Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் அனிருத்தை கட்டி அனைத்த நம்ம இளசுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
December 14th, 15

df905f6af60b9f54c1cc0f894dc1381b.jpgவெள்ளத்தில் எம் ஈழத்திலும் தமிழகத்திலும் எம் மக்கள் அனுபவிக்கும் வேதனை போக்க முன் வராதவர்கள், அவற்றுக்கு நிதி உதவி செய்யுங்கள் என கேட்டால்

“ஐந்து சதம் இல்லை மிகுந்த துன்பத்தில் வாழ்கிறோம்”

என பஞ்சப் பாட்டு பாடியவர்கள் அனிருத் பாடாத பாட்டுக்களை (இறுவட்டில் மட்டுமே ஒலித்ததாம் மேடை நிகழ்ச்சியில்) கேட்க ஐம்பது, நூறு டாலர்கள் கொட்டி கொடுத்து சென்றார்களாம்…

‘எம் இளம் தமிழ் பெண்கள் கட்டி அணைத்து படங்களும் எடுத்தார்களாம்!!!’ என்ற.. செய்தி கேட்கையில் எங்கு போகிறது எங்கள் இனம் என்ற கவலை எழுகிறது…
கலையை இரசிப்பது உங்கள் தெரிவு. மகிழ்வு.. இருக்கட்டும். ஆனால் இதே போல் எம் வாழ்விழந்து நிற்கும் மக்களின் கவலையை போக்கவும் அள்ளிக் கொடுக்காது

போனாலும் கிள்ளியேனும் கொடுத்திருக்கக் கூடாதா?

வெள்ள அவலத்தில் உங்கள் பிள்ளைகள் தத்தளித்தால் உங்கள் உயிர் துடிக்காதா?

மகிழ்வாக இருங்கள்.. அடுத்தவர்க்கும் கண்ணீர் போக்கி மகிழ்வை கொடுப்பதையும் கடனாக கொள்ளுங்கள் புலத்தில் வாழும் என் தமிழ் உறவுகளே. ..

அனிருத் தம்பி கனடா வந்திருந்தார் நேற்று அவருடை இசை நிகழ்ச்சி ஒன்று கனடா இளசுகள் எத்தனையோ வந்ததாம் ஊரில் கூல் ஊத்தின போற மாதிரி கனடாவிலும் யாரும் இந்திய பாட்டுக்காரர் வந்த கூட்டம் கூடும் என்றால் பாருங்கோவனன்…

9f83939bdb2d3d13a2e47d57e8a88082.jpg

நன்றி முகநுால்

http://www.vannimedia.com/site/news_detail/2856

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளில் கட்டியணைத்தல் சாதாரணம். எங்கடையள் பாவம் அதுகளைக் கட்டியணைச்சு உள்ளூரில உள்ளதுங்க களைச்சுப் போயிருக்குங்கள்.. அதுதான் இந்தியாவில் இருந்து வந்துகளை கட்டியணைத்து புத்துணர்ச்சி பெறுகுதுங்க. tw_blush:

இதில் அரைவாசி படங்கள்.. இப்ப இன்ஸ்ரகிராமிலும் பேஸ்புக்கிலும் தரவேற்றம் செய்யப்பட்டிருக்கும். அதுக்குத்தான் எங்கடையள் கட்டிப்பிடிக்கிறது அதிகம். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை சரவணா , மூஞ்சில கரி...!  :(

கட்டி அணைத்தல் தவறானதா?  தனக்கு பிடித்த பாடகரை கட்டி அணைத்து வாழ்த்து சொல்வது சர்வசாதாரணம்.  இதை ஒருசெய்தி என்று இணைத்துள்ளீர்களே கொழும்பன்.

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் பிறந்து வளர்ந்தவர்களுக்கே பிடித்த,பிடிக்காத விடையங்களை சொல்ல முடியாதுள்ள போது,வெளி நாடுகளில் பிறந்த பிள்ளைகளை கட்டிப் பிடிக்குதுகள்,கொஞ்சுதுகள் என்று குறை சொல்லி என்ன பிரியோசனம்....இவற்றில் உள்ள வேண்டாத பழக்க,வழக்கங்களை சொல்லப் போனால் நாங்கள் தான் நாகரீகமற்றவர்களாகப்படுகின்றோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரபல இளம் இசைஅமைப்பாளர் அனிருத் மற்றும் அவரது இசைக்குழு அமைப்பினர்கள் கனடாவில் வருகின்ற 12 ஆம் தேதி பொவெரட் சென்டரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெறுவதற்காக கனடா பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கினர். அவர்களை ATN அதிபர் சந்திர சேகர் மற்றும் நிகழ்வு ஏற்ப்பாட்டாளர்கள் நேரடியாகச் சென்று விமான நிலையத்தில் வரவேற்றனர்.

anirudth-canada-101215-seithy%20(1).jpg

anirudth-canada-101215-seithy%20(2).jpg

anirudth-canada-101215-seithy%20(4).jpg

anirudth-canada-101215-seithy%20(5).jpg

anirudth-canada-101215-seithy%20(6).jpg

anirudth-canada-101215-seithy%20(7).jpg

12-12-15 அன்று கனடாவில் Arya Canada inc நடாத்திய ANIRUDH LIVE IN TORONTO இசை நிகழ்வின் படத்தொகுப்பு. படங்கள் - குணா

ANIRUDH2015CABADA-SEITHY (34)
ANIRUDH2015CABADA-SEITHY (35)
ANIRUDH2015CABADA-SEITHY (36)
ANIRUDH2015CABADA-SEITHY (37)
ANIRUDH2015CABADA-SEITHY (38)
  ANIRUDH2015CABADA-SEITHY (39).jpg
12-12-15 அன்று கனடாவில் Arya Canada inc நடாத்திய ANIRUDH LIVE IN TORONTO இசை நிகழ்வின் படத்தொகுப்பு. படங்கள் - குணா

ANIRUDH2015CABADA-SEITHY (35)
ANIRUDH2015CABADA-SEITHY (36)
ANIRUDH2015CABADA-SEITHY (37)
ANIRUDH2015CABADA-SEITHY (38)
ANIRUDH2015CABADA-SEITHY (39)
  ANIRUDH2015CABADA-SEITHY (40).jpg

12-12-15 அன்று கனடாவில் Arya Canada inc நடாத்திய ANIRUDH LIVE IN TORONTO இசை நிகழ்வின் படத்தொகுப்பு. படங்கள் - குணா

ANIRUDH2015CABADA-SEITHY (3)
ANIRUDH2015CABADA-SEITHY (4)
ANIRUDH2015CABADA-SEITHY (5)
ANIRUDH2015CABADA-SEITHY (6)
ANIRUDH2015CABADA-SEITHY (7)
  ANIRUDH2015CABADA-SEITHY (8).jpg

12-12-15 அன்று கனடாவில் Arya Canada inc நடாத்திய ANIRUDH LIVE IN TORONTO இசை நிகழ்வின் படத்தொகுப்பு. படங்கள் - குணா

ANIRUDH2015CABADA-SEITHY (4)
ANIRUDH2015CABADA-SEITHY (5)
ANIRUDH2015CABADA-SEITHY (6)
ANIRUDH2015CABADA-SEITHY (7)
ANIRUDH2015CABADA-SEITHY (8)
  ANIRUDH2015CABADA-SEITHY (9).jpg

12-12-15 அன்று கனடாவில் Arya Canada inc நடாத்திய ANIRUDH LIVE IN TORONTO இசை நிகழ்வின் படத்தொகுப்பு. படங்கள் - குணா

ANIRUDH2015CABADA-SEITHY (7)
ANIRUDH2015CABADA-SEITHY (8)
ANIRUDH2015CABADA-SEITHY (9)
ANIRUDH2015CABADA-SEITHY (10)
ANIRUDH2015CABADA-SEITHY (11)
  ANIRUDH2015CABADA-SEITHY (12).jpg

  • கருத்துக்கள உறவுகள்

இறுக்கி அணைத்து "உச்" "உச்" என்று முத்தமா கொடுக்கின்றார்கள்?இல்லையே.

மேற்கு நாடுகளில் கட்டியணைப்பது பெரிய விடயமல்ல. ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது, அதிலும் எதிர்ப்பாலினத்தவராக இருந்தால், கட்டியணைத்து கன்னத்தில் உதடுகள் பட்டும் படாமலும் முத்தம் பரிமாறுவது வழமையானதே.

இதெல்லாம் பெரிய செய்தி.. 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ....பரஸ்பரம் நண்பர்கள் சந்தித்தால் உறவினர்கள் சந்தித்தால் கக் பண்ணி அன்பை வெளிப்படுத்துவது இங்குள்ள நடைமுறை  தங்கள் பிரியத்திற்குரிய கலைஞனை கக் பண்ணினால் என்ன கற்பா கெட்டுவிட்டது? ஏனைய்யா இந்தக் குய்யோ முறையோ? நெடுக்கண்ணா நீங்களும் இப்படி பிரபலமான மக்கள் விருப்புக்குரிய கலைஞனாக கனடாவுக்கு வாங்கோ உங்களுக்கும் இந்த அனுபவம் கிடைக்கும் அதைவிட்டுட்டு மற்றவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் முறைமையை பழிக்காதீர்கள்.

ஏன் நம்ம யாழ்க்களநண்பர்கள் சந்திப்பில் சுமே தன்னை நான் கக் பண்ணவில்லை என்று பதிவிட்டிருந்ததை மறந்துவிட்டீர்களா? இதெல்லாம் இங்கு நாகரீகமாகவே கருதப்படுகிறது ஒவ்வொருவருடைய விருப்பு வெறுப்புகளில் மூக்கை நுழைத்து விமர்சிப்பது அநாகரீகம் இல்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனிருத்து உலகப்புகழ் பெற்ற பீப் சாங்க்கும் பாடினாரா? பாடினால் உந்த பெடிபெட்டையள் மெய்மறந்து ஆடியிருக்குங்கள்!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வல்வை சகாறா said:

வல்வை பாட்டி.. நாங்க.. நீங்க கக் பண்ணுறதையோ ஹக் பண்ணுறதையோ குறை சொல்லேல்ல. என்ன உள்ளூருக்க கக் பண்ணி அலுத்திட்டுது.. இந்தியாவில இருந்து கூப்பிட்டு வைச்சு கக் பண்ணி புத்துணர்ச்சி ஊட்டிறதை தான் சுட்டிக்காட்டினம்.

நீங்க தாராளமா கக் பண்ணலாம்... என்னவும் பண்ணலாம்.. அது உங்க உங்க விருப்பம். ஆனால் நாம வாழுற ஊரில.. யாரும் கக் பண்ண விருப்பமில்லைன்னா இழுத்து வைச்சு கக் பண்ணிறதில்ல அதுவும் நாகரிகம். tw_blush:

37 minutes ago, குமாரசாமி said:

அனிருத்து உலகப்புகழ் பெற்ற பீப் சாங்க்கும் பாடினாரா? பாடினால் உந்த பெடிபெட்டையள் மெய்மறந்து ஆடியிருக்குங்கள்!!!!!!!!

அனிருத் அன்ரியா ஆன்ரிக்கு லிப்டு லிப் கொடுத்தவர். கனடாவிலும் அதற்கு ஆன்ரிகள்.. கியூவில நின்றால் ஆச்சரியப்படத் தேவையில்லை. நாகரிகம் பாருங்கோ. அனிருத் பழம் தின்று கொட்ட போட்ட ஆள். பார்வைக்கு தான் சின்னப் பொடியன் போல. tw_blush:anirudh_660_081612042927.jpg

தமிழ் ஆண்களைப் பார்த்த கண்களுக்கு..... அனிருத் ஒரு  உலக அதிசயம் போலைப் போலை 

சரி சரி விடுங்கப்பா அந்தப் பிள்ளைகள் சந்தோசமாய் இருந்திட்டுப் போகட்டுமே 

Edited by மீனா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

...வெள்ளை குருத்துக்கள் தேவைப்படுகின்றது.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குப் போய்.

இதை விட எத்தனையோ பெரிய பிரச்சனைகள் எல்லாம் இங்கு நடக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎/‎14‎/‎2015 at 3:56 PM, வல்வை சகாறா said:

ஐயோ....பரஸ்பரம் நண்பர்கள் சந்தித்தால் உறவினர்கள் சந்தித்தால் கக் பண்ணி அன்பை வெளிப்படுத்துவது இங்குள்ள நடைமுறை  தங்கள் பிரியத்திற்குரிய கலைஞனை கக் பண்ணினால் என்ன கற்பா கெட்டுவிட்டது? ஏனைய்யா இந்தக் குய்யோ முறையோ? நெடுக்கண்ணா நீங்களும் இப்படி பிரபலமான மக்கள் விருப்புக்குரிய கலைஞனாக கனடாவுக்கு வாங்கோ உங்களுக்கும் இந்த அனுபவம் கிடைக்கும் அதைவிட்டுட்டு மற்றவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் முறைமையை பழிக்காதீர்கள்.

ஏன் நம்ம யாழ்க்களநண்பர்கள் சந்திப்பில் சுமே தன்னை நான் கக் பண்ணவில்லை என்று பதிவிட்டிருந்ததை மறந்துவிட்டீர்களா? இதெல்லாம் இங்கு நாகரீகமாகவே கருதப்படுகிறது ஒவ்வொருவருடைய விருப்பு வெறுப்புகளில் மூக்கை நுழைத்து விமர்சிப்பது அநாகரீகம் இல்லையா?

எந்த ஆதாரத்தை வைத்து ....
அப்படி நடக்கவே இல்லை என்று நீங்கள் அடித்து சொல்கிறீர்கள் ??

"கற்பு" என்று  எதை சொல்கிறார்கள்
என்ற வரைவிலக்கணம்.

உங்கள் கருத்தோடு ஒன்றவில்லை.
சீதை ஏன் தீக்குளித்தார் ....?

  • கருத்துக்கள உறவுகள்

இது மட்டும் யாழ்ப்பாணத்திவ் நடந்திருந்தால்

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளில் இருந்து கொண்டு இதையெல்லாம் பெரிய விடமாய் எடுக்கக் கூடாது.ஆனால் அனுருத் சிமு;புவோட சேர்ந்து பீப்  சொங் பாடினரா. அவரைக்கட்டிப் பிடிச்சு வாழ்த்திறதுக்கு அவர் ஒரு பெரிய ஆள் கிடையாது. இளையராஜா வந்த போது எத்தனைபேர் கட்டிப் பிடிச்சு வாழ்த்தினவேயோ தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.