Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிக்குகள் சிலரால் நீதிமன்றத்தின் முன் குழப்பநிலை (வீடியோ)

Featured Replies

பிக்குகள் சிலரால் நீதிமன்றத்தின் முன் குழப்பநிலை (வீடியோ)

பிக்குகள் சிலரால் நீதிமன்றத்தின் முன் குழப்பநிலை (வீடியோ)

January 26, 2016  02:41 pm

Bookmark and Share
 


பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விளக்கமறியலில் வைத்தமையை அடுத்து, ஹோமாகம நீதிமன்றத்தின் முன்னால் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

ஞானசார தேரரை விளக்கமறியலில் வைப்பின் தம்மையும் விளக்கமறியலில் வைக்குமாறு கோரி, பிக்குகள் சிலர் ஒன்று கூடியமையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்ற வேளை, நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னலிகொடவை (பிரகீத் எக்னலிகொடவின் மனைவி) அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஞானசார தேரர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சந்தேகநபரான தேரர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக சட்டத்தரணிகளால் நீதவானிடம் தெரியப்படுத்தப்பட்டது.

இதன்படி ஞானசார தேரரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, ஹோமாகம பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகருக்கு, நேற்று நீதவானால் உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில், ஹோமாகம பொலிஸில் இன்று தேரர் சரணடைந்ததை அடுத்து, கைதுசெய்யப்பட்டார்.

இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பொதுபலசேனா, ராவன பலய மற்றும் சிகல ராவய ஆகிய அமைப்புக்களைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் சிறைச்சாலை பஸ்சை செல்ல விடாமல் பாதையை மறித்து இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்புக்காக பொலிஸாருக்கு மேலதிகமாக கலகத் தடுப்பு பிரிவினர், பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளதோடு, தண்ணீர் பவுச்சர்களும் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும் சிறைச்சாலை பஸ்சை செல்லவிடாமல் தடுத்து, துறவிகள் கூச்சலிட்டபடி, ஞானசார தேரருக்கு பிணை வழங்குமாறும் அவ்வாறு இல்லையாயின் தம்மையும் விளக்கமறியலில் வைக்குமாறும் கோரிக்கை விடுப்பதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

காவாலி பிக்குகள்.

இவையளுக்கு தண்ணி பவுசர், அதிரடி பொலீஸ் தேவையில்ல.

நாலு வடிவான பெட்டையள அந்தப் பக்கமா, நடக்க விட்டா, பின்னால ஓடீப் போயிருப்பினமே. :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

5+percept.JPG

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த விகாரைகளுக்கு போய் வந்த புண்ணியம்..... பலன் உடன் கிடைத்துவிட்டது....

  • தொடங்கியவர்
வெலிக்கடைச் சிறையில் ஞானசார தேரர்
 
27-01-2016 05:28 AM
Comments - 0       Views - 207

article_1453826997-Gnanasara.jpgபொது பல சேனாவின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஹோமாகம நீதவான் நீதிமன்றம், நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டதையடுத்து, நீதிமன்ற வளாகம் அல்லோல கல்லோலப்பட்டது.

நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிடிக்கப்பட்டிருந்த நிலையில், ஹோமாகம பொலிஸ் நிலையத்தில்  அவர் சரணடைந்ததையடுத்து, கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

காணாமல் போனதாகக் கூறப்படும் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொடவை ஞானசார தேரர், திறந்த நீதிமன்றத்தில் வைத்து திங்கட்கிழமை (25), ஏசியதாக நீதவானின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்தே, அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஞானசார தேரர், விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக உத்தரவிடப்பட்டதை அறிந்த சுமார் 50க்கும் மேற்பட்ட தேரர்கள் உள்ளடங்கலாக 200 பேர், தங்களையும் கைதுசெய்து, விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்ற வளாகத்தில் வைத்து கோஷமிட்டனர்.

'எங்களைக் கைது செய்', 'பசங்களா வாங்கடா' என்று, தேரர்கள் கோஷமிட்டனர்.

நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை வாகனத்துக்கு அண்மையில் வந்த தேரர்கள், வாகனத்துக்கு முன்பாகவும் டயர்களுக்கு கீழேயும் படுத்துக் கொண்டனர், இன்னும் சில தேரர்கள், புரண்டு, புரண்டு தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இன்னும் சில தேரர்கள், நீதிமன்றத்துக்குள் நுழைவதற்கு முயன்றபோதும், அங்கு கடமையிலிருந்த பொலிஸார், நீதிமன்றத்தின் பிரதான வாயில் மற்றும் ஏனைய வாயில்கள், கதவுகளை மூடிவிட்டனர்.

அதன்பின்னர், மதில் மீதேறி குதித்த தேரர்கள், நீதிமன்ற வளாகத்துக்குள் சென்றுவிட்டனர்.

நீதிமன்ற வளாகத்துக்குள் தேரர்கள் குழப்பம் விளைவித்தமையால், கடமைகளுக்காக மேலும் 300 பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன், கலகம் அடக்கும் பொலிஸாரும், தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனத்துடன் விரைந்தனர்.

இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தேரர்களில் சிலர், மயங்கிவிழுந்துவிட்டனர். அவர்களை, ஏனைய தேரர்கள் சிலர், தூக்கிச்சென்று முதலுதவியளித்தனர்.

இன்னும் சிலர், நீதிமன்றத்தின் வாயிலுக்கு முன்பாக அமர்ந்து பிரித் ஓதினர்.

நீதிமன்ற வளாகத்தில் அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டமையால், நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவிருந்த சகல வழக்குகளையும், பெப்ரவரி மாதம் 8ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் ரங்க திஸாநாயக்க, நீதிமன்ற நடவடிக்கைகளை 11.30 முதல் 12.20வரை தற்காலிகமாக இடைநிறுத்திவிட்டார்.

அந்த எதிர்ப்பு நடவடிக்கை, உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் சகல நடவடிக்கைகளையும், பிற்பகல் 2.20க்கு, முற்றுமுழுதாக நிறுத்தி விட்டார்.

இதேவேளை,  ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி, ஹோமாகம நீதிமன்றத்துக்கு முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் முழுமையாக விசாரித்து அறிக்கையிடுமாறும் அவ்வறிக்கையை, மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களிடம் தான் கையளிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று செவ்வாய்க்கிழமை(16) நாடாளுமன்றத்தில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, 6 மணித்தியாலங்களுக்குப் பின்னர், மாலை 5.30 மணியளவில், விசேட அதிரடிப்படையினரின், விசேட கப் ரக வாகனத்தில் ஏற்றப்பட்ட ஞானசார தேரர், வெலிக்கடைச் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அடைக்கப்பட்டுள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/164739/%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%B1-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%9E-%E0%AE%A9%E0%AE%9A-%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%B0-#sthash.N1DVJUnl.dpuf
  • தொடங்கியவர்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களக் காடைகளுக்கு காவி போட்டு பிக்குன்னு அழைக்கிறாங்க.. அவ்வளவும் தான். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் எங்கும் எந்த ஓர் மதகுருவும் இப்படி நடந்து கொள்ளமாட்டார்கள். 

12 hours ago, குமாரசாமி said:

5+percept.JPG

இந்த பஞ்சசீலக் கொள்கையை யார் கடைபிடிக்கின்றார்கள்?
இலங்கை எனும் அழகிய தேவதையை சீரழிக்கும் கடையர்களே இவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

இதேவேளை,  ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி, ஹோமாகம நீதிமன்றத்துக்கு முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் முழுமையாக விசாரித்து அறிக்கையிடுமாறும் வ்வறிக்கையை, மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களிடம் தான் கையளிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று செவ்வாய்க்கிழமை(16) நாடாளுமன்றத்தில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

சிறீலங்காவில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசியல்வாதிகளைக் கொண்டு ஆட்சி நடைபெறவில்லை, அங்கு காவியுடைதரித்த காடைகளை உள்ளடக்கிய புத்த பிட்சுகளே ஆட்சிபுரிகின்றனர் என்பதை அந்நாட்டின் பிரதம மந்திரியே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். :shocked: :(   

கடவுளின் பெயரால் மதம்கொண்டு உலகில் ஆட்சி அமைத்திருக்கும் முசுலீம் நாட்டுகளில்கூட அரசாங்கமே முடிவுகளை மேற்கொண்டு அறிவிக்கின்றது. :unsure: 

12 hours ago, குமாரசாமி said:

5+percept.JPG

இந்த ஒழுக்கங்கள் பற்றி சிங்களவரும் அறிந்துகொள்ளக் கூடியதாக சிங்களத்திலும் எழுதப்படல் வேண்டும். :grin:

இலங்கையை இந்த நிலைக்கு கொண்டுவந்ததற்கு பிக்குகளுக்கு பெரும் பங்கு உண்டு .

உலகம் இன்று வன்முறையால் கட்டுடுண்டு கிடப்பதற்கு மதங்களே காரணம் .

இந்துமதவாதிகளால் இந்தியா மிக விரைவாக அதை நோக்கி போய்கொண்டு இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, arjun said:

இலங்கையை இந்த நிலைக்கு கொண்டுவந்ததற்கு பிக்குகளுக்கு பெரும் பங்கு உண்டு .

உலகம் இன்று வன்முறையால் கட்டுடுண்டு கிடப்பதற்கு மதங்களே காரணம் .

இந்துமதவாதிகளால் இந்தியா மிக விரைவாக அதை நோக்கி போய்கொண்டு இருக்கு .

மதத்துக்குள் எப்படி புலியை விடுறது எண்டு யோசிக்கிறேன் ........

எவளவோ கிழிக்கிறோம் ....
புலியை இதற்குள் விடமட்டமா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.