Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் .துரையப்பா விளையாட்டரங்கு நாளை திறந்துவைப்பு.

Featured Replies

யாழ் .துரையப்பா விளையாட்டரங்கு நாளை திறந்துவைப்பு. 

 

y1யாழ் .துரையப்பா விளையாட்டரங்கு நாளை திறந்துவைப்பு.

வடக்கின் மாபெரும் விளையாட்டு மைதானமான யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கு நாளை முதல் வழமைக்கு திரும்புகிறது.

இந்திய அரசாங்கம் வழங்கிய 145 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ். துரையப்பா விளையாட்டரங்கு, நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்த விளையாட்டு மைதானத்தின் பிரதான மற்றும் இரண்டாம் நிலை பார்வையாளர் மண்டபங்கள் தவிர, உடற்பயிற்சி நிலையமொன்றும் இந்த விளையாட்டரங்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் இரவில் விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கான உயரமான மின்னொளி கம்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

நாளையதினம் இடம்பெறவுள்ள நிகழ்வுக்கான மேடை ஒழுங்கைமைப்பு செயற்பாடுகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அத்துடன் மைதானத்தைச் சுற்றி இந்தியக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது.

திறப்பு விழா நிகழ்வின் போது காணொளிக் காட்சி மூலம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளதுடன் பாடசாலை மாணவர்கள் கலந்துகொள்ளும் யோகாசிறப்பு நிகழ்வுகளிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவுள்ளார்

  13415617_1659616184065971_47115641027762

 

13422371_1659616287399294_6054300658872413433074_1659616214065968_52864143355503

  13458517_1659616167399306_67008092569474

13458678_1659616440732612_7160580576972513422371_1659616287399294_60543006588724

13418535_1659616410732615_37596950380341

13482987_1659616294065960_60494661593363

13443247_1659616357399287_59985436698723

13458678_1659616440732612_71605805769725

13411767_1659616454065944_27323282186642

 

http://vilaiyattu.com/யாழ்-துரையப்பா-விளையாட்/

 

1 hour ago, நவீனன் said:

யாழ் .துரையப்பா விளையாட்டரங்கு நாளை திறந்துவைப்பு.

சர்வதேசத்தை ஏமாற்றும் மைத்திரியின் கூத்துக்கள் நாளை துரையப்பா அரங்கில் அரங்கேற உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

13411767_1659616454065944_27323282186642

"துரையப்பா விளையாட்டு அரங்கம்"  என்பது தானே...  நல்ல தமிழ். 
 "துரையப்பா விளையாட்டரங்கு"... என்று  குரங்கின் (அனுமான்) ஞாபகம் வரும் படியாக பெயர் வைத்து....
காலம் சென்ற  முன்னாள் யாழ். நகர மேயர்  துரையப்பாவை, அவமதித்த மாதிரி இருக்குது. 

Edited by தமிழ் சிறி

தமிழினப் படுகொலைகாரர்களின், மிக மோசமான போர்க் குற்றவாளிகளின் கொடிகள் எங்கும் பறக்க சர்வதேசத்தை ஏமாற்றும் மைத்திரியின் கூத்துக்கள் நாளை துரையப்பா அரங்கில் அரங்கேற உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

தமிழினப் படுகொலைகாரர்களின், மிக மோசமான போர்க் குற்றவாளிகளின் கொடிகள் எங்கும் பறக்க சர்வதேசத்தை ஏமாற்றும் மைத்திரியின் கூத்துக்கள் நாளை துரையப்பா அரங்கில் அரங்கேற உள்ளது.

 யாழ்பாணம் இனி விளையாட்டுக்களில் வளர்ச்சி அடையும்?

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, முனிவர் ஜீ said:

 யாழ்பாணம் இனி விளையாட்டுக்களில் வளர்ச்சி அடையும்?

ஆஹா......  நீங்கள் நம்பீட்டீங்களா?
இது...  ஆமியும், பொலிசும் விளையாடுவதற்கான  இடம்.
மிஞ்சிப் போனால்... தான்,  அங்கு உள்ளூர் தமிழர் விளையாட முடியும்.
எம் கையில்... அதிகாரம் இல்லாத வரை, மற்றவனின் பிச்சையை  மட்டுமே நம்பி, நாம் வாழ முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

உந்த விளையாட்டரங்கம் (அதிலும் பழைய ளை யன்னா போட்டிருக்குது.).. எங்க ஹிந்தியாவில குஜராத்தில இருக்கோ...?! ஒரே ஹிந்தியக் கொடியா பறக்குது. இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் ராசகுமாரா... இவ்வளவு தமிழர்களையும் அழித்து.. ஹிந்தியா சாதித்தது இது தான். ஹிந்திய வல்லாதிக்கத்தின் விருப்புக்கு தமிழர்களும் உரிமையும் நிலமும் பலிக்கடா. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nedukkalapoovan said:

உந்த விளையாட்டரங்கம் (அதிலும் பழைய ளை யன்னா போட்டிருக்குது.).. எங்க ஹிந்தியாவில குஜராத்தில இருக்கோ...?! ஒரே ஹிந்தியக் கொடியா பறக்குது. இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் ராசகுமாரா... இவ்வளவு தமிழர்களையும் அழித்து.. ஹிந்தியா சாதித்தது இது தான். ஹிந்திய வல்லாதிக்கத்தின் விருப்புக்கு தமிழர்களும் உரிமையும் நிலமும் பலிக்கடா. 

அட... அதை,  இப்ப தான், கவனித்தேன். நன்றி நெடுக்ஸ்.
கேவலம்... யாழ்ப்பாணத்தில், உள்ள... மிகப் பெரிய விளையாட்டு அரங்கத்துக்கு....
சரியான தமிழில், எழுதக் கூடியவன் ஊரிலை இல்லையா?
ஆறுமுக நாவலர், ஆங்கிலேயரை எதிர்த்து தமிழ் வளர்த்த மண்ணில்....
தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன்,  தன்  இனத்துக்காக போராடிய மண்ணில்....
இன்று எத்தனை.... எழுத்துப் பிழை.
வடக்கில் வசந்தம், கிழக்கில் ஒளி என்று சொல்லி...
எம் போராட்டத்தை, காட்டிக் கொடுத்த.... 
டக்ளஸ் தேவானந்தா, ஆனந்த சங்கரி, கருணா, பிள்ளையான்.... 
போன்ற ஒட்டுக் குழுக்கள் எல்லாம் வந்து பதில் சொல்லுங்க... ப்ளீஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

அரங்கில்..என்னசெய்துகிடக்கு.....புல்லுக்கு மேலை வெள்ள கோடு கீறீவிட்டிருக்கு....இதுதான் தடகளம்....நாலு பல்பு பூட்டின கம்பம் ....கலர் கதிரை...இதுக்கு 360 மில்லியன்...சுத்தவர கிந்தியகொடி....திறப்பு விழாவுக்கு மைத்திரி......பிரச்சினை முடிந்தது....நல்லாட்சிக் காலம் அய்யா..

  • கருத்துக்கள உறவுகள்

இருந்து பாருங்கோ யாழ்ப்பாண பெடியளின்ட விளையாட்டை.....சர்வதேச கிரிக்கட் போட்டியும் நடத்த முடியுமோ? அப்படி நடக்கும் என்றால்,  அவுஸ்க்கும் சிறிலங்காவுக்கும் இடையில் நடக்கும் போட்டியை பிலாவில கள்ளு குடிச்சுகொண்டு,முதுகில சிங்க கொடியை போர்த்துகொண்டும் கையில் அவுஸ் கொடியும் பிடிச்சுகொண்டு பார்க்க .....விளையாட்டு தெய்வம் அருள் புரிய வேண்டும்.... 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, நவீனன் said:

திறப்பு விழா நிகழ்வின் போது காணொளிக் காட்சி மூலம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளதுடன்

ச்...சா நேரிலை வந்திருந்தால் கோட்டை முனியப்பர்ரை வாசல்லை விழுந்து கும்பிட்டிருக்கலாமெல்லே.. Rofl

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ச்...சா நேரிலை வந்திருந்தால் கோட்டை முனியப்பர்ரை வாசல்லை விழுந்து கும்பிட்டிருக்கலாமெல்லே.. Rofl

அண்ணே.....ஸ்கைபுக்குள்லாலேயே சுத்தி அவரிட்டை அனுப்பிற சனம் இப்ப யாழ்ப்பாணாத்திலை இருக்குது..

9 hours ago, nedukkalapoovan said:

ஒரே ஹிந்தியக் கொடியா

அது வெறும் ஹிந்தியக் கொடி இல்லை.

வரலாற்றில் மிகக் கொடிய அரச பயங்கரவாதிகளில் ஒருவனான அசோகனின் கொலைச் சக்கரத்தை தாங்கி ஈழ மண்ணில் பாரியதொரு இனப்படுகொலையை 25 வருடங்களுக்கு மேலாக நடத்திய வரலாற்றை சுமந்து எக்காளமிட்டு பறக்கும் கொடி.

அசோகனின் கொலைச் சக்கரத்தில் இருக்கும் 24 ஆரங்கள் அசுரர்களின் 24 மூர்க்க குணங்களைக் குறிக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

145 மில்லியன் ரூபாய்க்கு தகுந்த புனரமைப்பு வேலைகள் நடந்துள்ளமாதிரி தெரியலையே?

புல்வெளி, ஒளியமைப்பை தவிர எதுவும் புதுசா தெரியலை..சுற்றுச்சுவர் மதிலாவது  கட்டியிருக்கலாம்.

இந்த புனரமைப்பு விளையாட்டில் சம்பந்தப்பட்ட இரண்டு தமிழின விரோத அரசுகளும் சுமார்  100 மில்லியன் வரை கொள்ளையடித்திருப்பார்கள் என்று தெரிகிறது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.