Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் எதற்க்கடா மாவீரர் துயிலுமில்லம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, arjun said:

சிறுவர்களால் பெரும் தொல்லையாக இருக்கு ,

அனைத்து இயக்கங்களுக்கும் போராளிகளுக்கும் யாருக்கு எதிராக போராடுகின்றோம் என்று தெளிவாக தெரியும் ஒருவரை தவிர 

இந்தியா -புலிகளை வளர்த்துவிட்டதே அவர்கள் தானே அந்த நேரம் இந்தியா சொல்வதை கேட்கும் நல்ல பிள்ளை அவர்கள் ,

இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் பின் நிலை மாறிவிட்டது .

இல்லையே திம்பு பேச்சுவார்த்தையின் பொழுது புலிகள் முரண்டுபிடித்ததாக பங்குபற்றிய எனைய உறுப்பினர்கள்  சொன்னார்கள்.மேலும் இந்தியா ரொவுக்கு புலிகள் தங்களுக்கு எதிராக செய‌ல்படுவார்கள் என்று அப்பொழுது தெரியவில்லையோ?........இந்தியாவுக்கு தேவை சிரிலன்கா பூராவும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பது தான்.....சிறிலங்காவில் எந்த ஆயுதப்புரட்சி(1971,1987,2009) வந்தாலும் தாங்கள் தான் அதை முறியடிப்போம் அந்த நாட்டை பாதுகாப்போம் என்று உலகுக்கு காட்டதான்....அந்த பிராந்தியத்தில் எது நடந்தாலும் நாங்கள்தான் பொலிஸ் என்று உலகுக்கு காட்ட....அதில் ஒன்று மாலைதீவு நாடகம்....

  • Replies 78
  • Views 7k
  • Created
  • Last Reply

திம்புவில்  அனைத்து இயக்கங்களும் (கூட்டணி உட்பட )  ஒற்றுமையாக சேர்ந்துதான் நாலு அம்ச கோரிக்கையை வைத்தார்கள் .

இலங்கை -இந்திய ஒப்பந்தம் தொடங்கிய நேரம் தான் புலிகள் அடம் பிடிக்கதொடங்கினார்கள் .

ஆரம்பத்தில் இந்தியாவின் கள்ளப்பிள்ளை புலிகள் இதை பலமுறை விபரங்களுடன் எழுதியுள்ளேன் .

புலிகளுக்கு ஆயுத பயிற்சி, ஆயுதம் கொடுத்தது எல்லாம் நடந்தது  இதே நேரத்தில் தான் புளொட்டின் ஆயுதத்தை பறித்தார்கள் .

எம் ஜி யார்  பணம் கொடுத்ததற்கு இவ்வளவு புழுகி தள்ளுபவர்கள் ராஜீவ் புலிகளுக்கு கொடுத்த காசை பற்றி வாயே திறப்பதில்லை 

ராஜீவ் புலிகள் ,ஈரோசிற்கு பெருந்தொகை பணம் கொடுத்தார் .புலிகள் தமது கட்டுப்பாட்டில் இருந்து வெளியில் போகமாட்டார்கள் என்று ரோ முழுமையாக நம்பியது ஆனால் பிரபாவின் திட்டம் வேறாக இருந்தது .

டெலோவை புலிகள் அடிக்கும்போது பிரபா இந்தியாவில் தான் இருந்தார் தமிழ் நாட்டில் எவரையும் முகாம்களை விட்டு வெளியில் வரக்கூ டாது என்று கட்டளையிட்டது ரோ ,

ஆனால் பொட்டம்மானை சங்கிலி கடத்திக்கொண்டு வந்தபோது  உடனே தலையிட்டு விடிவிக்கசொன்னார்கள் ,அந்த நேரம் புலிகள் உடனே கண்ணனை கடத்தியதும் நடந்தது எனவே ஒரு மோதலை தவிர்கவும் ரோ உடனே தலையிட்டிருக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, arjun said:

திம்புவில்  அனைத்து இயக்கங்களும் (கூட்டணி உட்பட )  ஒற்றுமையாக சேர்ந்துதான் நாலு அம்ச கோரிக்கையை வைத்தார்கள் .

திம்புவில் புளொட் தலைவர்  பங்குபற்றவில்லை என்று நினைக்கிறேன் ...புளொட் அதில் ஆர்வம் காட்டவில்லைதானே?

திம்புவிற்கு சென்றவர்கள் 

கூட்டணி -அமிர் ,சிவா ,சம்பந்தன் 

புலிகள் -திலகர் ,அன்டன் 

புளொட் -சித்தர் ,வாசு 

டெலோ -மோகன் ,சார்ல்ஸ் 

ஈரோஸ் -ராஜி ,இரட்ணா 

ஈபி -வரதர்  .கேதிஸ் 

அந்த நேரம்  புலிகள் ,டெலோ, ஈபி, ஈரோஸ் நான்கும் சேர்ந்து ENLF என்ற அமைப்பை உருவாக்கிவைத்திருந்தார்கள் ஆனால் திம்புவிற்கு போகும் போது புலிகள் தவிர மற்றவர்கள் ஒரு பிளைட்டிலும் புலிகள் ஒரு பிளைட்டிலும் போனார்கள் .

டெல்கியில் கூட புலிகள் எவரும் அறியாத ஒரு இடத்தில் தான் தங்கியிருந்தார்கள் .இதை நான் எழுதினால் பொய் என்பார்கள் ஆனால் புலிகள் இருந்த இடத்தை ஒரு நிருபர் மூலம் அறிந்து அனைத்து நிருபர்களுக்கும் அதை கொடுத்தது நான்தான் .பல நிருபர்கள் பிரபாகரனை பேட்டி எடுக்க தேடித்திருந்தார்கள் .

திம்புவில் இருந்து சென்னைக்கு தொலைபேசி வசதி இல்லை ரோ சந்திரன் லண்டன் சென்று இதற்காக ஒரு ஹோட் லைன் எடுத்தார் .அவ்வளவு சீரியஸாக இந்தியா இந்த பேச்சுவார்த்தையை எடுத்திருந்தது .டெல்கி வந்து சென்னைக்கு திரும்பி செல்லும்  இயக்க தலைவர்கள் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஒரு இடத்தில போய் தமது பிரதிநிதிகளுடன் பேசலாம் 

 எமக்கு டெல்கியில் அலுவலகம் இருந்ததால் சித்தர் திம்புவில் இருந்து தினமும் தொலைபேசி எடுத்து நடப்பதை சொல்வார் நான் ஒரு  பத்திரிகை நிருபருக்கு மட்டும் கொடுப்பேன் (.PTI சந்திரசேகர் .)

மறக்க முடியாத நாட்கள் அவை 

ஓரளவு புரிந்துணர்வுடன் செயற்பட்ட நாட்கள் அவை இப்படி போய் முடியும் என்று கனவிலும் நினைக்கவில்லை .

Edited by arjun
எழுத்து திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

ஒக்ஸ்பேட்டுக்கு அருகில் நிலம் வாங்கி மாவீரர் மண்டபம் கட்டப் போயினமாம்...பாதிக்கப்பட்ட போராளிகளுக்கு உருப்படியாக எதாவது செய்து முடித்து விட்டு இருக்கின்ற மிச்சக் காசில கட்டினாலாவது பரவாயில்லை...அதுவும் ஊரில கட்டினாலாவது பரவாயில்லை. முடியா விட்டால் லண்டனுக்குள்ள கட்டினாலாவது ஓகே.

ஒரு வருடத்திற்கு ஒருக்கால் போய் வழிபடுவதற்கு இப்ப இவ்வளவு செலவில மண்டபம் தேவையா?...மாவீரர் தினத்தன்று கூட இவ்வளவு தூரத்திற்கு மக்கள் போவார்களா?...மற்ற நாட்களில் பூட்டி வைப்பதற்கு இவ்வளவு செலவில் ஒரு மண்டபம்.

இங்க ஒருத்தர் லண்டனில் உள்ள கோயில்களோடு இந்த மண்டபத்தை ஒப்பிடுகிறார்.லண்டனில் எத்தனை கோயிலகள் திறந்தாலும் அத்தனை கோயில்களுக்கும் யாராவது ஒரு சனமாவது,ஒவ்வொரு நாளும் போய் வழிபாடு செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இப்ப வெளி நாட்டில் மாவீரர் மண்டபம் கட்டப் போயினம் இன்னும் கொஞ்சக் காலத்தில் தமிழீழமும் ஊரை தவிர்த்து விட்டு வெளி நாட்டில் கேட்பினம் போல இருக்குது.

பாதிக்கப்பட்ட போராளிகள் இன்னும் கஸ்டத்தில் இருக்க மண்டபம் கட்டுவதை அந்த மாவீரர்களினது ஆத்மா கூட மன்னிக்காது...அட்லீஸ்ட் மாவீரர்களது கனவான தமிழீழத்தை எடுத்துக் கொடுத்து விட்டு ஊருக்கு ஊர் மண்டபம் கட்டலாம்

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் போராளிகளின்  உயிர் காப்பதற்கான, மானம் காப்பதற்கான, வாழ்வாதாரம் தருவதற்கான  தேவைகள் நிறைந்து இருக்கும் இந்த நேரத்தில் பெரும் செலவில் மணி மண்டபங்கள், நினைவு ஆலயங்கள்  காணிகள், பூமிகள் போன்றவற்றில் பணத்தை முடக்குவது உகந்த முடிவல்ல.

இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளவர்கள் ஆழமாக சிந்தித்து செலாற்ற வேண்டும். நிதி கொடுத்து உதவிய மக்களின் கருத்துகளையும் உள்வாங்கி செலாற்றினால் நல்லது.

இதை ஈழத்தில் என்றாவது ஒரு நாள் பெருமையாக நிறுவுவோம். அதுவே நமக்கு தலை நிமிர்வு.
போராடியவனுக்கு கொடுக்கப்படும் அதி உச்ச கௌரவம் ஈழத்திலாக இருக்கட்டும்.
 

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

அக்கோய் கவலைப்படாதேங்கோ.. மாவீரர் இல்லம் கட்டி அன்னதானமும் போடுவினம். நீங்கள் கொலிடே போய் ஓசில தங்கி நின்று.. சாப்பிட்டு வரலாம். இப்ப எப்படி வசதி..?!

உலகில் எல்லா நாடுகளிலும் தான்.. மாண்ட வீரர்களுக்கு நினைவிடங்கள் இருக்குது. தமிழர்களுக்கு அதுக்குக் கூட சொந்த நிலத்தில் ஒரு கொடுப்பனவும் இல்லை. புலம்பெயர்ந்த இடத்திலாவது ஒன்றை அமைக்க அதுக்கு ஆயிரம் நொட்டை.

அமையும் மாவீரர் இல்லம்.. மாவீரர் குடும்பங்களுக்கு உதவி நிற்பதும் அவசியம். முன்னாள் போராளிகளைப் போலவே 50,000 க்கும் மேற்பட்ட மாவீரர்களை தந்த குடும்பங்களை யார் கவனிப்பது..?! அவர்களுக்கு இந்த இல்லம் ஒரு ஆறுதலாகவும்.. அதேவேளை இந்த இல்லம் சார்ந்து ஒரு நிதியம்.. அமைத்து.. அது அவர்களைக் கவனிக்கவும் செய்யுமானால் வரவேற்கத்தக்கதே.

உலகில் எல்லா நாடுகளிலும் மக்கள் வறுமையில் இருக்கிறார்கள். அதற்காக அரசுகள் நாட்டைக்காக்கப் போன வீரர்களுக்கான நினைவுகளை நிகழ்வுகளை நிறுத்துவதில்லை. ஏனெனில் நாட்டு மக்களின் வறுமை மட்டும் அந்த நாட்டின் அடையாளம் அல்ல. அந்த நாட்டைக் காக்க உயிர் நீத்த மறவர்கள் போற்றப்படுவதும் அவசியம்.. அதுதான் அவர்களின் அடையாளம். தேசத்தின் அடையாளம். tw_warning:

இங்கு ஒரு அக்கா.. தமிழீழம் கிடைக்கவிட்டு போய் கட்டப் போறாவாம். தமிழீழம் கிடைக்க அவா இப்ப என்ன செய்து கொண்டிருக்கிறா என்று சொன்னால் நல்லா இருக்கும். அந்த கனவு விரைவாகும் என்ற வகைக்கு.. இந்தத் திட்டத்தை அவாவின் உறுதிமொழிக்கமைய சம்பந்தப்பட்டவர்கள் கைவிட முன்வரலாம். tw_blush:

2 hours ago, putthan said:

திம்புவில் புளொட் தலைவர்  பங்குபற்றவில்லை என்று நினைக்கிறேன் ...புளொட் அதில் ஆர்வம் காட்டவில்லைதானே?

அவர் அப்ப.. ஊர்மிளாவை பாதுகாக்கிறதில பிசி. :rolleyes:tw_blush:

Edited by nedukkalapoovan

விக்கிபிடியா சறுக்கி விட்டது ,

ஊர்மிளா இறந்து பலவருடங்களுக்கு பிறகுதான் இவையெல்லாம் நடந்தது .

 

  • கருத்துக்கள உறவுகள்

1982 இல் இயக்கத்தை விட்டு ஓடியாந்தவரே.. 1985 இல் டெல்லியில் இருந்து பி ரி ஐ க்கு தகவல் கொடுத்திருக்காருன்னா.. ஊர்மிளாவும் உயிரோடு இருப்பதற்கு சாத்தியங்கள் பல.

கேள்வி கேட்க ஆக்கள் இல்லைன்னா.. அண்ணன் நல்லா அடுக்கி விடுவார். tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ரதி said:

ஒக்ஸ்பேட்டுக்கு அருகில் நிலம் வாங்கி மாவீரர் மண்டபம் கட்டப் போயினமாம்...பாதிக்கப்பட்ட போராளிகளுக்கு உருப்படியாக எதாவது செய்து முடித்து விட்டு இருக்கின்ற மிச்சக் காசில கட்டினாலாவது பரவாயில்லை...அதுவும் ஊரில கட்டினாலாவது பரவாயில்லை. முடியா விட்டால் லண்டனுக்குள்ள கட்டினாலாவது ஓகே.

ஒரு வருடத்திற்கு ஒருக்கால் போய் வழிபடுவதற்கு இப்ப இவ்வளவு செலவில மண்டபம் தேவையா?...மாவீரர் தினத்தன்று கூட இவ்வளவு தூரத்திற்கு மக்கள் போவார்களா?...மற்ற நாட்களில் பூட்டி வைப்பதற்கு இவ்வளவு செலவில் ஒரு மண்டபம்.

இங்க ஒருத்தர் லண்டனில் உள்ள கோயில்களோடு இந்த மண்டபத்தை ஒப்பிடுகிறார்.லண்டனில் எத்தனை கோயிலகள் திறந்தாலும் அத்தனை கோயில்களுக்கும் யாராவது ஒரு சனமாவது,ஒவ்வொரு நாளும் போய் வழிபாடு செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இப்ப வெளி நாட்டில் மாவீரர் மண்டபம் கட்டப் போயினம் இன்னும் கொஞ்சக் காலத்தில் தமிழீழமும் ஊரை தவிர்த்து விட்டு வெளி நாட்டில் கேட்பினம் போல இருக்குது.

பாதிக்கப்பட்ட போராளிகள் இன்னும் கஸ்டத்தில் இருக்க மண்டபம் கட்டுவதை அந்த மாவீரர்களினது ஆத்மா கூட மன்னிக்காது...அட்லீஸ்ட் மாவீரர்களது கனவான தமிழீழத்தை எடுத்துக் கொடுத்து விட்டு ஊருக்கு ஊர் மண்டபம் கட்டலாம்

தங்கச்சி! சிங்களவன் அங்கை மாவீரர் இல்லங்களை அழிக்காவிட்டால் ஏன் இஞ்சை கட்டப்போயினம்?

7 hours ago, மீனா said:

ம்ம்.... உண்மை... என் கருத்தும் இது தான்..

மாவீரர் துயிலும் இல்லம் வெளி நாடுகளில் தேவை இல்லை... தனி நாடு கிடைத்த பின் தாயகத்திலேயே முந்தி இருந்த மாதிரிக் கட்டலாம்......அதுவரை எம் முன்னாள் போராளிகளைக் தயவு செய்து கவனியுங்கோ

தனிநாடு எண்ட சமாச்சாரத்துக்கே இடமில்லையெண்டு இஞ்சையிருக்கிற பெரியபெரிய ஆக்களெல்லாம் சொல்லீனம்...நீங்கள் என்னடாவெண்டால் தனிநாடு அது இது எண்டு கதைக்கிறியள்!!!!!! எல்லாத்தையும் அவங்கள் நாறடிச்சுப்போட்டாங்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

முன்னாள் போராளிகளின்  உயிர் காப்பதற்கான, மானம் காப்பதற்கான, வாழ்வாதாரம் தருவதற்கான  தேவைகள் நிறைந்து இருக்கும் இந்த நேரத்தில் பெரும் செலவில் மணி மண்டபங்கள், நினைவு ஆலயங்கள்  காணிகள், பூமிகள் போன்றவற்றில் பணத்தை முடக்குவது உகந்த முடிவல்ல.

இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளவர்கள் ஆழமாக சிந்தித்து செலாற்ற வேண்டும். நிதி கொடுத்து உதவிய மக்களின் கருத்துகளையும் உள்வாங்கி செலாற்றினால் நல்லது.

இதை ஈழத்தில் என்றாவது ஒரு நாள் பெருமையாக நிறுவுவோம். அதுவே நமக்கு தலை நிமிர்வு.
போராடியவனுக்கு கொடுக்கப்படும் அதி உச்ச கௌரவம் ஈழத்திலாக இருக்கட்டும்.
 

சசி மேலோட்டமாக பார்த்தால் உன்கள் கருத்து சரியென படும்.

உங்கள் கருத்தில் நெடுக்காலபோவானின் கருத்தையும் கலந்தால்?
அது வித்தியாசமாக இருக்கும்.

இப்போ கேள்வி ஒன்றே ஒன்றுதான் ?

முன்னாள் போராளிகளுக்கு உதவ போவது யார் ?
மாவீரர் இல்லம் கட்ட போவது யார் ?

விடை : ஒரே பகுதியினர்தான் இரண்டையும் செய்ய போகிறார்கள் 
              : அல்லது ஒரு பகுதியினர் முதலாவதையும் இன்னொரு பகுதி  இரண்டாவதையும் செய்ய போகிறார்கள். 

ஒரே பகுதி இரண்டையும் செய்தால் ...?
ஒரு பகுதி ஒன்றையுமே இதுவரை செய்ததில்லை 
காட்டு கத்து கத்துபவர்கள் ஏன் இப்ப முன்னாள் போராளிகள் என்று குத்தி முறிகிறார்கள் ?
இதை கட்டுமுன்பே அவர்களுக்கு உதவி இருக்கலாமே ?
அதுதான் இப்போ முக்கியம் என்று வேறு முக்குகிறார்கள் ?
இது கட்டுமுன்பு முக்கியம் என்பது தெரியவில்லையா ?

மற்றது ஒன்று ஒன்றையும்  மற்றது இனோன்றையும் செய்ய போகிறது 
போராளிகள்  போராளிகளுக்கு உதவும் பணம் இங்கே போகத்தான் போகிறது 
இப்போ இன்னொரு குழு இதை செய்கிறது.


உங்களுக்கு நேர்மையாக ஒன்றை கூற விரும்புகிறேன்.
கத்துரவர்களின் நோக்கம் முன்னாள் போராளிகள் இல்லை 
புலிகள் சின்னங்கள் நினைவுகள் இல்லாமல் போகவேண்டும். பிரித்தானியா இப்படி ஒரு 
விடயத்திற்கு அனுமதித்து விட்டதே என்று அதை குழப்ப இப்போ அங்கும் இங்கு ஓட தொடக்கி இருப்பார்கள்.

ஈழத்தில் புலிகள் துயிலும் இல்லம் காட்டியபோது 
காயபட்ட போராளிகள்  உணவுக்கு வழியின்றி போராளி குடும்பங்கள் இருக்கவில்லையா?

எல்லா விடயமும் ஒரு சமாந்தரமாக முன்னெடுக்க படவேண்டும் 
இதில் ஒன்றை ஒன்று பின்போட முடியாது.

முன்னாள் போராளிகளுக்கு உதுவது என்பது இன்றைய நிலையில் மிக முக்கிய விடயம் 
அவர்களை அந்த நிலையில் சிங்கள் அரசு வைத்திருப்பதிலும் 
இப்படியான உருகி ஊத்தும் கட்டுரைகள் பின்னாலும் நிறைய அரசியல் இருக்கிறது.

இப்போ சிங்கள அரசு சர்வதேசத்தின் ஆதரவோடு செய்ய போகும் விடயமே 
தனியாக பிரிய போகிறீர்களா இல்லையா என்று ஒரு தேர்தல்தான். எரிக் சொல்கெய்மின் நகர்வுகளை 
புலி ஆதரவு பேச்சுக்களை நீங்கள் கவனித்து வந்தால் ஓரளவு புரியும்.
அப்படி ஒரு தேர்தலுக்கு சிங்கள அரசு தயார்படுகிறது என்றால் 
தேர்தல் முடிவு சிறு பிள்ளைக்கும் தெரியும் ...... 

ஆனால் அந்த நேரம் சுமந்திரன் சொல்லுவார் நாம் பிரிய கூடாது என்று 
எம் எல்லோர் கவனமும் சுமந்திரனுக்கு சாணி அடிப்பதில்தான் இருக்கும். ஆனால் திரைமறைவில் 
இருக்கும் சதியை புரிந்து தேர்தல் வேண்டாம் எனப்போகும் ஆட்கள் விரல் விட்டு எண்ண கூடிய நிலையில்தான் இருக்கும் .
தமிழன் இனி தலை நிமிரவே முடியாத அளவில்தான் அவர்கள் காய் நகர்த்திக்கொண்டு 
இருக்கிறார்கள்.
நாம் எப்படி பிரிவை குழுக்களை உருவாக்கி பிரிந்து சண்டைபோடலாம் என்றுதான் நாளும் நாளும் யோசிக்கின்றோம்.

இப்போ வேண்டாம் என்பவர்கள் ...
நான் பண்டாரவனியனுடன் போராடியவர்களுக்கு அமெரிக்காவில் மண்டபம் கட்ட போகிறேன் 
என்றால் எத்தனை பேர் காசு தருவார்கள் ? 
பண்டாரவனியன் காலத்தில் போராடிய எவரும் இப்போ காயங்களுடன் அவதி உறும் நிலையில் இல்லையே ? 
எல்லாம் முடிஞ்சு பல நூறு வருஷம் ஆச்சே 
இவர்களின் கருத்தின்படி இப்போ தானே நல்ல நேரம் அவர்களுக்கு கட்டுவதற்கு ? 

அதை அதை அந்த அந்தந்த காலத்தில்தான் முன்னெடுக்க வேண்டும்.
உலகில் உள்ள எல்லா நாட்டிலும் நாம் இவற்றை கட்டவேண்டும் 

இது ஒரு இன படுகொலை என்பதை நாம் பரப்பி கொண்டே இருக்க வேண்டும்.
இது இனபடுகொலை என்பதை நிறுவினாலே போதும் மற்றவற்றை சட்டத்தின் ஊடாகவே செய்துவிடலாம்.
சுமந்திரனை களம் இறக்கி அதற்கு அவர்கள் ஆப்பு அடிப்பதே அதனால்தான்.

ருவண்டா இன படுகொலை கூட இப்போ ஐ நா வில் கிளர்ச்சி என்றுதான் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள் 
காரணம் அது இன படுகொலை என்று வந்தால் ஐ நா வில் பலர் உள்ளே போகவேண்டும்.
ஜெனிவா கொன்வென்ட்சன் ஊடாக அது வலியுறுத்த பட்டு இருக்கிறது. 
எங்கள் பிரச்சனையும் அதே காரணம்தான் 

இவளவு சாட்சி இருந்தும் அதை நிறுவாதுபோனால் 
தமிழனை போல ஒரு அடிமுட்டாள் இந்த உலகில் இல்லை. 

இந்திய றோ இன்னமும் நித்திரை இல்லை புதிது புதிதாக களம் இறக்கி கொண்டேதான் 
இருக்கிறது. 
எமது காலம் நாம்தான் அறிவாளி என்று நிருபித்து கருத்து வைப்பதில் போய்கொண்டு இருக்கிறது. 

மற்றவருக்கு இன படுகொலை என்பதை நிறுவுவதில் கூட தோற்கலாம் 
எமது அடுத்த சந்ததிக்கு அதை சொல்லாமல் போனால் 
அவர்கள் மனதில் அப்படியோரு தாக்கத்தை உண்டு பண்ணாமல் போனால் 
நாம் இப்போ இருக்கும் போராளிகள் இல்லை 
சொந்த இனத்திற்கு கெடுதல் செய்த ஒரு மிருக கூட்டமாகத்தான் இருப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

சிறு பிள்ளைத் தனமான வாதங்களில் ஈடுபட நேரமில்லை.

மாவீரர்களுக்கு ஏதாவது கட்டத் தான் வேண்டும்! அது பல்லாயிரம் பவுண்டுகளில் கட்டப் படும் கல் கட்டிடமாக இருக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. அந்தப் பணத்தை ஒரு நிதியமாக்கி ஒரு சுதந்திரமான மேற்பார்வையாளரிடம் (trustee) கொடுத்து ஊரில் உள்ள போராளிகளுக்கு உதவலாம்! இதுவும் ஒரு கட்டுமானம் தான்.

இனி இங்கே எதுவும் எழுத இல்லை! 

நிதியம் உருவாக்கி ....
அப்படி செய்ய கூடிய ஒரு நிலைமை உலகில் இப்போது.

சிங்கள அரசின் நோக்கம் நாம் அப்படி ஒன்றை செய்ய வேண்டும் என்பதுதான்.

நீங்கள் அதை இதை ஆதாரம் காட்டி அது இருக்கு 
இது இருக்கே என்று சொல்லலாம். அது வெறும் மேலோட்ட எண்ணமாக மட்டுமே இருக்கும்.

நான் தமிழர் புனர்வாழ்வு கழகத்திற்கு பணம் கொடுத்து 
அதை (டக்ஸ்சில்) வரியில் கழித்து இருக்கிறேன்.

அமெரிக்காதான் முதன் முதலில் ரி ஆர் ஒ வின் கணக்கை முடக்கியது 
மூன்றாம் நாள்தான் இலங்கை முடக்குகிறது. 

இப்படி ஒன்றை கட்ட தொடங்கிய படியால்தான் 
முன்னாள் போராளிகளை பலருக்கு கண்ணுக்கு தெரியுது (உங்களை சொல்லவில்லை) 
அப்ப  இது இன்னொரு விதமாக அவர்களுக்கு உதவுகிறது இல்லையா ? 

எதை எறிகிறோம் என்பதை விட 
என்ன விழுகிறது என்பது ரொம்ப முக்கியம். 
சில வேளை இரண்டு மாங்காய்களும் விழுவதுண்டு ...............

இங்கு பிரச்சினை இந்த இல்லம் கட்ட வெளிக்கிடும் கூட்டம்தான் ரதி கேட்பதின் கேள்விகளுக்கு பதில் இல்லை அவர்களிடமே இந்த 108ஏக்கர் நிலம் எவ்வளவு என்பது புரிந்தவர்களுக்கு இதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி இயல்பாகவே எழும்  நிற்க்க அதை விட படாபோகமாய் இவர்கள் கூட்டும் 5 ஸ்டார் ஹோட்டல்களின் கூட்டம்கள் சந்தேகத்தை உருவாக்குகிறது. 

புளொட் காரன் வீடு தேடி போய் உமாவுக்கும் சிலையாம் என்று கதை விடுவது அவர் தற்போது புலி அனுதாபி என்ற விடயம் தெரியாமல் நடந்திருக்கு. புலி வீடு ஏறினால் உங்கடை மகனுக்கும் சிலை வைப்பம் என்று சவுடால், படமும் வேண்டியுள்ளனர் .

கனக்க வேண்டாம் நிர்வாக குழுவில் உள்ளவர்களிடமே தனித்தனியாக கேள்வி கேட்டால் ஒன்றுக்கு முரணான பதில்கள் கிடைக்கும் இந்த குழுவில் ரூபன் என்பவருடன் அளவளாவிய போது கதைத்த விடயங்கள் இங்கு எழுத முடியாது அவ்வளவுக்கு புளுகு மூட்டை .கடைசியாக நான் கேட்ட கேள்விக்குப்பின் தானாகவே எழும்பி சென்று விட்டார் என்னிடம் காசு வேண்டாமலே ஒன்றுமில்லை அவரின் கடல்புலி நண்பன் குடும்பம் ஊரில் உள்ளது வழமையான வெடி பிடித்த உடம்பு ஒப்றேசனுக்கு காசு இல்லாட்டாலும் பரவாயில்லை லைன் எடுக்கின்றன் ஒருக்கா கதை என்றவுடன் ஆள் எஸ்கேப் .

  • கருத்துக்கள உறவுகள்

சிலந்தியுகே.. இங்குள்ள பிரச்சனை தாயகத்தில் திட்டமிட்டு சிதைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவகங்கள்.. நினைவுகள்.. போல்.. மாவீரர்களுக்கு எதுவுமே அமைக்கப்படக் கூடாது அது வீண் செலவு என்பது மீதான கருத்தாக்கம் தானே தவிர. அது எமது போராட்டத்தை இன்னும் இன்னும் பலவீனப்படுத்த எதிரி பாவிக்கும் ஒரு ஆயுதமும் கூட.

இந்த மாவீரர் நினைவாலயம் அமைக்க ஈடுபடும் தனி நபர்கள்.. குழுக்கள் தொடர்பில்.. ஆராய்வது என்பதுவாக இல்லை. அது கடினமானதும் கூட.

தஞ்சையில் நினைவாலயம் கட்டிய போதும்.. ஐயா நெடுமாறன் மீது எத்தனை வசவுகள். கடைசியில்.......................................

வசவுக்கு குறை வைக்காத எம் சமூகம்.. செய்து முடிச்சது என்ன...??! சாதித்தது என்ன..???!

எங்கும் எல்லோரும் 100% நேர்மையோடு இல்லை. அப்படி இருந்திருந்தால்.. நாம் சுதந்திர தமிழீழ தாயகத்தில் இப்போ வாழ்ந்து கொண்டிருப்போமே. 

இதை எல்லாம் தாண்டித்தான் ஏதாவது அமையனும்... அது மாவீரர்களை நினைக்கவும் மாவீரர் குடும்பங்களை காக்கவும் செய்தால் அதனை வரவேற்றுத்தான் ஆகனும்.

பொப்பி மலரை விற்றுத்தான் பிரித்தானியப் படை வீரர்களின் குடும்பங்களுக்கு பென்சன் வழங்கனுமா என்ன..?! இருந்தும் பொப்பி மலர்கள் விற்கப்படுகுது... நிதியம் பொறுப்பானவர்களூடு.. நாட்டுக்காக உழைத்தவர்களிடம் போய் சேர்கிறது. அந்தப் பக்குவம் எம்மவரில் என்று வருமோ.. அன்று வசவும் கூட்டம் அப்படியே இருக்க.. பல நற்காரியங்களும் நடந்து தீர வழிபிறக்கலாம்.

அதற்காக முயற்சி இன்றி நினைவிழந்து தர்மம் தொலைத்து வாழ்ந்திட முடியாது எல்லோராலும்.

Edited by nedukkalapoovan

   வசவுக்கு குறை வைக்காத எம் சமூகம்.. செய்து முடிச்சது என்ன...??! சாதித்தது என்ன..???!

நல்ல விடயம் நடக்கும்போது நாலு பேர் நாலுவிதமாகதான் கதைப்பார்கள் ஆனால் இறுதியில் தர்மம்தான் வெல்லும் நல்லதே நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்,உங்களை மாதிரி 3 நேரமும் நான் பாண் சாப்பாட்டு கொண்டு இருக்கவில்லை.உங்களுக்கு அன்னதானம் கட்டப் போற மாவீரர் மண்டபத்தில தான் சாப்பிட விருப்பம் என்டால் காரை எடுத்துக் கொண்டு போய் சாப்பிட்டு வாங்கோ!.மாவீரர்களுக்கு என்று கட்டப்படும் மண்டபம் அன்னதானம் போடத் தான் பயன்படும் என்று நீங்கள் கூட ஒத்துக் கொண்டீர்கள். நன்றி...கூடவே இதை சேர்த்துக் கொள்ளுங்கள் வருமானத்திற்காக களியாட்ட விழாக்களுகாக இந்த மண்டபத்தை பயன்படுத்துவார்கள்.

நான் முதலாவது கருத்தில் கேட்ட கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லை.உங்களால் பதில் தர முடியாது என்று எனக்குத் தெரியும்.ஜஸ்டின் மேலே எழுதியது தான் உங்களை மாதிரி .... ஆட்களோடு கதைத்து என்ட நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை.

நீங்களே எழுதி உங்களை மாதிரி ஆட்களோடு சேர்ந்து சந்தோசப்படுங்கள்.ஆனால் உண்மை என்று ஒன்று இருக்குது.அது தான் வெல்லும் என்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் முன்னர் வந்த செய்தி. யாழில் காணக்கிடைக்கவில்லை என்பதால் இணைக்கின்றேன். உலகத் தமிழர் வரலாற்று மையம் என்றுதான் பேர் வைத்துள்ளனர். வழமையான மாவீரர் நிகழ்வை நடத்துபவர்களுக்கு எதிரான குழுவினர்தான் இந்த ஐடியாவோடு வெளிக்கிட்டுள்ளனர்.

 

உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் அறிமுக நிகழ்வும், பிரமுகர் சந்திப்பும்! Top News 
[Sunday 2016-01-31 20:00]
WTHS_HILTON_EVENT_30012016_seithy-380.jp

பிரித்தானிய மண்ணில் உருவாக்கம் பெற்றுவரும் உலகத்தமிழர் வரலாற்று மையத்தின் அறிமுக நிகழ்வும், பிரமுகர்களுடனான் சந்திப்பும் லண்டனில் இடம்பெற்றது. நேற்ரைய தினம் லண்டன் கில்டன் விடுதியில் மாலை 7:00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் பொதுச்சுடரேற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தி நிகழ்வுகள் ஆரம்பமாயின. முதல் மாவீரன் லெப்.சங்கர் அவர்களின் தந்தை திரு. சின்னத்துரை செல்வச்சந்திரன், வைத்தியக் கலானிதி திரு.சோமசுந்தரராஜாவும் அவரது பாரியாரும், மூன்று மாவீரர்களின் சகோதரனும், தேசிய செயற்பாட்டாளருமான திரு.உருத்திராபதி சேகர், கணக்காளரும் நீண்டகால தேசிய செயற்பாட்டாளருமான சக்தி ஆன்மீகச் சுடரொளி நா. சீவரட்ணம் (ACA, ACMA) மற்றும், உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் நிர்வாகசபை உறுப்பினர் திரு கலைரஜன் அவர்களும் பொதுச்சுடரினை ஏற்றிவைத்தனர்.

தொடர்ந்து வணக்க நடனம், உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் நோக்கம், அமைவிடம், அதன் பணி, நகர்ந்துவந்த பாதை என்பன தொடர்பாக பொறியியலாளர், கணக்காளர், சட்டவாளர், நிர்வாக சபை உறுப்பினர்கள், ஆலோசனை சபை உறுப்பினர்கள் மற்றும் போராளீகளின் விளக்க உரைகள் இடம்பெற்றன.

உலகத் தமிழர் வலராற்று மையத்தின் எதிர்கால செயற்திட்டங்களைச் நகர்த்திச் செல்ல தேவையான ஆலோசனைகளையும், நிதியையும் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் நடாத்தப்பட்ட இந்த நிகழ்வில், பிரித்தானியாவில் வசித்துவரும் துறை சார் காலானிதிகள், வைத்தியர்கள், சட்டவாளர்கள், கணக்காளர்கள், தொழிலதிபர்கள், புத்திஜீவிகள், உட்பட 300 க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இந்த நிகழ்வில் உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் நிர்வாக சபை, கணக்கு விபரங்கள், அமைவிடம், வரைபடம் உள்ளிட்ட பல தகவல்களைக் கொண்ட விளக்க கோவை ஒன்று அனைவரிடமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போதே பல பிரமுகர்கள் பெருந்தொகையான நிதியை இந்த உலகத் தமிழர் வரலாற்று மையத்திற்கு வழங்க சம்பதம் தெரிவித்திருந்தமை இச் செயற்திட்டத்திற்கு வலுச்சேர்ப்பதாகவும், உலகத் தமிழர் வரலாற்று மைய உருவாக்கத்தின் நோக்கத்தையும், இலக்கையும் அடையமுடியும் என்ற நம்பிக்கையை ஏர்படுத்துவதாக அமைந்தது.

இறுயில் இரவு 11:00 மணியளவில் உறுதியேற்புடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றது.

இந்த நிகழ்வு தொடர்பானதும், உலகத் தமிழர் வரலாற்று மையம் தொடர்பானதுமான முழுமையான விபரங்கள் மக்களின் கைகளுக்கு வந்துசேர ஆவன செய்யப்படும்.

நன்றி

செய்திப்பிரிவு

உலகத் தமிழர் வரலாற்று மையம்

 

WTHS_HILTON_EVENT_30012016_seithy%20(1).

 

 

WTHS_HILTON_EVENT_30012016_seithy%20(2).

 

 

WTHS_HILTON_EVENT_30012016_seithy%20(3).

 

 

WTHS_HILTON_EVENT_30012016_seithy%20(4).

 

 

WTHS_HILTON_EVENT_30012016_seithy%20(5).

 

 

WTHS_HILTON_EVENT_30012016_seithy%20(8).

 

 

WTHS_HILTON_EVENT_30012016_seithy%20(6).

 

 

WTHS_HILTON_EVENT_30012016_seithy%20(7).

 

 

http://www.seithy.com/briefTopNews.php?newsID=150411&category=TopNews&language=tamil

 

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

நெடுக்ஸ்,உங்களை மாதிரி 3 நேரமும் நான் பாண் சாப்பாட்டு கொண்டு இருக்கவில்லை.உங்களுக்கு அன்னதானம் கட்டப் போற மாவீரர் மண்டபத்தில தான் சாப்பிட விருப்பம் என்டால் காரை எடுத்துக் கொண்டு போய் சாப்பிட்டு வாங்கோ!.மாவீரர்களுக்கு என்று கட்டப்படும் மண்டபம் அன்னதானம் போடத் தான் பயன்படும் என்று நீங்கள் கூட ஒத்துக் கொண்டீர்கள். நன்றி...கூடவே இதை சேர்த்துக் கொள்ளுங்கள் வருமானத்திற்காக களியாட்ட விழாக்களுகாக இந்த மண்டபத்தை பயன்படுத்துவார்கள்.

நான் முதலாவது கருத்தில் கேட்ட கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லை.உங்களால் பதில் தர முடியாது என்று எனக்குத் தெரியும்.ஜஸ்டின் மேலே எழுதியது தான் உங்களை மாதிரி .... ஆட்களோடு கதைத்து என்ட நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை.

நீங்களே எழுதி உங்களை மாதிரி ஆட்களோடு சேர்ந்து சந்தோசப்படுங்கள்.ஆனால் உண்மை என்று ஒன்று இருக்குது.அது தான் வெல்லும் என்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள்

உங்கள மாதிரி ஆக்களுக்கு அன்னதானம் போட்டாலே போதுமே.. எல்லாம் சுபம் என்று முடிப்பீர்கள். அதுதான்.. அன்னதானமும் போட ஏற்பாடு செய்யச் சொல்லலாம் என்று பொதுவில்..சொல்லி இருக்கம்.

மேலும் தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு இல்லம் எழுந்த போதும் ஆயிரம் நொட்டை சொன்னீர்கள்.. இங்கு வந்த சிலரை நம்பி. இறுதியில் என்னாச்சு.. எல்லாம் நல்லபடியாத் தான் முடிஞ்சது.

யார் தோற்பார்கள் என்பதை தீர்மானிப்பது காலமும் மக்களின் தேவையுமே தவிர.. அன்னதானம் அல்ல. :rolleyes:tw_blush:

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிழைப்புவாதிகளின் புதிய முயற்சி.. பிரித்தானியாவில் மாவீரர் துயிலுமில்லம்.. – சுப்ரமணிய பிரபா

February 28, 2016

np-28216-03.png

 

பெற்றவர்கள் ஈழத்தில் பசியோடிருக்க பிள்ளைகளுக்கு பிரித்தானியாவில் பளிங்குக்கல்லறை..இதைவிட மாவீரர்களின் ஈகங்களை கொச்சைப்படுத்தும் செயல் வேறெதுவும் இருக்காது.

மாவீரர்களின் ஈகங்களை வெறும் கல்லறைகளுக்குள் அடக்கிவிடத் துடிக்கும் பிழைப்புவாதிகளே! நீங்கள் இன்று துயிலுமில்லம் அமைப்பீர்கள் பின் அந்த துயிலுமில்லத்தில் மாவீரர்நாள்,கரும்புலிநாள் நடத்தி வசூல் செய்து வாழ்நாள் முழுதும் வயிறுவளர்ப்பீர்கள். இதற்குத்தானே இப்பொழுது அவசரப்படுகின்றீர்கள்?

நீங்கள் கோடிகள் செலவளித்து கல்லறை அமைக்கப்போகும் மாவீரர்களின் பெற்றோர்களும், பிள்ளைகளும், உறவுகளும் தெருக்கோடியில் கிடக்கின்றார்களே இதைப்பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்துப்பார்த்ததுண்டா?

சிங்களவனை எதிர்த்துப்போரிட்டு வீரவரலாறான மாவீரர்களின் உறவுகள் இன்று சிங்களவனிடம் வாழ்வுக்கும் வயிற்றுப்பசிக்கும் கையேந்திநிற்கின்றார்களடா பரதேசிகளே..

மாவீரனின் சகோதரி தன் பிள்ளைகளின் பசிபோக்க அந்நியனிடம் சோரம்போகின்றாள், உழைக்கக்கூடிய பிள்ளையினை ஊருக்கு தாரைவார்த்துவிட்டு ஒருவேளை சோறுக்கும் உடுத்தும் உடுப்புக்கும் கையேந்தித்திரிகின்றார்கள் பெற்றோர்கள்.

கட்டியவன் செத்துப்போனான் காப்பாற்றுவார்கள் என்று நம்பியவர்களும் கடைசியில் தோற்றுப்போனார்கள் வாழ வழியில்லையென்று வறுமையின் காரணமாய் தற்கொலை செய்துகொள்கின்றார்கள் வீரத்தமிழச்சிகள் தம் பிள்ளைகளுடன்.

ஒரு கல்லறை கட்டும் காசு போதும் ஒரு மாவீரன் குடும்பத்தின் கூரையினை ஒழுகாமல் செய்வதற்கு. ஒரு கல்லறை கட்டும் பணம்போதும் ஒரு மாவீரனின் மனைவிக்கு தொழில்வாய்ப்பேற்படுத்திக்கொடுக்க, ஒரு கல்லறைகட்டும் பணம்போதும் ஒரு மாவீரனின் சகோதரிகளின் மானம் மறைக்க மலசலகூடம் கட்டுவதற்கு. ஒரு கல்லறை கட்டும் பணம்போதும் ஒரு மாவீரனின் சகோதரர்கள் கல்வி கற்றுமுடிக்க.

ஈனப்பிறப்புக்களே இதைச்செய்வீர்களா நீங்கள்? இல்லை இதுவரை ஏதும் இதுபோல செய்திருக்கின்றீர்களா? கேட்டால் எங்கள் அமைப்பின் மீதான தடை நீக்கப்படவில்லை நாம் எதுவும் செய்யமுடியாதென்பீர்கள் இதைவிட நீங்கள் தூக்குப்போட்டு சாகலாம்.

பிரித்தானியாவில் மாவீரர்களுக்கு கல்லறை கட்டுவது எனக்குப்பெருமைதான் என் குடும்பம் சார்பாகவும் இரண்டு கல்லறைகள் அங்கு இடம்பெறும். என் பெற்றோரின் பசிபோக்க நானிருக்கின்றேன், என் சகோதரனின் கல்விக்குதவ நான் இருக்கின்றேன், என் சகோதரிக்கு உடையளிக்க நானிருக்கின்றேன், என் குடும்பம் வசிக்க வீடிருக்கிறது, என் சகோதரர்கள் பிழைத்திருக்க தொழிலிருக்கிறது. ஆகவே எனக்கு என் அண்ணன்கள் மாவீரர்கள் அவர்களுக்கு பிரித்தானியாவில் கல்லறையிருக்கிறது என்று சொல்லிக்கொள்ள பெருமைதான்.

ஆனால் இது எதுவுமே இன்றித்தான் ஈழத்தில் இன்று பல்லாயிரக்கணக்கான மாவீரர் குடும்பங்கள் பரிதவித்துக்கிடக்கின்றார்கள்.

என் அப்பாவும் இருந்திருந்தால் எனக்கும் புது உடுப்பு, புது புத்தகப்பை, புதுக்கொப்பி எல்லாம் வாங்கித்தந்திருப்பார்தானே? ஏன் அம்மா எங்கட அப்பா இயக்கத்துக்குப்போனவர்? ஏன் அம்மா அவரை ஆமிக்காரர் சுட்டுக்கொண்டினம் என்று கேட்கும் சின்னக்குழந்தையின் கேள்விக்கு பதில்சொல்லமுடியாது தடுமாறி ஏன்? ஏன்? என்ற கேள்விகளை தமக்குள் கேட்டுக்கொண்டு கண்ணீர் உகுக்கும் இளம் விதைவைகளின் இயலாமையினை இன்று அமைக்கும் கல்லறைகள் தீர்த்துவிடுமா? ஆண்டுக்கொறுமுறை நீங்கள் ஏற்றும் எல்.ஈ.டி விளக்குகள் இவர்களின் வாழ்வில் வெளிச்சத்தை உண்டுபண்ணுமா?

ஈகங்களை வைத்து பிழைப்பு நடத்த எத்தனிக்காதீர்கள் அந்த ஈகியர்களின் ஆன்மா உங்களை மன்னிக்காது. என் சதைத்துண்டங்களை பொருக்கியெடுத்துவைத்து கல்லறை கட்டி பூஜிப்பீர்கள் என்று நினைத்து எந்தக்கரும்புலிகளும் வெடித்துச்சாவதில்லை. தேசத்தை நான் காப்பேன் தேசம் என் உறவுகளைக்காக்கும் என்றுதான் ஒவ்வொறு போராளியும் வீட்டினை உதறி நாட்டினை காக்க முன் வந்தான். இன்று அவன் வீட்டினைக்காப்பார் எவருமில்லை அவர்களின் வீரத்தினை சான்றாய்க்காட்டி ஈனப்பிழைப்பு பிழைக்கத்தான் ஏராளம் பேர் உண்டு.

ஈழத்தில் எம் உறவுகள் அனாதையாய் தீண்டுவாரற்றுக்கிடக்க இங்கு நீங்கள் கட்டும் கல்லறைகளிலா எம் வீர மறவர்களின் ஆன்மாக்கள் அமைதியாய் உறங்கும்?. வெறும் கற்களாகத்தான் அவை காட்சியளிக்கும். தேசத்திற்காய் உயிர்நீத்தவர்களின் உறவுகளுக்கு உதவுங்கள் அதன் பின் அமையுங்கள் துயிலுமில்லம்……

 

http://www.velichaveedu.com/np-28216-03/

ஐயோ  என்னதான்  செய்ய போறியள்?

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இதில் உடன்பாடில்லை

ஆனால் செய்பவர்களை தடுக்க விருப்பமில்லை

ஏனெனில் இதை நாம் செய்யப்போவதில்லை

அவர்கள் செய்கிறார்கள்

அவர்கள் அதற்கு தான் என்று சொல்லியே பணம் சேகரிக்கிறார்கள்

கொடுப்பவர்களும் அதற்கு என்றே கொடுக்கிறார்கள்

இதில் எனக்கு என்ன சிக்கல்??

எனக்கு அவர்கள் வேறு ஒன்றைச்செய்யணும் என்று இருந்தால்

அதை நானே நாலு பேரைச்சேர்த்து இதே போல் பணம் சேர்த்து செய்யலாமே..

அதைவிடுத்து இந்தப்பணத்தை அதற்கு செலவளிக்கணும் என்பதை நான் எவ்வாறு தீர்மானிக்கமுடியும்???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில் சில கருத்துக்கள் யார் செய்கின்றார்கள், எதற்காகச் செய்கின்றார்கள் என்பதையெல்லாம் ஆராயாமல் புலிகள், தியாகம் என்பதை மட்டும் கொண்டு வைக்கப்பட்டதே. அதுமாதிரித்தான் சாதாரண மக்கள் சிந்திப்பார்கள் என்று கணக்குப்போட்டு புலி, தியாகம், மாவீரர் என்ற    வசனங்களைப் பாவித்து பணம் வசூலிப்பார்கள். கேள்வி கேட்காமல் கொடுக்கவும், பவிசு காட்டக் கொடுக்கவும் ஆட்கள் இருக்குமட்டும் பிழைப்பதற்கு வழிகள் இவர்களுக்கு இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் தமிழ்செல்வன் சிலை இப்ப எங்குள்ளது என தற்போதைய வசூல் மன்னர்களிடம் கேட்டால் பதிலில்லை .

( யாருடைய கார் கராச்சில் தமிழ்செல்வன் அண்ணாவின் சிலையை வைத்து அவமான படுத்துகிறார்கள் என தெரியவில்லை )

ஐரோப்பிய ,இங்கிலாந்து புலி தடை இங்கு கைகட்டி வாய்பொத்தி நிக்கும் என்பது கற்பனை காசு சேர்க்கும் மட்டும் சேர்த்து விட்டு ஏப்பம் விட இலகுவான காரணம் காட்டலாம் முதலில் தடை எடுத்து விட்டு வாங்க காசு தருகின்றன் என ஒதுங்கியாச்சு .

2013 ல் 6 லட்சதுக்கு வேண்டிய இடத்தை வெள்ளையின் நிறுவனம் போல காண்பிக்கப்படும் அவர்களிடம் தான் 12 லட்சம் குடுத்து வேண்டுவம் என முன்னாள் மாவீரர் நாள் குழப்பவாதி சங்கீதன் ஒற்றைக்காலில் காலில் நிற்க்கும் மர்மம் என்ன ? வேறு எவ்வளவோ லண்டனுக்கு கிட்ட இருக்கும் இடங்களை விட்டு அந்த இடத்தில் என்ன உள்ளது ?

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பெருமாள் said:

பிரான்சில் தமிழ்செல்வன் சிலை இப்ப எங்குள்ளது என தற்போதைய வசூல் மன்னர்களிடம் கேட்டால் பதிலில்லை .

( யாருடைய கார் கராச்சில் தமிழ்செல்வன் அண்ணாவின் சிலையை வைத்து அவமான படுத்துகிறார்கள் என தெரியவில்லை )

ஐரோப்பிய ,இங்கிலாந்து புலி தடை இங்கு கைகட்டி வாய்பொத்தி நிக்கும் என்பது கற்பனை காசு சேர்க்கும் மட்டும் சேர்த்து விட்டு ஏப்பம் விட இலகுவான காரணம் காட்டலாம் முதலில் தடை எடுத்து விட்டு வாங்க காசு தருகின்றன் என ஒதுங்கியாச்சு .

2013 ல் 6 லட்சதுக்கு வேண்டிய இடத்தை வெள்ளையின் நிறுவனம் போல காண்பிக்கப்படும் அவர்களிடம் தான் 12 லட்சம் குடுத்து வேண்டுவம் என முன்னாள் மாவீரர் நாள் குழப்பவாதி சங்கீதன் ஒற்றைக்காலில் காலில் நிற்க்கும் மர்மம் என்ன ? வேறு எவ்வளவோ லண்டனுக்கு கிட்ட இருக்கும் இடங்களை விட்டு அந்த இடத்தில் என்ன உள்ளது ?

பெருமாள்,  தமிழ் செல்வனின் சிலை இன்னும் அதே இடத்தில தான் இருப்பதாக போன கிழமை ஒரு திரியில் வாசித்த ஞாபகம். எது உண்மை என்று தெரியவில்லை.
 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Sasi_varnam said:

பெருமாள்,  தமிழ் செல்வனின் சிலை இன்னும் அதே இடத்தில தான் இருப்பதாக போன கிழமை ஒரு திரியில் வாசித்த ஞாபகம். எது உண்மை என்று தெரியவில்லை.
 

நிச்சயமாக அங்கில்லை.

மாவீரர் பெயர் சொல்லி வயிறு வளர்க்க இப்படியொரு திட்டம் அவ்வளவே இங்குள்ள அரசியல் வாதிகளிடம் தடை எடுக்க கதைக்க முடியாதவர்கள் காசுக்கு மாத்திரம் அடிச்சு பிடிச்சு கொண்டு வருகினம்.

 

Edited by பெருமாள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.