Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏழை மக்கள் கதறல்...20 ரூபாய் டாக்டர் மரணம்!

Featured Replies

ஏழை மக்கள் கதறல்...20 ரூபாய் டாக்டர் மரணம்!

 

டாக்டர்

இன்றைய காலக்கட்டத்தில் மருத்துவமனைக்கு சென்றாலே சொத்தை இழந்து விடுவோம். அந்தளவுக்கு பணம் நம்மிடம் இருந்து பிடுங்கப்பட்டு விடும். 'ரமணா ' திரைப்படத்தில் வருவது போல பல மருத்துவமனைகள் நாடு முழுவதும் நிரம்பிக் கிடக்கின்றன. சாதாரண மக்கள், அரசு மருத்துவமனைக்கு சென்றால் கூட பல விஷயங்களுக்குப் பணத்தை அழ வேண்டியது இருக்கிறது.  இதற்கு பயந்து கொண்டே உடலுக்கு ஏதாவது அசவுகர்யம் ஏற்பட்டால் கூட, மருத்துவமனையை நாடாமல் நடமாடிக் கொண்டிக்கும் உயிர்கள் பல உண்டு. அப்புறம் பார்த்துக்கலாம்னு... தானா குணமாகுதுனா காத்திருக்கும் மக்களும் நிறையே பேர். 'மருத்துவர்களை கடவுளுக்கு நிகர் ' என்பார்கள்.  நோயாளி உயிர் பிழைத்தால் டாக்டர்களின் கையை பிடித்துக் கொண்டு  'நீங்கதான்யா எங்க தெய்வம்' என்றும் சொல்வார்கள். அப்படி மருத்துவத்துறையில் தெய்மாக உலவி வந்த மருத்துவர் ஒருவர் மரணமடைந்து விட, மக்கள் கதறி விட்டனர். 

கோவை ராஜகணபதி நகரைச் சேர்ந்தவர் டாக்டர். பால சுப்பிரமணியம். ஆவாரம்பாளையத்தில் மருத்துவமனை நடத்தி வந்தார். மருத்துவமனை என்றால் என்னவோ பெரிய கட்டிடத்தில் இயங்கும் என்று நினைத்து விடாதீர்கள். பத்துக்கு பத்து அடி அறைதான் அந்த மருத்துவமனை.  தொடக்கத்தில் சிகிச்சையளிக்க இவர் வாங்கிய பீஸ் வெறும் 2 ரூபாய்தான். நாளைடைவில் பணத்தின் மதிப்பு குறைய குறைய தனது பீஸ் தொகையை உயர்த்தினார். அப்படி உயர்த்தி உயர்த்தி 20  ரூபாய்க்கு கொண்டு வந்தார். இதுதான் சிகிச்சை அளிக்க இவர் வாங்கிய அதிக பீஸ். 

நாளைடைவில் இவரது பெயயே மறைந்து போய் 20 ரூபாய்  டாக்டர் என்றே நிலைத்து விட்டது. பிரமாண்டமான மருத்துவமனைகள் நிறைந்த கோவை நகரில், 20 ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கவும் மக்களுக்கு ஒரு டாக்டர் கிடைத்தார். இதனால், சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள, ஏராளமான ஏழை மக்கள் டாக்டர். பாலசுப்பிரமணியத்திடம்தான் சிகிச்சை பெற வருவார்கள். 
சும்மா கையை பிடிச்சு பார்க்குறதுக்கே ரூ.100 வாங்கும் காலக்கட்டத்தில், 20 ரூபாய் வாங்கினால் எதிர்ப்பு கிளம்பாமல் இருக்குமா?. கிளம்பவும் செய்தது. கோவை நகரில் பல மருத்துவர்களும் பாலசுப்பிரமணியத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மறைமுக இடையூறுகளையும் ஏற்படுத்தினர். ஆனால், டாக்டர் பாலசுப்ரமணியம் மாறவில்லை மசியவில்லை. கடைசி வரை 20 ரூபாய்தான் வாங்கிக் கொண்டு சிகிச்சை அளித்தார். இதனால், இவருக்கு மக்கள் டாக்டர் என்ற பெயரும் உண்டு. 

DOC_05305.jpg

பல சமயங்களில் 'டாக்டர் எங்கிட்ட உங்களுக்கு கொடுக்க 20 ரூபாய் கூட இல்லனு' சொல்ற நோயாளிகளும் உண்டு. அந்த நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகளும் டாக்டரே வாங்கிக் கொடுப்பார். டாக்டரின் வெள்ளை மனசு அறிந்த அவரது பல நண்பர்களும் அவருக்கு உதவியாக இருந்துள்ளனர். மருத்துவமனைக்கு செல்லவில்லையென்றால், தன்னை நம்பி வரும் ஏழை நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காகவே ஒரு நாள் கூட டாக்டர் விடுப்பும் எடுத்ததில்லை. இந்த நிலையில் நேற்று நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, டாக்டர். பாலசுப்ரமணியம் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். டாக்டர் மரணம் அடைந்தது தெரியாமல், நேற்று மாலை வழக்கம் போல் அவரை நம்பியிருந்த நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்தனர். மருத்துவமனை பூட்டிக் கிடந்துள்ளது. ஒரு நாள் கூட வராமல் இருக்க மாட்டாரே... என்னவாச்சுனு தெரியவில்லையேனு விசாரித்துள்ளனர். 

அப்போதுதான் டாக்டர் இறந்து போன விஷயம் தெரிய வந்துள்ளது. இதையடுத்து பல நோயாளிகள் கதறி அழுதனர். பலர் அவரது உடலை பார்க்க வீட்டுக்கு ஓடினர். ஆவாரம்பாளையத்தில் பல இடங்களில் 'ஏழைகளின் தெய்வம் எங்கள் ஐயாவுக்கு இதய அஞ்சலி ' என கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. டாக்டர் மருத்துவம் பார்த்து வந்த பத்துக்குபத்து அறையிலும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் இப்போதும் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

டாக்டர். பாலசுப்ரமணியம் மருத்துவத்துறையின் நிஜ கடவுள்!

http://www.vikatan.com/news/tamilnadu/72865-people-mourn-for-coimbatore-doctor-who-charged-just-twenty-rupees.art

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் ....! 

இவர் போன்றவர்கள்தான் நடமாடும் தெய்வங்கள்....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கடல் ஆமையை வென்ற சில ஆமைகள்(ஜந்துக்கள்) எல்லாம் நல்லபடியாக ஊரை கொள்ளை அடித்து உலையில் போட்டு கொண்டு திரியும் தமிழ்நாட்டில் நல்ல உயிர்களை எல்லாம் ஆண்டவன் ஏன் உடனுக்குடன் எடுத்து கொள்கிறான்.. ? கலிகாலத்தில் இனியும் நீ கஸ்ரபட வேண்டாம் என்னுடைய நிழலில் வந்து இளைப்பாறு என்பதாகத்தான் இருக்க முடியும் .. பெண்ணின் ஜாதகத்தினை வைத்து கொண்டு மனைவி துணைவி இணைவி கணைவி திருட்டு திருமணம் செய்பவர்கள் மத்தியுலும்.. ஏனென்றால் கணவன் ஆயுள் நீடிக்குக்குமாம் ..?அதுபோக அரசு ஆஸ்பதிரிகளில் தாய்பால் திருடும் அரசியல் கோஸ்ரியல்..

ஏண்டா குழந்தைக்கு உலகத்தை பற்றி ஒன்றுமே தெரியாது.. அது சிரிக்கும் சிரிப்பில் கள்ளம் கபடம் இருக்காது . அது வளர்ந்து  இந்த பொய் பித்தலாட்ட உலகத்தை பற்றி தெரிந்து கொள்ளும் போது தேஜஸ் காணாம போய்விடும் ..

நிற்க.

Image result .

அதென்ன தேஜஸ் ..? ஒரு குழந்தையை பார்க்கும் போது நம்மையும் அறியாமால் ஏற்படுகிற ஈர்ப்பு. ஒரு கள்ளம் கபடம் இல்லாத முகம். அதெல்லாம் இயற்கையாக வருவது
அதையெல்லாம் இந்த அரசியல் கபோதிகள் காசுக்கு திருடி குடித்துவிட்டால் தேஜஸ் வருமா ..? நம்முடைய கோபம் வேறு !! றொக்தர் அனுமதியில்லாமலா இவ்வளவும் நடக்கிறது ..? இன்றைய தேதியில் ஆஸ்த்பத்திரியில் இருந்து எத்தனை குழந்தைகள் விற்கபடுகின்றன ..?

றொக்தர்களின்  தொழில் பற்றி இனி கிழிக்கபடும் ..

 

உண்மையில் இவர் ஒரு நல்ல றொக்தர் இவர் இளைபாற வேண்டிய கடவுள் அழைத்து கொண்டார்!! அன்னார் முக்தி மோட்சத்தில் இருப்பார் .. என்று நமது சிற்றறிவுக்கு எட்டியவரை நம்புவம்...

 

  • கருத்துக்கள உறவுகள்

Heart felt Condolences  May his soul Rest in peace.

22 hours ago, நவீனன் said:

ஏழை மக்கள் கதறல்...20 ரூபாய் டாக்டர் மரணம்!

ஆழ்ந்த இரங்கல்கள்.

இவரைப் பற்றி சில வாரங்களுக்கு முன்னர் வாசித்திருந்தேன். எங்கு என்பது நினைவில் இல்லை. யாழிலும் இருக்கலாம் - யாருக்காவது நினைவில் இருந்தால் அந்த கட்டுரையையும் இணைக்கவும். நல்ல ஒரு மனிதரைப் பற்றி பலரும் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

இப்போது தேடியபோது கிடைத்தது. ஆனால் நான் தேடிய கட்டுரை இதுவல்ல. அது அவரது வாழ்க்கை பற்றியது. முடிந்தால் நினைவாற்றல் அதிகமுள்ளவர்கள் கண்டு பிடித்து இணைக்கவும் - அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக இருக்கும்.

 

20 ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கும் 20 ரூபாய் டாக்டர் !! 20 rupees doctor !!

 

A doctor who used to get only 20 rupees from his patients for the treatment.

 
balasu.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கோவை ஆவாரம் பாளையம் போகும் வழியில் ராமகிருஷனா கல்லூரி எதிரில் ஒரு சிறிய கிளீனிக். .

வழி தெரியாவிட்டால் "இருபது ரூபாய் "டாக்டர் கிளீனிக் எங்க இருக்குங்க என்று கேட்டால் போது. . அனைவரும் வழி காட்டுவார்கள். .
சாதார காயிச்சல் என்று போனாலே ஆயிரக்கனக்கில் புடுங்கும் ஆஸ்பத்திகளுக்கு மத்தியில். . என்ன வியாதியாக இருந்தாலும். .அதற்க்கு தகுந்த ஆலோசனை. . கொடுத்து குறைவான விலையுள்ள மருந்துகளை எழுதி கொடுத்து ஊசி (தேவைபட்டால்) போடுவார். அவ்வளவு தான் இதற்க்கு அவர் வாங்கும் பணமே இருபது ரூபாய் தான். . அதுவும் பதினைந்து ரூபாய் வாங்கிக்கொண்டு இருந்தவர். சில்லரை தட்டுப்பாடால். .நோயாளிகள் கேட்டுக்கொண்டதற்க்கு இனங்க இருபது ரூபாய் வாங்குகிறார். .
சில வியாதிகளுக்கு நாட்டு மருந்து, அயுர்வேதம் தான் சிறந்தது என யோசித்தால் அதையும் அவரே கூறி அந்த அந்த மருத்துவர் பெயரை பரிந்துரை செய்து சீட்டு எழுதியும் கொடுப்பார். சீட்டை காட்டுங்க காசு கம்மியா வாங்குவாங்க புரியுதா என அதட்டுவதை கேட்க நன்றாக இருக்கும். .
முதல் முதலாக கேள்விபட்டதும் நான் நம்பவேயில்லை. . பிறகு போய் பார்த்தேன். . இதுவரை மூன்று முறை சென்றுள்ளேன். . அதில் கல் அடைப்பு பிரச்சனைக்கு ஒரு முறை போய் பார்த்தேன். தம்பி இதுக்கு நாட்டு மருந்து தான் கரெக்ட்டு என்று ஒரு சீட்டை எடுத்து எழுதி எந்த பஸ்ஸில் ஏற வேண்டும் இறங்கும் இடம். . சில அடையாளங்கள் என குழந்தைக்கு கூறுவதை போல் கூறி பாத்துட்டு என்னானு போன் பன்னி சொல்லு புரியுதா! என்பார்.

மிகவும் வயதானவர்களை வீட்டிலேயே வந்து பார்பார். .வியாபாரமாகி போன இந்த மருத்துவ உலகில் சேவை மணப்பான்மையுள்ள சிலரில் இந்த "இருபது ரூபாய் "டாக்டரும் ஒருவர்.

நன்றி:
பேஸ்புக் !!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • தொடங்கியவர்

கலங்க வைத்த இறுதி ஊர்வலம்... 20 ரூபாய் டாக்டருக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி!

 

a4_10157.jpg

கோவை : 'வாழ்ந்த வாழ்க்கை இறுதி ஊர்வலத்தில் தெரிந்து விடும்'  என கிராமங்களில் சொல்வது உண்டு. அதை நிரூபித்துக் காட்டி இருக்கிறது கோவை மக்கள் சேவகனான மருத்துவரின் இறுதி ஊர்வலம். ஆயிரக்கணக்கானோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று மருத்துவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

சாதி, மதம், ஏழை, பணக்காரர் என எந்த வித்தியாசமும் இல்லாமல், ஆயிரக்கணக்கானோர் கூடியிருக்கிறார்கள். கோவை மாநகரம் முழுக்க அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இறந்தவர் அரசியல்வாதியோ, இல்லை பெரும் பணக்காரரோ இல்லை. பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்றும் மக்கள் சேவையாற்றும் ஒரு மருத்துவர்.

மருத்துவம் என்பது அதிக லாபமீட்டும் பெருந்தொழில் ஆகி விட்ட இன்றைய சூழலில், மக்கள் சேவையை மட்டுமே முன்னிறுத்தி, கிளினிக் நடத்தும் அறைக்கான வாடகைக்காக மட்டும் சொற்பத்தொகையை வாங்கி சிகிச்சை அளித்து வந்தவர் மருத்துவர் பாலசுப்பிரமணியம். 2 ரூபாயில் துவங்கி, கடைசியாக இவர் வாங்கிய தொகை 20 ரூபாய். பணமில்லை என்றால் அதையும் கூட கேட்க மாட்டார்.

a1_10583.jpg

தன் வாழ்வு முழுக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர் மருத்துவர் பாலசுப்பிரமணியன். இவர் இரு தினங்களுக்கு முன்னர் நடைபயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இவரது இறப்பு கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஏழை மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல, கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். இரு தினங்களில் ஆயிரக்கணக்கானோர் இவருக்கு அஞ்சலி செலுத்தினர். 'ஏழைகளின் தெய்வம்' 'மக்கள் சேவகன்' என இவரது சேவையை நினைவு கூறும் வகையில், கோவை முழுவதும் அஞ்சலி போஸ்டர்களை ஒட்டியிருந்தனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தங்கள் குழந்தைகளை கையில் ஏந்தி மருத்துவர் பாலசுப்பிரமணியன் உடலை தொட்டு கும்பிட வைத்தனர். காண்பவர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கும் வகையில் இந்த இறுதி ஊர்வலம் நடந்தது.

a6_10280.jpg

டாக்டர் பாலசுப்பிரமணியத்தின் மகள் பிரியாவிடம் பேசினோம். "மக்களுக்கு இலவசமாக சேவையாற்ற வேண்டும் என்பது தான் அப்பாவின் விருப்பம். வாடகை உள்ளிட்ட சில செலவினங்களுக்காகத்தான் பணம் வாங்கத்துவங்கினார். ஆரம்பத்தில் 2 ரூபாய் வாங்கியவர், வாடகை உயர்வுக்கு ஏற்ப உயர்த்தி தற்போது 20 ரூபாய் வாங்கினார். ஆனால் பணமில்லாவிட்டாலும் அவர் சிகிச்சை அளிக்கத் தவறியதில்லை. பணம் கொடுத்தால் வாங்குவார். அதுவும் 20 ரூபாய் தான் வாங்குவார்," என்றார்.

"பொருள் சார்ந்த எந்த ஈர்ப்பும் இல்லாதவர் மருத்துவர் பாலசுப்பிரமணியன். இறுதி வரை சேவையை மட்டுமே கணக்கில் கொண்டு செயல்பட்டவர். மக்களுக்கு தொண்டாற்றுவதைத் தவிர எதையும் இவர் விரும்பியதில்லை. ஆனால் தான் ஒரு பெண்ணாக பிறந்து, மகப்பேறு மருத்துவர் ஆகி இருந்தால், மகப்பேறு சிகிச்சை செய்து தாயையும், சேயையும் காப்பாற்றும் பெயரை பெற்றிருக்கலாம் என்று மட்டும் சொல்லிக்கொண்டே இருந்தார்," என்கிறார் அவரது நண்பர் மனோகரன்.

ஆம். மக்கள் சேவையாற்றி மருத்துவர் பாலசுப்பிரமணியன் வாழ்ந்த அர்ப்பணிப்பு வாழ்க்கை அவரது இறுதி ஊர்வலத்தில் தெரிந்தது.

http://www.vikatan.com/news/tamilnadu/72985-thousands-of-people-gather-at-doctor-balasubramanians-funeral.art

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல உயிர்களை எல்லாம் ஆண்டவன் ஏன் உடனுக்குடன் எடுத்து கொள்கிறான்.. ?

 

கலிகாலத்தில் இனியும் நீ கஸ்ரபட வேண்டாம் என்னுடைய நிழலில் வந்து இளைப்பாறு என்பதாகத்தான் இருக்க முடியும் ..

இதுதான் உண்மையான காரணம்

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி ஊர்வலம்.

இலட்சம் மருத்துவர்களில் ஒருவர்!
அவரின் ஆன்ம சாந்திக்கு பிரார்த்தனைகள்!

மக்களின் இக்கட்டை வைத்து மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் தொழிலாக மருத்துவத் தொழில் மாறிவிட்டது. இப்படிப்பட்ட கொள்ளையடிக்கும் பல இலட்சக் கணக்கான மருத்துவர்களில் இவரைப் போன்றவர்கள் ஒருசிலர் தான் இன்று உள்ளனர்.

  • தொடங்கியவர்

 

வாழ்ந்த வாழ்க்கை இறுதி ஊர்வலத்தில் தெரிந்து விடும்' என கிராமங்களில் சொல்வது உண்டு. அதை நிரூபித்துக் காட்டி இருக்கிறது கோவை மக்கள் சேவகனான மருத்துவரின் இறுதி ஊர்வலம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.