Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காட்டிக்கொடுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீன்பிடிப்படகு நீர்கொழும்பில் இருந்து புறப்படுகிறது. உடப்பைச் சேர்ந்த தமிழ்.. முஸ்லீம் இளைஞர்களும்.. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்களும்.. தென்பகுதியையைச் சேர்ந்த சிங்கள..இளைஞர்களுமாக.. மொத்தம் 30 பேர் வரை அதில் பயணிக்கிறார்கள்.

எல்லாரும் குடும்பக் கஸ்டம் காரனமாக.. கடனை உடனை வாங்கி கப்பல் ஏறியவர்கள் தாம். எல்லாருக்கும் கனவு இத்தாலியைச் சென்றடைவதும்.. பின் அங்கு செல்வம் சேர்ப்பதும்.. பின் குடும்பம் குழந்தை என்று.. பெருகி அந்த நாட்டில் நிரந்தரக் குடிகளாகி.. வாழ்வதும்.. வெறும் பந்தாவுக்கு ஊருக்கு ஹொலிடே போவதும் தான்.

ஆரம்பத்தில் படகுப் பயணம் உற்சாகமாக இருந்தாலும்.. போகப் போக.. அச்சம் கலக்க.. படகும் எங்கெங்கோ எல்லாம் திக்கு திசை மாறிப் போய் 40 நாட்கள் முடிவில் இத்தாலிக் கரையை அடைகிறது. இடுப்பளவு தண்ணியில்.. எல்லோரும் இறக்கிவிடப்படுகிறார்கள்.

படகில் பயணிக்கும் போது தமிழ்.. முஸ்லீம்.. சிங்களம் என்று எந்த வேறு பாடுமின்றிய இயங்கிய இளைஞர்கள்.. திடீர் என்று.. நீ தமிழ் பேசிறனி.. நான் சிங்களம் பேசுறனான்.. நாங்க ஒரு குழுவா எங்க பாட்டில போறம்.. நீங்க உங்க பாட்டில போங்க என்று இத்தாலிக் கரையைக் கண்ட சந்தோசத்தில் சிங்களவர்கள் ஒரு குழுவாகவும்.. தமிழ் பேசும்.. (தமிழர்களும் முஸ்லீம்களும்) ஒரு குழுவாகவும் புறப்பட்டு விடுகிறார்கள். 

தமிழ் பேசிற குழு.. ஒரு பெற்றோல் ஸ்ரேசனை அடைகிறது. வைத்திருந்த அமெரிக்க டாலர்களை யூரோ ஆக்கிக் கொண்டு.. பொதுத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டியவர்களை தொடர்பு கொள்கிறது. அந்த நேரமாகப் பார்த்து யாரோ கொடுத்த தகவலுக்கு அமைய இத்தாலி பொலிஸ் இவர்களைச் சுற்றிவளைக்கிறது. சுற்றிவளைத்து எல்லோரையும் கைது செய்து ஒரு பொது தடுப்பிடத்திற்கு கொண்டு போகிறது. அங்கே போனால்.. அந்தச் சிங்களக் குழுவும் படகோட்டி முதல் அனைவரும் ஏலவே தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களைக் கண்டதும்.. இந்த இளைஞர்களுக்கு விளங்கிவிட்டது.. தங்களை அவர்கள் தான் காட்டிக்கொடுத்திருக்கிறார்கள் என்று. 

இரண்டு நாள் நல்ல கவனிப்புடனான தடுத்து வைப்பின் பின்.. மொழிபெயர்ப்பாளர்களின் உதவியுடன் விசாரணைகளை ஆரம்பிக்கிறார்கள்.. இத்தாலிய அதிகாரிகள்.

தமிழ் பேசுறவர்கள் எல்லாம்.. தமிழர்களா என்று அறிந்து சொல்லுமாறு.. இத்தாலிய அதிகாரிகள்.. பணிக்க..மொழிபெயர்ப்பாளர் பெயர்களைக் கேட்கிறார்கள். முஸ்லீம்களும் தமிழ் பெயர்களையே மாற்றிச் சொல்கிறார்கள். மொழிபெயர்பாளருக்கு பேசும் தமிழில் உள்ள வேறுபாடு புரிந்துவிடுகிறது. அவர் அதனை அதிகாரிகளுக்கு விளக்குகிறார். அதிகாரிகள் தமிழ் யார் முஸ்லீம் யார் என்று எப்படியாவது கண்டுபிடியுங்கள் என்று சொல்ல.. மொழிபெயர்பாளர் ஒரு உக்தியை கையாள்கிறார். தமிழ் தெரிந்தவர்கள்.. ஆளாளுக்கு ஒரு தேவாரம் பாடு என்று கேட்கிறார்.

முஸ்லீம் இளைஞர்கள் மனதில் அப்ப தான் பள்ளிக்கூட நினைப்பு வருகிறது. தமிழ் சகோதர்களோடு சேர்ந்து படித்த போது அவர்கள் பாடிய தேவாரங்கள் காதில் வீழ்ந்த நினைவுகளை புரட்டிப்போட்டுப் பார்க்கிறார்கள். வாழ்வா சாவா போராட்டம். போட்ட கடனை அடைக்கனும். கண்ட கனவை நனவாக்கனும். எப்படியாவது தேடிப்பிடித்து நாலு தேவார வரியைப் பாடிடனும் என்ற படபடப்புக்கு மத்தியில்... ஒருவாறு தேவாரங்களை அரையும்குறையுமாகப் பாடி முடிக்கிறார்கள். மொழிபெயர்ப்பாளருக்கு உண்மை விளங்கினாலும் அவர் காட்டிக்கொடுக்க விரும்பவில்லை. எல்லாம் தமிழ் தான் என்று சொல்லி.. எல்லோரையும் அகதிகளாகப் பதியச் சம்மதிக்கிறார்கள் அதிகாரிகள்.

சில நாள்...தடுத்து வைப்பு 40 நாட்கள் நீண்ட பின்.. எல்லா அகதி விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு.. தமிழ் என்று பதிந்தோர் எல்லோருக்கும்.. 5 ஆண்டு விசாவும்.. 400 யூரோவும் கொடுத்து ஆட்களை வெளியில் விடுகிறார்கள். 

வெளியில் வந்தந்தும்.. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்று நிற்கும் மாடுகள் சிலவற்ரின் அறிமுகம் வேறு கிடைக்கிறது. இத்தாலியில் நின்று என்ன செய்யப் போறீங்கள். மொழி தெரியாமல். அதுபோக இங்க வேலை எடுப்பதும் கஸ்டம்.. பாத்திருப்பயள் தானே ஒரு சிகரட் பக்கெட்டுக்கு படுக்கையை பரிமாறும் அளவுக்கு இந்த நாட்டுப் பெண்களே வறுமையில் கிடக்குதுங்க.. நீங்கள் என்ன செய்யப் போறியள்..

மனதுக்குள் கண்ட கனவுகள் மீண்டும் நினைவில் வந்து அலைமோதுகின்றன. கையில உள்ள காசை வைச்சுக் கொண்டு.. எப்படியாவது.. அடுத்த கட்டப் பயணத்தை பார்ப்பம் என்று ஆசை மனசு தூண்டி விட அத்தனை தமிழ் பேசுறவையும்.. இங்கிலாந்து போவது என்று தீர்மானிக்கிறார்கள்.

அதன் முதற்கட்டமாக பிரான்சை அடைகிறார்கள். அங்கோ.. ஊரில் தட்டிவானுக்கு ஆள் சேர்ப்பது போல.. லண்டன் டோவருக்கு.. ஆள் சேர்க்கிறது கூட்டம். ஆளுக்கு இவ்வளவு தான்.. கொண்டு போய் விடுறம்.. பகிரங்கப் பேரங்கள் வேற.

சரி இங்கிலாந்து போவது என்று தீர்மானிச்சாச்சு.. கிடக்கிறதை வித்துத் தொலைச்சு உள்ளதையும் போட்டுப் போய் சேருவம் என்று ஒரு 8 தமிழ் பேசும் இளைஞர்கள் நாலு கன்ரெய்னர்களில்.. ஒன்றுக்கு இருவராய்.. டோவரை நோக்கி பயணிக்கச் செய்யப்படுகிறார்கள். 

கன்ரெய்னர்கள்.. இங்கிலாந்து எல்லையை அடைகிறது. பரிசோதனைகள் ஆரம்பமாகின்றன. ஒரு கன்ரெய்னரில்.. ஒளிந்திருந்த ஒரு முஸ்லீம் தமிழ் பேசும் இளைஞன் இங்கிலாந்து அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு விடுகிறான். அவனுக்கு விளங்கியது.. இது தான் போக வேண்டிய இடமல்ல. அதற்கு முதலே பிடிபட்டிட்டன் என்று.

உடனே அந்த அதிகாரிகளிடம் உள்ள இன்னொருத்தரும் இருக்கிறார் என்று காட்டிக்கொடுக்கிறான். அந்த நேரத்தில்... அவன் மனசு அவனைக் குடைய ஆரம்பித்துள்ளது.... என்னைப் பிடிச்சு திருப்பி அனுப்பினால்.. நான் ஊரில போய் கஸ்டப்பட.. மற்றவன்.. இங்கிலாந்து போய் அசைலம் அடிச்சு.. பின் ஊருக்கு ஹொலிடேன்னு வந்து நக்கல் அடிச்சான் என்றால்.. என் நிலைமை என்னாவது.. என்ற அக்கறையில் தான் அந்த அதி உன்னத காட்டிக்கொடுப்புச் சிந்தனை.. பிறந்திருக்குது. அதன் பெறுபேறாக காட்டிக் கொடுத்திட்டான்.

அதிகாரிகளும் கன்ரயினரை முழுமையாக சோதனை செய்து அங்கு ஒளிந்திருந்த அந்த இரண்டாம் இளைஞனை கண்டுபிடித்து அழைத்து வர... அவன்.. இவனைப் பார்த்து முறாய்ந்துக் கொண்டு போயிருக்கிறான். படுபாவி.. தான் தான் மாட்டினது என்றில்லாமல் என்னையும் மாட்டிட்டானே என்று... அவன் மனம் உளறுவது இவனுக்கு அவன் கண்ணில் பட்டது.

இறுதியில்.. இருவரும்.. இங்கிலாந்து காவல்துறையால் விசாரிக்கப்பட்டு.. குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளிடம் கையளிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு மிச்ச இளைஞர்கள் எந்த கன்ரெயினரில் வருவார்கள் என்பது தெரியாததால்.. அவர்களைக் காட்டிக்கொடுக்க முடியவில்லை. அந்தக் கவலையோடு தடுப்பு முகாமில் இருக்க.. இவர்களில் காட்டிக்கொடுத்தவரை அழைத்து அதிகாரிகள் விசாரித்துவிட்டு... அவருக்கு தற்காலிக வதிவிட அட்டை வழங்கி முதலில் வெளியே விடுகிறார்கள். 

வெளியே வந்த அந்த முஸ்லீம் இளைஞருக்கோ மகா சந்தோசம். ஒருவேளை தான் காட்டிக்கொடுத்ததால் தான் தன்னை கெதியா விசா தந்து விட்டிட்டாங்கள் போல என்று மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்காத குறையாக மனதில் சந்தோசம் வளர்த்திருக்க.. கொஞ்ச நேரத்தின் பின் மற்றைய தமிழ் இளைஞனும் அதே அட்டை வழங்கப்பட்டு விடுவிக்கப்படுகிறான்.

+++++

காலம் வழமை போலக் கடந்து ஒட.. 14 ஆண்டுகளின் பின்னும்....

அந்த முஸ்லீம் இளைஞன் man bag ஐ தோளில்.. மாட்டிக்கிட்டு இலண்டன் வீதிகளில்.. அலைகிறான். இன்னும் ஊருக்கு ஹாலிடே போகும் கனவு பலிக்கவே இல்லை என்ற கவலை மட்டுமல்ல... கல்யாணம் கூட ஆகல்லை என்ற கவலையும்.. கையில.. நினைச்ச அளவுக்கு காசும் இல்லை என்ற அளவில்.. அந்த தமிழ் இளைஞன் நடத்தும் உணவகத்தில்.. உணவருந்தியபடி. 

(கதை உண்மைச் சம்பவம் ஒன்றை 99% தழுவியது.)

  • கருத்துக்கள உறவுகள்

அந்த 1% கற்பனை எதுவென்று சொன்னா நாங்களும் சந்தோசப்படுவோம்மல்ல.....tw_tounge_wink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

அந்த 1% கற்பனை எதுவென்று சொன்னா நாங்களும் சந்தோசப்படுவோம்மல்ல.....tw_tounge_wink:

1% உள்ளடக்கப்படவில்லை.. புத்து. tw_blush:

அது இதுதான்..

படகு.. இத்தாலிக் கரையை அடைய முதல் இத்தாலிக் கடல் எல்லையை அடைந்ததும்.. சிங்களப் படகோட்டி.. தமிழ் பேசும் இளைஞர்களை கடலில் குதித்து நீந்தி கரைசேரப் பணித்தாராம். ஆனால்.. கூட்டத்தில் இருந்தது அதிகம் தமிழ் பேசும் இளைஞர்களாம். அதில் படகின் குசுனியில் இருந்த இந்த கதையில் வரும் முஸ்லீம் இளைஞன்... ஆத்திரமடைந்து கத்தியை காட்டி.. படகோட்டியை கரையை நோக்கி படகை செலுத்தச் சொன்னாராம். அதன் பின் படகு இடுப்பளவு தண்ணியில் எல்லோரையும் இறக்கிவிட்டதாம்.

இதை ஏன் உள்ளடக்கல்லை என்றால்...  உண்மையை தரிக்காமல்.. இனவாதம் கலக்கப்பட்டிருக்கு கதைல என்று சொல்லுவாங்கல்ல. நாங்க யாரு... சிங்களவனுக்கு நோகாமலும்.. எங்களுக்கு வலிக்காத மாதிரியும்.. நடிக்கத் தெரிஞ்சனாங்கள். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கத்திற்கு நன்றிகள் நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோரு கதை. எனக்கு ஒர் சந்தேகம் முஸ்லீம்கள் தாங்களுடைய தமிழில் எப்படி தேவாரம் பாடியிருப்பர்கள் என. அல்லா நிச்சயம் மன்னித்திருப்பார்.

மேலும் இப்படி ஓர் ஐரோப்பிய நாட்டில் விசா கிடைத்தவர்களுக்கு மீண்டும் இன்னோர் ஐரோப்பிய நாட்டில் கொடுக்கா மாட்டார்கள் என நினக்கின்றேன்.   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, colomban said:

மேலும் இப்படி ஓர் ஐரோப்பிய நாட்டில் விசா கிடைத்தவர்களுக்கு மீண்டும் இன்னோர் ஐரோப்பிய நாட்டில் கொடுக்கா மாட்டார்கள் என நினக்கின்றேன்.   

அங்க ஒரு பெயர்.. இங்க ஒரு பெயர். அங்க ஒரு DOB.. இங்க ஒரு DOB. சொறீலங்கா ஆக்களுக்கு வெள்ளைக்காரனைச் சுத்திறது கைவந்த கலை. :rolleyes:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

அங்க ஒரு பெயர்.. இங்க ஒரு பெயர். அங்க ஒரு DOB.. இங்க ஒரு DOB. சொறீலங்கா ஆக்களுக்கு வெள்ளைக்காரனைச் சுத்திறது கைவந்த கலை. :rolleyes:tw_blush:

இல்லை நெடுக்ஸ் 

பாதுகாப்பான ஓர் மூன்றாம் நாட்டில் இருந்து வருதல் காரணமாக இருக்கலாம், மேலும் இப்பொழுது கைவிரல் அடையாளம் எடுப்பதனாலும் அவை செங்கன் வீசா database, செல்வதனால் இப்போ சுத்து மாத்து செய்வது கடினம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

இல்லை நெடுக்ஸ் 

பாதுகாப்பான ஓர் மூன்றாம் நாட்டில் இருந்து வருதல் காரணமாக இருக்கலாம், மேலும் இப்பொழுது கைவிரல் அடையாளம் எடுப்பதனாலும் அவை செங்கன் வீசா database, செல்வதனால் இப்போ சுத்து மாத்து செய்வது கடினம். 

நீங்கள் சொல்வது கடந்த 5..6 வருடங்களுக்கு முன்பிருந்து வருபர்களுக்குப் பொருந்தலாம். ஆனால்.. 10.. 14 வருடங்களுக்கு முன் பயோமாற்றிக் தரவுகள் எடுக்கப்படுவது பெரிதாக நடைமுறையில் இருந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் நாங்கள் அறியவே சிலர்.. ஜேர்மனியில் அகதித் தஞ்சம் கோரிய பின்.. இங்கிலாந்துக்குள் நுழைத்து பெயர் மாற்றி அகதித் தஞ்சம் கேட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு உண்மை கதையை பதிவு செய்ததுக்கு நன்றி. நானும் சில உண்மைகளை பதிய விரும்புகிறேன்.

இருவர் நண்பர்கள் UK வந்து அகதிக்கு விண்ணப்பித்து இருந்தார்கள். உண்மையில் பாதிக்க பட்டவனுக்கு விசா பத்து வருடங்களாக இல்ல. ஆனால் நாட்டு பிரச்சனை பாதிப்பு இல்லாமல் UK வந்தவனுக்கு உடனே விசா. அத்துடன் மச்சான் காரன் கடையும் போட்டு குடுக்க அவன் பெரியாள் ஆகிட்டான். இதை என்ன விதி என்று சொல்லவா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, M.P said:

இதென்ன பெரிய விடயம்.. ஒருத்தி கொழும்பில் பிறந்து வளர்ந்து.. படிக்க என்று வந்தா... ஆள் கொஞ்சம் வடிவும்... வந்தது ஒரு கொலிச்சில் படிக்க. கொலிச்சுக்குப் போகாமல்.. படிக்க காசில்லை என்று சொல்லி.. அகதிஅந்தஸ்துக் கேட்டா. ஒரு பிரச்சனையும் இல்லாமல்.. ஸ்கிரினிங் இன்ரவியு முடிஞ்சு.. இரண்டு வாரங்களில்.. அகதி அந்தஸ்துக் கொடுக்கப்பட்டு.. இப்ப நிரந்தர வதிவுரிமைக்கு வெயிட்டிங். அதுக்கிடையில ஒரு கல்யாணம் சரிவர.. இப்ப குடும்பஸ்தை. 

செல்.. துவக்கு.. பொம்பர்.. சுப்பர் சொனிக்.. கிபீர் அடின்னா.. என்னென்னு கூடத் தெரியாது. 

எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பனவு வேண்டும். சிலது பாவங்கள்.. வருசக்கணக்கா.. இழுபடுகுதுங்க. இதை எதனால் விளங்கப்படுத்துவது என்று இன்று வரை புரியல்ல. tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

அந்த பிள்ளையை கணக்கு பண்ணியிருந்தால் நீங்களும் பிறிவிசா (பிகருவிசா) எடுத்து வாழ்ந்து காட்டியிருக்கலாம் (கட்டியியும் இருக்கலாம்   ) இப்படி காஞ்சி கிடக்க தேவை இல்லை??

அந்த யூனியிலதானே நீங்களும் ஆரம்பத்தில் இருந்தயள்?

அருமையான கதை நான் சொன்னது உன்மை தானே ???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, முனிவர் ஜீ said:

அந்த பிள்ளையை கணக்கு பண்ணியிருந்தால் நீங்களும் பிறிவிசா (பிகருவிசா) எடுத்து வாழ்ந்து காட்டியிருக்கலாம் (கட்டியியும் இருக்கலாம்   ) இப்படி காஞ்சி கிடக்க தேவை இல்லை??

அந்த யூனியிலதானே நீங்களும் ஆரம்பத்தில் இருந்தயள்?

அருமையான கதை நான் சொன்னது உன்மை தானே ???

ஜீ என்ன ரெம்ப பம்பி.. பிள்ளை அதுஇதென்னு எழுதிறீங்க.

அந்தப் பொண்ணுக்கும் நமக்கும் எந்தத் தொடர்புமில்லை. அது நமக்குத் தெரிந்தவர்களிடம் ஏதோ உதவி கேட்டு வந்த இடத்தில் சொல்ல அறிந்து கொண்டவை தான் இவை.

சும்மா கண்ட பிகரிலும் கண்போடுற அளவுக்கு நாங்க என்ன பக்குவப்படாத ஜென்மங்களா என்ன. எந்த விசயத்தில தப்புப் பண்ணினாலும்.. பொண்ணுங்க விடயத்தில ரெம்ப அலேட். ஏமாறவும் கூடாது.. ஏமாத்தவும் கூடாது. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nedukkalapoovan said:

காலம் வழமை போலக் கடந்து ஒட.. 14 ஆண்டுகளின் பின்னும்....

அந்த முஸ்லீம் இளைஞன் man bag ஐ தோளில்.. மாட்டிக்கிட்டு இலண்டன் வீதிகளில்.. அலைகிறான். இன்னும் ஊருக்கு ஹாலிடே போகும் கனவு பலிக்கவே இல்லை என்ற கவலை மட்டுமல்ல... கல்யாணம் கூட ஆகல்லை என்ற கவலையும்.. கையில.. நினைச்ச அளவுக்கு காசும் இல்லை என்ற அளவில்.. அந்த தமிழ் இளைஞன் நடத்தும் உணவகத்தில்.. உணவருந்தியபடி. 

(கதை உண்மைச் சம்பவம் ஒன்றை 99% தழுவியது.)

ஹி ஹி .... இங்கே (லண்டனில்) தான் தமிழன் நிற்கின்றான்

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nedukkalapoovan said:

இதென்ன பெரிய விடயம்.. ஒருத்தி கொழும்பில் பிறந்து வளர்ந்து.. படிக்க என்று வந்தா... ஆள் கொஞ்சம் வடிவும்... வந்தது ஒரு கொலிச்சில் படிக்க. கொலிச்சுக்குப் போகாமல்.. படிக்க காசில்லை என்று சொல்லி.. அகதிஅந்தஸ்துக் கேட்டா. ஒரு பிரச்சனையும் இல்லாமல்.. ஸ்கிரினிங் இன்ரவியு முடிஞ்சு.. இரண்டு வாரங்களில்.. அகதி அந்தஸ்துக் கொடுக்கப்பட்டு.. இப்ப நிரந்தர வதிவுரிமைக்கு வெயிட்டிங். அதுக்கிடையில ஒரு கல்யாணம் சரிவர.. இப்ப குடும்பஸ்தை.

ஆங்கிலத்தில் கதைக்க முடியுமென்றால், வெள்ளைகளுக்கு எது சொன்னாலும் நம்பிடுவாங்க, அந்தளவு நல்லவங்க.

நல்ல கதை தொடருங்கள். அந்த முஸ்லீம் பையனுக்கும் அங்கு அவனது உறவினர்கள் / நண்பர்கள்இருந்திருந்தால், இப்ப அவன் பெரிய முதலாளி

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

ஜீ என்ன ரெம்ப பம்பி.. பிள்ளை அதுஇதென்னு எழுதிறீங்க.

அந்தப் பொண்ணுக்கும் நமக்கும் எந்தத் தொடர்புமில்லை. அது நமக்குத் தெரிந்தவர்களிடம் ஏதோ உதவி கேட்டு வந்த இடத்தில் சொல்ல அறிந்து கொண்டவை தான் இவை.

சும்மா கண்ட பிகரிலும் கண்போடுற அளவுக்கு நாங்க என்ன பக்குவப்படாத ஜென்மங்களா என்ன. எந்த விசயத்தில தப்புப் பண்ணினாலும்.. பொண்ணுங்க விடயத்தில ரெம்ப அலேட். ஏமாறவும் கூடாது.. ஏமாத்தவும் கூடாது. tw_blush:

இப்ப நம்புறன் ??☺

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக எழுதியுள்ளீர்கள் நெடுக்ஸ்....!  tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காட்டிக்கொடுப்பு ......கலக்குது tw_thumbsup:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஆஸ்திரேலியாவில் சிம்பிளா அகதி அந்தஸ்து கொடுப்பாங்கள் நீங்கள் பிளேனில் வந்தால். கப்பலில் வந்தால் குடுக்க மாட்டங்கள். ஏனென்றால் கப்பல் காரங்களுக்கு கொடுத்தால் பக்கத்தில் உள்ள நாடுகள், இந்தோனேசிய மாதிரியான நாட்டுக்கு சிம்பிளா வந்து நாலு ஐஞ்சு மணித்தியாலத்தில் ஒரு போட்டில் மேற்கு அவுஸ்திரேலியாவை வந்திடலாம். இதை விடவும் கூடாது. ஏனென்றால் நம்மட இலங்கை ஆக்களை விட உந்த முஸ்லிம் கூட்டம், காப்பிலிகள் சிம்பிளா வந்துடும்.

நான் சொல்ல வந்த விஷயம் என்னவென்றால். நம்மட ஆட்கள் கொழும்பு அங்க இங்க என்று புலி என்ன நிறம் என்றே தெரியாமல் இருந்திட்டு student விசாவில் இங்க சிம்பிளா வந்திட்டு அகதி அந்தஸ்து கேட்டு பெற்றவை. பல பொடியள் படிப்பையும் விட்டுட்டு ஜாலிய திருயுதுகள்.

ஏன் பெரதேனிய மொரடுவ இங்கினியர் பொடியள் ஸ்கொலசிப் எடுத்து படிக்க வந்திட்டு அகதி அந்தஸ்து கேட்டவை. ஏன் என்றால் படிச்சு முடிய நிரந்தர விசா எடுக்க 5000 டொலர் வேணும். IELTS  ஆங்கில exam எடுக்க வேணும். அகதி அந்தஸ்து எடுக்க லோயர் 3000 டொலர் தான் கேட்டாராம். அதுவும் விசா ஓகே எண்டாத்தான் காசு கொடுக்க வீணும்.

அப்படியே படிச்சு முடிய அம்மா அப்பா சகோதரங்களை பட்டமளிப்பு விழாவுக்கு கூப்பிட்டு அவையளும் அகதி அந்தஸ்து அடிச்சு இங்கே இருக்கினம். இங்க சும்மா அம்மா அப்பாகளை நிரந்தரமாக கூப்பிட ஏலாது. 40,000 டொலர்  கட்டினால் ஒருவருக்கு நிரந்தர விசா எடுக்கலாம். ஆனால் மருத்துவம் மட்டும் இலவசம். இது அகதி அடிச்சால்  எல்லாம் இலவசம். அதை விட மாதம் காசு. பிறகு பென்சன்.

சிலவேளை இங்குள்ளவர் அகதி அந்தஸ்து கேட்டவர் என்றால் அம்மா அப்பாக்கு சுற்றுலா விசா கொஞ்சம் கடினம். அதுக்கும் வழி இருந்தது. 10,000 டொலர் டிப்பொசிட் கட்டினால் விசா கொடுப்பான். வந்தவர் திரும்பி போனவுடன் கட்டிய 10,000 டொலர் திரும்பி கிடைக்கும். எனக்கு தெரிந்த எஞ்சினியர் ஒருவர் 20,000 டொலர் கட்டி அம்மா அப்பா இருவரும் பட்டமளிப்பு விழாவுக்கு கூப்பிட்டு அவையள்  அகதி அந்தஸ்து பெற்றவை. அந்த எஞ்சினியர் லோயரை பிடிச்சு 20,000 டொலர் திரும்பி பெற்று கொண்டார். அவர் சொன்ன காரணம் தான் அப்பா அம்மாவை திரும்பி போக சொன்னான். அவைக்கு அங்க போக பயம். இப்ப அது அவர்களின் பிரச்சனை.

இவற்றுக்கு பிறகு இங்க படிக்க வர இருந்த பலருக்கு ஆஸ்திரேலியா விசா கொடுக்கல்ல. கொடுத்தவர்களுக்கும் பல கடினத்தின் மத்தியில் தான் கொடுத்தவங்கள்.

எல்லோரும் தான் தப்பினால் காணும் என்றுதான் நினைக்கினம். தங்களின் செயலால் மற்றவர்களுக்கு என்ன பாதிப்பு வந்தாலும் பரவாவில்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்பட்ட மக்கள் அரசியல் தஞ்சம் கோருவது நியாயப்படுத்தக் கூடிய விடயம். ஆனால்.. அகதி அந்தஸ்து அளிக்கும் பொருண்மிய.. வதிவிட உரிமைகளுக்காக.. அதனை பலரும் துஸ்பிரயோகம் செய்வது மேற்கு நாடுகள் எங்கனும் நடக்கிறது. குறிப்பாக பொருண்மிய அடைக்கலம் தேடிகள் தான் இந்த துஸ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றனர். இதனால்.. பாதிக்கப்படுவது நியாயமான அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்களும்.. பிற விசா கோரிகளும் ஆவர். tw_warning:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் கதை அருமை!

அதைவிடவும்.. அதற்கான பின்னூட்டல் கருத்துக்கள் இன்னும் அருமை!

அவுஸில் இடைக்கிடை அகதி முகாமுக்குச் சாப்பாடு கொண்டு போய்க் கொடுத்ததால் சில விசயங்கள் கொஞ்சம் தெரியும்!

எனக்குத் தெரிய ஒரு தமிழ் நாட்டுப் பிராமணத்தியும், ஒரு சிங்களத்தியும் ஒரு விதமான பிரச்சனைகளும் இல்லாமல் அகதி விசா பெற்றுக்கொண்டார்கள்!

அவர்களுக்கு யாழ்ப்பாணத்துப் புவியியலும், தமிழும் சொல்லிக்கொடுத்தவர்கள்... நீண்ட காலம் விசா கிடைக்காது இழுபட்ட...தமிழீழத்துப் பெருந் தகைகள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதையை படித்து விருப்பிட்ட உறவுகளுக்கும் கருத்துப் பகிர்ந்த உறவுகளுக்கும் நன்றி. tw_blush:

இதில் பலருக்கு புனர்வாழ்வு அவசியம் தேவை .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, arjun said:

இதில் பலருக்கு புனர்வாழ்வு அவசியம் தேவை .

உங்களுக்கும் சிங்களர்களுக்கும் மூளை மாற்று சத்திரசிகிச்சை செய்யும் போது.. இவர்களுக்கு புனர்வாழ்வு செய்வதை பற்றி உத்தேசிக்கலாம். tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.