Jump to content

கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டுகளில் கவனம் செலுத்திய கீழடி தமிழர்கள்.!

0.png

பொதுவாக ஒரு சமூகம் சிறந்த வாழ்வியலைக் கொண்டதாக இருக்கின்றது அல்லது இருந்தது என்பதினை அறிய அச்சமூதாயத்தின் வாழ்வியலின் வழிமுறைகளை அறிவதின் மூலம் தெரிந்து கொள்ளலாம்! அந்த வாழ்வியலில் உழைப்பு, உணவு, உறக்கம் போன்றவற்றோடு சேர்ந்து விளையாட்டும் மிக முக்கியமான ஒன்றாக அமைந்து விடுகின்றது.

இந்த நூற்றாண்டின் மிக உன்னதமான கண்டுபிடிப்பான கீழடி அகழாய்வுகளில் எத்தனையோ தகவல்கள் தினம் தினம் அன்றைய மக்களின் வாழ்வியலான கட்டடக்கலை, வணிகம், விவசாயத்திற்கான கால்நடை வளர்ப்பு, உணவுக்கான விலங்கு வளர்ப்பு போன்றவற்றை தன்னிடமிருந்த எச்சங்களை வெளிபடுத்திக் கொண்டிருப்பதின் வாயிலாக உலகிற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது. 

1.png

அந்த வகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைபொருட்களான வட்டச்சில்லுகள், ஆட்டக்காய்கள், சதுரங்கக் கட்டைகள் மூலம் அன்றைய சமுதாயம் பொழுதுபோக்கு அம்சங்களையும் சிறப்பாகக் கொண்டிருந்ததை அறிய முடிகின்றது.

பெண்களையும் சக மனிதராக கருதும் மனப்பான்மை 

2.png

கீழடி அகழாய்வுகளில் கிடைக்கப் பெற்ற பொருட்களில் அதிகமான வட்டச்சில்லுகள் 600 எண்ணிக்கையில் (தற்போதும் இவ்விளையாட்டு ‘பாண்டி’ என்ற பெயரில் விளையாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது) கிடைத்திருக்கின்றது.

மேலும் தாய உருட்டி விளையாட்டுக்கான பகடைக்காய்களும் கிடைத்துள்ளன. இதன் மூலம் பெண்களையும் ஆண்களுக்கு சமமாகக் கருதும் மனப்பான்மை உடையவர்கள் கீழடி நகர நாகரீகத்தினர் என்பது அறிந்து கொள்ளலாம்.

பெண்களுக்கு ஆன்மா என்ற ஒன்று இருக்கின்றதா இல்லையா என்ற கேள்வி உலக நாகரீகத்தின் ஊற்றுக்கண்ணாகக் கருதபடும் கிரேக்கத்திலேயே எழுந்த அதே காலகட்டத்தில், தமிழ்ச் சமூகமான கீழடியில் பெண்களையும் சமமாகக் கருதி, அவர்களும் தங்கள் களைப்பு நீங்க விளையாட வேண்டும் என்ற அடிப்படையில் விளையாட்டுப் பொருட்களை இருப்பதைப் பார்க்கும்போது, நாங்கள் உலகத்திற்கே முன்மாதிரியாக வாழ்ந்த சமூகமாகவே இருந்திருக்கின்றோம் என்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றனர்.

சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டுப் பொருட்கள் 


3.png

அகழாய்வில் சிறுவர்கள் கயிறு கட்டி விளையாடும் சுடுமண்ணாலான வட்டச்சுற்றிகள், வண்டி இழுத்து விளையாடும் சக்கரங்களும், பெரியவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் விளையாடும் சதுரங்க விளையாட்டுக் காய்களும் பல்வேறு அளவில் 80 எண்ணிக்கையில் கிடைத்துள்ளன. இதன் மூலம் ஒரு நகர நாகரீகத்தினர் தன்னுடைய சக மாந்தர்கள் எப்படி தங்களின் வாழ்வியலின் பொழுதுகளை திறம்படக் கழித்திட வேண்டும் என்பதை கீழடி பாடம் நடத்துகின்றது.

நம்முடைய நிலை

கீழடியில் அதிக அளவில் கிடைத்துள்ள இந்தத் தொல்பொருட்களின் மூலம் தமிழர் வரலாறு நமக்கு பாடம் ஒன்றை நடத்துகின்றது.

நாகரீகமற்றவர்கள் எனக் கிண்டலடிக்கப்படும் ஆதி கால மக்கள் தத்தமது வாழ்வியலை சிறப்பாக அமைத்திருக்கின்றார்கள். அடிப்படைத் தேவைகளை பூர்த்தியாக்கி வாழ்வியலை செம்மையாக்கி வேலை, ஊண், உறக்கம், ஓய்வு என திட்டமிட்டு வாழ்ந்து, தமது எச்சங்களை பின்பு ஒரு காலத்தில் சிறப்பாக வெளிப்படும் வண்ணம் தரமாக்கி நமக்கு அறிவுப்பாடம் எடுத்திருக்கின்றனர்.

நாம் நமது அண்டை வீட்டில் வசிக்கும் நெடுநாள் குடியானவனையும் கூட அறியாது ஒரு அவசர கால வாழ்க்கையினை வாழ்ந்து நமது சிறப்பான வாழ்வினை அழித்துக் கொண்டு வருகின்றோம்.

இயந்திரத்தனமான கார்ப்ரேட் வாழ்வு, அதில் பிழைக்கத் தெரிந்தவனைத் தவிர மீதம் உள்ளவனை மிதித்துச் சென்றிடும் போக்கு, தமது பெற்றோர்களுக்கும் - பெற்றவர்களுக்கும் - கரம் பிடித்தவளுக்கும் சிறிது நேரம் கூட ஒதுக்க இயலாத நிலை என ஒவ்வொன்றாக நாம் இழந்து கொண்டிருக்கும் விசயங்கள் ஏராளம்.

- நவாஸ்

https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/38710-2019-10-03-08-24-38

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 203
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

கீழடி சொல்லும் வரலாறு என்ன.?

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/9/2019 at 4:17 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கீழடி சொல்லும் வரலாறு என்ன.?

 

அருமையான ஒரு காணொளி... கலந்து கொண்ட நான்கு அரசியல்வாதிகளும்,
ஆரோக்கியமான கருத்தை வெளிப்படுத்தியிருந்தது மகிழ்ச்சி.
வெங்கடேசன், ரவிக்குமார் போன்றோர்.. மத்திய அரசு... விடயத்தில் மெதுவாக நகர்வதை கூறியது சரியே...

பா.ஜ.க.வை சேர்ந்த ராகவன் இதில் அரசியல் செய்யாமல்....
தமிழர் அனைவரும் ஒருமித்து.... சம்பந்தப் பட்ட  மத்திய  அமைச்சர்களிடம்,
பிரச்சினைகளை... சொல்வதற்கு தானும் வருவதாக குறிப்பிட்டது, நல்ல விடயம்.   

அ.தி.மு.க., தி.மு.க. போன்றவை... ஜெயலலிதா, கருணாநிதிக்கு மணி மண்டபம் கட்டுவதை விட்டு விட்டு,
கீழடியில்.. இதுவரை கிடைத்த 15,000 பொருட்களை வைத்து  பாதுக்காக்க,
அரும் காட்சியகம்  கட்டுவதில் முனைப்பு காட்ட   வேண்டும்.

இவைகள் யாவும்.. தமிழக தமிழருக்கு மட்டுமல்ல.... 
உலகத் தமிழருக்கும் பொதுவான, பொருட்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழடி அகழ்வாராய்ச்சியில், பழங்கால கல்திட்டை கண்டுபிடிப்பு...!

keezhadi-post.png

சிவகங்கை மாவட்டம், கீழடி இரண்டாயிரத்து 600 ஆண்டுகால வரலாற்றை சுமந்து நிற்குகிறது. தமிழரின் தொன்மையை பறைசாற்றும் கீழடியில், தோண்டத் தோண்ட தமிழரின் பழங்கால நாகரிகம் தலைகாட்டிக் கொண்டேயிருக்கிறது.

கடந்த 2014 தொடங்கி 2017ம் ஆண்டு வரை நடந்த மூன்று கட்ட அகழ்வாராய்ச்சி பணியில், கிடைத்த ஒவ்வொரு பொருட்களும் ஆதி தமிழரின் பெருமையை வெளிச்சம் போட்டுகாட்டியது. முதல் மூன்று கட்ட அகழ்வாராய்ச்சி முடிந்த நிலையில், நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியை தமிழக தொல்லியல்துறை தொடர்ந்து நடத்தி வருகிறது. விரைவில் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடக்கப்படவுள்ள நிலையில், 110 ஏக்கர் பரப்பளவில் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தொல்லியல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதில் கட்டட தொழில்நுட்பம், வேளாண்மை, நெசவு உள்ளிட்டவற்றில் தமிழர்கள் மேம்பட்டவர்கள் என தெரியவந்துள்ள நிலையில், கீழடியில் பழங்கால மனிதர்கள் தங்குமிடமாக பயன்படுத்தும் கல்திட்டை கண்டறியப்பட்டுள்ளது. பாறைகளின் மறைவில் மழை, வெயில் போன்றவற்றிற்காக கல்திட்டை அமைத்து அதில் பண்டைய கால மனிதர்கள்  வசிப்பிடமாக பயன்படுத்தியிருக்கக்கூடும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையே கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பார்வையிட்டார். அப்போது, அங்கு நடைபெற்று வரும் ஆய்வு பணிகள் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.  தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, கீழடியில் கண்டெடுக்கப்பட்ட 16 ஆயிரம் பொருட்களை கொண்ட ஆய்வின் மூலமாக, எழுத்தறிவு பெற்ற மக்கள் வாழ்ந்து உள்ளதை அறிய முடிகிறது என குறிப்பிட்டார். அவ்வாறு கண்டறியப்பட்ட பொருட்களை, கீழடி பகுதியில் சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் எனவும், கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக, மத்திய அரசு அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

உலகின் முதல் நாகரிகம் தமிழர் நாகரிகம் மட்டுமே என்பதை உலகம் மக்கள் விரைவில் ஏற்றுக் கொள்வார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வரும் இடங்களை உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டை சேர்ந்தவர்களும் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர். இதன்மூலம் கீழடியின் பெருமை சர்வதேச அளவிற்கும் பரவியுள்ளது என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.

https://ns7.tv/ta/tamil-news/tamilnadu-editors-pick/11/10/2019/excavation-discovery-ancient-palette?fbclid=IwAR1h_asC4D1LKzygZULH0nsZL1dPINp17oM7kWsuHMJNqkMvp8KWkIOQGug

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

`தமிழர் நாகரிகம் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது!' - கீழடியில் அமர்நாத் ராமகிருஷ்ணா .!

IMG_20191014_WA0009.jpg

கீழடியில் 6ம் கட்ட அகழாய்வுப் பணியை மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடத்தவேண்டும் என அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
 

மதுரை அருகே, சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடியில் தமிழகத் தொல்லியல் துறையின் சார்பாக 5-ம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்றது.

கடந்த ஜூன் 13ம் தேதி தொடங்கிய 5ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நேற்றுடன் (அக்டோபர் 13ம் தேதி) நிறைவுபெற்றது. மேலும், கீழடி, கொந்தகை, பள்ளிச்சந்தை, மணலூர் என்று கீழடியில் சுற்றியுள்ள பகுதிகளில் 6ம் கட்ட அகழாய்வுப் பணி, வரும் ஜனவரி 2, 3வது வாரங்களில் தொடங்கப்பட இருப்பதாகத் தெரிகிறது.

தற்போது கீழடி 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணி நடைபெற்ற பகுதியில் கிடைக்கபெற்ற பொருள்களை வீடியோ மற்றும் புகைப்படங்கள் மூலமாக ஆவணப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் கீழடியின் 5ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெற்ற 52 குழிகளை மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா நேரில் பார்வையிட்டார். மேலும், தொல்லியல்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை அவர் வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமர்நாத் ராமகிருஷ்ணா, ``தமிழகத் தொல்லியல் துறை மேற்கொண்ட 4 மற்றும் 5ம் கட்ட ஆகழாய்வை மிகச்சரியாகச் செய்துள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறேன்.

தற்போதைய ஆய்வு தமிழர் நாகரிகம் 2,500 ஆண்டுகளுக்கு முந்தியது என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளது. அடுத்த கட்ட அகழ்வாராய்ச்சிப் பணியை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் விரைவாகப் பணிகள் நடத்த முடியும்'' என்றார்.

இந்தநிலையில், கீழடியில் நடைபெற்ற 5ம் கட்ட அகழாய்வை ஆவணப்படுத்தும் பணிகளை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நேரில் பார்வையிட்டார். அவர், தொல்லியல்துறை அதிகாரிகளிடம் கீழடியில் கிடைக்கப்பெற்ற ஓடுகள், பவளம், பண்டையகால தமிழி எழுத்து உருவங்கள் அடங்கிய பானைகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

https://www.vikatan.com/news/tamilnadu/archaeology-official-amarnath-ramakrishna-visits-keezhadi-excavation-site

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

72382204_2996052490456939_28504192085068

72809514_2996052510456937_88161966474290

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழடி: ஆதிகால தமிழரின் வடிகால் அமைப்பை வெளிப்படுத்திய ஐந்தாம் கட்ட ஆய்வு

கீழடி ஐந்தாம் கட்ட ஆய்வில் கிடைத்த வடிகால் அமைப்பு

மதுரைக்கு அருகில் உள்ள கீழடி தொல்லியல் தலத்தில் நடந்த ஐந்தாம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன குழாய் போன்ற அமைப்பில் வடிகால் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

கீழடி தொல்லியல் தலத்தில் ஏற்கனவே நான்கு கட்ட அகழாய்வுகள் முடிவடைந்த நிலையில், ஐந்தாம் கட்ட அகழாய்வுகள் சமீபத்தில் முடிவடைந்தன.

இந்த ஐந்தாம் கட்ட அகழாய்வின் இறுதிக் கட்டத்தில் சுட்டமண்ணால் ஆன வடிகால் அமைப்பு கிடைத்திருப்பதாக, இந்த ஆய்வை மேற்கொண்ட மாநிலத் தொல்லியல் துறை தெரிவிக்கிறது.

கீழடி ஐந்தாம் கட்ட ஆய்வில் கிடைத்த வடிகால் அமைப்பு Image captionபீப்பாய் வடிவிலான குழாயில் வடிகட்டி

YD6/3 என்ற ஆய்வுக் குழியில் பணிகள் நடந்தபோது 47 சென்டிமீட்டர் ஆழத்தில் பானையின் விளிம்பு போன்ற அமைப்பு தென்பட்டது. அதனை கவனமாக தொடர்ந்து வெளிப்படுத்தியபோது, சிவப்பு வண்ணத்தில் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ள இரண்டு சுடுமண் குழாய்கள் ஒன்றோடு ஒன்று பொருந்திய நிலையில் கிடைத்தன. இந்தக் குழாய்கள் 60 சென்டி மீட்டர் நீளமும் 20 சென்டி மீட்டர் அகலமும் கொண்டிருந்தன.

இந்தக் குழாய்கள் ஒவ்வொன்றிலும் விளிம்புகளைப் போல ஐந்து வளையங்கள் உள்ளன. இந்த இரு குழாய்களும் ஒன்றோடு ஒன்று நன்கு பொருத்தப்பட்டிருப்பதால், நீரைப் பாதுகாப்பாகக் கொண்டுசெல்ல இவை பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என அகழாய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த சுடுமண் குழாய்க்குக் கீழே, பீப்பாய் வடிவிலான மூன்று சுடுமண் குழாய்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்திய நிலையில் காணப்பட்டன. ஆகவே இந்த இரண்டு குழாய்ப் பாதைகளும் வெவ்வேறுவிதமான பயன்பாட்டில் இருந்திருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது.

கீழடி ஐந்தாம் கட்ட ஆய்வில் கிடைத்த வடிகால் அமைப்பு Image captionகீழடி ஐந்தாம் கட்ட ஆய்வில் கிடைத்த வடிகால் அமைப்பு

பீப்பாய் வடிவிலான குழாயில் வடிகட்டி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழாயின் இறுதிப் பகுதி இரண்டடுக்குப் பானை ஒன்றில் சேர்கிறது. ஆகவே இந்தப் பீப்பாய் வடிவிலான குழாய் மூலம் அந்தப் பானையில் திரவப் பொருளைச் சேகரித்திருக்கலாம் என கள ஆய்வாளர்கள் கருதுகின்றன.

இதே குழியின் மற்றொரு பகுதியில் திறந்த நிலையில் நீர் செல்லும் வகையிலான செங்கலால் கட்டப்பட்ட வடிகால் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது 5.8 மீட்டர் நீளமும் 1.6 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது. இந்த வடிகால் அமைப்பின் மீது ஓடுகள் பாவப்பட்டிருந்தன.

கீழடி ஐந்தாம் கட்ட ஆய்வில் கிடைத்த வடிகால் அமைப்பு

இந்தியத் தொல்லியல் துறை (ASI) ஏற்கனவே நடத்திய இரண்டாம் கட்ட அகழாய்வில் வெளிப்பட்ட செங்கல் கட்டுமானத்தினால் ஆன வடிகால் அமைப்பின் தொடர்ச்சியே இந்த வடிகால் அமைப்பாகும்.

இதே இடத்தில் தொடர்ந்து நடந்த அகழாய்வுப் பணியில் 52 சென்டி மீட்டர் ஆழத்தில், கூரை ஓடுகள் செங்குத்தாக அடுக்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டன. மேலும் ஒரு செங்கல் கட்டடமும் வெளிப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/india-50148597

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கீழடி காட்டுவது ஆரியமா, திராவிடமா, தமிழியமா?

1.png

கீழடி என்ற பெயர், தமிழக வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டமாக மட்டுமின்றி தமிழர் உணர்விலும் பெரிய அதிர்வை உண்டாக்கியுள்ளது. பொதுவாக, இம்மாதிரி கண்டுபிடிப்புகள் வெளிவரும்போது புத்திஜீவிகள் வட்டாரத்தில் சற்று பரபரப்பாக பேசப்பட்டு அது தணிந்துவிடுவது வழக்கம். ஆனால் இம்முறை, கீழடியில் அகழ்வாய்வு கண்டுபிடிப்புகள் வலைதளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் அனைத்திலும் அதிகமாகப் பேசப்படும் பொருளாக ஆகியுள்ளது. தமிழகத்தின் மொத்த வரலாற்றினையும் கீழடி அகழ்வாராய்ச்சி மாற்றப் போகிறது என்று ரொமிலா தாப்பர் கூறுகின்றார்.

ஆற்றங்கரை நாகரிகம் என்ற நிலையிலிருந்து, தமிழ் நாகரிகம் என்று பேசும் அளவிற்கு நகர்த்தப்பட்டு உள்ளது, கீழடி அகழ்வாராய்ச்சி.

கிணறு தோண்ட பூதம் கிளம்பியது என்பார்கள். இங்கே 1974இல்  கிணறு தோண்டியபோது வெளிப்பட்ட வரலாற்று பூதம்தான் இது. பள்ளி ஆசிரியர் பாலசுப்ரமணியன் அவர்கள் தன்னுடைய மாணவர்கள் தங்கள் பகுதியில் கிணறு தோண்டும்போது கிடைத்ததாக கூறிய தடயங்களைக் கண்டு வியந்து மத்திய, மாநில தொல்லியல் துறைக்கு தொடர்ந்து கடிதம் எழுதியுள்ளார். ஆனால் பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை.

டாக்டர் கே.வி.ராமன் என்னும் தொல்லியல் அறிஞர், 1950இல் ஒரு தொல்லியல் நிலஅளவையை மதுரை, திருமங்கலம், மேலூர், பெரியகுளம் ஆகிய தாலுகாக்களில் தமிழகத்தில் மேற்கொண்டார். களஆய்வில், இப்பகுதிகளில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் நடத்த இடங்களும், தடயங்களும் அதிகமாக உள்ளன என்றார்.

பிறகு 2006இல் பேராசிரியர் ராமன் அவர்கள், தங்கள் மாணவர்களுடன் வைகை நதிக்கரையோரம் தொல்லியல் ஆய்வை மேற்கொண்டார்.Capture-238x300.jpg

பின்னர் 293 இடங்களில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் கல்வெட்டுகள், ஈமத்தாழிகள், பானை ஓடுகள், புதைக்கப்பட்டவர்களின் எலும்புகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன.

அதன்பின்னர் அமர்நாத் இராமகிருஷ்ணன் தலைமையில் மத்திய தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. 2014 முதல் தொடங்கிய இந்த ஆய்வு, தொடர்ந்து மூன்று ஆண்டுகள் மத்திய தொல்லியல் துறை சார்பாக நடத்தப்பட்டு பிறகு கைவிடப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் எழுப்பப்பட்ட பலத்த எதிர்ப்பின் விளைவாக தமிழக அரசே மாநில தொல்லியல் துறை மூலமாக கீழடியில் அகழ்வாய்வைத் தொடரத் தொடங்கியது.

2017 முதல் இன்று வரை இந்த ஆய்வு நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாத இறுதியில் ஐந்தாம் கட்ட ஆய்வு நிறைவுபெறுகிறது. 110 ஏக்கர் பரப்பளவுள்ள கீழடி மணலூர் போன்ற கிராமங்களில், இதுவரை சுமார் 4 ஏக்கர் பரப்பளவில்தான் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கீழடி அகழ்வாய்வில், மக்கள் வளமாக வாழ்ந்து சென்றதற்கான சில புதிய தரவுகள் கிட்டியுள்ளன. இவை தமிழர்களுக்குத் தமிழ் வரலாற்றை அறிவதில் ஆர்வத்தை அதிகரித்துள்ளன. பெரும்பாலும் சங்க இலக்கியக் குறிப்புகளை மட்டுமே வைத்து தமிழர் வரலாற்றுச் சிறப்பை பேசிவந்த நிலை மாறி, தற்போது வரலாற்றுச் சான்றுகளை முன்வைத்து பேசக்கூடிய அளவிற்கு தமிழ்ப் பண்பாட்டின் பலம் கூடியிருக்கின்றது. இதுவரை, சுடுகாடு மற்றும் இடுகாடுகள்தான் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் இம்முறை, மக்கள் வாழ்விடம் கண்டெடுக்கப்பட்டுள்ளதே கீழடியின் சிறப்பாகும்.

இலக்கியத் தரவுகள், பல அகழ்வாய்வு கண்டுபிடிப்புகளுடன் ஒத்துப்போவதையும் அறிஞர்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.

கீழடியில், முதல்முறையாக சங்ககால மக்கள் வாழ்க்கையைக் காட்சிப்படுத்தும் ஆதாரங்கள் கிட்டியுள்ளன. கட்டட அமைப்புகள், வீட்டுச் சுவர்கள், தரைத்தளம், வடிகால்கள், தொட்டிகள், கிணறுகள் என்று பலவகையான கட்டிட அமைப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 200 செ.மீ தோண்டியபோது பொருட்களின் காலகட்டம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு. 353 செ.மீ அடிக்குமேல் தோண்டிய பொருட்களின் காலகட்டம் கி.பி.ஆறாம் நூற்றாண்டு என்று அறியவருகிறது. தோண்டத்தோண்ட வரலாறு மேலெழும்புகின்றது. புதிய கேள்விகளை அது உருவாக்குகின்றது. நம்முடைய அரசியல் கருத்தியல்களை கேள்விக்குள்ளாக்கும் சக்தி அவற்றிற்கு இருப்பதாகக் கருதுகிறேன்

என்ன காரணத்தினாலோ, தமிழகத்தில் அதிக அளவு அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படவில்லை. மேற்கொள்ளப்பட்ட இடங்கள் பற்றிய அறிக்கையும் முழுமை பெறவில்லை. அவை பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பெரியளவில் ஏற்படவில்லை. ஆனால் கீழடியில் அகழ்வாய்வு தமிழகத்தைப் பெரிய அளவில் ஈர்த்திருக்கிறது. அவ்வூரில் பெரும் கட்டடங்கள் கட்டப்படாத நிலை உள்ளதால், ஆய்வு மேற்கொள்ள முடிந்திருக்கிறது. அதுவும் பனைமரத்  தோப்புகள் அதிகம் உள்ளதால் அந்தப் புவிப்பரப்பு பாதிப்படையாமல் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது சிறப்பான அம்சம்.

1001 பானை ஓடு எழுத்துகள் கிடைத்துள்ளன. கருப்பு-சிவப்பு வண்ணங்களில், மற்றும் கலை வடிவங்களுடன் கிட்டியுள்ளது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. பானையில் எழுத்துகளைப் பதிக்கவேண்டுமென்றால், பானை சுடுவதற்குமுன் எழுத்துகளை களிமண்ணில் எழுதி பின்னர் சுடவேண்டும். அப்போதுதான் பெயர் அப்படியே பொறிக்கப்படும். அப்படியானால் அதை பானை செய்தவர்களே செய்திருக்கவேண்டும். அப்படியாயின், குயவர்கள் எழுத்து அறிவு கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர். இதில் 17 பானை மாதிரிகள் இத்தாலியைச் சேர்ந்த பைசா நகர் பல்கலைக்கழகத்திற்கு கரிம சோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டன. கருஞ்சிவப்பு பானைகள் உருவாக்க 1100 டிகிரி செல்சியஸ்  சூடு செய்யப்படவேண்டும். அப்போதுதான் கருப்பு-சிவப்பு பானை உருவாகும். அதைச் செய்யும் அளவிற்கு அவர்கள் திறனாளியாக இருந்திருக்கிறார்கள்.

கீழடியில் கால்தடம் பதிக்கும் இடமெல்லாம் பழங்கால பானை ஓடுகளைப் பார்க்க முடிகிறது. மக்கள் புழங்கிய இடம் என்று புரிகிறது. பதினைந்தாயிரம் பேர் இங்கு வாழ்ந்திருக்கக் கூடும் என்று அமர்நாத் கூறுகின்றார். ஹரப்பா நாகரிகத்தில் 30 ஆயிரம் பேர் வாழ்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. இவ்வளவு பேர் வாழ்ந்திருந்தால், அது ஒரு நகர நாகரிகம்தான். வெளிநாட்டுப் பானைகளும் இங்கே காணப்படுவதாகத் தெரிகிறது.. இதிலிருந்து வேறுநாட்டுடன் வணிகம்சார்ந்த தொடர்பு இருந்திருக்கலாம் என்றும் யூகிக்கலாம். எழுபது வகை விலங்குகளின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுடுமண் சிற்பங்களில் மனித முகம் முதல் விலங்குகள் வரை காணப்படுகின்றன. தங்கம் இரும்பு, செம்பு என்று உலோகப் பொருட்களும் காணப்படுகின்றன. தங்க நகைகளும் தென்படுகின்றன. இவையெல்லாம் ஒரு வளமான நகர நாகரிகத்தின் எச்சங்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

தற்போது கீழடியில் அகழ்வாய்வு நடைபெறும் இடத்திற்குச் சொந்தக்காரர் தமிழ்ப் பேராசிரியர் கரூர் முருகேசன் அவர்கள். முதல் கட்டத்தில், கிராமத்தில் இணைந்த மக்கள் பலர் இந்த அகழ்வாய்வு குறித்து அச்சப்பட்டார்கள். முருகேசன், தன் நிலத்தை தொல்லியல் துறைக்கு தானமாக வழங்கத் தயாராக உள்ளதாக, தெரிவித்தப் பிறகு, படிப்படியாக மக்கள் இந்த அகழ்வாய்வுத் தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்காது என்று புரிந்துகொள்ளத் தொடங்கி ஒத்துழைப்பும் தந்துவருகிறார்கள்.

ஏதென்ஸும் கீழடியும்

சென்ற ஆண்டு நான் ஏதென்ஸ் நகருக்குச் சென்றிருந்தேன். அங்கு இம்மாதிரி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட இடம் பாதுகாக்கப்பட்டு அற்புதமான அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.

கீழடி போன்றே நீர் வாய்க்கால்களும், பானை ஓடுகளும், கல்வெட்டுகளும், சிலைகளும் இன்னும் பல அம்சங்களைக் கொண்ட இடம் அது..

கீழடி போன்று பல தடயங்களைக் கொண்டுள்ள அந்த நிலப்பரப்பில்மேல் கண்ணாடி கூரை வேய்ந்து அதன்மீது நின்று பார்வையாளர்கள் கீழேயுள்ள தொல்லியல் எச்சங்களை காணக்கூடிய வாய்ப்பை அந் நாடு ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட நீர் வாய்க்கால்களும், அடுக்கு கிணறுகளும் தனித்தனியாக பெயர்த்து கொண்டு செல்லப்பட்டு, பின்னர் வாய்ப்பு இருப்பின், அதேமாதிரி ஏதாவது ஒரு மியூசியத்தில் அருங்காட்சியகத்தின் மூலையில் அடுக்கப்படும். இல்லையெனில், இருட்டு குடோனில் மூட்டைகட்டி வைக்கப்பட வாய்ப்பு உண்டு.

தமிழர் பண்பாட்டின் அபூர்வத் தரவுகளைப் பாதுகாத்து, வரும் தலைமுறையினர் தொடர்ந்து பார்க்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்துவது மிகமிக அவசியம். இந்த நிலையில், அக்டோபர் மாதத்தில் தோண்டப்பட்ட குழிகள் அனைத்தும் மூடப்பட உள்ளன.

கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மற்றும் கட்டட அமைப்புகள், மூட்டை கட்டப்பட்டு மூலையில் அடுக்கப்பட்டால், அதுவொரு வரலாற்றுத் துரோகமாகும். கீழடியைப் பொருத்தவரை மக்களின் பங்களிப்பு அதிகரித்து வருகின்றது. அதுபற்றிய உரையாடல்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. இவை கண்டிப்பாக தொல்லியல் துறைக்கும், இதர அதிகார அமைப்புகளுக்கும் பெரும் நெருக்கடியை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆனாலும் மறதி என்னும் நோய், திசை திருப்புதல் என்னும் செயல் மக்களின் வேகத்தைக் குறைக்கும் வேலையைச் செய்யும்.

இது ஒருபுறமிருக்கையில், சில முக்கிய விவாதங்களை கீழடி அகழ்வாய்வு ஏற்படுத்தியிருக்கிறது. பல பதில் சொல்ல இயலாத பல கேள்விகள் உண்டாகி வருகின்றன.

ஆரியமா, திரவிடமா, தமிழியமா?

கீழடி நாகரிகம் என்று சொல்லும்போது நாகரிகம் என்ற சொல் ஒரு பிரமாண்ட உணர்வை உண்டாக்குகிறது. தமிழர் நாகரிகம் என்று சொல்லும்போது மேலும் இனப் பெருமை உணர்வு அதிகரிக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்தப் பெருமை, இதுகாறும் பேசப்பட்டு வந்த திராவிடப் பெருமையை எதிர்ப்பதாக, திராவிடப் பெருமைக்கு சவால்விடுவதாக அமையும்போது இதை எப்படிப் புரிந்துகொள்வது என்ற சிக்கல் திராவிடப் பாரம்பரியத்தை ஆதரித்துவந்த தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று, ஆரிய நாகரிகத்தின் நீட்சியா இது என்று கேட்டால், மேலும் சிக்கல் அதிகரிக்கிறது.2-300x202.png

ஆரியமா, திராவிடமா, தமிழியமா என்ற கேள்விகள் பண்பாட்டு அரசியல் தளத்தில் இன்று மேலோங்கி நிற்கின்றன. அரசியல் அமைப்புகள் அவரவர் கருத்தியல் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப ஏதேனும் ஒரு அம்சத்தை எடுத்துக்கொண்டு அதைப் போற்றுவதும் மற்ற இரண்டை நிராகரிப்பதுமான வேலையைச் செய்துவருவதையும் நாம் காணமுடிகிறது.

இந்தப் பிரச்சினையை எப்படி அணுகுவது என்பதுபற்றி என்னுடைய கம்யூனிச தோழர் மதிவாணன் அவர்களிடம் உரையாடியபோது, அவர் சொன்ன பதில் யோசிக்கத் தக்கதாக இருந்தது. இந்தக் கால அளவுகளையும் கோட்பாடுகளையும் வைத்து புராதன கால, பண்டைக்கால வாழ்வியல் முறைகளையும், பண்பாட்டையும் புரிந்துகொள்ள முயற்சிப்பது தவறானதாகும் என்பதே அது. மேலும் ஆரியம், திராவிடம் என்ற சொற்கள் அல்லது பாகுபாடுகள் எவையும் இல்லாத காலகட்டத்தை தற்பொழுது இந்த வேறுபாடுகள் கொண்டு வகைபாடு செய்வது நியாயம்தானா என்ற கேள்வியும் அர்த்தமுள்ள கேள்விதான்.

மனித குலம் தோன்றிய வரலாறு என்பதோடுதான் எந்த ஒரு பண்பாட்டு அகழ்வாய்வையும் இணைத்துப் பார்க்க வேண்டும் என்றார், அவர்.

அதற்கான முயற்சிகள் கீழடியில் முதல் அடியாக எடுத்து வைக்கப்பட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மூலமாக ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வு மையத்துடன் இணைந்து மரபணு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளது. வழக்கமான தொல்லியல் ஆய்வுகள் மட்டுமே கீழடி பண்பாட்டை நாகரிகத்தை புரிந்துகொள்ள போதுமானதாக இருக்காது. மேலும் பல அறிவியல் ஆய்வுகள் தேவைப்படும். அப்படி ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்போது அதன் முடிவுகள் கீழடியை மனிதகுல வரலாற்றின் மற்றுமொரு முக்கியப் புள்ளியாக உறுதிப்படுத்தும் வாய்ப்புகள் நிறைய உள்ளன.

ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட ஆதிமனிதன், இனக்குழுக்களாக ஆங்காங்கே நாடோடியாகத் திரிந்து வாழ்ந்தான் என்பதும் மானிடவியல் அம்சமாகும். அந்த வகையில், மரபணு ஆய்வு என்பது நம்முடைய வரலாற்றுப் பார்வையை மேலும் விசாலமாக்கும் ஆகும் வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், எனக்கு ஆச்சரியமளித்த முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், அங்கு காணப்பட்ட ஒரு பெயர்தான். உதிரன், மடைச்சி குவிரன், அயனன்,  சாதன், சந்தனவதி, வேந்தன் போன்ற பெயர்கள் எல்லாம் கண்டெடுக்கப்பட்டுள்ளபோதிலும், ‘ஆதன்’ என்ற பெயர் என்னை மிகவும் ஈர்க்கிறது. கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகரம் ஆதன் நகரமாகத்தான் தமிழர்களால் பேசப்படுகிறது. கிரேக்கத்தில் ஆதன் என்ற சொல் சூரியன் என்று பொருள்படும். இங்கும் அப்படியே. இன்னும் பல மொழிக் குறியீடுகள் நமக்கு உலகளாவிய தொல்லியல் கண்டுபிடிப்பு குறியீடுகளை ஒத்திருப்பது ஆச்சரியத்தைத் தருகின்றன.

தமிழர்கள், கடல்கடந்து வாணிகம் மேற்கொண்டதால் இம்மாதிரியான பொதுமைப் பண்புகளை இங்கு காணமுடிகிறது என்று அதற்கு ஒரு பதில் கூறப்படுகிறது என்றாலும் இன்னும் அறியப்படவேண்டிய வரலாற்று ரகசியங்கள் ஏராளமாக இருக்கக்கூடும். அவை தெரிய வரும்பொழுது இந்த நாகரிகங்கள் ஆரியமும் அல்ல திராவிடமும் அல்ல தமிழியமும் அல்ல, மானுடம் என்று உணரும்நிலையும் வரக்கூடும்.

மக்கள் தொல்லியல்

தமிழினத்தின் தொன்மையை பறைசாற்றும் இந்த அகழ்வாய்வு, அரசியல் காரணங்களால் வீரியம் குறைக்கப்பட்டு, முடக்கப்படும் அபாயமும் உள்ளது.

பேராசிரியர் ரத்தினகுமார் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதுபோல, தொல்லியல் தற்போது மக்கள் தொல்லியலாக மாறிவிட்டது. ஒரு கட்டத்தில், கீழடி அகழ்வாய்வு நிறுத்தப்படும் நிலை உண்டானபோது பல தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின என்பதும், மக்கள் விழிப்போடு போராடினார்கள் என்பதும், தனி ஒரு வழக்கறிஞர் வழக்குத் தொடுத்தார் என்பதும் மட்டுமல்ல, பல்வேறு நாடுகளில் இருந்தும் கீழடி அகழ்வாய்வை காண லட்சக்கணக்கான மக்கள் வந்துபோகிறார்கள் என்பதும் இது மக்கள்மயப்பட்ட தொல்லியல் ஆகிவிட்டது என்பதை புரியவைக்கிறது.

பானையோடுகளிலும் கல்வெட்டுகளிலும் பொறிக்கப்பட்ட எழுத்துகளை ஏன், பிராமி என்று அழைக்கிறீர்கள். அது தமிழிதான் என்று தமிழ்தேசியவாதிகள் மட்டுமல்ல; பலரும் இன்று பேசுவது மொழி வரலாற்றில் மற்றும் ஒரு திருப்புமுனையாகும்.

தமிழகத்தில், தமிழுக்கே உண்டான சொல் கலைச்சொற்களை எழுத்து வடிவத்தில் வைத்திருப்பதற்குப் பெயர் தமிழியாகத்தான் இருக்கவேண்டும் என்று இனிவரும் தொல்லியல் அறிஞர்களுக்கு, இயக்கவாதிகள் வழிகாட்டி வருகிறார்கள். பொதுவாக தொல்லியல் அறிஞர்கள், அறிவியல் கோட்பாட்டை மட்டுமே நம்பி, தங்கள் ஆய்வை வெளிக்கொண்டு வருவது வழக்கம். ஆனாலும், அந்த ஆய்வு முறைகளில் பண்பாட்டுக் கூர்மை, நுணுக்கங்கள் கணக்கில் எடுக்கப்பட வேண்டும் என்ற முக்கிய அம்சமும் தொல்லியல் ஆய்வு முறைகளில் சேர்க்கப்படும் நிலை இன்று உருவாக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் சாதிகள் இருந்தனவா, வழிபாடுகள் இருந்தனவா என்ற கேள்விகளுக்குத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வுகள்தான் பதில் சொல்லமுடியுமே தவிர, இப்போது கிடைத்தவை போதாது. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக கீழடி ஆய்வு இடத்தை அரசு பாதுகாத்து அதை ஒரு தொல்லியல் அருங்காட்சியகமாக அமைக்கவேண்டும் என்பதற்காக அனைவரும் வேறுபடுகளின்றி குரல் எழுப்புவது அவசியம்.

 

https://uyirmmai.com/article/கீழடி-காட்டுவதுஆரியமாதி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழடி தந்த வெளிச்சம்

HISTORIC_POTTERY1.jpg

கீழடித் தொல்லியல் களத்தின் ஆய்வு முடிவுகள் அறியக் கிடைத்தவுடன் தமிழ்க் குமுகாயத்திற்குப் புத்துயிர் பெற்றதுபோல் ஆகிவிட்டது. வரலாற்றினை வைத்துப் பேசும்போது, நமது பழைய இலக்கியங்களிலிருந்தே பெரும்பான்மையான எடுத்துக்காட்டுகளைக் கூறிக்கொண்டிருந்தோம். அவற்றை முறையாய் நிறுவும் பருப்பொருள் சான்றுக்கு நம்மிடம் பற்றாக்குறைதான். எண்ணற்ற தமிழறிஞர்கள் தமிழின் தொன்மையைக் குறித்துப் பேசமுற்பட்டபோதெல்லாம் ‘அறிவியல் மட்டத்திலான ஆய்வுகளைக் கொண்டுவாருங்கள், களங்களைக் காட்டுங்கள்’ எளிமையாய் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். நூற்றாண்டுகட்கும் மேலாக நம் தமிழறிஞர்கள் தத்தம் முடிவுகளைத் தமக்குள்ளேயே அறிவித்துக்கொண்டு அடங்கினர் என்பதுதான் உண்மை.

திருக்குறளை எடுத்துக்கொள்ளுங்கள். ‘திருவள்ளுவர் எப்போது பிறந்தார், திருக்குறள் எப்போது இயற்றப்பட்டது ?’ என்பது பேசுபொருளாக இருந்தது. திருக்குறள் கிபி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகே இயற்றப்பட்டது என்று ஒரு தரப்பினர் தொடர்ந்து கூறிவந்தனர். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திருக்குறள், சங்கம் மருவிய காலத்தில் தோன்றியது என்ற மட்டத்தில்தான் ஏற்றுக்கொண்டனர். அதனிலும் பல இடையூறுகள் இருந்தன. திருக்குறள் ஒருவரால் இயற்றப்பட்டிருக்க முடியாது என்றும் பல்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்டவற்றின் தொகுப்பு நூல்தான் அஃது என்றும் கூறினர். ‘திருக்குறளில் பல வடசொற்கள் கலந்திருக்கின்றன, அதனாலேயே அதன் காலக்கணக்கினைப் பின்தள்ளியே எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்றனர்.08TH_KEEZHADI_-300x200.jpg

இருபதாம் நூற்றாண்டின் முதல் காற்பகுதியில் தமிழின் மாண்பினைக் கெடுக்கும் மணிப்பிரவாள நடைக்கு எதிரான இயக்கம் தோன்றியது. மறைமலையடிகளார் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம் அதற்கான முன்னெடுப்புகளைச் செய்தது. ‘கிறித்து பிறப்பதற்கு முப்பத்தோராண்டுகள் முந்திப் பிறந்தவர் திருவள்ளுவர்’ என்று மறைமலையடிகள், தெ.பொ.மீ., திரு.வி.க. ஆகியோர் கூடிய அவையில் முடிவு செய்யப்பட்டது. அதன்வழியே திருவள்ளுவர் ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

நம்முடைய தொன்மை அடையாளங்கள் எவ்வாறு அழிந்துபோயின என்பதைக் குறித்து ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவரோடு உரையாடினேன். ‘அக்காலத்தில் இயற்கையைவிடவும் போர்களே பேரழிவுகளை நிகழ்த்தின’ என்றார். பகைமுதிர்ச்சி பெற்ற மன்னர்களில் ஒருவன் போரில் வெற்றி பெற்றவுடன் எதிரி நாட்டு நகரங்களைத் தரைமட்டமாக்கி ஏர்பூட்டி உழுது எள் விதைத்து எருக்கம்பால் தெளித்துவிட்டே அகன்றானாம். நம் அறநூல்கள் அதைத்தானே சொல்கின்றன? நெருப்பிலும் பகையிலும் சிறிதும் மீதம் வையாதே என்கின்றன. ஒவ்வொரு தலைநகரமும் இப்படித்தான் வீழ்த்தப்பட்டது. ஒவ்வோர் அரசும் இப்படித்தான் உருத்தெரியாமல் அழிக்கப்பட்டது. இவ்வழி மட்டுமின்றி வெளியார் படையெடுப்புகள், கொள்ளையிடல்கள், சூறையாடல்கள் என எங்கெங்கும் அழிவுச் செயல்கள். இவற்றோடு இயற்கையும் தன் பங்குக்கு வேண்டிய பேரழிவினைச் செய்தது. குணகடலின் (வங்காள விரிகுடா) கரையில் அமைந்திருந்த துறைமுகத் தலைநகரங்கள் கடல்கோள்களால் மூழ்கடிக்கப்பட்டன. கடல்கோள் என்றால் என்னவென்றே தெரியாதிருந்த நமக்கு, அண்மையில் நேர்ந்த ஆழிப்பேரலைப் பேரிடர்தான் உண்மையையே உணர்த்தியது. இன்றைக்கு நமக்கு மாமல்லையும், பூம்புகாரும், நாகையும், கபாடபுரமும் எப்படியெல்லாம் கடலலைகளால் விழுங்கப்பட்டிருக்கும் என்று கற்பனையில் காணத் தெரியும்.

சங்கம் வளர்த்த தமிழின் காலக் கணக்குகள் மயங்கி விழ வைக்கின்றன. தலைச்சங்கத்தின் காலம் ஏறத்தாழ, நான்காயிரத்து நானூற்று நாற்பது ஆண்டுகள். இடைச்சங்கம் நிலவிய காலம் மூவாயிரத்து எழுநூறு ஆண்டுகள். இடைச்சங்க காலத்தின் முடிவில்தான் கடல்கோளால் கபாடபுரம் நீரில் மூழ்கியது. கடலோரத்தில் தலைநகரம் இருப்பதால் ஏற்படும் அழிவை எண்ணி இன்றுள்ள மதுரைக்குப் பாண்டிய மன்னன் இடம்பெயர்ந்தான். இன்றைய மதுரையில் பாண்டியன் முடத்திருமாறனால் நிறுவப்பட்டதே கடைச்சங்கம் எனப்படுவது. அதன் காலம் ஏறத்தாழ, ஆயிரத்து எண்ணூற்று ஐம்பது ஆண்டுகள். தமிழின் முச்சங்கங்கள் நிலவிய காலக்கணக்கு பத்தாயிரம் ஆண்டுகளைத் தொடுகிறது. கடல்கோள் ஏற்பட்ட பகுதிகளில் அகழாய்வுகள் செய்வதற்கு நாட்டின் செல்வ வளமும் அறிவியற் கருவிகளின் மேம்பாடுகளும் தேவைப்படும். அது நடக்கும் காலமும் வரும். ஆனால், கடைச்சங்கம் கூடிய இன்றைய மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயன்றவரை அகழாய்வு செய்வதற்குத் தடையேதுமில்லை.

முச்சங்கங்களின் காலக் கணக்குகள் இவ்வாறு இருக்கையில், அவற்றை நாம் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் வழியாகத்தான் தொடர்ந்து பற்றி வந்தோம். நம்மிடம் மீந்திருக்கும் தொன்மை நூல்கள் பலவும் வரலாற்றுக் காலத்தோடு தொடர்புடைய பேராக்கங்கள். வரலாற்றினை முந்திக்கொண்டு ஓரடி எடுத்துவைப்பதற்கு நமக்கு ஒரு பற்றுக்கோலும் கிடைக்கவில்லை. கீழடி அகழாய்வு முடிவுகளால் தமிழ்மொழி, தமிழ்ப் பண்பாடு, தமிழரசுகள் குறித்த அனைத்துக் கருதுகோள்களும் ஒரே பாய்ச்சலில் வரலாற்றின் முடியேறி நிற்கின்றன.

இந்திய வரலாற்றினை எடுத்தியம்பும் நூல்கள் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தோன்றியிருக்கின்றன. அவற்றினை முனைந்து ஆக்குவதற்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் தொட்டு இன்றைய காலகட்டம்வரை பல்வேறு அறிஞர் பெருமக்களும் பேருழைப்பினைச் செலுத்தியிருக்கிறார்கள். வரலாறு என்ற தகுதியைக் கொடுத்து ஏற்றுக்கொள்வனவற்றுக்கு தொன்மைச் சான்றுகள் பலவும் துணை நிற்க வேண்டும் என்கிறார்கள். மொழிப் படைப்புகள் அவற்றின் பழைமை கருதியே பொருட்படுத்தத்தக்கன என்றாலும் அவையே போதுமானவையல்ல. அவர்களுக்குத் திடமான சான்றுகள், ஆதாரங்கள், அகழ்விடங்கள், எச்சங்கள் வேண்டும். உலக வரலாறு தோன்றியது முதற்றே தோன்றி இயங்கும் நகரங்கள் பலவும் தமிழ்நாட்டில் உள்ளன என்றாலும் அங்கே எஞ்சியிருப்பவை முற்காலச் சான்றுகள்தாம். மதுரையிலும் காஞ்சியிலும் இல்லாத வரலாறா? ஆனால், அங்கே எஞ்சியிருப்பவை வரலாற்றுக் காலத்தின் எச்சங்கள். அதற்கும் முன்தள்ளி ஒருநாள் எண்ணை இடுவதற்கு நாம் எதனையும் பெற்றிருக்கவில்லை. நிலைமை இவ்வாறிருக்கையில், கீழடியில் கிடைத்தவை யாவும் பல நூற்றாண்டுகட்குப் பின்னே போ என்று வழிகாட்டிவிட்டன.

பள்ளியிலும் கல்லூரியிலும் பயின்ற வரலாற்று நூல்களை நினைவுபடுத்திப் பாருங்கள். இந்திய வரலாற்றின் காலம் மொகஞ்சதாரோ, அரப்பா என்றுதான் தொடங்கும். சிந்து ஆற்றங்கரையில் கண்டறியப்பட்ட ஒரு நாகரிகம் அதுநாள்வரை நாம் கருதியிருந்த வரலாற்றுக் காலத்திற்கு முன்னே கூட்டிச் செல்கிறது. அதன் நகர அமைப்புகள், கழிவுநீர் வடிகால் முறைகள், வீட்டுக் கட்டுமானங்கள், சித்திரச் செதுக்கல்கள், அறிதற்கரிய எழுத்து வடிவங்கள் ஆகியன அங்கே ஒரு வளவாழ்வு நிகழ்ந்த சுவடுகளை எடுத்துக் காட்டின. அவர்கள் அந்நிலத்தில் தோன்றி நிலைத்த குடிகளா, இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்களா என்று அறிவதில் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. உலகெங்கிலும் நதிக்கரைகளில் செய்யப்பட்ட அகழாய்வுகள் மனித வரலாற்றுக் காலத்தை மூவாயிரம் ஆண்டுகளேனும் பின்னகர்த்தி அறிவிக்கின்றன.

மொகஞ்சதாரோ, அரப்பா என்று தொடங்கும் இந்திய வரலாறு அடுத்து கௌதம புத்தர், மகாவீரர் என்னும் சமயப் பெரியார்களிடம் வந்து நிற்கும். பௌத்தத்தோடும் சமணத்தோடும் தொடர்புடைய நூல்கள் பேரளவு காப்பாற்றப்பட்டு வந்திருக்கின்றன. இந்திய வரலாற்றில் இடம்பெறும் முதற்பேரரசர் மௌரியரான அசோகர் ஆவர். அசோகருக்கு முந்தி இந்நிலத்தில் மன்னர்கள் ஆண்டார்கள்தாம். ஆனால், அவர்களைப் பற்றிய தொன்மைச் சான்றுகள் எவையும் கிடைக்கவில்லை. நந்தர்கள், மகதர்கள் மரபினில் பல அரசர்களை வரலாறு சுட்டிக்காட்டினாலும் அசோகரின் ஆட்சிக் காலத்துத் தொன்மைச் சான்றுகளால் அவரைப் பற்றிய செய்திகளை நிலைக்கச் செய்துவிட்டார். குப்தர்கள், அலெக்சாண்டர் படையெடுப்பு என அடுத்தடுத்து இந்திய வரலாறு தெளிவுபெற்று நடக்கிறது. காலவெள்ளத்தில் கரையாமல் இன்றுவரை எஞ்சியுள்ள கல்வெட்டுகளும் கட்டுமானங்களும் அம்மன்னர்களின் இருப்பினை வரலாற்றில் பதிய வைத்துவிட்டன. ஆனால், பத்தாயிரம் ஆண்டுத் தமிழ்ச்சங்க வரலாற்றினை உடைய தமிழினத்திற்கும் தமிழ் மன்னர்கட்கும் வரலாற்றின் முதற்பக்கங்களில் சிறு குறிப்பளவிலேனும் இடம் தரப்படவில்லை. கீழடியில் கிடைத்த சுவடுகள் அந்தத் தடையை உடைத்து நொறுக்குகிறது. புத்தர் பிறந்தது கி.மு. 563ஆம் ஆண்டு. கீழடியின் பழைமை கி.மு. ஆறாம் நூற்றாண்டைத் தொட்டு நிற்பதால் கீழடி தமிழினத்தின் வரலாற்றினை புத்தருக்கு முன்னதாக எழுதியாக வேண்டும். இந்திய வரலாற்றின் பாட வரிசை மொகஞ்சதாரோ, அரப்பா, கீழடியாம் மதுரை, புத்தர், மகாவீரர் என்று மாற்றியாகவேண்டும்.keezhadi-22-300x200.jpg

அஜந்தா குகைகட்குச் சென்றிருந்தபோது அதன் பழைமையைக் கண்டு வாயடைத்துப் போனேன். ஒரு மலைவளைவைப் பயன்படுத்தி அதன் பக்கவாட்டுச் சுவரை முகப்பாகக் கொண்டு முப்பதுக்கும் மேற்பட்ட குகைகள் குடையப்பட்டிருக்கின்றன. அதன் பழைமையான குகையினை கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கணிக்கின்றனர். அதிலிருந்து கி.பி. எட்டாம் நூற்றாண்டு வரைக்கும் ஒவ்வோர் அரசரும் தம் பங்களிப்பாக ஒரு குகையைக் குடைந்து வழங்கியிருக்கிறார். பௌத்த மதத் துறவிகள் அதில் வசித்திருக்கின்றனர். குகை என்றால், குனிந்து நுழைகின்ற சிறுவழி என்று நினைத்துக்கொள்ளாதீர். ஒவ்வொரு குகையும் இன்றைய திருமண மண்டபத்தளவுக்கு இருக்கும். உள்ளே பதின்கணக்கில் தனியறைகளும் கூடமும் தலைமையறையுமாக அவற்றைக் காண்பதற்கே மூச்சடைக்கும். தரையைத் தவிர்த்து மேல்கீழ் இடம்வலம் என எங்கெங்கும் சிறு இடைவெளியில்லாமல் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும். காலப்போக்கில், வட இந்தியாவில் பௌத்தத்தின் செல்வாக்கு குன்றியதும் அக்குகைகள் கைவிடப்பட்டு பல நூற்றாண்டுகளாகக் கேட்பாரற்றுக் கிடந்தன. புலி வேட்டைக்கு வந்த ஆங்கிலேயர் ஒருவர் அக்குகைகளைக் கண்டறிந்தார்.

தமிழர் வரலாற்றில் அப்படி ஏதேனும் ஒரு குகையோ, குடைவரையோ, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கண்டறியப்பட்டால் நன்றாக இருக்குமே என்று கற்பனை செய்திருக்கிறேன். மேற்குத் தொடர்ச்சி மலைச் சிற்றூரான மறையூரிலுள்ள கல்திட்டைகள் அத்தகைய தொல்லிடம்தான். சேரன் செங்குட்டுவன் இமயத்திலிருந்து கல்லெடுத்து வந்து கண்ணகிக்கு எடுப்பித்த ‘கண்ணகி கோட்டம்’ இன்றைக்கும் குமுளி மலைச் சிகரத்தில் கல்சரிந்து கிடக்கிறது. இவ்விரண்டைத் தவிர, அம்மலைத்தொடர்களில் தொன்மையானவை என்று கூறுவதற்கு எதுவும் என் நினைவுக்கு வரவில்லை. பேரியாற்றங்கரையில் சேரனின் முசிறித் துறைமுகம் வரைக்கும் பலப்பல அகழ்வுச் சான்றுகள் இருக்கலாம்தான். ஆனால், தொடர்ச்சியான வெள்ளப்பெருக்கும் அணைப்பரவல்களும் அச்சான்றுகளைப் பெயர்த்திருக்கக்கூடும். என் விருப்பத்திற்குக் கிடைத்த விடையாக அமைந்துவிட்டவைதாம் கீழடியின் வைகை ஆற்று வாழ்வுத் தடயங்கள்.

மேலே சொன்ன பேராசிரியர் கூறிய கூற்றொன்று இன்றும் நினைவிருக்கிறது. ‘தமிழ் மன்னர்களாம் சேர சோழ பாண்டியர்களைக் கற்பனை என்று நிறுவவும் வரலாற்றுப் புலத்தில் சில முணுமுணுப்புகள் எழுந்தன. அதனைத் தகர்த்தது ஒடியாவின் புவனேசுவரத்திற்கு அருகிலுள்ள உதயகிரிக் குன்றுகளில் கிடைத்த காரவேலனின் ஹாத்தி கும்பாக் கல்வெட்டுத்தான்’ என்றார், அவர். இந்திய வரலாற்றில் ஒரு கட்டுரை அளவுக்குக் கிடைத்த பெரிய கல்வெட்டு உதயகிரிக் குன்றத்தின் ஹாத்தி கும்பாக் கல்வெட்டுத்தான். கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட பழைமையான கல்வெட்டு அது. உதயகிரிக் குன்றுகளிலிருந்து கூப்பிடு தொலைவில்தான் அசோகரின் தௌலிக் கல்வெட்டும் உள்ளது. காடு சூழ்ந்த இயற்கை நிலமான ஒடியாவில் ஹாத்தி கும்பாக் கல்வெட்டானது, யாரும் தொடமுடியாத உயரத்தில் ஒரு பாறையின் நெற்றிப்பகுதியில் எழுதப்பட்டிருக்கிறது. நேரில் சென்று அதனைக் கண்டபோது நானடைந்த பேருணர்ச்சிக்கு அளவே இல்லை. அவ்வெழுத்துகளைச் செதுக்குவதற்கு இராட்டிரகூடத்திலிருந்து எழுத்தறிஞர் ஒருவர் யானைமீது அமரவைத்து அழைத்து வரப்பட்டாராம். அதன் பொருள், அன்றைய ஒடியத்தில் எழுதத் தெரிந்தவர் பக்கத்து நாட்டில்தான் இருந்திருக்கிறார் என்பதே. கல்வெட்டு முழுக்க அந்நிலத்தின் அரசன் காரவேலனின் அருமை பெருமைகளாக இருக்கின்றன. காரவேலன் என்ற பெயரே தமிழ்த்தன்மையோடுதான் இருக்கிறது. காரவேலன், அவரை வென்றான் இவரை வென்றான் என்று செல்லும் அந்தக் கல்வெட்டின் ஒரு பகுதியாக வரும் சொற்றொடர்தான் ‘தமிர தேக சங்காத்தம்’ என்பது. ‘பதின்மூன்று நூற்றாண்டுகளாக யாராலும் வெல்ல முடியாத வலிமையோடு திகழ்ந்த தமிழ்மன்னர்களின் கூட்டணி’ என்று அதற்குப் பொருளுரைக்கிறார்கள். அந்தக் கல்வெட்டினால் தமிழ் நிலத்தில் மூவேந்தர்கள் ஆண்டதும் அவர்கள் ஆயிரத்து முந்நூறாண்டுகள் ஒற்றுமையாய் விளங்கியதும் நிறுவப்பட்டது. அந்தப் பதின்மூன்று நூற்றாண்டினை வெறும் பதின்மூன்றாண்டுகள் என்று எடுத்துக்கொள்வோரும் இருந்தனராம். கீழடியில் கிடைத்த சான்றுகள் தமிழ் மன்னர்களின் அமைதியான ஆட்சிக் காலத்தைப் பதின்மூன்று நூற்றாண்டுகட்குத் தங்குதடையின்றி நிறுவுகிறது.

கீழடியில் கண்டறியப்பட்ட தமிழி எழுத்துகள்தாம் அனைத்திலும் உயர்வு. எழுதுவதற்கு வேறொரு நாட்டிலிருந்து எழுத்தறிஞர் அழைத்துவரப்பட்ட ஒடியப் பேரரசனுக்கு நானூறு ஆண்டுகள் முன்னமே கீழடித் தமிழர் ஒவ்வொருவரும் எழுத்தறிவு பெற்றிருந்தனர். அங்கே பானைகளில் கீறப்பட்டுள்ள பெயர்கள் ஒருவரே செய்ததுபோல் இல்லை என்பது ஆய்வு முடிவு. ஒவ்வொன்றிலும் வெவ்வேறு கையெழுத்து முறை இருப்பதாக உறுதிப்படுத்துகிறார்கள். அந்தப் பானைக்கு உரியவர் எவரோ, அவரே தம் பெயரை எழுதியுள்ளார். பானை செய்யப்பட்டபோது பச்சை மண்ணில் எழுதப்பட்டிருந்தால் செய்வினைஞரே அதனைச் செய்தார் என்று கொள்ளலாகும். அப்படியில்லாமல், சுட்ட பானையின்மீது கீறப்பட்ட எழுத்துகள் அவை. இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகட்கு முன்னம் ஒரு பானையை உடைமையாகக் கொண்டவர் எழுதப் படிக்கத் தெரிந்தவராக இருந்திருக்கிறார். இதனோடு தொடர்புபடுத்திப் பார்த்தால், தலைச்சங்கத்தில் 4449 புலவர்கள் தோன்றிப் பாடினர் என்பதும் இடைச்சங்கத்தில் 3700 புலவர்கள் தோன்றிப் பாடினர் என்பதும் எவ்வளவு நெருக்கமான உண்மை! புலவர்க்கு ஒரு நூல் என்று கணக்கிட்டாலும் எட்டாயிரம் நூல்கள் எழுதப்பட்டிருக்க வேண்டுமே. அழிந்துபோன நூல்கள், கடல்கொண்ட நூல்கள் என்று நாம் கொள்ளவேண்டியவை அவற்றைத்தாம்.

தொடர்ந்து இலக்கண நூல்களில் பயிற்சி மேற்கொண்டிருக்கும் அடிப்படையில் சொல்கிறேன். இலக்கண நூல்களுக்கு நிகரானவை அவற்றுக்கு எழுதப்பட்ட உரைகள். தமிழ் மரபில் முதல்நூல், வழிநூல், உரைநூல் என நூல் இயற்றுவதில் உரைநூல்களுக்கும் மதிப்பான இடம் தந்திருக்கிறோம். இலக்கணத்தின் திறவுகோல்கள்தாம் அவற்றுக்கு எழுதப்பட்ட உரைநூல்கள். நம் உரைநூல்களில் இலக்கணத்தை விளக்கும் பொருட்டு அடிக்கடி எடுத்துக் காட்டப்படும் பெயர்கள் ஆதன், சாத்தன், கொற்றன் போன்றவை. இந்த ஆதன் என்ற பெயர்க்கு உயிர் என்று பொருள். உயிரானவன். தமிழர்கள் தமக்குச் சூடிக்கொண்ட பெயர்களில் ஆதன் என்பதற்குத் தலையாய இடமுண்டு. சேரர்களும் தம் பெயர்களோடு ஆதன் என்று சேர்த்துக்கொள்வர். சேரலாதன் என்று சேர மன்னர்கள் பலரும் பெயர்கொண்டிருக்கின்றனர். சாத்தன் என்பதற்கு உண்மையானவர் என்ற பொருளைக் கற்பிப்பேன். சீத்தலைச் சாத்தனாரை அறிவோம். கீழடியில் காணப்பட்ட பானை உடைவுகளில் தமிழி எழுத்துகளில் ஆதன், குவிரன் முதலான பெயர்ச்சொற்களைக் காண்கிறோம். குவிரம் என்றால் காடு. காட்டுக்குரியவன் என்ற பொருள் தருவது குவிரன் என்ற சொல். அந்தப் பானையை வைத்திருந்தவன் ஆதன் என்பானும் குவிரன் என்பானும். ஆதன் என்ற சொல்லுக்குத் தமிழ்ப் பெயர் மரபோடு அவ்வளவு நெருக்கமான தொடர்புண்டு. எம் தந்தை எந்தை என்று ஆகும். நும் தந்தை நுந்தை என்று ஆகும். ஆதன் தந்தை ஆந்தை என்றும் சாத்தன் தந்தை சாத்தந்தை என்றும் சேரும். பிசிர் என்ற ஊரைச் சேர்ந்த ஆதனின் தந்தைதான் பிசிர் ஆந்தை எனப்பட்டவர். பிசிராந்தையார் என்ற புலவர் எழுதிய ஆறு பாடல்கள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கையில் பிசிர் ஆந்தையாரின் மகன் வைத்திருந்த மட்கலமோ அது என்ற பேருவகை பெருகுவதைத் தவிர்க்க முடியவில்லை.

கீழடிக் காலத்தை அன்றைய நிலைமையோடு தொடர்புபடுத்திப் பார்த்தால்தான் அதன் பெற்றி உணரப்படும். கிழக்கிலும் தென்கிழக்கிலும் மேற்கிலும் கண்மாய்கள் அமைந்த வளமான நிலத்தில் ஒரு நகரமைப்பும் தொழிற்கூடமும் இருந்திருக்கின்றன. வைகை ஆறு ஊற்றுத் தண்ணீருக்குப் பெயர் பெற்றது. வை கை என்ற தொடரே வைகை ஆயிற்று என்பர். வைகை ஆற்றில் வெள்ளம்போனால்தான் தண்ணீர் கிடைக்கும் என்றில்லை. வெள்ளம் வடிந்தபிறகும் அதன் மணற்பரப்பில் கையை வைத்தால் ஊற்றுத் தண்ணீர் கைக்குழியில் நிறைந்துவிடும். அப்படியொரு பஞ்சுப் படுகையைக் கொண்ட ஆறுதான் வைகை. இன்றுள்ள வைகை ஆற்றிலிருந்து கூப்பிடு தொலைவில் அமையப்பெற்றுள்ள கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உறைகிணறுகள் நம் நீர்மேலாண்மையைப் பறைசாற்றுபவை. மூன்றடி விட்டத்திற்குப் பன்னிரண்டு அடிகள் வரைக்கும் ஆழமாய் எடுக்கப்பட்ட கிணற்றிலிருந்து நிலத்தடி ஊற்றுநீர் பெருகிவர, அதனைக் காப்புச் செய்வதற்கு மட்பாண்ட அமைப்பினை வனைந்து கவிழ்த்து உறையிட்டிருக்கின்றனர். அதனால் நீர் நிறைந்ததும் குளிர்ந்துவிடும். நிறைநீரினால் கிணற்றின் ஓரச்சுவர்கள் அரிக்கப்படமாட்டா. ஊற்றாய்ப் பெருகிய நீர் ஓரச்சுவர்களால் உறிஞ்சப்படுவதும் தடுக்கப்படும். வேறுசில பானைகள் அளவான துளைகளோடு கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் கூழாங்கல், மணல் போன்றனவற்றை இட்டு நீரினை வடிகட்டியிருக்கிறார்கள். வேறொரு பானையிலும் கணக்கான துளைகள் உள்ளன. ஒரு விளக்கினை ஏற்றிவைத்து அவ்விளக்கினை அப்பானையைக் கொண்டு மூடிவிடுவார்கள். விளக்கின் சுடரானது காற்றில் அணையாமல் எல்லாத் திக்கிலும் சீரான ஒளியைக் கொடுக்கும் ஏற்பாடு. அவை மட்டுமின்றி, ஓரிடத்தில் பானை உடைவுகள் பெருங்குவியலாய்க் கிடக்கின்றன. அவ்விடத்தில் மட்பாண்டங்கள் வனையும் தொழிலகம் இருந்திருக்கும் என்பது துணிவு.download-1.jpg

தொல்மாந்தரின் கட்டுமான அறிவினில் மூன்று முறைகள்தாம் பெரிதாக வியக்கப்படுகின்றன. முதலில், இயற்கைக் குகைகளைத் தமக்கான இருப்பிடமாகக் கொண்டான். அடுத்து, குகையைக் குடையும் கலையையும் கற்றான். தன் தலைக்குமேல் பேரெடையை நிறுவிக்கொள்ளும் கூரை முறைகளில் திட்டமான இடத்திற்கு அவன் சேராததால் பாறைகளையும் மலைகளையும் குடைந்து பெற்ற வதிவிடங்களில் பாதுகாப்பாய் வாழ்ந்தான். மனித வாழ்வு பரவலாக்கம் ஆனபோது எல்லாவிடங்களிலும் பாறையையும் மலையையும் தேடமுடியாதே. அதனால் கற்களைச் சீராக அடுக்கும் முறையில் ஒரு கட்டுமானத்தைக் கண்டான். முறையான வடிவங்களில் உடைத்தெடுக்கப்பட்ட கற்களை அடுக்கிச் சுவர்களை நிறுத்தி அதற்கு மேற்கூரை வேயும் முறை அது. அந்த மேற்கூரைகள் கீற்றுகளாகவோ, ஓலைகளாகவோ, கற்பாளங்களாகவோ இருந்தன. கற்கள் கிடைக்காத இடத்தில் என்ன செய்வது? அங்கேதான் கட்டுமானத்திற்கு உதவும் கற்களைச் செயற்கையாக ஆக்கிக்கொள்ளவும் தொடங்கினான். வண்டலும் களிமண்ணும் சேர்ந்த கலவையை நன்கு பிசைந்தெடுத்து வேண்டிய வடிவில் பாளங்களாக வார்த்தெடுத்துச் சுட்டால் அதுதான் செங்கல். அவ்வாறு சுடப்பட்ட செங்கல் எடை தாங்கும் வலிமையோடு காலங்கடந்து நிற்கும். ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கீழடித் தமிழனுக்குச் சுட்ட செங்கல்லின் ஆக்கமும் பயன்பாடும் தெரிந்திருக்கிறது. அங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுவர்க் கட்டுமானங்கள் நல்ல திட்டமான வடிவத்தில் வார்த்தெடுக்கப்பட்ட செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கின்றன. அப்படியானால், கட்டுமானக் கலையில் தமிழர்கள் உலகோர்க்கு முன்னோடியாக விளங்கியிருக்கிறார்கள் என்றே கொள்ளலாம். அந்தக் கட்டுமானப் பேரறிவு சுவரோடு நின்றுவிடுவதில்லை. கலம் கட்டுவது வரைக்கும் நீளும்.

உலோகங்கள் எனப்படுகின்ற மாழைப் பொருள்கள் கத்திகளாகவும் வாள்களாகவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. ஆறாம் நூற்றாண்டுத் தமிழன் அம்பு, ஈட்டி என்று வைத்திருப்பான் என்று நினைத்தால் அவனுக்கு இரும்பு உருக்கு முறைகளும் கருவியாக்கங்களும் தெரிந்திருக்கின்றன. அந்நாள் தமிழணங்குத் தங்கப் பொருள்களை அணிகலன்களாக அணிந்திருக்கிறாள். தொலைவுத் தேயங்களிலிருந்து வருவிக்கப்பட்ட அருமணிகள் கிடைத்திருக்கின்றன. சுட்ட மண்ணால் செய்யப்பட்ட மண்மணிகளையும் கோத்து அணிந்திருக்கிறார்கள். கண்ணாடி மணிகள், பீங்கானைப்போன்ற உடைவுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. நெய்வுக்குப் பஞ்சிலிருந்து நூல்கோக்கும் தக்களிப் பொருள்கள் பல கிடைத்திருக்கின்றன. எலும்பினால் செய்யப்பட்ட கீறுபொருள்களும் தந்தத்தினால் செய்யப்பட்ட வேறுபொருள்கள் சிலவும் காணக் கிடைக்கின்றன. ஓய்ந்த நேரத்தில் பகடை விளையாடியிருக்கிறார்கள். பகடைக்காய்கள் சுட்ட மண்ணால் செய்யப்பட்டிருக்கின்றன. இன்றைய சதுரங்க விளையாட்டினைப் போன்ற ஒரு விளையாட்டையும் விளையாடியிருக்கிறார்கள். அவ்விளையாட்டுக்குரிய காய்கள் கருங்களிமண்ணால் தனியாகச் செய்யப்பட்டுள்ளன. பாண்டி விளையாடுவதற்குப் பயன்படும் தட்டை வட்ட ஓடுகள் பலப்பல எடுக்கப்பட்டுள்ளன. எதனைச் சொல்வது எதனை விடுவது! அன்றைய தமிழரின் வளவாழ்வின் தடயங்களைக் காணுகையில் காலத்திடம் தொலைத்துவிட்ட தலைவாயிலின் தங்கத் திறவுகோலினைக் கண்டுபிடிக்கப்பட்டதைப்போல் உணர்கிறேன்.

கீழடித் தொல்லியல் சான்றுகள், தமிழர்களின் தொன்மையைக் ‘கனவுப்பொருள்கள் நினைவில் வந்ததைப்போல்’ மீட்டுக் கொடுத்திருக்கின்றன. அவற்றின் அருமையுணர்ந்து அவ்விடத்தைக் கண்போல் காக்கவேண்டும். அங்கே கண்டெடுக்கப்பட்ட ஐயாயிரத்திற்கும் மேலான பொருள்களை முறையாக அருங்காட்சியகப்படுத்த வேண்டும். ஆந்திர அரசாங்கம் கரும்பெண்ணை ஆற்றின் நாகார்ச்சுனசாகர் அணை நடுவில் ஒரு தீவுப்பகுதியை ஒதுக்கியிருக்கிறது. எதற்குத் தெரியுமா? கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சாதவாகனப் பேரரசின் சான்றுகள் யாவற்றையும் அங்கே அருங்காட்சியம் ஒன்றைக் கட்டிக் காட்சிப்படுத்துவதற்காக. அங்குள்ள ஒரு சிலையைக்கூட நாம் படமெடுக்க முடியாதபடி கடுங்காவல் போட்டிருக்கிறார்கள். கீழடித் தொல்லகத்தையும் அவ்வாறு காவல் செய்யவேண்டும். கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்கள் அனைத்தையும் ஆந்திர அரசு செய்ததைப்போன்று காட்சிக்கு வைக்கலாம். உணர்கருவிகள் போன்ற உயர்வகை அறிவியல் முறைகளைக்கொண்டு தமிழகத்தின் தொல்லியல் அகழ்வுக்கு வாய்ப்புள்ள இடங்கள் அனைத்தையும் முறையாக ஆய்வுசெய்து மேலும் பல புதிய திறப்புகளை ஏற்படுத்த வேண்டும். இவை யாவும் நிறைவேறுகையில் நாம் வரலாற்றின் உயர்முடிகளில் கொடிநாட்டிக்கொண்டிருப்போம்.
 

https://uyirmmai.com/article/கீழடி-தந்த-வெளிச்சம்/

  • Like 1
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

கீழடி நகரம் கண்டுபிடிக்க வழிகாட்டிய முதியவர்.. மனம் திறந்த அமர்நாத் ராமகிருஷ்ணா..

keezhadi334-1575880662.jpg

சென்னை: கீழடி ஆராய்ச்சிக்கு வழிகாட்டியதே ஒரு முதியவர்தான் என இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

சென்னை பெரியமேட்டில் தமிழ்க்கலை இலக்கிய பேரவை சார்பில் நேற்று கீழடியில் கிளைவிட்ட வேர் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் கீழடி நாகரிகத்தை சங்க கால நாகரிகம் என அழைப்பதே மிகவும் பொருத்தமாக இருக்கும். இந்த ஆய்வின் முதல்கட்ட பணியாக தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள தொல்லியல் மேடுகளை கண்டறிவதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார்.

வீடு கட்ட குழி

அப்போது வருசநாடு அருகே சீல முத்தையாபுரம் கிராமத்தில் ஆய்வு பணி மேற்கொண்டிருந்தோம். அப்போது உடைந்த பானைகள், ஓடுகள், கல்வெட்டுகள் ஏதேனும் இருக்கிறதா என கேட்டறிந்தோம். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் வீடு கட்டுவதற்காக குழி தோண்டியுள்ளார்.

நெருப்பினால் சுடப்பட்ட குடுவை.

keezhadi-conference1223231344-1575880708

அப்போது அதிலிருந்து ஒரு சிவப்பு, கருப்பு நிறத்தினாலான குடுவை கிடைத்தது. அதை அவர் தொல்லியல் துறையிடம் கொடுத்தார். அந்த குடுவை பழமையான சங்க காலத்தை சேர்ந்தது. அதுவும் நெருப்பினால் சுடப்பட்ட குடுவை என தெரியவந்தது.

200 கிராமங்கள்

அந்த முதியவர் முதன்முதலாக தொல்லியல் துறையினரிடம் காண்பித்த குடுவைதான் வைகை நதிக்கரையில் இரு புறமும் தொல்லியல் மேடுகள் கொண்ட 200 கிராமங்கள் இருந்தது தெரியவந்தது. அந்த கிராமங்களில் ஒன்றுதான் கீழடி.

கூடுதல் காலங்கள்

அந்த முதியவர் மட்டும் அந்த குடுவையை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்காமல் இருந்திருந்தால் தமிழர்களின் வரலாறு தெரியாமலேயே இருந்திருக்கும். இதுகுறித்த ஆய்வுக்கு இன்னும் கூடுதல் காலங்கள் பிடித்திருக்கலாம் என்றார்.

https://tamil.oneindia.com/news/chennai/amarnath-ramakrishna-reveals-about-the-secret-behind-kizhadi-evacuation-process/articlecontent-pf420608-370833.html

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 24 மொழிகளில் கீழடி ஆய்வு நூல்; தொல்லியல் துறையின் புதிய முயற்சி .!

கீழடி ஆய்வறிக்கையை தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 24 மொழிகளில் புத்தகமாகத் தமிழகத் தொல்லியல் துறை வெளியிட்டிருக்கிறது.

கீழடி அகழாய்வு அறிக்கை

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 43-வது சென்னை புத்தகக் கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். வரும் 21-ம் தேதி வரை 13 நாள்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் இரண்டு கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வார நாள்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையும் விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் கண்காட்சி நடைபெறுகிறது.

புத்தக் கண்காட்சியைத் தொடங்கிவைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புத்தக் கண்காட்சியைத் தொடங்கிவைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சுமார் 800 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.10 என்ற கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், மாணவ, மாணவியர் மற்றும் மெட்ரோ ரயில் பாஸ் வைத்திருப்பவர்களிடம் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறும்படம் திரையிடல், திறனாய்வுப் போட்டி என பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட இருக்கின்றன.

`கீழடி அகழாய்வு முடிவுகள் சொல்லும் உண்மை!' - அடுத்தகட்ட ஆய்வுக்குத் தயாராகும் தமிழக அரசு
கண்காட்சி அரங்குக்கு வெளியே `கீழடி – ஈரடி தமிழ் தொன்மங்கள்’ என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள தொல்பொருள் கண்காட்சியையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார். கீழடி அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட சுடுமண் சுடுமண் குழாய், நீர் மேலாண்மைத் திட்டம், கறுப்பு சிவப்பு குவளைகள் உள்ளிட்டவைகளின் மாதிரியும் வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், கீழடி அகழாய்வுப் பணிகள் குறித்து விளக்கும் ஒளிப்பட காட்சிக் கூடமும் அங்கு அமைக்கப்பட்டிருக்கிறது.
கீழடி அரங்கு கீழடி அரங்கு
கீழடி அகழாய்வு முடிவுகளை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட 24 மொழிகளில் புத்தகமாகவும் தமிழகத் தொல்லியல்துறை வெளியிட்டிருக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கில பதிப்புகள் ரூ.50 என்ற விலையிலும் மற்ற மொழிப் பதிப்புகள் ரூ.200 என்ற விலையிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
 

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “புத்தகங்களே நம்மை ஏமாற்றாத சிறந்த நண்பன். புத்தகங்கள் இல்லையெனில், மனிதகுலம் இத்தகைய வளர்ச்சியைக் கண்டிருக்க முடியாது. இந்தப் புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெற அரசின் நிதி தேவை என்று வலியுறுத்தப்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அடுத்த ஆண்டிலிருந்து புத்தகக் கண்காட்சிக்கு அரசு சார்பாக ரூ.75 லட்சம் வழங்கப்படும்” என்றார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், க.பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவர் பா. வளர்மதி உள்ளிட்டோரும், தொல்லியல் துறையின் செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

-தினேஷ் ராமையாகே.ஜெரோம்

நன்றி- விகடன்

http://www.vanakkamlondon.com/keeladi-12-01-2020/

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

637172781179832997.jpeg 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழடி பொருட்களை ஆய்வு செய்ய மேலும் 3 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் விருப்பம்..!

Keezhadi-1.png

கீழடி பொருட்களை ஆராய்ச்சி செய்வதற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துடன் ஏற்கனவே ஹார்ட்வேர் பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்திருந்த நிலையில் தற்போது மேலும் மூன்று சர்வதேச பல்கலைக்கழகங்கள் இணைந்து ஆராய்ச்சி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், கீழடி பொருட்கள் குறித்த ஆய்வுகள் மார்ச் மாதத்திலிருந்து தொடங்கும் எனவும் காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.

தமிழக அரசு கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களின் வரலாறு குறித்து ஆய்வு செய்வதில் தீவிரமாக செயலாற்றி வருகிறது. மேலும் நாளை (19-02-2020) கீழடியில் 6வது அகழாய்வு பணியையும் தமிழக முதல்வர் தலைமையில் தொடங்கி வைக்கவுள்ளார். இந்நிலையில் தமிழக அரசுடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் இணைந்து கீழடி அகழ்வாராய்ச்சியை தீவிரமாக நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. அறிவியல் பூர்வமாக அன்சியண்ட் டிஎன்ஏ (Ancient DNA) ஆராய்ச்சி குறித்து ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட உள்ள நிலையில், சிகாகோ பல்கலைக்கழகம், பூனே டெகான் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகமும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக தயார் நிலையில் இருப்பதாக மதுரை காமராஜர் பலகலைக்கழகத்தின் துணை வேந்தர் கிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.

கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்று பரிசோதனை செய்வதற்கான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார். மேலும் மானஸா என்ற ஆராய்ச்சியாளர் கீழடியில் கிடைக்கப்பெற்ற அன்சியண்ட் DNA தொல்லியல் பொருளை பூனேவில் உள்ள டெக்கான் ஆராய்ச்சி கூடத்தில் ஆராய்ச்சி செய்து வருவதாகவும், அதனுடைய முடிவுகள் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் ரூசா அமைப்பின் சார்பில் ரூ. 34 கோடி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர் ரூ. 2 அல்லது 3 கோடி கீழடி அகழ்வாராய்ச்சிக்காக ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார். இந்த வருடம் மார்ச் மாதம் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் தொடங்கும் எனவும், அதற்காக 20,000 சதுர அடி கொண்ட பிரத்தியேக கட்டிடம் ஆராய்ச்சிக் கூடமாக செயல்பட தயாராக உள்ளதாகவும் துணை வேந்தர் கிருஷ்ணன் தெரிவித்தார்.

https://ns7.tv/ta/tamil-news/tamilnadu-important/18/2/2020/three-more-foreign-universities-showed-interest-test?fbclid=IwAR2FzFJprHzbS6Mr98I1cWZKFYQKeT18-RGOUKBShm0MGZ7hELupB9NZZM8

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழடி நாகரீகம்: ஆறாம் கட்ட அகழாய்வு துவங்கியது.

110959867_22388c9c-51ba-424f-b81c-6ec4bd

மதுரைக்கு அருகில் உள்ள தொல்லியல் பகுதியான கீழடியில் ஆறாவது கட்ட அகழாய்வுப் பணிகள் இன்று முதலமைச்சரால் துவக்கிவைக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் மாதம் வரை இந்தப் பணிகள் நடைபெறுமெனத் தெரிகிறது.

மதுரை நகரிலிருந்து சுமார் 13 கி.மீ. தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் ஏற்கனவே நடந்த அகழாய்வுகளில் பழங்கால கட்டடத் தொகுதிகளும் தொல்பொருட்களும் கிடைத்திருக்கும் நிலையில், ஆறாவது கட்ட அகழாய்வு இன்று துவங்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டுவரை முதல் மூன்று கட்ட அகழாய்வுகளை மத்தியத் தொல்லியல் துறை மேற்கொண்டது. இதில் 7818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதற்குப் பிறகு இங்கு ஆய்வு நடத்த மத்திய அரசு முன்வரவில்லை. இதையடுத்து அடுத்தகட்ட அகழாய்வுகளை தமிழக அரசின் தொல்லியல் துறையே நடத்த முன்வந்தது.

2018-19ல் 55 லட்ச ரூபாய் செலவில் நான்காவது கட்ட அகழாய்வை மாநில தொல்லியல் துறை நடத்தியது. இதில் 5820 தொல்பொருட்களும் பழங்காலக் கட்டடத் தொகுதிகளும் வெளிப்பட்டன. தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய 56 பானை ஓடுகளும் குறியீடுகள் பொறிக்கப்பட்ட 1001 பானை ஓடுகளும் கிடைத்தன.

அதற்குப் பிறகு 47 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஐந்தாம் கட்ட அகழாய்வு நடத்தப்பட்டது. இந்த அகழாய்வில் சரியான இடங்களைத் தேர்வுசெய்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதிலும் செங்கல் கட்டுமானங்கள், சுருள் வடிவிலான குழாய்கள் கண்டெடுக்கப்பட்டன. 900 தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக மதுரை உலகத் தமிழ் சங்க வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நான்காம்கட்ட அகழாய்வின் முடிவுகள் தமிழக அரசால் வெளியிடப்பட்டபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நான்காம் கட்ட ஆய்வில் கிடைத்த கரிமத்தை பீட்டா பகுப்பாய்வு ஆய்வகத்தில் பரிசோதித்தபோது, அது 2600 ஆண்டுகள் பழமையானது எனத் தெரியவந்தது. இந்த ஆய்வின் முடிவுகள், மாநிலத்தில் தொல்லியல் ஆய்வுகள் குறித்த கவனத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஆறாம் கட்ட அகழாய்வை கீழடியிலும் அதற்கு அருகில் உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களிலும் நடத்துவதற்கு மாநில தொல்லியல் துறை முடிவுசெய்தது. இந்த இடங்களில் தரையை ஊடுருவிப் பார்க்கும் ரேடார், ஆளில்லா விமானம் ஆகியவற்றைப் பயன்படுத்தி சரியான இடங்கள் அடையாளம் காணப்படும்.

இவற்றில் கொந்தை ஒரு புதைமேடு என கருதப்படுகிறது. மணலூர், அகரம் ஆகியவை மக்கள் வாழ்ந்த இடங்களாகக் கருதப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக 120 ஏக்கர் பரப்பளவில் 50 லட்ச ரூபாய் செலவில் இந்த அகழாய்வுகள் நடத்தப்படும்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உட்பட இந்தியாவில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களும் சில வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களும் இந்த ஆய்வில் பங்கேற்கின்றன.

இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமணல் ஆகிய இடங்களிலும் அகழாய்வுகள் நடத்தப்படவிருக்கின்றன. மேலும், புதிய கற்கால இடங்களைக் கண்டறிய வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய இடங்களில் தொல்லியல் கள ஆய்வை மாநில அரசு நடத்தவுள்ளது.

http://www.vanakkamlondon.com/keeladi-19-02-2020/

டிஸ்கி

எல்லா இடத்தையும் நல்லா தோண்டுங்கப்பா..👍

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

கீழடி 6ம் கட்ட அகழாய்வு: முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

கீழடி 6ஆம் கட்ட அகழாய்வு: முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்புImage caption கோப்புப் படம்

கீழடி பகுதியில் நடந்துவரும் ஆறாம் கட்ட அகழாய்வில் சில முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. கீழடியை ஒட்டியுள்ள கொந்தகை பகுதியில் நடந்துவரும் இந்த அகழாய்வில் பல மணிகள், பானை ஒடுகளும் கிடைத்துள்ளன.

மதுரைக்கு அருகில் உள்ள தொல்லியல் பகுதியான கீழடியில் ஆறாவது கட்ட அகழாய்வுப் பணிகள் பிப்ரவரி 19ஆம் தேதியன்று துவங்கப்பட்டன. இந்த நிலையில், கொந்தகை பகுதியில் நடந்துவரும் அகழாய்வில் முதுமக்கள் தாழிகள், ஈமச் சடங்குகளுக்குப் பயன்படுத்தப்படும் மண்ணாலான பாத்திரங்கள், மணிகள் ஆகியவையும் கிடைத்து வருகின்றன.

"கீழடி தொல்லியல் தொகுதியில் இறந்தவர்களைப் புதைக்கும் இடமாக கொந்தகை இருந்திருக்கிறது. இந்தப் பகுதியில் மேல்மட்டத்தைச் சுத்தம்செய்து ஆய்வைத் துவங்கிய நிலையில் சில முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. அவை இன்னும் முழுமையாகத் தோண்டி எடுக்கப்படவில்லை" என மாநில தொல்லியல் துறையின் துணை இயக்குனர் சிவானந்தம் தெரிவித்தார்.

இங்கு கிடைக்கும் முதுமக்கள் தாழிகள் இரண்டு விதங்களில் இருக்கலாம் என தொல்லியல் துறை எதிர்பார்க்கிறது. ஏற்கனவே ஓரிடத்தில் ஈமச்சடங்குகள் செய்யப்பட்ட மனிதர்களின் எச்சங்கள் சேகரிக்கப்பட்டு முதுமக்கள் தாழியில் வைத்து திரும்பவும் புதைக்கப்படுவது. இவை இரண்டாம் நிலை முதுமக்கள் தாழி புதைப்புகள் எனப்படுகின்றன.

கீழடி 6ஆம் கட்ட அகழாய்வு: முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

இது தவிர, ஒருவர் இறந்தவுடனே அவருடைய சடலத்துடன் அவருக்கான பொருட்களை உள்ளே வைத்து புதைக்கப்படுவதும் இப்பகுதியில் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

தற்போது கிடைத்திருக்கும் முதுமக்கள் தாழியை வெளியே எடுத்துப் பார்க்கும்போதுதான், அவை எந்த வகையிலானவை என்பது தெரியவரும். தாழிகளில் உள்ள எலும்புகளின் நிலை, தாழியின் உள்ளே உள்ள பொருட்களை வைத்து இது முடிவுசெய்யப்படும்.

இங்கிருந்து கிடைக்கும் எலும்புகளை டிஎன்ஏ ஆய்வுக்கு அனுப்பவும் முடிவுசெய்யப்பட்டிருக்கிறது.

 

மதுரை நகரிலிருந்து சுமார் 13 கி.மீ. தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் ஏற்கனவே நடந்த அகழாய்வுகளில் பழங்கால கட்டடத் தொகுதிகளும் தொல்பொருட்களும் கிடைத்திருக்கும் நிலையில், ஆறாவது கட்ட அகழாய்வை மாநில தொல்லியல் துறை தற்போது நடத்திவருகிறது.

இந்த நிலையில் ஆறாம் கட்ட அகழாய்வை கீழடியிலும் அதற்கு அருகில் உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களிலும் நடத்துவதற்கு மாநில தொல்லியல் துறை முடிவுசெய்தது. இந்த இடங்களில் தரையை ஊடுருவிப் பார்க்கும் ரேடார், ஆளில்லா விமானம் ஆகியவற்றைப் பயன்படுத்தி சரியான இடங்கள் அடையாளம் காணப்பட்டன.

கீழடி 6ஆம் கட்ட அகழாய்வு: முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

இவற்றில் கொந்தகை ஒரு புதைமேடு என கருதப்படுகிறது. கீழடி பகுதியில் வாழ்ந்தவர்கள் இங்குதான் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. மணலூர், அகரம் ஆகியவை மக்கள் வாழ்ந்த இடங்களாகக் கருதப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக 120 ஏக்கர் பரப்பளவில் 50 லட்ச ரூபாய் செலவில் இந்த அகழாய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

2014ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டுவரை முதல் மூன்று கட்ட அகழாய்வுகளை மத்தியத் தொல்லியல் துறை மேற்கொண்டது. இதில் 7818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதற்குப் பிறகு இங்கு ஆய்வு நடத்த மத்திய அரசு முன்வரவில்லை. இதையடுத்து அடுத்தகட்ட அகழாய்வுகளை தமிழக அரசின் தொல்லியல் துறையே நடத்த முன்வந்தது.

2018-19ல் 55 லட்ச ரூபாய் செலவில் நான்காவது கட்ட அகழாய்வை மாநில தொல்லியல் துறை நடத்தியது. இதில் 5820 தொல்பொருட்களும் பழங்காலக் கட்டடத் தொகுதிகளும் வெளிப்பட்டன. தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய 56 பானை ஓடுகளும் குறியீடுகள் பொறிக்கப்பட்ட 1001 பானை ஓடுகளும் கிடைத்தன.

அதற்குப் பிறகு 47 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஐந்தாம் கட்ட அகழாய்வு நடத்தப்பட்டது. இந்த அகழாய்வில் சரியான இடங்களைத் தேர்வுசெய்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதிலும் செங்கல் கட்டுமானங்கள், சுருள் வடிவிலான குழாய்கள் கண்டெடுக்கப்பட்டன. 900 தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

கீழடி 6ஆம் கட்ட அகழாய்வு: முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்புபடத்தின் காப்புரிமை Getty Images

இந்த நிலையில், நான்காம்கட்ட அகழாய்வின் முடிவுகள் தமிழக அரசால் வெளியிடப்பட்டபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நான்காம் கட்ட ஆய்வில் கிடைத்த கரிமத்தை பீட்டா பகுப்பாய்வு ஆய்வகத்தில் பரிசோதித்தபோது, அது 2600 ஆண்டுகள் பழமையானது எனத் தெரியவந்தது. இந்த ஆய்வின் முடிவுகள், மாநிலத்தில் தொல்லியல் ஆய்வுகள் குறித்த கவனத்தை ஏற்படுத்தியது.

தற்போது நடந்துவரும் ஆறாம்கட்ட ஆய்வில், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உட்பட இந்தியாவில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களும் சில வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களும் இந்த ஆய்வில் பங்கேற்கின்றன.

இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமணல் ஆகிய இடங்களிலும் அகழாய்வுகள் நடத்தப்படவிருக்கின்றன. மேலும், புதிய கற்கால இடங்களைக் கண்டறிய வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய இடங்களில் தொல்லியல் கள ஆய்வை மாநில அரசு நடத்தவுள்ளது.

https://www.bbc.com/tamil/india-51643966

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சற்று முன்..

87887937_10156614064150163_5925627741041

  • Like 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF-720x450.jpg

2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம் கொந்தகை எனும் இடத்தில் நிலத்தின் அடியில் இருந்து முதுமக்கள் தாழி மற்றும் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்புக்கூடு நேற்று கண்டெடுக்கப்பட்டது.

திருப்புவனம் அருகே கீழடியில் நீதியம்மாள் என்பவரது நிலத்தில் 3 குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன.
இதில் 2 செங்கல் சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அருகிலேயே மண்பானைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொந்தகையில் பழமையான ஈமக்காட்டில் அகழாய்வுப் பணி நடைபெற்றுவரும் நிலையில், ஒரு குழியில் 2 முதுமக்கள் தாழிகள், அடுத்த குழியில் 8 முதுமக்கள்தாழிகள், மூன்றாவது குழியில் 6 முதுமக்கள்தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  மேலும் ஏராளமான மண்பானைகள், குடுவைகள், மணிகள், முதுமக்கள் தாழி மூடிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொந்தகையில் 8 முதுமக்கள் தாழி இருந்த குழியில் மனித எலும்புக்கூடு ஒன்று நேற்று கண்டெடுக்கப்பட்டது.  தற்போது வலது, இடது கைகளின் எலும்புகள் மட்டும் தெரிவதாகவும், அதற்கு மேற்புறம் 2 சிறிய பானைகள் உள்ளதாகவும், அதை முழுமையாக தோண்டிய பிறகுதான் இறந்தவர்களை அமர்ந்த நிலையில் புதைத்தார்களா? அல்லது படுக்கைவசமாகப் புதைத்தார்களா? என்பது தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த எலும்புக்கூடு கிடைத்த நிலையில் அப்பகுதியை தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம், மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு செய்துள்ளனர்.

கீழடியில் ஏற்கெனவே நடந்த 5 கட்ட அகழாய்வுகள் மூலம் கீழடி நகர நாகரிகம் 2,600 ஆண்டுகளுக்கு முந்தையது எனத் தெரியவந்துள்ள நிலையில், தற்போது வரலாற்று பூர்வமான மேலும் சில தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

விரைவில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மூலம் குறித்த எலும்புக் கூடுகள் மரபணு ஆய்வு செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/2000-ஆண்டுகள்-பழமை-வாய்ந்த-மு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 90033653_1652472578249874_45618012360047

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை சொல்லப்படாத... கீழடி வரலாறு... முழுமையான பதிவு! 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழடி.. தமிழனின், பூர்வ கதை.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

புதிய வரலாற்று தொன்மங்கள் கிடைக்க வேண்டுவம்..👍

98347345_3534654046596778_48132169048417

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் இன்று முதல்கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியுள்ளன.  

tut.jpg

உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூர் அருகே உள்ளது சிவகளை. அங்கு, 2 வருடங்களுக்கு முன்பு ஏராளமான  முதுமக்கள் தாழிகளை அப்பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் கண்டுபிடித்தார். இதையடுத்து அந்த பகுதியில் அகழாய்வு செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதனை ஏற்று கடந்த மார்ச் மாதம் அகழாய்வு பணிகள் துவங்க இருந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று அகழாய்வு பணிகள் துவங்கின. இந்த பணியை தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம் துவக்கி வைத்தார். அதன்பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிவகளையில் இன்று தொடங்கியுள்ள அகழாய்வு பணி செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் என்றார்.  மேலும் இந்த பணியில் 10க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளும், 100க்கும் மேற்பட்ட ஊர் மக்களும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

201910250846297773_1_Kodumanal._L_styvpf

சிவகளையில் நடைபெறும் அகழாய்வு பணியின்போது  தமிழரின் வரலாற்று தொன்மையை விளக்கும் பல்வேறு அரிய பொருட்களை கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தொல்லியில் துறை இணை இயக்குனர் சிவானந்தம் கூறினார்.

https://ns7.tv/ta/tamil-news/tamilnadu/25/5/2020/excavation-work-begins-today-thoothukudi-sivagalai?fbclid=IwAR2mMoDlxrIj2r3OhUvG5lNI_3U4Y6-zGAByoMUVlcgNCtU9qxg2UxKIwSo

டிஸ்கி :

புதிய வரலாற்று தகவல்கள் கிடைக்கட்டும்..👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, திராவிடன் குகன் said:

இன்றைய கீழடி நிலவரம் பற்றி பதிவுகளை புதுப்பித்து பதிவிடவும் தோழா/தோழி 

நன்றி 🙏

கீழடி நிலவரத்தைப் பற்றிய... புதிய செய்திகள், எமது கண்ணில் படும் போது,
அவ்வப்போது இணைத்துக் கொண்டு இருக்கின்றோம்.
உங்கள் கண்களிலும்... புதிய தகவல்கள் பட்டால் இணையுங்களேன், குகன். 

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.