Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வல்வெட்டித்துறையில் பறந்த காற்றாடிகள்

Featured Replies

வல்வெட்டித்துறையில் பறந்த காற்றாடிகள்

 

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தைத்திருநாளையொட்டி, வினோத விசித்திர பட்டப் போட்டித் திருவிழா நடைபெற்றிருக்கின்றது.

s5levs.jpg

வல்வெட்டித்துறையில் பறந்த காற்றாடிகள்

பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த பட்டத் திருவிழா வடக்கிற்குச் சென்ற உல்லாசப் பயணிகளின் கவனத்தையும் ஈர்த்து ரசிக்கச் செய்திருக்கின்றது.

பத்து, பதினைந்து, பதினெட்டு அடிகள் என நீளத்திலும் அகலத்திலும் அமைக்கப்பட்ட பல்வேறு உருவங்களைக் கொண்ட இந்த பட்டங்கள் சுமார் 60 அடி உயரத்தில் வானத்தில் பறக்கவிடப்பட்டு, பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியிருக்கின்றன.

வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையமும், வல்வெட்டித்துறை உதயசூரியன் விளையாட்டுக் கழகமும் இணைந்து இந்தப் போட்டியை ஒழுங்கு செய்திருந்தன.

நீண்டகாலமாக நடத்தப்பட்டு வந்த இந்தப் பட்டம் விடும் போட்டியானது, யுத்த காலத்தில் தடைபட்டிருந்ததன் பின்னர், இந்த வருடம் முப்பதினாயிரம் மக்கள் கலந்து கொண்ட வகையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றிருக்கின்றது என்றார் விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் துணைத்தலைவர் விமலதாஸ் கவிச்செல்வன்.

அறுபத்தேழு போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் செவ்வாய்க்கிரகத்தில் இருந்து வந்ததாகக் கற்பனை வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்த போர் விமானப் பட்டம் முதலாம் இடத்தைத் தட்டிக்கொண்டது.

கலை நுணுக்கமும், விஞ்ஞான தொழில் நுட்பமும் கொண்டதாக மின் விளக்குகளை உள்ளடக்கி பத்துப் பதினைந்து, பதினெட்டு அடி நீள அகலத்தைக் கொண்ட உருவங்களைப் போட்டியாளர்கள் பட்டங்களாக உருவாக்கி பறக்கவிடுகின்றார்கள் என்றார் கவிச்செல்வன்.

இயற்கையிலேயே கைவரப்பெற்ற திறன் வாய்ந்த கலைஞர்கள் இந்த வினோத பட்டப் போட்டித் திருவிழாவுக்காக பல்வேறு வடிவங்களிலான உருவங்களைக் கொண்ட பட்டங்களை உருவாக்கி போட்யில் கலந்து கொள்கின்றனர் என்றார் கவிச்செல்வன்.

1692avt.jpg

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/01/160116_lankakite

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பறந்தவை..

12418034_10206584567471596_6835182573888

 

12565353_10206584567871606_8152689606387

12509265_10206584568671626_6313673185565

  • தொடங்கியவர்

நன்றி கிருபன்..:)

இன்னும் நிறைய படங்கள் இருக்கு. ஆனால் யாழில் மீண்டும் படங்கள் இணைக்கும் முறை கடந்த 2 நாளாக செயல்படவில்லை.

ஆதலால் பல படங்கள் இணைக்க அதிக நேரம் தேவை..:mellow:

  • தொடங்கியவர்

பிரபாகரன் ஊரில் மாபெரும் பட்டத் திருவிழா: கடலெனத் திரண்ட மக்கள் (படங்கள்)

 

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலைச் சிறப்பிக்கும் வகையில் இலங்கையின் யாழ்ப்பாணத்தின் வல்வெட்டித்துறையில் மாபெரும் பட்டப் போட்டித் திருவிழா வெகு விமரிசையாக இடம்பெற்றது.
 

village%201.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில் ஆண்டு தோறும் மிகப் பிரமாண்டமாக இந்தப் பட்டப் போட்டித் திருவிழா இடம்பெற்று வருகின்றமை விசேட அம்சமாகும்.

வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நேற்று (15ம் தேதி) பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமான இப்போட்டித் திருவிழாவில் பல்வேறு அழகிய வண்ணங்களில் உருவான ஏராளமான பிரமாண்ட பட்டங்கள் வானில் பறக்க விடப்பட்டன.
 

village.jpg

குறிப்பாக மயில், உளவு இயந்திரம், ரைட் சகோதரர்களின் விமானம், பறக்கும் தட்டு, இயந்திரப் படகு, கிறிஸ்துமஸ் வண்டி, மாட்டுவண்டி, பாம்பு, திருக்கை மீன் போன்ற பட்டங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தன.

இந்நிகழ்வுகளில் பிரதம விருந்தினராகப் பங்கேற்ற வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சிறப்புரையாற்றியதுடன், போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தார்.
 

village%202.jpg

பட்டத் திருவிழாவைக் கண்டுகளிக்க யாழ்ப்பாணத்தின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வல்வெட்டித்துறையில் திரண்டதால் உதயசூரியன் கடற்கரை நிரம்பி வழிந்தது.


இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து புலம்பெயர் தமிழ் மக்களின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட அணைக்கட்டு திறந்து வைக்கப்பட்டதுடன், கல்வியில் சாதனை படைத்த கல்விச் சாதனையாளர்களும் கெளரவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து இன்னிசை நிகழ்வுகள் இரவு 11 மணி வரை இடம்பெற்றன. 

http://www.vikatan.com/news/world/57719-valvettithurai-jaffna-ltte-prabhakaran.art

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில உதை பட்டம் விடுறது என்று தானே சொல்லுறவை. அதென்ன காற்றாடி..??! உது கொழும்பு புறநகர் வாழ் ஆக்கள் சொல்லுற சொல். நாம் ஊரில் காற்றாடி என்பது வேற. tw_blush:

இவைதான் ஊரில் காற்றாடி எனப்படுவது..

cho11-2014-102.jpg

35987_148321151845363_100000024382553_47

 

  • கருத்துக்கள உறவுகள்

பல சாதனையாளர்களை உருவாக்கித் தந்ததோடு, இலங்கை என்றொரு தீவு இருப்பதையும் உலகத்தில் உள்ள சாதாரண மக்களுக்கும் அறியும்படி செய்த பெருமையைக்கொண்டது வல்லை மண். தமிழர்களுக்கு ஒரு ஒப்பற்ற தலைவனையும் தந்தமண்.  வினோத விசித்திர பட்டங்களைப் பறக்கவிடுவது ஆச்சரியமானதல்ல. tw_heart::)

  • கருத்துக்கள உறவுகள்

12573879_1109577302388390_80801432759765

12494970_1109577499055037_11487663752954

12507491_1109577535721700_48056334167861

12552580_1109577549055032_22965370115026

12507516_1109577992388321_50038640977109

12509489_1109577165721737_53748019537611

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Paanch said:

பல சாதனையாளர்களை உருவாக்கித் தந்ததோடு, இலங்கை என்றொரு தீவு இருப்பதையும் உலகத்தில் உள்ள சாதாரண மக்களுக்கும் அறியும்படி செய்த பெருமையைக்கொண்டது வல்லை மண். தமிழர்களுக்கு ஒரு ஒப்பற்ற தலைவனையும் தந்தமண்.  வினோத விசித்திர பட்டங்களைப் பறக்கவிடுவது ஆச்சரியமானதல்ல. tw_heart::)

பாஞ்! உண்மையிலும் உண்மை. அது வீரம் செறிந்த மண். :)

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

பாஞ்! உண்மையிலும் உண்மை. அது வீரம் செறிந்த மண். :)

உண்மைதான் சாமியாரே, தலைவரின் வீட்டைப் பார்க்கவந்த சிங்களவரும் தலைவர்வீட்டு மண்ணில் கொஞ்சம் தங்களுடன் எடுத்துச் சென்றதாகச் செய்திகளும் வந்தன.:) 

  • கருத்துக்கள உறவுகள்

அற்ப்புதம்.நோில் பார்க்க ஆவலைத் துன்டுது.

  • கருத்துக்கள உறவுகள்

கண்கொள்ளா காட்சி. பங்கு பற்றிய கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, Paanch said:

உண்மைதான் சாமியாரே, தலைவரின் வீட்டைப் பார்க்கவந்த சிங்களவரும் தலைவர்வீட்டு மண்ணில் கொஞ்சம் தங்களுடன் எடுத்துச் சென்றதாகச் செய்திகளும் வந்தன.:) 

அது மட்டுமல்ல......தலைவரின் வீட்டை பார்க்க வந்த சிங்கள பெண்மணிகள் .........பிரபாகரனைப்போல் ஒரு வீரத்திருமகன் தங்கள் வயிற்றிலும் பிறக்க வேண்டும் என  இறைவனிடம் வேண்டினார்களாம். :)

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

அது மட்டுமல்ல......தலைவரின் வீட்டை பார்க்க வந்த சிங்கள பெண்மணிகள் .........பிரபாகரனைப்போல் ஒரு வீரத்திருமகன் தங்கள் வயிற்றிலும் பிறக்க வேண்டும் என  இறைவனிடம் வேண்டினார்களாம். :)

எங்கே மற்ற கோஸ்டி?tw_tounge_wink:

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, putthan said:

எங்கே மற்ற கோஸ்டி?tw_tounge_wink:

மற்றக் கோஸ்டிகள் இப்போ சாட்டுவதற்குப் புலிகள் இல்லையே என்று கலங்கித் தவித்து, வேறுயாரைப் போடலாம் என்று தேடிநிற்கிறார்கள்.:( 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

அது மட்டுமல்ல......தலைவரின் வீட்டை பார்க்க வந்த சிங்கள பெண்மணிகள் .........பிரபாகரனைப்போல் ஒரு வீரத்திருமகன் தங்கள் வயிற்றிலும் பிறக்க வேண்டும் என  இறைவனிடம் வேண்டினார்களாம். :)

 

7 hours ago, putthan said:

எங்கே மற்ற கோஸ்டி?tw_tounge_wink:

இதை வாசிச்சுக் கெக்கட்டம்போட்டுச் சிரிச்சன்! :cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Paanch said:

மற்றக் கோஸ்டிகள் இப்போ சாட்டுவதற்குப் புலிகள் இல்லையே என்று கலங்கித் தவித்து, வேறுயாரைப் போடலாம் என்று தேடிநிற்கிறார்கள்.:( 

சரியாச்சொன்னியள்  பாஞ்ச்!....நூற்றுக்கு நூறுவீதம் உண்மை :cool:

யாழ்ப்பாணத்தில் தியேட்டரில் படம் பார்க்க சனம் லைனில் நிண்டா ஒரு கதை... பட்டம் பறக்க விட்டா வேறை கதை........ என்னவோ எம் மண்ணில் மக்கள் சந்தோசமாய் இருக்கிறாங்கள் .. அதுவே எம் சந்தோசம் :cool: 

தலைவருடன் அரசியல் வேறுபாடுகள் இருக்கலாம் அதற்காக அவரை இப்படியெல்லாம் எழுதி அவரை கேவலப்படுத்தவிரும்பவில்லை .

14 hours ago, குமாரசாமி said:

அது மட்டுமல்ல......தலைவரின் வீட்டை பார்க்க வந்த சிங்கள பெண்மணிகள் .........பிரபாகரனைப்போல் ஒரு வீரத்திருமகன் தங்கள் வயிற்றிலும் பிறக்க வேண்டும் என  இறைவனிடம் வேண்டினார்களாம். :)

ஜெயகாந்தனின் "சினிமாவிற்கு போன சித்தாளு " நினைவு வருகின்றது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, putthan said:

எங்கே மற்ற கோஸ்டி?tw_tounge_wink:

வந்திட்டினம்.tw_lol:

வரிசையாய் வந்திட்டினம். :cool:

  • கருத்துக்கள உறவுகள்

அட... சந்தோஷமாகப் பட்டம்விடுகின்ற இடத்திலும் கோஸ்டிபூசலாக இருக்கின்றது. பேசாம வட்ஸப்பில வம்பளக்கப் போகவேண்டியதுதான்.

Edited by கிருபன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.