Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் முஸ்லிம் மாணவர்களுக்கு எதிரான அடக்கு முறைகள் பல்கலைக்கழகங்களுக்கு பாய முனைந்த போது அறணாக நின்றது சிங்கள மாணவர்களே!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எடுத்தவுடனேயே “சிங்களவன் துவேசி” என்றும் கூறும் யாருடனும் நான் அதிகமாக பேசுவதில்லை: சிரித்துக்கொண்ட பேச்சை மாற்றிவிடுவேன்!

யாழ் பல்கலைக்கழக அசம்பாவிதம் இரண்டு நாட்களாக மனதில் ‘தி்க் திக்’ என்று அடிக்கிறது!

நீண்டகாலமாக கசிந்துகொண்டிருந்த நெருப்பு அது! வெடித்துவிட்டது!

தமிழ் மாணவர்கள் என்றுமே உணர்வுகளால் வேறுபட்டவர்கள்: நொந்து போனவர்கள் அவர்கள்!

பல்கலைக்கழகத்தின் உள்ளேயும் சரி வெளியேயும் சரி, மிகவும் சங்கடப்படுத்தப்படுபவர்கள்.

பகடிவதையின் உச்சத்தை தொடுமளவு மிகவும் பயங்கரமான தாக்குதல்களை கடந்துதான் அவர்கள் சாதிப்பது!

முஸ்லிம்கள் எந்தளவு மத கடமைகளுக்கு முக்கியம் கொடுப்பார்களோ அதே போன்றுதான் தமிழர்கள் கலாச்சாரத்திற்கு முக்கியம் கொடுப்பது!

நாங்கள் தொழுகயறை கேட்பது போல், அவர்கள் கோயில் கேட்பதில்லை!

அவர்களின் கலாச்சாரத்திற்கான முழு உரிமையை மட்டுமே அடையப்பார்பார்கள்!
எதையுமே ஓர் இழப்பு போலத்தான் பார்ப்பார்கள்: தமிழர்கள் என்ற தனித்துவ விடயத்தில் சிறிய விட்டுக்கொடுப்பகளையும் அநீதிகளாகத்தான் பார்ப்பார்கள்!:
ஆம் அவர்கள் கடந்து வந்த வரலாறு அப்படித்தான்: அவர்கள் கற்றுக்கொண்ட பாடம் அப்படித்தான்.

சிங்களவர்களோ எதையுமே அரசியல் ரீதியாக பார்ப்பவர்கள்: நாட்டுப்பற்று மிக்கவர்கள்: கடின உழைப்புக்கு தயங்காதவர்கள்: புத்தரை விட பௌத்தமதம் முக்கியம் என கருதுபவர்கள்: பௌத்த மதத்தை விட பௌத்த துறவிகளை மதிப்பவர்கள்: சிங்கள கலாச்சாரங்களை பேனுவது நாட்டைப் பாதுகாப்பதை போல் நினைப்பவர்கள்.

யாழ் பல்கலையில் இடம்பெற்ற ‘வெல்கம் பார்டி’ சம்பவம் தொடர்பாக பேசுவதற்கு முன் ஜ’புர பல்கலை பற்றி இரண்டு வரிகள் பேசியாக வேண்டும்.

10500 மாணவர்களுக்கு வெறும் 400 தமிழர்களும் 200 முஸ்லிம்களும் கல்வி கற்கும் ஓர் பல்கலைக்கழகம் ஜ’புர. 99% சிங்கள மரபுகளை பேனி அமைந்த ஓரு வளாகம். (சிங்கள பிரிவனாவாக இருந்த இடம்) ஆனால் அங்கு எந்த விழாவாக இருந்த போதிலும் அதில் தமிழ் தரப்புக்கு தாராளமாக களம் கொடுக்கப்படும்.

‘வெல்கம் பார்டி’களில் தமிழ் கலாச்சார நடனங்களும் சரி தமிழ் பண்பாடு பேனும் நிகழ்வுகளும் சரி தாராளமாகவே நடைபெறும்.

நடுச்சந்தியில் வைத்து பொங்கள் பொங்கவும்: நடு மண்டபத்தில் வைத்து சிவராத்திரி கொண்டாடவும் கூட அனுமதி உண்டு! புதுவருட கொண்டாட்டங்களிலும் தமிழர்களுக்கு பங்கு கொடுப்பதுண்டு!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கூட ஒரு சோசலிச போக்குடையது (ஜே.வி.பி. போல) அங்கு இனவாதம், பண வாதம், பிரதேச வாதங்கள் கிடையாது!

இப்படியான ஒரு பார்வையோடு யாழ் பல்கலைக்கழக சம்பவத்தை திரும்பிப்பார்ப்போமானால், நமக்கு பேரதிர்ச்சிதான் மிஞ்சும்! அங்கு இனவாதம் பல சந்தர்ப்பங்களில் தலைதூக்க முனைந்துள்ளது. இல்லை இல்லை தூண்டப்பட்டுள்ளது!

நான் முன்பு கூறியது போல தமிழர்கள் கலாச்சார விடயத்தில் ரொம்ப ஸ்டிரிக்ட் ஆனவர்கள். கலாச்சாரத்தை விடுதல் என்பது தமிழின ஒடுக்குதல் என்றே நினைப்பவர்கள். எனவே தான் அவர்கள் எமது மரபுகள் மாற்றப்படக்கூடாது என்று கூறிக்கொண்டுருத்தார்கள்!

ஆனால் சிங்களவர்களோ அவர்களின் கலாச்சாரம் நாட்டின் சரத்து சட்டம் என்ற ஓர் எண்ணுகை கொண்டவர்கள் என்பதால், அவர்களும் அதனை விட விரும்பவில்ல! அவர்களின் சிந்தனை அரசியல் ரீதியாக பாய்ந்துவிட்டது!

இங்குதான் தமிழர் முஸ்லிம்கள் ஆகிய நாம் மிகவும் காருண்யமாக நடந்து கொள்ள வேண்டும்.

விட்டுக்கொடுத்தல் என்றுமே நடக்கக்கூடாது தான் ஆனால் அவர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அவர்களுக்கும் சந்தர்ப்பங்கள் கொடுக்கப்பட வேண்டும். அதே நேரம் நாமும் நமது கலாச்சாரத்தை பேன வேண்டும்!

தமிழ்பேசும் மாணவர்கள் சிறுபான்மையாக இருக்கும் பல்கலைக்கழகங்களில் அவர்கள் பின்பற்றும் ஒழுக்க நெறிகளை நாமும் பின்பற்ற வேண்டும்!

அவர்கள் துவேசிகள் அல்லர்: மாறாக அதிதீவிர இலங்கை பற்றர்கள்!
நமக்கும் சேர்த்துத்தான் அவர்கள் போராடுவது.

சப்ரகமுவவில் ஒரு தமிழ் மாணவனை புலிப்பயங்கரவாதியாக கைது செய்த போது வீதிக்கிறங்கியத சிங்களவர்களே!

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்கு முறைகள் பல்கலைக்கழகங்களுக்கு பாய முனைந்த போது அறணாக நின்றது சிங்களவர்களே!

மொழி சம உரிமைக்கும் இன்னும் பல சம உரிமைக்கும் குரல் கொடுப்பது சிங்களவர்களே!

நாம் பல வகையில் அவர்களுக்கு கடமைப்பட்டவர்கள் சகோதரர்களே!
சின்னஞ்சிறிய மாணவர் கலகங்கள் எல்லாம் அரசியலாக்கப்படும் மிகவும் மோசமான ஓரு சூழலி்ல் நாம் வாழ்த்துகொண்டிருக்கின்றோம்!
மீண்டும் பிளவுகளும் சச்சரவுகளும் நமது பூமியில் வேண்டாம்!

விட்டுக்கொடுக்க மாட்டோம்: ஆனால் சேர்த்து நடப்போம்!

-VIM. IMRATH-

http://metromirror.lk/

  • கருத்துக்கள உறவுகள்

மொரட்டுவையில் வைத்து தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்ட போது.. பேராதெனியாவில் விடுதியில் வைத்து தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்ட போதும்.. கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா நடத்த அனுமதி கிடைக்காத போதும்... இவர் எந்த பள்ளி அறையில் தொழுதுகிட்டு இருந்தவர். 

முதல்ல.. ***  உள்ளதை உள்ளபடி பேசிப் வெளிக்கொணர்தால் தான் மனங்களுக்குள் கிடக்கும் குரோதங்களை அகற்ற வழி கண்டுபிடிக்கலாம். அதை மறைச்சு மறைச்சு போலி நல்லிணக்கம்.. சமாதானம்.. இன ஐக்கியம்.. ஐக்கிய இலங்கை என்று கொண்டு சிங்கள பெளத்த மேலாதிக்கத்தை நிறுவுவதையும் இஸ்லாமிய முஸ்லீம் மதவெறியை பரப்புவதையும் தமிழர்கள் அப்படியே ஏற்றுக் கொண்டு வாழாதிருக்கனுன்னு எந்த அவசியமும் இல்லை.

தமிழர்களின் நிலமும் உரிமையும் கலை கலாசார பண்பாடும்.. மற்றவர்களால்.. மதிக்கப்படும்.. என்றால்  தமிழர்களும் அதனை மற்றவர்களிடம் மதிப்பர். tw_blush:

Edited by nedukkalapoovan

කණිෂ්ක ජයලත්'s photo.
කණිෂ්ක ජයලත්'s photo.
කණිෂ්ක ජයලත්'s photo.
කණිෂ්ක ජයලත් added 3 new photos.
8 hrs · 
 
 · Education

Diversity makes us beautiful.. Appreciating and respecting each others cultural values doesn't make you a lesser being.Only rejection and hate does.
captures from 2014 University of Peradeniya Faculty of Science 
with love-pera

LikeShow more reactions
CommentShare
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் இருக்கும் எங்களுக்கு ஏன் யாழ் மாணவர்கள் பற்றிய கவலை. இங்கிருக்கும் எவரும் அங்கு போக போவதில்லை. நெடுக்ஸ் உம்மையும் நான் பல தடவை கேட்டு போட்டன்.

இங்கு இருக்கும் எம் பிள்ளைகள் தமிழை முற்றாக விடத்தான் போகிறார்கள். தமிழ் கலாசாரம் கூட விட்டு போகத்தான் போகுது. நாளை வேறு இனத்தை கல்யாணம் கட்டி வீட்டுக்குள் கொண்டு வரத்தான் போகுதுகள். அதை ஏற்கத்தான் போகுறோம்.

இங்குள்ள சீன, வெள்ளை, கறுப்பினத்தவர்களை விட சிங்களவன் எவ்வளவோ மேல்.  இதை உணர்ந்து சிங்களவனையும்  சகோதரனாக ஏற்று வாழ்வதுதான் சிறந்ததது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, M.P said:

வெளிநாட்டில் இருக்கும் எங்களுக்கு ஏன் யாழ் மாணவர்கள் பற்றிய கவலை. இங்கிருக்கும் எவரும் அங்கு போக போவதில்லை. நெடுக்ஸ் உம்மையும் நான் பல தடவை கேட்டு போட்டன்.

நாங்கள் உள்நாட்டில் சிங்களவனோடு இருந்து எல்லாம் அனுபவிச்சிட்டுத்தான் வந்தனாங்கள். எங்களுக்குப் புதுப்பாடம் தேவையில்லை. அன்றைய நாட்களில் அம்மையார் சந்திரிக்கா.. கொழும்பில் பொங்கல் பொங்கினவா.. ஆனால்.. கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பொங்கலுக்குத் தடை. அதேபோல் மொரட்டுவவில் தமிழர் வாணி விழாவுக்குத் தடை. பேராதெனியாவில் தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல். மொரட்டுவவில் தாக்குதல். இதை எல்லாம் கடந்து.. பட்டமளிப்பு விழாவில்.. கண்டிய நடனத்தை விரும்பாமலே திணிக்க ஏற்று பட்டம் கிடைத்தால் போதும் என்று தான் வந்தனாங்கள்.

அதேவேளை.. 1998 இல் கொழும்பில் பல்கலைக்கழக மட்டத்தில் வன்னியில்.. இடம்பெயர் மக்களுக்கு உலர் உணவு சேர்த்த போது புலிக்கு அனுப்பிறாங்கள் என்று அதைத் தடுத்தவையும் உண்டு. ஆனாலும்... அன்று எங்களோடு சில சிங்கள மாணவர்கள் கூட இருந்தார்கள். முஸ்லீம்கள் கூட நிற்கவே இல்லை. ஆனால் தினமும் கன்ரீனில் ஓசி ரீக்கு முன்னும் பின்னும் திரிந்தவங்கள்... இப்படியான ஆக்கள்.. தமிழர் சார்ந்த மனித நேயம் என்றதும்... விலகி ஓடியவர்களை எல்லாம் நாம் கண்டு தான் வந்துள்ளோம்.

அன்றைய பொழுதுகளில் அமரர் மகேஸ்வரன் படிச்சவரோ இல்லையோ.. சில உதவிகளை வவுனியா வரை கொண்டு போய் சேர்க்க உதவியவர். ஒரு முஸ்லீம் அமைச்சரோ.. சிங்கள அமைச்சரோ (ஜெயலத் ஜெயவர்னாவதைத் தவிர) அதைச் செய்ய முன்வரவில்லை. 

அந்த ஓரிரு சிங்கள மனிதாபிமானிகளை வைச்சுக் கொண்டு ஒட்டுமொத்த சிங்களவனையும் எடபோடக்கூடாது. ஏனெனில்.. தமிழ் பகுதிகளுக்கு உணவு அனுப்ப உதவி செய்தவர்களில் 90% தமிழ் மாணவர்கள். தமிழ் பேசும் முஸ்லீம்கள் என்போர் முற்றாக அப்சென்ட். தமக்கும் அதுக்கும் சம்பந்தமில்லாத மனிதர்களாக நின்றார்கள். இவற்றை எல்லாம் கடந்து தான் நாங்கள் வந்திருக்கிறம்.

அதனால்.. எங்களுக்கு இதொன்னும் புதிதல்ல.

இன்னும் மாறாத ரணங்களை எம்மினம் மீது திணிக்கிறார்கள் என்ற ஆதங்கம் தான் அதிகம். இத்தனை இழப்புகளின் பின்னும்.. இந்த உலகம் கூட எமது மக்களின் நியாயங்களைப் புரிந்து கொள்ள எம்மவரே குரல்கொடுக்க தயங்குவதை தான் நாம் கண்டு இப்போ அதிகம் ஆதங்கப்படுகிறோம். 

எங்களைப் பொறுத்த வரை யாரையும் சகோதரனாக ஏற்கனுன்னு அவசியமில்லை. வலிந்து நல்லிணக்கம் காணனும் என்றில்லை. இது சுதந்திர மக்களுக்கான பூமி. 21ம் நூற்றாண்டு. எமது தனித்துவத்தோடு எம்மை எம் மண்ணில் வாழவிட்டால் போதும். நாங்கள் வாழ்ந்து காட்டுவோம். சீனன் கறுப்பன்.. வேணான்னா.. எதுக்கு அவங்கள் இருக்கும் இடங்களில் போய் இருக்கிறீர்கள். தமிழன்.. நாதஸ்வரம் பிடிக்கல்லைனா.. எதுக்கு யாழ்ப்பாணமோ.. கிழக்குப் பல்கலைக்கோ போகிறீர்கள்..??! tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பழசை மறந்திட்டு இந்த நிமிடத்திலிருந்து புதுசா சிந்திக்க வேணுமாம் தமிழன்....மட்டும்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, hasan said:
කණිෂ්ක ජයලත්'s photo.
කණිෂ්ක ජයලත්'s photo.
කණිෂ්ක ජයලත්'s photo.
කණිෂ්ක ජයලත් added 3 new photos.
8 hrs · 
 
 · Education

Diversity makes us beautiful.. Appreciating and respecting each others cultural values doesn't make you a lesser being.Only rejection and hate does.
captures from 2014 University of Peradeniya Faculty of Science 
with love-pera

LikeShow more reactions
CommentShare

யார்தான் என்னதான் டிராமா போட்டாலும் சிங்கள ஆட்சி அதிகாரத்தின் அடிநாதம் என்பது.. தமிழர்களையும் சிங்களவர்களையும் இத்தீவில் இருந்து இயன்றவரையில் விரட்டியடிப்பது ஒன்றுதான்.. :shocked:

43 minutes ago, இசைக்கலைஞன் said:

யார்தான் என்னதான் டிராமா போட்டாலும் சிங்கள ஆட்சி அதிகாரத்தின் அடிநாதம் என்பது.. தமிழர்களையும் சிங்களவர்களையும் இத்தீவில் இருந்து இயன்றவரையில் விரட்டியடிப்பது ஒன்றுதான்.. :shocked:

அப்ப, இஸ்லாமிய சகோதரர்களும் தமிழரென்றால் வேடர்களும், மலே, பறங்கியர்களும்தான் எதிர்காலத்தில் இலங்கையில் மிஞ்சுவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ஜீவன் சிவா said:

அப்ப, இஸ்லாமிய சகோதரர்களும் தமிழரென்றால் வேடர்களும், மலே, பறங்கியர்களும்தான் எதிர்காலத்தில் இலங்கையில் மிஞ்சுவார்கள். 

மன்னிக்க வேண்டுகிறேன்.. tw_blush:  இஸ்லாமியர்கள் என்று எழுதிறதுகுப் பதிலாக சிங்களவர்கள் என்று எழுதிவிட்டேன்.. :shocked:

1 minute ago, இசைக்கலைஞன் said:

மன்னிக்க வேண்டுகிறேன்.. tw_blush:  இஸ்லாமியர்கள் என்று எழுதிறதுகுப் பதிலாக சிங்களவர்கள் என்று எழுதிவிட்டேன்.. :shocked:

தெரியும் சும்மா பகடிக்குதான் எழுதினான் :grin:

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, இசைக்கலைஞன் said:

மன்னிக்க வேண்டுகிறேன்.. tw_blush:  இஸ்லாமியர்கள் என்று எழுதிறதுகுப் பதிலாக சிங்களவர்கள் என்று எழுதிவிட்டேன்.. :shocked:

கவனம் பாஸ் இல்லாவிட்டால் டங்குவாரை அறுத்து தொங்க விடுவார்கள் ??

Edited by முனிவர் ஜீ

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, M.P said:

வெளிநாட்டில் இருக்கும் எங்களுக்கு ஏன் யாழ் மாணவர்கள் பற்றிய கவலை. இங்கிருக்கும் எவரும் அங்கு போக போவதில்லை. நெடுக்ஸ் உம்மையும் நான் பல தடவை கேட்டு போட்டன்.

இங்கு இருக்கும் எம் பிள்ளைகள் தமிழை முற்றாக விடத்தான் போகிறார்கள். தமிழ் கலாசாரம் கூட விட்டு போகத்தான் போகுது. நாளை வேறு இனத்தை கல்யாணம் கட்டி வீட்டுக்குள் கொண்டு வரத்தான் போகுதுகள். அதை ஏற்கத்தான் போகுறோம்.

இங்குள்ள சீன, வெள்ளை, கறுப்பினத்தவர்களை விட சிங்களவன் எவ்வளவோ மேல்.  இதை உணர்ந்து சிங்களவனையும்  சகோதரனாக ஏற்று வாழ்வதுதான் சிறந்ததது.

பாவம்  நீங்க ...

சொந்த வீட்டுக்கும் வாடகை வீட்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் நடிக்கிறீர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பிறந்து வெளிநாட்டில் வாழும் எங்களுக்கு இலங்கை சொந்த வீடு வெளிநாடு வாடகை வீடு. எங்கள் பிள்ளைகளுக்கு  வெளிநாடு சொந்த வீடு இலங்கை வாடகை வீடு கூட இல்லை. இதுதான் யதார்த்தம்.

நாங்கள் இலங்கைக்கு போக கூடிய சுமூக நிலைமை இப்ப இருக்கும் போது கூட போக விருப்பம் இல்லை. அதுக்கு வேறு பல காரணங்கள். உண்மையில் அங்கு போனால் வசதியான வாழ்க்கை இல்லை என்பது தான் உண்மை. இங்கை கக்கூசு கழுவினாலும் காரில் போய் கழுவுறம். அங்கை வாழியுடன் நடந்து தான் போகணும். அங்கை வேலை இல்லா பிரச்சனை. இப்படி பல.

இஸ்ரேல் காரன் தனக்கு என்று ஒரு நாடு வேணும். அப்படி இருந்த்தால் தான் தன் மொழி, கலாசாரம் நிலைக்கும்  என உணர்ந்து இஸ்ரேலை உருவாக்கினான். நாங்கள் அங்க போர் முடிந்த பிறகு கூட போவதுக்கு தயார் இல்லை. பிறகு எங்க தமிழன் இலங்கையில் இருக்க போறன். 

சிங்களவன் யாழ்ப்பாணம் வரத்தான் போறன். எங்கள் பிள்ளைகள் அதை பற்றி கவலைப்பட போவதும் இல்ல. நாங்கள் கொஞ்ச நாளில் மரணித்து விடுவோம். இதுதான் யதார்த்தம். வேலாயுதம் மேரி, வேலாயுதம் சாசுமுஷா (chinese) என்பதுதான் எங்கள் பரம்பரை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, putthan said:

பழசை மறந்திட்டு இந்த நிமிடத்திலிருந்து புதுசா சிந்திக்க வேணுமாம் தமிழன்....மட்டும்

அடிகிற கைதான் அணைக்கும். சிங்களவன் சொக்கத்தங்கம்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, M.P said:

இலங்கையில் பிறந்து வெளிநாட்டில் வாழும் எங்களுக்கு இலங்கை சொந்த வீடு வெளிநாடு வாடகை வீடு. எங்கள் பிள்ளைகளுக்கு  வெளிநாடு சொந்த வீடு இலங்கை வாடகை வீடு கூட இல்லை. இதுதான் யதார்த்தம்.

நாங்கள் இலங்கைக்கு போக கூடிய சுமூக நிலைமை இப்ப இருக்கும் போது கூட போக விருப்பம் இல்லை. அதுக்கு வேறு பல காரணங்கள். உண்மையில் அங்கு போனால் வசதியான வாழ்க்கை இல்லை என்பது தான் உண்மை. இங்கை கக்கூசு கழுவினாலும் காரில் போய் கழுவுறம். அங்கை வாழியுடன் நடந்து தான் போகணும். அங்கை வேலை இல்லா பிரச்சனை. இப்படி பல.

இஸ்ரேல் காரன் தனக்கு என்று ஒரு நாடு வேணும். அப்படி இருந்த்தால் தான் தன் மொழி, கலாசாரம் நிலைக்கும்  என உணர்ந்து இஸ்ரேலை உருவாக்கினான். நாங்கள் அங்க போர் முடிந்த பிறகு கூட போவதுக்கு தயார் இல்லை. பிறகு எங்க தமிழன் இலங்கையில் இருக்க போறன். 

சிங்களவன் யாழ்ப்பாணம் வரத்தான் போறன். எங்கள் பிள்ளைகள் அதை பற்றி கவலைப்பட போவதும் இல்ல. நாங்கள் கொஞ்ச நாளில் மரணித்து விடுவோம். இதுதான் யதார்த்தம். வேலாயுதம் மேரி, வேலாயுதம் சாசுமுஷா (chinese) என்பதுதான் எங்கள் பரம்பரை.

உங்களுக்கு பதில் எழுதுவதே நேரவிரயம்

உங்களுடைய மேல் கருத்திலேயே பதில்களும் உண்டு

முதலில் சொந்த நாட்டுக்காரர் தான் தனது உரிமையை தனது நிலத்திலிருந்து கேட்கிறான்

அது தான் திரி.

தொழிலை கேவலமாக பார்க்கும் 

உங்கள மாதிரி ஆட்களை வைத்துக்கொண்டு

தமிழீழம் எடுத்து என்ன செய்வது??

எப்படி எடுப்பது??

இசுரேல் காரனிடம் இந்த குணம் அறவே கிடையாது

அதை முதலில் புரியப்பாருங்கள்

இசுரேல் பற்றி பேசமுன்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, M.P said:

இஸ்ரேல் காரன் தனக்கு என்று ஒரு நாடு வேணும். அப்படி இருந்த்தால் தான் தன் மொழி, கலாசாரம் நிலைக்கும்  என உணர்ந்து இஸ்ரேலை உருவாக்கினான். நாங்கள் அங்க போர் முடிந்த பிறகு கூட போவதுக்கு தயார் இல்லை. பிறகு எங்க தமிழன் இலங்கையில் இருக்க போறன். 

இஸ்ரேல் வரலாறு உவ்வளவுதான் தெரியுமோ? இல்லாட்டி இன்னும் கனக்க தெரியுமோ?:cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

அடிகிற கைதான் அணைக்கும். சிங்களவன் சொக்கத்தங்கம்

யார் இல்லையென்று சொன்னது...என்ன கொஞ்சம் இறுக்கி அணைக்கினம் அது சனத்திற்கு நோகுதாம் tw_tounge_wink:இந்தியாவும் அணைக்கும்,அமேரிக்காவும் அணைக்கும் வையளும் சொக்கதங்கம் தான்tw_tounge_wink:

  • கருத்துக்கள உறவுகள்

எம்பிக்கு புலத்தில கஸ்டப்பட்டு இரண்டு,மூன்று வேலை செய்து உழைக்கிற கக்கூஸ் கழுபுபவன் மீது பொறாமை...அவர்கள் கக்கூஸ் கழுவி 2 வீடு,2 கார் என்று வைத்திருக்க தான் நன்றாக படித்தும்,நல்ல வேலையில் இருந்தும் அவர்கள மாதிரி வசதியாக வாழ முடியவில்லை என்ட எரிச்சல் அவரது பல கருத்துக்களில் தெரியுது...காரில போய் கக்கூஸ் கழுவுவது அவ்வளவு கேவலமா உங்களுக்கு?...உங்கள மாதிரி ஆட்கள் தான் காரில போகோனும்,கக்கூஸ் கழுபவன் நடந்து அல்லது பஸ்சில போகனும்...டிப்பிக்கல் ஊர் மென்டாலிட்டி...என்ன தான் புலம் பெயந்தாலும்,படித்து நல்ல வேலையில் இருந்தாலும் அது மட்டும் மாறவே மாறாது.

இஸ்ரேல்காரனைப் பற்றி கதைக்கும் இவர்கள் முதலில் சக தமிழனை பார்த்து பொறாமைப்படுவதை,எரிச்சல் படுவதை நிப்பாட்டி கடுமையாக உழையுங்கள்.நீங்களும் முன்னேறலாம். அதன் பின்னர் இஸ்ரேல்காரனது ஒற்றுமை பற்றிக் கதைக்கலாம்.

ஊருக்குப் போக விரும்புவர்கள் போய்க் கொண்டு தான் இருக்கிறார்கள். போக விருப்பமில்லாதவர்கள் இருக்கட்டுமேன். அதைப் பற்றி உங்களுக்கு என்ன வந்தது?...புலத்தில பிறந்த உங்கட பிள்ளைகள் வேண்டுமானால் நீங்கள் பிறந்த நாட்டைப் பற்றி அக்கறை இல்லாமல் இருக்கட்டும்.ஆனால்,உங்கட பிள்ளைகள் மாதிரி மற்றப் பிள்ளைகளையும், வருங்கலாத் தலைமுறையையும் நினைக்க வேண்டாம்.

அவுசில் இருந்து கொண்டும் நீங்கள் பாரிசில் நடக்கின்ற தீவிரவாதம்,அமெரிக்கத் தீவிரவாதம் கதைக்கலாம் என்டால் நாங்கள் எங்கட நாட்டைப் பற்றிக் கதைக்க கூடாது?...ஒரு நாட்டால் சம்மந்தம் இல்லாத இன்னொரு நாட்டை ஆட்டு வைக்க முடியும் என்டால் ஏன் நாங்கள் செய்ய முடியாது?

என்ன செய்ய வேண்டும் என்று இறுதி முடிவு எடுப்பது எப்பவும் ஊரில் இருக்கும் மக்கள் தான்.ஆனால்,அவர்களுக்கு ஆலோசனையும்,உதவியும் வழங்கும் சகல் உரிமைகளும் புலத்து மக்களுக்கு உண்டு. அதை யாராலும் தடுக்க முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
47 minutes ago, ரதி said:

என்ரை தங்கச்சியெல்லே  Super

12743973_946393912081631_755308778841041
 
Kiri Shanth
15 hrs · 
 
தமிழ் மாணவர்களை தாக்குவதாய் இருந்தால் எமது பிணத்தை கடந்தே செல்ல வேண்டும்-- சிங்கள மாணர்கள்
1983 ஜூலைக் கலவரத்தின்போது, சிங்கள மாணவர்கள் ஒன்றுகூடி பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கற்றுக்கொண்டிருந்த தமிழ் மாணவர்கள் அனைவரையும் கொண்டுவந்து அக்பர் விடுதியில் சேர்த்தனர். மண்டபத்தைச் சுற்றி பாதுகாப்பு அரண்கள் அமைத்தனர். வீதித் தடைகளை போட்டனர்.

"இவர்கள் அத்தனைபேரும் எங்கள் உடன்பிறப்புக்கள். எங்கள் உயிர்களைக் காப்பதுபோல இவர்களையும் பாதுகாப்போம். இவர்களை நீங்கள் நெருங்கவேண்டுமெனில் அது எங்கள் பிணங்களின் மேலால் சென்றால்தான் முடியும்" என்று தமிழர்களைத் தாக்க அலைந்துகொண்டிருந்த சிங்கள இனவாதிகளை நோக்கி சிங்கள மாணவர்கள் கூறினர்.
அவ்வறுதான் சிங்கள மாணவர்கள் அன்று தம் சகோதர தமிழ் மாணவர்களைக் காப்பாற்றினார்கள். யாழ் பல்கலைக் கழகத்து சகோதரர்களே நீங்கள் படிக்கும் வரலாறுகளோடு சேர்த்து இந்த வரலாற்றையும் படியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, குமாரசாமி said:

என்ரை தங்கச்சியெல்லே  Super

எனக்கும் தான் !!!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, hasan said:
12743973_946393912081631_755308778841041
 
Kiri Shanth
15 hrs · 
 
தமிழ் மாணவர்களை தாக்குவதாய் இருந்தால் எமது பிணத்தை கடந்தே செல்ல வேண்டும்-- சிங்கள மாணர்கள்
1983 ஜூலைக் கலவரத்தின்போது, சிங்கள மாணவர்கள் ஒன்றுகூடி பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கற்றுக்கொண்டிருந்த தமிழ் மாணவர்கள் அனைவரையும் கொண்டுவந்து அக்பர் விடுதியில் சேர்த்தனர். மண்டபத்தைச் சுற்றி பாதுகாப்பு அரண்கள் அமைத்தனர். வீதித் தடைகளை போட்டனர்.

"இவர்கள் அத்தனைபேரும் எங்கள் உடன்பிறப்புக்கள். எங்கள் உயிர்களைக் காப்பதுபோல இவர்களையும் பாதுகாப்போம். இவர்களை நீங்கள் நெருங்கவேண்டுமெனில் அது எங்கள் பிணங்களின் மேலால் சென்றால்தான் முடியும்" என்று தமிழர்களைத் தாக்க அலைந்துகொண்டிருந்த சிங்கள இனவாதிகளை நோக்கி சிங்கள மாணவர்கள் கூறினர்.
அவ்வறுதான் சிங்கள மாணவர்கள் அன்று தம் சகோதர தமிழ் மாணவர்களைக் காப்பாற்றினார்கள். யாழ் பல்கலைக் கழகத்து சகோதரர்களே நீங்கள் படிக்கும் வரலாறுகளோடு சேர்த்து இந்த வரலாற்றையும் படியுங்கள்.

 நல்லாக சொன்னிர்கள். நான் பழகிய சிங்கள நண்பர்கள் நல்லவர்கள். எங்களில் இருக்கும் சில காட்டு மிராண்டிகள் மாதிரி அவங்களிலும் சிலர் இருப்பார்கள். அதை விலத்தி நடப்பது எங்கள் திறமை.

4 hours ago, ரதி said:

எம்பிக்கு புலத்தில கஸ்டப்பட்டு இரண்டு,மூன்று வேலை செய்து உழைக்கிற கக்கூஸ் கழுபுபவன் மீது பொறாமை...அவர்கள் கக்கூஸ் கழுவி 2 வீடு,2 கார் என்று வைத்திருக்க தான் நன்றாக படித்தும்,நல்ல வேலையில் இருந்தும் அவர்கள மாதிரி வசதியாக வாழ முடியவில்லை என்ட எரிச்சல் அவரது பல கருத்துக்களில் தெரியுது...காரில போய் கக்கூஸ் கழுவுவது அவ்வளவு கேவலமா உங்களுக்கு?...உங்கள மாதிரி ஆட்கள் தான் காரில போகோனும்,கக்கூஸ் கழுபவன் நடந்து அல்லது பஸ்சில போகனும்...டிப்பிக்கல் ஊர் மென்டாலிட்டி...என்ன தான் புலம் பெயந்தாலும்,படித்து நல்ல வேலையில் இருந்தாலும் அது மட்டும் மாறவே மாறாது.

எனக்கு பொறாமை என்பதை விட அப்படியானவர்கள் பலர் வெளிநாட்டில் இருந்தால்தான் கார் ஓடலாம், படம் காடடலாம் என்ற மாயையில் வாழ்கிறார்கள். வசதி வாழ்க்கை மற்ற எல்லாத்தையும் மறைச்சு போட்டுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.