Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுமியை மூர்க்கத்தனமாக தாக்கும் பெண் நீர்வேலியில் சம்பவம்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர் காப்பகத்தில் இந்தக் குழந்தைகளைப் பராமரிப்பவர்கள்   அன்பாக நடந்துகொள்வார்கள் என நம்புவோம்

  • Replies 74
  • Views 5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

காணொளி பொய்யாகவே இருக்கட்டும். திட்டமிட்டுத் தயாரித்த காட்சியாகவேனும் இருக்கட்டும். அந்தப் பிள்ளையை கொடூரமாக அடித்துத் துவைக்கும் காட்சி மனதை உறுத்தவில்லையா...? இதற்கும் வக்காலத்து வாங்கும் கருத்துகள்! மனிதம் அத்தனை தூரத்திற்கு மரத்துவிட்டதா....?:(

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஊரில் இருந்தகாலங்களில் இந்தமாதிரி இதற்க்கு மேலாக கையில் காலில் காச்சிய கம்பியினால் சூடு போட்டு குழந்தைகள் தாக்கப்படுவதை பார்த்திருக்கின்றேன் அந்த காலத்தில் சமூக வலைத்தளங்கள் இருக்கவில்லை இன்று அந்த வசதிகள் உள்ளதனால் இவாறான ஒரு சில சம்பவங்கள் வெளிவருகின்றது அந்தவகையில் சமூகவலைத்தளங்களில் பாவனை பலனளிக்கின்றது 
 
  • தொடங்கியவர்

சிறுமியை தாக்கிய தாய்க்கு விளக்கமறியல் ; பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் 6 சட்டத்தரணிகள் ஆஜர்

யாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியில் சிறுமியை தாக்கிய சம்பத்துடன் தொடர்புடைய தாயை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14449761_1437285059620180_79312356861710

யாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியில் வீடொன்றில் தாய் ஒருவர் சிறுமியை மூர்க்கத் தனமாக தாக்கும் காணொளி பேஸ்புக் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. 

இதையடுத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை பிரிவினருக்கும் , கோப்பாய் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் பிரகாரம் தாக்குதல் மேற்கொண்ட தாயார் கைது கோப்பாய் பொலிஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் குறித்த தாயாரை பொலிஸார் இன்று யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்தபோது, அவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் க. அருமைநாயகம் உத்தரவிட்டார்.

ஏனைய 3 பிள்ளைகளையும் சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்குமாறும் தந்தை தொடர்பான நடவடிக்கை, தொழில் ஆகியவற்றை ஆராய்ந்து விசாரணை செய்யுமாறும் நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டிருந்த காணொளியின் உண்மைத் தன்மை, சிறுமியைத் தாக்கப்பயன்படுத்திய கத்தி தொடர்பான உண்மைத் தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்த அவற்றை மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமி சார்பாக 6 சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியதுடன் அவர்கள் குறித்த தாய் அச்சிறுமி  தாயில்லையெனவும் தெரிவித்தனர். ஆனால் சம்பவத்துடன் கைதுசெய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தாய் குறித்த சிறுமி தனது மகள் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பதில் நீதிவான் இது தொடர்பிலும் ஆராயுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/11687

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

காணொளி பொய்யாகவே இருக்கட்டும். திட்டமிட்டுத் தயாரித்த காட்சியாகவேனும் இருக்கட்டும். அந்தப் பிள்ளையை கொடூரமாக அடித்துத் துவைக்கும் காட்சி மனதை உறுத்தவில்லையா...? இதற்கும் வக்காலத்து வாங்கும் கருத்துகள்! மனிதம் அத்தனை தூரத்திற்கு மரத்துவிட்டதா....?:(

இல்லை பாஞ்ச்,

நீங்கள் இன்னும் அங்கிருக்கக் கூடிய நிதர்சனத்தை, எமதனுபவத்தை இரை மீட்க, மறுக்கிறீர்கள்.

இது வீடியோவில் வந்ததால் இந்த தாக்கம். நேரில் பார்த்தால், 'சரிதான்' என்று நகர்ந்திரருப்போம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா

எனக்கு அடுத்த வீட்டுக்காரர்  குடும்பகாரராக வாய்த்தார்..

இங்கு எழுதும் ஒவ்வொருவரது வீட்டுக்குள்ளும் கமரா வைக்க எல்லோரும் தயாரா??

ஒருவரது குடும்பநிலையையும்

அவரவர்  பிள்ளை வளர்ப்பையும் கணிக்க இன்னும் ஏதும் கருவிகள் வரவில்லை.

இங்கு இந்த பிள்ளையை பொது வெளியில் அடித்தது தப்பு

ஆனால் அதை தடுக்கும் முறை இதுவன்று...

நேரே சொல்லியிருக்கணும்

அல்லது காவல்த்துறைக்கு அறிவித்திருக்கணும்..

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாக்காரன் இனி மூண்றாவதை தேடவேண்டியது தான்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

ஏனைய 3 பிள்ளைகளையும் சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்குமாறும் தந்தை தொடர்பான நடவடிக்கை, தொழில் ஆகியவற்றை ஆராய்ந்து விசாரணை செய்யுமாறும் நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ரெம்பசந்தோசம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

சிறுமியை தாக்கிய தாய்க்கு விளக்கமறியல் ; பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் 6 சட்டத்தரணிகள் ஆஜர்

http://www.virakesari.lk/article/11687

முதலில் இந்த ஆறு வக்கில்லாதவர்களில் ஒருவராவது தான் தனது குழந்தைக்கு அடிக்கவில்லை என்று  சத்தியம் செய்யட்டும் பார்ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

நாதம்ஸ்..

ஒரு காலத்தில் உடன்கட்டை ஏறுவது வாடிக்கையாக இருந்திருக்கலாம்.. அதற்காக இப்போது அதை ஆதரிக்க முடியாதல்லவா.. அதுபோல ஒருகாலத்தில் எமது வளர்ப்பு முறைகள் அப்படியாக இருந்தாலும் இக்காலத்தில் அவற்றை சரி செய்துகொண்டு பயணிக்க வேண்டும்.

  • தொடங்கியவர்

யாழில் சிறுமி மீது தாக்குதல்: தந்தை வெளிப்படுத்திய தகவல்கள் உட்பட முழு விபரங்கள் (காணொளி) #SooriyanNews #News #SriLanka

http://www.hirunews.lk/tamil/143605/update-யாழ்பாணத்தில்-சிறுமியை-கொடூரமாக-தாக்கிய-பெண்-விளக்கமறியலில்-காணொளி-இணைப்பு

Edited by நவீனன்

இங்கே நிறைய அப்பாமாருக்கு தங்கள் வீட்டு சங்கதிகளும் சந்திக்கு வந்துவிடுமோ என்று பயம் பற்றிக்கொண்டு விட்டது போல. :10_wink:

  • தொடங்கியவர்

பாடசாலைக்கு செல்ல மாட்டேன் என கூறியதால் தான் அடித்தேன். தாய் நீதிமன்றில் விளக்கம்:

பாடசாலைக்கு செல்ல மாட்டேன் என கூறியதால் தான் அடித்தேன். தாய் நீதிமன்றில் விளக்கம்:

 நீர்வேலி பகுதியில் சிறுமியை தாக்கிய தாயாரை எதிர்வரும் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் க. அரியநாயகம் உத்தரவு இட்டுள்ளார். 

நீர்வேலி பகுதியை சேர்ந்த தாய் ஒருவர் சிறுமியை தாக்கியமை தொடர்பிலான வீடியோ காட்சி நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப் பட்டு இருந்தன.
 
அதனைத் தொடர்ந்து கோப்பாய் பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரி கோப்பாய் பொலிசாரிடம் முறைப்பாடு செய்ததை அடுத்து தாயார் நேற்று இரவு கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.
 
இன்றைய தினம் யாழ்.நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் க.அரியநாயகம் முன்னிலையில் முற்படுத்திய போது , தாக்குதல் மேற்கொண்ட பெண்ணை எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டார்.
 
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமி உட்பட  தாயின் மூன்று பிள்ளைகளையும் சிறுவர் இல்லத்தில் சேர்க்குமாறும் பதில் நீதிவான் உத்தரவு இட்டார். 
 
அதேவேளை தாக்குதல் மேற்கொண்ட பெண்ணிடம் எதற்காக சிறுமியை தாக்கினீா் என பதில் நீதிவான் வினாவிய போது , நேற்றைய தினம் பாடசாலைக்கு செல்ல மாட்டேன் என சிறுமி கூறியதால் தான் அடித்தேன் என கூறினார். அத்துடன் தான் இதற்கு முன்னர் பிள்ளையை கை நீட்டி அடித்தது இல்லை எனவும் தாய் கூறினார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136269/language/ta-IN/article.aspx

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, இசைக்கலைஞன் said:

நாதம்ஸ்..

ஒரு காலத்தில் உடன்கட்டை ஏறுவது வாடிக்கையாக இருந்திருக்கலாம்.. அதற்காக இப்போது அதை ஆதரிக்க முடியாதல்லவா.. அதுபோல ஒருகாலத்தில் எமது வளர்ப்பு முறைகள் அப்படியாக இருந்தாலும் இக்காலத்தில் அவற்றை சரி செய்துகொண்டு பயணிக்க வேண்டும்.

அதை நாம் புகலிடங்களில் வடிவாக செய்கிறோமே.

இங்கே வெள்ளயரிடையேயும் பிள்ளைகளை ஒரு குறிப்பிட்ட வரையறையினுள் தவறுகள் திருத்த தண்டிக்கப் பட வேண்டும் என்ற எண்ணம் நீதிமன்றில் விவாதிக்கப்பட்டுள்ளது.

தண்டித்தற்கான காரணம் சுயநலமில்லை என்ற மெல்லிய எல்லைக் கோடு தான் இது மகாதவறு என்பவர்களையும் எனது கருத்தினையும் பிரிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

பிரிவினைவாதம் பேசினால் சிறை அல்லது கடத்தல்
கொலை , பாலியல் வன்புணர்வு போன்ற குற்றங்களுக்குத் தூக்குத்தண்டனை

இப்படியெல்லாம் உள்ள ஒரு நாதி கெட்ட நாட்டில்

தாய் (சித்தி ) குழப்படி செய்யும் குழந்தைக்கு அடித்தாலும் சிறைத் தண்டனையா? எங்கேயோ குழப்பம் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

 அப்படியானால் அந்த பிள்ளையின் தகப்பன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் சுனாமி, போரால் மனைவியை இழந்த கணவன்மார்கள் இப்போதும் கூட தான் பெற்ற குழந்தைகளுக்காக இப்போதும் கூட திருமணம் முடிக்காம் தனது குழந்தைகளை  தனது தாயிடம் வைத்து அவர்களை பராமரித்து படிக்க வைத்து வாழ்கிறார்கள் இன்னும் பலர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். 

ஆனால் மனைவி இறந்த பிறகு தனது உடல் பசிக்கு தீனிபோடவும் அந்த குழந்தைகளை காரணம் காட்டியும் (பிள்ளைகளை பார்த்துக்க ஒரு அம்மா   ) என்று இரண்டாம் தாரமாக ஒருவரை கொண்டு வந்து அவளுக்கும் குழந்தையை கொடுத்துவிட்டே பிறகே தெரிகிறது அவள் அம்மா அல்ல சித்தி என்று ஆனாலும் சித்தி கூட சிறந்த அம்மாவாக இருக்கிறாள் சில குடும்பங்களில் 

சாதாரணமாக ஒரு ஆட்டை கழுத்தை அறுத்து கொல்லும் போது சிலர் பார்க்கமாட்டார் சிலபேர் ஆட்டிறைச்சி இனி் மேல் சாப்பிடமாட்டேன் என்பார்கள் ஆனால் அதை பார்க்காதவர்கள் ருசியாக இருக்கிறது என்பார்கள்

இது தெரியவந்ததால் நாம் இன்று கதைக்கிறோம் 

தெரியாமல் ஆயிரம் நடக்கிறது அத்தனையையும் வெளிக்கொண்டு வாருங்கள் 

குழந்தையை அடிக்கும் வீடியோவைப் பார்க்க மனம் பதைபதைத்தது. அந்தத் தாய் எதற்காக அடித்தார் என்பதெல்லாம் நியாயப்படுத்தத் தேவையில்லை. அடி வாங்கும் அந்தச் சிறுமியின் உடல் வலியும் மனநிலையும் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை நினைக்க மிகவும் வேதனையாக இருக்கிறது. அடித்துத் திரிருத்திய சமுதாயத்திலிருந்துதான் நானும் வந்திருக்கிறேன். அடிக்காமலே திருத்த முடியும் என்பதையும் உணர்ந்திருக்கிறேன். மனித இனம் படிப்படியான மாற்றங்களுடந்தான் வளர்ந்து வருகிறது. அந்தக் காலத்தில் இருந்தது போலவே இருக்க வேண்டும் என்று அடம் பிடிப்பது உலக ரீதியாக எமது சமுதாயத்தைப் பின்தங்கச் செய்யும். 

வீடியோ எடுத்தவர் சட்ட ரீதியாக அச் சிறுமிக்கு உதவவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் அவரது முயற்சியால் இப் பிரச்சனை பற்றிய விவாதங்களும் சமூக விழிப்புணர்வும் உண்டாகக் காரணமாக இருந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

1968 இல் என்னுடன் தந்தையை இழந்து மாமாவின் தயவில் படித்துக் கொண்டிருந்தவர் ரிபோட் கொடுக்கும் போது இருந்த நிலையை விட குறைந்த நிலையில் வந்து விட்டார் என்பதற்காக தொடையில் குறட்டினால் பல தடவைகள் பிடித்து இழுத்து காயப்படுத்தியுள்ளார்.

அந்த காலங்களில் அரைக் காற்சட்டை மட்டும் போடுவதால் அவராலோ மாமனாராலோ பெரும் தழும்புகளை மறைக்க முடியாமல் போய்விட்டது.நாம் கண்டு கேட்ட போது தாய் கொடுத்த அறிவுறுத்தலாலோ என்னவோ நடந்த விடயத்தை சொன்னாரே தவிர யாரிலும் குற்றம் குறை காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கரும்பு said:

இங்கே நிறைய அப்பாமாருக்கு தங்கள் வீட்டு சங்கதிகளும் சந்திக்கு வந்துவிடுமோ என்று பயம் பற்றிக்கொண்டு விட்டது போல. :10_wink:

நீதிகள் மதிக்கப்படும் நாடுகளில் வாழ்கின்றோம் என்று   மார்தட்டுகின்றோம்

ஒருவரை

அவரது அனுமதியின்றி வீடியோ எடுப்பது

அதை பொது வெளியில் வெளியிடுவது எத்தனை குற்றமானது என்பதையும் படித்திருக்கணுமே....??

இந்த நபர்

தானே நீதியை கையிலெடுத்ததும்

தண்டனையை தானே தீர்மானித்ததும் எவ்வளவு சரியானது? என்பதே கேள்வி.

கேட்டால்

எமது சங்கதி வெளியில்  வரப்போகுது என்ற பயம் என்றா பதில் வரும்??

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, இணையவன் said:

குழந்தையை அடிக்கும் வீடியோவைப் பார்க்க மனம் பதைபதைத்தது. அந்தத் தாய் எதற்காக அடித்தார் என்பதெல்லாம் நியாயப்படுத்தத் தேவையில்லை. அடி வாங்கும் அந்தச் சிறுமியின் உடல் வலியும் மனநிலையும் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை நினைக்க மிகவும் வேதனையாக இருக்கிறது. அடித்துத் திரிருத்திய சமுதாயத்திலிருந்துதான் நானும் வந்திருக்கிறேன். அடிக்காமலே திருத்த முடியும் என்பதையும் உணர்ந்திருக்கிறேன். மனித இனம் படிப்படியான மாற்றங்களுடந்தான் வளர்ந்து வருகிறது. அந்தக் காலத்தில் இருந்தது போலவே இருக்க வேண்டும் என்று அடம் பிடிப்பது உலக ரீதியாக எமது சமுதாயத்தைப் பின்தங்கச் செய்யும். 

வீடியோ எடுத்தவர் சட்ட ரீதியாக அச் சிறுமிக்கு உதவவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் அவரது முயற்சியால் இப் பிரச்சனை பற்றிய விவாதங்களும் சமூக விழிப்புணர்வும் உண்டாகக் காரணமாக இருந்துள்ளது.

இணையவரே,

மனிதனை அவன் சார்ந்த சூழலே உருவாக்கிறது. இங்கு வாழும் எமது சிந்தனை இங்கே உள்ள சூழலுக்கு ஏற்ப மாடுபடுகிறது.

இங்கே பிள்ளைகளுக்கோ, எமக்கோ ஒரு வேளை உணவில்லை எனில் அரசு கைவிடாது. 

அங்கே அதுவா நிலை. பெற்றோர்கள் போராடித் தான் ஒரு பிடி சோறும் தருகிறார்கள்.

குளித்துவிட்டு பாடசாலைக்கு போக மறத்ததால் அடித்தேன் என்கிறார் தாய்.

'துள்ளும் வயதில் துடுக்கடக்கி, பள்ளிக்கு அனுப்பிலனே தந்தை எனும் மாபாதகனே' என்கிறது முது மொழி.

அந்த பிள்ளைக்கு அடி விழும் போது தமது சொந்தபிள்ளையை நினைத்தே பலர் கலங்குகின்றனர்.

ஆனால், தாயின் நோக்கத்தில், சுயநலம் இல்லாவிடில், அவரில் தவறில்லை என்பேன்.

அந்தப்பிள்ளை சாப்பாடு இல்லாமல் பலவீனமாக இருப்பதாகவும் தெரியவில்லை.

போயிலை காயவிடு, மிளகாய் புடுங்கு, கல்லை உடை போன்ற வேலைகளை செய்யவில்லை என்று அடி விழுந்தால்... உங்கள் நியாயத்துடன் நான் ஒத்துப் போவேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

குழந்தையை அடிக்கும் வீடியோவைப் பார்க்க மனம் பதைபதைத்தது. அந்தத் தாய் எதற்காக அடித்தார் என்பதெல்லாம் நியாயப்படுத்தத் தேவையில்லை. அடி வாங்கும் அந்தச் சிறுமியின் உடல் வலியும் மனநிலையும் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை நினைக்க மிகவும் வேதனையாக இருக்கிறது. அடித்துத் திரிருத்திய சமுதாயத்திலிருந்துதான் நானும் வந்திருக்கிறேன். அடிக்காமலே திருத்த முடியும் என்பதையும் உணர்ந்திருக்கிறேன். மனித இனம் படிப்படியான மாற்றங்களுடந்தான் வளர்ந்து வருகிறது. அந்தக் காலத்தில் இருந்தது போலவே இருக்க வேண்டும் என்று அடம் பிடிப்பது உலக ரீதியாக எமது சமுதாயத்தைப் பின்தங்கச் செய்யும். 

வீடியோ எடுத்தவர் சட்ட ரீதியாக அச் சிறுமிக்கு உதவவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் அவரது முயற்சியால் இப் பிரச்சனை பற்றிய விவாதங்களும் சமூக விழிப்புணர்வும் உண்டாகக் காரணமாக இருந்துள்ளது.

எமக்கே  வலிக்கிறது என்றால்

அந்த தாய்க்கு எவ்வளவு வலித்திருக்கும்......

குழப்படி பிள்ளைகளை அரச பாதுகாப்பில் வளர்க்கிறார்கள்

அங்கு என்ன திறந்தா விடுகிறார்கள்

கட்டுப்பாடுகள்

ஒழுங்குகள்

ஏன் அவற்றை மீறினால் தண்டனைகள் உண்டல்லவோ...

அவ்வகையான எவ்வளவு செய்திகளையும் காட்சிகளையும் பார்த்துவிட்டோம்.....

நாம் இன்று பதை பதைத்தவிட்டு போய் விடுவோம்

அந்த பிள்ளைக்கு 3 நேரம் பசிக்கும்

கல்வி

ஒளிமயமான எதிர்காலம்

எவர் தருவார்..???

அதே தாய்  மட்டும் தான்.

பக்கத்து வீட்டுக்காரர் லைக் வாங்கியதுடன் சரி...

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீடியோவை, கொழும்பு டெர்லா மிரர் பத்திரிகை போடப் போக, இந்த தாயும், பிள்ளையும் இப்ப சிங்சளவர் மத்தியிலும் பிரபலமாகிட்டினம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

------ஆனால் அதை தடுக்கும் முறை இதுவன்று...

நேரே சொல்லியிருக்கணும்

அல்லது காவல்த்துறைக்கு அறிவித்திருக்கணும்..

//தடி ஒன்றினால் ஆறு வயது மதிக்கத்தக்க அந்த சிறுமியை அவளது தாய் பலமாக தாக்குவதைப்பார்த்து என்ன செய்வது என ஒரு கணம் திகைத்து விட்டேன். ஓடிச் சென்று அந்தப் பெண்ணிடம் இருந்த தடியை பறித்தெடுக்க எண்ணினாலும் அந்தப் பெண் பற்றியும் அவரது கணவர் பற்றியும் ஏற்கனவே நான் அறிந்த சம்பவங்கள் என்னை தடுத்து நின்றன.

இருந்தும் சிறுமி தொடர்ந்தும் தாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் ஒரு முடிவெடுத்தேன். இந்த சிறுமி தாக்கப்படும் கடைசி நாள் இன்றாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதிக்கொண்டு எனது ஒளிப்படக்கருவியின் ஊடாக நடப்பவை அனைத்தையும் ஒளிப்பதிவு செய்தேன்.//

விசுகு... மேலே உள்ள பதிவு... முதல் பக்கத்தில் உள்ளது.
அந்தக் காணொளி எடுத்த, பக்கத்து வீட்டுக்காரர் போட்ட  பதிவு அது.
அவர் அதை... அந்தப் பெண்ணிடம் நேரே... சென்று தடுக்க முடியாமையின் காரணத்தையும் சொல்லியுள்ளார்.
அதனை வாசித்து இருந்தீர்களாயின், உங்களிடமிருந்து... இப்படியான கருத்து வந்திருக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தமிழ் சிறி said:

அதை  நானும் பார்த்தேன்  சிறி

ஆனால் ஒரு குடும்ப விவகாரத்தை இவ்வாறு பொது வெளியில் கொண்டுவரும் உரிமை எவருக்கும் இல்லை சிறி.

அது இதைவிட பாரதூரமான குற்றமாகும்......

உண்மையில் அந்த நபர் இந்த வீடியோவை காவல்த்துறையிடமாவது இரகசியமா தந்திருக்கணும்

அதுவும் இல்லை இங்கு..

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

அதை  நானும் பார்த்தேன்  சிறி

ஆனால் ஒரு குடும்ப விவகாரத்தை இவ்வாறு பொது வெளியில் கொண்டுவரும் உரிமை எவருக்கும் இல்லை சிறி.

அது இதைவிட பாரதூரமான குற்றமாகும்......

அந்தக் சிறுமி, அந்தத் தாயின் மூர்க்கத் தனமான தாக்குதலால்... 
இறந்து விடவும் சந்தர்ப்பம்,   அங்கு அதிகம்  காணப் பட்டுள்ளது. விசுகு.
அதற்குப் பிறகு.... நாம் இங்கு விவாதிப் பாதை விட...  பக்கத்து வீட்டுக்காரர், தன்னால் தடுக்க முடியவில்லையே... என்று, 
வாழ்நாள் முழுக்க, நடைப்பிணமாகவே... வாழ வேண்டி வந்திருக்கும்.

(உண்மையில்... இந்தக் காணொளியை, முழுமையாக பார்க்க மனம் வராததால் இடையில்... நிறுத்தி விட்டேன்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.