Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலையின் ஆடைக்கட்டுப்பாடு, 11 முதல் அமுலில்

Featured Replies

யாழ். பல்கலையின் ஆடைக்கட்டுப்பாடு, 11 முதல் அமுலில்
 

article_1457067661-JaffnaUni.jpg-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்களுக்கான ஆடை ஒழுங்கு விதிகள், எதிர்வரும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கலைப்பீட மாணவர்கள் ஒன்றிய நிர்வாகத்தின் கலந்துரையாடலொன்று, நேற்று வியாழக்கிழமை (03) இடம்பெற்ற போதே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.  

ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும், பெண்கள் சேலை அணிய வேண்டும் எனவும் ஆண் மாணவர்கள் டெனிம் மற்றும் ரீ-சேர்ட் அணியக்கூடாது, சேர்ட் அணிந்துதான் அதுவும் 'இன்' பண்ணிதான் அணிய வேண்டும், சப்பாத்தை தினமும் அணிய வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், முஸ்லிம் மாணவிகள் அவர்களின் கலாசார உடைகளுக்கு ஏற்றவகையில் ஆடைகளை அணிந்து, விரிவுரைகளில் கலந்துகொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், பல்கலைக்கழகக் கல்வி முடிந்து வேலைகளுக்குச் செல்லும் போது, மேற்கூறப்பட்ட விதத்திலேயே ஆடைகளை அணிந்துச் செல்ல வேண்டும் என்பதால், பல்கலைக்கழகத்திலேயே இப்பழக்கத்தைப் பழக்கும் வகையில் நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக கலைப்பீட மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

இவ்வாறானதொரு நடைமுறை? பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததாக கலைப்பீடாதிபதி நா.ஞானகுமாரனை மேற்கொள்காட்டி கடந்த வாரத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன. அதற்கு பலதரப்பட்டவர்களிடம் இருந்து எதிர்ப்புகள் வெளியாகியிருந்தன. அதன்பின்னர், அவ்வாறு ஒரு அறிவித்தல்? பேரவைக் கூட்டத்தில் எடுக்கப்படவில்லையென துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், மீண்டும் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால், கலைப்பீட மாணவர்களுக்கு இந்த நடைமுறையானது அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/167467/%E0%AE%AF-%E0%AE%B4-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%B2-%E0%AE%B2-#sthash.x4jiOO8f.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

யாரோ பெரிய புடவை சப்பாத்து வியாபாரியிடம் யாழ் கலைப்பீடம் சிக்கிக்கொண்டதுபோல் தெரிகிறது. :(

மாணவிகள் சேலை அணிவது தமிழ் கலாச்சாரம் என்று எடுத்துக்கொண்டால், மாணவர்கள் எதை அணிவது தமிழ் க‌லாச்சாரம்? வெள்ளிக்கிழமைகளில் கலைப்பீட மாணவிகள் சேலையுடன் பல்கலைக்கழகம் செல்லலாம் என்றால் கலைப்பீட மாணவர்கள் ஏன் வேட்டியுடன் பல்கலைக்கழகம் செல்லமுடியாது? 

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம பண்பாட்டைப் பெண்கள் மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும் ஆண்கள் தமிழ்க்கலாச்சாரத்தைக் கடைப்பிடிக்காது மேலைத்தேயக் கலாச்சாரத்தை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான் யாழ்பல்கலைக்கத்தின் கொள்கையோடு?

நான் கேள்விப்பட்டவரையில் இந்த ஆடை கட்டுப்பாடு ஒருசிலரின் விருப்பத்தின்பேரில் அரங்கேற்றப்படுகின்றது. மாணவிகள் வெள்ளிக்கிழமைகளில் புடவையுடன் காட்சி தரவேண்டும் என்று யாரோ ஒற்றைக்காலில் நின்று அடம்பிடிக்கின்றார்கள். யாழ் நுண்கலைப்பீட மாணவிகள் (வாய்ப்பாடு, நடனம்) மட்டுமே வழமையில் புடவையுடன் விரிவுரைகளிற்கு செல்வார்கள். இங்கும் நுண்கலைக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் வேட்டி கட்டிக்கொண்டு அல்லது தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கக்கூடிய உடைகளை அணிந்துகொண்டு விரிவுரைகளிற்கு செல்வது கிடையாது. ஆண்கள் என்றால் அவர்களிற்கு செளகரியம் முக்கியம் என்றும், பெண்கள் என்றால் அவர்களிற்கு ஆண்கள் தங்களுக்கு எது செளகரியம் என்று நினைக்கின்றார்களோ, அதுவே முக்கியம் என்றவகையிலும் சமூக நடைமுறைகள் உள்ளபோது யாழ் பல்கலைக்கழகத்தில் வேறு ஒன்றையும் பெரிதாக எதிர்பார்க்க முடியாது. 

வெள்ளிக்கிழமைகளில் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவியரின் இந்த புடவை அணிநடை, மற்றும் கண்காட்சி உண்மையாகில் இதில் அதிகம் பாதிக்கப்படப்போவது முதலாம் வருட புதுமுக மாணவிகளே. ஏற்கனவே யாழ் பல்கலைக்கழகம் பகிடிவதைகளிற்கு பெயர்போனது. அதிலும் கலைப்பீடம் சொல்லிவேலை இல்லை. பழைய மாணவர்களிற்கு புதுமுக மாணவிகளை சீண்டிவிளையாடுவதற்கு நல்லதோர் ஆயுதம் இந்த ஆடை கட்டுப்பாடு எனும் பெயரில் கொடுக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இது சரியாகவே படுகிறது 

ஆண்கள் வேட்டி கட்டுவது பற்றிய 
விவாதத்தை இனி முன்னெடுக்கலாம்! 


முதலாவது சரி 
இரண்டாவது பிழை 

அதலால் முதலாவதும் பிழையாக இருக்க வேண்டும் என்ற வாதத்தில் 
எனக்கு உடன்பாடு இல்லை.

ஆனால் ஏன் பெண்கள் மட்டும் கலச்சார பான்பாடுகளை 
காக்க வேண்டும் ஆண்கள் எப்படியும் திரியலாம் என்பது 
வாதத்திற்கு உள்பட்டது 

  • கருத்துக்கள உறவுகள்

Dress code வேலை செய்யும் இடங்களில் உண்டு. எனவே ஆபாசமில்லாமல் உடுத்தவேண்டும் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் சேலை கட்டவேண்டும் என்பதெல்லாம் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. சேலை உடுத்த நேரமும் தேவை, இன்னொருவரின் உதவியும் தேவைப்படலாம். மூன்றாம் பிறையில் சிறீதேவி சேலை உடுத்திய காட்சிதான் கண்ணுக்குள் வந்தது.

கலாச்சாரக் கொடுங்கோலர்கள் ஒழிக! 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் என்றால் முருகன். முருகன் என்றால் தமிழ். ஆகவே தமிழர்களான ஆண்கள் முருகனுடைய கலாச்சாரத்தைப் பின்பற்றுவதே மேலானது. கோவணம் போதும்.:)

பெண்களுக்குச் சேலைதான் வேண்டும். ஏனெனில் ஆண்கள் தலைக்குமுழுகிவிட்டு வந்து தலைதுடைக்க முந்தானைக்கு எங்கே போவது?:(

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Paanch said:

முருகனுடைய கலாச்சாரத்தைப் பின்பற்றுவதே மேலானது. கோவணம் போதும்.:)

 

முருகனுக்கு இருமனைவிமார்கள் ஆகவே, தமிழர்களும் இந்த கலாச்சாரத்தை பின்பற்றலாமா பான்ச் ஐயா?

கட்டாயம் முஸ்லிம் மாணவிகளும் இந்த உடையை அணிய வசிக்க வேண்டும், இல்லாவிடில் மிக விரைவில் தமிழர்களும் முகத்தை மூடி கறுப்பு ஆடை அணிய வேண்டி வரலாம்.

 

9 hours ago, Maruthankerny said:

எனக்கு இது சரியாகவே படுகிறது 

ஆண்கள் வேட்டி கட்டுவது பற்றிய 
விவாதத்தை இனி முன்னெடுக்கலாம்! 


முதலாவது சரி 
இரண்டாவது பிழை 

அதலால் முதலாவதும் பிழையாக இருக்க வேண்டும் என்ற வாதத்தில் 
எனக்கு உடன்பாடு இல்லை.

ஆனால் ஏன் பெண்கள் மட்டும் கலச்சார பான்பாடுகளை 
காக்க வேண்டும் ஆண்கள் எப்படியும் திரியலாம் என்பது 
வாதத்திற்கு உள்பட்டது 

வேட்டியை விட கோவணமே தமிழ் கலாச்சாரத்தை அதிகம் பிரதிபலிக்கின்றது. கலைப்பீட மாணவர்கள் வெள்ளிக்கிழமைகளில் யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் கோவணம் கட்டிக்கொண்டு உள்நுழைவதை கண்காணிப்பதற்கு பல்கலைக்கழக பாதுக்காப்பு ஊழியர்களிற்கு உத்தரவிடலாம். கோவணம் கட்டத்தெரியாத மாணவர்களிற்கு இதில் அனுபவம் உள்ளவர்கள் ஆரம்பத்தில் உதவி செய்யலாம். யாழ் இணையத்திலேயே இதில் அனுபவம் உள்ள பலர் உள்ளார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

பண்பாட்டைக் கற்றுக் கொடுக்க.. இதனை ஒரு தெரிவாக முன்வைக்கலாமே தவிர.. திணிக்க முடியாது. மேலும் வேட்டியில் மாணவர்களும் சேலையில் மாணவிகளும் வர ஒரு தெரிவு வைக்கலாம். 

சிங்கள மாணவிகள்.. சிலர் எப்போதுமே யுனிக்கு சேலையில் வர கண்டிருக்கிறேன். அதற்காக சிங்கள மாணவர்கள் சாரத்தில் வருவதில்லை.

பண்பாடு பெண்களிடம் திணிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல. குழந்தைகள் தந்தையை விட தாயிடம் இருந்து தான் அதிகம் பழக்கவழக்கங்களை பின்பற்றுகின்றன.  அந்த வகையில்.. பெண்கள் பண்பாட்டின் அடையாளங்களை தெரிந்து கொள்வது அவசியம். அதற்காக ஆண்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதல்ல. ஆண்களும் பெண்களும் தெரிந்து கொண்டிருப்பது நல்லதே. tw_blush:

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலை கலைப்பீடப் பட்டதாரிகளுக்கு ஏற்கனவே தனியார் துறையில் தொழில் எடுப்பது மிகக் கடினமான விடயமாக இருக்கிறது. இதன் முதன்மைக் காரணம், ஆங்கில அறிவை பல்கலை ஊக்குவித்தாலும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ளாமை. ஆங்கில அறிவு இல்லாமல் போக தனியார் வேலைவாய்ப்புச் சந்தையில் தொடர்பாடல்  பிரச்சினையாவது துணைக் காரணம். இனி கோவணமும் புடவையும் தான் கட்டுவோம் என்று வெளிக்கிட்டால், தனியார் துறை பற்றி நினைத்துப் பார்க்கவே தேவையில்லை! "தனியார் துறை வேலை எதற்கு? நாம் தான் அரச சேவையில் வேலை செய்யாமல் சம்பளம் வாங்க ஆர்ப்பாட்டம் செய்து வெல்வோமே?" என்ற நினைப்போ தெரியாது! :cool:

யாழ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் அனைத்துலக சைவ மாநாடு நடைபெற்றது என்றும், அதன் பின்னரே உடை கட்டுப்பாடு அரங்கேற்றப்பட்டது என்றும் ஓர் செய்தி வாசித்தேன். பொதுவில் வெள்ளிக்கிழமை என்பது சைவசமயத்தினருக்கு ஒரு சிறப்பான நாள். விரைவில் விபூதி, உருத்திராட்சம் எல்லாம் யாழ் கலைப்பீட உடைகட்டுப்பாட்டு கோவையின் உபசரத்துக்களில் இடம்பெறவேண்டும் என்று எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவோம். என்ன இருந்தாலும் சைவசமயம் யாழ் பல்கலைக்கழகத்தில் தளைத்தோங்குவது அடியேனின் அடிமனதில் குளிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. அனைவருக்கும் மங்களம் உண்டாகட்டும்!

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கலைஞன் said:

 மங்களம் உண்டாகட்டும்!

எந்த மங்களம் கற்பமாகட்டும் என்று வாழ்த்துகிறீர்கள்? tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கலைஞன்... கனடாவில் பல்கலைக்கழகத்திற்கு சேலையில் போனால்.. வேட்டியில் போனால் தடை போடுவார்களா..?!

இங்கிலாந்தில் போகலாம். தடையும் இல்லை. பட்டமளிப்புக்கு கூட.. யுனி சொல்லும்.. உடைக் கட்டுப்பாட்டில் இருந்து அவரவர் சொந்த பண்பாட்டு உடைகளுக்கு விலக்குள்ளது. இங்கிலாந்தில்.. சேலையில் பட்டமளிப்புக்கு போகலாம். அதேபோல்.. வேட்டியில் ஆண்கள் போகலாம்.. தடையில்லை.

வாரத்தில் ஓர் நாள்.. அடையாள நிமித்தம்.. தம் பண்பாட்டையும் கற்றுக் கொள்ள மாணவர்களை ஊக்குவிப்பதில் என்ன தவறு..?!

அதில் பெண்கள் ஆண்கள் இருவரையும் பின்பற்ற ஒரு தெரிவை முன்வைப்பதில் என்ன தவறு..?!

ஆனால் கட்டாயம் அணிய வேண்டும் என்று திணிப்பது ஏற்புடையதல்ல. ஒரு தெரிவாக இதனை முன்னிறுத்தலாம். விரும்பிறவை பின்பற்ற விரும்பாதவை தாம் விரும்பியதை தொடரலாம் தானே. :rolleyes:tw_blush:

எங்கள் வீட்டில் எனது மூன்று அக்காமார், அண்ணா யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். நான் மட்டுமே அங்கு செல்லவில்லை. ஆனால், மருத்துவபீடம் அருகில் சுமார் ஐந்து வருடங்கள் வசித்தேன். தவிர, சிறுவயதில் அக்கா தான் கற்ற காலத்தில் பல்கலைக்கழக சூழலிற்கு என்னை அழைத்து சென்றுள்ளார். இந்தவகையில் யாழ் பல்கலைக்கழகத்துடன் ஓர் பிணைப்பு - கதைத்தொடர்பு உள்ளது. நான் எனது பல்கலைக்கழக கல்வியை கனடாவில் பெற்று இருந்தாலும், ஓர் மாணவனாய் வாழ்ந்த அனுபவத்தின் அடிப்படையில் யாழ் பல்கலைக்கழகத்தில் அண்மைக்காலமாக இயற்றப்பட்டு மாணவர்கள் மீது திணிக்கப்படும் சட்டக்கோவைகள் கொதிப்பை ஏற்படுத்துகின்றது. மற்றும்படி வேட்டி, புடவை, கோவணத்துடன் எனக்கு ஒரு கோபமும் இல்லை.

இதே பல்கலைக்கழகத்தில்தான் ஒரு காலத்தில் சுதந்திரம் கேட்டும், முற்போக்குத்தனமாகவும் சிந்தனைகள் உதித்தன. யாழ் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராய் இருக்கும் எனது நண்பன் ஒருவனை தொடர்புகொண்டு இந்த புடவை சமாச்சாரம் பற்றி விசாரித்தேன். தானும் இதுபற்றி எம்மைப்போல் இணையத்தினூடாகவே அறிந்ததாய் சொன்னான். அவனுக்கும் இதன் அடி, நுனி தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.