Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் 2016

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 5/19/2016 at 4:13 AM, MEERA said:

200 ரூபாய் பணத்திற்கும்ஒரே ஒரு பிரியாணி பொட்டலத்திற்கும்
வறண்ட நாக்கோடு கொளுத்தும் கொடும் வெயிலில் உயிரையும் இழக்கத் தயாராகிப்போன ஒரு சமூகத்தில்
புரட்சி எங்ஙனம் வெடிக்கும்?

அயோக்கியன் என்று தெரிந்த பின்னும்அவனுக்கு ஆரத்தி எடுத்துஆரத்தித் தட்டில் விழப்போகும் சில்லறை பணத்திற்காக பல்லிளித்து நிற்கும் ஒரு சமூகத்தில் மாற்றம் எங்ஙனம் சாத்தியம்?

எத்தனை கொடுமைகள் இழைத்தாலும்அதனையெல்லாம் மறந்துவிட்டு மீண்டும் மீண்டும் சின்னங்களை மட்டுமே பார்த்துவாக்களிக்கும் ஒரு சமூகத்தில் மாற்றம் எப்படி நடக்கும்?

படித்தவன் சூதும் பாவமும் செய்கிற சமூகத்தில் முன்னேற்றம் எந்த வழியில் வந்து சேரும்?

என் அப்பா அந்தக் கட்சி... என் தாத்தா அந்தக் கட்சி ...”நாங்கள் பரம்பரை பரம்பரையாய் அந்தக் கட்சிக்குத்தான் ஓட்டுப்போடுவோம்” என்று அப்பன் வெட்டிய கிணற்றில் உப்புத்தண்ணீர் குடிக்கிற மகன்கள் இருக்கிற தேசத்தில் புதிய மலர்ச்சி எப்படி உருவாகும்?

நமது தாத்தனும், அப்பனும் பாடுபட்டு வளர்த்த கட்சி கடைசியில் தலைவரின் குடும்ப சொத்தாகிப் போனதின் சூது தெரியாமல் வாழ்க கோஷங்களை வாய் கிழிய எழுப்பும் மகன்கள் இருக்கிற நாட்டில் மாற்றம் எப்படி சாத்தியம்?

கட்சி எது? சின்னம் எது? தலைவர் யார்? எது சரியான பாதை? என்ற அடிப்படை அரசியல் அறிவுகூட இல்லாத பொறியியல் பட்டதாரிகள் மலிந்த இளைய தலைமுறையினால் மாற்றம் எப்படி வந்து சேரும்?

தேர்தல் என்றால் ஒரு நாள் விடுமுறை என்று வாக்குச்சாவடிக்கு செல்லாமல் விடுமுறை கொண்டாடுகிற தேசத்தில் புதிய அரசு எப்படி சாத்தியம்?

எமது மக்கள் எப்போதும் தற்காலிக சுகங்களிலே நிறைவடைந்து விடுபவர்களாய் இருக்கிற வரையிலும்நிம்மதியான வாழ்க்கையை வாழவே போவதில்லை....

 
''குனிந்து செல்! கூனிக் குறுகி நட!! வீழ்ந்து கும்பிடு!! உருண்டு புரளு!! - தலை நிமிராதே! ''
fb

மீரா நீங்கள் தமிழ் நாட்டு தமிழர்களை அவ்வளவு மட்டமாக நினைத்ததற்கு நான் வருந்துகிறேன். இங்குள்ளவர்கள் வெறும் 200 ருபாய் பொட்டலதிர்க்காக தனது வாழ்க்கையை அடகு வைக்க மடையர்கள் ஒன்றும் இல்லை.

இந்த தேர்தலில் தி மு க , அ தி மு க பெற்றுள்ள  வாக்குகள் சராசரி 40% வாக்குகள். 80% மக்கள் இந்த இரண்டு கூட்டணியையும் ஆதரிதே வாக்குகள் அளித்துள்ளார்கள். ஜெயா வெற்றி பெற்றது 4 லட்சம் வாக்குகள் கூடுதலாக மட்டுமே.

ஏன் மக்கள் மாற்று கூட்டணிக்கு வாக்கு அளிக்க வில்லை 

1. விஜயகாந்தின் மக்கள் நல கூட்டணி ஆரம்பம் முதலே சரியான கொள்கையோடு பேசவில்லை. வைகோ மற்றும் திருமா வளவன் போன்றோர் குடித்து விட்டு பேசும் விஜயகாந்தை முதல்வர் ஆக்குவோம் என்று சொன்னதை வெறுத்து ஒதுக்கி உள்ளார்கள்.
இதிலிருந்து தமிழக மக்கள் எப்படி பட்டவர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

2. நாம் தமிழர் சீமான் ஆரம்பம் முதலே தமிழகத்தின் சமூக கட்டமைப்பை உடைத்து விட வேண்டும் என்ற தொனியிலேயே பேசி வந்தார். அவருடைய பல திட்டங்கள் நன்றாக இருந்தாலும், பல திட்டங்கள் இந்த நவீன உலகிற்கு ஏற்புடையதாக இல்லை என்று மக்கள் கருதினார்கள். தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் திராவிடர்கள் தமிழகத்தில் இருந்தாலும் அவர்கள் இந்த மாநிலத்திற்கு வந்து 400 வருடங்கள் ஆகிவிட்டது. அவர்கள் தமிழகத்தில் தமிழர்களுடன் தமிழர்களாக வாழ்கிறார்கள் என்பதே உண்மை. அவர்களுக்கு எதிராக பேசுவதை தமிழக தமிழர்கள் முழுவதும் ஏற்று கொள்ளவில்லை. ஒன்றாய் இருக்கும் சமூகத்தை பிளவு படுத்தும் செயல்களை அவர்கள் விரும்பவில்லை. ஏனென்றால் அது அவர்களையும் பாதிக்கும் என்று புரிந்து வைத்துள்ளர்கள். இதிலிருந்து தமிழக தமிழர்கள் எவ்வளவு சமூக பொறுப்புள்ளவர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

3. ஜெயாவை ஆதரித்தது ஏன் என்று பார்த்தால் பல காரணங்கள் வெளியில் வரும். வளர்ந்த மாநிலமான தமிழகத்தில் மின்சார பிரச்னை அதிகமாக கடந்த காலங்களில் இருந்தது. ஜெயா ஆட்சிக்கு வந்த பிறகு, முற்றிலுமாக அந்த பிரச்சனையை தீர்த்து வைத்து உள்ளார். இது மாபெரும் சாதனையாக மக்களால் பார்க்க முடிகிறது.

 தமிழகத்தில் நிறைய குடிநீர் திட்டங்கள் கொண்டு வந்து, குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளார். சென்னையில் மாபெரும் வெள்ளம் வந்தாலும் வெறும் 4 நாட்களில் நகரை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்தது என்னை போன்றோரை ஆச்சரியம் படுத்தியது என்று சொல்வதே சரியாக இருக்கும் 

மலிவு விலை உணவகங்கள் திறந்து பட்டினியை போக்கி உள்ளார். ஏழை பெண்களை காக்கும் வகையில், திருமணம் செய்ய தங்கம், அதுவே படித்த பெண்களாய் இருந்தால் 50000 ருபாய் வரை உதவி.

அழகான   தரமான  சாலைகள் . சென்னையில்  இருந்து  கன்னியாகுமரி  வரை  எளிதில்  செல்ல  கூடிய  வகையில்  அமைய  பெற்றிருக்கின்றன . சிறிய  கிராமங்களிலும்  நல்ல  வசதிகள்  செய்ய  பட்டுள்ளன . 

தமிழகம் இலங்கையை போல் இரண்டு மடங்கு பெரிய நாடு. ஜெயலலிதா இந்த  நிலத்தை சமூக அமைதி பேணி, சட்டம் ஒழங்கை காப்பாற்றி ஆட்சி செய்தார். 

சென்னை வெள்ளம் மட்டும் வராமல் இருந்து இருந்தால் இன்னும் பல இடங்களில் வெற்றி பெற்று இருப்பார் என்பதே உண்மை. 

 

Edited by kanna123

  • Replies 161
  • Views 23.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

5.78% - ல் ஆரம்பித்து 0.9% ஆக சரிந்த மதிமுகவின் வாக்கு வங்கி

 

 
 
vaiko_cartoon_2862722f.jpg
 

மதிமுக, தான் சந்தித்த முதல் சட்டப்பேரவை தேர்தலில் 5.78 சதவீத வாக்கு வங்கியோடு கணக்கினை தொடங்கியது. இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுகவின் வாக்கு வங்கி 0.9 சதவீதத்துக்கு சரிந்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதிக்கும் வைகோவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1993-ம் ஆண்டு திமுகவில் இருந்து வைகோ நீக்கப் பட்டார். வைகோவுக்கு ஆதரவாக 9 மாவட்டச் செயலாளர்களும், 400 பொதுக்குழு உறுப்பினர்களும் திமுகவில் இருந்து வெளியேறினர். இதையடுத்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் அரசி யல் கட்சியை 1994-ம் ஆண்டு தொடங் கினார் வைகோ.

1996 சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக முதன்முதலில் போட்டியிட்டது. திமுக, அதிமுகவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜனதா தளம் கட்சிகளுடன் கூட்டணி வைத்து 177 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.

அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி யில் இருந்த மதிமுக 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அப்போது பாஜக ஆட்சி கவிழ்ந்ததால் மீண்டும் நடந்த மக்களவைத் தேர்தலில் மதிமுக 4 இடங்களில் வெற்றி பெற்றது. 2001 சட்டப்பேரவை தேர்தலில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் 211 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக 205 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. எனினும், அக்கட்சிக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தன.

2004 மக்களவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் அணியில் திருச்சி, வந்தவாசி, சிவகாசி, பொள்ளாச்சி தொகுதிகளில் மதிமுக வெற்றி பெற்றது. 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அணியில் 35 தொகுதிகளில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2009 மக்களவைத் தேர்தலில் 4 இடங்களில் போட்டியிட்ட மதிமுக ஈரோட்டில் மட்டுமே வெற்றி பெற்றது. இதன் பின்னர், மதிமுகவின் தேர்தல் அங்கீகாரமும் ரத்தானது.

2011-ல் சட்டப்பேரவைத் தேர் தலையே மதிமுக புறக்கணித்தது. 2014 தேர்தலில் பாஜக-தேமுதிக-பாமக அணி யில் இருந்த மதிமுக 7 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக-ம.ந.கூட்டணி-தமாகா அணியில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் மதிமுக டெபாசிட் இழந்துள்ளது.

இது தொடர்பாக மதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, “இது வரை போட்டியிட்ட தேர்தல்களிலேயே மதிமுகவுக்கு மிக மோசமான தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளது. கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது, திமுக, அதிமுக துணை இல்லாமலேயே அதிக வாக்குகளை பெற்றோம். அவர்களோடு கூட்டணி வைத்துவிட்டு, வேறு கட்சி களுடன் கூட்டணி அமைத்தபோது தான் பெரியளவில் சரிவை சந்தித் துள்ளோம்’’ என்றார்.

மதிமுக பெற்ற வாக்குகளின் விவரம்

தேர்தல்கள் வாக்கு வங்கி சதவீதம்

1996

5.78%

2001

4.65%

2006

5.89%

2009(மக்களவை)

2.67%

2011

போட்டியில்லை

2014(மக்களவை)

2.57

2016

0.9 %

 

http://tamil.thehindu.com/tamilnadu/578-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-09-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/article8628741.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத பாமகவுக்கு 5.30 சதவீத வாக்குகள்

 

 
 
ramdoss_2862727f.jpg
 

சென்னை, பாட்டாளி மக்கள் கட்சி 1996-ல் தனித் துப் போட்டியிட்டு நான்கு தொகுதி களில் வென்றபோது அக்கட்சிக்கு 3.84 சதவீத வாக்குகள் கிடைத்தன. இத்தேர்தலில் மீண்டும் தனித்துப் போட்டியிட்டு ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாவிட்டாலும் 5.30 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி 1989-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

1991-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சிறு, சிறு கட்சிகளுடன் சேர்ந்து 165 இடங்களில் போட்டியிட்டு, ஒரே யொரு இடத்தில் வெற்றி பெற்றது. அத்தேர்தலில் பாமக வுக்கு 5.89 சதவீத வாக்குகள் கிடைத்தன.

1996-ல் நடைபெற்ற தேர்தலில் 116 இடங்களில் பாமக தனித்துப் போட்டியிட்டு நான்கு இடங்களில் வென்றது. அப்போது 3.84 சதவீத வாக்குகள் கிடைத்தன. 2001-ல் நடை பெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 27 இடங்களில் போட்டி யிட்டு 20 இடங்களை பாமக கைப் பற்றியது. அப்போது 5.56 சதவீத வாக்குகள் கிடைத்தன.

2006-ம் ஆண்டு தேர்தலில் திமுகவுடன் அணி சேர்ந்த பாமக, 31 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வென்றது. அப்போது 5.65 சதவீத வாக்குகள் கிடைத்தன. 2011-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்ட பாமக, 30 இடங்களில் போட்டியிட்டு 3 இடங்களில் வென்ற போது, 5.23 சதவீத வாக்குகள் கிடைத்தன.

இத்தேர்தலில், 234 தொகுதி களிலும் பாமகவினர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இரு தொகுதி களில் பாமக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட் டன. இரண்டு வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் கட்சி மாறினர். தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

மீதமுள்ள தொகுதிகளில் ஒன்றில்கூட பாமக வெற்றி பெற வில்லை. இருப்பினும் அக்கட்சிக்கு 5.30 சதவீத வாக்குகள் கிடைத் துள்ளன.

இந்த நிலையில், “இத்தேர்தலில் தோல்வியைத் தழுவினாலும் புதிய உத்வேகத்துடன் மக்கள் பணியைத் தொடர்வோம். எதிர்காலத்திலும் திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைக்கமாட்டோம்” என்று பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித் துள்ளார்.

பத்திரிகையாளர் கருத்து

இதுகுறித்து பத்திரிகையாளர் ஆழி செந்தில்நாதன் கூறுகையில், “டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஓராண்டுக்கு முன் தன்னை முதல்வர் வேட்பாளராக முன் னிறுத்தி பெரியளவில் வாக்கு சேக ரித்தார். ஆனால், பாமக ஏற்கெனவே வலுவாக இருக்கும் தொகுதிகளி லும் அவர்கள் மூன்றாவது இடம் தான் வந்திருக்கிறார்கள். முக்கிய தலைவர்கள் பலர் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

வலுவாக இல்லாத மேற்கு தமிழகம், தென்தமிழகம், மத் திய தமிழகம், சென்னை நகருக்கு உட்பட்ட தொகுதிகளில் பரவலாக கணிசமான வாக்குகள் வாங்கியிருந்தால், குறைந்தது அன்புமணி ராமதாஸ் முயற்சி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கி யிருக்கிறது என்று நம்பலாம். அப்படி இல்லையென்றால், 5.30 சதவீத வாக்குகளை வைத்துக்கொண்டு அடுத்தமுறை கூட்டணிக்கு பேரம் பேசலாம். அதைவிடுத்து மாற்று முதல்வர், நானே முதல்வர் என்று பேச முடியாது” என்றார்.

இரு தொகுதிகளில் பாமக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இரண்டு வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் கட்சி மாறினர்.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-530-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8628753.ece?widget-art=four-rel

  • கருத்துக்கள உறவுகள்
தோற்றுப்போன ஜெயலலிதா: ஓட்டை உடைசல்கள் வழியே மீண்டும் பதவியேற்கிறார்: த.தே.பே.
 
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், 44.34 விழுக்காடு (1,79,83,168) வாக்குகள் பெற்ற அ.தி.மு.க., தற்போது அதிலிருந்து 4 விழுக்காடு சரிந்து, 40.8 விழுக்காடு வாக்குகளே  பெற்றுள்ளார். பெரும்பான்மையினரால் தேர்ந்தெடுக்கப்படாத செயலலிதா, ஓட்டை உடைசல்கள் வழியே தற்போது மீண்டும் முதல்வராகப் பதவியேற்கவுள்ளார் என்றும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் க.அருணபாரதி கூறியுள்ளார். 
 
தோற்றுப்போன செயலலிதாவும் “மாற்று” அரசியல் முழக்கமும்..! என்ற தலைப்பில் க.அருணபாரதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
அதில், 
 
சனநாயகத்தின் முதன்மைக்கூறு என போற்றப்பட்டே, தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. அவ்வாறே, தமிழ்நாடு சட்டப்பேரவைக்கானத் தேர்தலும் நடைபெற்றது.
 
சனநாயக அடிப்படையில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதென்றால், அவர் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றவராக இருக்க வேண்டும் என்பது தற்போது நடைபெறும் தேர்தலின் அடிப்படை விதி! ஆனால், உண்மையில் இங்கு இதுதான் நடக்கிறதா என்பது மிகப்பெரும் கேள்விக்குறி!
 
இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டு வாக்காளர்கள் மொத்தம் 5.77 கோடி பேர் (5,77,33,574). அதில், தேர்தலில் பங்கேற்றவர்கள் 4.28 கோடி பேர் (4,28,73,674). அதாவது, மொத்தமுள்ள வாக்காளர்களில் 74.26 விழுக்காட்டினர் மட்டுமே தேர்தலில் பங்கேற்றனர். இவையெல்லாம் நாம் அறிந்த செய்தி தான். அறிந்து கொள்ளாத இன்னொரு செய்தியும் இருக்கிறது!
 
தேர்தலில் வாக்களித்த 4.28 கோடி பேரில், முதலமைச்சர் செயலலிதா மீதுள்ள வெறுப்பால் - செயலலிதா ஆட்சியில் தொடர வேண்டாம் என்ற முடிவின் பேரில், தாங்கள் விரும்பிய வேறு கட்சிகளுக்கும், எந்தக் கட்சிக்கும் வாக்கில்லை என நோட்டாவுக்கும் வாக்களித்த மக்களின் எண்ணிக்கை சற்றொப்ப 2.56 கோடி (2,55,90,775). அதாவது 59.2 விழுக்காட்டினர்!
 
ஆனால், “செயலலிதாவே ஆட்சியில் தொடர வேண்டும்” என வாக்கு அளித்தவர்களோ, 1.76 கோடி பேர் தான் (1,76,17,060). அதாவது, 40.8 விழுக்காட்டினர். கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், 44.34 விழுக்காடு (1,79,83,168) வாக்குகள் பெற்ற அ.தி.மு.க., தற்போது அதிலிருந்து 4 விழுக்காடு சரிந்து, 40.8 விழுக்காடு வாக்குகளே  பெற்றுள்ளதையும் கவனிக்க வேண்டும்.
 
இப்படி, “பெரும்பான்மையினரின் தேர்வு” என்ற பெயரில், சிறுபான்மை வாக்குகள் வாங்கிய ஒருவரால், தற்போதுள்ள தேர்தல் முறையின் கீழ் பதவியில் அமர முடியும் என்பது  மீண்டும் ஒருமுறை நம் கண்முன்னேயே மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
 
அவ்வழியிலேயே, இந்தத் தேர்தலில் பெரும்பான்மையினரால் தேர்ந்தெடுக்கப்படாத செயலலிதா, ஓட்டை உடைசல்கள் வழியே தற்போது மீண்டும் முதல்வராகப் பதவியேற்கவுள்ளார். போகட்டும்! 
 
தமிழ்நாட்டு உரிமைகளை இந்திய அரசின் காலடியில் வைக்கப் பயன்படும் அடிமைப் பதவிக்கு, பெரும்பான்மை வாக்கு வாங்கினால் என்ன - சிறுபான்மை வாக்கு வாங்கினால் என்ன? இரண்டும் ஒன்றுதான்!
 
ஆனால், போலி சனநாயகத்துடன் நடத்தப்படும் - அதிகாரமற்ற இந்த சட்டப்பேரவைக்கானத் தேர்தலில், பணபலமிக்க திராவிட அரசியல் கட்சிகளை வீழ்த்திவிட முடியும் என்றும், “மாற்று அரசியல்” என்ற பெயரிலும், தேர்தல் அரசியல் களத்தில் கடுமையாக உழைத்த நம் நண்பர்கள் பலர் தோற்றுள்ளது வருத்தத்தையேத் தருகிறது. 
 
அணு உலைக்கு எதிரானப் போராட்டத்தில் முதன்மைப் பங்காற்றிய முனைவர் சுப. உதயக்குமார், பொதுநல வழக்குகளில் அறியப்பட்ட டிராபிக் இராமசாமி, மணல் கொள்ளைக்கு எதிரான போராளித் தோழர் பிரபாகரன் என, தேர்தலுக்கு வெளியே உழவர் போராட்டம் - மணல் கொள்ளை எதிர்ப்பு - மதுக்கடை எதிர்ப்பு - சூழலியல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு மக்கள் சிக்கல்களில் போராடிய பலரும், தேர்தல் அரசியலின் இன்றைய யதார்த்த நிலையைப் புரிந்து கொள்ளாமல், நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம். எனப் பல்வேறு கட்சிகளின் சார்பில் பல தொகுதிகளில் போட்டியிட்டுத் தோற்றுள்ளனர்.     
 
உண்மையான சமூக மாற்றத்திற்குப் போராடுபவர்கள், தேர்தல் அரசியலில் சிக்கிச் சீரழியக் கூடாது என்பதே எங்கள் விருப்பம் – எம் கோரிக்கை! ஏனெனில், உண்மையான மாற்று, இதற்கு வெளியில்தான் இருக்கிறது.
 
கொள்கைகள் பேசி – தேர்தல் களத்தில் மிகப்பெரும் மாற்றங்களை உருவாக்கிட முடியாது. ஏனெனில், இன்றையத் தேர்தல் களம் என்பதே, ஆதிக்க சக்திகள் நம்மை நாமே வீழ்த்திக் கொள்ள உருவாக்கப்பட்ட ஏற்பாடுதான்! ஆங்கிலேயர்கள் இதை அறிமுகப்படுத்தினர். அவர்களுக்குப் பின் நம்மை ஆண்டுகொண்டிருக்கும் ஆதிக்க இந்தியத்தேசியவாதிகள் இதை கடைபிடிக்கின்றனர்.
 
அன்னா அசாரே போன்ற ஊழல் எதிர்ப்புத் தன்னார்வளர்களை, முனைவர் உதயக்குமார் போன்ற சூழலியல் செயல்பாட்டாளர்களை, மாவோயிஸ்ட்டுகளை எனப் பலரையும் – அவர்களது போர்க்குணமிக்கப் போராட்ட உணர்வை மழுங்கடிக்கும் விதமாக, எம்மோடு “சனநாயகப் பாதையில்” - தேர்தலில் போட்டியிட்டு வென்று காட்டுங்கள் என இந்திய அரசு சவால் விடுவது, தற்செயலானதல்ல!
 
சீரழிந்த நிலையிலுள்ள தேர்தல் அரசியலின் எதார்த்த நிலையைப் புரிந்து கொள்ளாமல், தேர்தல் அரசியல் சகதிக்குள் சிக்குபவர்கள், தமது (முழு) ஆற்றல் அனைத்தையும் தேர்தலில் செலவிட்டு, பணபலமிக்க எதிரிகளிடம் தோற்றுப்போய், அந்த விரக்தியின் காரணமாக  சோர்வுற்று - பொது வாழ்விலிருந்தே விலகிக் கொள்ளும் அபாயத்தை நோக்கித் தள்ளப்படுவர். இதுவே, இன்றைய வருந்தத்தக்க மெய்நடப்பு!
 
மக்களுக்கான உண்மையான களம், தேர்தல் அரசியலுக்கு வெளியே இருக்கிறது! அதை வளர்த்தெடுப்பதே, இன்றையத் தலையாயக் கடமை – தலையாயத் தேவை!  
 
“மாற்று அரசியல்” என்பது தேர்தல் அரசியலில் பதவி வெல்வதில் கிடையாது. “மாற்று அரசியல்” என்பது வெறும் ஆளை மாற்றும் – ஆட்சியாளர்களை மாற்றும் அரசியல் கிடையாது அது, மக்களிடையே உருவாக்கப்பட வேண்டிய புதிய எழுச்சி - புதிய மறுமலர்ச்சி - புதிய போக்கு! அதை தேர்தல்களின் மூலம் வென்றெடுக்க முடியவே முடியாது.
 
அடுத்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா – பணம் கிடைக்குமா – பதவி கிடைக்குமா என எதிர்ப்பார்ப்பவர்களை சேர்த்து வைத்துக் கொண்டு, “மாற்று அரசியல்” – “இலட்சிய அரசியல்” என்றெல்லாம் பேசினால், அது தோல்வியில்தான் முடியும்.
 
கொஞ்சம் கொஞ்சமாக இந்தியத்திடம் உரிமைகளை இழந்துவரும் தமிழ்நாட்டுக்கு, தற்போதையத் தேவை, புதிய முதல்வரோ – புதிய மாநில அரசோ அல்ல! பதவி – பணம் – விளம்பரம் – இவற்றையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு இலட்சியத்திற்காக களத்தில் நிற்கத் துணியும் இலட்சக்கணக்கான இளைஞர்களே, இன்றைய தேவை!
 
அவர்களை உருவாக்குவது – வழிநடத்துவது ஒன்றே எதிர்காலத் தமிழ்ச் சமூகத்திற்குப் பயனளிக்கும் செயல். அதுவே மாற்று அரசியல்! அந்தப் பாதையில் உருவாகும் இலட்சிய மனிதர்களே மாற்று அரசியலின் அடிப்படை அலகு! அவர்களே நம் இலக்கு!
 
இது நீண்ட நெடிய காலமெடுக்கும் கடினமான செயல்தான்! இருப்பினும் வேறு வழியில்லை! தனிநபர் தொடங்கி பெரும் அரசியல் கட்சிகள் – ஆட்சியாளர்கள் வரை, புரையோடிப் போயிருக்கும் பிழைப்புவாத மனநிலையை விரட்ட,, இலட்சியத்தை நோக்கி சமூகத்தை உந்தித்தள்ளும் மாற்று அரசியல் சக்திகளே இன்றைக்குத் தேவை!
 
இத்தேர்தலில் வாக்களிக்க மறுத்தோர் இடையேயும் “யாருக்கும் இல்லை” என நோட்டாவில் பதிவு செய்தோரிடையேயும் இதற்கான மாற்று முயற்சிகள் தொடங்கினாலே போதும்! அதுவே எதிர்காலத்தில் மாற்று ஆற்றலாக வளர வாய்ப்புள்ளது.
 
இவற்றையெல்லாம் உணர்ந்து, தமிழ் மக்களை போராட்டக் களங்களுக்கு அணிதிரட்டும் அடிப்படைப் பணிகளில் நாம் ஈடுபடுவோம்! அதுவே இச்சமூகத்தை மாற்றும்! 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=166182

  • கருத்துக்கள உறவுகள்

kanna123

இன்னும் கொஞ்சம் நாங்கள் பொறுமையாய் இருந்தால் சொல்லுவிங்கள் போல ஜெயலலிதா தான் அடுத்த அன்னை தெரேசா என்று , இப்ப நடந்து முடிந்தது தேர்தல் அல்ல சூதாட்டம்  , அந்த சூதாட்டத்தில் ஜெயலலிதா என்ற ஊழல் கூட்டம் வென்று விட்டார்கள் , இவளவு பெரிய பந்தியா எழுதின நீங்கள் உங்க‌ நெஞ்சை தொட்டு சொல்லுங்கோ இந்த தேர்தல்ல எத்தனை கோடி பணத்தை அள்ளி மக்களுக்கு வீசினார் ஜெயலலிதா , ஆதாரம் பல‌ உள்ளது எங்களிடம் , அதை தொலைக் காட்சி ஊடாக கூட பார்க்க முடிந்தது , நேர்மை என்பது ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் சுத்தமாய் என்ன வென்றே தெரியாது , இவர்கள் எப்ப‌வும் குறுக்கு வழியில் போய் ஆட்சியை பிடிப்பதில் திமுக்கா ஆதிமுக்கா பெரிய கிள்ளாடிகள் , 2ஜீ ஊழல் வழக்கு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கு இந்த இரண்டிலும் சிறை சென்று வெளிய வந்தவை தான் இந்த திருட்டு திராவிடர்கள் , இவர்கள் திருடர்கள் என்று  தெரிந்தும் மக்கள் இவர்களுக்கு ஓட்டு போட்டார்களா இல்லை ஓட்டுக்கு கோடி கோடியாய் பணத்தை கொட்டி மக்களிடத்தில் இருந்து ஓட்டு பிச்சை எடுத்து ஆட்சியை பிடித்தார்களா , எது உண்மை சொல்லுங்கோ :cool:

Edited by பையன்26

  • தொடங்கியவர்

வாக்கு சதவீதம் 2.4-ஆக குறைந்ததால் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை: ஆழ்ந்த சோகத்தில் மூழ்கிய தேமுதிக தொண்டர்கள்

 

 
 
vijayakanth_2862797f.jpg
 

விஜயகாந்த் டெபாசிட் இழந்து 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்

 

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த 2 தேர்தல் களிலும் படுதோல்வியை தழுவியுள்ள நிலையில், தேமுதிகவின் வாக்குகள் 10 சதவீதத்தில் இருந்து 2.4 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கிடையே, தேமுதிக வின் அங்கீகாரம் ரத்தாகும் என்பதால் அக்கட்சியின் நிர்வாகிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

2006-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டி யிட்டது. இதில் விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் மட்டும் சுமார் 17 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2009 மக்களவைத் தேர்தலில் அக்கட்சியின் வாக்குகள் சதவீதம் 10.1-ஆக உயர்ந்தது.

இதற்கிடையே, 2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. இத்தேர்தலில் மொத்தம், 29 தொகுதிகளில் வெற்றி பெற்று தேமுதிக எதிர்கட்சி அந்தஸ்து பெற்றது. விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு 30 ஆயிரத்து 375 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவு டன் கூட்டணி அமைத்து 14 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. ஆனால், இந்த தேர்தலில் ஒரு தொகுதிகூட அந்தக் கட்சிக்கு கிடைக்கவில்லை. இது தொண்டர்கள் மத்தியில் பெரும் சோர்வை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது நடந்து முடிந்துள்ள சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக மொத்தம் 104 இடங்களில் போட்டியிட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். ஆனால், தேமுதிக படுதோல்வியை சந்தித்துள்ளது.

உளுந்தூர்பேட்டை தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் 2,26,120. இதில் அதிமுக வேட்பாளர் குமரகுரு 81,973 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2-ம் இடம் பிடித்த திமுக வேட்பாளர் ஜி.ஆர்.வசந்தவேல் 77,809 வாக்குகள் பெற்றார். இவரை தொடர்ந்து விஜயகாந்த் 34,447 வாக்குகள் பெற்று 3-ம் இடம் பிடித்துள்ளார். பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்குகளை பெற்றால்தான் டெபாசிட் தொகையை பெறமுடியும். அந்த வகையில் விஜயகாந்த் 34,447 வாக்குகள் மட்டுமே பெற்றதால் தனது டெபாசிட் தொகையை இழந்துவிட்டார்.

தேமுதிக போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் 3 மற்றும் 4-வது இடத்துக்கும், சில இடங்களில் 5-வது இடத்துக்கும் தள்ளப்பட்டது. குறிப்பாக, ஜோலார்பேட்டை, குன்னூர், ஆத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் தேமுதிக வேட்பாளர்கள் தலா 4 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றனர். சில தொகுதிகளில் தேமுதிகவை பின்னுக்கு தள்ளிவிட்டு, பாமக மற்றும் பாஜக வேட்பாளர்கள் 3-ம் இடம் பிடித்தனர்.

இந்த தேர்லில் ஒட்டுமொத்தமாக தேமுதிக 10,34,384 வாக்குகளை பெற்றுள்ளது. 2009-ல் 10.1 சதவீதமாக இருந்த ஒட்டு சதவீதம் தற்போது 2.4 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 2011-ல் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற 29 தொகுதிகளில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாதது அக்கட்சியின் தொண்டர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

 

stat_2862798a.jpg

இந்த தேர்தலில் தேமுதிகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், கட்சியின் தலைமை அலுவலகம் கடந்த 2 நாட்களாக வெறிச்சோடி காணப்படுகிறது. விஜயகாந்த் தற்போது சென்னையில் இருக்கிறார். அடுத்த ஒரிரு நாட்களில் மூத்த நிர்வாகிகள் மற்றும் உயர்மட்ட செயற்குழு உறுப்பினர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தவுள்ளதாக நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இது தொடர்பாக தேமுதிக மூத்த நிர்வாகி கள் ‘தி இந்து’விடம் கூறும்போது, “தமிழகத்தில் அதிமுகவுக்கு மாற்றாக திமுகவைத்தான் மக்கள் பார்க்கிறார்கள். 3வது அணிக்கு தமிழகத்தில் சரியான அடித்தளம் அமையவில்லை. தேர்தல் தொடங்குவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே கூட்டணி அமைத்திருந்தால், மக்கள் எங்கள் கூட்டணியை ஏற்றுக் கொண் டிருப்பார்கள் என நம்புகிறோம்.” என்றனர்.

இது தொடர்பாக தேர்தல் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விதிப்படி மொத்த தொகுதிகளில் 30 தொகுதிகளுக்கு ஒரு எம்எல்ஏ இருக்க வேண்டும். அந்த வகையில் தமிழகத்தில் குறைந்தபட்சமாக 8 எம்எல்ஏக்களாவது இருக்க வேண்டும். அல்லது போட்டியிட்ட தொகுதிகளில் பெற்ற ஓட்டுகள் மாநில முழுவதும் பதிவான ஓட்டுகளில் 6 சதவீதம் அல்லது அதற்கு அதிகமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்தாகிவிடும்’’ என்றார். எனவே, தேமுதிகவின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன் தேமுதிகவில் இருந்து விலகி மக்கள் தேமுதிக என்ற கட்சியை தொடங்கிய சந்திரகுமார் இதுபற்றி கூறும் போது, “அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொடுக்கப்பட்ட பணியை நிறைவேற்றியுள்ளார். இதனால் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பலிகடா ஆகிவிட்டன” என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-24%E0%AE%86%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8629455.ece?widget-art=four-rel

10 hours ago, arjun said:

தேர்தலில் நிற்க விண்ணப்பிக்கும் போது சொத்துவிபரங்கள் வெளியிடவேண்டும் .அனைவரின் சொத்துவிபரங்ககளும் விபரமாக இருக்கு யாரும் பார்க்கலாம் .

சீமானின் சொத்து ரூ.35.36 லட்சம்; கடன் ரூ. 8.97 லட்சம்

By DN,

First Published : 26 April 2016 07:46 PM IST

 

 

கடலூர்: நடைபெறவிருக்கும் தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் சீமானுக்கு ரூ. 35.36 லட்சம் சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் தனியார் வங்கியில் ரூ. 8.97 லட்சம் கடன் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார்.

அவர் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாகச் சென்று மனுத்தாக்கல் செய்தார். வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தனது சொத்து மதிப்பு மற்றும் வழக்குகள் குறித்து குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி அவரது கையிருப்பாக ரூ.40ஆயிரமும், வங்கிகளில் பல்வேறு இருப்புகளாக ரூ. 81,176 உள்ளது. அவரிடம் ரூ.26.50 லட்சம் மதிப்பில் ஒரு காரும், ரூ.4.50 லட்சம் மதிப்பில் மற்றொரு காரும் உள்ளது. மேலும், 150 கிராம் எடையுள்ள தங்க நகைகள் உள்ளன. இவைகளின் மொத்த மதிப்பு ரூ.35,36,177 ஆகும்.

அசையாச் சொத்துக்களான வீடு, நிலம் உள்ளிட்டவை ஏதும் இல்லை என குறிப்பிட்டுள்ள சீமான், தனியார் வங்கியில் ரூ.8.97 லட்சம் கடன் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்மீது 3 வழக்குகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவருக்கு மாற்று வேட்பாளராக மனுத்தாக்கல் செய்துள்ள அவரது மனைவி கயல்விழியிடம் கையிருப்பாக ரூ.35 ஆயிரம், பத்திரங்களில் முதலீடாக ரூ.80 ஆயிரம், வங்கிகளில் இருப்பாக ரூ.55ஆயிரம், ரூ.16லட்சம் மதிப்புள்ள கார், 160 கிராம் எடையுள்ள தங்க நகைகள் உள்ளனவாம். இதன் மதிப்பு ரூ.52,25,031 ஆகும். அசையா சொத்தாக நிலம், வீட்டுமனையாக ரூ.29 லட்சம் மதிப்பில் சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இவைகளின் மொத்த மதிப்பு ரூ.81.25 லட்சமாகும்.

http://www.dinamani.com/tn-election-2016/election-news-2016/2016/04/26/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82.35.36-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/article3401461.ece

6 hours ago, kanna123 said:

மீரா நீங்கள் தமிழ் நாட்டு தமிழர்களை அவ்வளவு மட்டமாக நினைத்ததற்கு நான் வருந்துகிறேன். இங்குள்ளவர்கள் வெறும் 200 ருபாய் பொட்டலதிர்க்காக தனது வாழ்க்கையை அடகு வைக்க மடையர்கள் ஒன்றும் இல்லை.

இந்த தேர்தலில் தி மு க , அ தி மு க பெற்றுள்ள  வாக்குகள் சராசரி 40% வாக்குகள். 80% மக்கள் இந்த இரண்டு கூட்டணியையும் ஆதரிதே வாக்குகள் அளித்துள்ளார்கள். ஜெயா வெற்றி பெற்றது 4 லட்சம் வாக்குகள் கூடுதலாக மட்டுமே.

ஏன் மக்கள் மாற்று கூட்டணிக்கு வாக்கு அளிக்க வில்லை 

1. விஜயகாந்தின் மக்கள் நல கூட்டணி ஆரம்பம் முதலே சரியான கொள்கையோடு பேசவில்லை. வைகோ மற்றும் திருமா வளவன் போன்றோர் குடித்து விட்டு பேசும் விஜயகாந்தை முதல்வர் ஆக்குவோம் என்று சொன்னதை வெறுத்து ஒதுக்கி உள்ளார்கள்.
இதிலிருந்து தமிழக மக்கள் எப்படி பட்டவர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

2. நாம் தமிழர் சீமான் ஆரம்பம் முதலே தமிழகத்தின் சமூக கட்டமைப்பை உடைத்து விட வேண்டும் என்ற தொனியிலேயே பேசி வந்தார். அவருடைய பல திட்டங்கள் நன்றாக இருந்தாலும், பல திட்டங்கள் இந்த நவீன உலகிற்கு ஏற்புடையதாக இல்லை என்று மக்கள் கருதினார்கள். தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் திராவிடர்கள் தமிழகத்தில் இருந்தாலும் அவர்கள் இந்த மாநிலத்திற்கு வந்து 400 வருடங்கள் ஆகிவிட்டது. அவர்கள் தமிழகத்தில் தமிழர்களுடன் தமிழர்களாக வாழ்கிறார்கள் என்பதே உண்மை. அவர்களுக்கு எதிராக பேசுவதை தமிழக தமிழர்கள் முழுவதும் ஏற்று கொள்ளவில்லை. ஒன்றாய் இருக்கும் சமூகத்தை பிளவு படுத்தும் செயல்களை அவர்கள் விரும்பவில்லை. ஏனென்றால் அது அவர்களையும் பாதிக்கும் என்று புரிந்து வைத்துள்ளர்கள். இதிலிருந்து தமிழக தமிழர்கள் எவ்வளவு சமூக பொறுப்புள்ளவர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

3. ஜெயாவை ஆதரித்தது ஏன் என்று பார்த்தால் பல காரணங்கள் வெளியில் வரும். வளர்ந்த மாநிலமான தமிழகத்தில் மின்சார பிரச்னை அதிகமாக கடந்த காலங்களில் இருந்தது. ஜெயா ஆட்சிக்கு வந்த பிறகு, முற்றிலுமாக அந்த பிரச்சனையை தீர்த்து வைத்து உள்ளார். இது மாபெரும் சாதனையாக மக்களால் பார்க்க முடிகிறது.

 தமிழகத்தில் நிறைய குடிநீர் திட்டங்கள் கொண்டு வந்து, குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளார். சென்னையில் மாபெரும் வெள்ளம் வந்தாலும் வெறும் 4 நாட்களில் நகரை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்தது என்னை போன்றோரை ஆச்சரியம் படுத்தியது என்று சொல்வதே சரியாக இருக்கும் 

மலிவு விலை உணவகங்கள் திறந்து பட்டினியை போக்கி உள்ளார். ஏழை பெண்களை காக்கும் வகையில், திருமணம் செய்ய தங்கம், அதுவே படித்த பெண்களாய் இருந்தால் 50000 ருபாய் வரை உதவி.

அழகான   தரமான  சாலைகள் . சென்னையில்  இருந்து  கன்னியாகுமரி  வரை  எளிதில்  செல்ல  கூடிய  வகையில்  அமைய  பெற்றிருக்கின்றன . சிறிய  கிராமங்களிலும்  நல்ல  வசதிகள்  செய்ய  பட்டுள்ளன . 

தமிழகம் இலங்கையை போல் இரண்டு மடங்கு பெரிய நாடு. ஜெயலலிதா இந்த  நிலத்தை சமூக அமைதி பேணி, சட்டம் ஒழங்கை காப்பாற்றி ஆட்சி செய்தார். 

சென்னை வெள்ளம் மட்டும் வராமல் இருந்து இருந்தால் இன்னும் பல இடங்களில் வெற்றி பெற்று இருப்பார் என்பதே உண்மை. 

 

 

எமது அரசியலே எம்மவர் பலருக்கு ஒழுங்காக தெரியாது அதற்குள் தமிழ் நாட்டு அரசியலை பற்றி விமர்சிப்பதை எல்லாம் கருத்தில் எடுக்கக்கூடாது .

அவர்களுக்கு எந்த கள்ளனென்றாலும் புலிக்கொடி பிடித்தால் சரி இதையே அவர்களுக்கு கற்பித்துவிட்டு சென்றுவிட்டார்கள் .

இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் இல்லாமலே போய்விட்டார்கள் புலம் பெயர்ந்த தேசங்களிலும் அந்த நிலை வர அதிக காலம் இல்லை எனவே இப்படியானவர்களை கணக்கில் எடுக்காமல் விடுவதே திறம் .

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

கிருபனிடமிருந்து.... இந்தக்  கருத்தை, நான் எதிர் பார்க்கவில்லை.

சீமான்... இருப்பது வாடகை வீட்டில், அந்த வீட்டை... அவருக்கு பெறுவதிலும் அவர் பல சிரமங்களை, எதிர்கொண்டார்.
சீமானின் அம்மா... இப்போதும்,. சாதாரணமாக முன்பு வாழ்ந்த வாழ்க்கையையே.... தொடர்ந்து கொண்டும்  இருக்கின்றார்.
ஒருவரின்... மீது, உள்ள காழ்ப்பு உணர்ச்சியால்... ஊடகங்கள் வெளியிடும்,  அநியாய பழிச் சொல்லை உண்மை என நம்பாதீர்கள்.

சீமானின் சொத்து விபரங்களை முன்னர் தேடவில்லை. அவர் கட்சி நடத்துவதைத் தவிர வேறு வேலை எதுவும் செய்யாவிட்டால், கட்சிப் பணத்தில்தானே குடும்பம் நடாத்தவேண்டும். 

இணையத்தில் தேடியபோது கிடைத்த சொத்து விபரம் (மேலே ஜீவனும் இணைத்துள்ளார்)

 
d8837033f0ab65a7082098188228aaee.jpg

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளியன்று தொடங்கியது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, பாமக இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ஆகியோர் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து நேற்று தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செவ்வாய் கிழமையான இன்று தான் போட்டியிடும் கடலூரில் தொகுதியில் வேட்புமனுடை தாக்கல் செய்தார். வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தனது சொத்து மதிப்பு மற்றும் வழக்குகள் குறித்து குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி அவரது கையிருப்பாக ரூ.40ஆயிரமும், வங்கிகளில் பல்வேறு இருப்புகளாக ரூ. 81,176 உள்ளது. அவரிடம் ரூ.26.50 லட்சம் மதிப்பில் ஒரு காரும், ரூ.4.50 லட்சம் மதிப்பில் மற்றொரு காரும் உள்ளது. மேலும், 150 கிராம் எடையுள்ள தங்க நகைகள் உள்ளன. இவைகளின் மொத்த மதிப்பு ரூ.35,36,177 ஆகும்.

அசையாச் சொத்துக்களான வீடு, நிலம் உள்ளிட்டவை ஏதும் இல்லை என குறிப்பிட்டுள்ள சீமான், தனியார் வங்கியில் ரூ.8.97 லட்சம் கடன் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்மீது 3 வழக்குகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவருக்கு மாற்று வேட்பாளராக மனுத்தாக்கல் செய்துள்ள அவரது மனைவி கயல்விழியிடம் கையிருப்பாக ரூ.35 ஆயிரம், பத்திரங்களில் முதலீடாக ரூ.80 ஆயிரம், வங்கிகளில் இருப்பாக ரூ.55ஆயிரம், ரூ.16லட்சம் மதிப்புள்ள கார், 160 கிராம் எடையுள்ள தங்க நகைகள் உள்ளனவாம். இதன் மதிப்பு ரூ.52,25,031 ஆகும். அசையா சொத்தாக நிலம், வீட்டுமனையாக ரூ.29 லட்சம் மதிப்பில் சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இவைகளின் மொத்த மதிப்பு ரூ.81.25 லட்சமாகும்.

 

http://www.thokuppu.com/news/newsdetails/item_13782/சீமானின்-சொத்து-விபரம்/

Edited by கிருபன்

  • தொடங்கியவர்

ஃபீனிக்ஸ் பறவைகளாய் உயிர்த்தெழுவோம்! மாற்றம் 2.0 அன்புமணி

anbumaninewonetwo.jpg

சென்னை: தமிழ்நாடு 2016 சட்டமன்றத் தேர்தலில் பாமகவிற்கு கிடைத்த முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி, 'திராவிடம் மூட்டிய தீயில் இருந்து இன்னும் அசுர பலத்துடன் உயிர்த்தெழுவோம், ஃபீனிக்ஸ் பறவைகளாய்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அன்புமணி தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,

"தமிழகத்தின் அரசியல் மாற்றத்திற்கான விதையை ஆழமாக ஊன்றி, புதியதொரு வரலாற்றை தொடங்கிவிட்டோம்.
23 லட்சம் மக்கள் இன்று நம்முடன் அணி வகுத்து நிற்கின்றனர் மாற்றம் எனும் அந்த விருட்சத்தை வளர்த்தெடுக்க.
தடைகளை உடைத்து பல சரித்திரம் படைக்கும், என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே!, இன்னும் அதிகமாய் படை எடுப்போம், இன்னும் வேகமாய் பணி முடிப்போம்.
சனநாயகத்தை அழிக்க திராவிடம் மூட்டிய தீயில் இருந்து இன்னும் அசுர பலத்துடன் உயிர்த்தெழுவோம், ஃபீனிக்ஸ் பறவைகளாய்!!
வருங்காலம் நமதே என்று சூளுரைப்போம்!
கலங்காது பணி செய்ய சபதம் ஏற்போம்!
வெற்றியை அடையும் வரை,
ஓய்வுக்கு கொடுப்போம் விடை! " என்று கூறியுள்ளார்.

ஒரு வேட்பாளர் கூட வெற்றி பெறாமல் போனாலும்,படு தோல்வியைச் சந்தித்துள்ள போதிலும், பாமகவின் வேட்பாளர்கள் 23 லட்சத்து 775 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.அதிமுக,திமுக,காங்கிரஸ் கட்சிகளுக்கு அடுத்த நிலையில்  5.3% வாக்கு வங்கி உள்ள கட்சியாக 2016 சட்டமன்றத் தேர்தலில்  பாமக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/politics/64440-raise-like-pheonix-bird-says-anbumani.art

  • தொடங்கியவர்

'இந்த 'நோட்டா' பட்டனை கண்டுபிடிச்சது யாருங்க?' -கொந்தளிக்கும் வீரலட்சுமி

veera2.jpgக்கள் நலக் கூட்டணி சார்பில், ம.தி.மு.க சின்னத்தில் களமிறங்கிய தமிழர் முன்னேற்றப்படையின் வீரலட்சுமிக்கு வெற்றி கைகூடவில்லை. அதே சமயம் 'அ.தி.மு.க வேட்பாளர் சி.ஆர்.சரஸ்வதியின் தோல்விக்குக் காரணமே வீரலட்சுமி வாங்கிய ஓட்டுக்கள்தான்' என ஆதங்கப்படுகின்றனர் அ.தி.மு.கவினர்.

சட்டசபைத் தேர்தலின்போது பல்லாவரம் தொகுதி களைகட்டி காணப்பட்டது. அ.தி.மு.க வேட்பாளர் சி.ஆர்.சரஸ்வதிக்கும் மக்கள் நலக் கூட்டணியின் வீரலட்சுமிக்கும் முட்டல் மோதல்கள் அதிகரித்தபடியே இருந்தன. '  அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். என்னைக் கண்காணிக்க தி.மு.க, அ.தி.மு.க ஆட்களை நியமித்திருக்கிறது, என்னைப் பார்த்து பெரிய கட்சிகள் ஓடிப் போகின்றன' என்றெல்லாம் கூறி தினம் தினம் தேர்தல் களத்தை அதிர வைத்தார் வீரலட்சுமி.

இந்நிலையில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டவர் 14,083 வாக்குகள் வாங்கியிருக்கிறார். அ.தி.மு.கவின் சி.ஆர்.சரஸ்வதி பெற்ற வாக்குகள்  90,726. வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர் கருணாநிதி 1 லட்சத்து 11 ஆயிரம் வாக்குகள் வாங்கியிருந்தார். ஏறக்குறைய அ.தி.மு.கவின் தோல்விக்குக் காரணமாகியிருக்கிறார் வீரலட்சுமி.

அவரிடம் பேசினோம். " நான்தான் வெற்றி வேட்பாளராக வந்திருக்க வேண்டியது. எல்லாத்தையும் கெடுத்துட்டாங்க. கடைசி நாளில் பணத்தை வாரிக் கொடுத்தாங்க. நீங்களே சொல்லுங்கண்ணே...வீட்டுக்கு 5 ஆயிரம், எட்டாயிரம்னு கொடுத்தால், மக்கள் யாருக்கு ஓட்டுப் போடுவாங்க? எங்கள் அணிக்கு வெற்றி கிடைக்கும் அளவுக்கு தீவிரமா பிரசாரம் செஞ்சோம். என்னைப் பார்த்த மக்களும், 'அஞ்சு வருஷமா ஆளுங்கட்சி எங்களுக்கு ஒண்ணும் பண்ணலை. நீ வந்துதான் தீர்த்துக் கொடுக்கணும்னு' சொன்னாங்க. கடைசி நாள்ல பணத்தைக் கொடுத்து மக்களை வாங்கிட்டாங்க" என்றவரிடம்,

தேர்தல் தோல்வியை எப்படிப் பார்க்கிறீர்கள்? என்றோம்.

" எனக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை. இது நான் எதிர்பார்த்ததுதான். இவ்வளவு பணம் கொடுத்தா யார்தான் நமக்கு ஓட்டுப் போட வருவாங்க. தவிர, இன்னொன்னும் சொல்லணும். வர்ற தேர்தல்ல நோட்டா பட்டனை நீக்க ஆணையம் நடவடிக்கை எடுக்கணும். அந்த அஞ்சு லட்சம் ஓட்டும் எங்களுக்கு வர வேண்டியது. தேவையில்லாம நோட்டா பட்டனை வச்சு கெடுத்துட்டாங்க.

நான் பிரசாரம் செய்யப்போனா மட்டும் அதிகாரிகள் சோதனை பண்றாங்க. அ.தி.மு.க, தி.மு.கவை கண்டுக்கலை. இரண்டு பேருக்கும் சாதகமாகத்தான் தேர்தல் ஆணையம் இருந்துச்சு. எங்க அய்யா வைகோ எவ்வளவோ புகார் பண்ணினார். எதையாவது கண்டுக்கிட்டாங்களா? இனி சும்மா இருக்க மாட்டோம். அடுத்து வர்ற எம்.பி தேர்தல்லயும் பம்பரம் சின்னத்துல போட்டியிடப் போறேன். அதுக்காக, முன்கூட்டியே எப்படியெல்லாம் பிரசாரம் செய்யலாம்னு முடிவெடுத்து வச்சிருக்கேன்" என தடதடத்தார் வீரலட்சுமி.

http://www.vikatan.com/news/tamilnadu/64445-who-is-invented-nota-button-asks-veeralakshmi.art

10 minutes ago, நவீனன் said:

வர்ற தேர்தல்ல நோட்டா பட்டனை நீக்க ஆணையம் நடவடிக்கை எடுக்கணும். அந்த அஞ்சு லட்சம் ஓட்டும் எங்களுக்கு வர வேண்டியது. தேவையில்லாம நோட்டா பட்டனை வச்சு கெடுத்துட்டாங்க.

சம கொமெடி - வாக்காளர்கள் என்ன மாங்கா மடையர்களா. பூத்துக்கே வரமாட்டாங்கள் அடுத்தமுறை.

  • தொடங்கியவர்

சட்டமன்ற தேர்தல் 2016 - புள்ளிவிவரம்...

- வடிவமைப்பு: எஸ்.ஆரிப் முகம்மது

தகவல்கள்: எம்.குமரேசன், நா.சிபி சக்கரவர்த்தி, த.ஜெயக்குமார், சோ.கார்த்திகேயன், சுப.தமிழினியன்

Elec2.jpg

 

Elec4a.jpg

 

Elec1.jpg

 

Elec3.jpg

 

Elec5.jpg

 

Elec6.jpg

http://www.vikatan.com/news/politics/64427-assembly-elections-2016-statistics.art

  • தொடங்கியவர்

தி.மு.க.வின் ஆட்சிக் கனவைத் தகர்த்த பா.ம.க.! - வாக்கு கணக்கு

Ramadoss-karunanidhilong.jpg 

 



கடந்த காலங்களில் அதிமுக- திமுக என மாறி மாறி கூட்டணி வைத்தே தேர்தலை சந்தித்து வந்த பாமக, இந்த தேர்தலில் தனித்தே போட்டியிட்டது. 234 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. ஆனால், அதிமுக- திமுக கூட்டணி கட்சிகளின் தோல்விக்கு காரணமாக இருந்துவிட்டது பாமக. இதில் பெரும் பாதிக்கப்பட்டது திமுக கூட்டணி கட்சிகள்தான். 27 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி வாய்ப்பை பறித்த பாமக, பெரும்பாலான தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடித்தது. அதிமுக 227 தொகுதிகளில் போட்டியிட்டு 134 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக 174 தொகுதிகளில் போட்டியிட்டு 89 இடங்களில் வெற்றி பெற்றது. 85 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது பாமக.

இதில் குறிப்பிட்டு சொல்லும்படியானால், கும்மிடிப்பூண்டி தொகுதியில் 89,332 வாக்குகள் பெற்று அதிமுக வெற்றி பெற்றாலும், திமுக 65,937 வாக்குகள் பெற்றதோடு, பாமக 43,055 வாக்குகள் பெற்று திமுக வெற்றியை பறித்தது. திருத்தணி தொகுதியில் 89,889 வாக்குகள் பெற்று அ.தி.மு.க வெற்றி பெற்றது. திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் 68,025 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியது. காங்கிரஸ் தோல்விக்கு பாமக பெற்ற 29,596 வாக்குகளே காரணமாக அமைந்துவிட்டது. பூந்தமல்லி தொகுதியில் அ.தி.மு.க 1,03,952 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாலும், திமுக 92,189 வாக்குகள் பெற்றது. இந்த தொகுதியில் பா.ம.க 15,827 வாக்குகள் பெற்று திமுக வெற்றியை பறித்தது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க  பெற்ற வாக்குகள் 1,01,001. திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் 90,285 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியது. இந்த தொகுதிகளில் பா.ம.க 18,185 வாக்குகள்.

திருப்போரூர் தொகுதியிலும் பாமகவால் திமுக வெற்றி பறிபோனது. இந்த தொகுதியில் அ.தி.மு.க 70,215 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாலும், தி.மு.க 69,265 வாக்குகள் பெற்றது. ஆனால் பா.ம.க பெற்ற வாக்குகளோ 28,125. அரக்கோணம் தொகுதியில் பாமக பெற்ற 20,130 வாக்குகளாலே திமுகவின் வெற்றி நழுவி போனது. அ.தி.மு.க 68,176 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாலும், தி.மு.க 64,015 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தது. சோளிங்கர் தொகுதியில் பாமக 50,827 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வெற்றியை பறித்தது. இந்த தொகுதியில் அ.தி.மு.க 77,651 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. காங்கிரஸ் 67,919 வாக்குகள் பெற்றது. கே.வி.குப்பம் தாெகுதியில் அ.தி.மு.க 75,612 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. தி.மு.க.வுக்கு 65,866 வாக்குகள் கிடைத்தாலும், பா.ம.க.வுக்கு கிடைத்த 13,046 வாக்குகளே திமுக தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது.

ஜோலார்பேட்டை தொகுதியில் பாமகவுக்கு கிடைத்த 17,516 வாக்குகளே திமுகவின் தோல்வி காரணம். இந்த தொகுதியில் அ.தி.மு.க.வுக்கு 82,525 வாக்குகளும், தி.மு.க.வுக்கு 71,534 வாக்குகளும் கிடைத்தது. இதன் வாக்கு வித்தியாசம் 10,991 மட்டுமே. ஊத்தங்கரை தொகுதியில் 23,500 வாக்குகள் பெற்ற பாமக, திமுக வெற்றியை வெறும் 2,613 வாக்குகளில் பறித்தது. இந்த தொகுதியில் அ.தி.மு.க 69,980 வாக்குகளும், தி.மு.க 67,367 வாக்குகளும், பா.ம.க 23,500 வாக்குகளும் பெற்றன. பர்கூரில் 982 வாக்கில் திமுக வெற்றியை இழந்தது. இதற்கு காரணம் பாமக பெற்ற 18,407 வாக்குகளே. இந்த தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக 80,650 வாக்குகள் பெற்றது. பாலக்கோட்டில் அதிமுக 70,859 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.
திமுக 65,596 வாக்குகளும், பாமக 31,612 வாக்குகளும் பெற்றன. அதிமுக- திமுக வாக்கு வித்தியாசம் 5,263. ஆரணி தொகுதியில் திமுக 7,327 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தொகுதியில் அதிமுக 94,074 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாலும், பாமக பெற்ற 12,877 வாக்குகளே திமுகயை வீழ்த்தியது. இந்த தொகுதியில் திமுகவுக்கு 86,747 வாக்குகள் கிடைத்தன.

செய்யாறு தொகுதியில் 77,766 வாக்குகள் பெற்று அதிமுக வெற்றி பெற்றது. திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் 69,239 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியது. இந்த தோல்வி பாமக பெற்ற 37,491 வாக்குகளே காரணம். வானூர் தொகுதியில் பாமகவுக்கு கிடைத்த 27,240 வாக்குகளே திமுக தோல்விக்கு காரணம். அதிமுக 57,638 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. திமுகவுக்கு 48,700 வாக்குகள் கிடைத்தது. விழுப்புரத்தில் திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 47,130 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியது. அதிமுக 69,421 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. பாமகவுக்கு கிடைத்த 36,456 வாக்குகளே திமுக தோல்விக்கு வழிவகுத்தது. கெங்கவல்லி தொகுதியில் பாமக பெற்ற 10,715 வாக்குகளே திமுக தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. இந்த தொகுதியில் அதிமுகவுக்கு 74,301 வாக்குகளும், திமுகவுக்கு 72,039 வாக்குகளும் கிடைத்தன.

ஓமலூர் தொகுதியில் பாமக 48,721 வாக்குகள் பெற்று வெற்றி- தோல்வியை நிர்ணயித்தது. அதிமுக 89,169 வாக்குகளும், திமுக 69,213 வாக்குகளும் பெற்றன. மேட்டூர் தொகுதியில் பாமகவுக்கு கிடைத்த வாக்குகள் 49,939. திமுக 61,409 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியது. அதிமுக 65,934 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. சேலம் மேற்கு தொகுதியில் பாமகவுக்கு கிடைத்த 29,982 வாக்குகளால் திமுக வெற்றி பறிபோனது. இந்த தொகுதியில் அதிமுக 80,755 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. திமுகவுக்கு 73,508 வாக்குகள் கிடைத்தது. அந்தியூர் தொகுதியில் பாமகவுக்கு கிடைத்த 11,570 வாக்குகளால் திமுக வீழ்ந்தது. அதிமுக 71,575 வாக்குகளில் வெற்றி பெற்றாலும், திமுகவுக்கு 66,263 வாக்குகள் கிடைத்தன. பண்ருட்டி தொகுதியில் அதிமுக 72,353 வாக்குகளில் வெற்றி பெற்றது. அதே நேரத்தில் பாமக பெற்ற 18,666 வாக்குகள் திமுகவின் வெற்றியை பறித்தது. இந்த தொகுதியில் திமுகவுக்கு 69,225 வாக்குகள் கிடைத்தன. விருத்தாசலத்தில் அதிமுக 72,611 வாக்குகளில் வெற்றி பெற்றது. திமுகவுக்கு 58,834 வாக்குகளும், பாமகவுக்கு 29,340 வாக்குகளும் கிடைத்தன. சிதம்பரம் தொகுதியில் பாமகவுக்கு 24,226 வாக்குகள் கிடைத்தது. அதிமுக 58,543 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாலும் வெறும் 1506 வாக்கு வித்தியாசத்தில்தான் திமுக தோல்வியை தழுவியது. இந்த தொகுதியில் பாமகவுக்கு கிடைத்த வாக்குகள் 24,226.

குன்னம் தொகுதியில் அதிமுக 78,218 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. திமுக 59,422 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு பாமக பெற்ற 37,271 வாக்குகளே காரணம். சீர்காழி தொகுதியில் பாமக 14,890 வாக்குகள் பெற்றது. அதிமுக 76,487 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. திமுகPugalinthi1.jpg 67,484 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியது. மயிலாடுதுறையில் அதிமுக 70,949 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாலும், திமுக 66,171 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தது. இதற்கு பாமகவுக்கு கிடைத்த 13,115 காரணமாக அமைந்துவிட்டது.

இது குறித்து திமுக மாணவர் அணி மாநில செயலாளர் இள.புகழேந்தியிடம் கேட்டபோது, வட மாவட்டங்களில் பாமக ஓரளவு வாக்குகள் பெறுவதற்கு காரணமே சாதி பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுத்ததுதான். சில தொகுதிகளில் பணமும் கொடுத்தார்கள். அவர்களின் சாதி பிரசாரம் அந்த மக்களிடம் எடுபட்டது. இதுதான் காரணம்" என்கிறார்.

Ethirolimaniyan.jpgபாமக முன்னாள் எம்எல்ஏ எதிரொலி மணியனிடம் பேசியபோது, சாதியை முன்னிறுத்தி பிரசாரம் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. அப்படி பார்த்தால் எங்கள் சமூகம் இல்லாத பல கிராமங்களில் ஐம்பது ஓட்டு, நூறு ஓட்டு என பாமகவுக்கு விழுந்துள்ளது. ஐயா ராமதாசை முன்னிறுத்தியபோதெல்லாம் சாதிக் கட்சி தலைவர் என்றார்கள். எங்கள் ஐயா அன்புமணி வந்தபிறகு பொதுவான தலைவராக மக்கள் பார்க்க தொடங்கி விட்டனர். அதன் வெளிப்பாடுதான் 23 லட்சம் வாக்குகள். இப்போது 50 சதவீதம் அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறோம். வரும் தேர்தல்களில் 100 சதவீதத்தை எட்டிவிடுவோம். இந்த தேர்தலில் திமுக- அதிமுக என இரண்டு கட்சிகளும் பணம் கொடுக்காமல் இருந்திருந்தால் ஏராளமான தொகுதிகளில் டெபாசிட் இழந்திருப்பார்கள். எங்களுக்கு கிடைத்த வாக்குகள் ஒவ்வொன்றும் மிக நேர்மையானவை" என்றார்.

http://www.vikatan.com/news/politics/64441-pmk-suffers-dmk-in-election-2016.art

  • தொடங்கியவர்

மக்கள் நலக்கூட்டணி தி.மு.கவுக்கு உண்டாக்கிய சேதம்!

makkalnaKottani-vijayakanthlong1a.jpg

 

இன்னும் சில தினங்களில் அதிமுக அரசு அரியணையில் ஏற உள்ளது.  ஆனாலும் அதிமுகவின் வெற்றியை பல அரசியல் நோக்கர்கள் கணக்கிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். மக்கள் நலக்கூட்டணியில் அங்கம் வகித்த, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் படுதோல்வியை சந்தித்திருந்தாலும், அவர்கள் குறிவைத்து திமுக ஆட்சியை பிடிக்க முடியாத வேலையை கனகட்சிதமாக முடித்துள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில்  227 தொகுதிகளில் அதிமுகவும், 174 தொகுதிகளில் திமுகவும் போட்டியிட்டன. அதிமுக கூட்டணியில்  234 தொகுதிகளிலும் அதிமுக, சமத்துவ மக்கள் கட்சி, தமிழ்மாநில முஸ்லிம் லீக், புரட்சி பாரதம், முக்குலத்தோர் புலிப்படை, மனித நேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்த அதிமுக, எல்லா தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது. திமுக தலைமையிலான  கூட்டணியில் திமுக 174 தொகுதிகளிலும்,   காங்கிரஸ் 41, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 5, மனித நேய மக்கள் கட்சி 4, புதிய தமிழகம் கட்சி 4 என இவர்கள் அவரவர்களின் சின்னத்திலும், மக்கள் தேமுதிக 3, பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமூக சமத்துவப்படை, விவசாய தொழிலாளர் கட்சி தலா ஒரு தொகுதியிலும் என திமுகவின் சின்னமான  உதயசூரியன் சின்னத்தில் தேர்தலை சந்தித்தன. மொத்தம் தமிழகம் முழுக்க  180 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில், அதிமுகவுடன் நேரடியாக மோதல் ஏற்பட்டது. இவற்றில்  அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய 2 தொகுதிகளுக்கு தேர்தல் பணப்பட்டுவாடா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

இதில் 178 தொகுதிகளில் திமுக, அதிமுக நேரடியாக மோதின. இதில் 88 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 90 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த இடங்களில் மொத்தம் அதிமுக 56,35,402 வாக்குகளை வாங்கியுள்ளது.  திமுக மொத்தம் 1,32,32,315 வாக்குகள் பெற்றுள்ளது.

வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதிகளில் தமிழகத்தில் படுதோல்விகளை சந்தித்துள்ள மதிமுக, தேமுதிக உள்ளிட்ட மக்கள் நலக்கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக,  திருவொற்றியூர், கொளத்தூர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, விருகம்பாக்கம், தியாகராய நகர், வேளச்சேரி, ஆலந்தூர், தாம்பரம், செங்கல்பட்டு, உத்திரமேரூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கே.வி.குப்பம், ஜோலார்பேட்டை, உளுந்தூர் பேட்டை, உடுமலைபேட்டை, நிலக்கோட்டை, நத்தம், குளித்தலை, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், அரியலூர், திட்டக்குடி, விருத்தாச்சலம், குறிஞ்சிப்பாடி, சீர்காழி, மயிலாடுதுறை, ராதாபுரம், கன்னியாகுமரி, பத்மநாபபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் தேமுதிகவும், ஆர்.கே.நகர், சோழிங்கநல்லூர், திருவள்ளூர், வேலூர், மைலம், சேலம் தெற்கு, குன்னம், புவனகிரி, பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், செய்யூர், வானூர், திண்டிவனம் காட்டுமன்னார்கோவில், துறையூர், மானாமதுரை, பரமக்குடி, சோழவந்தான், வந்தவாசி, அரக்கோணம், ஊத்தங்கரை, ஆத்தூர் (சேலம்), திருவிடை மருதூர், ராசிபுரம் உள்ளிட்ட இடங்களில் விசிகவும், மற்ற இடங்களில் மதிமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் மோதியது. இந்த கூட்டணி மொத்தத்தில் 22,44,537 வாக்குகள் வாங்கியுள்ளன. மிக குறைவான வாக்கு சதவிகிதம் தான் மக்கள் நலக்கூட்டணி வாங்கியுள்ளது.

ஏற்கனவே இருந்த தேமுதிகவின் வாக்கு வங்கி குறைந்துவிட்டது என்றெல்லாம் பேச்சு இருக்கிறது. ஆனால் இவர்கள் வாங்கிய வாக்குகள்,  திமுக- அதிமுக வெற்றியை பெரிதும் பாதித்து இருந்தாலும் குறிப்பாக திமுகவின் வெற்றி வாய்ப்பை காலி செய்தது குறிப்பிடத்தக்கது. அரியலூரரில் தேமுதிக 13599 வாக்குகள் பெற்றுள்ளது. ஆனால் அங்கு திமுக 2083 வாக்குகளில் தோல்வியுற்றது. விருகம்பாக்கத்தில் 9730 வாக்குகள் வாங்கியது விஜயகாந்த் கட்சி. ஆனால் அங்கு திமுகவின் வெற்றியை பறித்தது 2 ஆயிரம் வாக்குகளே, ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் அய்யாவு 43 வாக்குகளில் தோல்வி அடைந்தார். அங்கு மக்கள் நலக்கூட்டணி பெற்றது 8362 வாக்குகள். இதே கதைதான் பெரம்பலூரில் 11,482 வாக்குகளும், ஒட்டப்பிடாரத்தில் தேமுதிக 14,127 வாக்குகளும், வாங்கி திமுக கூட்டணியின் வெற்றியை பாதித்துள்ளது. அதேபோல் வானூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 23,873 வாக்குகள் வாங்கி திமுகவின் வெற்றியை பாதித்துள்ளது.  வாணியம்பாடியில் தமாகா 21,090 வாக்குகள் வாங்கியும்,  ஆத்தூரில் தேமுதிக 7,114 வாக்குகளும்  வடமாவட்டங்களிலும் கோவை, ஈரோடு, தருமபுரி, மதுரை என தமிழகத்தின் பல பகுதிகளில்  திமுகவின் வெற்றியை பெரிதும் பறித்துள்ளது மக்கள் நலக்கூட்டணி.

http://www.vikatan.com/news/politics/64450-how-mnk-affected-dmks-vote-count.art

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தேர்தல் சதுரங்கத்தில் ஜெயலலிதாவின் சாணக்கியம்தான் மிதமான வெற்றியைக் குடுத்துள்ளது....!

தி.மு.க விலிருந்த உருவவேண்டியவர்களை உருவி அந்தந்தக் கட்டத்துக்குள் நிப்பாட்டி வை கோ வை வாசலில் காவல் வைத்து கருணையின்றி நிதியைக் கொட்டி  கருணாநிதியைக் கழட்டி விட்டு இந்த வெற்றியைச் சாதித்துள்ளார்.

அழகிரியை அலட்சியப் படுத்தியதால் மதுரையும் மண்வாரிக் கொட்டி விட்டது....! பா.ம.காவினதும், திருமாவினதும் ஓட்டுக்கள் கூடப் போதும் 20/25 தொகுதி லம்பாக் கைக்கு வந்திருக்கும்....!

உதயநிதி இனி தமிழ் அக்கா என்று பெயரிட்டுப் படமெடுத்தாலும் ( க்கா காகத்தின் லாங்வீஜ்ஜில் வருவதால்) வரிவிலக்கு நஹீ கை...!

அரசியல் எக்கேடும் கெட்டுப் போகட்டும். என்போன்ற பாமர ரசிகனுக்கு இது ஒரு பெரும் இழப்பே....! ரஜனியும் கமலும் இருபக்கமும் அமர்ந்திருக்க  வைரமுத்து துதிபாட லியோனி வார்த்தைக்கு வார்த்தை புகழ்ச்சிப் பூக்கள் சொரிந்து பட்டிமன்றம் நடாத்த ஆன்ரி நடிகைகள் அப்பப்ப அருகில் வந்து முத்தமிட்டு நகர அழகிய மங்கையர் சுழன்று சுழன்று நர்த்தனமாட நடுநாயகமாய்க் கொலுவிருந்து  அய்யகோ எல்லாம் போய்விட்டதே , வருடத்துக்கு நாலு விழா வந்திருக்குமே எல்லாம் போய்விட்டதே....! tw_blush:

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில், செத்துப்போன தமிழர் விரோத காங்கிரஸை உயிர்ப்பித்த மு.க.வை எவ்வளவு தண்டித்தாலும் தகும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/19/2016 at 11:42 AM, ரதி said:

ஜெ வென்று,கருணாநிதி தோத்தது ஒரு மற்றரே இல்லை...சீமான் தான் கேட்ட தொகுதியில் தோத்து 5ம் இடம் வந்தாரே அது தான் மேட்டர்.அவருடைய தொண்டர்கள்,அவர்களது குடும்பம் கூட சீமானுக்கு வோட்டுப் போடவில்லை போல இருக்கு...நேற்று வரைக்கும் ஒரு சோகமான நாள். இன்று மிகவும் மகிழ்ச்சியான நாள்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள்...இவ எங்கட மக்களுக்காக ஒன்றும் செய்ய மாட்டார் என்றாலும், அவருடைய மக்களுக்காவது எதாவது செய்யட்டும்...பாவம் அந்த சுய நலமிக்க தமிழ்நாட்டு மக்கள்

பி;கு;இசையை நினைக்கத் தான் கவலையாக இருக்குது.இனிமேலாவாவது யதார்த்தத்தை புரிந்து கொண்டு நடப்பார் என்று நினைக்கிறேன். இனி மேல் யாழின் பல் வேறு திரிகளில் இசையின் ஆக்கங்களை எதிர் பார்க்கிறேன்.

பச்சை வண்ணத்தில் உள்ளதுக்கு மட்டும்..

சீமானின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் (தென் தமிழகத்தில் உள்ளது.) ஆனால் அதை விட்டுவிட்டு வட தமிழகத்தில் உள்ள கடலூருக்கு வந்தார். ஏன்? தனது ஊரில் நின்றால் சாதி வாக்குகளுக்காக நிற்கின்றார் என்கிற பெயர் வந்துவிடும் என்பதற்காக. சாதியை உண்மையிலேயே ஒழிக்க நினைக்கும் நாம் தமிழர் செய்ய எண்ணுவதை அவர் செய்தார். அவ்வளவுதான்.

  • தொடங்கியவர்

அட, 23,316 வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியைப் பிடித்திருக்கிறதே அ.தி.மு.க.!

karunanidhi01.jpg

மிழகத்தில் ஆட்சியமைக்கத் தேவை 118 சீட்கள். தி.மு.க. 98(??செக்) சீட்கள். தி.மு.க.வுக்கு மெஜாரிட்டி கிடைக்க விடாமல் செய்த 18 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் இதுதான்.

1)  ராதாபுரம்

ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் ஐ.எஸ்.இன்பதுரை 69590 வாக்குகள் பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் 69541 வாக்குகள் பெற்றுள்ளார். இங்கு வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது.

2)  கோவில்பட்டி

இந்த தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் சி.கடம்பூர் ராஜு  64514 வாக்குகள் பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து தி.மு.க சார்பில் களமிறங்கிய ஏ.சுப்பிரமணியன் 64086 வாக்குகள் பெற்றுள்ளார். இவர்களின் வாக்கு வித்தியாசம் 428 மட்டுமே.

3)  கரூர்

கரூர் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 81936 வாக்குகள் பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுப்பிரமணியன் 81495 வாக்குகள் பெற்றிருக்கிறார். இந்த வாக்குகளின் வித்தியாசம் 441 ஆகும்.

4)  தென்காசி

இந்த தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் 86339 வாக்குகள் பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 85877 பெற்றிருக்கிறார். இந்த வாக்குகளின் வித்தியாசம் 462 மட்டுமே.

5) ஒட்டப்பிடாரம்

இங்கு போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.சுந்தரராஜ் 65071 வாக்குகளும், இவரை எதிர்த்து போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் கே.கிருஷ்ணசாமி 64578 வாக்குகளும் பெற்றுள்ளனர். இவர்களின் வாக்கு வித்தியாசம் 493 ஆகும்.

6) பெரம்பூர்

இந்த தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் பி.வெற்றிவேல் 79974 வாக்குகள் பெற்றுள்ளார். இவரை எதிர்த்து களமிறங்கிய தி.மு.க வேட்பாளர் என்.ஆர்.தனபாலன் 79455 வாக்குகள் பெற்றிருக்கிறார். இவர்களின் வாக்கு வித்தியாசம் 519 மட்டுமே.

7)   திருப்போரூர்

இங்கு போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் எம்.கோதண்டபாணி 70215 வாக்குகளும், தி.மு.க சார்பில் போட்டியிட்ட வி.விஸ்வநாதன் 69265 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்த வாக்குகளின் வித்தியாசம்  950 ஆகும்.

8)   பர்கூர்

பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் வி.ராஜேந்திரன் 80650 பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் 79668 பெற்றிருக்கிறார். இந்த வாக்குகளின் வித்தியாசம் வெறும் 982 மட்டுமே.

9)   பேராவூரணி

இந்த தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் எம்.கோவிந்தராசு 73908 வாக்குகளும், தி.மு.க சார்பில் போட்டியிட்ட என்.அசோக் குமார் 72913 வாக்குகளும் பெற்றுள்ளனர். இவர்களின் வாக்கு வித்தியாசம்  995 ஆகும்.

10) கிணத்துக்கடவு

இங்கு போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் ஏ.சண்முகம் 89042 வாக்குகளும், தி.மு.க வேட்பாளர் குறிஞ்சி பிரபாகரன் 87710 வாக்குகளும் பெற்றிருக்கின்றனர். இதன் வித்தியாசம் 1332 ஆகும்.

11) ஆவடி

இங்கு போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் கே.பாண்டியராஜன் 108064 வாக்குகள் பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் எஸ்.எம்.நாசர் 106669 வாக்குகள் பெற்றிருக்கிறார். இதன் வித்தியாசம் 1395 ஆகும்.

12) சிதம்பரம்

சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் கே.ஏ.பாண்டியன் 58543 வாக்குகள் பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் கே.ஆர்.செந்தில்குமார் 57037 வாக்குகள் பெற்றிருக்கிறார். இவர்களின் வாக்கு வித்தியாசம்  1506 மட்டுமே.

13) அரியலூர்

இந்த தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.ராஜேந்திரன் 88523 வாக்குகள் பெற்றுள்ளார். தி.மு.க வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கரன் 86480 வாக்குகள் பெற்றிருக்கிறார். இந்த வாக்குகளின் வித்தியாசம் 2043 ஆகும்.

14) மொடக்குறிச்சி

மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் வி.பி.சிவசுப்பிரமணி 77067 வாக்குகளும், தி.மு.க வேட்பாளர் பி.சச்சிதானந்தம் 74845 வாக்குகளும் பெற்றுள்ளனர். இவர்களின் வாக்கு வித்தியாசம் 2222 ஆகும்.

15) கெங்கவள்ளி

இந்த தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் ஏ.மருதமுத்து 74301 வாக்குகளும், தி.மு.க வேட்பாளர் ஜே.ரேகா பிரியதர்ஷினி 72039 வாக்குகளும் பெற்றுள்ளனர். இவர்களின் வாக்கு வித்தியாசம் 2262 ஆகும்.

16) அறந்தாங்கி

இங்கு போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் ரத்தினசபாபதி 69905, வாக்குகள் பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் டி.ராமச்சந்திரன் 67614 வாக்குகள் பெற்றிருக்கிறார். இவர்களின் வாக்கு வித்தியாசம் 2291 மட்டுமே.

17) விருகம்பாக்கம்

இங்கு போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் வி.என்.விருகை ரவி 65979 வாக்குகள் பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து களமிறங்கிய தி.மு.க வேட்பாளர் கே.தனசேகரன் 63646 வாக்குகள் பெற்றிருக்கிறார். இதன் வித்தியாசம் 2333 ஆகும்.

18) ஊத்தாங்கரை

இங்கு போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் என்.மனோரஞ்சிதம் 69980 வாக்குகள் பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் எஸ்.மாலதி 67367 வாக்குகள் பெற்றிருக்கிறார். இவர்களின் வாக்கு வித்தியாசம் 2613 மட்டுமே.

http://www.vikatan.com/news/tamilnadu/64466-admk-won-this-election-by-23316-votes.art

  • கருத்துக்கள உறவுகள்
On 5/20/2016 at 9:20 PM, Thumpalayan said:

நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் விளம்பரங்கள் பனர்கள் முழுக்க தலைவரையும் புலிக்கொடியையும் வைத்து யாருமே அரசியல் செய்யவில்லையே 

 

சரி தனது சொந்தத் தொகுதியிலேயே முதலாவதாக இல்லை ரெண்டாவதாக இல்லை மூன்றாவதாக இல்லை நாலாவதாகக் கூட சீமான் வரவில்லையே. காசு, குவாட்டர், கோழிப் புரியாணி கதையெல்லாம் இங்கு எடுபட்டுப் போகிறதே. 

தலைவர் படத்தை வைத்தார்கள். புலிக்கொடியும் வைத்தார்கள். ஆனால் விடுதலைப்புலிகளின் கொடியை அல்ல. அதை ஒட்டி வடிவமைக்கப்பட்ட கொடி. (கவனிக்க: புலிகள் உருவாக்கிய கொடிகூட சோழ இராச்சியத்தின் கொடியின் அடிப்படையில் எடுக்கப்பட்டதுதான்).

தலைவர் படத்தை வைப்பது தவறு என்றெல்லாம் வாதிடலாம். ஆனால் திருமா புலிகளின் தொப்பியையே அணிந்து பிரச்சாரம் செய்தார். மதிமுக தலைவரின் படத்தை பத்தாக்கி இராவணன் போல் சித்தரித்து மற்றத் தலைகளில் தங்கள் நிர்வாகிகள் படத்தைப் போட்டு விளம்பரப் பதாதைகள் வைத்தது. அதைப்பற்றியும் நாம் பேச வேண்டும்.

பி.கு: சீமான் போட்டியிட்ட கடலூர் தொகுதி அவருடைய சொந்தத் தொகுதி அல்ல.

On 5/20/2016 at 10:43 PM, kanna123 said:

தமிழகத்து தமிழனான நான் முன்பே இந்த களத்தில் எச்சரிக்கை கொடுத்திருந்தேன் சீமானை நம்பி மோசம் போகாதீர்கள் என்று. தமிழ் நாட்டில் தமிழ் உணர்வு உள்ளது. ஆனால் ஈழத்தை போல் படு ஆக்ரோஷமாக இல்லை. தனி நாடு கேட்டு பின்பு அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை மனதில் வைத்து இந்தியாவுடன் ஒற்றுமையாக இருக்கிறோம் 

சரி ஏன் ஜெயலலிதா வென்றார் ?. அவர் மற்ற தலைவர்களை விட ஒரு நல்ல, செயல் மிக்க தலைவராக தன்னை காட்டி கொண்டார். மக்களும் அவரின் பல நல்ல திட்டங்களை அனுபவித்து உள்ளார்கள். தமிழ் நாட்டில் இப்பொழுது வறுமையே இல்லை. மக்கள் அனைவரும் முன்னேறிய மாநிலத்தின் பலன்களை அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள். ஜெயலலிதா சொல்வது போல் அவர் சொன்னதை செய்தார். சொல்லாத பல நல்ல திட்டங்களை கொடுத்தார். அதை மறுக்கவே முடியாது. எனவே மக்கள் இதை விட நல்ல திட்டங்களை எதிர் பார்த்து , பொது அமைதிக்கு வேண்டி அவருக்கு ஒரு நல்ல தீர்ப்பு அளித்து இருகிறார்கள். அவர் இப்பொழுது சொல்வது போல் கொள்ளைக்காரி ஒன்றும் இல்லை. மக்களின் அம்மாவாக உள்ளார் என்பதே உண்மை,

மக்களுக்கு இன்று உள்ள எண்ணம் எல்லாம் எப்படி இனிமேல் மென் மேலும் வளர்வது என்பது பற்றி சிந்தனையே உள்ளது. அதற்க்கு ஜெயாவே நல்ல உந்து சக்தி என்று அவர்கள் தெள்ள தெளிவாக புரிந்து வைத்து இருக்கிறார்கள். 
 

 

அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையில் உள்ள வாக்கு வித்தியாசம் 1% என்று கலைஞர் சொல்லியிருக்கிறார். ஆக, 4.5 கோடி வாக்காளர்களும் ஒருமிக்க முடிவு செய்து ஒரு வீத வாக்கு வித்தியாசத்தை அதிமுகவுக்கு கொடுத்து ஒரு த்ரில் வெற்றியை கொடுத்தார்கள்?

அடிப்படை சமன்பாடு என்பது.. அதிமுக, திமுகவுக்கென்று ஒரு அடிப்படை வாக்கு வங்கி உள்ளது. அது இடியே விழுந்தாலும் அவர்களுக்கு விழப்போகும் வாக்கு. மற்றும்படி திமுகவின் கொடுமை அதிமுகவுக்கு வாக்கு. அதிமுகவின் கொடுமை திமுகவுக்கு வாக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, இசைக்கலைஞன் said:

பச்சை வண்ணத்தில் உள்ளதுக்கு மட்டும்..

சீமானின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் (தென் தமிழகத்தில் உள்ளது.) ஆனால் அதை விட்டுவிட்டு வட தமிழகத்தில் உள்ள கடலூருக்கு வந்தார். ஏன்? தனது ஊரில் நின்றால் சாதி வாக்குகளுக்காக நிற்கின்றார் என்கிற பெயர் வந்துவிடும் என்பதற்காக. சாதியை உண்மையிலேயே ஒழிக்க நினைக்கும் நாம் தமிழர் செய்ய எண்ணுவதை அவர் செய்தார். அவ்வளவுதான்.

ரதி மட்டுமல்ல வேறுசிலரும் சீமான் சொந்த தொகுதியில் 5வது என்று கிண்டல், ஏதோ சீமான் கால காலமாக அங்கேயே இருந்த மாதிரி,

ஆனாலும் சீமான் கடந்த வெள்ளப்பெருக்கு நேரத்தில் மக்களுக்கு செய்தவற்றிற்கான அறுவடையை எதிர் பார்த்தே கடலூர் தொகுதியை குறிவைத்தார். 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

ரதி மட்டுமல்ல வேறுசிலரும் சீமான் சொந்த தொகுதியில் 5வது என்று கிண்டல், ஏதோ சீமான் கால காலமாக அங்கேயே இருந்த மாதிரி,

ஆனாலும் சீமான் கடந்த வெள்ளப்பெருக்கு நேரத்தில் மக்களுக்கு செய்தவற்றிற்கான அறுவடையை எதிர் பார்த்தே கடலூர் தொகுதியை குறிவைத்தார். 

வெள்ளத்திற்கு செய்தது என்றால் அவர் வாடகை வீட்டில் குடியிருக்கும் கோட்டூர்புரத்திற்குத்தான் அவரே நேரடியாக செய்துள்ளார். கடலூர் மிக ஆபத்தான இடம். வன்னியர் அதிகமுள்ள தொகுதி. பாமக, தேமுதிக, தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கெல்லாம் கணிசமான வாக்குகள் உள்ள தொகுதி. பாமர மக்களைக் கொண்டது. இதனுடன் ஒப்பிடும்போது சென்னையில் அதிக வாக்குகளை வாங்கியிருப்பார். ஆனால் சாதி அரசியலுக்கு எதிரே நிற்கவேண்டும் என்பதற்காக தேர்ந்தெடுத்த தொகுதிதான் கடலூர்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, MEERA said:

ரதி மட்டுமல்ல வேறுசிலரும் சீமான் சொந்த தொகுதியில் 5வது என்று கிண்டல், ஏதோ சீமான் கால காலமாக அங்கேயே இருந்த மாதிரி,

ஆனாலும் சீமான் கடந்த வெள்ளப்பெருக்கு நேரத்தில் மக்களுக்கு செய்தவற்றிற்கான அறுவடையை எதிர் பார்த்தே கடலூர் தொகுதியை குறிவைத்தார். 

எது...இரவு நேரத்தில கணுக்கால் அளவு தண்ணியில கட்டுமரத்தில நிண்டு செய்ததா:unsure:

சொந்த தொகுதி என்றால் அவர் தேர்தலில் நின்ற தொகுதி .

அவர் எங்கு பிறந்தார் எங்கு வளர்ந்தார் எங்கு படம் எடுத்தார் என்று எல்லாம் யார் கேட்டது .

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நந்தன் said:

எது...இரவு நேரத்தில கணுக்கால் அளவு தண்ணியில கட்டுமரத்தில நிண்டு செய்ததா:unsure:

கடலூரில் நாம் தமிழர் கட்சியினர் செய்தவற்றிற்கு, அங்கு சீமான் போனார இல்லையா என்று எனக்கு தெரியாது.

ஆம் போய் இருக்கிறார். விகடனே காரணத்தையும் கணிப்பையும் சொல்லி உள்ளது. 

http://tamil.oneindia.com/news/tamilnadu/will-seeman-win-at-cuddalore-253519.html

Edited by MEERA

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.