Jump to content

பாகிஸ்தானிய ஆட்டிறைச்சிக் கறி (சலன்)

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பாகிஸ்தானிய ஆட்டிறைச்சிக் கறி (சலன்)  

போனவாரம் ஆட்டிறைச்சி வாங்கப் போன போது, நல்ல ஆங்கிலம் பேசிக் கொண்ட இஸ்லாமிய தம்பதிகள் (வழக்கமாக, பாகிஸ்தானியர்கள், உடைந்த ஆங்கிலம் தான் பேசுவார்கள்) இறைச்சி வாங்கிக் கொண்டிருந்தனர். நன்கு படித்தவர்கள் போல் இருந்தது.

சலன் செய்வோம் கொஞ்சம் கூடுதலாக வாங்குவோம் என்றார் மனைவி.

ஆகா, சலன்... மிகவும் நன்றாக இருக்குமே என்றார் கசாப்பு கடைக்காரர். ஆமாம் எனது மனைவி நன்றாக செய்வார், ஆகவே கால் தொடை முழுவதாக கொடுங்கள் என்கிறார் கணவர்.

பக்கத்தில் நின்ற எனக்கு, சாலட் என்று காதில் விழ, ஆர்வத்துடன், சாலட் என்று கூறினீர்களா என்று கேட்டேன்.

இல்லை, இது கறி, நம்மூரில் சலன் என்று அழைப்போம். என்றார்கள். மேலும் ஒரு லிங்கைத் தந்து, ட்ரை பண்ணி பார்த்து, பிடித்து இருந்தால், குறுந்தகவல் அனுப்புமாறு சொன்னார்கள்.

Mutton ka salan

இதோ அந்த சமையல் முறை.

தேவையானவை

ஆட்டிறைச்சி 750கி -1கிகி
வெங்காயம் 2 பெரியது - நீளவாக்கில் அரிந்தது.
இஞ்சி - பூண்டு பேஸ்ட் - 2 மேசைக் கரண்டி
காய்ந்த மிளகாய் நொறுவல் - 1/2 மேசைக் கரண்டி
எங்களது கறித்தூள் - 3 மேசைக் கரண்டி ( அவர்களது அது, இது எல்லாம் சேர்த்த வகையில்) 
பப்பரிகா தூள்  1/2 மேசைக் கரண்டி (கிடைத்தால்)
கரம் மசாலா பவுடர் 1/2 மேசைக் கரண்டி (இருந்தால்)
புளிக்காத தயிர் (1/2 கப் - சுமார் 150மில்லி )
குங்குமப்பூ - ஒரு நுள்ளு.
சீனி - 1/4 மேசைக் கரண்டி
உப்பு - தேவையான அளவு
எக்ஸ்ட்ரா வெர்ஜின் எண்ணெய் - தேவையான அளவு 
சுடு தண்ணீர் (1/2 கப் - சுமார் 150மில்லி )
கறுவா -  1 இன்ச், கராம்பு - 6 ஏலக்காய் -4

செய்முறை

ஒரு தாச்சியில் (வாணலி) வெங்காயத்தினை அரைவாசி எண்ணெய் யில் நிறம் பிரவுன் ஆகும் வரை பொரித்து, அதில் அரைவாசியினை ஒரு பக்கமாக எடுத்து வைக்கவும்.

மீதமிருக்கும் வெங்காயத்தினை, எண்ணெய்யின் 1/4 பாகத்துடன் (மீதி எண்ணெய்யை வீசலாம்) ப்ரெஷர் குக்கருக்கு மாத்தவும். (பொரியல் வேலைக்கு ப்ரெஷர் குக்கர் வேலைக்காகாது).

சட்டி சூடாகி வரும் போது, உப்பு, இஞ்சி - பூண்டு பேஸ்ட், ஆட்டிறைச்சி சேர்த்து 5 நிமிடம் பிரட்டி வேக விடவும். இப்போது கறித்தூள், மிளகாய் நொறுவல், கறுவா, கராம்பு, ஏலக்காய் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வேக வைக்கவும்.

வேகிக் கொண்டிருக்கும் போது, எடுத்து வைத்த பொரித்த வெங்காயத்தை, தயிருடன் சேர்த்து மிக்சியில் அரைத்து, கலவையை கறியில் சேர்க்கவும்.

நன்கு பிரட்டி, சுடு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 15 நிமிடத்துக்கு வேக விடவும்.

திறந்து, குங்குமப்பூ, சீனி, பப்பரிகா தூள், கரம் மசாலா பவுடர் சேர்த்து நன்கு பிரட்டி, ஒரு நிமிடம் வேகவைத்து இறக்கவும்.

சோறு, ரொட்டி, சப்பாத்திக்கு அந்த மாதிரி இருக்கும்.

DSC_1311_thumb.jpgDSC_1314_thumb.jpg

DSC_1323_thumb.jpgDSC_1324_thumb.jpg

DSC_1316_thumb.jpgDSC_1318_thumb.jpg

DSC_1319_thumb.jpgDSC_1320_thumb.jpg

DSC_1326_thumb.jpgDSC_1329_thumb.jpg

DSC_1337_thumb1.jpgGosht Curry

படம் எனது இல்லை. அந்த லிங்கில், சுட்டது  :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பார்க்க நல்லாத் தான் இருக்கு. ஆனால் யார் இதெல்லாம் மினக்கெட்டு செய்றது

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ரதி said:

பார்க்க நல்லாத் தான் இருக்கு. ஆனால் யார் இதெல்லாம் மினக்கெட்டு செய்றது

உதில மினக்கெடுதல் ஒண்டும் இல்லையே.

வழக்கமா வதக்கிற வெங்காயத்தில, அரைவாசியை எடுத்து, தயிரோட சேர்த்து அரைச்சு போடுவியல்.

அவ்வளவு தானே.

மேலும் அவையட, தனியா தூள், மொளவாய் தூள், சீரகத்தூள், அந்த தூள், இந்த தூள் எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால், எங்கட கறித்தூளில் தான் வந்து நிக்குது.

அப்ப, அதில 3 கரண்டியோட அலுவல் இன்னும் லேசாகி விட்டுதே. 

 :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்கே நாதமுனி,நானே சமைச்சு நானே சாப்பிட்ட உப்பெல்லாம் விருப்பமில்லாமல் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, குமாரசாமி said:

பிச்சை வேண்டாம் நாயை பிடியெண்டு தங்கச்சி மெசெஜ் அனுப்பியிருக்கு...:grin:

அதெலாம் இருக்க... சலன் செய்து சாப்பிட்டுப் பாத்தியளோ ?  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, Nathamuni said:

அதெலாம் இருக்க... சலன் செய்து சாப்பிட்டுப் பாத்தியளோ ?  :grin:

சொல்லுறன் எண்டு கோபிச்சு குழம்பக்கூடாது..:grin:

உது நாங்கள் நோர்மலாய் காய்ச்சிற ஆட்டிறைச்சி கறி எண்டதை உடனையே கண்டு புடிச்சிட்டன்.....tw_blush:
அதாலை காசை கரியாக்க விரும்பேல்லை :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உந்தத் திரியில யார் என்னைப் பற்றி என்ன எழுதினார்கள். திரி வெட்டுப்பட்டு கிடக்குது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாகிஸ்தானிய கடைகளில் நிறையவே வெண்நெய் சேர்க்கிறார்கள்.இதனால் செமிபாடடைய ரொம்ப நேரம் எடுக்கிறது.வழமையை விட 10 நிமிடம் கூடுதலாக நடக்க வேண்டும்.

இணைப்புக்கு நன்றி நாதம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ரதி said:

உந்தத் திரியில யார் என்னைப் பற்றி என்ன எழுதினார்கள். திரி வெட்டுப்பட்டு கிடக்குது?

தங்கச்சி!  உங்கை ஒருத்தருக்கு அஞ்சாறு குடுவை குடுத்து விட்டன்......

இரண்டு நாளாய் இந்தப்பக்கமே தலைவைச்சு படுக்கேல்லை கண்டியோ!!!  :cool:

ஆரோடை என்ன சேட்டையெண்டு கேக்கிறன் tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 7.12.2016 at 9:24 PM, குமாரசாமி said:

சொல்லுறன் எண்டு கோபிச்சு குழம்பக்கூடாது..:grin:

உது நாங்கள் நோர்மலாய் காய்ச்சிற ஆட்டிறைச்சி கறி எண்டதை உடனையே கண்டு புடிச்சிட்டன்.....tw_blush:
அதாலை காசை கரியாக்க விரும்பேல்லை :cool:

##குங்குமப்பூ, சீனி, பப்பரிகா தூள், கரம் மசாலா பவுடர் சேர்த்து நன்கு பிரட்டி, ஒரு நிமிடம் வேகவைத்து இறக்கவும்.##

குமாரசாமி அண்ணே....  நோர்மலா சமைக்கிற ஆட்டிறைச்சிக் கறிக்கு, சீனி போ ட்டு சமைக்கிறேல்லை.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையில ஆட்டிறைச்சியின் விலையை அண்ணாந்து பார்க்க வேண்டியதா கிடக்கு கோழி மட்டும் மலிந்து ஊர் முழுக்க கூவி திரிகிறது கிலோ 300,310,320 ரூபா  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, முனிவர் ஜீ said:

இலங்கையில ஆட்டிறைச்சியின் விலையை அண்ணாந்து பார்க்க வேண்டியதா கிடக்கு கோழி மட்டும் மலிந்து ஊர் முழுக்க கூவி திரிகிறது கிலோ 300,310,320 ரூபா  

ஏன் முனி ஆடு அந்தளவு விலையா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, சுவைப்பிரியன் said:

ஏன் முனி ஆடு அந்தளவு விலையா.

ஆட்டிறைச்சி 1800 இல் இருந்து 2300 வரை போனது நவம்பரில்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, சுவைப்பிரியன் said:

ஏன் முனி ஆடு அந்தளவு விலையா.

 ம் அண்ணை சரியான் விலை மீரா சொன்னது போல இப்பவும் அதே விலை தட்டுப்பாடு வேறு 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, முனிவர் ஜீ said:

 ம் அண்ணை சரியான் விலை மீரா சொன்னது போல இப்பவும் அதே விலை தட்டுப்பாடு வேறு 

ஆயிரம் ஆடு வளர்த்தாலே கோடீஸ்வரன் ஆகலாம் போலிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, குமாரசாமி said:

ஆயிரம் ஆடு வளர்த்தாலே கோடீஸ்வரன் ஆகலாம் போலிருக்கு.

ஆனால் சனம் கோழி வளர்ப்பில் தான்........

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, குமாரசாமி said:

ஆயிரம் ஆடு வளர்த்தாலே கோடீஸ்வரன் ஆகலாம் போலிருக்கு.

ஆனால் கிராம புறங்களில் மட்டும் அது சாத்தியம் இப்ப நகர வளர்ர்சியில் சென்று கொண்டு இருக்கிறது  அதனால் அண்ணை ஆடு, மாடு , கோழி வளர்த்தால் பக்கத்து வீட்டுக்காரம்  பி. எச். ஐ  பப்லிக் கெல்த் இன்ஸ்பெக்கர் அடிச்சு சொல்கிறார்கள் சுகாதார சீர்கேடு என அதனால்  அதை வளர்க்க நினைப்பவர்கள் கூட நாட்டம் இல்லை என் கிறார்கள்  ஈழத்தில்  ஆக மொத்தத்தில் நாம் வளர்கிறோம் செயற்கை கோழியை தின்றி இப்ப 50 நாளுக்குள்ள முழு கோழி ஆனால் சொல்கிறார்கள்  பருவமடையாதா பெண் பிள்ளைகள் சிறுவயதினர் சாப்பிட வேண்டாம் என  

இன்னும் ஒன்று  நோய் தாக்கம் அதிகம் என்பதால் ஆடு , மாடு , கோழி வளர்ப்பு  மந்த நிலையில் தான் இருக்கிறது 

1 hour ago, MEERA said:

ஆனால் சனம் கோழி வளர்ப்பில் தான்........

அது கூட பல படிச்ச சமுதாயம் பக்கத்து வீட்டில் வந்ததால் நாற்றம் என்று அடிச்சி பொலிசுக்கு சொல்கிறாங்க அதனால் அதுக்கும் ஆப்பு  அப்ப ப்ப நாட்டு கோழியை  கண்ணில் கண்டால் வாங்கி வருவது அதுவும் 1200 ரூபா நாட்டுக்கோழி அண்ணை

  • 3 weeks later...
Posted

பாகிஸ்தானிய ஆட்டிறைச்சிக் கறி (சலன்)

போனவாரம் ஆட்டிறைச்சி வாங்கப் போன போது, நல்ல ஆங்கிலம் பேசிக் கொண்ட இஸ்லாமிய தம்பதிகள் (வழக்கமாக, பாகிஸ்தானியர்கள், உடைந்த ஆங்கிலம் தான் பேசுவார்கள்) இறைச்சி வாங்கிக் கொண்டிருந்தனர். நன்கு படித்தவர்கள் போல் இருந்தது.

சலன் செய்வோம் கொஞ்சம் கூடுதலாக வாங்குவோம் என்றார் மனைவி.

ஆகா, சலன்... மிகவும் நன்றாக இருக்குமே என்றார் கசாப்பு கடைக்காரர். ஆமாம் எனது மனைவி நன்றாக செய்வார், ஆகவே கால் தொடை முழுவதாக கொடுங்கள் என்கிறார் கணவர்.

பக்கத்தில் நின்ற எனக்கு, சாலட் என்று காதில் விழ, ஆர்வத்துடன், சாலட் என்று கூறினீர்களா என்று கேட்டேன்.

இல்லை, இது கறி, நம்மூரில் சலன் என்று அழைப்போம். என்றார்கள். மேலும் ஒரு லிங்கைத் தந்து, ட்ரை பண்ணி பார்த்து, பிடித்து இருந்தால், குறுந்தகவல் அனுப்புமாறு சொன்னார்கள்.

இதோ அந்த சமையல் முறை.

தேவையானவை

ஆட்டிறைச்சி 750கி -1கிகி
வெங்காயம் 2 பெரியது - நீளவாக்கில் அரிந்தது.
இஞ்சி - பூண்டு பேஸ்ட் - 2 மேசைக் கரண்டி
காய்ந்த மிளகாய் நொறுவல் - 1/2 மேசைக் கரண்டி
எங்களது கறித்தூள் - 3 மேசைக் கரண்டி ( அவர்களது அது, இது எல்லாம் சேர்த்த வகையில்)
பப்பரிகா தூள் 1/2 மேசைக் கரண்டி (கிடைத்தால்)
கரம் மசாலா பவுடர் 1/2 மேசைக் கரண்டி (இருந்தால்)
புளிக்காத தயிர் (1/2 கப் - சுமார் 150மில்லி )
குங்குமப்பூ - ஒரு நுள்ளு.
சீனி - 1/4 மேசைக் கரண்டி
உப்பு - தேவையான அளவு
எக்ஸ்ட்ரா வெர்ஜின் எண்ணெய் - தேவையான அளவு
சுடு தண்ணீர் (1/2 கப் - சுமார் 150மில்லி )
கறுவா - 1 இன்ச், கராம்பு - 6 ஏலக்காய் -4

செய்முறை

ஒரு தாச்சியில் (வாணலி) வெங்காயத்தினை அரைவாசி எண்ணெய் யில் நிறம் பிரவுன் ஆகும் வரை பொரித்து, அதில் அரைவாசியினை ஒரு பக்கமாக எடுத்து வைக்கவும்.

மீதமிருக்கும் வெங்காயத்தினை, எண்ணெய்யின் 1/4 பாகத்துடன் (மீதி எண்ணெய்யை வீசலாம்) ப்ரெஷர் குக்கருக்கு மாத்தவும். (பொரியல் வேலைக்கு ப்ரெஷர் குக்கர் வேலைக்காகாது).

சட்டி சூடாகி வரும் போது, உப்பு, இஞ்சி - பூண்டு பேஸ்ட், ஆட்டிறைச்சி சேர்த்து 5 நிமிடம் பிரட்டி வேக விடவும். இப்போது கறித்தூள், மிளகாய் நொறுவல், கறுவா, கராம்பு, ஏலக்காய் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வேக வைக்கவும்.

வேகிக் கொண்டிருக்கும் போது, எடுத்து வைத்த பொரித்த வெங்காயத்தை, தயிருடன் சேர்த்து மிக்சியில் அரைத்து, கலவையை கறியில் சேர்க்கவும்.

நன்கு பிரட்டி, சுடு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 15 நிமிடத்துக்கு வேக விடவும்.

திறந்து, குங்குமப்பூ, சீனி, பப்பரிகா தூள், கரம் மசாலா பவுடர் சேர்த்து நன்கு பிரட்டி, ஒரு நிமிடம் வேகவைத்து இறக்கவும்.

சோறு, ரொட்டி, சப்பாத்திக்கு அந்த மாதிரி இருக்கும்.

Bild könnte enthalten: Essen
 
நாதமுனி உங்கள் பதிவை இந்த முகநூல் பதிவில் பார்த்தேன்...:rolleyes: அதனால் மீள பதிந்து உள்ளேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 04/12/2016 at 5:57 PM, ரதி said:

பார்க்க நல்லாத் தான் இருக்கு. ஆனால் யார் இதெல்லாம் மினக்கெட்டு செய்றது

என்னிடம் வாங்கோ செய்து தரலாம் ரதி

அல்லது உங்கள் வீட்டுக்கு நான் வந்து செய்து தாறன். எது வசதி ?

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.