Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'வேலுப்பிள்ளை பிரபாகரன் வரலாறாகிவிட்டார். ஆனால், அவரது லட்சியத்துக்கு என்ன ஆனது?

Featured Replies

ராஜபக்ஷ ஆட்சியை மாற்றிய தேர்தலின் ஓராண்டு நிறைவு

160104101539_ranil_maithri_512x288_getty

இலங்கையில் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான புதிய ஆட்சிக்கு வழிவகுத்த ஜனாதிபதி தேர்தலின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, வெளிநாட்டுப் பிரதிநிதிகள் என்று பல தரப்பினரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மகாத்மா காந்தியின் பேரனும் இலங்கைக்கான இந்தியாவின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான கோபாலகிருஷ்ண காந்தி இன்றைய நிகழ்வில் முக்கிய பேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றினார்.

'பிரபாகரனின் லட்சியம்'

160108155623_gopalkrishna_gandhi_512x288

 கோபாலகிருஷ்ண காந்தி

'வேலுப்பிள்ளை பிரபாகரன் வரலாறாகிவிட்டார். ஆனால், அவரது லட்சியத்துக்கு என்ன ஆனது? அதுவும் பழைய வரலாற்றுச் சம்பவமாகிவிட்டதா?- அல்லது தலைமறைவாகியிருந்து அந்த லட்சியம் மீண்டும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளுமா?' என்று கேள்வி எழுப்பினார் கோபாலகிருஷ்ண காந்தி.

'பிரிவினைவாதம் என்பது உடனடியான நிகழ்ச்சி நிரலிலிருந்து வெளியேறிவிடமுடியும். ஆனால், அந்த உணர்வு மெதுவாக எரிந்துகொண்டிருக்கும் வரையில் அது முற்றாக இல்லாமல் போய்விட்டதாக சொல்லமுடியாது' என்றார் 2000-ம் ஆண்டுக் காலப்பகுதியில் இலங்கையில் இந்திய உயர்ஸ்தானிகராக பணியாற்றிய கோபாலகிருஷ்ண காந்தி.

புதிதாக கொண்டுவரப்படவுள்ள அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பில் வெளியாகின்ற விமர்சனங்கள் பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இங்கு பேசினார்.

'நாங்கள் நாட்டை இரண்டாக பிளவுபடுத்த போவதாகவும்..பௌத்த மதத்துக்கு உள்ள இடத்தை இல்லாமல் செய்யப்போவதாகவும்...வெளிநாட்டு ஆலோசனைகளின்படி பாதுகாப்பு படையினரை பலவீனப்படுத்தி, தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தப் போவதாகவும் சிலர் கூறுகின்றனர்' என்றார் மைத்திரிபால சிறிசேன.

'ஆனால் நீங்கள் சொல்வதை செய்வது எங்களின் முயற்சி அல்ல. உங்களுக்கு புரியாததை, உங்களுக்கு தெரியாததை செய்வது தான் எங்களின் நோக்கம் என்று அவர்களுக்கு நான் கூறுகின்றேன்' என்றார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

கொலைமுயற்சி குற்றவாளிக்கு மன்னிப்பு

160108160452_sivaraja_jeniban_512x288_pr  

அவர் முன்னர் அமைச்சராக இருந்த 2006-ம் ஆண்டு காலத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தி அவரைக் கொலைசெய்ய முயன்றதாக தண்டனை அளிக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்துள்ளார்.

பத்தாண்டு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டிருந்த சிவராஜா ஜெனீபனை மேடைக்கு அளித்து ஜனாதிபதி விடுதலை செய்துவைத்தார்.

'எங்களின் புதிய (அரசியலமைப்பு) யோசனையை ஆதரிப்பவர்களைப் போலவே எதிர்ப்பவர்களும் உள்ளனர். ஆனால், நல்லாட்சியை மனதில் வைத்து முன்னேறிச் செல்வதா அல்லது மக்கள் நிராகரித்த அந்த பழைய அரசியல்முறைக்குச் சென்று அந்த சேற்றுக்குழிக்குள் சிக்கியிருப்பதா என்பதைத் தான் தீர்மானிக்க வேண்டும்' என்றார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க.

மகிந்த ராஜபக்ஷ ஆதரவு அணி, ஜேவிபி ஆர்ப்பாட்டம்

இதனிடையே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான பொது எதிரணிக் கூட்டணியினருடன் கடும்போக்கு பௌத்தவாத அமைப்புகள் சிலவும் சேர்ந்து அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்தியிருந்தனர்.

இதேவேள கண்டி, அஸ்கிரிய-மல்வத்து பௌத்த பீடாதிபதிகளை சந்தித்து ஆசிபெற்று திரும்பிய மகிந்த ராஜபக்ஷ, 'அரசியலமைப்பை முழுமையாக மாற்றுவதற்கு அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை' என்று கூறினார்.

ஜனாதிபதி தேர்தலின்போது, மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கடுமையான பிரசாரங்களை முன்னெடுத்திருந்த ஜேவிபி என்கின்ற மக்கள் விடுதலை முன்னணியினரும் புதிய ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக தலைநகரின் புறநகரான நுகேகொடையில் பேரணி ஒன்றை நடத்தியிருந்தனர்.

கடந்த ஆட்சிக்காலத்தில் மோசடிகளில் ஈடுபட்டவர்களையும் கொலைகளை புரிந்தவர்களையும் கைதுசெய்வதில் ரணில்-மைத்திரி அரசாங்கம் மெத்தனப் போக்கில் இருப்பதாக மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக ஜேவிபி கூறுகின்றது.

இதனிடையே, புதிய அரசாங்கத்துக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும ஐநாவின் தலைவமைச் செயலாளர் பான் கி மூன் வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/01/160108_one_year_rajapakshe?ocid=socialflow_facebook

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பிரபாகரனின் புதல்வர் கொலை செய்யப்பட்டமை வரலாறாக மாறியுள்ளது – கோபாலகிருஸ்ண காந்தி

குளோபல் தமிழ் செய்தியாளர் கொழும்பு

பிரபாகரனின் புதல்வர் கொலை செய்யப்பட்டமை வரலாறாக மாறியுள்ளது – கோபாலகிருஸ்ண காந்தி



தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய புதல்வர் பாலசந்திரன் கொலை செய்யப்பட்டமை வரலாறாக மாறியுள்ளது என மஹாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஸ்ண காந்தி தெரிவித்துள்ளார்.


கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஜனாதிபதி ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு ஓராண்டு பூர்த்தியாகும் நிகழ்வில் பங்கேற்று இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வரலாற்றில் இடம் பிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழித்தமை தொடர்பில் அவர் இவ்வாறு வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.


தீவிரவாத அமைப்பு ஒன்றின் தலைவரின் மகன் என்ற காரணத்திற்காக சிறுவன் ஒருவன் படுகொலை செய்யப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், உலகம் இதனை அனுமதிக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அப்பாவி பொதுமக்கள் பழிவாங்கல்களின் அடிப்படையில் கொன்று குவிக்கப்படுவது மோசமான வரலாறாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127655/language/ta-IN/article.aspx

 

இரண்டு விதமான செய்திகள்

 

 

என்னவெல்லாமோ சொல்கின்றார்கள். காலம் கடந்துவிட்டால் எதுவம் சம்பவமாக, வரலாறுகளாக மாறிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

National_Leader_Prabakaran1vn.jpg

எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
  • கருத்துக்கள உறவுகள்

மகாத்மா காந்தி மட்டும் என்ன வரலாறு இல்லாமல்.. ஆட்டிக்குட்டியாவ இருக்கிறார்..??!

காந்தி எப்படி சுதந்திர ஹிந்தியாவிற்காக போராடினாரோ.. அதேபோல் தான்.. பிரபாகரன் தமிழ் மக்களின் பெருவிருப்பான.. சுதந்திர தேசத்திற்காகப் போராடினார். அந்த விருப்பு வெற்றி பெறும் வரை பிரபாகரனும் மக்களோடு சேர்ந்து சுமந்த இலட்சியம் வாழும்.

சம் சும் கும்பல்.. தமிழீழம் கேட்கவில்லை என்று இப்ப சொல்லினம் என்றால்.. அதன் பின்னால் யார் இருக்கினம் என்றதற்கு இந்தப் பேச்சு நல்ல சான்று. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
மஹிந்த ராஜபக்‌ஷ புலிகளுடனான போரில் வென்றிருக்கலாம் ஆனால் போரின்போது மேற்கொண்ட குற்றங்களை மறைக்க முடியாது. இந்த வெற்றியின் மூலம் துப்பாக்கிகள் மௌனமாகிய அதேநேரம் சமாதானப் பேச்சுக்களும் மெளனமாகி விட்டன என்று தெரிவித்துள்ளார் மகாத்மா காந்தியின் பேரனான கோபாலகிருஷ்ண காந்தி.

மஹிந்த ராஜபக்‌ஷ புலிகளுடனான போரில் வென்றிருக்கலாம் ஆனால் போரின்போது மேற்கொண்ட குற்றங்களை மறைக்க முடியாது. இந்த வெற்றியின் மூலம் துப்பாக்கிகள் மௌனமாகிய அதேநேரம் சமாதானப் பேச்சுக்களும் மெளனமாகி விட்டன என்று தெரிவித்துள்ளார் மகாத்மா காந்தியின் பேரனான கோபாலகிருஷ்ண காந்தி.

   

மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஓர் ஆண்டு பூர்த்தி விழா நேற்று கொழும்பில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரபாகரன் வரலாற்றில் இடம்பிடித்து விட்டார். அவரது குறிக்கோளும் வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது. வேலுப்பிள்ளை பிரபாகரனின் குழந்தை என்பதற்காக கொடிய முறையில் அந்தக் குழந்தை கொல்லப்பட்டுள்ளது. அக்குழந்தை பயங்கரமான முறையில் இந்த உலகத்தை விட்டு சென்றுள்ளது. பிரபாகரனின் குறிக்கோள் தற்போதைய நிகழ்ச்சி நிரலில் இருந்து வெளியேறியுள்ளபோதும் நிரந்தரமாக வெளியேறவில்லை. சிங்கள, தமிழ் இனவாதங்களை நான் எதிரக்கிறேன். அனைத்து சமூகத்தவர்களுக்கும் நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட வேண்டும். இந்நிலையில் தற்போதைய ஆட்சியின் கீழ் இலங்கை நல்லிணக்க நாடாக மாறும் என்றார்.

 

gopalakrishna-gandi-090116-seithy%20(1).

 

 

gopalakrishna-gandi-090116-seithy%20(2).

 

http://www.seithy.com/breifNews.php?newsID=148897&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, nedukkalapoovan said:

மகாத்மா காந்தி மட்டும் என்ன வரலாறு இல்லாமல்.. ஆட்டிக்குட்டியாவ இருக்கிறார்..??!

காந்தி எப்படி சுதந்திர ஹிந்தியாவிற்காக போராடினாரோ.. அதேபோல் தான்.. பிரபாகரன் தமிழ் மக்களின் பெருவிருப்பான.. சுதந்திர தேசத்திற்காகப் போராடினார். அந்த விருப்பு வெற்றி பெறும் வரை பிரபாகரனும் மக்களோடு சேர்ந்து சுமந்த இலட்சியம் வாழும்.

சம் சும் கும்பல்.. தமிழீழம் கேட்கவில்லை என்று இப்ப சொல்லினம் என்றால்.. அதன் பின்னால் யார் இருக்கினம் என்றதற்கு இந்தப் பேச்சு நல்ல சான்று. tw_blush:

வெறும்  வாய்வீச்சும் பித்தலாட்ட மேடைப்பேச்சுக்கள் இவை

இந்திய அரச ராஐமரியாதையுடன் இருந்து கொண்டு

கண் மூடிக்கொண்டிருந்தபடி

அவர்களின் அத்தனை கொடூரங்களையும்  அனுசரிக்கும் ஒருத்தர்

இங்கு மேடை கிடைத்ததும் வகுப்பெடுக்கின்றார் என்றே  தோன்றுகிறது

உண்மையான காந்தி பேரனாக இருந்தால்

இந்தியாவில்

பஞ்சாப்பில் குஐராத்தில் நடந்த அவலங்களிலிருந்து தொடங்கணும்....

 

  • கருத்துக்கள உறவுகள்

திடீர்திடீரெண்டு புது கரக்டர்கள் வந்து கருத்து சொல்லுகினம்.. சிங்களவன் சொல்பேச்சு கேக்கிறானில்லைப்போலை.. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, இசைக்கலைஞன் said:

திடீர் திடீரெண்டு புது கரக்டர்கள் வந்து கருத்து சொல்லுகினம்.. சிங்களவன் சொல்பேச்சு கேக்கிறானில்லைப்போலை.. tw_blush:

இலங்கையிலே தீர்வு வந்துவிடக்கூடாது என்பதாகத்தான் இருக்கலாம்

ஈழத்தவரின் போர் வெற்றியோ 

சமாதானமோ

 எதுவந்தாலும்

அது இந்தியாவை பாதிக்கும்

அங்குள்ள பாதிக்கப்பட்டமக்கள்

அழிவுக்குள்ளான இனங்கள்

இதை முன்னதாரணமாகக்காட்டத்தொடங்குவார்கள் என்ற பயம் இருந்துகொண்டே இருக்கும்.

கிந்தியா என்ற ஒரு சனியன் இல்லாதிருந்தால்

இலங்கை எவ்வாறு இருக்கும்....

 

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, இசைக்கலைஞன் said:

திடீர்திடீரெண்டு புது கரக்டர்கள் வந்து கருத்து சொல்லுகினம்.. சிங்களவன் சொல்பேச்சு கேக்கிறானில்லைப்போலை.. tw_blush:

எந்தக்காலத்தில் சிங்களவர் இவர்களின் சொல்லை கேட்டிருக்கினம். இவர்கள்தான் சொல்ல முதலே ஓடி ஓடி செய்கிறவை .... காரணம் தமிழர்கள் மேல உள்ள கடுப்பு அல்லது கசப்பு 

  • கருத்துக்கள உறவுகள்

இவைக்கும் பிள்ளையை கொன்றது  குத்துது. அடுத்த 50 வருடங்களுக்கு புலிகள் இல்லாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளை அழித்த வீரராக கொண்டாடப்படும் மகிந்த ராஜபக்சவை புறம் தள்ளி விட்டு........ பிரபாகரன் வரலாறு பேசுகின்றனர்.

காந்தியின் பேரன் காந்தியாக முடியாது. காந்தி ஒருவர்தான். இந்தியாவை காந்தீய தேசம் என்று சொல்ல முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

அதில் ஒர் நியாயம் இருந்தது என்று சகல‌ருக்கும் தெரியும்  

  • கருத்துக்கள உறவுகள்
On 1/9/2016 at 1:24 PM, இசைக்கலைஞன் said:

திடீர்திடீரெண்டு புது கரக்டர்கள் வந்து கருத்து சொல்லுகினம்.. சிங்களவன் சொல்பேச்சு கேக்கிறானில்லைப்போலை.. tw_blush:

அவன் எப்ப இந்தியாக்காரண்ட சொல்லை கேட்டிருக்கிறான். இப்ப கேட்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.