Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

100 ஆண்டுகளில் இல்லாத மழை: வெள்ளத்தில் மிதக்கும் பிரான்ஸ், ஜெர்மனி

Featured Replies

100 ஆண்டுகளில் இல்லாத மழை: வெள்ளத்தில் மிதக்கும் பிரான்ஸ், ஜெர்மனி

 
 
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்கு படகுகள் மூலம் மீட்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. படம்: ஏஎப்பி
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்கு படகுகள் மூலம் மீட்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. படம்: ஏஎப்பி

பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா வில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பாரீஸ் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

மழை காரணமாக ஜெர்மனியில் 8 பேரும் பிரான்ஸில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக் கானோர் வீடு, உடைமைகளை இழந்துள்ளனர்.

ஒரு வாரமாக மழை

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் மற்றும் அந்த நாட்டின் மத்திய, தென்கிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. பாரீஸில் ஓடும் ஸுன் நதியின் இருபுறமும் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டு நகருக்குள் வெள்ளம் புகுந் துள்ளது. இதனால் சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித் துள்ளது.

மத்திய பிரான்ஸில் உள்ள சோப்பீஸ் சர் லோயிங் நகரில் கனமழை பெய்து வருகிறது. அங்கு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 10 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் தங்களை காப்பாற்றக் கோரி தொலைபேசி யில் உதவி கோரியுள்ளனர். அந்தப் பகுதிகளில் ஹெலிகாப்டர்கள், படகுகள் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து பாரீஸ் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் பிரான்ஸில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மானுவேல் வால்ஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தி வருகிறார்.

ஜெர்மனியில் 8 பேர் பலி

ஜெர்மனியின் கிழக்குப் பகுதியில் ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. முனிச் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.

பவேரியா மாகாணத்தில் வெள்ள பாதிப்பு அதிகமாக உள்ளது. அந்த மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 10 அடி உயரத்துக்கு வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் தரைத்தளங்களை விட்டு வெளியேறி மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மழை காரணமாக ஜெர்மனியில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலரை காணவில்லை. அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பவேரியா மாகாணம் முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் பிராந்தியத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது.

http://tamil.thehindu.com/world/100-ஆண்டுகளில்-இல்லாத-மழை-வெள்ளத்தில்-மிதக்கும்-பிரான்ஸ்-ஜெர்மனி/article8685756.ece?homepage=true

  • தொடங்கியவர்

பிரான்ஸ், ஜேர்மனியில் தொடர்ந்து வௌ்ளப்பெருக்கு ; 11 பேர் பலி

 

பிரான்ஸின் பாரிஸ் நகரில்  செயின் ஆற்றின் நீர் மட்டமானது சாதாரண மட்டத்திலிருந்து 19  அடி வரை உயர்ந்ததால் அந்நகரில் பல பிராந்தியங்களில்  வரலாறு காணாத  பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வௌ்ள அனர்த்தம் காரணமாக பாரிஸ் நகரிலுள்ள  உலகப் பிரபல  லோவுர் அருங்காட்சியம் மற்றும்  ஒர்சே அருங்காட்சியம் என்பன மூடப்பட்டு அவற்றின் கீழ் மாடிகளிலிருந்த  விலைமதிப்பற்ற கலைப்படைப்புகள்  மேல் மாடிகளுக்கு  கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

வெள்ள அனர்த்தம் காரணமாக  பிரான்ஸிலும்  ஜேர்மனியிலும் குறைந்தது 11  பேர் உயிரிழந்துள்ளனர்.

FLOOD__2_.jpg

இந்நிலையில் மத்திய ஐரோப்பாவில் மேலும் கடும் மழைவீழ்ச்சி இடம்பெறலாம் என எதிர்வுகூறப்படுகின்ற நிலையில் வெள்ளம் இன்னும் தீவிரமடையலாம் என அஞ்சப்படுகிறது.

தென் ஜேர்மனியிலுள்ள  பல நகர்களும், பெல்ஜியமும் போலந்தும்   இந்த வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கொயிஸ் ஹொலண்ட் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில்  அவசரகால நிலைமையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

மத்திய பாரிஸில் சியன் ஆற்றங்கரையோரமாக அமைந்த  புகையிரதப்பாதை மூடப்பட்டுள்ளது.

FLOOD__4_.jpg

ஜேர்மனியில் மட்டும் வெள்ள அனர்த்தத்தில் சிக்கி குறைந்தது 9  பேர் பலியாகியுள்ளதுடன் பலர் காணாமல்போயுள்ளனர்.

பவேரியா பிராந்தியத்தில் சிம்பச் எனும் இடத்திலுள்ள வீடொன்றின் கீழ் தளத்தில்  78  வயது பெண்ணொருவரும் அவரது 56  வயதுடைய மகளும் 28  வயதான பேத்தியும்  சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் அந்தப் பிராந்தியத்தில் 75  வயது ஆணொருவரது சடலமும் மீட்கப்பட்டுள்ளது.  அதேசமயம் அதன் அயல் கிராமமான ஜுல்பச்சில் 80  வயது பெண்ணொருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜேர்மனிய அதிபர் அஞ்ஜெலா மெர்கெல் தெரிவிக்கையில், இந்த வெள்ள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக முழு நாடும் துக்கம் அனுஷ்டிப்பதாக கூறினார்.

http://www.virakesari.lk/article/7147

  • கருத்துக்கள உறவுகள்

நலம்

நலமறிய ஆவல்....

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவில் வசிக்கும் தமிழ் உறவுகள் யாவரும் பாதுகாப்பாக, நலமுடன் இருக்க வேண்டுதல்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நீந்தத் தெரியாத நாங்கள்....  ஆத்தங்கரையில் குடியிருக்க மாட்டோம்.
நலம் விசாரித்த.... விசுகு, வன்னியன் ஆகியோருக்கு நன்றி. :)

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

பாரிஸ் வெள்ளபெருக்கால் தத்தளிப்பு

 

செயின் நதியின் நீர்மட்டம் ஆறு மீட்டர் உயர்ந்துள்ளது என்றும் அடுத்த சில மணிநேரங்களில் இந்த அளவு மேலும் அதிகரிக்கும் என்றும் பாரிஸிலுள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

160603053332_paris_flood_eiffel_tower_ni
 

ரெயில் நிலையங்கள், அருங்காட்சியகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. உயர்ந்து வரும் நீர்மட்டம் நகரத்தின் புகழ்பெற்ற கற்பாலங்களின் அடியொற்றி செல்கிறது. நடைபாதைகள் நீரில் மூழ்கி மறைந்து போயுள்ளன.

160603133403_france_inondation_512x288__ 

இரண்டு பேர் இறந்துள்ளனர். 20 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

160603054426_paris_flood_seine_rescue_64

 

இந்த கன மழை மத்திய பிரான்ஸின் பல பகுதிகளில் வெள்ளபெருக்கை ஏற்படுத்தியுள்ளது.

160603072517_france_flood_640x360_evn_no 

ஐரோப்பாவின் பிறபகுதிகளில், ஜெர்மனியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பேர் இறந்துள்ளனர் என்றும், பலரை இன்னும் காணவில்லை என்றும் தெரிய வருகிறது.

160603161845_france_640x360_afp.jpg

 

பெல்ஜியத்தில் நீரில் அடித்து செல்லப்பட்டு ஒருவர் இறந்ததாகவும், பல கிராமங்கள் நீர் நிறைந்ததாகவும் உள்ளன. ருமேனியாவின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இரண்டு பேர் இறந்துள்ளனர்.

http://www.bbc.com/tamil/global/2016/06/160603_parisflood

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் பாதுகாப்பில் அக்கறை கொண்டு நலம் விசாரித்த உறவுகளுக்கு நன்றிகள்!! பாதிக்கப்பட்ட இடங்களில் அகதிகளாக வந்திருக்கும் ஆசிய, ஆபிரிக்கர்களின் உதவிகளும் நிறைந்திருப்பதை தொலைக்காட்சிகள் காண்பிக்கின்றன.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருக்கிறம்...இருக்கிறம்.....விசாரிச்சதுக்கு நன்றி

 

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு குமாரசாமி இவர்கள் தெரிந்தவர்கள் இன்னும் பலர் இருக்கலாம்  பாதுகாப்பாக இருக்கவும். 

ஆனாலும் இவர்கள் பல பேருக்கு தண்ணீ காட்டியவர்கள்  இவர்களுக்கு இந்த மழைத் தண்ணீர் எம் மாத்திரம் ??

பாரிஸ் வெள்ளம் - மிகவேகமாக மேலும் அதிகரிக்கும் செயின் நதியின் நீர்மட்டம் - பேராபத்திற்கு வாய்ப்பு

செயின் நதியின் நீர்மட்டம் 6 மீட்டர் அளவிற்கு உயர்ந்துள்ளது, சில மணிநேரங்களில் 6.5 மீட்டராக அதிகரிக்கும் என்றும் வெள்ளம் தவிர்க்க முடியாத அபத்தாக உள்ளது எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தொடர்ச்சியாகப் பெய்து கொண்டிருக்கும் கனமழையானது, இன்னமும் விரைவாகச் செயின் நதியின் நீர்மட்டத்தை மிகவேகமாக அதிகரிக்கச் செய்யும் என அஞ்சப்படுகிறது.

1974ம் ஆண்டு வந்த வெள்ளப்பெருக்கின் போது, செயின் நதியில் உயர்ந்த நீர்மட்டத்தை விட இப்பொழுதே அதிகளவு நீர்மட்டம் உயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.

ரயில் நிலையங்கள், அருங்காட்சியகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. உயர்ந்து வரும் நீர்மட்டம் நகரத்தின் புகழ்பெற்ற கற்பாலங்களின் அடியொற்றி செல்கிறது. நடைபாதைகள் நீரில் மூழ்கி மறைந்துபோயுள்ளன. இதுவரை, இரண்டு பேர் இறந்துள்ளனர். 20 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த கன மழை மத்திய பிரான்ஸின் பல பகுதிகளில் வெள்ளபெருக்கை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பாவின் பிறபகுதிகளில், ஜேர்மனியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பேர் இறந்துள்ளனர் என்றும், பலரை இன்னும் காணவில்லை என்றும் தெரியவந்துள்ளது

பெல்ஜியத்தில் நீரில் அடித்து செல்லப்பட்டு ஒருவர் இறந்ததாகவும், பல கிராமங்கள் நீர்நிறைந்ததாகவும் உள்ளன. ருமேனியாவின் கிழக்குப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இரண்டு பேர் இறந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

http://news.lankasri.com/france/03/103701

டிசம்பர் இல் தமிழ்நாடு, பின்னர் இலங்கை, இப்போது ஐரோப்பாவில் பாரிய வெள்ளப் பெருக்குகள் ஏற்பட்டுள்ளன.

  • தொடங்கியவர்

30 ஆண்டுகளில் இல்லாத கனமழையால் மிதக்கும் 3 நாடுகள்..! குட்டி தீவாக மாறிய பாரீஸ் (வீடியோ)

3a.jpg

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்துள்ளது. மழைக்கு 14 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் பெய்த மழை கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அங்குள்ள Seine நதியின் நீர்மட்டம் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்து வருகிறது.

1a1.jpg

தற்போது வரை நதியின் நீர்மட்டமானது 19 அடிகள் வரை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சிலப் பகுதிகளில் மழை நீர் நகருக்குள் புகுந்ததால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.


தாழ்வான சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி காணப்படுகின்றன. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல தற்போது சிறிய ரக படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பாரீஸ் நகரில் உள்ள Seine நதியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் யாரும் நதிக்கரைக்கு அருகே செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

2a.jpg

தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு இதுவரை பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் 14 பேர் பலியாகியுள்ளனர்.  தென் ஜெர்மனியிலுள்ள பல நகரங்களும், பெல்ஜியமும், போலந்தும் இந்த வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கனமழையால் பாரீஸ் நகரம் குட்டி தீவுப் போல் மாற்றியுள்ளது. பாரீஸ் நகரிலுள்ள பிரபல லோவுர் அருங்காட்சியம் மற்றும் ஒர்சே அருங்காட்சியம் மூடப்பட்டுள்ளன.

வெள்ளச் சேதங்களை பார்வையிட சென்ற பிரான்ஸ் சுற்றுச்சூழல் அமைச்சர் ராயல், கனமழைக்கு பாரீஸ் நகரம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதால் ஆபத்தில் சிக்கி மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அண்மையில் பெய்த கனமழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/world/64875-heavy-rain-and-flooding-in-france-and-germany.art

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் முழுக்க வெள்ளத்தால் அழியப் போகுது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

தண்ணியாலைதான் உலகம் அழியுமெண்டு தசாவதாரம் படத்திலையும் பார்த்தனான்tw_blush:

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

 

தண்ணியாலைதான் உலகம் அழியுமெண்டு தசாவதாரம் படத்திலையும் பார்த்தனான்tw_blush:

ம்கும்☺

எந்த தண்ணிங்க?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.