Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த பொலிசாருக்கு உதவியாக விசேட அதிரடிப்படையைக் களத்தில் இறக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் பணிப்பு

Featured Replies

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த பொலிசாருக்கு உதவியாக விசேட அதிரடிப்படையைக் களத்தில் இறக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் பணிப்பு

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த பொலிசாருக்கு உதவியாக விசேட அதிரடிப்படையைக் களத்தில் இறக்குமாறு

யாழ் குடாநாட்டில் வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் குழுக்களை கைது செய்வதற்கு அதிடிப்படையைக் களத்தில் இறக்குமாறு யாழ்ப்பாணம் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை பிறப்பித்துள்ளார்.

யாழ் குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டு மற்றும் கொள்ளைச்சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு பிரதேச பொலிசாருக்கு உதவியாக விசேட அதிரடிப்படையைக் களத்தில் இறக்கி குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களைக் கைது செய்யுமாறு நீதிபதி பிரதி பொலிஸ் மா அதிபருக்கு நேரடியாகப் பணிப்புரை விடுத்துள்ளார்.

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் கடந்த வாரம் ஆஜராகிய யாழ் பிரதி பொலிஸ் மா அதிபர் யாழ் குடாநாட்டில் குற்றச் செயலக்ளைக் கட்டுப்படுத்துவதற்குப் பொலிசார் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விபரித்திருந்தார்.

பொலிசார் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த நீதிபதி இளஞ்செழியன், குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள பிரதேசங்களாகிய அராலி, வட்டுக்கோட்டை, சுன்னாகம், கோப்பாய், மானிப்பாய் போன்ற இடங்களில் விசேட அதிரடிப்படையைக் களத்தில் இறக்கி, குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களைக் கைது செய்வதற்கு விசேட தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்தந்தப் பிரதேச பொலிசாருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தினார்.

குற்றச்செயல்கள் நிலைமைகள் குறித்து நீதிபதியிடம் விபரித்த யாழ்ப்பாணம் பிரதி பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே அதிரடிப்படை களத்தில் இறக்கப்பட்டு, சந்தேகத்திற்குரியவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். அத்துடன் மாலை 6 மணியில் இருந்து விசேட அதிரடிப்படையின் மோட்டார் சைக்கிள் அணியின் ரோந்து நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

இருப்பினும் குற்றச்செயல்கள் யாழ் குடாநாட்டில் அதிகரித்த வண்ணம் இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்காகக் கூடுதலாக விசேட அதிரடிப்படையை கடமையில் ஈடுபடுத்துமாறு பணிப்புதை விடுத்தார்.

இதனையடுத்து, உடனடியாகவே, விசேட அதிரடிப்படையின் பொலிஸ் அத்தியட்சகருடன் தொடர்பு கொண்ட யாழ் பிரதி பொலிஸ் மா அதிபர், குற்றச்செயல்கள் அதிகமாக இடம்பெறுகின்ற முக்கியமான இடங்களைச் சுட்டிக்காட்டி, ரோந்து நடவடிக்கைகளை அதிகரித்து, குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்தார்

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/131968/language/ta-IN/article.aspx

இனி இங்க சில பேர் வந்து சொல்லுவாங்க. யாழ்பாணத்தில் அதிரடிப்படை - சுமுக நிலைமை இல்லை என்று.

மக்களுக்கு பிடித்த இளஞ்செழியனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த குற்றவாளிகளைக் கண்டவுடன் சுட்டுத்தள்ளும் உத்தரவு பிறப்பித்தல் வெண்டும். இவ்விடையத்தில் ஈன இரக்கம் பார்க்கக்கூடாது.

  அரசன் எவ்வழி மக்களும் அவ்வழி. சிறீலங்கா அரசங்கமே ஒரு விசாரணை கூட செய்ய முடியாத ஒரு  குற்றவாளி அரசாங்கம் என்பதால் அங்கு  குற்றவாளிகளும் பெருகிவிட்டார்கள்.

சிறீலங்கா அரசு திருந்தி நல்லவர்களாக மாறினால் குற்றவாளிகளும் அங்கு திருந்துவார்கள். திருந்தாத உண்மைக் குற்றவாளிகளைத் ண்டிக்கும் தார்மீக உரிமையும் குற்றவாளியாக இருந்து திருந்திய சிறீலங்கா  அரசுக்கு வரும். 

சிவில் குற்றங்களை அடக்குவதற்கு இராணுவத்தினரின்/ அதிரடிப்படையின் உதவியை பெறும் அளவுக்கு வடக்கில் குற்றச்செயல்கள் வளர்த்து விடப்பட்டு இருக்கு.

குற்றங்களின் அதிகரிப்புக்கு சமூகம் சார்ந்த காரணங்கள் இருக்குமாயின் சிவில் சட்டங்களும் பொலிசுமே அவற்றை கையாளப் போதுமானவை. ஆனால் மிகவும் திட்டமிடப்பட்டு தமிழர்களின் மத்தியில் குற்றங்கள் வளர்க்கப்படுவதால் தான் இராணுவ உதவி கோரப்படுகின்றது. இதில் வேடிக்கை என்னவெனில் எவ் நிர்வாக இயந்திரங்கள் இக் குற்றங்கள் அதிகரிக்க காரணமோ அதைக் கொண்டே அவற்றை அடக்க முயல்வதும் இவை பற்றி கேள்வி கேட்க வேண்டிய தமிழ் தேசிய கட்சியின் உறுப்பினர்களே இவற்றை வளர்க்க முயல்வதும்தான்.

44 minutes ago, நிழலி said:

சிவில் குற்றங்களை அடக்குவதற்கு இராணுவத்தினரின்/ அதிரடிப்படையின் உதவியை பெறும் அளவுக்கு வடக்கில் குற்றச்செயல்கள் வளர்த்து விடப்பட்டு இருக்கு. குற்றங்களின் அதிகரிப்புக்கு சமூகம் சார்ந்த காரணங்கள் இருக்குமாயின் சிவில் சட்டங்களும் பொலிசுமே அவற்றை கையாளப் போதுமானவை. ஆனால் மிகவும் திட்டமிடப்பட்டு தமிழர்களின் மத்தியில் குற்றங்கள் வளர்க்கப்படுவதால் தான் உலக அளவில் நடைமுறையில் இல்லாத விடயங்களை கையாள வேண்டி இருக்கு. இதில் வேடிக்கை என்னவெனில் எவ் நிர்வாக இயந்திரங்கள் இக் குற்றங்கள் அதிகரிக்க காரணமோ அதைக் கொண்டே அவற்றை அடக்க முயல்வதுதான்.

இதற்கும் முஸ்லிம்களுக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கு என்று நினைக்கிறன், 

எல்லாம் இஸ்லாமிய மயமாக்கலின் ஒரு அங்கம்,

எங்களுக்கு அதனால் பிரச்சனை இல்லை இன்னும் கொஞ்ச நாளில்  எமது சொத்துக்ககுக்கு முஸ்லிம் தரும் விலையை கொடுத்து விட்டு 
வெளிநாட்டுக்கு வந்து அசைலம் அடித்து கோப்பை கழுவுவம், அதுக்கு தான் நாம் லாயக்கு??

Edited by Dash

1 minute ago, Dash said:

இதற்கும் முஸ்லிம்களுக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கு என்று நினைக்கிறன், குறிப்பாக ரிசாதின் அண்மைய யாழ் விஜயத்தின் பின்னர் தான் பாரதூரமாக அதிகரித்து உள்ளன, கஞ்சா விடயத்திலும் அவருக்கு தொடர்பு இருப்பதாக ஒரு செய்தி ஊர் புதினத்தில் இணைக்கப்பட்டிருக்கு,

உங்களின் தமிழ் இனவாத மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத எரிச்சலுக்கு சொறியும் இடமாக யாழை பயன்படுத்த வேண்டாம். கொக்கிளாய் விகாரை பற்றிய என் பதிலுக்கும், முஸ்லிம்களிடம் பார்க்க சிங்கள பெளத்தர்களிடம் அடிமையாக வாழலாம் என்று எழுதிய ஆள் தான் நீங்கள்.

ஆதாரம் இல்லாமல் எழுந்தபாட்டுக்கு எழுதும் உங்கள் போக்கினை தொடர்ந்து அனுமதிக்க முடியாது. உங்களை விட யாழுக்கு அதிகம் பொறுப்புணர்வு உண்டு.

நன்றி வணக்கம்.

15 minutes ago, நிழலி said:

அப்படியாயின் முல்லைத்தீவு காணி விவகாரம் , மன்னார் மாவட்ட காடழிப்பு  போன்றவை எல்லாம் என்ன ??  அதை விட தற்பொழுது  கிழக்கு மாகாணத்தில் தினம் தினம்  நடக்கும். காணி பறிப்புக்கு உங்களது பதில் என்ன ?? 

எதுக்கும் ஒருக்கா  google maps  தட்டிப் பாருங்கோ எவ்வளவு நுட்பமாக இஸ்லாமியமயமாக்கல்  நடக்குது என்று உங்களுக்கு புரியும்.

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Elugnajiru said:

குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த குற்றவாளிகளைக் கண்டவுடன் சுட்டுத்தள்ளும் உத்தரவு பிறப்பித்தல் வெண்டும். இவ்விடையத்தில் ஈன இரக்கம் பார்க்கக்கூடாது.

இதை செய்தவர்களை தான் பயங்கரவாதிகள் என்று பெயர்வைத்து தினம் தினம் அவர்களை சொறிந்து சந்தோஷப்படுகிறோமே ...
கேட்டால் சனநாய்அக நாட்டில் இது சாதாரணம் என்று வியாக்கியானம் ..உந்த வியாக்கியானவாதிகள் எல்லாம் வெளிநாட்டில் வெளிநாட்டு போலீசின் கழுகுக்கண் பார்வையில் பாதுகாப்பாக இருக்கினம். இங்கே இருக்கும் பாவப்பட்ட மக்களுக்கு தான் தெரியும் வாள் வெட்டு களிசறைகளால் படும் பாடு 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அக்னியஷ்த்ரா said:

என்ன தான் இங்கே இலங்கையில்  தமிழ்ர்கள் செய்யும் பிழைகளை புலம்பெயர் தமிழர்கள்  ஏற்றுக் கொள்ளபோவதில்லையே?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

என்ன தான் இங்கே இலங்கையில்  தமிழ்ர்கள் செய்யும் பிழைகளை புலம்பெயர் தமிழர்கள்  ஏற்றுக் கொள்ளபோவதில்லையே?

புலத்துத் தமிழர், புலம்பெயர்ந்த தமிழர் என தமிழர்களைப் பிரித்து வேறுபடுத்திப் பலமிழக்க வைக்கும் கைங்கரியத்தை சிங்கள அரசு எங்களைக்கொண்டே செயல்படுத்தி வருவதை நாங்கள் இன்னமும் உணரவில்லை என்றே தோன்றுகிறது.:( 

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Paanch said:

புலத்துத் தமிழர், புலம்பெயர்ந்த தமிழர் என தமிழர்களைப் பிரித்து வேறுபடுத்திப் பலமிழக்க வைக்கும் கைங்கரியத்தை சிங்கள அரசு எங்களைக்கொண்டே செயல்படுத்தி வருவதை நாங்கள் இன்னமும் உணரவில்லை என்றே தோன்றுகிறது.:( 

சிங்கள இந்திய அரசுகள் இவளவு தந்திரமாக செயற்படுகிறார்கள் என்பதை கூட உணர முடியாத 
ஒரு நுண்ணங்கி கூட்டமாகத்தான் தமிழன் இருக்கிறான்.

தமிழன் தலை நிமிர்ந்து வாழ்ந்தால்தான் அதிசயம்.
தமிழனுக்கு துரோகம் இளைப்பவர்களை பார்த்து கோபம் பற்றிக்கொண்டு 
வந்தாலும் சில நேரம் நான் நினைப்பதுண்டு 
குறைந்த பட்சம் காட்டிகொடுப்பு வாழ்வால் அவர்களாவது வாழ்கிறார்களே என்றுதான். 

On 5/9/2016 at 1:47 PM, ஜீவன் சிவா said:

இனி இங்க சில பேர் வந்து சொல்லுவாங்க. யாழ்பாணத்தில் அதிரடிப்படை - சுமுக நிலைமை இல்லை என்று.

மக்களுக்கு பிடித்த இளஞ்செழியனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..

இப்படி ஒரு குறைந்த பட்சம் 35% தமிழராவது இருக்கிரார்கள். 

சுமுக நிலை இருந்தால் 
ஏன் போலிசை தாண்டி அதிரடி படை வேண்டும் ?
எனும் கேள்வி கூட எழுவதே இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
On 9.5.2016 at 8:47 PM, ஜீவன் சிவா said:

இனி இங்க சில பேர் வந்து சொல்லுவாங்க. யாழ்பாணத்தில் அதிரடிப்படை - சுமுக நிலைமை இல்லை என்று.

மக்களுக்கு பிடித்த இளஞ்செழியனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..

அதிரடிப்படையினரின் பிரசன்னத்தில் வாழ்வது தான்..... சுமுகமான சந்தோசமான வாழ்வென்றால் ..... ஒன்றில் நீங்கள் அடிமையாக  வாழ ஆசைப்படுகின்றீர்கள்......

அல்லது நீங்கள் ஒரு கோழை..... யாருக்கோ பயந்து வாழ்கின்றீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்கா நீதித்துறை நீதியை நிலைநாட்ட நாட வேண்டி இருப்பது... மனுநீதியை குழிதோண்டிப் புதைத்த அதன் பொலிஸ்- இராணுவக் கட்டமைப்புக்களை என்பது தான் விதி. 

பெரும் கொடுமை செய்தவனைக் கொண்டு சிறு கொடுமை செய்யுறவனை தண்டிப்பது தான் சொறீலங்கா நீதித்துறை. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Paanch said:

புலத்துத் தமிழர், புலம்பெயர்ந்த தமிழர் என தமிழர்களைப் பிரித்து வேறுபடுத்திப் பலமிழக்க வைக்கும் கைங்கரியத்தை சிங்கள அரசு எங்களைக்கொண்டே செயல்படுத்தி வருவதை நாங்கள் இன்னமும் உணரவில்லை என்றே தோன்றுகிறது.:( 

ஆமா அண்ணே இங்கே குற்றம் இழைக்கப்பட்டவர்களை கைது செய்யதால் வெளிநாட்டில் விபரம் தொரியாமல் கைதுகள் நடக்கிறது என்று சொல்லி திரிகிறார்கள் அதை விபரிப்பதற்காகதான் எழுதியது அப்படி

சிங்கள அரசு என்று ஒரு வட்டத்தை போட்டுக் கொண்டு அதற்குள்ளே நிற்கிறார்கள் கனபேர்

Edited by முனிவர் ஜீ

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப்போரின்போரின்போது சரணடைந்தவர்களைக் கைதுசெய்து அவர்களுடன் தற்செயலாத் தொலைபேசியில் தொடர்புடையவர்களைக்கூட புலம்பெயர்தேசங்களில் தேடப்படுகின்ற சம்பவம் தற்போது வெகு விரைவாக நடைபெறுகின்றது. புலிகளது இருப்பினை உறுதிசெய்து மீண்டும் தமிழ்மக்கள்மீது அடக்குமைறைகளைத் தொடர்வதற்கான காரணங்களூக்கான நிகழ்ச்சித்திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள விரைவாகச்செயல்படும் சிங்களத்தின் புலநாய்வாளர்கள் கையளவு பிரதேசமான யாழ்குடாவில் நடக்கின்ற பொறுக்கிகளது வன்முறையக் கட்டுக்குள் கொண்டுவந்து அவர்களை இல்லாதொழிப்பதில் தயக்கம் காட்டுவது ஏற்புடையதல்ல. அனைத்தும் திட்டமிட்டவாறே நடைபெறுகின்றது.

இவர்களை வளர்த்துவிட்டவர்களில் வடக்குக் கிழக்கெங்கும் கடைவிரித்துள்ள நிதிநிறுவனங்களது பங்களிப்பும் கணிசமாக உள்ளது, லீசிங்கின் தவணைப்பணத்தைக் கட்டத்தவறியவர்களது சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கு நிதிநிறுவனங்கள்இப்படியான பொறுக்கிகளைவைத்தே கையாளுகிறார்கள். இவர்கள் கைதுசெய்தல் சட்டத்தின்முன் நிறுத்துதல் இவைகளிலிருந்து தப்பிக்க தமிழர்பகுதியில் கடைவிரித்துள்ள நிதிநிறுவனங்களும் ஒருவகையில் காரணம்.

குடாநாட்டின் புதிய நுகர்வுக்கலாச்சாரம் தற்போது சமூகச்சீரழிவுகளின் ஆரம்பப்புள்ளியின் ஒரு கண்ணியாக இருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.