Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவை யாழில் கண்டேன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பான்ஞ்,உங்கள் ப்யணக் கட்டுரை நன்றாக போகுகின்றது.தொடருங்கள்...ஜீவன்சிவா ஒரு கோப்பி குடிப்பதற்காக உங்களை "பழமுதிச்சோலை" வரச் சொன்னது ரொம்ப ஓவர். அதை ஒரு சாதரண கடையிலையே குடித்திருக்கலாம்.

  • Replies 67
  • Views 9.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Paanch said:

-----

நேரம் கடந்தது. ஓசியில், ஏசியில் வந்து குந்தியுள்ளானோ...? கல்லாப்பெட்டியில் இருந்தவரின் பார்வை என்மீது பதிந்துசென்றது. என் தோற்றம் என்ன தெரிவித்ததோ? எதுவும் சொல்லவில்லை. குனிந்து ஏதோ எழுதத் தொடங்கினார்.------- :grin:

ஆட்டோகிராப் படத்தில் வரும் சேரனைப்போன்ற தோற்றத்தில், காய்ந்து கறுத்த உருவம்,உருவத்திற்கேற்பப் படியாது நிமிர்ந்து நின்ற கிராப்பு, அழகாகக் கத்தரித்து விடப்பட்ட மீசை, தாடி. வந்தவர் இறங்கி வண்டியைத் தாங்குகாலில் நிறுத்தினார்.----- 

கற்பனை செய்திருந்த உருவம் ஏமாற்றிவிட்டது. யாழ்ப்பாணத்தில், அந்த மண்ணின் பராமரிப்பில் இயற்கையோடு இணைந்து வாழுபவர்களை அங்கு வயல், தோட்டம், சந்தைகளில் அதிகமாகக் காணலாம். அப்படியான ஒரு தோற்றத்தோடு வருகைதந்த ஜீவன் சிவா அவர்களைச் சற்றுக் குனிந்து கைலாகுகொடுத்து வரவேற்றேன். சின்ன உருவம். சிறிது நிமிர்ந்து பார்த்துப் புன்னகை செய்தார். இருங்கள் வரவேற்றுவிட்டு, அருகில் இருந்த உணவுவகைப் பட்டியலை எடுத்து முன்வைத்தேன். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்?“ சிவாவை நோக்கினேன். இதனைப் பார்த்துக்கொண்டிருந்த பையன் விழுதடித்து ஓடிவந்தான். விருந்துக்கு அழைத்த உறவை வீட்டுக்கு அழைத்து விருந்தளிக்க எனக்கு அங்கு சொந்தமாக வீடில்லை. ஆகையால் பழமுதிர்சோலை உணவகத்தில் அவர் போதும் போதும் என்னும்வரையில் விருந்தளிக்க முடிவுசெய்திருந்தேன். ஒரு காப்பி போதும். இல்லை குளிராக ஏதாவது குளிர்களியுடன்கூடிய சர்பத் அது இது என்று விலைகூடிய பண்டங்களின் பகுதியைக் காட்டினேன். இல்லை இல்லை காப்பிமட்டும் போதும். ஒருமுறை மறுத்தால் மறுமுறை கேட்டுத் திணிக்கும் பழக்கம் எனக்கு யேர்மனியில் வாழ்ந்து அற்றுப்போய்விட்டதால், எனக்கும் ஒரு காப்பி தருமாறு கேட்டுக்கொண்டேன். பையன் முகம் சப்பென்று போய்விட்டது. இதற்காகத்தானா இத்தனைநேரம் ஏசியை ஓசியில் அனுபவித்தீர்கள் என்று அவன் ஏளனம் செய்வதுபோல் இருந்தது.

------ ஜீவன் சிவா எப்படிப் பிறந்தமண்ணின், குணம், மணம், தோற்றம் எதுவுமே மாறாமல்.... அதிசயித்தேன்...!

------நலிந்தவர்களுக்கு அவர் செய்யும் உதவிகளை அடக்கமாகவே செய்துவருவதும் பேச்சுக்களில் தெரிந்தது. :)

------காப்பி குடித்துமுடித்து நான் எழுவதற்கு முன்பாகவே பரபரப்புடன் எழுந்தவர் அதற்குரிய பணத்தைச் செலுத்திவிட்டார். தடுப்பதற்கு வினாடி நேரம்கூடத் தரவில்லை. பையனுக்கு ஏதாவது கொடுப்போம் என்று நான் எண்ணியிருந்ததை அவர் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை, பையன் முகத்தைப் பார்க்காமலே உணவகத்தைவிட்டு வெளியேறினேன். உறவைச் சந்தித்த மகிழ்வுடன் வெளியே வந்தபோது அனல்பறக்கும் வெயிலினூடே காற்றும் சிறிது பலமாக வீசியது. சந்தித்த மகிழ்ச்சி மாறுவதற்கு முன்னே பிரிவதற்கான நேரமும் வந்தது. பிரிவதற்காகக் கைலாகு கொடுத்தவேளையில் வீசிய காற்று அவரது துவிச்சக்கர வண்டியைக் கீழே தள்ளி விழுத்தியது. அருகேநின்ற நான் பதறிப்போய் அதனைத் தாங்கிப் பிடிக்கச்செல்லுமுன் வண்டி விழ்ந்துவிட்டது. கவலைவேன்டாம் பாஞ், இனிமேல் அதுவிழாது, விழ்வதற்கும் முடியாது.“  எந்தப் பதட்டமும் இன்றி புன்சிரிப்போடு கூறினார். எத்தனை பெரியதத்துவம்தான் அதற்குள்...!! தமிழன் விழுந்துவிட்டான். இனிமேல் விழ இடமில்லை எனும்போது.... அடுத்தது முடிவுதானே! ஒரு முடிவு வந்துதான் ஆகவேண்டும். பிறந்தமண்ணில் மக்களோடு மக்களாகப் பலநாட்கள் தங்கி வாழும் ஒருவர்....! விடுமுறையைக் கழிக்க வந்துசெல்லும் ஒருவர்போல் நான்.....!! யாழுறவு ஜீவன் சிவா என்மனதில் உயர்ந்து உறைந்தார். Originalbild anzeigen

ஆங்காங்கே... நகைச்சுவை எழுத்துக்களுடன், ஜீவன் சிவாவின்  சந்திப்பை பற்றி அழகாக எழுதிய பயணக் கட்டுரை பாஞ்ச் அண்ணை.:)

உங்களை விட வேகமாக... ஜீவன் சிவா பணம் செலுத்த, கல்லாப் பெட்டிக்கு போனதை நினைக்க சிரிப்பு வந்து விட்டது. :grin:
ஏனென்றால்.... இங்கு சில இடங்களில் உங்களுடன் செல்லும் போது.... காருக்கு பெற்றோல் அடித்துக் கொண்டு இருக்கும் போதே,  நீங்கள் வேகமாக கல்லாப் பெட்டிக்கு போய், பணத்தை செலுத்தி   விடுவீர்கள், அந்த நேரம் எனக்கு இருந்த   நிலையை யோசித்துப் பார்த்தேன்.

பழமுதிர் சோலையில் வேலை செய்த பையன்... ஏமாற்ற மடைந்தது தான் சிறிய கவலையாக  உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஜீவன் சிவா said:

ஆமா 

கங்காரு மாதிரி வயித்தில் இல்லை, முதுகில்.

அதில் எப்பவும் எனது கேமராவும், தண்ணிப் போத்தலும், கொஞ்சம் முகம் துடைக்கும் கடதாசிகளும் இருக்கும்.

---------

நன்றி பாஞ்ச்.

சந்திப்பை சுவையாக எழுதியிருந்தீர்கள். ஆனாலும் நான் 6/8 நிமிடம்தானே பிந்தி வந்தேன். காரணம் மகளின் தொலைபேசி என்றும் கூறியிருந்தேன். அதுக்காக இப்படி வாரக்கூடாது.:grin:

எப்படியாயினும் கருத்துக்களால் வேறுபட்டாலும் நாம் அனைவரும் நண்பர்களே என்பதை உங்கள் சந்திப்பு எனக்கு அடித்து சொல்லியதை நான் மறக்கவே மாட்டேன்.

மிகவும் இனிமையான ஒரு மனிதரை சந்தித்தித்தது மிகவும் சந்தோசம் - எனது முகமறிந்த நண்பர் குழாமில்  நீங்களும் சேர்ந்து விட்டீர்கள்.

வாழ்க நீடூழி.

அட... ஜீவன் சிவாவின் முதுகுப் பையில்,  கமெரா இருந்திருக்குது. WeblogSmileyCamera.gif
அப்ப கட்டாயம் படம் எடுத்து இருப்பீங்கள் தானே...  :grin:
ஜீவன் சிவா... சேரன் மாதிரி இருக்கிறாரா என்று நாங்களும் உறுதிப்  படுத்த, அந்தப் படத்தை விரைவில் இணைக்கவும்.  rgb lol emoticonlol text fonts emoticon

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

பான்ஞ்,உங்கள் ப்யணக் கட்டுரை நன்றாக போகுகின்றது.தொடருங்கள்...ஜீவன்சிவா ஒரு கோப்பி குடிப்பதற்காக உங்களை "பழமுதிச்சோலை" வரச் சொன்னது ரொம்ப ஓவர். அதை ஒரு சாதரண கடையிலையே குடித்திருக்கலாம்.

Bildergebnis für smiley sleeping

நித்திரையா.....? என் செல்ல ரதியே! துயில்லெழுப்பத் தாதியர்கூட இல்லையா....! கட்டுரை முடிந்து 6 மணித் துளிகள் வீழ்ந்ததுகூடத் தெரியாது உறங்கும் அளவிற்கு, என் கட்டுரை தங்களைத் தாலாட்டி விட்டதே சோதரி. :(

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் : ஜீவன்சிவா சேரன் மாதிரி வந்தார் .....! அவர் சேரனேதான் ....!

யோகர் சுவாமிகள் "தவமாய் தவமிருந்த " பூமியாம் " (சென்னையில் ) நல்லூரில் ஓர் நாள் " பாஞ்ச் "ராமன் தேடிய சீதை"யாய் காத்திருக்க "மாயக்  கண்ணாடி"யுடன்  வந்தார் ஜீவன். சந்தித்த நேரம் "பொற்காலம் ". கதைத்தனர்  "முரண்"கள் எதுவுமின்றி. ஆனாலும் "சொல்ல மறந்த கதை" ஏராளம் .இவர்கள் "ஆடும் கூத்து " பார்த்த சர்வர் பையன் "யுத்தம் செய் "ய  முடிவெடுக்க ,இவர்கள் (போட்டொ ) "ஆட்டொகிராப் " எடுத்துக் கொண்டு "வெற்றிக் கொடி கட்டி "வெளியேறி" பிரிவோம்  சந்திப்போம் " மீண்டும் என்று கை குலுக்கி "பொக்கிஷம் " போன்ற நினைவுகளுடன் எதிரெதிரே சென்றனர் .

"கதை திரைக்கதை வசனம் இயக்கம் "

சுவி ....! tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

பாஞ்ச் : ஜீவன்சிவா சேரன் மாதிரி வந்தார் .....! அவர் சேரனேதான் ....!

யோகர் சுவாமிகள் "தவமாய் தவமிருந்த " பூமியாம் " (சென்னையில் ) நல்லூரில் ஓர் நாள் " பாஞ்ச் "ராமன் தேடிய சீதை"யாய் காத்திருக்க "மாயக்  கண்ணாடி"யுடன்  வந்தார் ஜீவன். சந்தித்த நேரம் "பொற்காலம் ". கதைத்தனர்  "முரண்"கள் எதுவுமின்றி. ஆனாலும் "சொல்ல மறந்த கதை" ஏராளம் .இவர்கள் "ஆடும் கூத்து " பார்த்த சர்வர் பையன் "யுத்தம் செய் "ய  முடிவெடுக்க ,இவர்கள் (போட்டொ ) "ஆட்டொகிராப் " எடுத்துக் கொண்டு "வெற்றிக் கொடி கட்டி "வெளியேறி" பிரிவோம்  சந்திப்போம் " மீண்டும் என்று கை குலுக்கி "பொக்கிஷம் " போன்ற நினைவுகளுடன் எதிரெதிரே சென்றனர் .

"கதை திரைக்கதை வசனம் இயக்கம் "

சுவி ....! tw_blush:

பச்சை முடிந்துவிட்டதே சுவித் தம்பி. :(

  • கருத்துக்கள உறவுகள்
On 7/27/2016 at 9:40 PM, ராசவன்னியன் said:

Mr.பாஞ்,

சிங்கள மக்கள் அடிப்படையில், மனதளவில் தமிழர்களை சக உறவாக, சமமாக எற்றுக்கொள்பவர்களாக இருந்தால் ஏன் இந்தக் கலவரங்கள்? இரத்தக் களரி?அவர்களிலிருந்து வருபவர்கள்தானே இந்த சிங்கள அரசியல்வாதிகள்?

ஒன்றுபடவே முடியாத இனங்கள் என வரலாற்று நிகழ்வுகள், துயரங்கள் சொல்ல, நீங்கள் இப்படி எழுதுவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது..!

வேறு வழியே இல்லையென இணக்க மனமாற்றமா?

ஏன் இந்த தடுமாற்றம்? rebond.gif

தற்பொழுது யாழ்களத்தில் சிலரிடமும் இந்த மாற்றத்தைக் காணமுடிகிறது..

இறாலை போட்டு சுறா பிடிப்பது என்பது 
சில ஆயிரம் வருடம் கடந்த யுத்தி இன்றைய நாளில் மட்டுமல்ல 
இன்னும் சில ஆயிரம் ஆண்டு  கடந்தாலும் இந்த யுத்தி பலிக்க கூடியது

காரணம் தெளிவானது ....
சுறாவிட்க்கு பசி தவிர்க்க முடியாத ஒன்று 
இறால் இனிப்பான இரை 
மறைந்திருக்கும் தூண்டில் மாட்டு பட்ட பின்பே தெரிய கூடியது.


ஈழத்தமிழன் சுத்த சுயநலத்தால் அழிந்து போனவன் 
எனக்கு ஈழத்தமிழன் தலைநிமிரவில்லை என்ற ஆதங்கம் அதிகமில்லை.

பாவம் பாலஸ்தீனர்கள் ....
திடடமிட்டு அழிக்க படுகிறார்கள் 
பயங்கரவாதிகளை இஸ்திரேல் உருவாக்கி கொண்டே இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Paanch said:

பச்சை முடிந்துவிட்டதே சுவித் தம்பி. :(

இதில் பச்சை இல்லாவிட்டால் என்ன  இதயத்தில் பசுமை இருந்தால் போதும்  பாஞ்ச் .....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, suvy said:

பாஞ்ச் : ஜீவன்சிவா சேரன் மாதிரி வந்தார் .....! அவர் சேரனேதான் ....!

யோகர் சுவாமிகள் "தவமாய் தவமிருந்த " பூமியாம் " (சென்னையில் ) நல்லூரில் ஓர் நாள் " பாஞ்ச் "ராமன் தேடிய சீதை"யாய் காத்திருக்க "மாயக்  கண்ணாடி"யுடன்  வந்தார் ஜீவன். சந்தித்த நேரம் "பொற்காலம் ". கதைத்தனர்  "முரண்"கள் எதுவுமின்றி. ஆனாலும் "சொல்ல மறந்த கதை" ஏராளம் .இவர்கள் "ஆடும் கூத்து " பார்த்த சர்வர் பையன் "யுத்தம் செய் "ய  முடிவெடுக்க ,இவர்கள் (போட்டொ ) "ஆட்டொகிராப் " எடுத்துக் கொண்டு "வெற்றிக் கொடி கட்டி "வெளியேறி" பிரிவோம்  சந்திப்போம் " மீண்டும் என்று கை குலுக்கி "பொக்கிஷம் " போன்ற நினைவுகளுடன் எதிரெதிரே சென்றனர் .

"கதை திரைக்கதை வசனம் இயக்கம் "

சுவி ....! tw_blush:

சுவி.... உங்கள் எழுத்துகள், அழகு.
உண்மையில்... நான் உங்களை, "சுவி  அண்ணா"  என்றே அழைக்க வேண்டும்.
களத்தில்.... சுவி, என்று, அழைத்து பழகி விட்டதால், கஸ்ரமாக  இருக்கு.
உங்கள்... எழுத்து, இன்னும்... இளமை... என்பதால், 
உங்களை... சுவி என்று, எழுதுவதால்.... குறை நினைக்க வேண்டாம். அண்ணா. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

சுவி.... உங்கள் எழுத்துகள், அழகு.
உண்மையில்... நான் உங்களை, "சுவி  அண்ணா"  என்றே அழைக்க வேண்டும்.
களத்தில்.... சுவி, என்று, அழைத்து பழகி விட்டதால், கஸ்ரமாக  இருக்கு.
உங்கள்... எழுத்து, இன்னும்... இளமை... என்பதால், 
உங்களை... சுவி என்று, எழுதுவதால்.... குறை நினைக்க வேண்டாம். அண்ணா. :)

நீங்கள் இளமை என்றால் நானும் இளமைதான் தமிழ் சிறி. நாங்கள் அந்தக்காலத்து நண்பர்கள் அல்லவா! இளமையானவர்களாகக் காட்டிக்கொள்வதில்தான் மனிதர்களுக்கு எத்தனை மகிழ்ச்சி....! அப்பப்பா,  அலங்காரப் பொருட்களென்ன! திரவியங்கள் மருந்து வகைகளென்ன! சிகிச்சை நிலையங்களென்ன! தற்பொழுது யாழ்களமும் தன் சொந்தங்களை இளமையானவர்களாக வெளிக்காட்ட உதவிபுரியும் என்பதை இளமை விரும்பிகளுக்கு அறியத்தந்த உங்கள் எழுத்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.!! :grin:

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

சுவி.... உங்கள் எழுத்துகள், அழகு.
உண்மையில்... நான் உங்களை, "சுவி  அண்ணா"  என்றே அழைக்க வேண்டும்.
களத்தில்.... சுவி, என்று, அழைத்து பழகி விட்டதால், கஸ்ரமாக  இருக்கு.
உங்கள்... எழுத்து, இன்னும்... இளமை... என்பதால், 
உங்களை... சுவி என்று, எழுதுவதால்.... குறை நினைக்க வேண்டாம். அண்ணா. :)

இதிலென்ன வருத்தம் சிறி....! உறவினர்களின் குழந்தைகள் கூட பெயர் சொல்லி கூப்பிட  சந்தோசமாய் இருக்கும், அந்நேரம் தாயோ,யாரோ குறுக்க வந்து அப்படிச்  சொல்லக் கூடாது செல்லம் தாத்தா என்று சொல்லு என்று சொல்லும் போதுதான் உள்ளே சுனாமி பொங்கும். 

சந்தேகம் இருந்தால் பஞ்ச், ராசவன்னியன் ,சுமேயைக் கேட்டுப் பாருங்கள் .....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, suvy said:

... தாத்தா என்று சொல்லு என்று சொல்லும் போதுதான் உள்ளே சுனாமி பொங்கும்...

குழந்தைகள் அழைத்தால் மனதில் குதூகலம்தான்.. hug-2.gif

ஆனால் அதுவே "இளசுகள்" அழைத்தால், no.gif

  • கருத்துக்கள உறவுகள்
On 04/08/2016 at 3:05 PM, Paanch said:

ஆட்டோகிராப் படத்தில் வரும் சேரனைப்போன்ற தோற்றத்தில், காய்ந்து கறுத்த உருவம், உருவத்திற்கேற்பப் படியாது நிமிர்ந்து நின்ற கிராப்பு, அழகாகக் கத்தரித்து விடப்பட்ட மீசை, தாடி. வந்தவர்

அட ஒரு படத்தை இணைத்திருந்தால் நானும் ஒருக்கால் பாத்திருப்பேன் ஆள் எப்படி என்று.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2016 at 8:11 PM, குமாரசாமி said:

 தோளில் பை ஏதாவது தொங்க விட்டிருந்தாரா? :cool:

எப்ப பாரு ஏதையாவதை கேட்டு நோண்டிக்கிட்டு இருக்கிறது பை இருந்துச்ச்சா பழம் இருந்துச்ச்சா என்று<_< :cool:

நன்றாக இருந்தது இருவரது சந்திப்பு புதிய புதிய உறவுகள் கிடைப்பது சந்தோசமேtw_blush: 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் சிவாவைக் காட்டுமாறு சில உறவுகள் ஆவலுடன் கேட்டிருந்தார்கள். இதோ அவருடைய பிம்பம்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
26 minutes ago, Paanch said:

ஜீவன் சிவாவைக் காட்டுமாறு சில உறவுகள் ஆவலுடன் கேட்டிருந்தார்கள். இதோ அவருடைய பிம்பம்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

பிம்பத்தின்ரை தோளிலை இந்த மஞ்சள் பையை கொழுவிட்டால் எப்பிடியிருக்கும்:grin:

190220091182.jpg

கவிஞர் காசி ஆனந்தனின் தம்பி போல் உள்ளது பார்ப்பதற்கு, கவிதை எல்லாம் எழுதுவீர்களோ ஜீவன்?

On 21/08/2016 at 2:54 AM, கரும்பு said:

கவிஞர் காசி ஆனந்தனின் தம்பி போல் உள்ளது பார்ப்பதற்கு, கவிதை எல்லாம் எழுதுவீர்களோ ஜீவன்?

காசிக்கு மொட்டை எனக்கு நிறைய மயிர் இருக்கு.

எனக்கு புதுக்கவிதைகள் ரொம்ப பிடிக்கும். 
ஆனால் எழுத தெரியாது.

சங்க காலத்து கவிதைகள் பிடிக்காது
ஏனெனில் எனக்கு அது முழுமையாக புரியாது.

----------------------------------------------------------------------------------------

நான் ஒளிந்து மறைந்து வாழ எந்தவித நிர்ப்பந்தமும் எனக்கில்லை. எந்த பிழையையும் மனதறிய விடவில்லை. நான் சந்தித்தவர்களிடம் வேண்டுவது படங்களை பகிர வேண்டாம் என்பதே. அதனை கடைப்பிடித்த உறவுகளுக்கு நன்றி. 

சில சந்தேகங்களை தீர்க்க இணைக்க வேண்டியதாயிற்று.

இது எனது தனிப்பட்ட படம் இங்கு தேவை இல்லாதது. இணைத்து 2 நாட்களாகிறது. 

இதற்குமேல் இது தேவை இல்லை. 

இந்தப்படத்தை பார்த்த உறவுகள்எ ன்னை சந்திக்க வரும்போது இலகுவாக என்னை அடையாளப்படுத்தலாம்.

இதனை நீக்குமாறு நிர்வாகத்திடம் வேண்டிக்கொள்கின்றேன்.

மன்னிக்கவும்.

நன்றி

Edited by ஜீவன் சிவா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.