Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிணற்று நீரைக் குடிக்கலாமா? குடிக்கக்கூடாதா? : மக்கள் ஆர்ப்பாட்டம்

Featured Replies

கிணற்று நீரைக் குடிக்கலாமா? குடிக்கக்கூடாதா? : மக்கள் ஆர்ப்பாட்டம்
 
 
கிணற்று நீரைக் குடிக்கலாமா? குடிக்கக்கூடாதா?  : மக்கள் ஆர்ப்பாட்டம்
யாழ் மாவட்டத்தில் சுன்னாகம் பகுதி கிணறுகளில் கழிவு ஒயில் கலப்பால் பாதிப்படைந்த குடி நீரை குடிக்கலாமா? குடிக்கக் கூடாதா? மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களே பதில் கூறுங்கள் எனக்கோரி யாழ்.சுன்னாகம் மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று நடத்தினர்.
 
சமூக நீதிக்கான வெகுஜன அமைப்புகளின் ஒழுங்கமைப்பில் குறித்த கவனயீர்ப்பு சுன்னாகம் முனியப்பர் கோவில் முன்றலில் இடம்பெற்றது. வடமாகாண நீர்வழங்கல் அமைச்சு நிபுணர்குழு ஒன்றை உருவாக்கி குறித்த நிபுணர்கள் குழு இறுதி அறிக்கையினை அண்மையில் சமர்ப்பித்திருந்தது. 
 
இந்த அறிக்கையில் சுன்னாகம் நீரில் அச்சுறுத்தும் வகையிலான பார உலோகங்கள் இல்லை எனவும், குடாநாட்டு நீரில் மலக்கிருமிகளின் தாக்கம் உள்ளமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது.  இந்த அறிக்கை தமக்கு சாதகமாக உருவாக்கபட்டுள்ளது எனவும் சுன்னாகம் குடிதண்ணீரை குடிக்கலாமா? குடிக்க கூடாதா? என்பதை மாகாண மற்றும் மத்திய அரசாங்கங்கள் கூறவேண்டும் என வலியுறுத்தி இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
 
DSC_0188.JPG
 
DSC_0176.JPG
 
DSC_0170.JPG
 
  • கருத்துக்கள உறவுகள்

மலக்குழிகளிலிருந்து நீர் கிணறுகளில் நிச்சயம் செல்லக்கூடிய சந்தர்ப்பமுண்டு...இன்று அதிகமாக வீடுகள் கட்டப்படுவதால் மலக்குழிகளும் அதிகமாக கட்டப்படுகிறது.....மலக்குழிகளுக்கு மாற்றுவழிகளை மாநகரசபைகள்,நகரசபைகள்,பிரதேசசபைகள் எடுக்க வேண்டும்

  • தொடங்கியவர்
'நொதேர்ன் பவர் நிறுவனத்துடன் மாகாண அமைச்சர்களுக்கு தொடர்பு'
 

article_1451209554-aaaaaaaaaaaaaaa.jpg

-செல்வநாயகம் கபிலன்

நொதேர்ன் பவர் நிறுவனத்துடன் மாகாண அமைச்சர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் தொடர்பு உள்ளது. இதனால் தான், சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய் கழிவு இல்லை என கூறி பூச்சாண்டி காட்டுகிறார்கள் என சுன்னாகம் கழிவு எண்ணெய் நீரினால் பாதிக்கப்பட்ட மயிலனி பகுதியினை சேர்ந்த எஸ்.சசிகுமார் தெரிவித்தார்.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை (27) சுன்னாகம் நகரத்தில் இடம்பெற்றது.இதில் கலந்து கொண்ட பாதிக்கப்பட்ட மக்களில் ஒருவரான சிவகுமார் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நிபுணர் குழுவினரையும் மத்திய அரசாங்கத்திலும் மாகாண அரசில் உள்ளவர்களையும் கேட்கின்றோம். எங்கள் ஊரில் வந்து இரண்டு நாட்கள் தங்கி நின்று உங்களால் எங்கள் வீட்டு தண்ணீரை குடிக்க முடியுமா? உங்களால் குடிக்கு முடியும் என்றால் நாங்கள் குடிக்கின்றோம். ஆதாரங்கள் இருக்கின்றன.

நான்கு நாட்கள் நீரை எடுத்து வைத்து பார்த்தபோது எண்ணெய் படலங்கள் மிதக்கின்றன.  கையில் எடுத்து பார்க்கும் போது ஈயப்படலம் தெரிகிறது. ஏன் நீங்கள் மூடி மறைக்கிறீர்கள்? உரும்பிராயிலும் நீர்வேலியிலும் வட்டுக்கோட்டையிலும் நீர் மாதிரி எடுத்து பரிசோதித்து விட்டு எண்ணெய் படலம் இல்லை என கூறுகிறீர்கள். சுன்னாகம் மயிலினி, ஏழாலை பகுதிக்கு வாருங்கள் அங்குள்ள நீரை எடுத்து பரிசோதனை செய்யுங்கள் என்றார்.   

மேலும்,இப் பிரச்சினைக்கு உடனடியாக மத்திய அரசாங்கமோ, மாகாண அமைச்சோ தீர்வினை பெற தவறுமாயின் இவர்களுக்கு எதிராக வடபகுதி மக்களை ஒன்றாக்கி மக்கள் போரட்டத்தினை மேற்கொள்வோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/162428/-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%A8-%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%AA-#sthash.bfwNKXpu.dpuf

Edited by நவீனன்

3 hours ago, putthan said:

மலக்குழிகளிலிருந்து நீர் கிணறுகளில் நிச்சயம் செல்லக்கூடிய சந்தர்ப்பமுண்டு...இன்று அதிகமாக வீடுகள் கட்டப்படுவதால் மலக்குழிகளும் அதிகமாக கட்டப்படுகிறது.....மலக்குழிகளுக்கு மாற்றுவழிகளை மாநகரசபைகள்,நகரசபைகள்,பிரதேசசபைகள் எடுக்க வேண்டும்

இப்போது முன்பு போன்ற மலக்குழிகள் இங்கு கட்டப்படுவதில்லை. இவை மூடிய (அதாவது 6 பக்கமும்) குழிகள். நிரம்பினால் இதற்குரிய வாகனத்தினால் உறுஞ்சி எடுக்கப்படும். பழைய குழிகள் அடிப்பகுதி மண்ணாகவே இருக்கும், மேலும் பக்கங்களிலும் ஓட்டைகள் விடப்பட்டிருக்கும். தவிர இதற்கான திணைக்களம் கடுமையான விதிகளைப் பின்பற்றுகிறது. இங்கு பிரச்சனை பழைய குழிகள்தான். அவற்றைப் புதுப்பிக்க ஏதாவது செய்ய வேண்டும்.

எண்ணைக் கழிவுகளை நிலத்தில் ஓட்டை போட்டு அதற்குள் விட்டுள்ளதாகவே தெரிகின்றது. இதனது விளைவு இவ்வளவு சீக்கிரமாக இருக்காதாம். அதாவது இப்போதைக்கு பயமில்லை ஆனால் வருங்காலம் மிகவும் இருண்டதாகவே (தண்ணீரைச் சொன்னேன்) இருக்கும் போல தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்குக் கிழக்கில் உள்ள கிணறுகள் திறந்த கிணறுகள். அவற்றில் இருந்து நீரை நேரடியாகப் பருகுதல்.. அதுவும் வெள்ள காலத்தின் பின் பருகுதல் ஆபத்தானது. எனவே கொதிக்க வைச்சு பின் வடிகட்டி ஆறவிட்டு பருகுதலே சிறந்தது. இப்போ.. சிறந்த வடிகட்டிகள் விற்பனையில் உள்ளன. அவற்றை பாவிக்க மக்களை தூண்டலாம்.

மேலும் எண்ணெய் கழிவு விவகாரம்.. அனல் மின்நிலையம் மக்கள் அடர்த்தி உள்ள நிலத்தை அண்டி அமைக்கப்பட்டதில் உள்ளது. இவ்வகை மின்சார நிலையங்கள மக்கள் அடர்த்தி குறைந்த இடத்துக்கு மாற்றி அமைப்பது குறித்து ஆலோசிப்பது நல்லம். பொதுவாக மேற்கு நாடுகளில் மின் உற்பத்தி நிலையங்கள் மக்கள் அடர்த்தி குறைந்த இடங்களில் அமைக்கப்பட்டு.. தேசிய மின் வழங்கல் கேபிள்கள் மூலம் மக்கள் வாழும் பகுதிக்கு உயர் அழுத்தத்தில் (400,000 V ) கடத்தி வந்து பின் மின்படி இறக்கம் செய்து 230 V / 110 V இல் விநியோகிக்கிறார்கள்.

பிரச்சனையின் மூலம் சரியாக இனங்காணப்பட்டு நிரந்தரத் தீர்வு பெறப்பட கால அவகாசம் ஆய்வுகளுக்குத் தேவை. அதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று குடிநீர் வழங்கல் திட்டங்களை அமுல்படுத்துவது பாதுகாப்பானதாகவும் மக்களிடம் நம்பிக்கையை வளர்க்கவும் உதவும். tw_blush:

Edited by nedukkalapoovan

5 hours ago, putthan said:

மலக்குழிகளிலிருந்து நீர் கிணறுகளில் நிச்சயம் செல்லக்கூடிய சந்தர்ப்பமுண்டு...இன்று அதிகமாக வீடுகள் கட்டப்படுவதால் மலக்குழிகளும் அதிகமாக கட்டப்படுகிறது.....மலக்குழிகளுக்கு மாற்றுவழிகளை மாநகரசபைகள்,நகரசபைகள்,பிரதேசசபைகள் எடுக்க வேண்டும்

மலக்குழிகளுக்கு மாற்று வழியான underground sewerage network மிகவும் சிலவு கூடிய ஒரு கட்டமைப்பு. இப்படியான கட்டமைப்புகளை வெளிநாட்டு அரசுகளின் உதவி இல்லாமல் வடபகுதியில் கட்டமைப்பது என்பது சாத்தியம் இல்லாத ஒரு நடைமுறை. வடமாகணசபை அல்லது இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டால் சில வெளிநாட்டு அரசுகள் உதவ முன்வரலாம்.

10000 m2 பரப்பளவுக்கான underground sewerage network கட்டுமான செல்லவு கிட்டதட்ட 115,000$

Edited by Surveyor

பல அறிக்கைகள் வந்துவிட்டது அனாலும் பிரச்சனையின் மூலம் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை போல தான் தெரிகிறது.

 

53 minutes ago, Surveyor said:

10000 m2 பரப்பளவுக்கான underground sewerage network கட்டுமான செல்லவு கிட்டதட்ட 115,000$

10,000 sq.m = 0.01 sq.km தான். ஏற்கனவே அரசு 2015இல் போட்ட பிச்சையிலயே அரைவாசி திறைசேரிக்கு திரும்பி போகுதாம்.எங்கையப்பா இவ்வளவு பணத்துக்கு போறது. வீதி நிர்மாணத்திற்கான பணம்தான் அதிகம் பாவிக்கப்படவில்லையாம். ஆஸ்பத்திரி வீதியருகில் நாற்றமெடுக்கும் கால்வாயையாவது துப்பரவு செய்திருக்கலாம் பயபுள்ளைக. 

இதெல்லாம் நடக்கிற காரியமா?

  • கருத்துக்கள உறவுகள்

நிலத்தடி நீரைக் குடிநீரக்குப் பயன்படுத்தும் நாம் மலக்கழிவுகள்  பாரிய குழாய்கள் மூலமாக வெளியேற்றப் படுவதற்குரிய பொறிமுறையை உருவாக்க வேண்டும். இப்போது செலவைப் பற்றி யோசித்தால் எதிர்காலத்தில் நோய்களுக்காக இன்னும் அதிகம் செலவிடவேண்டி வரும்

தனியார் நிறுவனங்கள் இப்படியான underground sewerage network போன்ற திட்டங்களுக்கு முதலீடு செய்வது மிகவும் குறைவு. ஏனனில் இந்த திட்டங்கள் மூலம் பெருமளவு லாபம் கிடைப்பதில்லை. ஆகவே இதற்க்கு ஒன்றில் எதாவது வெளிநாடு அரசாங்கங்கள் பணஉதவி செய்ய வேண்டும்  அல்லது மதிய அரசு முதலீடு செய்ய வேண்டும் அல்லது UNHCR, UNICEF, UNDP போன்ற சேவை நோக்கமுள்ள நிறுவனங்களை அணுகவேண்டும். ஆனாலும் அவர்களும் இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்வார்கள தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

மில்லியன் கணக்கில் ஆயுதம்வாங்க முடியும் ஆனால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பணமில்லையாம்.....

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, putthan said:

மில்லியன் கணக்கில் ஆயுதம்வாங்க முடியும் ஆனால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பணமில்லையாம்.....

இரண்டும் ஒரே விடயத்துக்குத்தான் பயன்படுகிறது...

உங்களுக்குப்புரியாததற்கு சிங்களம் என்ன செய்யும்...?

  • தொடங்கியவர்
குடி நீர் விவகாரம் முதலமைச்சருடன் கதைத்து முடிவு தெரிவிக்கப்படும்
 
28-12-2015 11:01 AM
Comments - 0       Views - 9

article_1451280792-aaaaaaaaaa.jpg

-குணசேகரன் சுரேன்

சுன்னாகம் பகுதியில் கிணறுகளில் உள்ள நீரை அருந்துதல் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடிப்பின் முடிவு தெரிவிக்கப்படும் என வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று(28) அமைச்சரிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஒவ்வொருவருடைய வீட்டின் கிணற்று நீரையும் பயன்படுத்த முடியுமா என்பது தொடர்பில் அந்தந்த வீட்டுக்காரர்களுக்குத்தான் தெரியும். அதனை நாங்கள் தீர்மானிக்க முடியாது.

ஆய்வு செய்து அறிக்கையை வெளியிட்டுள்ளோம். மேற்கொண்டு பொதுவான முடிவொன்றை வெளியிடும் பொருட்டு, முதலமைச்சருடன் கலந்துரையாடவுள்ளேன் என்றார்.

- See more at: http://www.tamilmirror.lk/162491#sthash.aB4t5V36.dpuf
On 27.12.2015 at 4:42 PM, ஜீவன் சிவா said:

10,000 sq.m = 0.01 sq.km தான். ஏற்கனவே அரசு 2015இல் போட்ட பிச்சையிலயே அரைவாசி திறைசேரிக்கு திரும்பி போகுதாம்.எங்கையப்பா இவ்வளவு பணத்துக்கு போறது. வீதி நிர்மாணத்திற்கான பணம்தான் அதிகம் பாவிக்கப்படவில்லையாம். ஆஸ்பத்திரி வீதியருகில் நாற்றமெடுக்கும் கால்வாயையாவது துப்பரவு செய்திருக்கலாம் பயபுள்ளைக. 

இதெல்லாம் நடக்கிற காரியமா?

அரசு போட்ட பிச்சையிலா? ஜீவன் இந்த மனநிலையிலா உங்களே் கருத்துக்கள் அமைகிறன்றன. ஜனநாயகம் பற்றி பாடம் எடுக்கிறீர்கள். அரசு ஒதுக்கும் நிதி அந்த மாகாண மக்களின் பணம் என்ற சாதாரண விடயத்தை கூட புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறீர்களே.வளர்ச்சியடைந்த  மேலை நாடுகளில் மக்களின் வரிவருமானத்தில் ஒரு பகுதி அந்த வரி செலுத்திய கிராம மக்களின்  கிராம சபைக்க்கு உரித்துடையது. ஆனால்  நீங்கள் அரசு பிச்சை போடுகிறது என்கிறீர்கள்.  அப்படியானால் அரசிடம் பிச்சை வாங்கவா மக்கள் பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்து அனுப்புகிறார்கள். அந்த பிச்சை போடும் பணம் அரசுக்கு எப்படி வருகிறது. நீங்கள் மட்டுமல்ல பலர் இப்படியான மனநிலையிலேயே இருகிறார்கள்.

Edited by trinco
எழுத்து பிழை

  • கருத்துக்கள உறவுகள்

அரசு போட்ட பிச்சை என்பது ஏனைய மாகாணங்களுக்கு ஒதுக்கப்பட்டதை விட வடக்குக்கு குறைவாக ஒதுக்கப்பட்டதை ஜீவன் கருதுகிறார் என நான் அனுமானிக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.