Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் செம்மணிப் பகுதியில் ஆசிரியையை அலங்கோலப்படுத்திய ஆசாமிகள்

Featured Replies

இன்று மதியம் செம்மணிப் பகுதியில் நடந்த சம்பவத்தால் ஆசிரியை ஒருவர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். தென்மராட்சிப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் திருமணமான ஆசிரியை அவசர தேவை நிமிர்த்தம் பாடசாலையில் அரை நாள் விடுமுறையில் நல்லுார்ப் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.

செம்மணிப் பகுதியில் ஆசிரியையின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த காவாலிகள் இருவர் ஆசிரியையை வழி மறித்து அவரை கடும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியுள்ளனர்.

ஒருவன் ஆசிரியையைப் பிடித்துக் கொண்டிருக்க இன்னொருவன் ஆசிரியை மீது கைகளால் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான்.

துாரத்தில் இன்னொரு மோடார் சைக்கிள் வருவதைக் கண்டு அவர்கள் ஓடித்தப்பியுள்ளனர்.

அதிர்ச்சியில் உறைந்து போய் நின்ற ஆசிரியையை அப்பகுதியால் வந்தவர்கள் பாதுகாப்பாக வீடுவரை கொண்டு சென்று விட்டதாகத் தெரியவருகின்றது.

இச் சம்பவம் தொடர்பாக ஆசிரியை பொலிசாரிம் முறையிட மறுத்துவிட்டதாகவும் தனது பாதுகாப்புக் கருதி அவர் அவ்வாறு செயற்பட்டதாகவும் தெரியவருகின்றது.

http://kalaiyadinet.com/?p=58591

  • கருத்துக்கள உறவுகள்

1990 மே/1995 ஒக்டோபர் வரை இல் இதே செம்மணி வீதியால்.. நல்லிரவில் கூட பெண்கள் சுதந்திரமாக நடமாடினர். விறகு வெட்டிக் கூட வந்தனர். காரணம் அப்போது இந்த மண்ணை ஆண்டவர்கள் ஒரு உன்னத தலைவனின் கீழ் மண்ணின் மைந்தர்கள். 

இன்று அந்நிய ஆக்கிரமிப்பில் மண்ணும் மண்ணைச் சார்ந்தோரும்.. மக்களுடன் அந்நியப்பட்டவர்களாய்.tw_warning:

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Athavan CH said:

இச் சம்பவம் தொடர்பாக ஆசிரியை பொலிசாரிம் முறையிட மறுத்துவிட்டதாகவும் தனது பாதுகாப்புக் கருதி அவர் அவ்வாறு செயற்பட்டதாகவும் தெரியவருகின்றது.

பொலிசாரிடம் சொன்னால்... நியாயம் கிடைக்காது என்று, அந்த ஆசிரியைக்கு தெரியும்.
இவற்றை செய்வதே... அந்த பொலிசும், ராணுவமும் தான்.
இதற்குள்.. அதிரடியாக தமிழ் காவாலிகள் கைது என்று பொலிஸ் அறிக்கை விட...
அதற்கு வக்காலத்து வாங்க, எங்கடை.... சனம் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

ஒத்துக்கொள்கிறேன். இருப்பினும் உத்தமர்கள் எங்களை ஆளும்போது மட்டும்தான் நாங்களும் உத்தமர்களாக இருக்கவேண்டுமா? இந்த காவாலிகள் எல்லாம் புலிகளின் ஆட்சியில் விருப்பமின்றிதான் வாழ்ந்தார்களா? அவர்கள் இல்லை என்றதும் மீண்டும் காட்டுமிராண்டி வாழ்க்கைக்கு திரும்பிவிட்டார்களா? புலிகளின் காலத்தில் இவர்கள் என்னத்தைக் கற்றுக்கொண்டார்கள்? குறுகிய காலமாயிருந்தாலும் அது ஒரு பொன்னான போற்றத்தக்க காலமென்று அந்த வாழ்க்கைமுறையை ஏன் தொடர்ந்தும் பேணவில்லை. இதை நான் தமிழ் இனத்தின் குறைபாடாகவே பார்க்கிறேன். புலிகளின் காலத்தில் தமிழ் இனம் கற்றுக்கொண்டது என்ன? இது போன்ற காட்டுமிராண்டிகள் தங்கள் வீடுகளில் உள்ள பெண்களையும் விட்டுவைப்பார்களா என்பது சந்தேகமே !!!

  • கருத்துக்கள உறவுகள்

 அடக்கிக்கொண்டிருந்த காவாலிகளை கட்டவிழ்த்து விட்டுக்கிடக்குது. அதுகளை வழிநடத்துகிறதுகளே இந்தக் காவல்த் தெய்வங்கள் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான்  இப்ப இங்கே நடக்கும் விசயங்கள்  இருந்தாலும் படையினர் இல்லை மக்களே நம்ம தமிழ் பசங்கள் என்று சொன்னால் நம்மவா போறியள்

அண்மையில் யாழ்ப்பாண நீதிபதி இளஞ்செழியன் ஐயா பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தார் என்பதை நினைவுக்கு கொண்டு வருகிறேன் எப்பவும் அடுத்தவன் மேலே நமது அழுக்கு நிறைந்த கண் பார்வையை மாற்ற வேண்டும் 

இங்கே வந்து பார்க்க கிடைத்தவர்களுக்கு தெரியும் ??

ஆள் ஆளுக்கு ஒரு குறூப் வைத்துக்கொண்டு ஊர்துலாவிக்கொண்டு திரியுகள் இதற்கு இப்ப பொலிசாரின் ரோந்து நடவடிக்கை நீதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க தொடங்க பட்டுள்ளது 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புக்காறா காலத்துக்கு முன்னமே ஊரை விட்டு ஓடியந்த ஆக்கள் புலம்பெயர் தமிழர்களால் நடாத்தப்படும் இணையங்களை வாசித்துவிட்டு இன்னமும் 80,90 மனநிலையிலேயே ஊர் இருக்கும் என்று நினைப்பதன் விளைவே இன்றும்கூட இந்த காவாலிகளிசடைகளின் சேட்டைகளிற்கு ஆமியையும் பொலிசையும் பழிசாட்டும் அப்பாவித்தனத்தை நினைத்து அவர்கள் மேல் இரக்கம் வருகிறது.(அதற்காக இலங்கை இராணுவம் நல்லவர்கள் என்று சொல்லவில்லை.அவர்களின் சேட்டைகள் முன்னால் போராளிகளுடனும் முகாங்களுக்குள்ளும் இப்ப மட்டுப்பட்டு இருக்கு).80,90 களின் ஞாபகவீதியை விட்டு வெளிவரமுடியவில்லை இவர்களால்.ஊரை இப்பொழுதும் அந்தக்கால ஞாபகங்களுடன் முடிச்சுபோட்டு கற்பனை செய்வதன் விளைவே இவர்களின் இப்படியான குற்றசாட்டுக்கள்.ஒருமுறை ஊர்போய் வருவார்களே ஆனால் இவர்கள் புலம்பெயரும்போது எடுத்துவந்த ஞாபகங்களுடன் தஙகிவிட்ட ஊரும் இளைஞர்களும் யுவதிகளும் இப்பொழுது அங்கு இல்லை என்ற உண்மையை உணருவார்கள்.இல்லாவிட்டால் காலம்பூரா இதேபல்லவிதான்.அவர்கள் நிறையவே மாறிவிட்டார்கள். 2009 இற்கு பின் இப்படி ஒரு ஈழம் இருக்கும் என்று நாம் யாரும் கற்பனையே செய்து பாத்திருக்கமாட்டோம்.காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடும்.காலத்தால் அள்ளுண்டுபோய் மாற்றமுடியாமல் தங்கிவிடுபவை ஞாபகங்கள் மட்டுமே. ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு அனுபவங்கள். எங்கள் தலைமுறையின் வலியை உணராத ஒரு தலைமுறை யாழில் இருக்கிறது.அது அவர்கள் தவறல்ல.அவர்கள் முன் உள்ள உலகம் சூழல் வேறு எங்கள் முன் இருந்தது வேறு.

Edited by Thirdeye

உதில நாலு பிடித்து போஸ்டில கட்டி வெடி வச்சா இங்கிருந்து விசில் அடிக்கலாம் .

இருப்பவர்கள் இருந்தால் அதுதான் செய்வார்கள் .

புலம் பெயர்ந்து ஜனநாயக நாடுகளில் இருந்தாலும் மனப்பாங்கு சவூதி சர்வாதிகாரம் தான் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, arjun said:

உதில நாலு பிடித்து போஸ்டில கட்டி வெடி வச்சா இங்கிருந்து விசில் அடிக்கலாம் .

இருப்பவர்கள் இருந்தால் அதுதான் செய்வார்கள் .

அப்ப இவர்களுக்கு கற்ப்பூரம் காட்டி ஆர்த்தி எடுக்கச் சொல்கிறீர்களா? அதுசரி உங்கடை ஆட்கள் செய்ததோட ஒப்பிடக்கை இதெல்லாம் ஜுஜ்ஜுபி என்று நினைக்கிறீர்களாக்கும். ஜென்மத்தில திருந்தாதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கணக்கச் செய்யத் தேவையில்ல.இரண்டு பேரின்ட ஆண் உறுப்பினை வெட்டினால் காணும். மிச்சப் பேர் தானாய் அடங்குவினம்.உதை செய்கிறதிற்கு கூட ஊரில நல்ல ஆம்பிள்ளை இல்லை.

4 hours ago, Thirdeye said:

இவர்கள் புலம்பெயரும்போது எடுத்துவந்த ஞாபகங்களுடன் தங்கிவிட்ட ஊரும் இளைஞர்களும் யுவதிகளும் இப்பொழுது அங்கு இல்லை என்ற உண்மையை உணருவார்கள். காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடும்.காலத்தால் அள்ளுண்டுபோய் மாற்றமுடியாமல் தங்கிவிடுபவை ஞாபகங்கள் மட்டுமே. 

நிச்சயமாக. ஊரைவிட்டு புறப்பட்டபோது கொண்டுவந்த ஞாபகங்களுடன் நான் வாழ்கின்றேன். அங்கே, ஊரில் இருந்தவர்களும் மாற்றங்கண்டுவிட்டார்கள், அல்லது வெளியேயோ மேலேயோ சென்றுவிட்டார்கள். இவ்வாறே ஊரும் மாறிவிட்டது. நான் மட்டும் எனக்குள் பழையதைவைத்து பிசைந்துகொண்டு புலம்பி என்ன செய்வது? இன்னும் எமது ஊரில் மக்கள் குடியிருக்காவிட்டாலும் ஒருகாலத்தில் அங்கே சென்று வாழத்தொடங்கும்போது அங்குள்ள புதியவிடயங்களை கண்டுகொள்ளாது பழைய நினைவுகளை மட்டும் சுமந்தபடி நான் ஊருக்கு சென்றால் அங்கேயுள்ளவர்கள் என்னை புதினமாகவே பார்ப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

13133287_10153567363497944_4251736870338

வள்ளுவனுக்கே சில சிங்கள சொறீலங்கா விசுவாசிகள் வகுப்பெடுப்பார்கள் போல் உள்ளது. tw_blush:

6 hours ago, கலைஞன் said:

நிச்சயமாக. ஊரைவிட்டு புறப்பட்டபோது கொண்டுவந்த ஞாபகங்களுடன் நான் வாழ்கின்றேன். அங்கே, ஊரில் இருந்தவர்களும் மாற்றங்கண்டுவிட்டார்கள், அல்லது வெளியேயோ மேலேயோ சென்றுவிட்டார்கள். இவ்வாறே ஊரும் மாறிவிட்டது. நான் மட்டும் எனக்குள் பழையதைவைத்து பிசைந்துகொண்டு புலம்பி என்ன செய்வது? இன்னும் எமது ஊரில் மக்கள் குடியிருக்காவிட்டாலும் ஒருகாலத்தில் அங்கே சென்று வாழத்தொடங்கும்போது அங்குள்ள புதியவிடயங்களை கண்டுகொள்ளாது பழைய நினைவுகளை மட்டும் சுமந்தபடி நான் ஊருக்கு சென்றால் அங்கேயுள்ளவர்கள் என்னை புதினமாகவே பார்ப்பார்கள். 

கலைஞன் நீங்கள் நினைப்பது போல் ஒன்றும் புதுமையான சிந்தனைகளுடனும் புதிய மாற்றங்களுடனும் அங்குள்ளவர்கள் இல்லை என்பது எனது கருத்து. இன்னமும் பழைய பத்தாம்பசலித்ததுடனும் அதே மூடப்பழக்கங்களை கட்டிப்பிடித்துக் கொண்டுருக்கும்  பழமை வாதிகளாகவே தமிழர்கள் இன்றும் உள்ளார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

வெளி நாட்டில் உள்ளவர்கள் சொல்லத்தேவயில்லை. நாட்டில் நாம் இடம் பெயர்ந்து போனபோது யாழில் தங்கியதுகளும், சிறிது காலத்தில் திரும்பியதுகளும் ஆமி, போலிசோட சேர்ந்து  போட்ட கொட்டம், செய்த களவு கொஞ்சமல்ல. திரும்பி வந்து திருடியவர்க்ளிடம் நம்ம பொருட்களை கேட்டவர்களுக்கு அங்கே இருந்தவர்களெல்லாம் சண்டித்தனம். போலிசுக்குப் போனால் முறைப்பாடு எடுக்க மாட்டார்கள். அல்லது முறையிடப் போனவர்களையே அச்சுறுத்தி அனுப்புவார்கள். பிறகு காவாலிகளை சொல்லத்தேவயில்லை. இதனால் பயந்து யாரும்  போலிசுக்குப் போவதில்லை. சந்திக்கு சந்தி மோட்டர் சைக்கிள் காரரின் வேகக் கட்டுப்பாடு, கெல்மெட் என்பன பரிசோதிப்பார்கள் ஆனால் இந்தக் காவாலிகளுக்கு கட்டுப்பாடும் இல்லை, மறிப்பதும் இல்லை. சல்யூட் அடித்து அனுப்புவார்கள். பார்க்கவே கோமாளித்தனமாக இருக்கும். இதுகள் தங்கட பெயரே தமிழில் எழுதத் தெரியாது. ஆமி, போலிசு சேர் போட்டு அழைப்பதும், சல்யூட் அடிப்பதும். இதற்கு ஒட்டுக்குழுக்களின் ஆசீர்வாதம் வேறு. ஒன்றா, இரண்டா சொல்ல. ஒரு பாதாள உலகத்தையே உருவாக்கி விட்டார்கள். அதுகள் திருந்துமா? அனுபவிக்கும் நமக்குத்தான் அதன் வலி தெரியும். 

On 5/5/2016 at 1:59 AM, arjun said:

உதில நாலு பிடித்து போஸ்டில கட்டி வெடி வச்சா இங்கிருந்து விசில் அடிக்கலாம் .

இருப்பவர்கள் இருந்தால் அதுதான் செய்வார்கள் .

புலம் பெயர்ந்து ஜனநாயக நாடுகளில் இருந்தாலும் மனப்பாங்கு சவூதி சர்வாதிகாரம் தான் .

அப்ப இவர்களை தாலாட்டுவதா ? மரியாதையை கருதி வார்த்தைகளை அடக்கி எழுதுகிறேன் .....கேடு கேட்ட உலகத்திக்கு ஜனநாயகம் சரிவருமா ? இப்ப எங்க ஜனநாயகம் உள்ளது ? எந்த காலத்தில் உள்ளீர்கள்

Edited by பிரபாதாசன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.