Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாண ராசதானியின் வாரிசு ராஜா ரெமீஜியஸ் கனகராஜா-செவ்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

jaffna_kingசுமார் 400 வருடங்களிற்கும் மேலாக செழிப்புடன் விளங்கிய யாழ்ப்பாண ராசதானியின் வாரிசு ராஜா ரெமீஜியஸ் கனகராஜா. நல்லூரை இராசதானியாக ஆரியச்சக்கரவர்த்தி மற்றும் யாழ்ப்பாண அரசர்களின் பரிபாலனம் போர்த்துக்கேயரின் வருகையுடன் முடிவிற்கு வந்தது.யாழில் அரசபரம்பரைக்குரிய சங்கிலியன்தோப்பு அரண்மனைக்கு உரித்துள்ள குடும்பத்தின் வாரிசு இவர்.தற்பொழுது நெதர்லாந்தில் வசித்து வருகிறார். தற்போதும் அரச சம்பிரதாயங்களை கைவிடாமல் வாழ்ந்து வருகிறார். 2005ம் ஆண்டு அரசகுடும்ப உறுப்பினர்களின் ஏகோபித்த சம்மதத்துடன் அரசகுடும்பத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தின் சம்பிரதாய ராஜாவுடனான நேர்காணல் இது.

1. யுத்த சமயத்தில் இராணுவம் புலிகள் இருதரப்பையும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறுமாறு கடும் தொனியிலான எச்சரிக்கையொன்று வெளியிட்டிருந்தீர்கள். பின்னர் அதுபற்றி நீங்கள் எதுவும் பேசவில்லை. உங்களது யாழ்ப்பாண இராச்சியத்தில் இன்னும் உயர்பாதுகாப்பு வலயங்கள் உள்ளன. மக்கள் அகதி முகாம்களில் வாழ்கிறார்கள். அது பற்றி நீங்கள் பேச மாட்டீர்களா?

ஆம். போரினுடைய இறுதி நாட்களில் போரை நிறுத்துவதற்கும் சரணடைவதற்கும் இன்னும் கால அவகாசம் உள்ளதாகக் கூறியிருந்தேன். அந்தக் கட்டத்தில் இரு தரப்பினரும் போராடிக் கொண்டிருந்ததுடன் என்னுடைய பேச்சையோ அல்லது சர்வதேச அமைப்புக்களினுடைய பேச்சையோ செவிமடுக்கும் நிலையிலிருக்கவில்லை.

நான் நினைக்கவில்லை இலங்கை அரசாங்கம் இராணுவ முகாம்களை அகற்றும் என்று. ஆனால் இராணுவப் பிரசன்னம் குறைக்கப்படவேண்டும். அண்மையில் அவர்கள் வடக்கில் தங்கள் தலையீடுகளைக் குறைத்துக்கொண்டதாக ஊடகங்கள் வாயிலாக அறியப் பெற்றேன்.

என்னுடைய புத்தாண்டுச் செய்தியிலும் பிற பத்திரிகை நேர்காணல்களிலும் இடம்பெயர்ந்த மக்கள் பற்றியும் அவர்கள் சொந்த இடங்களில விரைவில் தாமதமின்றி மீள்குடியமர்தப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளேன்.

இனி போரைப் பற்றிக் கதைப்பதையோ மக்களை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் என்று பெயரிடுவதையோ நிறுத்தவேண்டிய நேரம். யுத்தம் முடிந்துவிட்டது. போரின் காரணமாக மக்கள் தங்களுடைய வாழ்க்கை முறைமை, அன்பிற்குரியவர்கள், கலாச்சாரம் ஆகிய அனைத்தையும் இழந்துவிட்டனர். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு நாம் இடம் கொடுக்கவேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.

2. நீங்கள் யாழ்ப்பாண அரச பரம்பரையின் வாரிசு. இப்பொழுது வெளிநாட்டில் வாழ்கிறீர்கள். அங்கு வாழ்க்கை எப்படியுள்ளது. சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டுமென்ற ஆசையெல்லாம் இல்லையா?

என்னுடைய உயிருக்கு ஆபத்து இருந்ததால் இலங்கயை விட்டு வெளியேறினேன். என் சொந்த நிலமல்லாத ஒரு தேசத்தில் வாழ்கின்றேன். என்னுடைய தேசத்தை விட்டு வந்த நாள் முதல் என் மனமும் இருதயமும் அங்கேயே இருக்கின்;றது. நான் இலங்கையில் நடைபெறும் நிலமையை நன்கு அறிவேன். அன்றாடம் நாட்டில் நிகழும் தகவல்களோடு தொடர்பில் உள்ளேன்.

என்னுடைய கடமைகள் என்னை ஆக்கிரமித்துள்ளன. நான் லண்டனில் சர்வதேச முடியாட்சிக் குழு உறுப்பினராக இருக்கின்றேன். தென் கிழக்காசிய அரச குடும்பங்களிற்கிடையில் நட்புறவை ஊக்குவிக்கின்ற தென் கிழக்காசிய அரச குழுவிலும் உறுப்பினராகவும் உள்ளேன்.

ஒரு முறை நீங்கள் ராஜாவாகப் பிறந்தால் பிறரிற்காக கஸ்டப்பட்டு வேலை செய்யவேண்டி இருக்கும். உங்களுடைய தேவையகளை விட அவர்களுடைய ஈடுபாடுகளினை வைத்தே அணுகவேண்டி இருக்கும்.

பெயர்ந்து வாழும் பலரும் தங்களுடைய தாய் நாட்டிற்குத் திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு தற்போது நாடு திரும்பியுள்ளவர்கள் ஒன்றிணைவதன் மூலம் நாட்டில் நல்ல முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். மீண்டும் சொல்கிறேன் என் மனமும் இதயம் இலங்கையிலேயே உள்ளது. நம் எல்லோருக்கும் வாழ்க்கை என்பது ஒரு நித்திய போராட்டம். நான் மீண்டு வர பல வருடங்களாகப் போராடிக் கொண்டு உள்ளேன்.

3. அரசபரம்பரைக்கு பின்னர் வந்த தமிழ் தலைவர்களில் யாரை சிறந்தவராக நீங்கள் கருதுகிறீர்கள்?

நான் எந்த அரசியல் கட்சிக்குமோ அல்லது ராஜ ஆட்சிக்குமோ ஆதரவு இல்லை. அரசியல்வாதிகளுக்கு மக்களினுடைய வாக்குகள்தான் வேண்டும். பின்பு அவர்களைக் கண்டுகொள்வதில்லை. 2015 இல் தமிழர்களின் வாக்குகளால்தான் அரசாங்கமே மாற்றப்பட்டது. தமிழ் அரசியல் தலைவர்கள் அனைத்துப் முக்கிய பிரச்சினைகளயும் எழுத்து வடிவத்தில் கொண்டு வருவதுடன் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் ஒரு உடன்பாட்டிற்கும் வரவேண்டும்.

இன்று தமிழ் அரசியல்வாதிகள் ராஜதந்திரத்தின் அடிப்படையில் செயற்படுவதில்லை. அவர்கள் ராஜதந்திரம் என்றொரு வார்த்தை இருக்கின்றது என்பதையே மறந்துவிட்டனர்.

பலர் தலைவராக இருப்பதற்கும் கொடி பிடிப்பதற்குமே விரும்புகின்றனர். ஆனால் தமிழ் மக்கள் தங்களுக்கென்று ஒரு நந்திக்கொடி இருக்கின்றது என்பதை மறக்கக் கூடாது. 1970 இலிருந்து பல்வேறு தமிழ் இயக்கங்கள் தோன்றி அவற்றிற்கு தற்போது என்ன நடந்தது என்பதையும் நான் நினைவுபடுத்தவேண்டியதில்லை என்று நினைக்கின்றேன்.

4. உங்களிற்கு பிடித்த யாழ்ப்பாண உணவு எது?

எனக்குப் பிட்டு , இடியப்பம், , முருங்கைக்காய் கத்தரிக்காய்க் கறி ஆகியன பிடிக்கும். (மிகவும் பிடித்தது ராசவள்ளிக்கிழங்கு, பாயாசம் )

5. யாழ்ப்பாணம் வந்தால் நிச்சயம் செய்தே தீர வேண்டும் என்ற தீராத ஆசையேதாவது உள்ளதா?

நான் முதலில் என் தகவலில் குறிப்பிட்டது போலவே நான் ஆட்சி செய்வதற்கோ அல்லது மக்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கோ கேட்கவில்லை. ஆனால் நான் நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை செய்ய இங்கே இருக்கின்றேன் என்பதைத் தெரியப்படுத்துகிறேன். நாங்கள் இளைய தலைமுறையினரை நாட்டில் முக்கிய பங்குவகிக்க முன்வருவதற்கு ஊக்குவிக்க வேண்டும்.

ஒற்றுமையாக இருப்பதுவே நாட்டில் பிரகாசமான எதிர்காலமொன்றை உருவாக்குவதற்கான ஒரே வழி என்பதை அவர்களுக்கு புகட்ட வேண்டும். நாங்கள் தமிழ் மக்களிற்கு சுதந்திரமாகக் கதைப்பதற்கும் சம உரிமையுடன் தங்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக்கொள்வதற்கும் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்.

மாணவர்களினுடைய பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். நான் வடக்கு, கிழக்கு மற்றும் ஏலவே பின்நிற்கும் தெற்கையும் அபிவிருத்தி செய்வேன். நான் தமிழர்களுடைய வளமான பாரம்பரியத்தை மீண்டும் கொண்டு வருவேன். சில காலத்திற்குள் யாழ்ப்பாண இராச்சியம் (கோட்டை) திருத்தியமைக்கப்படும். அத்தோடு அந்த மகத்துவமான நாள் மக்களால் கொண்டாடப்படும் தினம் விரைவில் வரும் என்று நான் நம்புகின்றேன்.

6. வடக்கு மாகாணசபைக்கு உங்களின் ஆலோசனை என்ன?

பிறபகுதியிலிருந்து இலங்கையின் வடபகுதி ஒரு குழப்பமான நிலையிலேயே உள்ளது. ஆகவே வட மாகாணசபையை உறுதியாக நின்று தமிழ் மக்களினுடைய பிரச்சினையைத் தீர்த்து வைக்கவேண்டும் எனவும் அத்தோடு வடமாகாணசபை வடக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகளை எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றேன்.

7. மைத்திரியை நேரில் சந்தித்தால் என்ன சொல்வீர்கள்?

ஜனாதிபதி இலங்கையினுடைய அரசாங்கத்தையும் மக்களையும் புது முன்னடைவுகளை; பெறுவதற்கு வழிநடாத்துவார் என நம்புகின்றேன். தமிழ் இன முரண்பாடு இன்னும் முழுமையாகத் தீர்கப்படவில்லை. தமிழ் மக்கள் சரியான அங்கீகாரம் பெறவேண்டும்.

நாட்டின் அனைத்து அரசியல் தமிழ் கைதிகளுக்கும் பொமன்னிப்பு வழங்கப்படுவதோடு குறைந்தபட்சம் மனிதாபிமான அடிப்படையிலாவது அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும்.

ஊழல் தொடர்பான சட்டங்களைக் கடுமையாக இயற்றி ஊழலுக்கான தண்டனைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படவேண்டும். சம்பந்தப்பட்ட ஊழல் குற்றவாளிகள் சட்டத்தால் தண்டிக்கப்படவேண்டும்.

8. எப்பொழுது யாழ்ப்பாணம் வருகிறீர்கள்?

இலங்கை திரும்புவதற்கான என்னுடைய தனிப்பட்ட பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது என்பதை நானறிவேன். இருந்தபோதிலும் இலங்கை அரசாங்க அதிகாரிகள் என் வருகைக்கான பாதுகாப்பை பொறுப்பேற்று நாட்டிற்கு வருவதற்கும் தங்குவதற்குமான ஏற்பாடுகளை உறுதி செய்தாலே நான் வரக் கூடும். இப்போதுவரை இனந்தெரியாக் குழுக்களாலோ அல்லது தனிப்பட்டவர்களாலோ எனக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளது.

9. யாழ்ப்பாணத்தில் சமூகவிரோத செயல்கள் அதிகரித்து செல்வதை செய்திகளில் அறிந்திருப்பீர்கள். சிலகாலத்தின் முன்னர் பிபிசி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டபோது ‘ஓரினச் சேர்க்கையாளர்களிற்கு மரணதண்டனை கொடுப்பேன்’ என்ற சாரப்பட சொன்னீர்கள். யாழ்ப்பாணத்தில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்களிற்கு உங்களின் தண்டனை என்ன?

(1)ஓரினச் சேர்க்கையானது மரணதண்டனை விதிக்கப்படும் ஒரு குற்றமாக இன்னும் சில நாடுகளில் உள்ளது. அவர்களில் எத்தனை பேரைத் தண்டிக்க வேண்டும் அல்லது தண்டிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியுமா? நாம் மக்களிற்கும் இளைய தலைமுறையினருக்கும் நோய் ஆபத்துக்கள் பற்றிய விழிப்புணர்வைக் கற்றுக் கொடுக்கவேண்டும். ஏனெனில் இது உலகளாவிய ரீதியில் ஒரு பாரிய பிரச்சினை ஆகும்.

இலங்கை பெருவாரியாக ஒரு கல்வியறிவுள்ள நாடு. ஆனால் கடுமையான சமூக அமைப்பு மற்றும் பழமைவாத மதத் தரப்பு ஆகியன இந்தப் பிரச்சினையயை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கலாம். மேலும் படித்த சமுதாயத்தில் கூட ஓரினச் சேர்க்கையைப் பற்றிக் கதைப்பதென்பது ஒரு விலக்கப்பட்ட விடயமாகவே உள்ளது.

எய்ட்ஸ் தெற்காசியாவிலேயே ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது. கிராமப் புறங்களில் ஒரு முறையான சுகாதார மருத்துவ உட்கட்டமைப்பு அவசியம் தேவை. அரசாங்கத்தினுடைய உந்துசக்தி மற்றும் முயற்சி ஆகியன முறையான சுகாதார வசதி, விழிப்புணர்வு இன்றி இறக்கும் மக்களைப் பாதுகாப்பதாய் அமையவேண்டும்.

நான் இலங்கையில் நிலவும் மோசமான எய்ட்ஸ் நோய் நிலைமை குறித்து வருத்தப்படுகின்றேன். அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என விரும்புகின்றேன்.

http://www.kuriyeedu.com/archives/35482

1 hour ago, colomban said:

யாழ்ப்பாண ராசதானியின் வாரிசு ராஜா ரெமீஜியஸ் கனகராஜா

இவரைப்பற்றி வாசித்ததுண்டு. ஆனாலும் பெயர் ரொம்ப இடிக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் சிறுவர்களாக இருந்தபோதே மதம்மாற்றப்பட்டு வளர்க்கப்பட்டார்கள் என்று வாசித்த நினைவு.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஜீவன் சிவா said:

இவரைப்பற்றி வாசித்ததுண்டு. ஆனாலும் பெயர் ரொம்ப இடிக்குது.

வரலாறு முக்கியம் அமைச்சரே,

சிங்கள கோட்டை இராசதானி அரசருக்கு, போர்த்துக்கேயரால் கழுத்துக்கு கத்தி வந்த போது, கத்தோலிக்கராக டொன் யுவான் தர்மபால என்று மதம் மாறி தப்பிக் கொண்டார்.

யாழ்ப்பாணத்து மன்னன் சங்கிலியன் தோற்கடித்து கொல்லப் பட்ட பின்னர், அவனது வாரிசுகள், மதம் மாறித் தான் தப்பி பிழைத்தார்கள்.

இவர் யாழ்ப்பாண இராசதானி வாரிசு என்றால் அந்த மதம் மாறித் தப்பிப் பிழைத்தவர்களில் வந்த வாரிசு தான்.

500 வருடங்கள் ஆகின்றன. போர்த்துக்கேயரிடம் யாழ் இராசதானி வீழ்ந்து.....

ஆங்கிலேயர் போகும்போது சிங்களவனிடம் வழங்கியதால் இன்னும் அடிமை மண் தான்.

என்று தான் விடியுமோ ?

  • கருத்துக்கள உறவுகள்

 எங்களை அடிமைகளாக  தாரை வாத்துப்போட்டு, அதில குளிர் காயுதுகள். குற்ற உணர்வு சற்றுமில்லாமல். 

  • கருத்துக்கள உறவுகள்

இவனுங்க கொஞ்சப் பேர் இப்ப கொஞ்சக்காலமா நாங்க தான் யாழ்ப்பாணி என்று கிளம்பி இருக்கிறாய்ங்க. இவங்களை இயக்கிறது அந்நிய சக்திகள். சில அந்நிய சக்திகள்.. எங்களில் சிலதை வைச்சே எங்களை குழப்பிற அலுவலை நல்லா பார்க்கிறார்கள்.

அகதிகளாக உள்ள மக்களுக்கு உதவ வக்கில்லாத நெதர்லாந்து தான் விட்டிட்டு போன கோட்டையை (நாங்க எங்களின் அடிமைச் சின்னமாக கருதும் கோட்டையை) புனரமைக்க கொட்டின காசு சொல்லும்.. அது இன்னும் காலணித்துவத்தை கைவிடல்லை என்று. அந்தக் காலணித்துவத்தின் பாதணிகளாக இருக்கும்.. இதுங்க எல்லாம்.. தமிழர் இராய்ச்சியத்தின் இராசதானிகள் அல்ல.. மாறாக.. தமிழர் இருப்பை கருவறுக்க வரும் காட்டேரிகள்.

மக்கள் இதில தெளிவா இருக்கனும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியலடா சாமி !<_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 13.2.2016 at 7:53 PM, colomban said:

4. உங்களிற்கு பிடித்த யாழ்ப்பாண உணவு எது?

எனக்குப் பிட்டு , இடியப்பம், , முருங்கைக்காய் கத்தரிக்காய்க் கறி ஆகியன பிடிக்கும். (மிகவும் பிடித்தது ராசவள்ளிக்கிழங்கு, பாயாசம் )

எங்கடை ச/அரசு! புட்டு இடியப்பம் முருக்கங்காயை இன்னும் மறக்கவேயில்லை கண்டியளோ :cool:

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

எங்கடை ச/அரசு! புட்டு இடியப்பம் முருக்கங்காயை இன்னும் மறக்கவேயில்லை கண்டியளோ :cool:

 இன்னும் மறக்காமல் இருக்கிறார். ஆகையால் இவர்தான் எங்களுக்கு ராசாவாக வர தகுதியானவர்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, satan said:

 எங்களை அடிமைகளாக  தாரை வாத்துப்போட்டு, அதில குளிர் காயுதுகள். குற்ற உணர்வு சற்றுமில்லாமல். 

இந்தக் கூற்றை தாயகத்தில் இருக்கும் முன்னாள் போராளிகளும், போரினைச் சுமந்த மக்களும் இன்னொரு தரப்பை நேக்கி கேட்பதே நியாயமானதும் சரியானதும் ஆகும். அந்த இன்னொரு தரப்பு இப்பொழுது "ஜெனிவா திருவிழா"வுக்கு ஆயத்தமாகி வருகின்றது. 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.