Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"முதலில் உரிமை பிறகு கலப்புத் திருமணம்"-விக்னேஸ்வரன்

Featured Replies

"முதலில் உரிமை பிறகு கலப்புத் திருமணம்"-விக்னேஸ்வரன்

தமிழ் மக்களுக்கு முதலில் உரிமைகள் பிறகு கலப்புத் திருமணங்கள் என வட மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

150323130447_jaffna_land_ceremony_512x28
 கலப்புத் திருமணங்களை எதிர்க்கவில்லை, ஆனால் உரிமைகள் முதலில் என்கிறார் விக்னேஸ்வரன்

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சாரணர் மாநாடு ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இக்கருத்தை விக்னேஸ்வரன் வெளியிட்டார்.

இலங்கையில் கலப்புத் திருமணங்கள் நல்லிணகத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வழிவகுக்கும் என வட மாகாணத்தின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள ரெஜினால்டு குரே கடந்த வாரம் தெரிவித்திருந்தது பரபரப்பையும் விவாதங்களையும் தோற்றுவித்துள்ளது.

அவருடைய கலப்பு இனவாக்கம் என்ற கருத்து காலத்திற்கு ஒவ்வாதது, மக்களின் இயற்கை வாழ்க்கை முறைக்கு முரணானது, ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பிபிசி தமிழோசையிடம் வடபகுதி மக்களில் சிலர் தெரிவித்தனர்.

சாதி, மதம், இனம் என்பவை சமூகத்தில் பெரிய செல்வாக்கையும் ஆளுமையும் செலுத்தும் விஷயங்கள் என்பதால் கலப்புத் திருமணம் செய்வதென்பது எதிர்கால சந்ததியினர் மத்தியில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என பிபிசியிடம் பேசிய பலர் தெரிவித்தனர்.

கலப்புத் திருமணம் செய்பவர்களில் யாராவது ஒருவர் தனது தனித்துவத்தையும், அடையாளத்தையும் இழக்க வேண்டி வரும், இது நிச்சயமாக மனத்தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

எனினும் தனது பிள்ளைகள் கலப்புத் திருமணம் செய்துகொண்டுள்ள நிலையில், தான் அதற்கு எதிரானவன் அல்ல என்று விக்னேஸ்வரன் விளக்கியுள்ளார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/02/160222_mixedmarriage_cvv?ocid=socialflow_facebook

 

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, நவீனன் said:

"முதலில் உரிமை பிறகு கலப்புத் திருமணம்"-விக்னேஸ்வரன்

தமிழ் மக்களுக்கு முதலில் உரிமைகள் பிறகு கலப்புத் திருமணங்கள் என வட மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

150323130447_jaffna_land_ceremony_512x28

 கலப்புத் திருமணங்களை எதிர்க்கவில்லை, ஆனால் உரிமைகள் முதலில் என்கிறார் விக்னேஸ்வரன்

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சாரணர் மாநாடு ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இக்கருத்தை விக்னேஸ்வரன் வெளியிட்டார்.

இலங்கையில் கலப்புத் திருமணங்கள் நல்லிணகத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வழிவகுக்கும் என வட மாகாணத்தின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள ரெஜினால்டு குரே கடந்த வாரம் தெரிவித்திருந்தது பரபரப்பையும் விவாதங்களையும் தோற்றுவித்துள்ளது.

அவருடைய கலப்பு இனவாக்கம் என்ற கருத்து காலத்திற்கு ஒவ்வாதது, மக்களின் இயற்கை வாழ்க்கை முறைக்கு முரணானது, ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பிபிசி தமிழோசையிடம் வடபகுதி மக்களில் சிலர் தெரிவித்தனர்.

சாதி, மதம், இனம் என்பவை சமூகத்தில் பெரிய செல்வாக்கையும் ஆளுமையும் செலுத்தும் விஷயங்கள் என்பதால் கலப்புத் திருமணம் செய்வதென்பது எதிர்கால சந்ததியினர் மத்தியில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என பிபிசியிடம் பேசிய பலர் தெரிவித்தனர்.

கலப்புத் திருமணம் செய்பவர்களில் யாராவது ஒருவர் தனது தனித்துவத்தையும், அடையாளத்தையும் இழக்க வேண்டி வரும், இது நிச்சயமாக மனத்தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

எனினும் தனது பிள்ளைகள் கலப்புத் திருமணம் செய்துகொண்டுள்ள நிலையில், தான் அதற்கு எதிரானவன் அல்ல என்று விக்னேஸ்வரன் விளக்கியுள்ளார்.

இனம் சார்ந்து தெளிவான கருத்தும்

தனது சொந்த வாழ்வு சார்ந்து நேர்மையான கருத்தும்...

நன்றி ஐயா..

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாணத்தின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள ரெஜினால்டு குரேயின் கருத்து கண்டணத்திற்குரியதாகும். அவருடைய தமிழ்மொழியிலான உரையாடலிலேயே தெரிகிறது. இதே கருத்தையே கச்சதீவில்வைத்தும் கூறியிருந்தார். நீர்கொழும்பில் தொடங்கிதை யாழ்பாணத்திலும் நடாத்தி முடித்துவிட்டால் இனப்பிரச்சினை  ஒன்றே இராது. இதுவே சிங்களத்தின் நீண்டகாலத் திட்டமுமாகும். சிங்களத்தின் விசுவாசிகளும் வக்காளத்து வேண்டுவோரும் சிந்திப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

ரெஜினோல்ட் குரே சிங்கள இனவாதப் பழம் தின்று கொட்டை போட்ட ஐ தே கட்சி அடியாள். அவரை நியமிக்கும் போதே தெரியும் நாசூக்கா நஞ்சை விதைப்பார் என்று. ஐக்கிய தேசியக் கட்சியின் இலக்கு.. இன அழிப்பு என்பதை நாசூக்காக நடத்தி முடிப்பது தான்.

நாம் தமிழர்கள் தான் எல்லாத் தளத்திலும் விழிப்போடு இருந்து இந்த சிங்கள பெளத்த பேரினவாத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நெருக்கடிகள்... உபாயங்களில் இருந்து எம் மக்களையும் மண்ணையும் அவர் தன் உரிமையையும் பாதுக்காக்கவும் பெற்றுக் கொடுக்கவும் வேண்டும். அதற்கு தமிழர்கள் விடாது சிங்கள அணுகுமுறைகளை உன்னிப்பாக கவனிக்கவும் மக்களை எச்சரிக்கவும் எமது பிரச்சனை விருப்புத் தொடர்பில்.. சர்வதேசத்தை அறிவூட்டவும் தவறக் கூடாது. 

இலக்கு தெளிவானால்.. குரே.. கீரே எல்லாம் இலகுவில் சமாளிக்கப்படக் கூடிய அணுகுமுறைகள் ஆகும். இன்றேல்.. சர்வ நாசம் தான் தொடர்ச்சியாகும் நமக்கு. :rolleyes:

நன்றி விக்கி ஐயா மக்களை சரியான திசையில் உரிமை தொடர்பில் வழிநடத்துவதற்கு. 

பழைய ஆளுனர் பாலிஹக்கார ஏதோ சொன்னாராம், இளைப்பாறிய பின்னர். கூரேயும் அதைத்தான் சொல்லப் போகிறார் இவர்களைப் பற்றி.

இப்பவாவது எதையாவது புரிஞ்சு மக்களுக்கு ஏதாவது பண்ணுங்க அப்பு. நல்ல மனிதர் என்பதற்காக தேர்ந்தெடுத்துவிட்டு பின்னர் நிர்வாகத் திறமை இல்லாததால் கவிட்டு கொட்டாமல், முதலமைச்சரே நல்ல தெரிவு என்கிறார். பாலிஹக்காரவும் நல்ல தெரிவுதான். கூரே அதைவிட திறம்தான். 

மறுபடியும் பன்றி கையில் கொடுத்த கத்தரிக்காய் போலாகாமல் இருந்தால் சரி.

 

 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

வட மாகாணத்தின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள ரெஜினால்டு குரேயின் கருத்து கண்டணத்திற்குரியதாகும். அவருடைய தமிழ்மொழியிலான உரையாடலிலேயே தெரிகிறது. இதே கருத்தையே கச்சதீவில்வைத்தும் கூறியிருந்தார். நீர்கொழும்பில் தொடங்கிதை யாழ்பாணத்திலும் நடாத்தி முடித்துவிட்டால் இனப்பிரச்சினை  ஒன்றே இராது. இதுவே சிங்களத்தின் நீண்டகாலத் திட்டமுமாகும். சிங்களத்தின் விசுவாசிகளும் வக்காளத்து வேண்டுவோரும் சிந்திப்பார்களா?

நோ நோ,

நாங்க வைகோ தமிழரா இல்லையா எனும் ஆராச்சியில் ரொம்ப பிசி

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ பிரபாவை தவறாக வழிநடத்தினாரா இல்லையான்னு பட்டிமன்றம் வையுங்க.. இங்கின ஒரு அண்ணன்.. சீமானை மறந்து.. வந்து  சுழன்று அடிப்பார்.

வைகோ வை.. சோனியா காங்கிரஸ் தமிழகத் தலைவர் இளங்கோவன் கள்ளத்தோணின்னு சொல்ல வைகோவே அதை மறுக்கல்ல. இதில..................... சீமான் வைகோ பூர்வீக ரீதியாக.. ஒரு தெலுங்கர் என்ற உண்மைச் சொன்னது தான் இப்ப ஆராய்ச்சியா தெரியுது. 

வைகோ பிரபாகரன் நேசித்த தமிழ் தேசியத்தை விமர்சிக்க எதிர்க்க அழிக்க.. கோரிக்கை விடுகிற அளவுக்கு..தகுதி வைச்சுருக்காருன்னா.. சீமான் வைகோவின் பூர்வீகம் பற்றி பேச்சை ஏன் கிளப்பக் கூடாது. பிரபா களத்தில் இருந்திருந்தால் வைகோ தமிழ் தேசியத்தை அழிக்க... அதிமுக.. திமுகவை கூட்டாக வர அழைப்பாரா...??! 

வேண்டாப் பொண்டாட்டி கைபட்டால் குத்தம் கால் பட்டால் குத்தம் என்ற கணக்கா இருக்கு இப்ப யாழில விவாதங்கள். ஒரு உருப்படியான கருத்தியல் அதில இல்லை. நிமிசத்துக்கு நிமிசம் பல்டி. tw_blush:

வைகோவின் சில நடவடிக்கைகள் சமீப காலமாக தமிழர் விரோதப் போக்கில் அண்ணா திராவிட விசுவாச மிகுதியில் இருக்குது. தமிழரை அழித்த.. திமுக.. அதிமுக வை தமிழ் தேசியக் குரலை தமிழகத்தில் அழிக்க வைகோ கூட்டா வர அழைச்சது என்பது எந்த அறிவின் பால்பட்டது என்று புரியவில்லை. அப்படி என்ன வெறுப்பு வைகோவுக்கு தமிழ் தேசியம் மீது...??! அப்போ தமிழ் தேசியத்தை வலுயுறுத்தி வந்த பிரபாகரனை வைகோ மதித்தார் என்பது பொய்யா.. என்ற கேள்வியும் எழுகிறது. அப்படி என்றால்.. வைகோ தமிழீழ போராட்டத்தை ஹிந்தியாவுக்காக உளவு பார்க்க பிரபாவை மதிப்பதாக ஈழத்தமிழருக்காக வருந்துவதாக வேடம் போட்ட.. றோ ஆளா என்ற கேள்வியும் வலுக்கிறது...?! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டுவரும் கயவர்களை அழிக்க ஒன்று கூடுங்கள் என்பதே வைகோ சொன்னது.

தமிழ்த்தேசியத்தை ஒழிக்க ஒன்று கூடுங்கள் என்றல்ல.

தமிழ்நாட்டில் சீமான் பேசுவது தமிழ்த்தேசியமே அல்ல. சாதீயம்.

பிரபா இருந்திருந்தால் வைகோ இப்படி பேசும் நிலை வந்திராது. ஏனென்றால் சீமானை இப்படி தன்பெயரை சொல்லி சாதியம் வளர்க்க பிரபா விட்டிரார்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியத்தை கயவர்கள் பேசுகிறார்கள் என்றால்.. வைகோவே திராவிடத்தை விடுத்து தமிழ் தேசியத்தை முன்னிறுத்தினால்.. அந்தக் கயவர்கள் ஒழிவார்களே. தமிழ் தேசியம் பேசுறவன் கயவனுன்னா.. திமுக.. அதிமுக திராவிடம் பேசுறவன் என்ன வெள்ளாந்தியா.. அவங்க செய்த கயமை தெரியாதா வைகோவுக்கு.

சீமான் சாதியம் பேசினார் என்று கோபப்படுகிறார் வைகோ என்றால்.. சாதிக்கட்சியும்.. சாதிச் சான்றிதழும் அளித்து.. தமிழகத் தமிழனை சாதிவாரியாகப் பிரிச்சாளும் திமுக அதிமுக.. போன்ற கயவர்களை எதுக்கு துணைக்களைத்தார் வைகோ. இப்போ சாதிக்கட்சியாளர்கோடு தான் கூட்டணியும் போட்டுள்ளார். 

சீமான் அப்படி ஒன்று சாதி ஆழப்படுத்தவில்லையே. எவன் சாதியை ஆழப்படுத்திறானோ.. அவனை விழித்து எதிர்க்கிறார்.. மக்களுக்கு இனங்காட்டிறார் சீமான். அதன் மூலம் தான் சாதிய தடைகளை தாண்ட முடியும். 

ஒரு காலத்தில்.. ஈழத்தில்.. ஈபி.. புளொட் சாதி சார்ந்து ஆட்களைச் சேர்த்து தமக்குள் மோதி அழிந்த நிலையை.. ஏற்படுத்தவா சீமான் சாதி பேசுறான் என்ற கோசத்தின் மூலம் தமிழ் தேசியக் குரலை நசுக்க முனைகிறார்கள். அதற்கு வைகோ உடந்தையா..???!

பிரபா யாருக்கும் கட்டளை இடும் மனிதரல்ல. சீமானின் ஒத்த கருத்துக்களை மதித்து அவரையும் அரவணைத்தாரே தவிர.. சீமானை வாரிசு என்று சொல்லவில்லை. சீமானும் சொல்லவில்லை. சீமான் தலைவர் களத்தில் இருந்த போதும் அண்ணன் என்று தான் சொன்னார் இப்போதும் அண்ணன்.. தலைவன் என்று தான் சொல்கிறார். அவர்கள் மாறவில்லை. ஆனால் வைகோ வின் பார்வைகள் இப்போ சரியில்லை. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சாதிச் சான்றிதழ் என்பது அரசியல் அமைப்புப் படி, அம்பேத்கர் பரிந்துரையில் பெரியார் போராடிக் கொணர்ந்தது. இது சாதியின் பெயரால் வீழ்த்தப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு சமூகச் சீர்திருத்தம்.

இதை முழுமையாய் அமல் படுத்தியதால்தான் தமிழ்நாடு இந்த்ஹியாவிலே சமூக சீர்திருத்த்தில் ஒரு விடிவெள்ளியாய் இருக்கிறது.

இந்த அடிபடையே தெரியாத அளவுக்கு உங்கள் தமிழக அரசியல் அறிவு இருப்பதால் உங்களுடன் தொடர்ந்து பேசிப் பயனிருக்குமாப் போல் தெரியவில்லை.

வைகோ தமிழ்தேசியத்தை ஏன் முன்னிறுத்தவில்லை?

ஏனென்றால் தமிழ்நாட்டில், யார் தமிழன் என்பதில் ஒரு பெரிய பிரச்சினை உண்டு. கிட்டத்தட்ட 40-50 வீதம் மக்கள், குறிப்பாக வட மாவட்டங்களில் தூய தமிழ் தேசிய வரையறைக்குள் அடங்காது போகலாம்.

This is a pandoras box. இது சாதியம் எனும் பூதத்தை சீசாவில் இருந்து திறந்து, மொழிவாரியாக இருக்கும் கொஞ்ச நஞ்ச ஒற்றுமையையும் நாசம் பண்ணி விடும்.

இந்த கைங்காரியத்தைதான் இப்போ சீமான் செய்கிறார்.

திருமா கட்சி தலித் உரிமைக்கானது.

சீமான் கட்சி, நாயக்கர், வன்னியர், முதலியார், நாயர், யாதவர் இன்னும் பல சாதிகளின் உரிமைக்கு எதிரானது. இதுதான் வித்தியாசம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

சாதியை அழின்னா.. சாதிச்சான்றிதழைக் காட்டுன்னு சொல்லி சமூக நீதி வழங்கினமாம்.. உலகத்தில எங்கப்பா நடக்கு இது..??! இதை பெரியார் புடுங்கினாராம். பெரியாருக்கு அரசியல் செய்ய கன்னடத்தில் ஒரு மண்ணாங்கட்டி ஆதரவும் கிடைக்கல்ல.. தமிழன் தலையில... பிராமண எதிர்ப்பை வைச்சு.. தமிழனை தமிழன் மோதவிட்டு.. அதில குளிர்காய்ஞ்சார். கடைசியில தமிழக மக்களால்.. அரசியல் ரீதியாக நிராகரிக்கப்பட்ட ஒருவர்.. ஒரு இளம்பெண்ணை கட்டிக்கிட்டு செட்டிலாகிட்டார்.. இதுதான் பெரியார் என்கிற கன்னடத்திராவிட வெறியர் செய்தது.. தமிழகத்தில்.

சாதி சான்றிதழ்களூடு சாதியை ஒழிக்கலாமுன்னா.. இவ்வளவு காலமும் ஏன் ஒழிக்காம அதை வளர்கிறீங்க...??! சாதி பள்ளிக்கூடத்தில கூட இருக்குது தமிழகத்தில். இந்தச் சான்றிதழ்கள் தான் அவனை சாதி ரீதியா அடையாளம் காட்டுது. பிறகு அது வெளிப்படையாகுது. கடைசி நீயா நானாவில் இதுதான் பேசப்பட்டது.

அப்படி இருக்கு அங்க நிலைமை..

இங்க சிலதுங்க.. தங்களுக்கு தெரிஞ்ச நாலு இங்கிலிசை உள்ளுக்க செருகி.. தாங்க பெரிய வியாகியாணம் எழுதினமாம் என்ற கற்பனையில்.. குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

சீமான் சாதியம் மொழியிறவனை அவனுடைய ஆயுத்தாலேயே அடிச்சு வீழ்த்தனுன்னு நினைக்கிறது சரி. அப்ப தான் அவனுக்கு அவன் தவறு புரியும். சீமான் களத்தில் நிலமை அறிஞ்சு பேசுறாரே தவிர.. சீமானின் நாம் தமிழரின் கொள்கை என்பது தெளிவானது. சாதி.. மத.. பால் பிரிவினையற்ற நாம் தமிழரென தமிழ் தேசிய உணர்வு கொண்டிணைந்த.. தமிழகம்.. ! அந்த இலக்கை அடைய முதல் பல குழப்பங்களை சீமான் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அந்தளவுக்கு தமிழகத்தில் சாதியை வேரூண்டி வைத்திருக்கிறார்கள். மிக ஆழம் வரை அது வேரூண்டி விட்டது சமூகத்தில். tw_blush:

 

அந்த சாதிய வேரில் ஆட்சியமைச்சு சுகித்துவிட்ட திராவிடத்தை அதன் வால்பிடி சாதியக் கூறுகளை கட்சிகளை வீழ்த்தாமல் சாதியை வீழ்த்த முடியாது. ஈழத்தில் சாதி மறக்கப்பட சாதியை முன்னிறுத்தி முளைத்த ஈபி புளொட் அழிப்பும் ஒரு முக்கிய காரணியாக அமைந்தது. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கானொளியில வைகோ என்ன பேசிறார் என்று அறிந்து தான் பேசுறாரா ....?
இவரை இனியும் நம்பலாமா .....இவர் பெரிய தெய்வங்களின் உப தெய்வம் போல தான் என் சிற்றறிவுக்கு படுகிறார் 
அ.தி.மு.க , தி.மு,க வை விட இந்தாள் ஆபத்தானவர் போல தெரியுது  

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை பற்றி எல்லோரும் குத்தி முறிவார்கள் .....
காரணம் கேட்டால் ...
அவரை நம்ப முடியாதாம் 
இப்ப இப்பிடி பேசுறவர் நாளைக்கு எமாற்றுவாராம்.

அவர் நாளைக்குதானே ஏமாற்றுவார் 
இவர்கள் இன்றே ஏமாற்றுகிறார்களே ?
எப்படி ஆதரிப்பது ?
என்றால் பதில் இருக்காது 

இப்பதான் ஒருவர் புதுசா ஒரு ஸ்டேட்மெண்ட்  டுடன் குதிச்சிருக்கிறார் 
"சீமான் சாதி வெறி பிடிச்சவர்"

பிடிக்கட்டுமே !
அப்டியே வைச்சுகோங்க 
அது பிடிக்காத தமிழன் யார் இருக்கிறான் ?

தமிழர்கள் இழந்த உரிமையை யார் பிடித்து தந்தாலும் போதும்.

சீமானுக்கு கருப்பு சேர்டு பிடித்துவிட்டது  (எப்போதும் போடுகிறார்) 
என்று நாளை யாரவது வருவாங்க இந்த பக்கம். 

  • கருத்துக்கள உறவுகள்

மேலே வளைச்சு வளைச்சு விளக்கம் கொடுத்தாயிற்று. வைகோ தமிழ்தேசியத்தை அழியுங்கள் என்று சொல்லவில்லை. தமிழ்தேசியம் பேசிக் கொண்டு  வரும் கயவர்களை அழியுங்கள் என்றே சொன்னார்:

உங்களை வைகோ ஏமாற்றினார் என்று நாக்கூசாமல் சொல்றீங்க பாருங்க. சாதி வெறியன் எண்டாலும் பரவாயில்லை எம்மை ஆதரித்தா போதும் என்றீங்க பாருங்க, இந்த சுய நலத்துக்கு இனி எப்போ வெள்ளை அடிக்கப் போறீங்க/

சீமான் ஏமாற்றுவார் என்று யார் சொன்னது கடைசிவரைக்கும் பத்து சீட்டுக்களும் தேறமாட்டார் பிறகு அவருடன் ஏன் மினக்கெடுவான் 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, arjun said:

சீமான் ஏமாற்றுவார் என்று யார் சொன்னது கடைசிவரைக்கும் பத்து சீட்டுக்களும் தேறமாட்டார் பிறகு அவருடன் ஏன் மினக்கெடுவான் 

வரும் தேர்தல் பற்றி உங்களுடைய கணிப்பு இது என்றால் 
அது உங்கள் அரசியல் தமிழகம் சார்ந்த அறிவும் கணிப்பும் 
அது உங்கள் உரிமை !

இன்னும் 6 வருடம் கழிந்து .... 
12 வருடம் கழிந்து ...
18 வருடம் கழிந்தும் 
இப்படி என்றால் ?
அது வெறும் தூற்றுதல் மட்டுமே ! 

சீமான் அரசியலுக்கே ரொம்ப புதிது 
வரும் தேர்தலில் வெல்லாம் என்பதில் சாத்தியமில்லை.
மோதுவது 2 பழைய கால் ஊன்றிய கட்சிகள்.

எகிப்தில் இளைய சமூதாயம் வீதியில் இறங்கி 20-25 வருட நிலைமையை 
மாற்றி இருக்கிறார்கள்.

அமெரிக்க தேர்தலில் நான் பெர்னி சாண்டரை ஆதரிக்கிறேன் 
ஆரம்பத்தில் உங்களைபோல கருத்து சொன்னவர்கள் அதிகம் 
(நான் கூட அப்படிதான் நம்பினேன் .... ஆனால் ஒரு உண்மையானவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. வெற்றி தோல்வி நான் கணக்கு எடுப்பதில்லை) 

ஆனால் இப்போ நிலைமை வேறு ..
கிலரி கிளிண்டனுக்கு  சரிசமமாக நிற்க வைத்துவிட்டோம். 

இதுதான் தமிழகத்தில் நடக்கும் என்பது எனது கருத்தில்லை 
இப்படியும் நடக்கிறதே ...?
என்பதுதான் எனது கருத்து.

எத்தனை ஆண்டுகள் போனாலும் தேர்தல்கள் வந்தாலும் அவர் நிலை அதுதான் .

நீங்கள் அதை வெறும் தூற்றல் என்று எடுக்கலாம் ஆனால் அது எனது அரசியல் அனுமானம்.

இவன் எப்படி அப்பவே அனுமானித்தான் என்று இருபது வருடங்களுக்கு பின் நீங்கள் வியந்தாலும் அதிசயமில்லை  

முயல் பிடிக்கிற நாயை மூஞ்சையில் தெரியும் .

51 minutes ago, arjun said:

சீமான் ஏமாற்றுவார் என்று யார் சொன்னது கடைசிவரைக்கும் பத்து சீட்டுக்களும் தேறமாட்டார் பிறகு அவருடன் ஏன் மினக்கெடுவான் 

பத்தாஆஆஆஆஆ !

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, arjun said:

எத்தனை ஆண்டுகள் போனாலும் தேர்தல்கள் வந்தாலும் அவர் நிலை அதுதான் .

நீங்கள் அதை வெறும் தூற்றல் என்று எடுக்கலாம் ஆனால் அது எனது அரசியல் அனுமானம்.

இவன் எப்படி அப்பவே அனுமானித்தான் என்று இருபது வருடங்களுக்கு பின் நீங்கள் வியந்தாலும் அதிசயமில்லை  

முயல் பிடிக்கிற நாயை மூஞ்சையில் தெரியும் .

இந்த அனுமானத்தில் எந்த தவறும் இல்லை!

ஆதாரம் இல்லாதபோது வெறும் தூற்றல் ஆகிவிடுகிறது அவளவுதான்.

இந்த இந்த காரணத்தால் நான் இதுதான் நடக்கும் என்று அனுமானிக்கிறேன் 
என்பதில் தவறில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியர் கலப்புத் திருமணம் செய்யலாம் அனால் அதற்கு முன்னர் எங்கள் உரிமைகளை  எங்களிடம் தாருங்கள் அதன் பின்னர் கலக்கலாம் என்கின்றார்.

சீமான் வைகோவைத் தெலுங்கர் என்கின்றார்
தமிழனைத் தமிழனே ஆழவேண்டும் என்கின்றார்.
சாதி அடிப்படையில் மற்றபர்களை நாயக்கர் ரெட்டியார் இத்தியாதி என்று மற்றவர்களைச் சாடுகின்றார்.

நல்லா இருக்கும் மனுசர்களையெல்லாம் இந்த அரசியல் என்ற சாக்கடை நாற வைக்கின்றது.
ஒருவன் போராளியாக இருக்கு வரையே நாட்டையும் மக்களையும் நேசிக்கின்றான்
போராளி அரசியல்வாதியாக மாறியதும் நாட்டையும் மக்களையும் விலைபேச முயற்சிக்கின்றான்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.