கள முரண்பாட்டில் முஸ்லீம் அரசியல்வாதிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வாழ வைக்கிறார்கள்.

எங்கடையள் என்ன செய்து.. சிங்களவனுக்கு முஸ்லீமுக்கு நோகக் கூடாது என்று இன்று கிழக்கின் அபிவிருத்தி இணைத்தலைமைத்துவம் முழுக்க முஸ்லீம்கள் கைக்கு போயிருக்க.. ஒன்றும் இல்லாமல் நிற்கினம்.

வடக்கும் இன்னும் கொஞ்சக்காலத்தில போகும்.

ஆக.. இவர் சம்மும் சும்மும் தங்களை அலங்கரிக்க.. சிங்களவனோட மசுங்கிப் போவினம்.. தமிழ் மக்களின் உரிமை என்று வரேக்க.. எதுவும் செய்யமாட்டினம்.. என்பதை தான் இந்த உளறல் வலியுறுத்துது. இவையை நம்பி தமிழ் மக்கள் நட்டாற்றில் தான் நிற்கப் போகிறார்கள். இவர்களின் சுயநலத்துக்காக எல்லா வாய்ப்புக்களையும் தாரைவார்த்துக் கொண்டு போகிறார்கள்.

ஆதாயம் அடைவது சிங்களவனும் முஸ்லீமும்.. அமெரிக்கனும்.. ஹிந்தியனும் தான். :rolleyes: தமிழ் மக்களுக்கு இழப்பு மேல் இழப்பு. சோதனை மேல் சோதனை தான் மிச்சம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Eppothum Thamizhan said:

ஜஸ்டின் எனது தேடல் உங்கள் அரசியல் அறிவு பற்றி அறிவதோ அல்லது உங்களை தனிப்பட அறிந்த யாழ் உறுப்பினர்கள் பற்றியதோ அல்ல. முன்னர் நடந்ததை எழுதி எழுதி நமக்குள் அடிபடாமல் வெளி நாடுகளில்  வாழும் எல்லோரும் ஒன்று சேர்ந்து எமக்கான நல்லதொரு தீர்வை வென்றெடுக்க வேண்டும் என்பதே.

அந்தத் தீர்வுத் தேடலில் எனது ஆங்கிலம், அறிவு என்பன ஏன் உங்களால் நுழைக்கப் பட்டன? தனிப் பட்ட தாக்குதல்களை ஆரம்பிப்பதும் பின்னர் சுட்டிக் காட்டியதும் ஏதோ தாங்கள் தீர்வுக்கு உழைக்கும் உத்தமர்கள் போல அக்ரிங் கொடுப்பதும் இங்கு பலர் வழமையாகச் செய்வது தான்! அதிர்ச்சியில்லை! 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Eppothum Thamizhan said:

ஜஸ்டின், எவ்வளவு நிலம் விடுவிக்கப்பட்டு இருக்கிறது எங்கெல்லாம் மக்கள் சென்று குடியேறி இருக்கிறார்கள் அவர்களுக்கு எனென்ன நிவாரணம் வழங்கப்படுகிறது அதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது என்று ஒரு தடவை தாயகம் சென்று பாருங்கள் அப்போது புரியும். நாங்கள் தாயக மக்களுக்கு என்னென்ன செய்தோம் என்ன செய்துகொண்டு இருக்கிறோம் என்று நாம் விளம்பரம் செய்வதில்லை.

குப்பனும் சுப்பனும் இப்ப கொஞ்ச காலமாகத்தான் யாழிலை வந்து குப்பையை கொட்டிக் கொண்டு இருக்கினம்.:unsure:

மகிந்த எதிர்க்கட்சித் தலைமையாக வந்திருந்தால் ஒரு அங்குலம் கூட விடுவிக்கப் பட்டிராது என்பது பெருமாள் வீட்டு நாய்குட்டிக்குக் கூட விளங்கும்! ஒரு அங்குலத்தோடு ஒப்பிடுகையில் சில நூறு காணிகள் திறம் என்பதும் உங்களுக்குப் புரியாததா? நிவாரணம் ஊரில் போகிற போக்கைப் பற்றி இங்கே பல தடவை எழுதியாகி விட்டது! எடுத்ததற்கெல்லாம் யாராவது வந்து எங்களுக்கு அரிசி இலவசமாகத் தர வேண்டும் என்று இருக்காமல் கிடைத்த காணியை வைத்துப் பிழைக்கும் மக்கள் இருக்கிறார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

என் தானோ எப்ப பாத்தாலும் இப்படி புடுங்குப்படுகிறியள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.