Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு திடீர் இலங்கை பயணம்.

Featured Replies

6 minutes ago, ஜீவன் சிவா said:

எதை?

அதைத்தான்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜீவன் சிவா said:

 

என்னை தாராளமாக சந்திக்கலாம். ஆனால் ஒரு கண்டிசன் - அரசியல் பேசக் கூடாது.

நண்பர்களாக யார் வேணுமெண்டாலும் சந்திக்கலாம்.

அட இப்படித் தொிந்திருந்தால் ஒருக்காச் சந்தித்து இருக்கலாம்.வடை சம்பலோட போச்சே.:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தெனாலி said:

அதுக்கு இப்ப என்ன செய்வது? தீர்வு கிடைக்க மட்டும் அங்கிருக்கிற மக்கள் கஷ்டபட வேணுமா? 

மக்கள் கஷ்டப்படுவதை இங்கே யாருமே விரும்பவில்லை. ஆனால் தீர்வு வருமெண்டு 70 வருசமாய் காமெடி பண்ணப்படாது.

ஏதோ இவ்வளவு காலமும் றோட்டுக்கும் ரயிலுக்கும் சண்டை பிடிச்சமாதிரியேல்லெ இஞ்சை சில திரியள்ளை வாசிக்க வேண்டிக்கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

அடுத்த வருடம் போக வேண்டும் என்று விருப்பம் இருக்குது பார்ப்பம்

வாங்கோ நான் உங்களுக்கு பாதுகாப்பு ??

10 hours ago, Thirdeye said:

கடைசியாக நான் போனவருசம் போனபோது 18ஆயிரம் முடிஞ்சுது கயஸ் புடிச்சு போனான்.கொஞ்ச பெறுமதியான சாமான் கள் கொன்டுபோனதால் கயஸ்.திரும்பிவரும்போது பஸ்தான்.1500ரூவா. அநியாயகாசு.ஜீவன்சிவா சொல்லேக்க இப்பான் தெரியுது இன்ரசிற்றியில் இதே காசுக்கு இவ்ளா வசதியாபோகலாம் என்டு.இணையத்தில் புக்பண்ணலாம ஜீவன்சிவா? இந்தமுறை வரும்போது நீங்கள் சம்மதித்தால் உங்களை சந்திக்க வாறன்.முனிவர் ஓகேன்னா முனிவரையும் சந்திக்கபோகலாம்.

கிழக்கு பக்கம் வந்தால் தனிமடல் அனுப்பி தொடர்பு கொள்ளுங்கள் நண்பா மூன்றாவது கண் 

அரசியல் எனக்கும் தெரியாது நண்பாகி பழகி மகிழ்வோம் ஜீலை முதற் பகுதியில் கதிர்காமம் பாதயாத்திரை சென்று விடுவேன் அதன் முன்பு அறியத்தரவும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

மக்கள் கஷ்டப்படுவதை இங்கே யாருமே விரும்பவில்லை. ஆனால் தீர்வு வருமெண்டு 70 வருசமாய் காமெடி பண்ணப்படாது.

ஏதோ இவ்வளவு காலமும் றோட்டுக்கும் ரயிலுக்கும் சண்டை பிடிச்சமாதிரியேல்லெ இஞ்சை சில திரியள்ளை வாசிக்க வேண்டிக்கிடக்கு

அங்கத்தைய இண்டய நிலைமை, பார்த்த வாறே சொல்வதற்க்கும், அரசியலுக்கும் என்ன தொடர்பு, அண்ணை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, Nathamuni said:

அங்கத்தைய இண்டய நிலைமை, பார்த்த வாறே சொல்வதற்க்கும், அரசியலுக்கும் என்ன தொடர்பு, அண்ணை?

நீங்கள் மேற்கோள் காட்டிய கருத்திற்கு நான் உங்கள் திரியை மையப்படுத்தி கருத்தெழுதவில்லை. இதர பின்னோட்டங்களை மனதில் வைத்தே எழுதினேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, குமாரசாமி said:

நீங்கள் மேற்கோள் காட்டிய கருத்திற்கு நான் உங்கள் திரியை மையப்படுத்தி கருத்தெழுதவில்லை. இதர பின்னோட்டங்களை மனதில் வைத்தே எழுதினேன்.

சுருக்கமா ஆள்பாத்து கருத்தெழுதினன் என்டு சொல்லுங்கோவன்.

நண்பர்கள் ஜீவன் சிவா,முனிவர்ஜீ நான் அரசியல் யாழுடன்மட்fஉம்தான்.அதைதான்டி எனக்கு யதார்த்த வாழ்வில ஊரில இருக்கிற சாதாரண் சனம் மாதிரி வயித்துப்பாட்டுக்கு உழைக்கிற போராட்டம்.இங்கினை யாழில குத்திமுறியிரவ மாரி இல்ல நான்.நான் யதார்த்த மனுசன்.உந்த அரசியல் உதுகளுக்கு நேரமில்ல. கன்டிப்பா நேரில் சந்தித்தால் நல்லா தின்டு குடிச்சு ஞாபகங்களை பகிர்ந்து மகிழலாம் மகிழலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

மக்கள் கஷ்டப்படுவதை இங்கே யாருமே விரும்பவில்லை. ஆனால் தீர்வு வருமெண்டு 70 வருசமாய் காமெடி பண்ணப்படாது.

ஏதோ இவ்வளவு காலமும் றோட்டுக்கும் ரயிலுக்கும் சண்டை பிடிச்சமாதிரியேல்லெ இஞ்சை சில திரியள்ளை வாசிக்க வேண்டிக்கிடக்கு

நல்ல ரோடும், ரயிலும் கிடைக்கும் என்றுதானே

போராடாமல் வெளிநாட்டுக்கு புலம் பெயர்ந்தனீர்கள்?

அதையே ஊரில் உள்ளவர்களுக்கு கிடைக்கும்

போதும் மட்டும் உங்களுக்கு சுதந்திரம் பற்றிய சிந்தனை

 

இப்படியான எல்லா திரிகளிலும் வந்து தங்கள் சுயநல அரசியலை

பேசி குழப்பி அடித்து

எவரையும் எழுதாமல் விட வைக்க கஷ்டப்படுகின்றீர்கள்

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, வைரவன் said:

நல்ல ரோடும், ரயிலும் கிடைக்கும் என்றுதானே

போராடாமல் வெளிநாட்டுக்கு புலம் பெயர்ந்தனீர்கள்?

அதையே ஊரில் உள்ளவர்களுக்கு கிடைக்கும்

போதும் மட்டும் உங்களுக்கு சுதந்திரம் பற்றிய சிந்தனை

இப்படியான எல்லா திரிகளிலும் வந்து தங்கள் சுயநல அரசியலை

பேசி குழப்பி அடித்து

எவரையும் எழுதாமல் விட வைக்க கஷ்டப்படுகின்றீர்கள்

வைரவரே! நான் நல்ல ரோட்டுக்கும் ரயினுக்கும் புலம்பெயர்ந்தேன் என்பதை எப்படி கண்டு பிடித்தீர்கள்? புலம்பெயர்ந்த தமிழருக்கு என்ன காரணத்திற்காக சுயநல அரசியல் தேவைப்படுகின்றது என்பதை ஒருதரம் விளக்குவீர்களா?

பேசி குழப்பியடித்து எவரையும் எழுத விடாமல்..........இது எனக்கு துண்டற விளங்கேல்லை :mellow:
 

  • கருத்துக்கள உறவுகள்

அந்த தம்பி ஊர் பக்கம் வந்து போனதை பற்றி எழுதியதற்கு என்ன விமர்சனம் இங்கே ?

இப்ப இருக்கும் ஊர் இதுதான் அந்தக் காலத்தில் இருந்தததை நினைத்து வராதீர்கள்  ஊர் மக்கள் ஒவ்வொருவரும்  மாறிவிட்டார்கள் எப்படி யெல்லாம்  வாழவேண்டும் என்று ஆகவே மக்காள் எல்லோரும் ஊர் பக்கம் சுற்றி ஒரு ரவுண்டு அடிச்சுட்டு போங்கள் 

எத்தனை பேர் ஊர்  வந்து சத்தம் இல்லாமல் சென்று இருக்கிறார்கள் என்பது மூஞ்சு புத்தகத்தில் இணைத்த படங்களை பார்த்தே தெரிந்து கொள்ள கூடியதாகள் இருக்கிறது ??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

On 23 May 2016 at 11:25 AM, Nathamuni said:

ஒரு திடீர் இலங்கை பயணம்.

முக்கிய வேலை ஒன்றுக்காக இலங்கை சென்று வந்தேன்.

யாழில் இரு நாட்கள். ஆட்டோ காரர்கள் 'மீட்டர்' இல்லாமல் ஓட்டுகிறார்கள். வெளிநாடு என்று ஒரு பார்வையில் புரிந்து கொண்டு, பிறகு பார்த்து தாங்கோ என்பார்கள். முதலே பேசா விட்டால் அம்புட்டு தான்.

போகும் போதே, வீட்டில் கறுத்தக் கொழும்பு மாங்காய்  பிடுங்கினனாங்கள், போகும் போது தந்து விடுகிறேன் என்று நீண்ட நாள் வியாபாரத்துக்கு அடித்தளம் போடுவார்கள். (மாங்காய் வரும் என்று ஆவென்று இருந்தால், நீங்கள் கெட்டிக் காரர் தான், போங்கள்)

ஆனால் ஒருவரை மீண்டும் கூப்பிட முடியாத அளவிற்க்கு அவர்களது கட்டணம் இருக்கும். சாதாரணமாக கொழும்பில் 100 ரூபா வாங்கினால், யாழில் 350 ஆக இருக்கும். 

கொழும்பில் மீட்டர் ஆட்டோ பிடித்தால், கட்டணத்தினை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம். எனினும் வெள்ளவத்தையில் இருந்து, புறக்கோட்டை செல்ல ஆட்டோ 1000 என்றார்கள். பின்னே வந்த பஸ்ஸில் ஏறினால் 12 ரூபா.

சலூனில் ஷேவ் எடுக்கப் போனால், முதலே எவ்வளவு என்று கேட்டால், லோக்கல் ரேட் 100 ரூபா. முடிஞ்ச பிறகு கேட்டால் 300 முதல் 500 வரை. (ஷேவ் எடுத்துப் பாருங்கள், நெடுக ஸெல்ப் ஷேவ் எண்டு, வறாண்டிக் கொண்டு இருபவர்களுக்கு, நல்ல ஒரு அனுபவம். ஆனால், டிசு பேப்பர் பாவிக்க வேண்டும், ஜெல் கையினால் பூச வேண்டும், முகம் துடைக்க, அவர்களது துவாய் பாவிக்கப் படாது என்று சொல்லி வையுங்கள். அப்படியே ஒரு டிப்ஸ் கொடுத்து விடுங்கள். அடுத்த நாள் இன்னும் அமர்க்களமாய் எடுத்து விடுவார்.).

ஹோட்டல் மிகவும் அதிகமாக அறவிடுகிறார்கள். நேரே போனால் அதிகமாக சொல்வார்கள் (களைப்புடன் வருபவர்கள் அங்க, இங்க போய் மினக்கட மாட்டர்கள் என்பது அவர்களுக்கு தெரிந்த வியாபார தந்திரம்). 

நான் booking.com மூலம், ஒரு ஹோடேலில் இருந்து மறு ஹோட்டலுக்கு போகும் முன்னர் புக் பண்ணிக் கொண்டே போதால், மலிவான டீல்கள் கிடைத்தன. ஆகவே அங்கே இருக்கும் போதே, இவ்வகையில் புக் பண்ணுங்கள். ஆட்டோ, வாடகை கார்களுக்கு, கொண்டு வரும் வாடிக்கை யாளருக்கு, கொமிசனோ, ரெஸ்டாரன்ட் ஆயின், ஒரு சாப்பாடு பார்சலோ கிடைப்பதால், உங்களுக்கு பொருத்தம் இல்லாத இடங்களை காட்டி, கட்டி அடித்து விடுவார்கள்.

நான் booking.com மூலம் எடுத்த அதே $29 ரூம், நேரே சென்ற ஜேர்மன் தமிழருக்கு $70.

ரயில் பயணம் சிறப்பு. அதிகூடிய விலை 1300 ரூபா. அதிகுறைந்த விலை 370 ரூபா. 

பஸ்கள் 1300 ரூபா, ஆனால், அந்த பணத்தினைக் கொடுக்கக் கூடிய வகையில் ஓரிரு நிறுவன பஸ்களே தரமானவையாக உள்ளன. அதாவது எல்லோரும் 1300 ரூபா அறவிடுவதால், பல தரமில்லாத பஸ்களும் ஓடுகின்றன. கொமிசன் அதிகமாக கிடைப்பதால், தரம் இல்லாத பஸ்களை, தரமானதாக சொல்லி விற்பார்கள். அண்மைய மழையில் பஸ்கள் ஒழுகி, மக்கள் பணத்தினைக் திருப்பக் கேட்டதால், சில பஸ்கள் ஓடாமல் இருந்தன. மேலும் இவ்வைகையான பஸ்களில் A/C புல்லாக போட்டு விடுவார்கள். மக்கள் குளிரில் நடுங்கி வெடவெடத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு கவலை இல்லை.

மிக முக்கியமாக, கொழும்பு - யாழ், யாழ் - கொழும்பு பஸ் பதிவுகளில் கவனமாக இருங்கள்.  மிகச் சிறந்த பஸ்களை மட்டுமே கேட்டு பதிவு செய்யுங்கள். வெங்கடேஸ்வரா, குணசேகர பஸ்கள் நல்ல தரம் என்று சொன்னார்கள். ஒவ்வொரு இருக்கைகளுக்கும் தனித்தனியாக A/C கொன்றோல் பண்ண முடியும். நான் குணசேகர பஸ் லில் வரும் பொது பயணித்தேன்.

எனினும் புறக் கோட்டையில் இருந்து CTB பஸ்கள் மலிவு விலைகளில் செல்கின்றன (ரூபா 370?). பஸ் இலக்கம் 87.

தரமில்லா 1300 ரூபா பஸ்களிலும் பார்க்க, இந்த அரச பஸ்கள் நன்றாக உள்ளன. நீண்ட தூரமாயின், விசேட இருக்கைகள் (சாய்ந்து படுக்கக் கூடியாவாறு) உள்ளன.

நல்ல உணவு விடுதிகள் உண்டு. கொள்பிட்டியில் க்ரீன்கபே நன்றாக இருந்தது. ராஜ போஜன் உணவகம் ரூபா 1950 புபே. மிகவும் அதிக கட்டணம். curry leves வெள்ளவத்தையில் நன்றாக இருப்பதாக சொன்னார்கள். நான் போக முடியவில்லை. 

யாழ் சந்தையில் பலாப்பழம் ஒரு துண்டு வாங்கி, அந்த பாட்டியம்மா விடமே பேசி, கொஞ்சம் காசு கொடுத்து சுளை ஆய்ந்து வாங்கியதால், ஹோட்டல் கொண்டு போய் சுவைக்கக் கூடியதாக இருந்தது. மாம்பலமும் அவ்வாறே. இன்னும் முழு பலாப் பழ சீசன் வரவில்லை.

யாழ் ரயில் நிலையத்தில் உத்தியோகத்தர்களாக, சிங்கள இளஞர்கள் டிக்கெட் வியாபாரம் செய்கிறார்கள். சிங்களத்தில் கேட்டால், தமிழில் பதில் அளிக்கிறார்கள். ஆச்சரியத்துடன் அவர்களது சூப்பெர்வைசெர் ஆயிருந்த தமிழ் அதிகாரியுடன் கதைத்த போது, இப்போதெல்லாம், அரச வேலைகள் பெறுவதாயின், தமிழர்கள் சிங்களமும், சிங்களவர்கள் தமிழும் சித்தி அடைய வேண்டுமாம். 

யாழ் நீதி மன்று பார்க்க போனேன். வாசில் இருந்த போலிஸ் கார் கூப்பிட்டு, சேட்டினை இன் பண்ணி போங்கோ என்கிறார் தமிழில்.

திரும்பி வரும் போது, கேஸ் முடிந்ததா என்றார். இல்லை, பல ஆண்டுகள் பின்னால் பார்க்க வந்தேன் என்றேன். ஆரவத்துடன் உரையாடினார். நாடு முழுவதுமே யுத்தத்தினால் பாதிக்கப் பட்டது. இன்று முழு நாடுமே நிமதியாக உள்ளது. விரைவில் தீர்வு வர வேண்டும் என்றார். தண்ணீர் போத்தல் ஒன்றையும் தந்தார்.

யாழில் சில இளையோரின் இன்றைய தளம்பல் நிலை, விரைவில் மாறும் என்றார் ஒரு லோயர். அவர்கள் இடையே நோக்கம் இன்றி தடுமாறு கின்றனர். நோக்கம் தெளிவாகும் போது தடுமாட்டம் நீங்கும் என்றார். பல புலம் பெயர்ந்தோர் முதலீடு செய்வதால் வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. அதே வேலை யாழில் இருந்த திறமையான, ஏலேக்ட்ரிசியன், பிளமேர், மேஸ்திரி மார் கொழும்புக்கு அதிக சம்பளத்துக்கு கடத்தப் பட, அங்குள்ள அப்பிரசெண்டிங்குகள் இங்கே வருகிறார்கள்.  அதனால் வேலைகளில் தரமில்லை.

டியூஷன் சென்டர், அதன் விளம்பரங்கள் மட்டும் எந்த வித வித்தியாசமும் இல்லை.

ஆளில்லா டீக்கடையில், யாருக்கு டீ ஆத்துகிறார்கள் என்ற வகையில், ஆக்களே வராத கோயில்கள் எல்லாம், கோபுரம், குளம், மதில் என்று பிரகாசிகின்றன. வெளிநாட்டார் உபயம். 

அருமையான ரோட்டுக்கள் அமைந்துள்ளன. ஆர்மிக்காரர், தாமும் தம் பாடும். அவர்களுடன் சொறியாவிடில், அவர்கள் ஏனப்பா சொறியப் போகினம் என்றார் ஒரு உறவுப் பெரிசு.

நம்ம ஜீவன் சிவாவை சந்திக்க திட்டம் போட்டு, செவ்வாய் காலை ரயில், வெள்ளம் காரணமாக ரத்தாகியதால், ஒரு நாள் இழந்து, சந்திக்க முடியவில்லை.

பழைய unlock பண்ணிய ஆப்பிள் போன் கொண்டு போய், ஏயர்போட்டில், Dialog இன்ரநெற்றுடன், சிம் வாங்கி, அதை personal hotspot ஆக பாவித்ததால், கொண்டு போன ஆப்பிள் ஐபோன் 6 க்கு எந்த நேரமும் wifi இணைப்பு கிடைத்தது.

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் நாதர்...

அரசியல் இல்லை

அரசியல் இல்லை என்று சொல்வதே ஒரு அரசியல் தானே ராசா...

இங்க  ஜீவன் சிவா 

அரசியல் வேண்டாம் அரசியல் வேண்டாம் என்கிறார்

ஆனால் அவர் எழுதும் ஒவ்வொரு எழுத்திலும் திரியிலும் அரசியல் இருக்கிறது....

 

11 hours ago, விசுகு said:

நல்ல விடயம் நாதர்...

அரசியல் இல்லை

அரசியல் இல்லை என்று சொல்வதே ஒரு அரசியல் தானே ராசா...

இங்க  ஜீவன் சிவா 

அரசியல் வேண்டாம் அரசியல் வேண்டாம் என்கிறார்

ஆனால் அவர் எழுதும் ஒவ்வொரு எழுத்திலும் திரியிலும் அரசியல் இருக்கிறது....

 

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் அரசியல் இருக்கும், வேறுபட்ட பார்வைகள் இருக்கும், அதனை ஏற்றுக்கொள்ள  முடியாதவர்களுடன் முட்டி மோதி நானும் ஒரு சாதாரண வெறியனாக இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. 

அப்பு, நான் அரசியல் வேண்டாமென்பது  நண்பர்களாக சந்திக்கும்போது. சந்திப்புகள் சண்டையில் முடியக்கூடாது என்பதால். நான் யாழுக்கு வெளியே அரசியல் கதைப்பது மிகவும் அரிது - எனது நண்பர்கள் குழாம் அதனால்தான் பெரியது, பரந்துபட்டது. என்னை சந்தித்த யாழ் உறவுகளை கேட்டால் சிலவேளைகளில் விடை உங்களுக்கு கிடைக்கலாம். 

ஏன் நான் உங்களையே சந்தித்திருக்கிறேன்

நன்றி

வணக்கம்

1-saroja-devi.jpg

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

அக்னியும் இங்கேதான் ....வாருங்கோ மீட்டிங்கை போடுவோம் ...But NO அரசியல் 

புலம்பெயர்ந்தவர்கள் மட்டுமா சந்திப்பது ...புலத்தவர்களும் ஒரு சந்திப்பை நடத்திட்டால் போச்சு 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அக்னியஷ்த்ரா said:

அக்னியும் இங்கேதான் ....வாருங்கோ மீட்டிங்கை போடுவோம் ...But NO அரசியல் 

புலம்பெயர்ந்தவர்கள் மட்டுமா சந்திப்பது ...புலத்தவர்களும் ஒரு சந்திப்பை நடத்திட்டால் போச்சு 

ஓ அதுக்கென்ன நடந்துவம் அக்கினி?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஜீவன் சிவா said:

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் அரசியல் இருக்கும், வேறுபட்ட பார்வைகள் இருக்கும், அதனை ஏற்றுக்கொள்ள  முடியாதவர்களுடன் முட்டி மோதி நானும் ஒரு சாதாரண வெறியனாக இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. 

அப்பு, நான் அரசியல் வேண்டாமென்பது  நண்பர்களாக சந்திக்கும்போது. சந்திப்புகள் சண்டையில் முடியக்கூடாது என்பதால். நான் யாழுக்கு வெளியே அரசியல் கதைப்பது மிகவும் அரிது - எனது நண்பர்கள் குழாம் அதனால்தான் பெரியது, பரந்துபட்டது. என்னை சந்தித்த யாழ் உறவுகளை கேட்டால் சிலவேளைகளில் விடை உங்களுக்கு கிடைக்கலாம். 

ஏன் நான் உங்களையே சந்தித்திருக்கிறேன்

நன்றி

வணக்கம்

1-saroja-devi.jpg

 

 மேலே நான் தப்பாக ஏதும் எழுதவில்லை

அவரவர் விருப்பமது

வருபவரை இப்படி என்றால் தான் வரவும் என்பது நாகரீமாகாது..

அதை அவர் தான் தீர்மானிக்கணும்

உறவை தொடர்வதா வேண்டாமா என...

அதைத்தான் எழுதினேன்..

நோர்வேயிலிருந்து என்னை சந்தித்திருக்கின்றீர்கள் என்றால்

உங்களுக்கு உடல் முழுக்கு சனி தான்..:grin:

  • 2 weeks later...

தமிழர் தேசத்தின் 0.01% க்கு குறைவான, அபிவிருத்தி செய்யப்பட்ட பகுதிகளை மேலோட்டமாக பார்த்துவிட்டு எழுதியுள்ளீர்கள். எழுதிய விடயங்களில் பெரும்பாலானவை உண்மை தான். சில பிழைகளும் உள்ளன. அவை இருக்கட்டும்.

நானும் ஓரிரு வருடங்களின் முன்னர் யாழ் ரொலெக்ஸ் ஹோட்டலில் சாப்பிடச்சென்ற போது முன்னால் வந்து அமர்ந்த சிங்கள போலீஸ்காரருடன் எனக்கு தெரிந்த சிங்களத்தில் சுமூகமாக கதை அளந்துவிட்டு சேதம் இல்லாமல் திரும்பினேன்.

சீருடையில் வந்த அவர் தான் என்னை ஒருமாதிரி பார்த்தவிட்டு சிரிச்சார். பிறகு எந்த ஊர் என்டு கதைக்க தொடங்கினார். இந்த வம்பு வேண்டாம் என்று நினைச்சாலும், ID  ஐ காட்டு என்டு கேக்கமாட்டார் என்ற நம்பிக்கையில், சிங்களமும் கொழும்பும் ஓரளவு தெரியும் என்பதால், ஒரு திரில்லில் ஊர் கொழும்பு என்று சிங்களத்தில் சொல்ல, அவர்  கொஞ்சம் குஷியாக சிங்களத்தில் கதைக்க தொடங்கினார்.

தான் முல்லைத்தீவில் இருந்து 2 மாதங்களுக்கு முன்னர் மாற்றலாகி  யாழ் வந்ததாகவும், யாழ் மக்கள் தங்கமானவர்கள் என்றும் மெய்மறந்து சொன்னார். முல்லைத்தீவு எப்படி இருக்கிறது என்று கேட்டேன்.

நெற்றியில் சந்தனப் பொட்டைப் பார்த்து கோவிலுக்கு போய் வந்திருப்பதை உறுதி செய்து கொண்டு, முல்லைத்தீவில் முஸ்லிம்கள் ஒரே பிரச்சினை என்றார். நானும் கொஞ்சம் உசுப்பேத்தி விட்டன். ஏக்கர் கணக்கில் காடழித்து ஒரு குடும்பத்தில் உள்ள 3 பெரியவர்களுக்கும் தனிக் காணிகள் கொடுப்பதாகவும், அவர்களுக்கு புத்தளத்தில் வேறு காணிகளும் வீடுகளும் இருப்பதாக ஆவேசப்பட்டார். மிகப் பெரிய பகல் கொள்ளை நடக்கிறது என்றும் சொன்னார்.  

அரச அமைச்சர்கள் அரச அனுசரணையில் தானே இதை செய்கிறார்கள் என்று நான் சொல்ல, கோபத்தின் உச்சிக்கு சென்ற அவர், ஓம் ஓம் அரசு மட்டுமல்ல முஸ்லிம் நாடுகளும் தலையிடுகின்றன. அதான் தாங்கள் சட்டத்தை பேணமுடியாமல் இருக்கு என்றார். தமிழ் மக்கள் இப்பிடி ஒருநாளும் கள்ளக் காணி பிடிக்கவில்லை என்றும், அவர்கள் தாங்கள் இழந்த காணிகளைத் தானே கேக்கிறார்கள் என்று அவரே ஒரு உண்மையையும் உளறினார்.

சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நானும், நாங்கள் தமிழர், புலிகள் உங்களுடன் நேரடியாக எமது உரிமைகளை கேட்டு நேரடியாக தானே சண்டை போட்டோம். இப்படி கூடவே இருந்து கழுத்தறுக்க இல்லையே என்றதுக்கு, ஓம், ஓம் என்று தலையாட்டினார். நாங்களும் நீங்களும் நேருக்கு நேர் சண்டை பிடிக்க அவர்கள் இடையில் புகுந்து நிறைய சுருடிக்கொண்டிருகிரார்கள் என்றேன். அதற்கு அவர் தமிழர்கள் தங்கமானவர்கள் என்று இப்ப தனக்கு விளங்குவதாகவும் கூறினார். பிரபாகரன் ஐயா வெளிநாட்டுகாரருக்கு நாட்டை அடகுவைக்கவில்லை என்றும் கூறினார். நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து நம் நாட்டை அந்த கள்ளகாணி பிடிக்கும் மக்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றும் சொன்னார்.

அவர் பிரபாகரனுக்கு "மாத்தையா" என்ற மரியாதை கொடுத்தது ஆச்சரியமாக இருந்தது.  

அருகில் இருந்தவர்கள், சிங்களம் விளங்கினவர்கள் வியர்க்க விறுக்க எங்கள் சத்தமான உரையாடல்களை பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு மேசையில் இருந்த 2 பேர் முஸ்லிம்கள் போல இருந்தனர். நான் அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் அவர்கள் தலையை குனிந்து கொள்வார்கள்.

சரி எல்லை தாண்டக் கூடாது, என்பதால் சாப்பிட்டவுடன் டீ குடிக்கும் ஆசையையும் மறந்து அந்த போலீஸ்காரர் சாப்பிட்டு முடிப்பதற்கு முன் பில்லை கொடுத்துவிட்டு வேக வேகமாக சென்று மறைந்துவிட்டேன்.

ஒரு சிங்கள போலிஸ்காரரிடம் புலிகளின் போராட்டத்தை பகிரங்கமாக நியாயப்படுத்த முடிந்ததால் யாழ் நிலை இப்ப பரவாயில்லை என்று முடிவெடுத்துவிடக் கூடாது. என்னால் அவரிடமிருந்து சுலபமாக தப்பிவிட முடியும் என்ற சந்தர்பங்கள் இருந்தபடியால், கொஞ்சம் முரட்டுத் தைரியமும்  இருந்தபடியால் தான் அன்று அப்படி நடக்க முடிந்தது.

வவுனியாவிலிருந்து யாழ் வரை உள்ள A9 வீதியின் இரண்டு பக்கமும் 2, 3 km துரத்துக்கு மேல் உள்ளே சென்று வருபவர்கள் மட்டும் தான், அங்கு சில நாட்கள், 1-2 வாரங்கள் தங்கினால் மட்டும் தான், தமிழர்கள் இன்னும் நரக வாழ்க்கையையே அனுபவிக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்வார்கள்.

பாடசாலை மாணவிகள், ஆண்கள் இல்லா குடும்பம் நடத்தும் பெண்கள் தினமும் அனுபவிக்கும் திகில் சூழ்நிலைகள், பாடசாலை மாணவர்கள் இளைஞர்கள் தவறான பாதையில் செல்ல தூண்டப்படும் கொடூரங்களையும் காணலாம், அறியலாம்.  
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.